தொடர்புடைய படைப்புகள்

வளரும் நாடுகளின் விவசாய விளைபொருட்களின் விலை உயரக்கூடாது என்பதில் அமெரிக்க அரசு மிகவும் உறுதியாக உள்ளது.இந்திய அரசும்,1980களில் இருந்து அமெரிக்காவிற்கு விசுவாசமாகவே நடந்து கொண்டுள்ளது.

2016-2017 க்கான  நெல் விலை( பொது) குவிண்டால்   ரூ.1470/=                                                           

தேவிந்தர் சர்மாவின் பரிந்துரை  ரூ 5100/=               

நாம் கேட்கும் விலை       ரூ 6000/=       

நெல்விலையை  சரியான விலையில்  கால்பங்காக ஏன் நிர்ணயிக்கிறது இந்திய அரசு ? அந்த அதிகாரிகளுக்கு தொழில் அறிவு உண்டா ? விவசாயிகளை ஏமாற்றி எடுக்கும் இந்தப்பணம் மத்திய அரசுக்கு  சேர்கிறதா?

ஒரு ஏக்கரில் 20 குவிண்டால் நெல் விளைந்தால் உழவர் இழப்பது ரூ90,600/=  சுமார் 10கோடி ஏக்கர்களில் நெல்பயிரிடும் இந்திய உழவர்கள் ஒருபோக சாகுபடியில் இழப்பது ரூ 9 லட்சம் கோடிகள். முப்போகத்தில் இழப்பது சுமார் 27லட்சம் கோடிகள் .எல்லா பயிர்களிலும் இழப்பது 540 லட்சம் கோடிகள்.       

சுமார் 45 லட்சம் ஏக்கர்களில் நெல் பயிரிடும் தமிழக உழவர்கள்  ஒரு போக சாகுபடியில் இழப்பது ரூ 41,000 கோடிகள். முப்போக சாகுபடியில் இழப்பது ஒரு ஆண்டில் இழப்பது ரூ. 1,23,000 கோடி -கள். கரும்பு,தானியங்கள்,பருப்பு என அனைத்து சாகுபடிகளிலும் இழப்பது ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கோடிகளுக்கு மேல்.  

பயிர்க்கடன்,கல்விக்கடன், நகைக்கடன்,டிராக்டர் கடன்,போர்வேல் கடன் என்று வட்டி உழவர்களை கொன்றது இந்திய அரசு. உழவர்கள் பெற்ற மொத்த கடன் தொகை எவ்வளவு?இந்த கடன் பெற வேண்டிய அவசியமே இல்லை. விளைபொருட்களுக்கு சரியான விலைகிடைத்தால் உழவர்களால் அரசுக்கு கடன் தரமுடியும்.தொழில்களில் முதலீடு செய்யமுடியும்.

உழவன் உற்பத்தி செய்யும் எல்லா விளைபொருளையும் இப்படித் தான் இந்திய அரசு  விலையை அடித்து நிர்ணயிக்கிறது. சந்தையில் இதைவிட மேலும் குறைத்துவாங்கும் வேலைதான் நடக்கிறது ?  ஏன் இந்த விலைக்குறைப்பு?

வாங்கி சாப்பிடுகிற ஏழைபாழைகள்  உணவின் விலை அதிகமானால் என்ன செய்வார்கள் ? .....ஏன்? தனியார், அரசுத்துறை ஏழைகளுக்கு அகவிலைப்படி கிடைக்கிறது. நெல் விலை உயர்ந்தால்  உழவுத்தொழிலாளியின் ஊதியத்தை மூன்று மடங்கு உயர்த்தமுடியும்.உழவுத்தொழிலாளிக்கும் சிக்கல் இல்லை. முறை சாராத தொழிலாளிகளுக்கு அகவிலைப்படி கொடு.  .

எல்லா விளைபொருள்களுக்கும்  விலையை உயர்த்தினால் 100 லட்சம் கோடி போல வருமே?

"வரும்தான். கொடு."  

ஐயோ. பணவீக்கம் சந்திரனைத் தொடுமே. "

" சரி எங்களுக்கு தரவேண்டிய பாக்கியை வங்கியில் போடு.  இல்லை தங்கமாகக் கொடு. உனது கம்பெனிகளில் பங்குகளாகக் கொடு. கொடுக்காமல் மட்டும் இனியும் ஏமாற்றமுடியாது."  

