குழந்தைகளின் அழுகை -
அழுகை சார்ந்ததது அல்ல!
விருப்பமின்மையின் எதிரொலி!

குழந்தைகளின் புன்னகை-
மகிழ்ச்சி சார்ந்ததது அல்ல!
மொழியின் தேவைகளற்றும்
புரிதல் நிகழ்ததன்
நன்றி தெரிவித்தல்!

சொற்களை விடவும்
ஓசைகளும்சைகைகளும்
உயர்ந்த அர்த்தம் மிக்கவை.
என குழந்தைகள் நமக்கு
உணர்த்தி விடுகின்றன!

குழந்தைகள் பிழைப்பட
பேசும் போதெல்லாம்
இலக்கணம் தவறி
இலக்கியமாகின்றன!

குழந்தைகள்
படைப்பின் ரகசியங்களை
வியந்து இரசிக்கின்றன!

தானே ஒரு வியக்கத்தக்க
படைப்பின் அதிசயம்
என்பதையும்
மறந்து இரசிக்கின்றன!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

4 comments

4
ஃபாருக்
மிகவும் நல்ல கவிதை -
rajesh kannan
miga miga arumai, en pillaihalin unaryugalai ini purindhu kolven
prabha
குழந்தையை ரசிப்பதுப்போல் ரசிக்க வைத்த வரிகள்
prabha
nice

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.