உயரப் பறக்கும் பருந்து

விர்ரென இரையை

நோக்கிப் பாய்ந்தது

ஊரடங்கும் நேரம்

பார்த்து உலாவப் போகும்

ஆந்தை

புழங்காத பழைய வீட்டில்

குடிகொள்ளப் பார்க்கும்

வவ்வால்

வீட்டு உத்திரத்தில்

கூடுகட்டி

மனிதர்களோடு கூடிக்குழாவும்

சிட்டுக்குருவி

விரிந்து பரந்த

மாளிகையைப் போன்றதொரு

இடங்களில்

வந்தமரும் வெண்புறாக்கள்

அதிகாலையில் கீச் கீச்சென்று

கத்திக் கொண்டே ஆற்றைக்

கடந்திடும்

கோயில்களில் தஞ்சமடைந்துள்ள

கிளிகள்

அடைகாக்கவோ, குஞ்சுபொரி்க்கவோ

பொறுமையின்றி

நாடோடியாய்த் திரிந்திடும்

குயில்கள்

காக்கைகளின் கூட்டில்

முட்டையிட்டு சென்றிடும்

தனது விடுதலையை

விட்டுக்கொடுக்காத

பறவையினம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.