மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கோயில் வளாகத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகளும், வீரவசந்தராயர் மண்டபமும் சேதம் அடைந்தன. இந்தத் தீ விபத்து தற்செயலாக ஏற்பட்டதா, இல்லை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சதியா என காவல்துறை விசாரித்துக் கொண்டு இருக்கின்றது. தீ விபத்து ஏற்பட்ட உடன் அங்குவந்த பொதுமக்கள் பலர் தீ யை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்குவந்த பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த காலிகள் தீயை அணைப்பது பற்றி கவலைப்படாமல் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோஷம் போட்டுள்ளனர். இதனால் தீயை வேண்டுமென்றே சில காலிகள் வைத்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவே சாமானிய பக்தர்கள் நினைக்கின்றார்கள். பார்ப்பன விஷ நாக்குப் பேர்வழி எச்சை ராஜாவும், இன்னும் தமிழ்நாட்டில் உள்ள சில கெட்ட புத்தி பார்ப்பான்களும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பட்டில் இருந்து விடுவித்து தனிப்பட்ட சில பார்ப்பன, பார்ப்பன அடிவருடிகளின் சொத்தாக மாற்ற வேண்டும் என்று குரைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

MeenakshiAmmanTempleFire

கோயில் உண்டியலில் காசு போட்டவன், கோயிலுக்கு வெளியே கடவுளின் பெயரைச் சொல்லி பிச்சை எடுப்பவன், கருவறையில் மணியாட்டி பிச்சை எடுப்பவன் என்று கடவுள் பெயரை வைத்துக் கொண்டு பிழைக்கும் இந்தக் கும்பல்தான் நேர்மையானவர்களாம். இவர்கள் கையில் பலகோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள கோயிலை ஒப்படைத்துவிட்டால் பார்ப்பான் மற்றும் பார்ப்பன கடவுள்களின் குண்டி குளிர்ந்து விடுமாம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் தன்னுடைய கோயிலில் பற்றிய தீயைக் கூட அணைக்க வக்கில்லாமல் கடவுள் மானங்கெட்டுப் போய் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாராம். கடவுள் நம்பிக்கை உள்ள பக்தர்களின் கையில் கோயிலின் சொத்துகள் கொடுக்கப்பட்டிருந்தால் இந்நேரம் கடவுள் நேரடியாக வந்து தீயை அணைத்து, கிழித்திருப்பாராம்!.

தர்மபுரியில் தலித்துகளின் குடிசைகள் எரிந்த பொழுது வராத காலிகள், அரியலூர் நந்தினியை இந்து முன்னணி அயோக்கியன் கருவறுத்த பொழுது வராத காலிகள் இப்போது கதறிக்கொண்டு வருகின்றார்கள் என்றால், காரணம் இல்லாமல் இல்லை. கோயிலை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ள கும்பலுக்கு அது எவன் அப்பன் வீட்டு சொத்தாக இருந்தாலும் மானமரியாதையை தூக்கி தூர வைத்துவிட்டு வெட்கம்கெட்ட முறையில் அந்தப் பிரச்சினையில் தலையிட்டுதான் ஆகவேண்டும். அப்போதுதான் மக்கள், கோயிலில் இவர்களுக்குப் பாத்தியதை உண்டு என்று நம்புவார்கள் என்ற எண்ணம். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையை வரலாற்றில் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

சாமி கும்பிட வந்தவனும், மணியாட்ட வந்தவனெல்லாம் கோயிலை உரிமை கோரினால், அதன் சொத்துக்களை அவர்கள் கட்டுப்பாட்டில் கொடுத்தால் சிறப்பாக பராமரிப்பு செய்வோம் என்றால், வேலை செய்ய வந்த தொழிலாளர்கள் எல்லாம் தொழிற்சாலையை உரிமை கோருவதையும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கோரிக்கையும் மிகவும் நியாயமான கோரிக்கை தானே. அதையும் அம்பிகள் ஏற்றுக்கொண்டால் மோடியின் ஆட்சி உண்மையான சோசலிச ஆட்சியாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படுமே! பார்பனர்கள் கோயிலுக்கு ஒரு பிரச்சினை என்றால் உயிரையும் கொடுக்கும் அளவிற்குச் செல்வார்கள் என்பதை வரலாற்றில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். திருவரங்கம் கோவில் வரலாற்றை குறிப்பிடும் 'கோயிலொழுகு' என்னும் நூல், அழகிய மணவாளதாசருடன் இரண்டு ஜீயர்களும் கீழே குதித்து உயிர் துறந்ததைப் பற்றி குறிப்பிடுகின்றது. அதைத் தற்கால உரைநடையில் கோயிலொழுகைப் பதிப்பித்த கிருஷ்ணமாச்சார்யர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

