தமிழ்நாடே பல்வேறு போராட்டங்களால் போர்க்களமாக காட்சியளிக்கின்றது. சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்கள் மீது திணித்திருக்கும் பல நாசகாரத் திட்டங்களுக்கு எதிராக, எப்படி போராடி மக்களை மீட்டெடுப்பது என சிந்தித்து செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் உயிர் வாழ்வதே இந்தச் சமூகத்தை அழிப்பதற்காகத்தான் என வாழும் கழிசடைகளும் இதே மண்ணில்தான் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு எப்போதுமே இந்த மக்களின் பிரச்சினைகளைப் பற்றி கவலை கிடையாது. இந்த மக்களை எது எல்லாம் பிற்போக்குவாதிகளாக, முட்டாள்களாக, அடிமைகளாக மாற்றுகின்றதோ அதை எல்லாம் தேடித் தேடி போய் ஆதரிப்பதும், அதற்கு முட்டுக் கொடுத்து வயிறு வளர்ப்பதும் தான் இந்தக் கழிசடைகளின் முதன்மைப் பணி. இதற்காகவே இது போன்ற நபர்களுக்கு ஆளும் வர்க்கம் எலும்புத் துண்டுகளை போட்டு அவர்களை நல்ல போசாக்காக வளர்க்கின்றது. காசு கொடுத்தால் இந்த வெட்கம்கெட்ட பிறவிகள் விளக்கமாத்துக்குப் பட்டுக்குஞ்சம் கட்டிவிட எப்போதுமே தயாராக இருக்கின்றன.

chandrasekharendra saraswatiசமீபத்தில் நிவேதிதா பதிப்பகம் சார்பில் பஜனைக் கவிஞர் பிறைசூடன் எழுதிய ‘மஹா பெரியவா பாமாலை’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. மஹா பெரியவா என்றால் ஏதோ நாட்டிக்காகப் போராடி உயிர்நீத்த பெரியவா என்று நினைத்து விடாதீர்கள். பார்ப்பனியத்தின் மொழியில் மஹா பெரியவா என்றால் பெரிய அயோக்கியன் என்று அர்த்தம். சின்ன பெரியவா என்றால் சின்ன அயோக்கியன் என்று அர்த்தம். உடல் முழுவதும் பார்ப்பனக் கொழுப்பு தாறுமாறாக ஏறி, எல்லா வகையான களியாட்டங்களிலும் ஈடுபட்ட இந்த ஜந்துக்களை ஒருவன் புகழ்ந்து கவிதை பாடி காசு வாங்குகின்றான் என்றால், அவனைவிட ஒரு இழிபிறவி இந்த உலகத்தில் நிச்சயம் இருக்க முடியாது. இந்தக் கருமம் பிடித்த கவிதை நூலை வெளியிட்டுப் பேசிய இல.கணேசன், பிறைசூடனிடம் ஜெயேந்திர சரஸ்வதி பற்றியும் கவிதை நூல் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். காசு கொடுத்தால் ஜெயேந்திர சரஸ்வதி பற்றி என்ன, பன்வாரிலால் புரோகித் பற்றியும், நிர்மலா தேவி பற்றியும் கூட கவிதை எழுதிக் கொடுப்பார் பிறைசூடன்.

தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் மிகக் கீழ்த்தரமாக நினைத்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஒரு கேடுகெட்ட பிற்போக்குவாதி ஆவார். இவரைத்தான் எல்லா பார்ப்பன மாமா பத்திரிகைகளும் 'பெரியவா' என்று அழைக்கின்றன. பெண்களைப் பற்றிய அவரின் பார்வையை இன்றைக்கு உள்ள பெண்கள் கேட்டார்கள் என்றால், பெரியவாவை செருப்பாலேயே அடிக்காமல் விடமாட்டர்கள். எஸ்.வி.சேகர் என்ற பொறுக்கிப் பார்ப்பான், பெண்களைப் பற்றி மிக இழிவாக பேசுவதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் அவனின் தாத்தனான சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதியதைப் படித்தாலே போதும். இந்த பைத்தியக்காரனின் முட்டாள்தனமான உளறல்களை எல்லாம் தொகுத்து 'தெய்வத்தின் குரல்' என்ற நூலாக வெளியிட்டு இருக்கின்றார்கள். அதில் “ஆலயங்களுக்கு உள்ளேயே நடக்கிற அநாசாரங்களை என்னைத் தவிர யாரும் எடுத்துச் சொல்ல மாட்டார்கள் போலிருக்கிறது. அதையும் நானே சொல்கிறேன். இப்போதெல்லாம் டூரிஸ்டுகள், 45, 50 நாள் யாத்திரை கோஷ்டிகள், காலேஜ் பெண்கள், ட்ரெயினிங் ஸ்கூல் பெண்கள் என்று பலர் கூட்டம் கூட்டமாகக் கோயில்களுக்கு பஸ்கள் அமர்த்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் எத்தனையோ பேர் விலகியிருக்க வேண்டிய காலத்திலும் தரிசனத்திற்கு வந்து விடுகிறார்கள். இப்படி செய்வது தோஷம் என்று தெரியாததாலேயே பெரும்பாலும் கோயிலுக்கு வந்து விடுகிறார்கள். முன்பெல்லாம வீட்டு விலக்கு என்று எவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ, அவர்கள் இப்போது கோயிலிலும்கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்து விடுகிறார்கள். ‘ஸ்வாமிக்கு ஏது தீட்டு?’ சீர்திருத்தக்காரர்கள் நான் சொல்வதை ஆக்ஷேபிக்கலாம். தீட்டு இல்லாத சுவாமி எங்கேயும் இருக்கிறார். அவரைக் கோயிலில்தான் வந்து தரிசிக்க வேண்டுமென்பதில்லையே? சாஸ்திரப் பிரகாரம் ஸ்வாமியின் சாந்நித்தியத்தைக் கிரகித்துத் தரும் கோயில்களில், அந்த சாஸ்திரங்கள் சொன்ன விதிப்படிதான் ஸ்வாமியைத் தரிசிக்க வேண்டும். இந்த விதிகளை மீறுவதால்தான் பல மகாக்ஷேத்திரங்களில், விபத்து, விபரீதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்” என்றும்,

“இப்போது அந்த மூன்று நாட்களும் ஸ்திரீகள் ஆஃபீஸுக்குப் போவதில் ஊர் பூராவும் தீட்டுப் பரவுகிறது. ‘அட்மாஸ்ஃபைரிக் பொல்யூஷ்ன்’ என்று இன்றைக்கு அநேக விஷயங்களை எடுத்துக் காட்டி எதிர் நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கிறார்கள். அந்தப் ‘பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்திரீகளின் தீட்டே. அது செய்கிற கெடுதல் வெளியிலே தெரியாததால், அதைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள். கவனிக்கிறவர்களையும் ஆசாரப் பைத்தியங்கள் என்று ஒதுக்குகிறார்கள். வாஸ்த்தவத்திலோ இந்தத் தீட்டு அமங்கள சக்திகளையெல்லாம் இழுத்துக் கொண்டு வரும். அதை இப்படி எல்லா இடத்திலும் கலக்கவிட்டால் ஜனங்களுக்கு எத்தனைதான் வரும்படி வந்தாலும், கவர்ன்மென்ட் எத்தனைதான் five year plan போட்டாலும், தேசத்தில் துர்பிக்ஷமும், அசந்தியும், வியாதியுமாகத்தான் இருக்கும்” என்றும் கூறுகின்றார்.

