"உ.வே.சாமிநாதய்யர் மட்டும் இல்லை என்றால் தமிழ் இலக்கியங்கள் எதுவுமே நமக்குக் கிடைக்காமல் அழிந்து போயிருக்கும். ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியக் கருவூலங்களை எல்லாம், அவர் அச்சில் பதிப்பித்துக் கொடுத்ததால் தான், இன்று நம்மால் தமிழ் இலக்கிய நூல்களைப் படிக்க முடிகிறது; பாதுகாத்து வைக்க முடிகிறது." என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வேறுபாடு தெரியாத வகையில் பலரும் பேசுகின்றனர். அவ்வளவு பெரிய தொண்டு செய்தவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவது இல்லை என்று சிலர் கோபாவேசமாக உறுமவும் செய்கின்றனர்.

ஆறுமுக நாவலர்இவை எல்லாம் சரியா? நிச்சயமாக இல்லை. உ.வே.சாமிநாதய்யர் பிறப்பதற்கு முன்னாலேயே பல பழந்தமிழ் இலக்கியங்கள் பத்தகங்களாக அச்சு வடிவில் பதிப்பிக்கப்பட்டு விட்டன.

8.12.1822 அன்று பிறந்து 5.12.1879 அன்று மறைந்த, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் 1849ஆம் ஆண்டில், சென்னையில், சூளாமணி நிகண்டுரையை அச்சில் பதிப்பித்தார். (உ.வே.சா. 19.2.1855இல் தான் பிறந்தார்.) அதன் பின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படை, திருவாசகம், திருக்கோவையார், சிவஞான போதம், பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம், வாக்குண்டாம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் புத்தக வடிவில் அச்சில் பதிப்பித்து இருக்கிறார். இவை யாவும் உ.வே.சா. அச்சுத் தொழிலைப் பற்றிச் சிந்திக்கும் முன்னரே பதிக்கப்பட்டவை.


12.9.1832 அன்று பிறந்து 1.1.1901 அன்று மறைந்த யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை, நீதிநெறி விளக்கம் எனும் நூலை 1859ஆம் ஆண்டில் அச்சில் பதிப்பித்து வெளியிட்டார். மேலும் தொல்காப்பியம் பொருளகராதி, வீரசோழியம், இறையனார் அகப்பொருள் உள்ளிட்ட பத்து தமிழ் இலக்கிய நூல்களை அச்சில் பதிப்பித்தார். இவையும் சென்னையில் தான் பதிப்பிக்கப்பட்டன.

அதுவும் தொல்காப்பியப் பொருளகராதி நூலின் சுவடிகளைத் தொகுக்க அவர் மிகுந்த சிரமங்களைப் பட்டிருக்கிறார்.

18.1.1854 அன்று பிறந்து 23.3.1922 அன்று மறைந்த, இலங்கை, சுண்ணாகம் குமாரசுவாமிப் புலவர் 1886இல் தொடங்கி 1911 வரையில் யாப்பருங்கலக்காரிகை, ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, உள்ளிட்ட பதினான்கு நூல்களை அச்சில் பதிப்பித்து உள்ளார்.

இவர்களுள் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் பதிப்பித்த காலங்களில், சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சில் கொண்டு வரும் பணி ஒரு தொழிலாக / வணிகமாக வளர்ந்து இருக்கவில்லை. அவர்கள் இதை ஈக உணர்வு கொண்ட தொண்டாகவே செய்தனர்.

குமாரசுவாமிப் புலவர்தமிழ் இலக்கியங்களை அச்சு வடிவில் கொண்டு வந்த பின் அப்பணி ஆதாயம் அளிக்கும் தொழிலாக / வணிகமாகப் பரிணமித்தது. இந்நிலையில் தான் உ.வே.சாமிநாதய்யர் அச்சுத் துறையில் புகுந்தார். அவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அச்சிட்டார். உண்மையே. அதற்கு ஈடான பொருளாயதப் பயனையும் அடைந்தார். பழந்தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளை அரும்பாடு பட்டுச் சேர்த்தார். அதற்கான கைம்மாறும் கிடைக்கவே செய்தது. அதாவது அவர் ஒரு வெற்றிகரமான பதிப்பு வணிகராக இருந்திருக்கிறார்.

ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் தமிழ் இலக்கியங்களை அச்சில் பதிப்பித்தல் எனும் புத்தம் புதிய முயற்சியில் இறங்கி, எவ்விதக் கைம்மாறும் எதிர்பார்க்காமல் தொண்டு புரிந்தனர். இப்பணிக்கான பாதையை அமைத்தது மட்டும் அன்றி நன்றாகச் செப்பனிட்டு எளிமையாகவும் ஆக்கி வைத்தனர்.

ஆனால் நமது கல்வி முறையும், ஊடகங்களும், ஏதோ உ.வே.சாமிநாதய்யர் தான் தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காப்பாற்றித் தந்தவர் என்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்து இருக்கின்றன.

