துப்பாக்கி சத்தத்திற்கு மத்தியில்
மலரும் பூக்களில்..
இரத்த வாசம் அடிக்கிறது..!

வெண்கொடி ஏந்தி 
வேடர்கள் வருகிறார்கள்..!
மறைந்து கொள்கிறார்கள்
மண்ணின் மைந்தர்கள்..!

மதங்களின் ஆட்சியே 
எப்போதும் நடக்கிறது..!
மக்களாட்சி மட்டும் 
மரணித்துக் கிடக்கிறது..!  

ஜனநாயகத்தின் சவ ஊர்வலம்
நெடுநாளாய் நடக்கிறது..
தேசிய மயானம் தேடி..!

குருதிப் பாத்திகளில் 
நட்டு வைத்த ரோஜா செடியோ
வெள்ளையாய் சிரிக்கிறது..!

கனிவளத்தால் மறைக்கப்படும் 
கண்ணீர் நிலம் 
காஷ்மீரம்..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

7 comments

7
mani
மிக அருமையாக உள்ளது உங்கள் கவிதை...
Venmani Maran
இரத்தம் தெறிக்கும் கவிதைகள்- நிகழ் காலத்தின் கொடுமைகளை உள் வாங்கி எழுதிய அப்பாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
malcomx.farook
மதவாதிகளின் ஆசியுடன் அரங்கேறும் அரசப் படுகொலைகள், காந்தியின் வேடத்தில் இராஜபக்சேக்கள்.
கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்.
கடைசி உயிர் இருக்கும் வரையிலும் போராடி மடியும் காஷ்மீர் மக்களின் உயிர் தியாகங்களுக்கு உங்கள் கவிதை மலர் போர்வை போர்த்தும் .

நன்றி
கண்மணி
இஸ்லாமிய மதவெறி பிடித்து தனிநாடு கேட்கும் காஷ்மீர பயங்கர்வாதிகளுக்கு சவுக்கெடுத்து அடிப்பது போல உங்களது கவிதை இருக்கிறது. பாராட்டுகள்.
suhaitha mashoor
குருதிப் பாத்திகளில்
நட்டு வைத்த ரோஜா செடியோ
வெள்ளையாய் சிரிக்கிறது அழகான கவிவரிகள்.
வாழ்த்துக்கள்.
s.chitra
kavithaiyai padikkaiil kanneer varugiradhu, en thalai vanakkam um kavithaiku.
sikander soudi
kanivalathal maraikkapadum kanner nilam.... muttrilum unmai..
ithanai kurai konda kasmirai iraivan kanivalathal membaduthi irukkiran

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.