இந்திய அரசே!  நான் 6 லட்சம் ரூபாய்க்கு  டிராக்டர் வாங்குகிறேன்.எதற்கு இன்னும் ஒரு 6 லட்சம் அளவுக்கு வட்டி கட்டவேண்டும்? என் பணத்தைக் கொடுத்து விட்டால் கடனும் வேண்டாம். வட்டியும் வேண்டாமே.உனது வங்கிகள் நாசமாகப் போகட்டுமே.அன்னிய வங்கிகளும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வருகிறார்களே.

இந்திய அரசே  6 லட்சம் ரூபாய்க்கு சரியான விலைக்கு நெல் விற்றால் 100 மூட்டை நெல் போதும்.  100 * 6000= 6 லட்சம். இப்போது சுமார் 400 மூட்டை நெல்லை நான் அழவேண்டும்.  இந்த 300 மூட்டை நெல்லை குருக்குவழியில் உனது அமெரிக்க எசமானர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்கிறேன். அதனால்தான் அமெரிக்க அரசு வளரும் நாடுகளில் விளைபொருள் விலை குறைத்தே இருக்கவேண்டும் என்று வாதிக்கிறார்கள். ( அமெரிக்க உழவனுக்கு சந்தை விலை கொடுக்கப்படும். ஆனால் பல்வேறு அரச மானியங்களும் தரப்படுகின்றது) பாரத் மாதா என்று வணங்கும் பக்த சிகாமணிகளே ? பாரத கலாசாரம், இந்து கலாச்சாரம் என்று வீராவேசமாக முழங்குகிறீர்கள். இந்திய உழவர்களைச் சேர வேண்டிய  லட்சம்-கோடி ரூபாய்களை அன்னியன் கொள்ளையிட அனுமதிப்பதற்கு நீங்கள் பெறும் கைக்கூலி எவ்வளவு?

எந்த நாயிடமும் ஒரு பைசா லஞ்சம் வாங்காத உழவர்களை வங்கிகள் எவ்வளவு கேவலப்படுத்துகின்றன?  அவர்கள் வருகிறார்கள் .அவர்களிடம் அழுக்கான உடைகள்தான் உள்ளன.அவர்கள் கால்களில் பிய்ந்துபோன செருப்புகள்தான் உள்ளன. உனது பொருளாதார மேதைகள்.வேளாண் நிபுணர்கள் ஆகியோரையும் கூப்பிட்டு வைத்துகொள். கொடுக்கவேண்டிய பாக்கிக்கு பதில் சொல்.

பொருளாதார நிபுணர்களே !

நியாயமாக உழவர்களுக்கு சேரவேண்டிய தொகையை தந்தால், உழவுத் தொழிலாளர்களின் ஊதியம் உயரும். கிராமத்தை சார்ந்து நிற்கும் சிறுதொழில்கள், வணிகம் செழிக்கும் பல்வேறு சேவைகள் செழுமைப்படும். இந்திய மக்கள் தொகையில்  சுமார் 70% மக்களின் வாங்கும் சக்தி பெருகும். தொழில்துறைக்கு உள்நாட்டு சந்தை விரிவடையும். மண்,மலை,காடுகள் ஆகியவைகளை , நாட்டின் வளங்களை,கனிமங்களை  ஏலமிட்டு விற்க ஒரு வேசையைப்போல இந்த நாடு உலகநாடுகளை அணுக வேண்டியதில்லை. உழவர்களின் மூலதனச்சேர்க்கை உழவுத்தொழில் சார்ந்த பல்வேறு தொழில்களை துவங்கும்.

தவறு என்றால் நிபுணர்களாக நின்று திருத்துங்கள்.. இயலாது என்றால் இந்த நாட்டை அன்னிய சக்திகளுக்கு அடகு வைத்து நாசமாக்கியதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். 

