தொடர்புடைய படைப்புகள்

உச்ச நீதி மன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் நியமனக் குழுவில் (collegium) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மத சிறுபான்மையினரும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறி உள்ளனர். மதுரையில் 18.1.2016 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய நீதிபதிகள் பி.ஆர்.சிவக்குமாரும், டி.பரந்தாமனும் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட நாடாளு மன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படும் போது, அச்சட்டங்கள் செயல் படுவதைக் கண்காணிக்கும் அதிகாரம் கொண்ட நீபதிகளை நியமிப்பதில் ஏன் பின்பற்றப்படுவது இல்லை என்று வினாக்களை எழுப்பினர். இன்று பதவி வகிக்கும் 1,200க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 18 பேர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி சிவக்குமார், இவ்வாறு நீதிபதி நியமனங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் புறக்கணிக்கப் படுவதை உயர்நிலைத் தீண்டாமை என்று கூறினார். இந்த உயர்நிலைத் தீண்டாமையை ஒழிப்பதற்கு நீதிபதிகள் நியமனக் குழுவில் வலிமையான எண்ணிக்கையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் இடம் பெற வேண்டும் என்றும் கூறினார்.

supreme court 255மேலும் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரான முறையிலும், களங்கம் கற்பிக்கும் விதத்திலும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இட ஒதுக்கீட்டையும் ஊழலையும் ஒப்பிட்டுப் பேசியதைச் சுட்டிக் காட்டிய அவர் நீதித் துறையின் மனநிலை இவ்வாறு இருப்பது நாட்டிற்கு நல்லது அல்ல என்று கூறினார்.

நீதிபதி ஹரிபரந்தாமன் பேசுகையில், இட ஒதுக்கீடு திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கும் வழியில் உள்ள தடைக் கல் என்ற கருத்து முழுக்க முழுக்க அபத்தமானது என்று கூறினார். அதுவும் கல்வி வணிகமயமாக்கப் பட்டு உள்ள இக்காலத்தில் இக்கருத்தை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது வியப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார். இறுதியாக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் (Scoundrels) என்று கூறிய அவர், இந்து மதம் அடிப்படையில் மாற்றம் அடையாத வரை இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்பட்டே ஆக வேண்டும் என்று கூறினார்.

திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கத் துப்பற்ற பொதுப் போட்டி முறைக்கு எதிராகவும், திறமைசாலிகளை ஓரளவிற்குத் தேர்ந்தெடுக்கும் இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆதரவாகவும் நீதிபதிகள் போர்க் கொடியை உயர்த்தி இருப்பது ஒரு வரவேற்கத் தகுந்த முன்னேற்றமே. நீதிபதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளுக்காகப் போராட்ட களத்திற்கு வழி வகுக்கும் போது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் மவுனம் சாதிப்பது ஏன்?

திறமையற்றவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவதை முற்றிலும் ஒழித்துக் கட்ட, பொதுப் போட்டி முறையையே முற்றிலும் ஒழித்து விடவேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும், அனைத்து நிலைகளிலும் கல்வியையும் வேலை வாய்ப்புகளையும், இதர பணிகளையும் விகிதாச்சாரப் பங்கீடு முறையில் பிரித்து அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அனைத்து வகுப்பிலும் உள்ள திறமைசாலிகள் உயர்நிலைகளிலும், அனைத்து வகுப்பிலும் உள்ள திறமைக் குறைவானவர்கள் அடுத்த நிலைகளிலும் வேலை செய்யும் சூழ்நிலை உருவாகும். எந்த வகுப்பு மக்களும் மற்ற வகுப்பு மக்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்துக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழாது.

பொது மக்களே! நீங்கள் மவுனம் சாதிப்பதை விட்டு விட்டு, உங்களிடம் வாக்கு கேட்க வரும் வாக்கு வேட்டை அரசியல் கட்சிகளிடம் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்தும் அரசியல் கட்சிக்கே வாக்களிப்பதாகக் கூறுங்கள். மற்றவர்களை அண்டவே விடாதீர்கள்.

