கப்பலோட்டிய
தமிழனின் கடலில்
கப்பல் கப்பலாய்
அந்நியக் கழிவுகள்..

 கொடிகள் காத்த
 குமரனின் ஊரில்
 கொத்தித் தின்னும்
 பன்னாட்டுக் கழுகுகள்.

அந்நிய ஆடைகளை
அணலிட்டு அழித்து
கைத்தறி அணிந்த
காந்திகள் தலையில்
காவிச் சாந்து
நாமமாய் வழிய...

 குடுமி விரித்து
 பூணூல்கள் உருவி
 அமெரிக்க மெட்டில்
 இந்திய ஆரியம்
 இழுத்து இழுத்து
 ஊளையிடுகிறது...
 வந் ஏ மாத்றோம்...
 வந் ஏ மாத்றோம்..

இந்தியத் தமிழனும்
இழுக்கிறான் குருலை
பாரத் மாதாக்கி
ஜே! என்று கூவி...

 வீரம் விளைத்த
 தமிழ்த் தாய் இன்று
 வெட்கிக் குனிகிறாள்
 அடிமை நிலை கண்டு..

Pin It