"எல்லோரையும் சிலநேரங்கள் ஏமாற்றலாம்; சிலரை எல்லா நேரமும் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்றிவிடமுடியாது."

- கடந்த ஜூலை ‘16 தொடங்கி முகநூல் வெளியில் பெரும் பரபரப்பை கிளப்பிய ஓலா ஓட்டுநர் சர்ச்சையில், விமலாதித்த மாமல்லன் என்பவர் செய்து வரும் தகிடுதத்தங்களைக் கவனிக்கையில் இந்த வரிதான் நினைவுக்கு வருகிறது.   

2016 ஜூலை 11ஆம் தேதி, விலாசினி தன் முகநூல் பக்கத்தில் ஓலா கார் பயணத்தில் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தைப் பற்றி ஒரு பதிவை எழுதுகிறார். அதன் சுருக்கம்:

ஜூலை 9, 2016 அன்று இரவு, விலாசினி திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கத்தில் இருந்த தன் இல்லத்துக்கு ஓலா காரில் பயணிக்கிறார். கார் படு வேகத்தில் செல்ல, உடல் நலம் சரியில்லையென்று ஓட்டுநரிடம் மெதுவாகப் போகச் சொல்லி வேண்டுகிறார். ஓட்டுநர் அலட்சியத்துடன் காரை முன்பைவிட வேகமாக ஓட்டுகிறார். மீண்டும் மெதுவாகப் போகச் சொல்ல, ஓட்டுநர் குரலை உயர்த்தி, மரியாதையின்றிப் பேசுகிறார். 'மாட்டுவண்டியில் போ' என்றபடி, வழியிலேயே இறக்கி விடுகிறார். பத்து நிமிடங்கள் கழித்து விலாசினி ஓர் ஆட்டோவை நிறுத்திப் பேசுகிறார். விலாசினியின் அருகில் வந்த ஓலா ஓட்டுநர் 'காசு எவ தருவா?' என்று மீண்டும் மரியாதையின்றிப் பேசுகிறார். 'இறக்கிவிட்டது நீதான். ஒழுங்காகவும் வண்டி ஓட்டவில்லை. கம்பெனியில் புகார் அளித்தாகிவிட்டது, வம்பு செய்யாமல் போய்விடு,' என்று விலாசினி சொல்ல, ஓட்டுநர் கையை ஓங்கியிருக்கிறார். பதற்றமடைந்த விலாசினி உடனடியாக ஆட்டோவில் ஏறிச் செல்ல முயல, 'கழுத்தை அறுத்துடுவேன் தெரியுமா?' என்று மிரட்டியிருக்கிறார் ஓட்டுநர். போடி என்று அசிங்கமாகச் செய்கை காட்டியிருக்கிறார். அங்கிருந்து புறப்பட்ட விலாசினி, ராமாவரம் ரோந்து போலீஸிடம் புகார் செய்ய, அவர்கள் அவரை நந்தம்பாக்கம் S4 காவல் நிலையத்துக்கு அனுப்புகிறார்கள். அவர்களோ இவரை அந்தப் பின்னிரவிலும் கிண்டி காவல்நிலையத்துக்குச் செல்லுமாறு சொல்கிறார்கள். ஓட்டுநர் தன்னைப் பின்தொடரலாம் என்ற அச்சத்தில் இருந்த விலாசினி, அதைச் செய்யாமல் வீடு திரும்ப முடிவெடுக்கிறார். இந்த அலைக்கழிப்பு தந்த மனவுளைச்சல் காரணமாக ஓட்டுநர் மீது புகாரளிக்கும் முயற்சியையே கைவிடுகிறார். இரண்டு நாட்கள் கழித்து முகநூலில் தன் ஆதங்கத்தைக் கொட்டுகிறார். இதுதான் நடந்தது.

இதையடுத்து 16ஆம் தேதி கனம் கச்சிதம் என்ற தலைப்பில் மாமல்லன் தன் முதல் கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பறிக்கையை வெளியிடுகிறார். இதில் ஒரு முகநூலர் “இந்தக் கட்டப் பஞ்சாயத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று விலாசினியிடம் கேட்கிறார். இதற்கு விலாசினி, “யார் அந்த நாட்டாமை?” என்று பதிலுக்குக் கேட்கிறார். அவ்வளவுதான். சதா காலமும் அதிகாரத்துக்குச் சொம்படிக்கும்போது உறைக்காத சுரணை, பொது வெளியில் ஒரு பெண் தன்னைப் பார்த்து “யார் அந்த நாட்டாமை?” என்று கேட்டதும் மாமல்லனுக்குச் சுளீரென்று உறைத்துவிடுகிறது.

பின்னர் 18ஆம் தேதி, சம்பந்தமேயில்லாமல் என் நிலைச்செய்தி ஒன்றை தன் பக்கத்தில் பகிர்ந்து அறச் சீற்ற ஃபிலிம் காட்டுகிறார் மாமல்லன்:

maamallan facebook 1

அன்னார் கிளப்பிவிட்ட புரளிக்கு ஓர் எதிர்வினையைப் பாருங்கள்:

           sriram narayanan facebook

அதாவது விலாசினி ஓலா ஓட்டுநரை ஆங்கிலக் கெட்டவார்த்தையால் திட்டினாராம். அதற்கு அந்த ஓட்டுநர் ஆங்கிலத்திலேயே திருப்பிக் கொடுத்தாராம். சம்பவத்தை நேரில் பார்த்ததுபோல் இந்தப் புளுகாண்டிக்கு பயங்கர அறச் சீற்றம் வேறு.

ஆனால் தன் கட்டப்பஞ்சாயத்தைக் கூட்ட நந்தம்பாக்கம் காவல் நிலையத்துக்குப் புளுகாண்டி அன்றிரவுதான் செல்கிறார். அதற்கு முன்பே இந்த அருவருப்பான புளுகை அவிழ்த்துவிட்டு விடுகிறார். இந்நிலையில், 19ஆம் தேதி காலை ஒன்பது மணியளவில்...

யாரந்த நாட்டாமை என்ற விலாசினி ரமணியே, நந்தம்பாக்கப் பச்சை மட்டைகளைப் பின்னிக் கொண்டிருக்கிறேன். சாயங்காலத்திற்குள் சங்கூதப்படும்

...என்று சவடால் விடுகிறார்.

அன்றிரவே ஆண்ட்டி ஒரு கொலை செய்தாள் என்ற இவரது இரண்டாவது கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பறிக்கை வெளி வருகிறது. அவதூறுகளும் புளுகுமூட்டையும் நிறைந்த அக்கட்டுரையை வாசித்துத் தமிழ் முகநூல் உலகமே விலாசினிக்கு எதிராகக் கொதிப்படைகிறது.

ஆவணம் 1 என மாமல்லன் முன்வைத்தது:

படுவேகம் என்றால் அது rash drivingஆகவும் இருக்கலாம் என்று மாமல்லனுக்குத் தோன்றவில்லை. இதனால் எடுத்த எடுப்பில் மணிக்கு 60 கிலோமீட்டருக்கும் மேல் என்று முடிவு செய்து, தன் முதல் கட்டப் பஞ்சாயத்து அறிக்கையிலேயே…

இளவட்டப் பெண்களைத் தவிர நடுத்தர வயதை அடைந்தவர்களுக்கு பைக்கில் 60ல் செல்வதுகூட வேகமாகத்தான் தெரியும்

…என்று எழுதுகிறார். அதே நினைப்பில் இருந்தவருக்கு 6/8=75 என்று பட்டுவிடுகிறது. எனவே, முதலில் பின்வருமாறு எழுதுகிறார்:

maamallan blog 1

 ஒரு பரபரப்பான பகுதியில், சனி இரவு 9:30 மணிக்கு 75 கிலோமீட்டர் என்பது சாதாரண வேகம்தானாம். சரி, அதிலாவது உறுதியாக இருந்தாரா?

