நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் காலிகள் மாட்டைவைத்து இந்து சிந்தனை முறையில் தோய்ந்து போனவர்களை வென்றெடுக்க பெரும் முயற்சி செய்து வருகின்றார்கள். அதன் ஒரு பகுதியாக நாடுமுழுவதும் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பதை மோடி அரசு தடைசெய்தது. பல மாநிலங்களில் மோடி அரசின் இந்தப் பயங்கரவாத உத்திரவுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்கள் இதில் முன்நிலையில் இருந்துவருகின்றன. தாங்கள் பெரும்பாண்மையாக இருக்கும் மாநிலங்களில் தங்கள் பசு பாதுகாப்பு அமைப்புக்கள் என்னும் குண்டர் படைகளின் மூலமும் அப்படி இல்லாத மாநிலங்களில் அரசு அமைப்புகளில் தனக்கு உள்ள செல்வாக்கு மூலமும் எதிர்ப்பு கருத்துக்களை முறியடிக்க பிஜேபி முயன்றுவருகின்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏறக்குறைய பிஜேபியின் பினாமியாகவே மாறிப்போன எடப்பாடி அரசு மோடி அரசின் இந்த உத்திரவுக்கு எதிராக போராடும் மக்கள் மீது கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டு வருகின்றது. தமிழக காவல்துறையில் ஊடுறுவி இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனைகொண்ட அதிகாரிகள் திட்டமிட்டே  மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்வுக்கு அனுமதி கொடுக்க மறுக்கின்றார்கள். இதனால் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றத்தை அனுகி அனுமதிபெற வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இத்தனைக்கும் மதுரை உயர் நீதி மன்றம் மோடி அரசின் இந்த உத்திரவுக்கு தடைவிதித்து இருக்கின்றது.

இதே போல கேரள  உயர்நீதி மன்றத்தில் இது சம்மந்தமாக தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசின் உத்திரவில் மாட்டிறைச்சி உண்பதற்குத்  தடைவிதிக்கப்படவில்லை என்றும் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதைத்தான் தடைசெய்துள்ளது என்றும் சந்தைகளுக்கு வெளியே மாடுகளை விற்க எந்தத் தடையும் இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்திரவிட்டுள்ளது. இந்த நீதிபதிகளுக்கு உண்மையிலேயே குறைந்த பட்ச அறிவாவது இருக்குமா என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.

சந்தை என்பது ஒரு பொதுவான இடம். காலம் காலமாக முன்பின் தெரியாத நபர்கள் அந்த இடத்தில் சந்தித்து தனக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளவும் தனக்குத் தேவைபடாததை அல்லது தன்னிடம் உபரியாக இருப்பதை விற்கவோ ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்புதான் சந்தை என்பது. மாடுவாங்கும் வியாபாரி அவற்றை பாலுக்கு வாங்கினாலும் உழவு செய்ய வாங்கினாலும் அல்லது இறைச்சிக்காக வாங்கினாலும் அவருக்கான வாய்ப்புகள் அங்கே பெரிய அளவில் உள்ளது. தனக்கு தேவைப்பட்ட விலையில் தனக்கு கட்டுபடியாகும் விலையில் வியாபாரி மாடுகளை வாங்கிசெல்கின்றார். அதேபோல மாடுகளை விற்கவரும் விவசாயியும் தனக்கு கட்டுப்படியாகும் விலையில் அவற்றை விற்கும் வாய்ப்பைப் பெறுகின்றார். அவருக்கு மாடுகளை நல்ல விலையில் விற்கவேண்ட்டும் என்பது மட்டுமே ஒரே குறிக்கோள். அவரைப் பொறுத்தவரை தன்னிடம் உள்ள மாடுகள் இறைச்சிக்காக போவதைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. தன்னிடம் பயன்படாமல் உள்ள மாடுகளுக்கு ஒரு கட்டுப்படியாகும் விலை கிடைத்தால் போதும். அதற்குச் சந்தை அவருக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது. ஒருவேளை சந்தை என்ற அமைப்பு இல்லை என்றால் அவர் மாட்டைபிடித்துக்கொண்டு ஊர் ஊராக அலையவேண்டியது தான். இல்லை தன்னிடம் உள்ள மாட்டை பட்டினிபோட்டுச் சாகவிட வேண்டியதுதான். அப்படி விவசாயி விற்கும் பயன்படாத மாட்டை வாங்கும் வியாபாரி அதை  இறைச்சிக்காக மட்டுமே விற்கமுடியும். அல்லாமல் அதை வாங்கி அவர் கோசாலை நடத்தப்போவதில்லை. இப்போது மோடி அரசின் இந்த உத்திரவால் விவசாயி இறைச்சிக்காக தனது பயன்படாத மாடுகளை சந்தைக்குக் கொண்டுவர தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அதே போல வியாபாரியும் இறைச்சிக்காக மாடுகளை வாங்க சந்தையை நோக்கிவருவதை மோடி அரசு தடுத்து நிறுத்தி இருக்கின்றது. விற்பவர்-வாங்குபவர் இருவருக்கும் இடையேயான இணைப்புக் கண்ணியை மோடி அரசு உடைத்திருக்கின்றது. இனி இவர்கள் இருவரும் எப்படி சந்தித்துக்கொள்ள முடியும்?

