சில தினங்களுக்கு முன்பு, தியாகராய நகர் முத்துரங்கம் சலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய விடுதலை ராசேந்திரன் அவர்கள் பேசினார். அப்போது அவர், பெரியார் தி. க.வின் அ.தி.மு.க. ஆதரவு நிலையை விளக்க ஒரு உதாரணம் சொன்னார்.

Jayalalithaவீடு எரிந்துகொண்டுள்ளது. அதை உடனடியாக அணைக்க வேண்டும். ஒருவன் தண்ணீர் வைத்துக்கொண்டு நிற்கிறான். அவன் நல்லவனா, கெட்டவனா, அவனிடம் தண்ணீர் வாங்கலாமா என்று ஆய்வோமா அல்லது அவனிடமிருந்து தண்ணீரை வாங்கி தீயை அணைப்போமா? அதுபோன்றது தான் எங்களது தற்போதய அ. தி. மு. க. ஆதரவு நிலைப்பாடும் என்று பேசினார்.

கைத்தட்டுகள் வாங்கினார். இது போன்ற விளக்கங்களால் தான் தமிழன் கெட்டான். நான் இதையே வேறு விதமாக வாதாடுகிறேன். ஒருவன் ஊரையே அழிக்க நினைக்கிறான், ஒவ்வொரு வீடாக. யாருக்கும் தெரியாமல் தீ வைக்கிறான். பிறகு நல்ல பிள்ளை போல, தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கிறான். இப்படி தொடர்ந்து நடக்கிறது. இப்போது ஒரு வீட்டை அரைகுறையாக காப்பதைவிட, தீக்குக் காரணமானவரைக் கண்டறிவோமா, அல்லது ஒவ்வொவொரு முறையும் தண்ணீரோடு நிற்பவனை சந்தேகிக்காமல், அவனது நீரைப் பயன்படுத்துவோமா?

பார்ப்பனீயம் தமிழனை ஆண்டாண்டு காலமாக பகையினமாகத்தான் கருதுகிறது. பார்ப்பனீயம் தமிழர்க்கு என்னவெல்லாம் செய்தது என்று பெரியார் தி. க.வுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் சில.....

ஈழம் என்ற மண்ணின் மக்களுக்கான தேசம் அமையக்கூடாதென்பது பார்ப்பனர்களின் அடிப்படையான கொள்கை. ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் பிரபாகரனை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் போட்டார். ராஜீவைக் கொன்றாராம் பிரபாகரன், இந்த அம்மையார் பார்த்தாராம்! இதிலே இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது காங்கிரஸ் செய்வதை சற்று ஒதுக்கிப் பாருங்கள். அன்று ஜெயலலிதா தீர்மானம் போட்ட நேரத்தில், சோனியா தலைமையிலான காங்கிரஸ் அது போன்ற தீர்மானம் எதையும் போடவில்லை. இந்திய நாடாளுமன்றமும் அப்படி ஒரு தீர்மானம் போடவில்லை.

ஆனால், தீர்மானம் போடப்பட்டது எங்கே? நமது தமிழகத்தில் தோழர்களே! தமிழன் இளிச்சவாயன்! கன்னட தேசத்திலிருந்து, கன்னடப் பார்ப்பனத்தி ஜெயலலிதா, கூத்தாடிப் பிழைக்க வந்த இடத்தில், பார்ப்பன திட்டமிட்ட சதியால், நமது மண்ணின் ஆட்சியைப் பிடித்துக்கொண்டு, தமிழனுக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய முடியும் என்று திட்டமிட்டு செயல்படுகிறது.

ஈழ ஆதரவாளர்களை பொடாவில் தளைப்படுத்தியது. தனியாரிடமிருந்த சாராய விற்பனையை தேசிய மயமாக்கி, உழைக்கும் மக்களை உயரவிடாமல் திட்டமிட்டு அழித்தது. ஏழைகள் படிக்கும் அரசு கலைக்கல்லூரிகளை பல்கலையோடு சேர்த்து, கல்வியை ஏழைக்கு எட்டாக் கனியாக்க முயற்சித்தது. கோயில்களில் அன்ன தானம் ஏற்பாடு செய்தது.

பள்ளிகளில் அன்னதானம் செய்தார் காமராசர். கோயிலில் அன்னதானம் செய்கிறது பார்ப்பனீயம். பார்ப்பனீயத்தை நம்பினால் நமக்கு என்றுமே மீட்சியில்லை தோழர்களே! கிளிநொச்சி வீழ்ந்தவுடன், அதற்காக துடித்துக் கொண்டிருந்தவர் போல, உடனே அறிக்கை விட்டார், 'இனி ஈழத்தமிழர் என்று சொல்லாதீர்கள், இலங்கைத்தமிழர் என்று சொல்லுங்கள்' என்று. அவ்வளவு பொறாமை! சொல்லி சில மாதங்கள் தான் ஆகிறது தோழர்களே!

இன்று, NDTV போன்ற பார்ப்பன ஊடகங்களே, புலிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று 70% தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் வௌியிடுகின்றன. உண்மையில், 90% பேர் புலிகளை ஆதரிக்கின்றனர். தனி ஈழம் தான் தீர்வு என்று சொல்கின்றனர். ஆதலால், இப்போது அந்த அம்மையார், சம உரிமையுள்ள அமைப்பு அங்கு ஏற்படவில்லை என்றால், தனி ஈழம் தான் தீர்வு என்று சொல்கிறார்.