காலை பத்து மணியளவில் மாமல்லனின் தீவிர விசுவாசியான பாலா மார்ஸ் என்பவர் இவரது பெருக்கல் குளறுபடியை சுட்டிக்காட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். அதை மாமல்லனே தன் பக்கத்தில் பகிர்கிறார்: 

maamallan mail


ஆக, 19 ஜூலை பின்னிரவு முதல் 20 ஜூலை நண்பகல்வரை காரின் வேகம் மணிக்கு 75 கிலோமீட்டர் என்கிறார். பாலா மார்ஸ் சுட்டிக்காட்டியவுடன் 12 மணியளவில் 75 என்பதை அன்னார் கமுக்கமாக 45 என்று திருத்திவிடுகிறார். அதைப் பற்றி எந்த விளக்கமும் இல்லை. எண்ணைத் திருத்தியவுடன் ஒரு புது நியாயம்:

maamallan blog 2
அட அட அட... என்ன ஒரு நேர்மை! அதாவது இந்த ஃபேஸ்புக் குமாரசாமிக்கு:                   
                       
                                        45 = 75

இந்த எண்கள் ஒன்றும் ஏதோ காய்கறி வியாபாரத்தைப் பற்றியது அல்ல. ஒரு கட்டப் பஞ்சாயத்து ஆசாமி ஒரு பெண்ணை இழிவு செய்ய, பொதுமன்றத்தில் முதல் ஆவணம் என்று முன்வைத்து, சொதப்பி, அதைப்பற்றி எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் ஒரு புது நியாயத்தை உருவாக்கிய பச்சை அயோக்கியத்தனம். ஒருவேளை இவர் 6/8=95 என்று தப்புக்கணக்குப் போட்டிருந்தாலும், 95 கி.மீ. வேகம் என்பது சாதாரண வேகம்தான்; இதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று எழுதியிருப்பார் என்பதே இதன் தர்க்கம்.

கனம் கச்சிதம் என்ற முதல் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பில், விலாசினி ஏன் ஸ்டாப்கிளாக் வைத்து சம்பவ நேரத்தை பதிவு செய்யவில்லையென்று அன்னார் கூகிள் மேப்ஸ் எல்லாம் பகிர்ந்து கீழ்க்கண்டவாறு சாமியாடித் தீர்த்தார்: 

maamallan blog 3

போலவே, ஹிந்து நாளிதழ் நிருபரான பூர்வஜா, விலாசினியின் பதிவு எழுநூறு பகிர்வுகளை எட்டியபோதே ஆயிரம் என்று குறிப்பிட்டுவிட்டார் என்று, பேத்தி வயது பெண்ணை முண்டம் என்று திட்டி, அவரை வேலையை விட்டுத் தூக்க வேண்டும் என்றெல்லாம் சீறினார். ஆனால் தன் முதல் முக்கிய ஆவணத்தில் தான் செய்த எண்ணிக்கை மோசடி பற்றி ஃபேஸ்புக் குமாரசாமிக்கு எந்த உறுத்தலும் இல்லை.  

bala mars

இங்கே அவரது தீவிர விசுவாசியே முதல் குற்றச்சாட்டே அடிபட்டுப் போய்விடும் என்று சொன்னது போல், மாமல்லனின் முதல் ஆவணம் இங்கேயே படுத்துவிடுகிறது. எனினும் அறம், நேர்மை, மனசாட்சி வியாபாரம் மட்டும் நாளது தேதிவரை தொடர்கிறது. 

ஆவணம் 2 என மாமல்லன் முன்வைத்தது:

இரண்டாம் ஆவணம் என்று முன்வைக்கப்பட்டாலும் முகநூலில் பெரும் புயலைக் கிளப்பி, விலாசினிக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான பேரைத் திருப்பியது இப்பகுதிதான். இந்த ஆவணத்தின்படி ஓலா ஓட்டுநரை விலாசினி வாய்க் கொழுப்பில் பொறுக்கி என்று திட்டிவிட்டாராம். அதனால்தான் அவர் கழுத்த அறுத்துடுவேன் என்றாராம். முதலில், விலாசினி ஆங்கிலக் கெட்டவார்த்தை பேசினாரென்று புரளி கிளப்பிய அன்னார், இந்தப் புதுப் புலனாய்விலோ காட்சியை மட்டுமின்றி, வசனத்தையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றிவிட்டார். இதோ அந்தப் புரளியில் சில முத்துக்கள்:

M.A. English Literature படித்தவரான ஓட்டுநரைப் பார்த்து, பொறுக்கி என்கிறார் இலக்கியப் புத்தகங்களின் பதிப்பாளரான விலாசினி ரமணி அவர்கள்.

காரோட்டியைப் பொறுக்கி என்று சொன்னதை, எங்குமே பதிவு செய்யாமல் சாதுரியமாய்த் தவிர்த்துவிட்டார் விலாசினி.

பொறுக்கி என்று அந்த இளைஞனைத் திட்டியதுதான் அனைத்துப் பிரச்சனைக்கும் மூலகாரணம்.

இந்தப் புதுப் புரளிக்கு வலுசேர்க்க தன் கட்டுரையில் சில கயவாளித்தனங்களையும் கையாள்கிறார்:

maamallan blog 4ஆவணம் மட்டுமல்ல, ஆணவரீதியாகவுமாம்.

மாமல்லன் இட்டுக்கட்டிய இந்தப் புரளிக்கு முகநூலில் என்ன மாதிரியான எதிர்வினை இருந்தது என்பதற்குச்  சில சாம்பில்கள்: 

இவை மாமல்லனின் பழைய முகநூல் கணக்கு முடக்கப்பட்ட பின் எடுத்த சில சாம்பிள்கள் மட்டுமே.

ola facebook reactionsola facebook reactions 1
இவர்களில் Shinu Vincent போன்ற வெகுசில முகநூலர்கள் விலாசினிக்கு ஆதரவாகவே எழுதியிருந்தாலும், விலாசினி அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் என்று அவர்களே நம்பும் அளவு மாமல்லனின் புளுகு மூட்டை கட்டுரை அமைந்திருந்தது.

விலாசினி ஓட்டுநரை ஆங்கிலத்தில் கெட்டவார்த்தையால் திட்டினார்; பொறுக்கி என்று திட்டினார் என்பவை எந்தளவு உண்மை என்பதைச் சற்று பொறுத்துக் காண்போம்.

இப்போதைக்குக் கட்டுரையில் இந்த வரியைக் கவனியுங்கள்:

இரண்டு சிறிய குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டு, பல மைல்கள் தாண்டி எங்கோ மாநகரின் மறு கோடியில் இருக்கும் வருங்காலக் கணவரைப் பார்க்கச் சென்று பத்து மணியளவில் திரும்பி வருகிற பெண்மணி

தமிழ் நாளிதழ்கள் பெண்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதும் ‘எவள் குடி கெட்டால் என்ன, நமக்கு வியாபாரம் முக்கியம் என்ற பாணி நினைவுக்கு வரவில்லை? அப்படியே... 

maamallan blog 5

...யாருடனோ என்ற வார்த்தையில் உள்ள quoteஐ கவனியுங்கள். அந்த quote இங்கே தேவையா?

ஆம். தேவைதான். எதற்கு?

பணிப்பெண்ணின் பாதுகாப்பில் விடப்பட்டிருந்த குழந்தைகளைப் பற்றி, விலாசினி தனியே விட்டுவிட்டுச் சென்றார் என்று கேவலமாகப் புரளி கிளப்பியாகிவிட்டது. நேரமோ பின்னிரவு. இப்போது விலாசினி  ‘யாருடனோ’ தொலைபேசியில் பேசிக் கொண்டு இருக்கிறாராம்.... மாமல்லன் உருவாக்க முனையும் சித்திரம் உங்களுக்குப் புரிகிறதல்லவா? ஒருவனது புத்தி எந்தளவு அழுக்குப் பிடித்ததாக இருந்தால் இதுபோன்ற காரியங்களைச் செய்ய வைக்கும். இந்தக் கழிசடைதான் தன்னை நியாய ஆவேசத்துக்காக இயங்குகிறவன் என்று சொல்லிக் கொள்கிறது.