அப்படியே வியாபாரி நேரடியாக ஏதாவது ஒரு விவசாயியை சந்தித்து மாடுகளை வாங்கிகொண்டு இனி நிம்மதியாக ஊர்போய் சேரமுடியுமா? அதற்கான புறச்சூழ்நிலையை  ஏற்கெனவே மோடி அரசு தனது பசு பாதுகாவலர்கள் என்ற குண்டர் படையின் மூலம் நாடுமுழுவதும் இல்லாமல் செய்துள்ளது. மாடுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மறிக்கப்பட்டு மாடுகளை ஏற்றிச்சென்றவர்கள் மிக கடுமையான தாக்குதலுக்கும் பல சமயங்களில் உயிரைகொடுக்கவும் நிர்பந்திக்கப்படுகின்றார்கள். இப்படி இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிராக அனைத்துச் சூழல்களையும் ஆர்.எஸ்.எஸ் காலிகள் கெடுத்து வைத்திருக்கும் சூழ்நிலையில் அதைப் பற்றி எந்த ஆராய்ச்சி கண்ணோட்டமும் நடப்பு நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் திராணியும் இன்றி நீதிபதிகள் உள்ளார்கள். அவர்களுக்கு விவசாயிகள் பற்றியோ இல்லை இந்தியாவில் உள்ள சாமானிய ஏழைகளைப்பற்றியோ எந்தக் கவலையும் இல்லை. கூலிக்கும், தன்னுடைய பார்ப்பன சித்தாந்தத்திற்கும் மாறடிக்கும் பிற்போக்கு முட்டாள் கும்பலாகவே அவர்கள் உள்ளார்கள். அதுதான் இதுபோன்றவர்களை இப்படி கூச்சம் இல்லாமல் தீர்ப்புகொடுக்க வைக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக் கடைபிடிக்கும் ஒருவன் எவ்வளவு பெரிய முட்டாளாக அம்மாஞ்சியாக இருப்பான் என்பதற்கு பிஜேபி ஆளும் மாநிலமான ராஜஸ்தான் உயர்நீதி மன்ற நீதிபதி சந்திர சர்மா ஒரு நல்ல உதாரணம். பதவியில் இருந்து ஓய்வு பெறும் கடைசி நாளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தத் தீர்ப்பை வழங்கினார் சந்திர சர்மா. பசுவை கொல்பவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை என்பதை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இப்படி மாடுகள் மீது பேரண்பு கொண்ட இந்த நீதிபதியின் அறிவை இந்தியா மட்டும் அல்லாமல் உலகமே பார்த்து இன்று காறித்துப்புகின்றது. “ஆண்மயிலின் கண்ணிரை பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கின்றது எனவே அது புனிதத் தன்மை பெறுகின்றது. அதனால் தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மயிலிரகை தனது தலையில் சூடியிருக்கின்றார்” என்ற அறிய உண்மையை ஊடகங்கள் முன்நிலையில் போட்டுடைத்தார். இதுதான் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக் கடைபிடிக்கும் கும்பலின் உண்மையான யோக்கியதை. பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்து சங்கிலியால் கட்டிப்போட்டு வைத்தியம் பார்க்கப்பட வேண்டிய முத்திப்போன பைத்தியக்காரன்கள் எல்லாம் இன்று ஆர்.எஸ்.எஸ் சாகாவில் பயிற்சி அளிக்கப்பட்டு நாடுமுழுவதும் அரசு துறைகளில் நிரப்பப்பட்டுள்ளார்கள்.