வாக்கு வேட்டை அரசியல் கட்சியில் இணைந்து இருக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! உங்கள் கட்சித் தலைவர்களிடம் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைக் கட்சியின் முதல் கொள்கையாக ஆக்கும்படி கேளுங்கள். அவ்வாறு செய்ய மறுக்கும் கட்சிகளில் தொடர்ந்து இருப்பது உங்கள் குழந்தைகளுக்குச் செய்யும் துரோகம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளுக்காகப் போர்க் கொடி உயர்த்தி இருக்கையில், பொது மக்கள் தங்க் மவுனத்தைக் கலைத்து விட்டுத் தெருவில் இறங்கிப் போராடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.2.2016 இதழில் வெளி வந்துள்ளது)

Comments

9 comments

9
Manikandan
உங்களின் இந்த கருத்து முட்டாள்தனமான ஒன்று... இட ஒதுக்கிடு என்பது சமூகத்தில் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் முன்னேறுவதற்காக ஒரு தற்காலிகக ஏற்பாடாக கொண்டு வந்தார்கள் ஆனால் அரசியல்வாதிகள் அதை நிரந்தரம் ஆக்கிவிட்டார்கள். இதன் மூலம் திறமை புறக்கணிக்கப்பட்டு ஜாதி மதம் அடிப்படையில் நியமனம் செய்வதற்கு வழி வகுக்கிறது. என்னை கேட்டால் கல்விக்கு மட்டுமே இட ஒதுக்கிடு இருக்க வேண்டும் அதன் பிறகு அனைத்திலும் திறமை மட்டுமே பணி நியமனத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். கல்வி இட ஒதுக்கிடு கூட பொருளாதார நிலையை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கிடு கூடாது. +2வில் 1102 மதிப்பெண் வாக்கிய ஒரு மாணவனுக்கு நல்ல கலூரியில் இடம் இல்லை காரணம் அவன் முன்னேறிய வகுப்பை சேர்ந்தவன் ஆனால் பொருளாதரத்தில் பின் தங்கியவன் அதேசமயம் 950 மதிப்பெண் வாங்கிய SC ST சேர்ந்த ஒரு மாணவனுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கிறது இத்தனைக்கும் அந்த மாணவன் பொருளாதாரத்தில் நல்ல வசதி படைத்தவன். இதில் முன்னேறிய வகுப்பை சேர்ந்த அந்த மாணவனுக்கு திறமை இருந்தும் அநிதி இழைக்கபடுகிறது.
குமாரசாமி
மனு மேல் தட்டைச் சார்ந்த மூன்று பிரிவினரைத் தவிற பிறருக்கு கல்வியை மட்டும் தடை செய்ய வில்லை. உணவில் பருப்பையும், எண்ணையை யும் சேர்த்தே தடை செய்தான். சுமார் 2000 வருடங்கள் இந்த தடை நடை முறையில் இருந்தது நணபர் எழுதுகிறார் ஒரு தற்காலிக ஏற்பாடாக கொண்டு வந்தார்கள் ஆனால் அரசியல் வாதிகள் அதை நிறந்தரம் ஆக்கி விட்டார்கள் என்று வருந்துகிறார். அதைக் கொண்டு வந்தவர்களும் அரசியல் வாதிகள்தான். 