கீழ்க்கண்டவை மாமல்லன் தன் புளுகுமூட்டை கட்டுரைக்காக உருவாக்கிய லேபிள்கள். லேபிள்கள் என்பவை ஒரு பதிவில் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு அழுத்தம் தர உருவாக்கப்படுபவை. மாமல்லன் எந்தெந்த வார்த்தைகளுக்கு அழுத்தம் தருகிறார் என்பதைப் பாருங்கள். 

maamallan blog 6

ஆணவம் -விலாசினி ஓட்டுநரை ஆணவத்துடன் பொறுக்கி என்று திட்டினாராம்.

ஆட்டோ -அதை ஆட்டோ ஓட்டுநர் பார்த்தாராம்.  

பழி -ஓட்டுநர் மீது விலாசினி அநியாயமாகப் பழி சுமத்திவிட்டாராம்.

குழந்தை  -விலாசினி குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டு வருங்காலக் கணவனே முக்கியமென்று இரவில் வெளியே சென்றாராம்.

இதுதான் நியாய ஆவேசத்தின் அழகு.

கோணிப் புளுகன் கோயபல்ஸ்

சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சியமான ஆட்டோ டிரைவரை விலாசினி போலீஸிடம் விசாரித்துப் பார்க்கச் சொல்லவில்லை என்று, மாமல்லன் தன் இரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்புகளிலும் புளுகுகிறார். விலாசினியின் நோக்கம் இதுவாக இருந்தால், காவலர்களைத் தேடிக் கொண்டே அவர் ராமாவரத்துக்கும் நந்தம்பாக்கத்துக்கும் ஏன் அதே ஆட்டோவில் பயணிக்க வேண்டும்? காவலர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆட்டோ ஓட்டியிடம் பேசிவிடலாம் என்ற அடிப்படையைக் கூடவா அவர் அறியாமல் இருந்திருப்பார்? பின்னர், விலாசினி வீடு திரும்பியதும் அதே ஆட்டோவில்தான். துணைக்கு ஒரு காவலர் வேறு வருகிறார். அந்தக் காவலரும் ஆட்டோ ஓட்டியும் நந்தம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் திரும்பும்போது, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் மௌன விரதம் இருப்பார்கள் என்றா விலாசினி எதிர்பார்த்திருப்பார்? கோணிப் புளுகன் கோயபல்ஸ் கூட மாமல்லன் அளவுக்குப் புளுகியிருக்க மாட்டார்.

ஓலா சர்ச்சை -பகுதி 2

பொறுக்கி என்று திட்டி, விலாசினி அதைச் சாமர்த்தியமாக மறைத்துவிட்டாரென்று மாமல்லன் கதை கட்டியதை அப்படியே ஏற்று ஃபிரான்ஸ் தமிழச்சி போன்ற மெகா பிரபலங்கள், கார்ட்டூனிஸ்ட் பாலா, யுவகிருஷ்ணா போன்ற பத்திரிகையாளர்கள், லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற டுபாக்கூர் இலக்கியவாதிகள், உள்ளூர் முகநூல் பிரபலங்கள், சராசரி முகநூலர்கள் என்று பல பிரிவினரும் கொதித்துவிட்டார்கள். டைம்ஸ்-தமிழ் இணையத் தளமும் இக்கட்டுரையை வெளியிட்டிருந்தது. கட்டுரையைப் பகிர்ந்த எல்லோரும் உண்மை வெளிவந்துவிட்டது என்று பரவசமடைந்தார்கள். மாமல்லன் என்ற புளுகாண்டி பெரும் நாயகராகப் போற்றப்பட்டார். பத்திரிகையாளர் தளவாய் சுந்தரம் போன்றோர் உணர்ச்சிவசப்பட்டு, கும்பிடு குருசாமியானார்கள். 

அதே வேளை, கர்ர் த்தூ... என்று தொடங்கி, கெட்ட கெட்ட வார்த்தைகளிலான வசவுகள், அர்ச்சனைகள் என்று, நூற்றுக்கணக்கானோர் விலாசினியை ஒரே இரவில் ஓர் அரக்கியாகச் சித்தரித்து இழிவு செய்தார்கள். நூற்றுக்கணக்கான பகிர்வுகள், விருப்பக் குறிகள் என்று தமிழ் முகநூல் உலகமே ஒரு குலுங்கு குலுங்கிவிட்டது.

மாமல்லனின் புரூடாவை நம்பி, சில முகநூலர்கள் இந்து நாளிதழுக்கும் ஓலா நிறுவனத்துக்கும் அவரது கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பறிக்கையை அனுப்பி நியாயம் கேட்டார்கள்: 

uma maheswaran fb

இதில், ஸ்வாமி பாலா என்பவர் இந்துவிடம், நீங்கள் ஏன் மாமல்லனைப் போன்று கட்டப் பஞ்சாயத்து நடத்தவில்லையென்று ஆதங்கப்படவும் செய்கிறார். மாமல்லனின் வலைப்பக்கத்தில் இதுவரை மிக அதிகமாக வாசிக்கப்பட்ட கட்டுரையும் இந்தப் புளுகுமூட்டைதான்:   

maamallan blog 7

இந்தப் புளுகு மூட்டை கட்டுரையை வாசித்தவர்களின் எண்ணிக்கை: 41,000+ பேர்.

எவ்வளவு களேபரம் பார்த்தீர்களா? 

இதனிடையே, ஜூலை 21ஆம் தேதியன்று ஆமீனா முஹம்மத் என்கிற முகநூலர் கார் உரிமையாளர் காஜா ஷரீஃப்பிடம் எடுத்த நேர்காணல், தமிழ் வணிக இதழியல் பாணியில் அடையாளங்காட்டிய ஹீரோ என்ற பரபரப்பான தலைப்புடன் வெளியாகிறது. பொறுக்கி என்று திட்டி விலாசினி அதை மறைத்துவிட்டார் என்று அவரும் புளுகுகிறார்.

islamiyapenmani

மாமல்லன் அவிழ்த்துவிட்ட அத்தனையும் வடிகட்டிய பொய்கள் என யார் சொல்கிறார்? அவர் யாருக்கு உதவுவதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறாரோ, அதே ஓலா ஓட்டுநர்தான்! எப்போது? 

ஜூலை 30ஆம் தேதி பிணையில் வெளிவந்த அன்று.

ஓலா ஓட்டுநரின் தரப்பை இந்து, Deccan Chronicle இரு நாளிதழ்களுமே வெளியிடுகின்றன. தான் கஷ்டப்பட்டு அவிழ்த்துவிட்ட ரீல் மொத்தமாக அறுந்துபோனதை காட்டிக் கொள்ளாமல், மாமல்லன் அவற்றைத் தன் பக்கத்தில் பகிர்கிறார். ஓட்டுநரின் பேட்டிக்கும், அவர் அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டைகளுக்கும் ஏன் கொஞ்சம் கூடத் தொடர்பேயில்லையென்று யாரும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை.

இதுபோக, ஜூலை 31ஆம் தேதி எடுக்கப்பட்ட ஓட்டுநரின் பேட்டி ஒன்று, ஆகஸ்ட் 6ஆம் தேதி மின்னம்பலம்.காமில் வெளிவருகிறது:

13 நிமிடங்கள் நீளும் இப்பேட்டியில், ஓலா ஓட்டுநர் அம்பலப்படுத்தியிருப்பது விலாசினியையா அல்லது கோணிப் புளுகன் மாமடையனையா என்பதை நீங்களே கேளுங்கள்.

