ஆழிஅலை விழுங்கிய
தமிழ் மண்ணின் மீதி
தெறித்து ஒதுங்கிய
சிறு எச்சில் நாகரீகத் துளிகளையும்
அடையாளம் இல்லாமல்
நக்கி துடைக்கிறது
மேற்கின் நீண்ட நாக்கு!

அய்யனின் வாரிசுகளின்
தலைக்குள் பெருக்கெடுத்த
பித்தம் கிழித்துக் கொண்டு
சுற்றுகிறது நியுயார்க் நகரவீதிகளில்!

சென்னை மாநகர
சாலையோர சுவர்களில் எல்லாம்
முன்னோர்களின் பிணங்கள்
வண்ணப் பதிவுகளாக சிரிக்கின்றது!.

Comments

1 comment

1
SOUDI SIKANDER
NICE ANNA ORU SOFTWARE ENGINEERUKKUL ITHUNAI ALAGANA THAMILTHUVAM UNMAIYANA NEGILAVAIKUM VARIHAL .......

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.