"ஸ்ரீவரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைக் கோனோரிராஜா தனக்கு வேண்டியவர்களான கோட்டை சாமந்தனார் மற்றும் சென்னப்ப நாயக்கர் ஆகியோருக்குக் குத்தகை விட்டார். ’புரவரி’, 'காணிக்கை வரி’, ’பட்டுவரி’, 'பரிவட்ட வரி’ போன்ற வரிகளை விதித்து ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீபண்டாரத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த திருவாபரணங்களையும், பொற்காசுகளையும் கவர்ந்து சென்றான். இவ்வறான கொடுமைகளைப் பொறுக்க ஒண்ணாத நிலையில் வெள்ளைக் கோபுரத்தின் மேலே ஏறி இரண்டு ஜீயர்களும் அழகிய மணவாளதாசர் என்ற ஏகாங்கியும் தம் உயிரை மாய்த்துக்கொண்டனர்."

இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி, கோயில் அப்போதும் மன்னனின் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கின்றது. அதை குத்தகைக்கு விடும் அதிகாரமும் மன்னனிடமே இருந்துள்ளது என்பதுதான். அதில் முறைகேடுகள் ஏற்பட்டபோது நேர்மையான பார்ப்பனர்கள் கோயிலைத் தங்கள் கட்டுப்பாட்டில் விட்டுவிடுமாறு கோராமல் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். நியாயமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து அரசின் அஜாக்கிரதையால் ஏற்பட்டது என்பதை உறுதியாக பார்ப்பனக் கும்பல் நம்பினால் தங்களின் முன்னோர்கள் செய்ததைப் போல தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யலாம். வழி வழியாக வந்த மரபுகளை கட்டிக் காப்பாத்துவதுதானே சனாதன தர்மம். இப்போது மட்டும் அதை மீறுவதை எப்படி அனுமதிக்க முடியும்?

இன்று கோயில்களில் உட்கார்ந்துகொண்டு கோயிலை ஆட்டையப் போட நினைக்கும் பார்ப்பான்களுக்கும், கோயிலுக்கும் எப்போதுமே சம்மந்தம் இருந்தது கிடையாது. ஏனென்றால் பக்தி இலக்கிய காலத்துக்கு முன்னால் தமிழ்நாட்டில் இன்று உள்ளது போன்று கோயில் என்பது மிகப்பெரிய சமூக நிறுவனமாக வளர்ச்சியடையவில்லை. அப்போது இருந்த கோயில்கள் பெரும்பாலும் மண்ணாலும், மரத்தாலுமே செய்யப்பட்டிருந்தது. வேதத்தை ஏற்றுக்கொண்ட ஸ்மார்த்தப் பார்ப்பனர்களே அன்று இருந்தனர். இவர்கள் வேள்விகளை மட்டுமே செய்பவர்கள். இவர்கள்தான் அரசனுக்கு அருகில் அவர்களுக்கு யோசனை சொல்பவர்களாக, அதிகாரம் படைத்தவர்களாக, மன்னர்களுக்கு கால்வழி மரபுகளை உருவாக்கிக்கொடுப்பவர்களாக இருந்தனர். எப்பொழுது தமிழ்நாட்டில் சமண, பெளத்த மதங்களுக்கு எதிராக பக்தி இயக்கம் பரவியதோ, அப்போதுதான் மண்ணாலான கோயில்களும், மரத்தாலான கோயில்களும் கற்களால் கட்டப்பட்ட மிகப்பெரிய கோயில்களாக வளர்ச்சியடைந்தன. அப்படிப்பட்ட கோயில்களுக்கு மன்னர்கள் மிகப்பெரிய அளவிற்கு சொத்துக்களை அளித்தனர். இப்படி மிகப்பெரிய சொத்துடை நிறுவனங்களாக கோயில்கள் வளர்ச்சியடைந்த போதுதான் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் உருவவழிபாட்டை ஏற்றுக்கொண்டு கோயில் சொத்துக்களை களவாட அர்ச்சகர் என்ற பெயரில் புறப்பட்டனர்.

