நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை நீக்குக...
சிபிஐ, தேசிய மனித உரிமை ஆணையம் செயற்பாடுகளை அரசின் தலையீடு தேவை...
வேதாந்தாவுக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
என மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுக்கிறது
1. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்திடம் இடைக்கால அறிக்கையைக் கேட்டு அதனை மே 17ஆம் தேதி பெற்று, அதில் கூறப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொண்ட தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் பாராட்ட விரும்புகிறது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கான தமிழ்நாடு அரசின் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் மூன்று விதிமுறைகளை மறந்து விடக்கூடாது.
(i) கடந்த 22 .5. 2018 அன்று தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் காயங்கள் அத்துடன் தனியார் சொத்துகளுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் ஏற்பட்ட சேதங்களுக்கு வழிவகுத்த காரணங்களையும் சூழல்களையும் ஆணையம் விசாரிக்க வேண்டும்.
(ii) சூழலுக்குத் தேவையான உத்தரவாதத்துடன் கூடிய காவல்படைப் பயன்படுத்தப்பட்டதா? துப்பாக்கி சூடு நடத்து வதற்கு முன் முறையான விதிமுறைகள் பின்பற்றிப்பட்டதா? என்பவற்றை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
(iii) காவல்துறையின் அத்துமீறல்களில் காவல் அதிகாரிகளின் பங்களிப்பு இருந்ததா? வன்முறையில் உயிரிழந்த 16 குடும்பங்கள், கொடுங்காயம், சிறு காயம் ஏற்பட்ட 200க்கும் அதிகமானோர் ஆகியோர்க்கு வழங்கப்பட்ட இழப்பீடு, வேலைவாய்ப்பு போன்றவற்றால் நீதியை வழங்க முடியாது.
2. 22.5.2018 அன்று நடந்தேறிய துப்பாக்கி சூடு, காவல் வன்முறை ஆகியவற்றுக்குக் காரணமான அதிகாரிகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் சிபிஐ, தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ஆகியவை ஈடுபட்டன. மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் விசாரணை முடியும் தருவாயில் உள்ளது.ஆனால் நீதி இன்னும் கிடைக்கவில்லை என்பதை மக்கள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
3. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விசாரிக்குமாறு ஆகஸ்ட்.14 , 2018 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மூன்று ஆண்டுகள் கழிந்தும் இன்னும் விசாரணை முடியவில்லை எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மூலம் சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும். சிபிஐ அவ்வபோது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐயின் இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகள் பெயர் குறிப்பிடப்பட்டு, குற்றப்பத்திரிகை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
4. சிபிஐ இதனை செய்யத் தவறினால் நீதிமன்றமும் அரசும் சேர்ந்து நியமிக்கும் சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவிடம் இவ்வழக்கை ஒப்படைக்க வேண்டும்.
5. கடந்த மே 2018ஆம் ஆண்டு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது 3 ஆண்டுகள் கடந்த நிலையில் விசாரணையை விரைவாக முடிக்க எந்த ஒரு சிறப்பு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. காவல்துறை அதிகாரிகளை சென்னைக்கு வரவழைத்து அல்லது இணைய வழி மூலமாக விசாரித்து இந்த விசாரணையை இன்னும் 24 மாதங்களில் முடிக்க வாய்ப்பு இல்லைஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அறவழியில் அமைதியாக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் இதுபோன்று மந்தமாகச் செயல்படும் விசாரணை ஆணையம் தொடர்வது நல்லதல்ல.
6. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பரவலாக்கப்பட்டுள்ள நவீன காலத்தில் மே22, 2018 அன்று தூத்துக்குடியில் என்ன நடந்தது என்பதைக் குடிமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதை விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை நியமித்திருப்பதாக இதற்கு முந்தைய அரசு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தெரிவித்திருந்தது மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த விசாரணை ஆணையம் திறம்பட செயற்படாததால் இன்னும் விசாரணை முடியாத நிலையில் உள்ளது. தூத்துக்குடியில் நடந்த வன்முறையில் கண்டறிந்த உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய கடமை தற்போதைய புதிய அரசுக்கு உள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்.
7. எனவே மக்கள் கண்காணிப்பகம் கீழ்க்கண்ட பரிந்துரைகளை முன்வைக்கிறது:
· நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் இதுவரை திரட்டி உள்ள விவரங்கள் ஆதாரங்கள் அனைத்தையும் பொது மக்கள் அறியும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்க வலைத்தளத்தில் உடனடியாக முழுமையாக வெளியிட வேண்டும்.
· நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் தற்போதைய செயல்பாட்டை உடனடியாக நிறுத்தி, முழுமையாக நீக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த ஆணையம் 1093 பணி நாட்களில் 111நாட்கள் மட்டுமே விசாரணை செய்து, அதற்கான விதிமுறைகளில் குறிப்பிடப்பட்ட பணியை முடிக்கவில்லை என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.
இப்புதிய அரசாங்கம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றிய நீதிபதிகளைக கொண்டு ஒரு புதிய விசாரணைக் கமிஷனை அமைத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பான காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை விசாரிக்க வேண்டும். விசாரணையின் இறுதி அறிக்கையை 6 மாதங்களுக்குள் அளிக்க வேண்டும்.
8. கடந்த 6.9.2018 அன்று தமிழக முதன்மை செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை உண்மைக்கு புறம்பானதுஎனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு ஏற்கனவே தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்துள்ள வழக்கை ( வழக்கு எண்: 907/22/41/2018) மீண்டும் விசாரிக்க ஆவன செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை 2 ஆண்டுகள் 9 மாதங்களே கடந்துள்ளது ஆனால் அரசு அதிகாரிகள் எவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் இதே நிலையில் மந்தமாக செயல்படும் இந்த விசாரணையை முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்குழு ஏற்கெனவே தூத்துக்குடிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மீண்டும் விசாரணையைத் தொடர வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.இதுவே தூத்துக்குடி மக்களுக்கு கடமைப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். ஏனெனில் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்த பின்னருங் கூட, வெளியிடப்படாத அறிக்கையாக உள்ளெதென்பது குறிப்பிடத்தக்கது.
9. கீழ்க்கண்ட குற்ற நடவடிக்கைகளுக்காக வேதாந்தா மீது காற்று, நீர் (மாசு தடுப்பு, கட்டுப்பாடு) சட்டப் பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்குகள்,உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன: நிலமோசடி, காற்று மாசு கண்காணிப்பு, செம்பு தாது மாதிரி, மருத்துவமனை, சுற்றுச்சூழல் தணிக்கை, கழிவுகள், கழிவுகளை அகற்றுதல், தாமரை உற்பத்தியின் அளவு குறித்து தவறான தகவல் வெளியிட்டது போன்றவை ஆகும்.
- ஹென்றி திபேன், நிர்வாக இயக்குனர், மக்கள் கண்காணிப்பகம்