இப்பொழுது பலரும் ஆச்சரியப்படக்கூடும். பெரும்பாலும் நான், என் வாழ்க்கை முழுதும் இந்தியனாய் இருக்க பெரும் போராட்டத்தையும் முயற்சியையும் செய்துள்ளேன். இந்தியனாய் இருப்பதில் நான் பெருமையும் அடைந்திருக்கின்றேன்.  ஆனால் இனி இல்லை.

kashmir atrocity 600இன்று ஒரு இந்தியனாய் இருப்பதற்கான  தகுதியை, பெரும்பான்மையான மக்களின் கூட்டு மனசாட்சிபடியும் அதை தலைமை ஏற்று நடத்துபவராலும் மாற்றபட்டுள்ளது. இன்று நல்ல இந்தியன் நாளை துரோகி ஆகிறான்.

அடிப்படையில் ஒரு இந்தியன் என்பவன்; இந்து மதத்தில் பிறந்து, மாட்டு கறி உண்ணாமல், அரைக்கால் காக்கி உடை அணிந்து, இந்த அரசாங்கம் எதை செய்தாலும் அதை ஒரு சிறு கேள்வியும் கேட்காத புனிதர்கள்.தன் நாட்டை விட வெளி நாட்டில் அதிகம் இருக்கும் ஒரு பிரதமரின்  காலடி மண்ணை வணங்குபவர்கள். ஆயுத படைகள் செய்யும் அனைத்துக்கும் முழு சுதந்திரத்தை தருபவர்கள்.இவர்கள் அடுத்தவர்களை விட நாட்டு பற்று அதிகம் உள்ளவராய் தன்னை காட்டிக்கொள்வதற்காக  எப்படியாவது வரியை, இந்த நாட்டின் மக்களுக்கு அது நன்மை அளிப்பதாக இல்லாவிட்டாலும் அந்த வரியை செலுத்துவார்கள். ஒரு நல்ல இந்திய குடிமகன் என்பவன் அரசாங்கம் சொல்வதை ஆபத்து என்றும், அரசாங்கம் சொல்வதை உண்மை என்று நம்பும் கும்பல் மனப்போக்கினை பெற்றிருக்கவேண்டும்.

துரதிருஷ்டவசமாக எனக்கு இது, இந்தியன் என்ற என் நம்பிக்கைக்கு ஏற்புடையதாக இல்லை. என்னுடைய நம்பிக்கை என்பது  என்  நாட்டின் தந்தைகள் உருவாக்கிய  என் அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது - நீங்கள் மிக வசதியாக மறந்து விட்ட அதை நினைவு படுத்துகின்றேன்.

“நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, கட்டமைக்கின்றோம் இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியாட்சியாக

நிர்ணயிக்கிறோம் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி;

எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு சுதந்திரம்;

படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம்; மற்றும் ஊக்குவிக்கின்றோம் அனைவரிடத்திலும்

சகோதரத்துவ மனப்பான்மையை, தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த.”

மதச்சார்பற்ற (?) - ஜனாதிபதி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட  இப்தரில் கூட கலந்து கொள்ள முடியாதவர்களாக இந்நாட்டின் பிரதமரும் அவரது சாகாக்களும் இருக்கிறார்கள். மாட்டிறைச்சி வைத்திருந்தான் என்று  சந்தேகித்து ஒருவர் எந்த விசாரணையும் இன்றி கொலைசெய்யப் படுகிறார்.

ஜனநாயகம்  (??) -  ஹர்திக் படேல், கன்ஹையா அல்லது ஒரு உமரிடம் தான் இந்த நகைச்சுவை பற்றி கேட்கப்பட வேண்டும்.

நீதி (?) -  இதுவரை யாரையும் கொல்லாத முகநூலால் தீவிரவாதி ஆக்கப்பட்ட (தீவிரவாதி அல்ல)  ஒருவனை கொலை செய்து, அதன் தொடர்ச்சியாக 30 பேர் கொலை செய்ய பட்டிருக்கிறார்கள். கொஞ்சம் தர்கரீதியாக யோசிப்போமேயென்றால், தீவிர சிந்தை உடைய ஒவ்வொரு கோபம் கொண்ட இளைஞனையும்  இப்படி கொலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சுதந்திரம் (?) - ஆம், நான் இந்த பதிவை நான்கு நாட்களாக ஊரடங்கு உத்தரவு உள்ள, இணைய வசதி துண்டிக்கபட்ட சுதந்திரமான ஒரு ஊரில் இருந்து பதிவு  செய்ய வேண்டி உள்ளது.

சமத்துவம் (?) - யாராக இருந்தாலும் அவர்கள் வலதுசாரி இந்து அமைப்புக்கு சமமானவர் இல்லை.

சகோதரத்துவம் (?) - எங்கள் மீது எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இன்றி நடத்தப்படும் வன்முறைகளையும், படுகொலைகளையும் என் சகோதர்களாகிய நீங்கள் ஏன் குறைத்தபட்சம் ஒப்புக்கொள்ளக்கூட மறுக்கறீர்கள்.

நாங்கள் எங்கள் வேறுபட்ட கருத்தை கூறினாள் நாங்கள் உங்கள் கண்களுக்கு இந்தியர்களாக தெரிவதில்லை. நாங்கள் இறக்க மறுப்பதால், நீங்கள் உங்கள் முகங்களை திருப்பிக்கொண்டு எங்கள் இருப்பை அழிக்கின்றீர்கள். நாங்கள் ஒரு பர்கன்வானிக்கும் காணாமல் போன பிற இரண்டு லட்ச சொந்தங்களுக்காக புலம்பினாள் நாங்கள் உங்கள் கண்ணில் தீவிரவாதிகளாகிறோம். நாங்கள் இந்த நாட்டில் முதல் பிரதமர் கொடுத்த வாக்குறுதியை, இன்னும் நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்று கூறினால் தேச துரோகி ஆகிறோம்.  நாங்கள் “Kunan Poshpor” அல்லது “Tufail Mattoo 2010” நீதி கேட்பதால் நாங்கள் பாகிஸ்தானி ஆகிறோம். நாங்கள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) இரத்து செய்ய கேட்டால்  நாங்கள் உங்கள் கண்ணில் அரசாங்கத்தின் விரோதி ஆகிறோம். நாங்கள் இப்பொழுது இருக்கும் உங்களை போல இந்தியர்களாக இருக்க மறுப்பதால், நாங்கள் காஷ்மீரி ஆகின்றோம்.

ஆகையால் இன்று நான் ஒரு காஷ்மீரி ஆகிவிட்டேன்.

நான் உங்களை போல் இருக்க மறுக்கிறேன்.

எனக்கென்று ஒரு மனசாட்சி இருக்கிறது,

ஒரு குரல் இருக்கிறது.

நீங்கள் என்னை அடக்க நினைக்கலாம், ஆனால் நான் அடங்கிவிட முடியாது.

அப்பாவி மக்களை கொன்ற அவமானத்தை மறைப்பதற்கு எவ்வளவு பெரிய கொடியினாலும்  - இந்திய கொடியினாலும் முடியாது

-  ஷாஜியா பாக்க்ஷி

தமிழில்: செ.நந்தகுமார், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்

Pin It