ஆவணம் 1இல் நேர்மையாளர் காரின் வேகத்தை முதலில் மணிக்கு 75கி.மி. என்று குறிப்பிட்டு, பின்பு ஊருக்குத் தெரியாமல் கமுக்கமாக மணிக்கு 45கி.மி. என்று திருத்தியிருந்தார். ஓட்டுநரோ 55-60கி.மி. வேகத்தில் காரை செலுத்தினேன் என்கிறார். எனினும் ஆவணம் 1இன் படி ஃபேஸ்புக் குமாரசாமியான மாமல்லனுக்கு,

                                                                                    45= 75= 55= 60


நடந்த சம்பவத்தைப் பற்றி இந்த ஒலிப்பதிவில் ஓட்டுநர் 2:30லிருந்து விவரிக்கிறார். அவரது தரப்பு சுருக்கமாக:

விலாசினி என்னை பொறுக்கி என்று திட்டவும் இல்லை; நான் அவரை கழுத்த அறுத்துருவேன் என்று மிரட்டவும் இல்லை.’

6:06இல் மாமல்லனின் ஆவணம் 2 என்பது ஒரு மானங்கெட்ட பொய் என்று மிகத் தெளிவாக விவரிக்கிறார் ஓட்டுநர். அதுபோல், விலாசினி ஆட்டோக்காரரை போலீஸிடம் விசாரித்துப் பார்க்கச் சொல்லவில்லை என்ற மற்றொரு கேவலமான புளுகும் அம்பலமாகிறது. எந்த சம்பவமும் நடக்கவில்லை என்ற ஓட்டுநர் சொல்லும்போது, அதை எப்படி ஆட்டோக்காரர் பார்த்திருப்பார்? மாமல்லனுக்கு இதெல்லாம் ஒரு பிழைப்பு.

அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்:

ஜூலை 30ஆம் தேதி பிணையில் வந்த ஓலா ஓட்டுநர் தன்னை முழுக்க அம்பலப்படுத்தியதும், அன்றிலிருந்து நேர்மையாளர் மாமல்லன் செய்யும் சித்து வேலைகளைப் பாருங்கள்:

இது திவ்யபாரதியை தாக்கி எழுதிய வலைப்பதிவின் ஸ்க்ரீன்ஷாட்: 

maamallan blog 8

உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டு, தன் கள்ளப் பஞ்சாயத்து அறிக்கையைக் கமுக்கமாக மறைப்பதன் மூலம் அது ஒரு புளுகுமூட்டைதான் என்று மாமல்லனே தன் நாறவாயால் ஒப்புக்கொள்கிறார். ஓட்டுநர் சொல்வதுதான் உண்மையென்றால், மாமல்லன் ஃபேஸ்புக்கில் அவிழ்த்துவிட்டது முழு கப்ஸாதானே?

இது ப்ரீதம் சக்ரவர்த்தியை தாக்கி எழுதிய வலைப்பதிவின் ஸ்க்ரீன்ஷாட்:

maamallan blog 9

Classic moments of யம்ம யம்ம யம்மா... யப்ப யப்பா யப்பா! 

காரோட்டியின் வாய் இருக்கட்டும் நாட்டாமையாரே. காரின் வேகம் பற்றி உம் நாறவாய் மாற்றி மாற்றிப் பேசி வருகிறதே, அதற்கென்ன பதில்? ஜூலை 19ஆம் தேதிய பதிவிலேயே இரண்டு பல்டி. அதை முதல் ஆவணம் என்று வேறு வைத்திருந்தீர். இப்போது உண்மையான வேகம் அதுவல்ல; இதோ ஓட்டுநர் சொல்வதைக் கேளுங்கள் என்று மற்றொரு மெகா பல்டி. சரி அப்போதும் கூட 45 கிலோமீட்டர் வேகமும் 55-60 கிலோமீட்டர் வேகமும் ஒன்றா? ஒன்றுதான் –மாமல்லனின் கள்ளப் பஞ்சாயத்தில்.

ஆனால் நாம் மிக மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது விஷயம் வேறொன்று. போகிற போக்கில் அன்னார் இன்னொரு புரூடாவை நைஸாக அவிழ்த்து விடுவதைக் கவனியுங்கள்: 

கூடவே என்ன நடந்தது என்பதையும் என்று குறிப்பிட்டு இங்கே ஓலா ஓட்டுநரின் பேட்டியை பகிர்கிறார். அடேங்கப்பா உசிதமணி... நடந்தது என்ன என்று கேட்டால், நீர் ஏன் ஓட்டுநரின் பேட்டியை பகிரவேண்டும்? 41,000+ பேருக்கும் மேல் வாசித்து ஏமாந்த கட்டுரையின் கதி என்ன? ஜூலை 31 முதல், அதை நீர் வெளியே சொல்ல முடியாத வியாதியை மறைப்பதுபோல் மறைக்கும் மர்மம் என்னவோ?

இப்பதிவுகளைத் தொடர்ந்து, இந்த உண்மை விளம்பி ஆல் தி பெஸ்ட் ஆண்ட்டீஸ் என்ற தலைப்பில் செப்டம்பர் 28ஆம் தேதி ஒரு வலைப்பதிவும், பாவப்பட்ட ஆண்ட்டீஸா பாவம் பட்ட ஆண்ட்டீஸா என்ற தலைப்பில் அக்டோபர் 3ஆம் தேதி ஒரு வலைப்பதிவும் எழுதுகிறார். இப்பதிவுகளின் சாரம் என்னவென்றால், இந்தச் சத்தியவானை சில பெண்ணியவாதிகள் அவதூறு செய்துவிட்டார்களாம்; அதனால் அவர் மனம் புண்பட்டுவிட்டாராம். அதற்காக அவர்களது குற்றவுணர்வைப் பற்றிக் கேள்வியெழுப்பி அன்னார் சோகக் காமடியில் இறங்குகிறார். இது பத்திரிகையாளர் சுபா தேசிகனை பற்றி:

maamallan blog 10அடேங்கப்பா... இது ஒலக நடிப்புடா சாமி! ஹலோ மிஸ்டர் அண்டப்புளுகரே! ஓரிரு நீதிபதிகளே பாராட்டிய  உம் கட்டப்பஞ்சாயத்து அறிக்கைக்குப் பதில், நீர் ஏன் இங்கு மனசாட்சியற்ற இந்துவின் செய்தியை பகிர்கிறீர்? 

ஓட்டுநர் தன்னை அம்பலப்படுத்திய பின்பு, மாமல்லன் என்கிற நேர்மையாளருக்கு இவ்வழக்கு வெறும் கூலி பிரச்சனையாகச் சுருங்கிவிடுகிறது. அதை வலியுறுத்தும் வகையில் இப்பதிவுகளுக்கு அன்னார் புது லேபிள்களை  உருவாக்குகிறார்:

maamallan blog 11

maamallan blog 12

விலாசினி ஆணவத்துடனும் வாய்க் கொழுப்பிலும் பொறுக்கி என்று திட்டினார் என்று அன்னார்  கிளப்பிவிட்ட கேவலமான புளுகுமூட்டை திடீரென்று காணாமல் போய்விடுகிறது. ஆனால் அ.மார்க்ஸ் அவர்களைத் தாக்கி எழுதிய ஜூலை 23 கட்டுரையில் கூட பொறுக்கி என்ற சொல்லை அன்னார் மும்முறை பயன்படுத்துகிறார். மேலும்...

maamallan blog 13

...என்று மார்க்ஸிடம் தமாஷ் காட்டுகிறார். அப்படியே இருக்கட்டும். ஆனால் அந்தத் தெளிவான, விரிவான கட்டுரையை இந்தப் புளுகாண்டி ஜூலை 30க்குப் பின் ஏன் எங்குமே பகிர்வதில்லை? 

ஏனெனில்... ஒன்று மாமல்லன் சொல்வது உண்மை -அல்லது ஓட்டுநர் சொல்வது உண்மை. வேறு வார்த்தைகளில் சொன்னால் ஒன்று மாமல்லன் புளுகுகிறார் அல்லது ஓட்டுநர் புளுகுகிறார். அல்லது இருவருமே புளுகுகிறார்கள்.   

ஓலா ஓட்டுநரின் நேர்மையைப் பற்றியும் நாம் சற்று பொறுத்துக் காண்போம்.

