... இனி குறள் தமிழ் நூலன்று; வடமொழி நூல்வழி வந்தது என்பதற்கு கூறப்படும் இரண்டோரேதுவைச் சிறிதாராய்வோம். குறள் வடமொழி கலவாத தனித்தமிழ் நூலென்பர் ஒரு சாரார். அது வைதீக தர்ம சாத்திர வடிவே என்பார் பிறிதொரு வகுப்பார்.

valluvar 229இவ்விருவர் கூற்றும் மெய்ம்மையின் இருத்தலை மலைவார் பொருள் கருதாமல் தருமுறைவகையாம் வடமொழிச் சொற்களும் வடநூற்கருத்தும் ஒருசில குறளில் வருதலினாலது தமிழ் நூலாகாதென்றும் வாதம் மொழி பெயர் பொன்றை பெயர்த்த மொழியில் முதனூலென்பது போல முழு மெய் தழுவாக் கிளவியாகும். வள்ளுவர் குறளில் வடசொல் ஒரு சில வருவது மெய்யே. அதன் ஆழ்ந்த பொருட் பெருங்கடலில் சில சிற்றலையின் எதிரொலி வடநூலில் கேட்பதுமுண்மை. இவை குறள் தமிழ் நூலின்றெனக் காட்டுமேதுவாமா?

வேறுபட்ட நாகரீக வகுப்பார்தம் கூட்டுறவால் நாளடைவில் சில சொல்லும் கொள்கைகளும் இருதிறத்தார் மொழிகளிலும் கைமாறிக் கலப்பதியல்பு; கலப்பல் ஒரு சில புகுந்து வழங்கக் காண்போம்; அதுபோலத் தமிழ்ச் சொற்கள் வடமொழியிடம் பெற்று வழங்குவதும் மறக்கவொண்ணா உண்மையாகும். சமயமதச் சார்புகளில் தமிழரிடையமையாத சாதிபேத மாயாவாத வட சொற்கள் தமிழிலேறில், ஆணி, முத்தம், பிரவாளம், நீர், மீனம் போல பல சொற்கள் தமிழ் ஆரியத்திற்களித்த கொடை அறியாதார் அறியாதாரே.

பல்வேறு மக்கள் வாழ்வில் பொதுவான வழக்கங்கள் கொள்கையோடு கருத்துகள் ஒத்திருத்தல் இயல்பாகும். சிறப்பியல்கள் பற்றிய சிற்சில துறையில் மட்டுமவை வேறுபட நேரக்கூடும். அறம் பலவும் அனைவருக்கும் மக்களிய லொற்றுமையால் ஒத்திருக்கும். எண்ணரிய பல்வேறு உயிரினத்துள் மாந்தரெல்லாம் ஓரினமே. உருவத்திற்போல் உள்ள உணர்ச்சி, எண்ணம், விருப்பமொடு பசி, காம வினைமைகளில் மக்கட்டன்மை என்னுமொரு பொது வியல்பை மாந்தரிடை எங்கும் காண்போம்.

ஒத்த இயலுடைமையினால் வாழ்க்கை கைமுறை ஒழுக்கவகை பெரும்பாலும் ஒத்திருக்கும். அதனாலே பொதுவாகப் பல்வேறு மொழிகளிலும் நூல் கூறு மனம் பலவும் பெரும்பாலும் ஒத்திருக்கும். பொய்யாமை, கொல்லாமை, வெஃகாமை, கள்ளாமை போல்வ பல ஒழுக்கறங்கள் எல்லாருக்கும் எஞ்ஞான்றும் எந்நிலத்தும் பொதுவாகும்.

