கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

sri sri ravishankar

சில நாட்களாக டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மீது தீவிரவாத முத்திரையை பதிக்க இந்த இந்திய அரசாங்ககங்களும் இந்திய விபச்சார மீடியாக்களும் பல கட்டுக்கதைகளை கூறி வருகின்றன. அந்த கட்டுக்கதைகளில் ஒன்று பங்களாதேஷ் தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தான் காரணமென்றம் அந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் ஜாகிர் நாயக் அவர்களை சிறந்த அழைப்பாளர் என டிவிட்டரில் பதிட்டுள்ளான் என்றும் அதாவது, ஜாகிர் நாயக் அவர்களின் தூண்டுதலால் தான் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தினான் என மீடியாக்கள் தங்களுக்கு தோன்றும் கற்பனை கதைகளை எழுதியும் அதனை கூவியும் வருகிறார்கள்.

        பங்களாதேசில் நடந்த தாக்குதலுக்கு யார் காரணமாக இருக்க முடியும்? எந்தவொரு முஸ்லிம் அமைப்பாவது முஸ்லிம்கள் கொண்டாடக்கூடிய பெருநாள் தொழுகையின் போது குண்டு வைப்பார்களா? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? குண்டு வெடித்த உடனே ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரை சொல்ல வேண்டும் என்ற தயார் நிலையில் இருந்தது போல் ஒவ்வொரு மீடியாவும் சரியாக உச்சரிக்க தொடங்கியது திட்டமிடாமல் எப்படி நடந்திருக்க முடியும்?

      முஸ்லிம் பெயரால் முஸ்லிம்களை கொல்லும் வழக்கம் பாசிச சக்திகளுடையது. பங்களாதேசின் உள்துறை அமைச்சர் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு உண்டு என்கிறார்! ஆனால் சமபந்தமே இல்லாத இந்திய மீடியாக்கள் முஸ்லிம் பெயர்களை கூறி பதறுகின்றன.ஒர் கலவரத்தை உருவாக்கிட போட்டி போடுகின்றன. (http://www.bbc.com/news/world-asia-36462026)

        சரி, இதே போல் ஒரு பிரச்சனை இந்தியாவில் நடந்ததற்கு இந்திய மீடியாக்களும் இந்த அரசும் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது?

        மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் அப்படியே பங்களாதேஷ் தாக்குதலை ஒத்தது. முஸ்லிம்களின் பண்டிகைத்தினமான சபேபராத் இரவு அன்று(08-01-2006) முஸ்லிம்கள் ஒன்றாக வழிபாட்டுக்காக கூடியிருக்கும் போது குண்டு வெடித்தது.அதில் 48 பேர் உயிரழந்தார்கள் 108 பேர் காயமடைந்தார்கள். ஆனால் அன்றும் குண்டு வெடிப்பு நடந்ததும் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள். தாக்குதல் நடத்தியதாக ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயர் மீடியாக்கள் முழுதும் போடப்பட்டது அப்படியே பங்களாதேஷ் குண்டுவெடிப்பை போல். பின்பு கர்னல் கர்கரே என்ற தீவிரவாத தடுப்பு படையின் உயர் அதிகாரியின் முயற்சியினால் இந்துத்துவ தீவிரவாதிகள் தான் இதனை செய்தார்கள் என்று பெண் சாமியார்கள் உட்பட பல சாமியார்கள் கைது செய்யப்பட்டனர். அபினவ் பாரத் மற்றும் பல இந்துத்துவ அமைப்புகளின் கொடூர முகங்கள்  வெளிச்சத்திற்கு வந்தன. குண்டுவெடிப்புக்கு தேவையான ஆர்.டி.எக்ஸ்யை இராணுவ கிடங்கிலிருந்து எடுத்து கொடுத்த புரோகித் என்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டான்.(இந்த நேர்மையின் காரணமாகவே பின்னாளில் கர்னல் கர்கரே இந்துத்துவத்தின் இன்னொரு சதித்திட்டத்தால் கொடூரமாக கொல்லப்பட்டார். அதற்கான நியாயமும் இந்நாள் வரை கிடைக்கவில்லை.)

     புரோகித்தை பல விசாரணைகளுக்கு உட்படுத்திய போது பல அதிர்ச்சிகர தகவல்களை கொடுத்தான். அதில் ஒன்று உண்மை கண்டறியும் சோதனையில் "மாலேகான் தாக்குதலுக்குக்காக வாழும் கலை இயக்குனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியுடன் ஆலோசனை நடத்தினேன்" என்று கூறினான். ( தினகரன் 24-11-2008).

     ஆனால் அன்றைய மீடியாக்களில் இது பெரிதும் பேசப்படவில்லை. ஏனென்றால் அவர் முஸ்லிம் இல்லை. முஸ்லிம்களுக்கு எதிரானவர்.

     ஒரு டிவிட்டர் பதிவுக்காக மிகப்பெரிய பிரபலமான, உலகம் அறிந்த, சவூதி அரேபியாவின் உயரிய விருதான ஃபைசல் விருது பெற்ற டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை தீவிரவாதி என்றும் அவரது பேச்சுகள் தடை செய்யப்பட வேண்டும் என குமுறும் மீடியாக்கள் உண்மை கண்டறியும் சோதனையில் 48 பேரை கொலை செய்ய ரவிசங்கர் அவர்களுடன் ஆலோசனை நடத்தினேன் என கொலைகாரன் வாக்குமூலம் கொடுக்கும் போது மீடியாக்கள் வாய் திறக்கவில்லை. வேடிக்கை பார்த்தன, ரவிசங்கரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கின. இதில் ஜனநாயக நாடு என்ற முத்திரை வேறு குத்திக் கொள்கிறார்கள்.

   மாலேகான் தாக்குதலுக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என தெரிவதற்கு முன்பே அவர்களை குற்றவாளிகளாக்கி முதற்பக்கத்தில் வெளியிட்ட நாளேடுகளும் பத்திரிக்கைகளும் அவர்கள் நிரபராதிகள் என்ற செய்தி வந்தவுடன் கடைசி பக்கத்தில் வெளியிடுகின்றன. இதுதான் இந்திய மீடியாக்களின் ஊடக அறம்.

     முஸ்லிம்கள் குற்றவாளிகளாக இருந்தால் அவர்களை தீவிரவாதிகள் என்றும் அதுவே இந்துக்கள் குற்றவாளிகள் என்றால் அவர்களை குற்றவாளிகள் என்றும் செய்தி வெளியிடும் ஊடகங்கள் தான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய தூண்களா?

     ஜாகிர் நாயக் அவர்கள் "ஒரு முஸ்லிம் என்பவன் அனைத்து தீமைகளுக்கு எதிராக போராடும் ஒரு தீவிரவாதியாக இருக்க வேண்டும் " என்று பேசும் காணொளியை சித்தரித்து அதில் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்ற பேச்சை மட்டும் மையப்படுத்தி அதனை பரவலாக்கி இந்திய மீடியாக்கள் விபச்சாரம் செய்தது இந்திய மீடியாக்களின் உச்சகட்ட நேர்மையை காட்டுகிறது.

     ஜனநாயகம் என்ற பெயரைக் கொண்டு இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம்!! இன்னும் அனுபவிக்க போகும் கொடுமைகளும் ஏராளம்! தடுப்பதற்கு ஒன்றுபடுவோம். பாசிச சக்திகளை ஒழிப்போம்.

- அபூ சித்திக்