இப்படி பார்ப்பனர்கள் கோயில் சொத்துக்களை தம் விரும்பம் போல கொள்ளையடித்து அனுபவித்து வந்ததை தடுப்பதற்காகத்தான் 1925 இல் இந்துசமய அறநிலையத்துறைச் சட்டத்தை நீதிக்கட்சி கொண்டுவந்தது. அப்போது காங்கிரஸ் தலைவர்களாக இருந்த சத்திய மூர்த்தி, சீனிவாச ஐயங்கார் போன்ற பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்து பத்திரிகை இதற்கான சட்ட மசோதாவைக் கண்டித்து தலையங்கம் எழுதியது. இச்சட்டத்தை ஆதரித்துப் பேசிய நீதிக்கட்சி தலைவர் நடேச முதலியார், கோயிலின் நிதி ஆதாரங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்து நலன்களுக்காகவும், செத்துப்போன சமஸ்கிருத மொழியை வளர்க்கவுமே பயன்படுத்தப்படுகின்றன. அதனைத் தடுத்து நிறுத்த இப்படியொரு சட்டம் தேவையென வலியுறுத்தினார். இப்படி இந்து சமய அறநிலையத்துறை நிறுவப்பட்டதே பார்ப்பனர்கள் கோயிலின் சொத்துக்களை தங்கள் வீட்டு சொத்துக்கள் போன்று நினைத்து அனுபவித்து வந்ததுதான் காரணமாகும். அதுமட்டும் அல்லாமல் கோயில்கள் எப்போதுமே பார்ப்பனர்கள் அல்லது பொதுமக்களின் சொத்துக்களாக வரலாற்றில் இருந்தது கிடையாது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த ஆலயங்கள் வருவதற்கு முன்னால் தமிழகத்தில் உள்ள பெரிய ஆலயங்கள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் பிடிக்குள்தான் இருந்தன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னால் கூட கோயில்களில் கொட்டமடிக்கும் பார்ப்பான்களை இன்னமும் இந்த அரசுகள் வெளியேற்றாமல் வெட்கம்கெட்ட முறையில் மரபு என்ற பெயரால் ஆதரித்து வருகின்றது. சட்டத்தின் முன் அனைவருமே சமம் என்று சொல்லும் இந்திய அரசு, பார்ப்பான்கள் தங்களின் நலனை முன்னிலைப்படுத்த எழுதி வைத்துள்ள வேத, புராண, இதிகாச, மனுஸ்மிருதிகளை சட்டத்தைவிட மேலாகக் கருதுவது அந்த அரசு எந்தளவிற்கு பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கின்றது என்பதைத்தான் காட்டுகின்றது. அந்தத் தைரியத்தில்தான் இன்று பார்ப்பன கும்பல் வீதிக்கு வந்து கோயிலை எனக்கு எழுதிக்கொடு என்று குதித்துக்கொண்டு இருக்கின்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36 ஆயிரம் கோயில்களுக்கு மேல் உள்ளது. இந்தக் கோயில்களுக்கு 4 லட்சத்து 78 ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்களும், 22600 கட்டிடங்களும் உள்ளன. மேலும் 33665 கடைகள் வாடகைக்கும் விடப்பட்டுள்ளன. 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேருக்கு விவசாய நிலங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 58.68 கோடி ரூபாய் வருமானம் வருவதாக அரசு தரப்பில் சொல்லப்படுகின்றது. ஒரு வேளை கோயில்கள் எல்லாம் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டிலோ, இல்லை அவர்களின் அடிவருடிகளின் கட்டுப்பாடிலோ சென்றால் இதுவரை புறங்கையை மட்டுமே நக்கிக்கொண்டிருந்தது போய் முழு தேனையும் இவர்களே நக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஒட்டுமொத்த கோயிலின் கட்டுப்பாடும் பக்தர்கள் என்ற போர்வையில் இருக்கும் காவி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்கு போகும் பட்சத்தில், ஆகமவிதிப்படி பூசைகள் நடைபெறும் நிறுவனப்படுத்தப்பட்ட கோயில்கள் மட்டும் அல்லாமல், நாட்டார் தெய்வ கோயில்கள் கூட பார்ப்பன மயமாக்கப்படும். ஏற்கெனவே கிராம கோயில் பூசாரிகள் பேரவை என்ற பெயரில் நாட்டார் தெய்வ கோயில்களில் பூசை செய்யும் மற்ற சாதிப் பூசாரிகளுக்கு பார்ப்பனிய முறைப்படி பூசை செய்ய பயிற்சி அளித்து வருகின்றனர். இதை ஒட்டியே பல நாட்டார் தெய்வ கோயில்கள் தமிழ்நாட்டில் பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கின்றது. நேற்றுவரை திரு கருப்பானர் சாமி, திரு முனியப்பன் சாமி என்று இருந்த கோயில்கள் எல்லாம் இன்று ஸ்ரீ கருப்பானார் சுவாமிகள் என்றும், ஸ்ரீ முனியப்பன் சுவாமிகள் என்றும் பெயர் மாற்றப்பட்டிருக்கின்றன. அது போன்ற கோயில்களில் முருகன், தொந்தி பிள்ளையார், சிவலிங்கம் போன்றவை நிறுவப்பட்டு உயிர்பலி கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை உள்ளூரில் இருந்த பண்டாரம் போன்ற சாதிகளைச் சேர்ந்த பூசாரிகளின் பிடியில் இருந்த அந்தக் கோயில்கள் பார்ப்பன பூசாரிகளின் பிடியில் விழுந்திருக்கின்றன.