அதனாலே பல்வேறு மொழிகளிலும் அறநூல்கள் ஒத்துரைப்பதியற்கை யாகும். அது கொண்டவ்வற நூல்கள் ஒன்றிலுருந்தொன்றிரவல் கொண்ட தென்றும் அவற்றிடையே தொடர்பிருத்தல் வேண்டுமென்றும் கூறுவது தவறாகும். எல்லாருக்கும் பொதுவின்றி சில வகுப்பார் சிறப்பொழுக்க வழக்கத்தால் அமையு மறவகை கூறுமிரு நூலும் சான்றின்றி ஒன்று பிறிதொன்றிற்கு முதலென்று கொள்ளுவதும் குற்றமாகும். சிறப்பொழுக்கம் பற்றியெழும் அடி அறங்கள் ஒத்தமையக் கூறும் நூல்கள் காணுங்கால் அவற்றினிடைத் தொடர்புண்மை ஆராய்தற் கிடனொருகால் இருக்குமென எண்ணல்கூடும். அதற்கெதிராய் அடிப்படையாம் ஒழுக்கறமும் வாழ்க்கை முறை மரபுகளும் மாறுபட்ட வகுக்கும் நூல்கள் வேறுபடும் நாகரிகம் விளக்கும் தனி நூல்களென கொண்டவற்றை உறழாமல் ஆய்வதுவே அறிவறமாம்.

இவ்வுண்மை மறவாமல் உளத்திற்கொண்டு தமிழ் குறளை வட தரும நூல்களோடு ஒத்துநோக்கி இயைபு முரண்பாடுகளை நடுநிலையில் ஆராய்வோம். வள்ளுவர் நூல், வேதசாரம் பலதர்ம சாத்திரத்தின் தெளித்தவடி என்பவரின் ஏதுவொடு சான்றுகளை தகவோடு நிறுத்துண்மை தேர்ந்து தெளிவோம்.

அகம் புறமென்றிரு வகையாய் பொருளொன்றை துணைத் துறைகள் தொகுத்துரைத்தல் தமிழ்மரபு. அதற்கு மாறாய் வள்ளுவர் நூல் அறமுதலாப் பால்வகுத்து வட வழக்கு தொடர்புடைமை காட்டுதலால் தமிழ் முதனூலாகா தென்ப அதன் உண்மைய இனி விரித்திங்காராய்வோம். அறங்கூறக் காஞ்சி வாகை பாடாணின் துறைவகைகள் தமிழ் வழுக்கிலென்றுமுண்டு. அறமெல்லாம் புறத்திணையிலடங்கி விழுப்பொருள் வகையாம் பொருளில் பத்துறையியலாய்ந் துரைப்ப தறம் பொருளொன்றே வாழ்வொழுக்க முறை பற்றி அகம் புறமென்றிருவகையாய் அறமுதல் நாரற்ப்பொருளடங்க அமையுமுண்மை தமிழர் கண்ட முடிபாகும். அது குறையென்றி கழ்ந்து நாற்பால் நெறி கூறின் முப்பாலென்றுரைப்பாரோ.

தமிழ்க்குறளை முப்பாலாய் வகுத்தவர் வள்ளுவர்தாம் என்பதற்கு சான்றில்லை. ‘முப்பால்’ என்றிறவாத குறளுக்கு வள்ளுவர் பெயரிடவில்லை. பண்டைச் சான்றோர் பாக்களைத் தொகுத்த பிற்காலத்தவர் தாமியற்றிய குறட் சிறப்புப் பாயிரத்தால் அப்பொருணூலை அறனூலாக்கி முப்பாலாய் பாராட்டி ஆரியரின் நாற்பொருளும் அதாவது பொருளைக் கூறாமல் குறள் அரச நீதியே உரைப்பதாயும் அரசநீதி பொருளுக்கு துணைக்காரணமென்றும் அது கூறப் பொருளடங்கும் என்றும் கூறினர்.