2000 வருட பாதிப்பை 10 வருடத்தில் சரி செய்ய முடியும் என்று ஏமாற்றப் பார்த்தார்கள். அவர்களால் ஏமாற்ற முடியவில்லை. ஆனாலும் தந்திரமாக இன்றும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 1102ம் 950ம் சினிமா பாணியிலான எடுத்துக்காட்டுகள். இந்த 950 பாதாளத்தில் இருந்து வந்தவனஎடுத்த மதிப்பெண். ஆகாயத்தில் உள்ளவன் 1102 அல்ல 1200 எடுக்க வேண்டும். அந்த 1102 க்கு முன்னால் அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பதையும் இவர்கள் சொல்வதில்லை. -கீற்றுவுக்குஇடமிருந்தால் சுமார் 30 வருடங்களுக்கு முன் ஆரல்வாய் மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில்பி.சி. மாணவர் ஒருவர் படித்தார் வசதியானவர், அதனால் கல்லூரி கட்டணம் கிடையாது. ஆனால் அவர் காரில்தான் வருவார். டிரைவர் பகல் முழுவதும் காத்திருந்து மாலையில் அவரை அழைத்துச் செல்வார். ஒருவனுக்காகாக கார் அனுப்பும் அந்த குடும்பம் கல்லூரிக் கட்டணம் செலுத்துவதில் சலுகை என்பது எவ்வளவு பெரிய அநீதி என எழுத்தாளர் சுந்தர ராமசாமி, -இந்த கடிதம் எழுதியவரைப் போலவே அன்று அவரது சன்னிதானத்தில் கறி மிகவும் வருந்தினார். இந்த மாணவத் தகவலை அ.கா. பெருமாள் சொல்லி இருக்கலாம் என்பது எனது ஊகம். இவர்கள் தங்கள் அறிவை இப்படித்தான் சமூகத்திற்கு எதிராகப் பயன் படுத்துவார்கள். திருந்தவே மாட்டார்கள்.
: இராமியா
Dear Mr.Manikandan,
Kindly read the article given in the following link.
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26631-2014-06-03-06-34-45
Try to understand that getting marks is not criterion for talent. In the article given in the above link it has been explained with evidence that only the forward community people get seats though they do not deserve. Kindly read the articles patiently and try to understand. the contents.
Manikandan
குமாரசாமி: இன்னும் எத்தனை காலத்திற்கு சார் மனு தர்மத்தை பிடித்து தொங்கி கொண்டு இருக்க போகிறிர்கள், பாவம் மனு அவரை விட்டு விடுங்கள். இன்று இருப்பது இரண்டே இரண்டு ஜாதிகள் தான் ஒன்று பணக்கார ஜாதி இன்னொன்று ஏழை ஜாதி.
Manikandan
இராமியா: உங்கள் வார்த்தை சரி என்றே வைத்து கொள்வோம், திறமையை அளவிடும் கருவி எது, தற்போது போட்டி தேர்வுகள் தான் திறமையை அளவிடும் கருவியாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