புளகாங்கிதம் அடையாதீர்கள். இது அவர்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளப் போடும் வேஷம். இவர்கள் திரைமறைவுப் பணியாளர்களும் கூட என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

ஆனால், பார்ப்பனீயத்தை இந்த அளவுக்கு பேச வைத்திருக்கிறோம் என்பதே ஒரு விந்தை தான். இன்னும் பாருங்கள், தேர்தல் நெருங்க, நெருங்க தனி ஈழம் மட்டும் தான் தீர்வு என்று அந்த அம்மையார் சொல்வார். இப்போது பேசியதே நான் எதிர்பார்த்தது தான். அவரது கூட்டங்களிலே, கூட்டமாகச் சென்று அவரது ஈழ நிலைப்பாட்டை தௌிவாகச் சொல்லச் சொல்லுங்கள். அவரைப் பேசவையுங்கள், 'நாம் விரும்பியபடி'! அப்போது தான் நாம் மானமுள்ள தமிழர்கள்.

தமிழர்களே! நல்லவன் என்று பேரெடுப்பதை விட, நல்லவனுக்கு நல்லவன் என்று மட்டும் பேரெடுங்கள். அது போதும். சீக்கியர்களைக் கண்டு இந்தியாவும், காங்கிரஸும் அஞ்சுகிறது. ஆனால், நல்ல உள்ளம் கொண்ட தமிழர்களை அதே இந்தியா, பேடிகளாகவும், பெட்டைகளாகவும் கருதுகிறது. நமது அரசியல்வாதிகளுக்கே நம்மிடம் அச்சமில்லை! நாடாளுமன்றத்தில் ஐந்து வருடமாக, ஒரு வார்த்தை கூட பேசாத தங்கபாலு, இங்கு தமிழனுக்கு எதிராக சூத்தை அடைத்துக்கொண்டு கத்துகிறார்.

நேற்றைய தீக்குளிப்பு உட்பட இதுவரை 13 தமிழர்கள் உச்சகட்ட சத்யாக்கிரகமான, தீக்குளிப்பு செய்து தமது உயிரை விட்டுள்ளனர். 'சத்யாகிரக' தத்துவத்தை உலகுக்குத் தந்த இதே இந்தியா, இந்த உயிரிழப்புகளை மசிரளவுக்குக் கூட சட்டை செய்யவில்லை. ஆயிரக்கணக்கான அறவழிப் போராட்டங்களுக்கும் மசிரையும் அசைக்கவில்லை.

சேர்மன் மாவோ சொன்னார். நாம் கையிலெடுக்கும் ஆயுதங்களை எதிரி தான் தீர்மாணிக்கிறான். சத்யாக்கிரகம் என்றும் வென்றது கிடையாது தோழர்களே! இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது, பகத்சிங், சுபாஸ்சந்திர போஸ் போன்றோரின் முயற்சியால் தான். தட்டிக் கேட்டவனைவிட, கெஞ்சிக்கேட்ட காந்தியிடம் கொடுத்தது ஆங்கில ஏகாதிபத்தியம். ஆனால், பாப்பனீய, பணியாக் கும்பல், சத்யாக்கிரகம் வென்றதாக பொய்ப்பந்தல் போட்டது. பர்மாவுக்கு 1937ல் விடுதலை கிட்டியது. ஆனால், 1947தான் இந்தியாவுக்கு விடுதலை கிட்டியது. அதன் காரணத்தை பார்ப்பன, பனியாக் கும்பல் விளக்கியாக வேண்டும்.

ஆக, இனி தீக்குளித்துப் பயனில்லை தோழர்களே! உங்களின் மேன்மை பொருந்திய உயிரை, இந்திய ஏகாதிபத்தியத்திற்கு விரயமாக்காதீர்கள். நமக்கென்று ஒரு தேசம் இருந்திருந்தால், நம்மின மக்களை கொலைகார சிங்களனிடம் சிக்கவைத்து வேடிக்கை பார்த்திருப்போமா? உங்கள் கோழைத்தனத்தை விட்டு துணிந்து உங்களது கருத்துகளைக் கூறுங்கள். துணிந்தவனுக்கு துக்கமில்லை! இது நமது மண். இங்கு அடுத்தவன் தான், நம்மிடம் கவனத்தோடு நடந்துகொள்ள வேண்டும்.

விடுதலைப் போராட்ட வீரர்களை பயங்கரவாதிகள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தது பார்பனீயம். ஆனால், இன்று பயங்கரவாதிகள் சிங்களத்தான் தான் என்று அய்யத்திற்கு இடமில்லாமல், உலக அரங்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பார்ப்பனீயம், முகத்தில் கரியைப் பூசிக் கொண்டுள்ளது. அங்கே நடப்பது 'இனப்படுகொலை' தான் என்று உலகம் அங்கீகரித்துள்ளது. இது புலிகளின் வெற்றி.

இன்று பிரசவ வலியில் தவிக்கிறது ஈழம். பிரசவத்தின் இறுதி வலி, நமது நெஞ்சைப் பிளக்கிறது தான். ஆனால், ஈழம் மலரும்! காயங்கள் ஆறும். ஈழத்தை இந்தியாவில் எவன் இன்னும் எதிர்க்கிறானோ, அவனை எதிர்காலம் 'பார்த்துக்கொள்ளும்'.

ஆக, விடுதலை ராசேந்திரன் அவர்களே! பார்ப்பான் தான் நம்மை ஆதரிக்க வேண்டும். நாம் அவனை ஆதரிப்பது பேடித்தனம். இதை, வீரமணி ஏற்கனவே செய்துவிட்டார்.

அங்கிருந்து பிரிந்துவந்து அதே குட்டையில் விழலாமா? 

- முனைவர். வே. பாண்டியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It