முப்பால் வகுக்க முயன்ற வள்ளுவர் பொருளை தெருளவுரையாமல் அதன் முதற்காரணத்தையு முற்றிலு மறந்து துணைக்கராணமொன்றே சொல்லி விடுவானேன். பொய்யா விளக்காம் பொருளை விளக்க இயலாதியம்ப முயன்றிலார் அன்றி பொருளை பொருட்படுத்தாமல் அரசநீதி விரிப்பதே அவர் கருத்தாயின் ‘ராசநீசாரம்’ என்று பொருந்த பெயரிட்டிருக்கலாமே... இயற்றியோரெண்ண மெதுவேயாயினும் பொருளைக்கூற்றாக் குறளற நூலை முப்பாலென்பது தப்பேயாகும். அரசநீதியும் காமமுரைக்கும் இருபாலென்றேனும் வர்ணாசிரம நீதிச்சார காமரசங்களை வடித்துக் கூறும் ஒரு பால் என்றேனும் கூறுலன்றோ அதைவிட்டு தரும முதன் நான்கும் முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் என்று தப்பைக் கூறி தடுமாறுவதேன்? உண்மை யாதெனில் வள்ளுவர் நல்ல தமிழர். தமிழ் நூல் மரபிற் புலநெறி வழக்கினலம் நன்கறிந்தவர். அதனால் வடநூல் வழியில் அறமுதல் நாற்பால் வகுத்து நூலியற்றுங் கருத்தவர்க்கில்லை. அகமும் புறமுமா யிருவகைப்படும் பொருளை விரித்து தமிழ் நூல் செய்தார்.

அதன் தனிப் பெருமையறிந்து அதை பின்னோர் நாற்பாற் பொருளும் வடநூல் முறையில் வகுக்கும் வழி நூலாக்க முயன்றோர் தங்கள் வழிக்கமையாத் தடைகளை விலக்க இல்லவும் பொல்லவும் பல்லாறாக விரித்தும் விளக்கியும் திரித்தும் உரைத்தார்.

இனி முப்பாலாக வள்ளுவர் வகுத்தால் பொருளும் காமமும் பெரிதுடை நூலை அவை குறிக்காமல் அறநூலென்பது தவறாமன்றோ? ஆகவே வள்ளுவர் வாய்மொழி ஆரியதர்ம சாத்திரமன்று தமிழர் பொருநூல் என்பதே பொருந்தும்.

வள்ளுவர் குறளிலன் தனிமுதற் பெருமையை மறுப்பரெவரும் அது வட நூலென்றன் மொழிபெயர்ப்பென்றோ, இன்னநூலின் வழிவருமென்றோ கூறுகின்றிலர். பொருட்டொகையாலும் முறைவகையாலும் வடமொழிப் பரப்பில் குரல் போலோரு நூல் கூறுவதற்கில்லை. பொருளிலும் வகையிலும் போக்கிலும் நோக்கிலும், ஒப்புக்கூறுதற்குரிய நூலொன்றும் இல்லாத நிலையில் குறளை வழிநூலென்பவர் துணிவா? அதையப்படியே சொல்லித் திரியும் புலவரின் அறிவா பெரிதென வியப்பரிதாகின்றது.

திருக்குறளில் ஒரு 130 மூன்றியல்கள் உள்ளன. ஒரியற் பத்து குறள்களையேனும் ஒத்தொரு வடநூல் உரைக்க காணோம். ஒரொரு குறட் கருத்தொத்து வருதொடரை ஒவ்வொரு நூலிடைக் கிளைத்துப் பொறுக்கி விழுக்குறள் மணிகளுக்கது முழுமுதல் விதையென சழக்குரை கூரி வழக்கும் தொடுப்பார்; வியக்கும் காவியம் பயக்கும் கருத்தை முற்றிலுமொத்த சொற்றொடரமைத்து மேல்புலக் கவிகளில் மிளிரக் காண்குவம். அதனாலவற்றுள் ஒன்று மற்றதன் விதை முதலென்பது நகைகிடமன்றோ குறட்கருத்தொத்துள வடமொழிக் கவிகள் குறளெழுமுன்னே வழங்கியதுண்டோ? முந்தைய வெனினும் வள்ளுவர் அவற்றை கண்டு தந்நூலிற் கொண்டாடரென்னக் காட்டும் சான்றுகள் கேட்டதுண்டோ? இடமும் காலமும் தொடர்பிலாப் புலவர் ஒத்த கருத்தை பல்வேறு மொழிகளில் உரைத்தோரிலரோ? அன்றியும் ஒழுக்கறமெல்லாம் என்றும் யாண்டும் ஒத்திருப்பது உலகியலன்றோ?