அதனால்தான் பிஜேபியின் பிரபல போர்னோகிராபி நடிகர் யோகி ஆதித்யாநாத் ஆட்சி செய்யும் உத்திரபிரதேச காவல்துறை தலைவர் சுல்கான் சிங் உத்திரபிரதேசத்தில் இறைச்சிக்காக பசுக்களை கடத்துவோர் மற்றும் அவற்றை கொல்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்திரவிட்டுள்ளார். இதுலே என்ன சிறப்பு என்றால் கேரள நீதி மன்றம் சொன்னது போல சந்தைக்கு வெளியே கூட மாடுகளை வாங்கி நீங்கள் இறைச்சிக்காக கொல்ல முடியாது என்பதுதான். உண்மையில் மோடி அரசின் திட்டம் அதுவேதான். அதைத்தான் உத்திர பிரதேச அரசு செய்துள்ளது. ஆனால் ஏற்றுமதிக்காக மாடுகளை கொல்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. அதைப் பற்றி சுன்கான் சிங் மற்றும் சந்திர சர்மா போன்ற ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகளுக்கு எந்த அக்கறையும் கிடையாது. இந்திய மக்கள் மாடுகளைத் தின்னக்கூடாது. அவர்கள் அனைவரும் பார்ப்பன வருணாசிரம தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுங்காக ஒரு நல்ல இந்துவாக வாழவேண்டும். பார்ப்பான தர்ம சாஸ்திரங்கள் வழி நின்று பார்பனனை தொழுது மோட்சம் அடைய வேண்டும். அதற்காக இந்திய மக்கள் அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும், கிருஸ்தவர்களாக இருந்தாலும் தலித்துக்களாக இருந்தாலும் ஏன் இன்னும் மாட்டுக்கறி தின்னும் சாமானிய ஏழை எளிய மக்களாக இருந்தலும் தங்களது ஆரோக்கியத்தையும், வேலை வாய்ப்பையும் தியாகம் செய்துதான் ஆகவேண்டும். அவன் தான் உண்மையான தேசபக்தன். அப்படி செய்ய மறுக்கும் ஒவ்வொருவனும் தேசவிரோதி. அவனுக்குப் புதிய மனுநீதி படி ஆயுள் தண்டனை கொடுக்கப்படும் இல்லை என்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு மாட்டுக்கறி தின்பதற்குப் பல் இல்லாமல் செய்யப்படும்.

மோடி ஆட்சியில் அரசு அமைப்புகள் குறிப்பாக நீதிமன்றங்கள் காவல்துறை போன்றவை எவ்வளவு பார்ப்பன பாசிசமாக நடந்துகொள்கின்றன என்பதற்கு கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பும், ராஜஸ்தான் உயர்நீதி மன்ற தீர்ப்பும், உத்திரபிரதேச காவல்துறை தலைவரின் அறிவிப்புமோ ஒரு நல்ல சான்றாகும். நாடுமுழுவதும் அரசு அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ் தனது பிற்போக்கு முட்டாள் கூட்டத்தை வைத்து நிரப்பிக்கொண்டு இருக்கின்றது. நாளை மோடி அரசே இல்லை என்றாலும் இந்தப் பயங்கரவாதிகள் தங்களது கடமையைச் சிறப்பாக செய்துகொண்டு இருப்பார்கள். ஒரு நிரந்தரமான பாசிசத்தை இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் கட்டமைத்துக்கொண்டு இருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் க்கு எதிரான நமது போராட்டம் அதை எதிர்ப்பது என்பதோடல்லாமல் அவர்களால் அரசு அமைப்புகளில் நிரப்பப்பட்டுள்ள அடிவருடிகளை அம்பலப்படுத்துவதிலும் தான் இருக்கின்றது.

Pin It