ஓலா சர்ச்சை -பகுதி 3

ஓலா ஓட்டுநர் மாமல்லனின் புலனாய்வுக் கட்டுரை என்கிற ரீலை அநியாயமாக அறுத்துவிட்டாலும், அன்னார் அசந்துவிடவில்லை. கமுக்கமாக வேறொரு காரியத்தைச் செய்கிறார். ஜூலை 31ஆம் தேதி, ஆண்ட்டி ஒரு கொலை செய்தாள் என்ற கட்டுரைக்கு அடியில், பின்வரும் குறிப்பை இணைக்கிறார்: 

maamallan blog 14

கருமம். த்தூ. இக்கட்டுரைதான் ஒரு முழுப் புளுகுமுட்டை என்று அந்த நன்றிகெட்ட ஓலா ஓட்டுநன் காட்டிக் கொடுத்துவிட்டானே? அதன்பின்பு, தாமும் அதைப் பகிர முடியாமல் தவிக்கிறோமே? பின்னரும் புளுகாண்டி ஏன் அதை இங்கே வந்து இணைக்க வேண்டும்?

இங்குதான் அன்னாருக்கு இம்சையரசன் இருபத்திமூன்றாம் புலிகேசி கை கொடுக்கிறார். அதாவது, ஜூலை 31ஆம் தேதி ஓலா ஓட்டுநர் தன் ரீலை மொத்தமாக அறுத்த பின்பு, முகநூல் பயனர்கள் யாரையாவது தாக்கவேண்டுமென்றால், மனசாட்சி அற்றவர்களே... ஏ கொடூரர்களே... நடந்தது என்ன என்பதை ஓட்டுநரே சொல்வதைக் கேளுங்கள்என்று நைஸாக அவரது பேட்டியை பகிர்ந்துவிடுவது. முகநூலுக்கு வெளியே இருப்பவர்களைத் தன் பழைய புளுகுமூட்டை கட்டுரையையே வாசிக்க வைத்துவிடுவது.

புளுகுமூட்டை கட்டுரையின் முடிவில், ஓலா ஓட்டுநருக்கு மாமடையனார் செய்த மகத்தான காரியத்தைப் பற்றிய மேற்கண்ட குறிப்பு இருக்கும். முகநூலுக்கு வெளியே இருக்கும் மடையர்களுக்கு ஓலா ஓட்டுநர் இந்தப் புளுகு மூட்டை கட்டுரையை அம்பலப்படுத்திய கதை தெரியவா போகிறது? தவிர, முகநூல் பதிவுகளின் ஆயுசும் சொற்பம். ஆனால் பிளாக் எழுத்து அப்படியே இருக்கும். இவரது புளுகுமூட்டையை மெயின்டைன் செய்யப் பேருதவி புரியும்.

உதாரணமாக கூகிள் தேடுபொறி விலாசினி ரமணி என்ற பெயருக்கு ஆண்ட்டி ஒரு கொலை செய்தாள் என்ற புளுகுமூட்டை கட்டுரையை முதல் பக்கத்திலேயே மூன்றாவது விடையாகச் சுட்டுகிறது. இதைப் பார்ப்பவனுக்கு ஓலா ஓட்டுநர் இது முழு புரூடா என்று அம்பலப்படுத்திய விஷயம் எப்படி தெரியும்? 

vilasini google search

கூலிப் பிரச்சனை பற்றி சில வார்த்தைகள்:

மாட்டுவண்டியில் போ என்று திமிராகப் பேசி, காரைவிட்டு இறக்கிவிட்டு, காசு எவ தருவா என்று மரியாதையின்றிக் கேட்கும் ஓர் ஆளுக்கு, விலாசினி சகல மரியாதையும் தந்து கூலியை கொடுத்து அனுப்ப வேண்டுமாம். இது அவரவர் சுரணையைப் பொருத்த விஷயம். சுரணை சார்ந்த விஷயங்களை மாமல்லன் புரிந்துகொள்வார் என்று எதிர்பார்ப்பது மடமை. ஆனால் அவரது அதிர்ஷ்டம். விலாசினி சுரணையோடு கூலி மறுத்ததால்தான், ஓலா ஓட்டுநர் தன் ரீலை அறுத்தபின்பும், அவர் தன் மனிதநேய வியாபாரத்தைக் கூலிப் பிரச்சனை என்று சுருக்கித் தொடர முடிகிறது.    

மாமல்லன் நிஜமாகவே ஓலா ஓட்டுநருக்கு உதவுகிறாரா?

ஒரு வெங்காயமும் இல்லை. மாமல்லனை தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் நண்பர் ராஜகோபால் சுப்ரமணியம், தன் ஜூலை 23ஆம் தேதிய பதிவில் கீழ்க்கண்ட குறிப்பை எழுதுகிறார்:

இப்பிரச்சினையில் 294(b) மற்றும் 506(1) பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 506(1) புகார்தாரர் நினைத்தால் சமரசம் செய்து கொண்டு வழக்கைத் திரும்பப் பெறலாம். ஆனால் 294(b) பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல் பிரிவு விலாசினியே நினைத்தாலும் சமரசம் செய்ய முடியாது. ஊடகப் பரபரப்பு பெற்றுவிட்டதால் கண்டிப்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணை நடைபெறும். பெண்களுக்கெதிரான குற்றம் என்பதால் நீதிமன்றம் கடுமை காட்டவே செய்யும். ஓட்டுநர் தரப்புக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விலாசினியிடம் சமரசம் செய்துகொள்வதுதான். வழக்கில் விலாசினி உறுதியாக நின்றால் இழப்பு அவருக்கல்ல; ஓலா  ஓட்டுநருக்குதான். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவன் என்ற பழியோடு அவர் வாழ்க்கை முழுவதும் இருக்க நேரிடும்.

மனிதாபிமான அடிப்படையில் எழுதப்பட்ட இக்குறிப்பை, ஜூலை 26ஆம் தேதி விலாசினி தன் பக்கத்தில் பகிர்ந்து...

...குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பிலிருந்து தகுந்த முறையில், செய்த குற்றத்திற்கு வருந்தி, என்னை அணுகினால் உரையாடத் தயாராகவிருக்கிறேன்...

என்றெழுதுகிறார். எதிர்பார்த்தது போலவே மாமல்லன் வெற்றி... வெற்றி... என்று கூக்குரலிடுகிறார். விலாசினி தன் குற்றத்தை உணர்ந்து பயந்து பின்வாங்குவதாக காமடி செய்கிறார். ஓலா ஓட்டுநர் உள்ளே போனாலும் பரவாயில்லை; மாமல்லனுக்கு தன் மனிதநேய வியாபாரமே முக்கியம்.

இன்னுமொரு முக்கியமான விஷயம்:

பொறுக்கி என்று திட்டினார் விலாசினி என்று மட்டுமா மாமல்லன் புரளி கிளப்பினார்? ஓலா ஓட்டுநர் விலாசினியை கழுத்த அறுத்துருவேன் என்று மிரட்டினார் என்றும் அல்லவா சேர்த்து புரளி கிளப்பியிருக்கிறார்?

கழுத்த அறுத்துவிடுவேன் என்று நான் சொல்லவேயில்லை”, என்கிறார் ஓலா ஓட்டுநர்.

முழுப் பொய் யுவர் ஆனர்... என் கட்சிக்காரர் விலாசினியைப் பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என்றதோடு, ‘என் குடும்பமே தூக்கு மாட்டிக்கொண்டு தொங்க வேண்டியதுதான் என்றுதான் சொன்னேன்என்று போலீஸிடம் பிளேட்டையும் திருப்பினார்”, என்கிறார் அவரது வக்கீல் மாமல்லன். இதோ இந்த வண்டு முருகன் தன் தரப்பான ஓலா ஓட்டுநருக்கு எதிராகப் போட்ட சில செல்ஃப் கோல்கள்:

maamallan blog 15maamallan blog 16maamallan blog 17
வக்கீல் வண்டுமுருகனின் அதிரடி வாதத்தை Deccan Chronicle நாளிதழ் வேறு செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

maamallan blog 18
எனவேபொறுக்கி என்று திட்டினார் விலாசினி என்ற புளுகையாவது வெறும் 41,000+ பேரிடம்தான் சேர்த்திருக்கிறார் மாமல்லன். ஆனால் தன் தரப்பான ஓலா ஓட்டுநரைப் பற்றி, அவர் விலாசினியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக Deccan Chronicle நாளிதழின் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு செய்தி பரப்பியிருக்கிறார். இப்படியொரு திறமையான வக்கீலை உலகம் கண்டிருக்குமா யுவர் ஆனர்?