குறளவொப்பவை ஒரு சிலவன்றி குறளமனைத்தும் பிறமொழி நூல்கள் கூறக் கேட்பினும் அதனாலவைகள் ஒருமத வகுப்பார் பொது வழக்குரைப்பவை என்பது சாலாது. அறநெறி மக்களனைவரிடத்தும் ஒத்தமைந்திருப்பது உறவு சுட்டாது. அதற்கெதிராக வாழ்வற மரபுகள் மாறுபடு நூல்கள் வேறின வகுப்பார் வழக்குரை பன்வாய் கொள்வதே முறையாகும். அகப்புற வாழ்க்கையில் மக்கள் மனையறம் தொழிலற்றுறை உரிமை கடமைகள் வழக்கொடு கொள்கை வகைகளில் குறளும் தர்ம சாத்திரங்களும் கூறுமரபியல் நெறிகளை நிரலே ஒப்பநோக்கி உண்மைக காணுவம். ஆனால் உரைகள் புகுத்தும் புதுமைகளொழித்து ‘வள்ளுவர் சொல்'லால் வருபொருள் மட்டே குறட்கருத்தாகக் கொள்ளல் வேண்டும்.

முதலில் தமிழறமும் ஆரிய தர்மமும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொல்லன்றென அறிதல் வேண்டும்.

* தர்மமும் என்பது ஆரியர் நூல்கள் கூறிய நெறியியல் குறிக்கும் சொல்லாம். அதனால் ஆரிய தர்மம் என்றும் ஒத்தியலாமல் பிறப்பு, நிலை பதவி உத்தியோகம் அவசியம் ஆபத்து இடம் காலம் இவைகளுக்கேற்ப வேறுபடும் தமிழறம் எல்லோருக்கும் எஞ்ஞான்றும் மாறாதமையும் இயல்முறை சுட்டும் அறத்தை நூல்கள் ஆக்குவதில்லை ஆராய்ந்துரைப்பதே நூலோர் மேற்கோள்.

* நூல்கள் விதிப்பதே தர்மமாகையால் அது நூலோர் மத்தபடி வெவ்வேறாகும். ஆதலால் குறைந்தது மநுதரும முதல் பாராசர் தர்மம் வரை பதினெண் வகையில் ஒரு வகுப்பார்க்கே தருமம் பலதிறப்படும்.நூலோர் ஒப்பினும் ஒவ்வாவிடினும் அறத்துறை அனைத்தும் மாறாவியல

* இன்னும் தருமம் செய்யவும் தவிரவும் நூல் விதிக்கும் ஆணைகளாகும். அதனாலாவைகள் அரசியலாரால் ஒறுப்பொடு வற்புறுத்தப் பெரும் அறம் வழங்கும் தண்டமுமான அரசுநீதிகள் வேறுபட்ட பொது இயல் குறிக்கும். அறம் திறம்பல் பழிக்கன்றித் துண்டத்துக் காளாக்காது... ... ... எனவே, வள்ளுவர் குறளும் வடநூல் தருமமா மாறில்லை.

இனி பிறப்பாலுயர்வும் பீடிலாத் தாழ்வும் மக்களுக்கென்றும் மாறா நிலையில் சாதிகள் விதிக்கும் தர்ம சாத்திரம். சாதி என்னும் சொல்லும் கருத்தும் ஆரியர் மொழியும் மரபும் படைத்த அரும் பயிர் விளைவே. அதை அறவே மறுத்து பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று முழங்கும் வள்ளுவர் தமிழ்க் குறள் பிறப்பாலுரிமையும் சாதி நீதியும் பேசாது மட்டுமல்ல.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.(குறள் 505)

என்று தமிழர் கொள்கையும் வரையறுக்கிறது.