Comments

4 comments

4
Arasan
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை அல்லது விவசாயியே தனது விளைபொருளுக்கு விலையை தீர்மானிக்கும் உரிமை வேண்டும் என்பது பரவலாக கூறப்பட்டுவரும் ஓர் யோசனை, ஆனால், ஒரு குண்டுசியின் விலையை குண்டூசியை உற்பத்தி செய்பவரே தீர்மானிப்பதால், எந்த ஏழையும் பாதிக்கப்படபோவதில்லை, மேலும், குண்டூசியானது உயிர்வாழ அத்தியாவசியமானதும் அல்ல. ஆனால், விவசாய விளைபொருள்களானது உயிர்வாழ அத்தியாவசியமானது, அதன் விலையை விவசாயியே தீர்மானித்தால் அல்லது உரிய விலை கொடுத்தால், அத்தியாவசிய உணவு பொருள்களின் விலையானது சந்தையில் பல மடங்கு உயர்ந்துவிடும், அதனால் பாமர மக்களின் வாங்கும் திறனானது கடுமையாக பாதிக்கப்படும், என்று பொருளாதார நிபுணர்கள் சொல்லுகிறார்கள், அவர்கள் முன்வைக்கும் இந்த வாதத்திற்கு உரிய பதில் விவசாயிகளிடம் இருக்கிறதா? அதாவது, தனது பொருளை தானே விவசாயி விலையை தீர்மானித்தால் அது சமுகத்தில் விலையேற்றத்தை உண்டாக்காது, பாமர மக்களை பாதிக்காது என்ற நிபந்தனையை உள்ளடக்கிய தீர்வை விவசாயிகளால் முன்வைக்க முடியுமா? இங்கே ஒரு கேள்வி எழலாம், அதாவது, நானே உரிய விலை கிடைக்காமல் இருக்கிறேன் என்னும்போது, பாமர மக்களை பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும் என்பதே அது. இத்தகைய கேள்வியை விவசாயிகள் கேட்பார்களானால், அவர்களின் உரிமையால் பாதிப்படையபோகும் சாதாரண மக்கள் எப்படி விவசாயிக்கு ஆதரவாக இருப்பார்கள்?
nvs
சரியான செருப்படி. சூடு சொரணை என ஏதேனும் இருந்தால் ஆட்சியாளர்கள் நாண்டு கொண்டு செத்துவிடுவார்கள்.
Theiventhiran Kanthia
மற்றைய நாடுகளில் விவசாயப்பொருட்களின் சந்தைப்படுத்தலுக்காக அரச கூட்டுத் தாபனங்களை (State Corporations) உருவாக்குவது, விவசாயிகள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படகூடாதென்பதற்காக! - அவர்கள் எப்படியும் குறைந்த பட்சம் சந்தை விலையையாவது பெற்றாக வேண்டுமென்பதற்காக! இந்தியாவில் இந்தச் சந்தைப்படுத்தல் அமைப்புக்களை உருவாகுக்கிறார்கள் இந்திய விவசாயிகள் சாத்தியமான அளவுக்கு ஆகக் குறைந்த அதள பாதாள விலையில் மட்டுமே விற்க வேண்டுமென்பதற்காக! போதாதற்கு ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் விவசாயிகளைச் சுடுவதற்குப் போலிசை ஏவுகிறார்கள்! உலகில் வேறெந்த ஜனநாயக நாட்டில் வெறும் ஆர்ப்பாட்டக்கார்ர்களை, (அதுவும் அரசியல் எதுவும் சம்பந்தப்படாத ஆர்ப்பாட்டக்காரர்களைச்) சுடுவதற்குப் போலிசாரை ஏவுகிறார்கள்? அரசுக்கு, விவசாயிகளை ஆதரிப்பது கடினமென்றால், பேசாமல் அவர்களே கூட்டுறவு அமைப்புக்களை (Coopertive Institutions) உருவாக்கித் தமது சந்தைப்படுத்தல்களை தாமாக மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும். அதைவிடுத்து சந்தைப்படுத்த விடவும் முடியாது; கடனை அடைக்க உதவி புரியவும் முடியாது என்று சொல்ல எந்த ஒரு ஜன நாயக ஆட்சிக்கும் உரிமையில்லை. அதற்கு மேலாக ஆட்சேபித்தால் துப்பாகி தான் பதில் என்று சொல்ல இந்த உலகில் ஒரே ஒரு அரசாங்கம் தான் இருக்கிறது. அதற்குப் பெயர் தான் வட கொரிய அரசாட்சி! உலகில் ஒரு மனிதன் கொடுக்கக்கூடிய அதி உயர் விலை அவனுடைய உயிர் தான்! நிச்சயமாக அரசுக்கு அந்த விலை தான் வேண்டுமா? பணவீக்கமென்பது விவசாயிகளின் பிரச்சினையே அல்ல. உதவி வேண்டாம், உபத்திரவம் இல்லாமல் இருந்தாலே போதும்!