இந்த லட்சணத்தில் இவரது கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பறிக்கையை ஒரு பெரிய பத்திரிகையாளரும், ஒரு சர்வதேச பத்திரிகையின் கரஸ்பான்டன்ட்டும் ஸ்வாதி கொலைவழக்கின் பரபரப்பைக் குறிப்பிட்டு அதை வெளியிட பயந்து பின்வாங்கிவிட்டார்களாம். ஓலா ஓட்டுநர் அதிர்ஷ்டக்காரர்தான். இது மட்டும் நடந்திருந்தால், வக்கீல் வண்டு முருகன் தன் கட்சிக்காரரின் மானத்தை சர்வதேச அளவில் வாங்கியிருப்பார்.

இப்போது சொல்லுங்கள். ஓலா ஓட்டுநருக்கு வண்டு முருகன் நன்மை செய்கிறாரா, தீமை செய்கிறாரா?

தான் சிறையிலிருந்து வெளிவரும்வரை காத்திருந்து தன் கருத்தைக் கேட்காமல், தான் சொல்லவே சொல்லாத ஒன்றை வக்கீல் வண்டு முருகனின் பேரில் அப்படியே வாந்தி எடுத்து வைத்த Deccan Chronicle நாளிதழின் நிருபர் V P ரகுவை நீக்கச் சொல்லி, ஓலா ஓட்டுநர் கடிதம் எழுதவேண்டும். முக்கியமாக, தன் சுய அரிப்பை தீர்த்துக்கொள்ள, தன்னைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் புரளி கிளப்பி, தன் தரப்பை சிக்கலாக்கியதற்காக வண்டு முருகன் மாமல்லனுக்கு எதிராக அவர் வழக்கும் தொடுக்க வேண்டும். ஓர் ஏழைப் பங்காளனாக இவ்விஷயத்தில் அவருக்கு உதவ வேண்டியது என் சமூகக் கடமை.

ஓலா சர்ச்சை -பகுதி 4

ஊடகங்கள் விலாசினிக்கு ஆதரவாகச் செயல்பட்டதா?

முதலில் இது ஒன்றும் ஒரு முகநூல் சண்டையல்ல. நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு குற்றச் சம்பவம். கடைசியாக ஒரு குற்றச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் தரப்பும் சேர்ந்து வெளிவந்ததை நாம் எப்போது கண்டோம்? சம்பவம் நடந்தவுடன், பாதிக்கப்பட்டவர் முதலில் யாரை அணுக வேண்டுமோ விலாசினி அவர்களையே அணுகினார் -முதலில் ராமாவரம் ரோந்து போலீஸிடம் புகார் செய்கிறார். அவர்கள் அவரை நந்தம்பாக்கம் S4 காவல் நிலையத்துக்கு அனுப்புகிறார்கள். அங்கு சென்றால் அந்தப் பின்னிரவிலும் அவர்கள் அவரை கிண்டி காவல்நிலையத்துக்குச் செல்லச் சொல்கிறார்கள். ஏற்கனவே ஓட்டுநர் தன்னைப் பின்தொடரலாம் என்ற அச்சத்தில் இருந்தவர் அதைச் செய்யாமல் வீடு திரும்ப முடிவெடுக்கிறார். இந்த அலைக்கழிப்பு தந்த மனவுளைச்சல் காரணமாக ஓட்டுநர் மீது புகாரளிக்கும் முயற்சியையே கைவிடுகிறார். இரண்டு நாட்கள் கழித்து முகநூலில் தன் ஆதங்கத்தைக் கொட்டுகிறார். 

எதிர்பாராத வகையில் அப்பதிவு மிகப்பெருமளவில் பகிரப்பட்டுப் பேசப்படுகிறது. இதையடுத்து இந்து நாளிதழ் செய்தி வெளியிடுகிறது. விலாசினி காவல் நிலையத்தை அணுகாமல், போகிற போக்கில் ஓட்டுநரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் தன்னைக் கொலை செய்வதாக மிரட்டினார் என்று சொல்லும் பட்சத்தில், இதை எப்படி இந்து செய்தியாக வெளியிடலாம் என்று கேள்வியெழுப்பலாம். 

ஊடக பரபரப்புக்குப் பின், ஜூலை 13ஆம் தேதி காவலர்கள் விலாசினியின் வீட்டுக்கு சென்று விசாரிக்கிறார்கள். அவர்களிடம் கூட வழக்கு எதுவும் வேண்டாம்; கோர்ட், கேஸ் என்று தன்னால் அலைய முடியாது என்கிறார் அவர். ஆனால் ஓட்டுநர் மீது நடவடிக்கை ஏதாவது எடுக்க வேண்டுமென்றால், எழுத்துப் பூர்வமாகப் புகார் தரப்பட வேண்டும் எனப் போலீஸாரால் நிர்பந்திக்கப்படுகிறார். விலாசினியும் புகார் எழுதித் தருகிறார். அப்போது CSR எனப்படும் Community Service Register பதிவு செய்யப்படுகிறது. பின்னர் நடந்தது அனைத்தும் காவல்துறை எடுத்த முடிவு.

சரி, விலாசினி புகார் தந்ததும் ஓலா ஓட்டுநர் எவ்வித விசாரணையுமின்றிக் கைது செய்யப்பட்டாரா? சிறைக்கு அனுப்பப்பட்டாரா? இல்லை. ஒரு வழக்கில் CSR பதிவானதும், கொடுக்கப்பட்ட புகாரில் குற்றச் சம்பவத்துக்குரிய கூறுகள் இருந்தால், ஏழு நாட்களுக்குள் FIR பதிவு செய்யப்பட வேண்டும். இங்கே CSR பதிவானதும், அதன் பேரில் விசாரணை செய்யப்பட்டு, மறுநாள் ஓலா ஓட்டுநர் மீது FIR பதிவு செய்யப்படுகிறது. கைது என்பது காவல் துறையின் தனிப்பட்ட அதிகார வரம்பு. இந்நிலையில் புகார் அளித்தப்பின், விசாரணை எந்தத் திசையில்/அளவில் செல்ல வேண்டுமென்று விலாசினி காவல்துறைக்கு உத்தரவிட முடியுமா?

காவலர்கள் ஓலா ஓட்டுநரிடம் அன்றிரவே பேசியிருந்தால், அவரை எச்சரித்து அனுப்புவதோடு விஷயம் முடிந்திருக்கும். விலாசினி முகநூலில் பதிவு எழுத வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இந்துவில் செய்தி வெளிவந்திருக்காது; புதிய தலைமுறையில் வந்து விலாசினி ஃபேமஸ் ஆகியிருக்க மாட்டார். ஆனால் காவலர்களைக் குறை சொல்வதை சாமர்த்தியமாகத் தவிர்த்து, மொத்தப் பழியையும் விலாசினியின் மேல் போடுகிறார் மாமல்லன். அதிகாரம் என்றால் பம்முவதுதானே அன்னாரின் வழக்கம்? தன் முகநூல் கணக்கு பறிக்கப்பட்டதும் வாலை சுருட்டிக் கொண்டு ஓடிவந்து முகநூலுக்கு வந்து கண்ணைக் கசக்கிய வீரராயிற்றே? 