இப்படி 36000க்கும் மேற்பட்ட கோயில்களை கபாளிகரம் செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான அன்னக்காவடி பார்ப்பனர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க முடியும். மேலும் நாட்டார் தெய்வ வழிபாடுகளை ஒழித்துக்கட்டுவதன் மூலம் தமிழ்ச்சமூகத்தில் தீவிரமான பார்ப்பனிய சிந்தனையை விதைக்க முடியும். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலுக்கு ஆதரவான மனநிலையை தமிழகத்தில் உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கான நிதியையும் கோயில் வருவாயில் இருந்தே திரட்டிக் கொள்ள முடியும். இதுதான் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் திட்டம். அதற்காகத்தான் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று குரைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

இன்று கோயிலை உரிமை கொண்டாட நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையும் கும்பல்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு கோயிலின் ஒரு செங்கல் கூட சொந்தமானது கிடையாது. அனைத்தும் தமிழ்மக்களின் வியர்வையில் கட்டப்பட்டது. இது மக்களின் சொத்து. அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. எப்போதுமே அதை அரசுதான் காத்தும் வந்துள்ளது. கோயில்கள் உள்ளபடியே ஒழுங்காக இருக்க வேண்டும் என்றால், அது அனைத்து மக்களுக்கும் ஜனநாயகம் வழங்கும் இடமாக இருக்க வேண்டும் என்றால், கோயில்களில் இருந்து பார்ப்பனக் கும்பலை வெளியே துரத்த வேண்டும். உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்த கும்பலை கோயிலுக்குள் தமிழர்கள் விட்டதன் பலனைத்தான் இப்போது அனுபவித்து வருகின்றார்கள். உண்மையில் பார்ப்பான் இருக்க வேண்டிய இடம் கோயிலுக்கு உள்ளே அல்ல, கோயிலுக்கு வெளியே உஞ்சவிருத்தி செய்துகொண்டு. இதுவரை ஏமாந்தது போதும். இனியாவது கோயிலின் கருவறையில் இருந்து பார்ப்பனக் கும்பலை வெளியேற்றும் முயற்சியில் மானமுள்ள பக்தர்கள் ஈடுபடவேண்டும். தமிழ்மக்கள் கட்டிய கோயிலில் வந்தேறி பார்ப்பனக் கும்பலுக்கு என்ன வேலை என்று யோசிக்க வேண்டும். தமிழில் பாடினால் தீட்டாகிவிடும் என்றால், அந்தக் கடவுள்களை வீதியில் போட்டு உடைக்க வேண்டும். இல்லை என்றால் இன்று கருவறையைத் திருடியவன் நாளை கோயிலையும், அதன் சொத்துக்களையும் திருடித் தின்பதை யாராலும் தடுக்க முடியாது.

- செ.கார்கி

Pin It