Arasan
விவசாயி இதர பொருள்களைப்போலவே, தான் விளைவித்த விளைப்பொருளுக்கு தானே விலையை தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது பொருளாதார வாதத்தின் படி மிக சரியான வாதம். ஆனால், இந்த கோரிக்கையானது சமுகத்தால் பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பதே எனது கேள்வி, மக்கள் அனைவரும் விவசாயத்தை நேசிக்கவே செய்கின்றனர், விவசாயினுடைய தற்கொலையை எண்ணி வருந்துகின்றனர், அவர்களின் தனது விளைபொருளுக்கு தானே விலையை தீர்மானிக்கும் கோரிக்கையையும் ஆதரிக்கவே செய்கின்றனர், ஆனால், எப்போது ஒரு லிட்டர் பாலின் விலையானது இரண்டு ரூபாய் உயர்த்தப்படுகிறதோ அப்போது, கடுமையாக எதிர்க்கின்றனர், இங்கே பாலை உற்பத்தி செய்யும் விவசாயி பலனடைவார் என்ற எந்த அக்கரையும் புரிதலும் இல்லை. மாறாக, விவசாயியை ஆதரிக்கும் பொது சமுகமே, பணவீக்கத்தின் போது, மறைமுகமாக விவசாயி அடையும் பலனை கடுமையாக எதிர்க்கிறது. இந்த நிலைதான் பிரச்சனையின் ஆணிவேரே, விவசாயி தனது விளைபொருளுக்கு விலையை நிர்ணயிக்கவேண்டும், என்பது நியாயமாக இருக்கும்பட்சத்திலும், அது சமுகத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களை கடுமையாக பாதிப்படைய செய்யும். அதேபோல, வெங்காயத்தின் விலையானது அதிகரிக்கும் பட்சத்தில் விவசாயிக்கு ஓரளவு லாபமாக கிடைக்கும், ஆனால் வெங்காயத்தின் விலையேற்றமானது மக்களை கடுமையாக பாதிப்பதால், மக்களின் கடுமையான கோபத்திற்கு உள்ளாக்குகிறது, அது ஆட்சியாளர்களின் மீதான் கோபமாக கூட மாற்றமடைந்துவிடுகிறது, எனில், இங்கே இயல்பாகவே, ஆட்சியாளர்கள் விவசாயினுடைய பக்கம் நிற்காமல், விலையேற்றத்தை எதிர்ப்பவர்களின் பக்கம் சென்றுவிடுகிறார்கள். இதில், சாதாரண குண்டூசியின் விலையானது உயர்ந்துவிட்டால் எந்த மக்களும் விலை உயர்ந்துவிட்டதே என்று சொல்லுவதில்லை, ஆனால், பருப்பு விலை உயர்ந்துவிட்டால் போராடுகின்றனர். இதுதான் களயதார்த்தம். எனில் இப்போது விவசாயி தனது விளைபொருளுக்கு விலையை தானே நிர்ணயிக்கும் உரிமை வேண்டும் என்னும்போது அதற்கு சமுகத்தின் பெரும்பான்மையான மக்களிடம் இருந்து ஆதரவு கிடைக்குமா? என்றால் கண்டிப்பாக இல்லை எனலாம், ஆனால், எல்லாரும் விவசாயி பாவம், அவன் விளைபொருளுக்கு அவனே விலையை தீர்மானிக்கும் உரிமை வேண்டும் என்று மட்டும் பொதுவாக குரள்கொடுப்பார்கள், இப்போது, விவசாயி விலையை தீர்மானித்தால் பணவீக்கமானது அதிகரிக்கும் என்று பெரும்பான்மையானவர்களின் பொதுபுத்தியில் கருத்தியல் ரீதியாக பதியவைக்கப்பட்டிருக்கிறது, மேலும் அதுதான் உண்மையும்கூட, எனில் விவசாயியால எப்படி தனது கோரிக்கையில் வெற்றிபெறமுடியும்? இங்கே விவசாயி வைக்கும் கோரிக்கையானது என்று பெரும்பான்மையானவர்களின் பொதுபுத்தியில் இருக்கும் கருத்தை மாற்றுமளவுக்கான கருத்தாக இல்லாத வரையில் விவசாயைதவிர வேறு யாருடைய ஆதரவும் விவசாயிக்கு கிடைக்காது. பெரும்பான்மையானவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு ஆனால் விவசாயி முழுப்பலனை அடையும் வகையில் கோரிக்கைகளை உருவாக்காத வரையில் விவசாயியால் வெற்றிப்பெறமுடியாது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.