பெண்களைப் பற்றிய பார்ப்பனியத்தின் வக்கிரப் பார்வையைத்தான் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வெளிப்படுத்துகின்றார். மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு போவதால் விபத்துக்களும், விபரீதங்களும் ஏற்படுகின்றன என்றும், ‘பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்திரீகளின் தீட்டே என்றும் சொல்லும் இந்த முட்டாப் பயலுக்கு பெயர் பெரியவாவாம். இன்று பிஜேபி கட்சியில் இருக்கும் பெண்கள் எல்லாம் இந்தக் கருத்தோடு உடன்படுகின்றார்களா என்று தெரியவில்லை. இது மட்டுமல்ல, "பெண்ணாகப் பிறந்தவர்கள் வீட்டு வேலைகளைக் குனிந்து நிமிர்ந்து பண்ணினால் போதுமானது. ஆபீஸ் வேலை அவர்களுக்குக் கூடாது என்பதே என் அபிப்ராயம். என் அபிப்ராயமென்றால் என்ன? நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அநுஸரித்துத்தான் சொல்கிறேன். இப்போது இந்த விஷயத்தை நிறுத்திக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது, ஒரு ஸ்த்ரீயானவள் ஒழுங்காகப் பொறுப்பாக வீட்டு வேலைகளைப் பண்ணுவதென்றால், சமைத்துப் போட்டு, குழந்தைகளைக் கவனித்து, புருஷனுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்வதென்றால், அதற்கே நாள் பூராவும் ஆகிவிடும். குடும்பங்கள் சேர்ந்துதான் தேசம்; வீடுகள் சேர்ந்துதான் நாடு. ஆனதால் பொம்மனாட்டிகள் அவரவர் வீடுகளை வீடாக வைத்துக் கொள்வதற்கானவற்றைப் பண்ணினால் அதுவே நாட்டுப்பணி; உலகத்தொண்டுதான்; பரோபகாரம்தான்" என்கிறார். அதாவது பெண்கள் அனைவரும் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு ஒழுங்காக வீட்டில் இருப்பதே உலகத்துக்கு நல்லது என்கின்றார். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பார்ப்பான்கள் தங்கள் கருத்தை அவர்களே மதிக்கமாட்டார்கள் என்பதற்கு இன்று பிஜேபியில் நிரம்பி வழியும் பார்ப்பாத்திகளே சாட்சி.

pirasoodanபெண்களைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான, முட்டாள்தனமான கருத்தை வைத்திருந்தார் என்றால், சாதி தர்மத்தைப் பற்றிய இந்த கிழட்டு பார்ப்பானின் கருத்து மிக அபாயகரமாக இருந்தது. “ஸமயாசாரம் என்பது மதாநுஷ்டானம். ஹிந்து மதத்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ, அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்தக் குடும்பத்தில் நீ பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக (accidental-ஆக) நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எதனால் உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈஸ்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் அதன் ஸமயாசாரத்தையே நீ அநுஷ்டி." என்கிறார்.

சாதிய இழிவு என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டது, அதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இந்த பார்ப்பானின் உபதேசம். ‘மலம் அள்ளும் தொழிலாளர்கள் ஆன்மீக அனுபவத்தை பெறுகின்றார்கள்’ என்று மோடி சொன்னது இதைத்தான். இதை உறுதிப்படுத்தத்தான் பிஜேபியில் SC அணி என்று தனியாகவே வைத்திருக்கின்றார்கள். தலித்துகளுக்கு மட்டும் தனி அணி வைத்திருப்பது கூட கடவுளின் உத்திரவால்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி சாதி வெறியனாகவும், தீவிர பெண்ணடிமையை வலியுறுத்தபவனாகவும், கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும் இருந்த இந்தக் கழிசடைக்கு கவிதையால் பாமாலை இயற்றி பெருமை சேர்ப்பதுதான் ஒரு கேடாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் இந்தக் கூலிப்படை கவிஞர்களை ஒழித்தாலே பாதி பார்ப்பனியத்தை ஒழித்துவிடலாம்.

- செ.கார்கி

Pin It