அந்த தேர்வை ஜாதி அடிப்படையில் இல்லாமல் முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் எந்த ஜாதியாக இருந்தாலும் திறமையை நிருபித்து வேலையை பெறட்டும்...

நீ என்ன மதிப்பெண் வாங்கினாலும் நீ எந்த தேர்வில் வெற்றி பெற்று உன் திறமையை நிரூபித்தாலும் நீ உயர் வகுப்பில் பிறந்தவன் அதனால் உனக்கு வாய்ப்பு மறுக்கபடுகிறது என்று சொல்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை. நீ இந்தியன் அதனால் இந்த நாட்டில் உனக்கு அனைத்திலும் சரி சமாக வாய்ப்பு வழங்கபடும் என்பது தான் நியாயமாக இருக்கும். பிறந்த ஜாதியை அடிப்படையாக வைத்து ஒருவனுக்கு வாய்ப்பு மறுக்கபடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

இலங்கையில் கூட தமிழர்கள் என்ன மதிப்பெண் வாங்கினாலும் அவர்களை விட குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய சிங்களவர்களுக்கு சலுகைகளை கொடுத்ததால் தானே தீவிரவாதம் வளர்ந்தது. இலங்கை தீவிரவாதத்தை நியாயம் சரி என்று சொல்லும் நீங்கள் ஏன் இந்தியாவில் மட்டும் இட ஒதுக்கிடு ஜாதி மதம் என்று சொல்லிக்கொண்டு திரிகிரிர்கள்.
: இராமியா
Mr.Manikandan, I have to pity you for your poor understanding. I have clearly proved that prevailing open competition system is simply incompetent to select deserving candidates. But you are calling to prove the talent in the present open competition system. I have suggested proportionate sharing of all opportunities at all levels by all classes of people,. This would facilitate to select deserving candidates from respective communities at all levels. Why are you refuse to understand this idea?
குமாரசாமி
மனு செத்துவிட்டான், புசியமித்திரன் செத்துவிட்டான் என்று நீங்கள் சொன்னாலும் இன்றைய நடைமுறை எல்லோரும் அர்ச்சகராக முடியாது-முறையாக படித்திருந்தாலும். நீதி முறைகளை மீறியும் தீட்சிதர்கள் தில்லை கூத்தன் அம்பலத்தை வாரிச்சுருட்டி முழுங்க முடியும். மனு செத்துவிட்டான் என்பதற்காக கௌரவக் கொலைகள் நின்றுவிட்டதா?.உங்கள் வசதிக்காக மனுவை தூக்கி ஓரமாக வைப்பீர்கள், தேவைப்படும்போது நடுவீட்டில் எந்த கூச்சமும் இல்லாமல் உங்களால் வைத்து சீராட்ட முடியும். இது உங்கள் திறமையல்ல. இதன்பெயர் கயமை.
Manikandan
நீங்கள் நீதிபதிகளை நியமிக்கும் நியமனக் குழுவில் ஜாதிகளை சேர்க்க வேண்டும் என்று சொல்வது நீதித்துறை மேலும் பலவினபடுத்த பார்க்கும் ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன். நீதிபதிகளை நியமிக்கும் நியமனக் குழுவில் ஜாதி மதம் என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது. மேலும் நீதிபதிகளை நியமிக்கும் நியமனக் குழு ஒரு நீதிபதியை நியமிப்பதற்கு முன் அந்த நீதிபதி பற்றி முழு விவரமும் அறிந்துகொள்ள வேண்டும், முன்பு ஒரு நீதிபதியை பணி மூப்பின் அடிப்படையில் நியமிக்க பார்த்தார்கள் ஆனால் அந்த நீதிபதி தீவிரவாதிகளின் கையாளாக செயல்பட்டது பிறகு தான் தெரிய வந்தது. நீதிமன்றம் வலுவாக இருக்க வேண்டியது நாட்டின் நலனுக்கு நல்லது அதை பலவினபடுத்த பார்ப்பது நாட்டை அழிவில் தள்ளுவதற்கு சமம்
Manikandan
குமாரசாமி: ஊருக்கு இளிச்சவாயன் ஹிந்து மதக்காரன் தானே அதனால் தான் இப்படி பேசுகிறிர்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சில ஆகம விதி கட்டுபாடுகள் உள்ளது யார் ஒரு கோவிலில் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு கட்டுபாடுகள் உள்ளன அதை கடைபிடிப்பதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

எனக்கு ஒரு கேள்வி அது ஏன் உங்களை போன்ற ஆட்கள் இஸ்லாமிய மத வழிபாட்டிலோ அல்லது கிறிஸ்துவ மத வழிபாட்டிலோ தலையிடாமல் ஹிந்து மத வழிபாட்டில் மட்டும் தலையிடுகிரிர்கள்...

இன்றைய கோவில்களில் ஆகம விதி கட்டுபாடுகள் கடைபிடிக்கபடுகிறதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்பேன். அதுவும் மத்திரத்தை கூட தவறாக ஏனோ தானோ என்று தான் பெரும்பாலான கோவில்களில் சொல்கிறார்கள்.... இந்த மாதிரியான விஷயங்களை சுட்டி காட்டி அதை சரி செய்ய வேண்டும் அதற்காக தகுதி வாய்ந்த அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருந்தால் உங்களை பாராட்டலாம். ஆனால் அதை செய்யாமல் ஒரு குறிப்பிட்ட ஜாதியை ஒரு குறுப்பிட்ட மதத்தின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசுவதால் உங்களை போன்ற ஆட்கள் எதை சொன்னாலும் அதில் ஏதோ ஒரு தீய உள்நோக்கம் இருப்பது போலவே தெரிவதை தவிர்க்க முடியவில்லை.

அது ஏன் சார் சிதம்பரம் நடராஜர் கோவிலை குறி வைத்து உங்களை போன்ற ஆட்கள் பேசுகிறார்கள் அதில் எதாவுது உள்நோக்கம் இருக்கிறதா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.