மிகவும் ரசிக்கிறேன்
கருப்பு வெள்ளை புகைப்படங்களை
கருப்பா? சிவப்பா? மாநிறமா?
என் சொல்லாத
அதன் வெளிப்படையான ரகசியத்தை..
-----------
முன் பின் பார்த்தறியாத
முகங்கள்
முதலில் புகைப்படங்களில்
பார்க்கப்படுகையில்
திணிக்கப்படுகிறது
ஒரு வித விலகலும்
நெருக்கமும்..
---------------
புகைப்படங்கள் ரகசியங்களற்றவை
சொல்லிவிடுகிறது
எடுக்கப்பட்ட நொடியில்
கொண்டிருந்த
மனதின் அசைவுகளை

- இசை ப்ரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
இளம்பிறை
நிழற்படங்கள் எழுதப்படா ஓவியங்கள். இவற்றைப் பெற்றெடுக்க தாதியரோ செவிலியரோ தேவையில்லை. சிந்தனையும் கற்பனையும் பிடிப்பும் கொண்டாலே போதும். சுருக்கம் கொண்ட முகமும் சுகமாகத் தெரியும். பல் இல்லா மனிதர்களும் பார்வையாய் இருப்பார்கள். அம்மணமாய் திரியும் பறவைகளும் விலங்குகளும் கூட அழகோ அழகு.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.