மேற்படி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படாமல் நீண்ட இடைவெளிக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தேர்வாணையத்தின் (யுபிஎஸ்) பணிகளுக்கான தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதில்கூட வயது வரம்பில் ஐந்து வயது சலுகை தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய தமிழக அரசு தேர்வாணை அறிவிப்பில் எந்தவகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பழங்குடி வகுப்பினர், வயது குறித்த சலுகைகள் மீறப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், பி.சி, எம்.பி.சி, அவர்களின் வயது வரம்பு மீறப்பட்டுள்ளது.

மேற்படி பணிக்கான முன் அனுபவத் தகுதி சான்றிதழின் காலநிர்ணய அளவு அடிக்கடி மாறுதலுக்கு உட்படுத்தப்படுவதால் எப்போதாவது நடத்தப்படும் தேர்வில் பங்குபெறும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.

2003-ம் ஆண்டிற்கு முன்பு நடந்த தேர்வில் முன்று வருடங்கள், 2003-ம் ஆண்டில் நான்கு ஆண்டுகள், 2008-ம் ஆண்டில் இந்த அறிவிப்பில் முன்று ஆண்டுகளும் புதிதாக வெளிவந்த வழக்கறிஞர்களுக்கு எந்த முன் அனுபவ தகுதியும் கேட்கப்படவில்லை.

29.11.2006-ம் நாளிட்ட அரசாணை எண். 212 முலம் வேலைவாய்ப்பு தடைசெய்யப்பட்டு இதர பணிகளுக்கும் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதில் அத்தியாவசியமான பணிகள் என்கின்ற வரையரைக்குள் நீதிபதிகள் பணி நியமனம் வராத காரணத்தினாலும் அந்த கால கட்டங்களில் சுமார் ஐந்து ஆண்டுகள் நீதிபதிகள் பணி நியமனம் செய்யப்படாததால் 17./7.2006 -ம் நாளிட்ட அரசாணை எண் 98-ன்படியான ஐந்து ஆண்டின் சலுகையினை நீதிபதிகளின் பணி நியமனத்திற்கு கடைபிடிப்பதே சமநீதியாகும்.

எனவே முன்பு வழக்கில் இருந்தது போல் எஸ்சி/எஸ்டி வயது வரம்பு முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.

- அதியமான், ஆதித்தமிழர் பேரவை

Pin It