இருபிறப்பாளர் மூவகை மக்களும் ஒரு பிறப்புடைய இருபிறப்பாளர் மூவகை மக்களும் ஒரு பிறப்புடைய இருகாற் பொதுவிலங்கொரு வகையாக தர்ம நூல் விதிக்கும் மாந்தர் வகை முறை. இவ்வருண் தருமம் குறளறமறியா கொள்கையாகும். நிற்க.

மேலோர் மூவருக்கும் நால்வேறு நிலையில் வாழ்க்கையுரிமை வகுத்துக் கொடுக்கும் ஆரிய தர்மமும் இதை ஆச்சிரிய தருமம் என்னும் வடநூல் ஆச்சிரம உரிமை சூத்திரர்க்கில்லை. அதனால் கல்வி, இல்லற இன்பம், புலமை சிந்தனை, விடுதலை வாழ்வு என்னும் நானிலையுரிமையும் நுகர்வும் பெரும்பாலோர்க்கு விரும்பினும் பிழையாம் வீட்டை விரும்பி தவம் மேற்கொண்ட சூத்திரன் பிழைக்க அவனை தளர்ந்த தர்மத்தை வளர்க்க வந்த கடவுள் ராமனே கொன்று நிறுத்திய கதையால் ஆசிரம தர்மத்தின் இயல்பும் வலியும் இனிது விளங்கும். கல்வி, மனைமாட்சி, தவம், துறவு என்னும் நானிலை வாழ்வும் எல்லா மாந்தர்க்கும் ஒத்துரிமையாகும் குறளறம். எனவே நிறமொத்த வெண்ணையும் கதையும் வேறாவது போல குறள் அறமும் ஆரிய தர்மமும் இயல் மாறுபடும்.

தர்ம சாத்திரப்படி ஓதல் மேலோர் சிறப்புரிமையாகும். பெரும்பாலோர்க்கது விலக்கப்பட்டது. எல்லோரும் கல்வியை இன்றியமையாத பொது உடைமையாக்கும் குறள் கூறும் தமிழறம்.

இரு பிறப்பாளரல்லா ரெல்லார்க்கும் பொருளுரிமையை மறுக்கும் தர்ம நூலனைத்தும். இன்பமும் அறனும் எல்லாம் மீயும் பொருளாக்கம் மக்களுக்கெல்லாம் பொதுவுரிமை யென்னும் குறள்.

பிறப்பால் குலமுறை பேணி அதன்வழி உணவும் மணமும் அறமும் விதிக்கும் தர்ம நூல். சிறப்பால் குடி செய்து வாழும் பெருமை எல்லாருக்குமியல் பென்னும் தமிழ்க்குறள்.

தொழில்களை மாந்தருக்கு வருண முறையால் வகுத்து விதிக்கும் தர்ம நூல். செயல் திறனும் வாய்ப்பும் உளதாயின் எவ்வினையும் எல்லார்க்கும் நன்றென்னும் குறள் பொருள் கருவி காலம் இடம் திறனொடைந்தும் எண்ணி விரும்பு வினை மேற்கொள்ளும் நெறி குறிப்பதல்லல் பிறப்பும் பிறவும் எத்தொழிற்க்கும் விலக்கென மறுப்பதை குறல் கொள்ளாது.

உழவை இழிவாக்கி ஆரியர்க்கு பழியாய் விலக்கி கீழோர்க்கும் விதிக்கும் தர்ம நூல். தொழிற்கெல்லாம் உழவே தலை என்றும், கோவேந்தர் கொற்றக் குடையும் தங்குடை கீழ் காண்பவராய உழவர் அரசரினுமுயர்வுடைய பெரியாரென்றும் கோழைபடா மேழிச் செல்வம் எல்லாருக்கும் நல்லதெனவும் பாராட்டும் குறள்.

