ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி "மத்திய அரசின் கீழ் வரும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயப் பாடமாக சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படும் என்றும், 8ஆம் வகுப்புக்கு மேல் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத கல்வியைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்திருக்கிறார். சமஸ்கிருத மொழி வலிந்து திணிக்கப்பட்டால் வேற்றுமையில் ஒற்றுமை வெற்று முழக்கமாகவே இருக்கும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

Smriti Iraniஎனது தாய் மொழி குஜராத்தி என்றாலும் எனக்கு இந்தி தெரியாவிட்டால் என்ன நேர்ந்திருக்கும் என நினைத்து வியப்படைந்திருக்கிறேன், இந்தியை மறப்பது இந்தியாவுக்கு பெரிய இழப்பு ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி பேசியது, சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள முடியாமல் போனதற்காக நான் வெட்கப்படுகிறேன். சமஸ்கிருதம் படிக்காததால் அந்த மொழியை என்னால் பேச முடியவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதையும் புறம்தள்ளி விட முடியாது. 

மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ 2014 ஜூன்  தில்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது "​இந்தி நமது ஆட்சி மொழியாகும். மேலும் நமது நாட்டின் தேசிய மொழியாகும்" என்று தெரிவித்தார். ​இந்தி இந்தியாவின் அலுவல் மொழி தானே தவிர அது தேசிய மொழி ​அல்ல என்பது கூட இவருக்கு தெரியவில்லை.

ஆசிரியர் தினத்தை இனி ‘குரு உத்சவ்’ என்று அழைக்க வேண்டுமென்று கூறியதற்கு "வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது பாஜக" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும், "தூங்கும் வேங்கையை இடறுவது போன்றது" என்று மதிமுக பொதுசெயலாளர்  வைகோவும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ​"​அறிவியல் தொழில்நுட்பத்துக்கு மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம்தான்​"​ என்று பேசியது, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா.வில் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டு வர முயற்சிப்பதாக கூறிய கருத்து, மத்திய உள்துறை அமைச்சகமும், அரசும், அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணி புரிந்து வரும் அலுவலர்கள் இனி​ ​இந்தியில் கையெழுத்து போட வேண்டும்என்றெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் சமஸ்கிருத மற்றும் இந்தி மொழியை திணிப்பதற்கு பொய்யையும் புரட்டையும் அள்ளி தெளித்தார்கள்.  

சமஸ்கிருதம் தமிழுக்கு செய்த நாசங்கள் கொஞ்சமா நஞ்சமா? தமிழில் இருந்த ஊர் பெயர்களை எல்லாம் சமஸ்கிருதமாக்கினார்கள். குடமூக்கு கும்பகோணம் ஆனது, திருச்சிற்றம்பலம் சிதம்பரம் ஆனது, திருமறைக்காடு வேதாரண்யம் ஆனது, திருமுதுகுன்றம்  விருத்தாசலம் ஆனது, புளியந்தோப்பு  திண்டிவனம் ஆனது,  குரங்காடுதுறை கபிஸ்தலம் ஆனதும் சமஸ்கிருதத்தினால்தானே? மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த நிபந்தனையை நீதிக்கட்சி வென்று எடுத்தது. இன்று வழக்கத்தில் இல்லாத இந்த செத்த மொழிக்கு சிங்காரம் செய்ய முயல்வது ஏன்?

