ஓடுகின்ற பாதையெல்லாம்
மலர்க் கம்பளம் சாத்தியமில்லை

தடுமாற வைக்கப் பாய்ந்து வரலாம்
எத்திசையிலிருந்தும் எறியப் பட்டு
கூரிய கற்களாய் விமர்சனங்கள்

உற்று நோக்கின் உதவக் கூடும்
படிந்திருக்கும் துகள்களில்
ஒளிந்திருக்கும்
நண்பர் மறைத்த நம் குறைகள்!

துவள வைக்கும்
தொடர்விமர்சன ஈட்டிகளா?

உடல் காயமுற்றாலும்
ஊசிமுனை வார்த்தைகளை
உள்ளந் துளைக்க விடாதீர்

வீதிகளில் போற்றிச் சிலைகள்
விமர்சகருக்கு அல்ல
விமர்சிக்கப் பட்டவருக்கே

நீரினை விலக்கிப் பாலினைப் பருகும்
அன்ன பட்சியாய்..
நல்லன எடுத்து அல்லாதது விலக்கிடத்
தெரிந்து விட்டால்..

விமர்சனங்களையே வில்லாய் வளைத்து
இலக்கினை நோக்கி எய்திடலாம் அம்புகள்

வெற்றிவாகை சூடும் ஓர்நாள் நிச்சயமாக!
***

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.