ஊடகங்களின் மீதான மாமல்லனின் அறச் சீற்றமே போலியானது என்பதற்கான ஆதாரம் இதோ: 

விலாசினியை தாக்க முதலில் ஆங்கில இந்துவின் செய்திக்கு அடங்கிய குரல் ஆங்கில மொழிபெயர்ப்பு என்று பாராட்டுப் பத்திரம் வாசித்த வாய், பின்பு எப்படி நாறவாயாய் மாறுகிறது என்பதைப் பாருங்கள்:

maamallan blog 19
இந்துவின் அடங்கிய குரல் ஆங்கில மொழிபெயர்ப்பு நாறவாயருக்கு தொபுக்கடீரென்று படுபயங்கர கொலை மிரட்டல் ஆகிவிடுகிறது. ஆஹா, இதுவல்லவோ எழுத்தாள தர்மம். 
 
இந்து நாளிதழ் மறு தரப்பான ஓட்டுநரிடம் பேசி செய்தி வெளியிட்டிருந்தால், அதிகபட்சம் CSRஉடன் இப்பிரச்சனை முடிந்திருக்கும்; கைதே நடந்திருக்காது’, என்று ஹாப்ஃ-பாயில்ட் நாட்டாமை மாமல்லன் உளறி வருகிறார். ஓட்டுநரின் தரப்பு என்ன என்பது இங்கே முக்கியமேயில்லை. குற்றச்சாட்டின் தன்மையென்னவோ, அதைப் பொருத்துதான் வழக்கு CSRஇலிருந்து FIRக்கு நகரும். இது Criminal Intimidation வழக்கு. எனவேதான் CSRக்குப் பின் விசாரணை செய்யப்பட்டு, FIR பதிவு செய்யப்பட்டு ஓட்டுநர் கைதும் செய்யப்படுகிறார். எனவே, இந்து நாளிதழ் ஓட்டுநர் தரப்பைக் கேட்டிருந்தாலும், அது ஓட்டுநரின் கைதைப் பாதித்திருக்காது என்பதே உண்மை. சரி...

சரி, ஊடகங்களுக்கு வகுப்பெடுக்கும் கள்ளப் பஞ்சாயத்து நாட்டாமை மாமல்லன் எந்தத் தரப்பிடம் பேசினார்? 

ஓட்டுநர், ஆட்டோக்காரர் இருவரிடமும் இவர் பேசவில்லை. ஒரு புரளியை பேருண்மை போல் எழுதி மனிதநேய வியாபாரம் செய்கிறார். இந்த மனிதநேய வியாபாரமே சுத்த ஹம்பக் என்பதற்கு இதுவே சாட்சி:

maamallan facebook 2

பியூஷ் மானுஷின் விடுதலைக்காகச் சமூக ஊடகங்களே கொந்தளிக்க, அவருக்கு ஜாமீன் வாங்க நீதிமன்றம் செல்லச் சொல்லி நக்கலடிக்கும் இந்த அதிகார சொம்பு, ஓலா ஓட்டுநரின் விஷயத்திலும் அதைத்தானே செய்திருக்க வேண்டும்? ஏன் செய்யவில்லை? அல்லது ஓட்டுநர் சிறையில் இருந்து வெளிவரும் வரையாவது காத்திருந்திருக்க வேண்டும். ஏன் காத்திருக்கவில்லை? அவ்வாறு செய்தால், விலாசினியை இழிவான வகையில் தாக்க வாய்ப்பு கிடைத்திருக்குமா? ஒட்டுமொத்த கட்டப் பஞ்சாயத்தே அதற்காகத்தானே?

சட்ட மாமேதை வண்டு முருகன் aka மாமல்லன்:

maamallan facebook 3

maamallan blog 20

நீதிமன்றங்கள் ஒரு வழக்கில் குற்றவாளி யார் என்பதை விசாரித்துத் தீர்ப்பு சொல்லுமா, அல்லது யாருக்கு ஆதரவாகப் பணம் திரட்டப்படுகிறது என்று பார்க்குமா என்பது ஓர் எளிய தினத்தந்தி வாசகனுக்குக் கூடப் புரியும். ஆனால் பாவம், இந்த ஹாஃப்-பாயில்ட் எழுத்தாளனுக்குப் புரியவில்லை. இந்த அரிய உண்மையை இவரிடம் ஒரு போலிஸ்காரர் வேறு சொன்னாராம். ஷப்பா... முடியலடா சாமி. இது எந்தச் சட்டப் பிரிவின்படி செல்லுபடியாகும் என்று வண்டு முருகன் பொது மன்றத்துக்கு விளக்க முன்வருவாரா? இதுபோன்ற உளறல்கள் நம் சட்ட திட்டங்களையே கேலிக்குள்ளாக்குகின்றன; நீதிமன்றங்களை அவமதிக்கின்றன. பணவசதி உள்ள ஒருவன் ஆட்களையும், பணத்தையும் திரட்டினால், நீதிமன்றங்களை இன்ஃப்லூவென்ஸ் செய்யலாம் என்று இந்த ஹாஃப்-பாயில்ட் தர்க்கம் பொருள் தரவில்லையா? இப்படி ஓர் அறிவுக் கொழுந்துக்குதான் அரசு வேலை. நாடு விளங்கிய மாதிரிதான்.

சுரணையும் சுயமரியாதையுமற்ற மாமல்லன் என்கிற அதிகார சொம்பு, ஒரு கள்ளப் பஞ்சாயத்து நடத்தி, விலாசினி என்கிற எந்த அதிகாரமுமற்ற தனிநபரைத் தாக்கி எழுதிய கேவலமான பதிவுகளின் எண்ணிக்கை:                                                                                   

300+

பின்வருவது அதில் உச்சம். இது விலாசினி தன் குடும்பப் புகைப்படத்தைப் பகிர்ந்தபின் இடப்பட்ட நிலைச்செய்தி: 

maamallan facebook 4
அப்புகைப்படத்தில் விலாசினியின் இரு குழந்தைகளும் இருந்தனர். தாய் கொலைகாரியாக இருக்க, குழந்தைகளும் சேர்ந்து துணைபோகிறார்கள் என்கிறார், இதே குழந்தைகள் தனியாக விடப்பட்டதாகக் கதைகட்டி மெலோடிராமா செய்த மனிதநேயர். தெருநாய்களுக்குக் கூட நெஞ்சில் கொஞ்சம் ஈரமிருக்கும்.

ஓலா சர்ச்சை -பகுதி 5

நடுவுல கொஞ்ச பக்கத்தக் காணோம்:

கழுத்த அறுத்துருவேன் என்று நான் சொல்லவேயில்லை. குடும்பத்தோட கழுத்த அறுத்துக்கிட்டு தற்கொல பண்ணிட மாட்டேன் என்றுதான் சொன்னேன்” என்கிறார் ஓலா ஓட்டுநர். பின்னர் எப்படி அவர் கழுத்த அறுத்துருவேன் என்று ஒப்புக்கொண்டதாக வக்கீல் வண்டு முருகன் செல்ஃப் கோல் அடித்தார்? இதற்கு ஓட்டுநர் தரப்பிலிருந்து மின்னம்பலம்.காம் தளத்தில் விளக்கம் தரப்படுகிறது:

காவல் நிலையத்தில் டிரைவர் எழுதிக் கொடுத்த விளக்கத்தை, அவர் ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துவிட்டதாக, ஓனர் காஜா ஷெரிஃபிடம் போலீஸார் சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதை,  கழுத்தை அறுத்துவிடுவேன் என்பதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்து விட்டதாக காஜா ஷெரிஃப் தவறாகப் புரிந்து கொள்கிறார். காஜா ஷெரிஃப் இதை மாமல்லனிடம் சொல்கிறார்.மாமல்லனும் செல்ஃப்-கோல் அடித்துவிட்டார். இதுதான் அந்த விளக்கம்.

மாமல்லன் என்கிற டுபாக்கூர் புலனாய்வாளர் பற்றி இன்னும் என்னவெல்லாம் வெளிவருமோ? முடியல. 