- தங்க.சத்தியமூர்த்தி

Comments

10 comments

10
விஜயகுமார்
தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் சத்தியமூர்த்தி , இறந்த மொழிக்கு சிங்காரம் தேவையில்லைதான் ஆனால் , இறந்து கொண்டிருக்கும் ஒரு மொழியை பேனும் முயற்சிக்கு நீங்கள் எல்லாம் சாவுமணி அடித்து அதை சமாதி ஆக்கனும் என்று துடிக்கிறீர்கள் என்று தான் புரியவில்லை. இந்த உலகில் அழிந்து கொண்டிருக்கும் தாவரங்கள் , உயிரினங்கள் போன்றவற்றை காப்பாற்றமல் விட்டுவிட்டால் என்ன ஆகும் ?
Ram
செத்தவன்குண்டியில் உப்புதிரி வைத்தமாதிரி...செத்த மொழிக்கு ..சிங்காரம்...
பிற மொழிகளை அழிக்க உருவான சமற்கிருதம், தோன்றிய வேகத்தில பாடையில் போயே புதை குழியில் தானே படுத்துகொண்டது...தமிழ் போன்ற மொழிகளில் இருந்த நல் இலக்கியங்களை சமற்கிருதத்தில் மொழி பெயர்பு செய்துகொண்டு...மூல நூல்களை அழித்தார்கள் ...இன்று செத்தமொழி பண்பாட்டு மொழி ...என்ன கதை.....தமிழ் மொழி உயிருள்ள மக்களால் பேசப்படும் ஒரு உன்னத மொழி..உலகில் உள்ள பல நாடுகளில் பேசப்படுகிறது...
தோழர் விஜயகுமார் அவர்களே, இதில் தவறாக புரிந்துகொள்ள எதுவும் இல்லை. சமஸ்கிருதம் ஒன்றும் தாவரமோ, உயிரினமோ அல்ல. தமிழை அழித்ததில் பெரும் பங்கு சமஸ்கிருதத்துக்கு உண்டு. வெறும் பதினான்கு ஆயிரம் பேர் மட்டுமே பேசக்கூடிய இந்த மொழிக்கு மக்களின் வரிப் பணத்தில் அலங்காரம் தேவையா?

சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழமுடியும். சுரண்ட முடியும். நம்மை கீழ் சாதி மக்களாக ஆக்க முடியும். அவன் பிராமணனாக இருக்க முடியும். சமஸ்கிருதத்தின் நலிவு, பார்ப்பன ஆதிக்கத்தின் நலிவு. அதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ சாக்கிரதையாக காரியம் ஆற்றுகின்றனர் - பெரியார்
chandru
I completely agree with VIJAYA KUMAR..
and i would like to ask admin...when so many of our tamil brothers were killed in sriLanka ..what our people did?????
our government???????
Vijai
Dear Chandru,

"What our people did?"

What did you do? Sit and post comments like these and throw stones on the government. Why didn't you go to the battlefield and fight for our Tamil brothers? Grow up buddy.

Moreover, it's not the topic of Sri Lanka to be discussed here and the discussion is about Sanskrit.
chandru
Beloved Brother,
I have done what I have to do for our tamil brothers you will come to know one-day .. I am one among Tamil loving human. I just felt what they did ? political parties on that day so many of my brothers died. You kindly ask yourself to you.. You will definitely know what they have done is wrong. Now coming and shouts at other language speaking poor people... Like poosari... Its not fair brother. I think you know better than me. Sanskrit its a old language that's all. No body can kill any language. Because as we love tamil they do love love their mother tongue. Nothing wrong in it brother.i am very happy that you replied me.
Thank you.
Please be in touch.
Vazhga tamil.
shiva
இன்னும் அடுத்த தலைமுறையில் பாருங்க... தமிழ் நாட்டில் நல்ல தமிழ் பேசுபவர்கள் இருக்க மாட்டார்கள்... இப்பொழுதே பலருக்கு தமிழ் எழுத படிக்க வராது... தமிழும் தானாகவே அழிந்து விடும்...
shiva
நீ செத்துபோன பெரியாருக்கு இன்னும் மாலை அணிவிச்சு கொண்டாடுறா
shiva
Beloved Brother,
I have done what I have to do for our tamil brothers you will come to know one-day .. I am one among Tamil loving human. I just felt what they did ? political parties on that day so many of my brothers died. You kindly ask yourself to you.. You will definitely know what they have done is wrong. Now coming and shouts at other language speaking poor people... Like poosari... Its not fair brother. I think you know better than me. Sanskrit its a old language that's all. No body can kill any language. Because as we love tamil they do love love their mother tongue. Nothing wrong in it brother.i am very happy that you replied me.
Thank you.
Please be in touch.
Vazhga tamil.

மேலே ஒருத்தன் எழுதி இருக்கான்.... தமிழ் லவ் வராம்..... இந்த லெட்டர் கூட தமிழில் எழுதல.....ஆங்கிலத்தில் எழுதி இருக்கான்... அதனால் சொல்கிறேன்... தமிழ் தானாகவே மறைந்து விடும்... எப்போ... அடுத்த தலைமுறையில்.
Siva
கனவு காண்பது உங்கள் உரிமை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.