புகை நாற்றம்
பிடிக்காமல்
விலகி நிற்பதில்
ஆரம்பிக்கிறது
ஒரு புகைப்பிடிக்கும் பழக்கம்!

புகைத்த பின்னர்
வாடை தெரியாமலிருக்க
மெல்லும் பாக்கினை
பங்கிட்டுக்கொள்வதில்
தொடங்குகிறது
சிகரெட்டிற்கும் நமக்குமான
நட்பு!

வேலையற்றுத் திரிந்த
நாட்களில்
நம்மை ஏளனமாக
நினைத்தவன் எதிரில்
செயின் ஸ்மோக்கர்-ன்
லாவகத்தை
சிரத்தையோடு
தருவிக்கையில்
சூழ் கொள்கிறது
நிக்கோடின் கலக்காத
ஒரு கூடுதல் போதை!

மனைவியோ, மருத்துவரோ
கண்டிப்பதில் ஆரம்பமாகும்
முதல் விட்டு விடும் முயற்சி
பெறுகிற அளவிற்கு கௌரவத்தினை
ஏனோ பெறுவதேயில்லை
அடுத்தடுத்த
விட்டுவிடும் முயற்சிகள்!

சம்பளதிற்குத்தான்
என்றாலும்
செய்த வேலைகளுக்கு
ஒரு நன்றியோ...

மேற்கொண்ட
சிரத்தைகளுக்கு
ஒரு பாராட்டோ...

விளக்கம் தருகைக்கு
முந்தைய திட்டுகளுக்கு
ஒரு சிறிய வருத்தமோ...

அரிதாய் கிடைக்கப்பெறுகிற
சில நல்வாய்ப்பு நாட்களில்
மட்டும்
பெட்டிக்கடைகாரனிடம்
மிச்சமிருக்கின்றன
எனக்கான சிகரெட்டுகள்!

- யோவ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.