நேற்றிரவு நான் நந்தம்பாக்கம் சென்று மரம் செடி கொடிகளிடமெல்லாம் பேசி சேகரித்துக் கொண்டு வந்தேன்... என்று தன் புலனாய்வு கட்டுரையைக் காவலர்களிடம் பேசியல்லவோ வெளியிட்டதாக அன்னார் அளந்துவிட்டார்? காஜா ஷெரிஃபிடம் கேட்டுதான் திரைக்கதை வசனம் எழுதினார் என்றால், மரம் செடி கொடிகளுக்கு நீர் ஊற்றவா நந்தம்பாக்கம் காவல்நிலையம் வரை சென்றார்? இப்போது தெரிகிறதா அன்னாரின் டுபாக்கூர் புலனாய்வின் லட்சணம்?

இந்த இடத்தில் ஒரு விஷயம். ஜூலை 14ஆம் தேதி ஓட்டுநரும், காஜா ஷெரிஃபும் காவல் நிலையத்துக்குச் சேர்ந்தே சென்றிருந்தார்கள் என்கிறது மாமல்லனின் கட்டுரை. ஓட்டுநரும் போனோம் என்றுதான் குறிப்பிடுகிறார். அன்று பகல் 2:30 முதல், ஓட்டுநர் சிறைக்கு அனுப்பப்பட்ட இரவு 11 மணிவரை இருவரும் ஒன்பது மணிநேரம் ஒன்றாகவே இருந்திருக்கிறார்கள். மாமல்லன் தன் கட்டுரையில், 

சொந்தத் தம்பியைப் போல் புழல் சிறைவரைக் கூட்டிக்கொண்டு சென்று விட்டுவிட்டு வருகையில் காஜா ஷெரிஃப் சொன்னது இதுதான்: எதைப் பத்தியும் கவலைப்பட்டு மனசை விட்டுடாதே. எல்லாம் நல்லதுக்குதான்னு நினைச்சுக்கோ. கடவுள் நமக்கு ஏதோ நல்லது செய்யிறதுக்காகதான் இதையெல்லாம் செய்யிறார்னு நினைச்சுக்கிட்டு தைரியமா இரு.என்று எழுதுகிறார். 

இவ்வளவும் பேசிய காஜா ஷெரிஃப், ஓட்டுநர் என்ன எழுதித் தந்தார் என்று அவரையே நேரடியாகக் கேட்காமல், ஏன்/எப்படி காவலர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்? மேலும்:        

          என் குடும்பமே தூக்கு மாட்டிக்கொண்டு தொங்கவேண்டியதுதான் என்று ஓட்டுநர் போலீஸிடம் புளுகினார் என்று தன் கட்சிக்காரரையே போட்டுக் கொடுக்கிறார் வக்கீல் வண்டு முருகன். ஆக ஓட்டுநர் புளுகிய இந்த விஷயத்தை மட்டும் காவலர்களிடமிருந்து தெரிந்துகொண்டு, அவர் ஒப்புதல் வாக்குமூலம் தந்ததை மட்டும் மறுநாள் காஜா ஷெரிஃபிடமிருந்து தெரிந்துகொண்டாரா?  

          ● புலனாய்வு செய்ய காவல் நிலையம் சென்ற வண்டு முருகன், ஓட்டுநர் தன் வாக்குமூலத்தில் என்ன எழுதித் தந்தார் என்று காவலர்களிடமே கேட்காமல், ஏன் மறுநாள் காஜா ஷெரிஃபுக்கு ஃபோன் போட்டு கேட்டார்?

இந்தக் குழப்படிகள் அனைத்தையும் கவனித்தால், காஜா ஷெரிஃப் கதை சொல்ல, காவலர்கள் சொன்னதைத்  தன் அரை மண்டையால் அரைகுறையாய்ப் புரிந்துகொண்டு, ஒரு அயோக்கியத்தனமான திரைக்கதை வசனம் அமைத்துவிட்டார் கட்டப்பஞ்சாயத்து நாட்டாமை மாமல்லன். ஆனால் பாவம். மாமல்லன், காஜா ஷெரிஃப் இருவர் சொல்வதும் பச்சைப் பொய்கள் என்று அந்த நன்றிகெட்ட ஓலா ஓட்டுநர் அம்பலப்படுத்திவிட்டார்.

நடந்தது ஒரு சம்பவம்; இரு தரப்புகள். ஆனால் ஒரே தரப்பில் எத்தனை குளறுபடிகள்.

நடுவுல கொஞ்ச பக்கத்தக் காணோம்!

இருபது ஆண்டுகளாகச் செய்தித்தாள்களே கதியென வாழும் நான் இதுவரை குடும்பத்தோட தூக்குல தொங்கவேண்டியதுதான் என்றோ, குடும்பத்தோட விஷம் குடிச்சிதான் சாகணும் என்றோதான் செய்திகள் வாசித்திருக்கிறேன். எவரும் குடும்பத்தோட கழுத்த அறுத்துக்கிட்டு தற்கொல பண்ணிட மாட்டேன் என்று சொன்னதாக வாழ்க்கையில் நான் வாசித்ததேயில்லை. எனினும் தன் வக்கீல் வண்டு முருகன் aka மாமல்லன் ஒரு சுத்த வேஸ்ட் என்பதைப் புரிந்துகொண்டு, இவ்வழக்கில் ஒரு புதுக் கதையை உருவாக்கிய ஓட்டுநரின் சாமர்த்தியத்தை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மின்னம்பலம் இதழில் வெளியான ஓட்டுநரின் பேட்டியில் மிக மிக முக்கியமான வரி இதுதான்:

minnambalam 1

ஆனால் கண்ணும் மூக்கும் காதும் சேர்த்தது யார் என்று குறிப்பிடப்படவில்லை. அது நேர்மையாளர் மாமல்லன்தான் என்பதை ஜூலை 19ந்தேதி உலகமே பார்த்ததே? அட இழிபிறவியே! உனக்கெல்லாம் மரியாதை ஒரு கேடா? 

தன் டுபாக்கூர் அறப்போராட்டத்தில் நந்தம்பாக்கக் காவலர்களும் இணைந்து கொண்டனர் என்று, தன் தீர்ப்பில் மிகச் சாமர்த்தியமாக எழுதுகிறார் கட்டப்பஞ்சாயத்து நாட்டாமை மாமல்லன்: 

மனிதாபிமானமுள்ள காவலர்கள் ஒரு படி மேலே சென்று... சார், ஒரு சாதாரண மனுசரா கார் ஓனர் காஜா ஷெரிஃப் இவ்ளோ செய்யும்போது, இவ்ளோ அதிகாரம் இருந்தும் இந்துல வந்துடுச்சிங்கிறதால உண்டான பிரஷர்ல நம்மளால எந்த உதவியும் செய்ய முடியிலையேனு நினைச்சாதான் ரொம்பக் கஷ்டமா இருக்குஎன்றனர் என்கிறார்.

கட்டப் பஞ்சாயத்து நாட்டாமை நற்சான்றிழ் அளிக்கும் அதே நந்தம்பாக்கக் காவலர்களைப் பற்றி மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் சங்கர்:

...புகாரை வாங்காமல் அலைக்கழித்த காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் இதுபோன்ற புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களையும் அறிவுறுத்தி உள்ளோம்.என்கிறார். இப்படியொரு ஈனப்பிழைப்பை உலகில் எந்த ஒரு ஜீவராசியும் செய்யாது, மாமல்லன் என்கிற மாமடையனைத் தவிர.

தவறு எங்கே நடந்திருக்கிறது என்பதை மாநகர காவல்துறை புரிந்துகொண்டதற்கான சாட்சிதான் கூடுதல் ஆணையரின் பேட்டி. மாமல்லன் கள்ளப் பஞ்சாயத்து நடத்திய முகநூல் கணக்கை காவல்துறை முடக்கியதும் இந்தப் புரிதலின் அடிப்படையில்தான். போலீஸ் கொடுத்து அனுப்பியதும் வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவந்து, தன் வீரதீரத்தை தனிமனிதர்களிடம் காட்டிவருகிறார் இந்த வீரசிகாமணி.

மாமல்லனை அம்பலப்படுத்த உதவிய ஓலா ஓட்டுநருக்கு விசேஷ நன்றி. மாமல்லனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

- சித்தார்த் கந்தசாமி