மேலோர் மூவருள் முதல்வரான வேதியர்க்கு இரத்தலை உரித்தாக்கி உழையா உஞற்றாஉயர் தொழிலாக்கும் தருமநூல். தமக்கன்றி ஆவிற்கு நீ ரென்றுரப்பினும் (மக்கள்) நாவிற்கிரவின் இளிவந்ததில் என்றெல்லார்க்கும் இரவிழி வாவதை குறள் கூறும். மேலும் இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் அச்சிறுமையுடைய உலகற்றியான் (படைத்த கடவுள்)பரந்து கெடுக என்றிரப்பிற் றமிழர் வெறுப்பை விளக்கும்.

உயிரும் மானமும் உடனோம்ப இடனில்லாக்காலை மானத்தைவிட்டு தம்முயிர் பேண விதிக்கும் தர்ம சாத்திரங்கள். உயிர்நீப்பர் மானம் கெட்டவரின் என்ற இளிவரின் வாழத தமிழரியல்புரைக்கும் குறள்.

சூதினை ஆட்சியுரிமை மாட்சியுடைய இரண்டாம் வகுப்பார்க்கு மறுக்கொணாத் தருமமென்றும் மற்றவர்க்கு பொருட்கேடல்லால் பழிபயக்கும் இழிவன்றென்றும் விதிக்கும் தர்ம நூல். செல்வமோடு பண்பும் கெடுத்து அல்லலுழப்பிக்கும் சூதை எல்லாருக்கும் நல்வாழ்வின் வரியடைக்கும் தீதென்றதன் இழிதகவை வலியுறுத்தும் குறள்.

மெலியாரை நலிந்தவர் உரிமை பறிப்பது அரசர் சால்பென்று பாராட்டும் தர்மசாத்திரம். இகல்மேவல் இன்னா அறிவு எவ்வுயிர்க்கும் பகலென்றும் பண்பின்மை பாரிக்கும் நோய் என்னும் குறள்.

இவ்வேறுபாடுகள் ஆழாது மேலளக்கும் அனைவருக்கும் புலனாகும். இன்னும் பல ஆழ்ந்து துருவி ஆராய்வார் சொல்லக்கூடும். ஆனால் தமிழ்க்குறள் ஆரியர் சாத்திர வழிநூலாகாமை காட்டுதற்கிவைசாலும். வடநூல் வழக்குகட்கெதிராக துறைதொறும் வேறாம் தமிழ் மரபு தெளிக்கும் வள்ளுவர் நூல் தனி முதலாவதை மறுப்பாரறிவை என்னென்பது ஆரியர்க்குரிய வேத வேள்வியை நிந்தனை செய்யும் சமணநூல் போலாது தமிழ்க்குறள் ஆளாது வாளா அகலவிடும் பெற்றிமை அறிந்து பாராட்டத் தக்கது.

வள்ளுவர் பிறர்பழியும் தம்பழியும் போல் நாணும் தமிழ்ச் சான்றோராதலின் தமிழர் விரும்பா ஆரிய வழக்குகளை பழியா தொழிப்பர் புகழவு மாட்டார். சாற்றிற்றம் மாற்றலழிந் தொழியும் நான்மறையை அந்தணர் நூல் என்றகற்றிப் வள்ளுவர் ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று என்று வேள்வியை விலக்கும் தமிழ் மரபுரைப்பர். வெட்டென விளங்குமிவ்வுண்மை உணராமல் முட்டிமடியுமறிவின் முடவர். வைதிக தருமமும், பொதுமறையறவும் ஒன்றென நினைப்பர். தனித்தமிழ் மரபை நுனித்தறிந்துரைக்கும் முழுமுதற்றமிழ் நூல் வள்ளுவர் குறளெனக் கொள்ளுவர் வாய்மைவகையுணர் சான்றோர். வாழ்க தமிழ்க்குறள், வாழிய மாந்தர்!

நாவலர் ந.சோமசுந்தர பாரதியார்

Pin It