உண்மையில் ஓலைச் சுவடியில் இருந்து, தமிழ் இலக்கியக் கருவூலங்களை, அச்சு வடிவில் கொண்டு வரும் பணியைத் தொடங்கி வைத்ததும், அதற்கான பாதையை அமைத்தது மட்டும் அன்றிச் செப்பனிட்டு எளிமையாக்கி வைத்ததும் ஆறுமுக நாவலரும் சி.வை.தாமோதரம் பிள்ளையுமே ஆவர். உ.வே.சாமிநாதய்யர் அந்த எளிமையாக்கப்பட்ட வழியில் சென்று பல நூல்களைப் பதிப்பித்தார். உ.வே.சா. அவ்வாறு செய்திராவிட்டால் வேறு யாராவது அதைச் செய்து இருப்பார்களே ஒழிய, அப்படியே அழிய விடப்பட்டு இருக்காது. ஏனெனில் அன்றைய தேவையும் (need) கேட்பும் (demand) அவ்வாறு உருவாகி இருந்தன.

ஆனால் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் இத்தொண்டைச் செய்திராவிட்டால், இன்று நமக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைக்காமல் போயிருக்கும்.

ஆகவே உ.வே.சாமிநாதய்யர் தான் தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றித் தந்தார் எனும் கருத்துருவம் ஒரு அப்பட்டமான மாயையே ஒழிய அதில் இம்மி அளவும் உண்மை இல்லை. பார்ப்பனர்கள் ஒரு சிறிய செயலைச் செய்தாலும் ஆகா! ஓகோ! என்று புகழ்வதும், மற்றவர்கள் அரிய பெரிய செயல்களைச் செய்தாலும் அவற்றை மறைப்பதும், மறைக்கவியலா இடங்களில் சிறுமைப்படுத்துவதும் பார்ப்பனர்களின் பொதுநிலையே.

மேலும், செய்த தொண்டின் அளவிற்குப் பெயரும் புகழும் அவருக்குக் கிடைப்பது இல்லை என்று இம்மி அளவும் நாணம் இன்றிப் பரப்புரை செய்கிறார்கள். ஆனால் அவர் செய்த பணிக்கு அதிக பட்சமாக எவ்வளவு பெயரும் புகழும் அடையலாமோ அதைவிடப் பல நூறு மடங்குகள் அடைந்து இருக்கிறார். உண்மையில் ஆறுமுக நாவரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் தான் அவர்களுக்கு உரிய புகழில் இம்மி அளவும் பெறவில்லை என்பது மட்டும் அல்ல; அடியோடு மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

- இராமியா

Comments

18 comments

18
vimalnath
criticisam with ill motive by writer which is not good and standered. cheep palitics.
ஸ்ரீரசா
இராமியாவின் கட்டுரையே முழுக்க முழுக்கக் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் பதிப்புப்பணி எத்தனை மதிப்பு மிக்கதோ அத்தனை மதிப்பு மிக்கதே உ.வே.சா.வின் பணியும். உங்கள் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் அவரை வெறுமனே பதிப்பு வணிகம் செய்தவர் என்றும், அவரது பதிப்புப்பணிகளை நிராகரிப்பதும் தன்னுணர்வுடன் கூடிய முட்டாள்த்தனமே அல்லாது வேறல்ல. இவரை உயர்த்துவதற்காக அவர்களைத் தாழ்த்துவதோ அல்லது கண்டு கொள்ளாததோ எவ்வளவு கீழ்த்தரமானதோ அதே போல் தான் அவர்களை உய்ர்த்துவதற்காக இவரைத் தாழ்த்துவதும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பங்கு உண்டு. இவ்வாறு மேல் கீழாக அடுக்கும் முறைதான் பிராமணியக் கருத்தியலின் சாராம்சம். கட்டுரையாளர் பிராமணியக் கருததியலை எதிர்க்கிறேன் பேர்வழி என்று தானும் அதிலேயே நின்று நிலைக்கிறார். மேலும் போதிய பொருளாதாரத் தரவுகள் இல்லாமல் அவரை வணிகர் என்று குறிப்பிடுவது கட்டுரையாளரின் சிறுபிள்ளைத் தனத்தையே காட்டுகிறது.
paranjothi
Mr Vimalnath!Have you heard about Arumuga Navalar and Damodaram Pillai earlier?If not who is responsible for not highlighting their contributions?And which act is cheap politics?
Ramea
விமல்நாத் அவர்கள் தெரிவித்த கருத்துக்குச் சரியான எதிர் வினா தொடுத்துள்ள பரஞ்சோதி அவர்களுக்கு நன்றி.

ஸ்ரீரசா அவர்களே! ஆறுமுக நாவலரும், சி,வை,தாமோதரம் பிள்ளையும் செய்த பதிப்புத் தொண்டுக்கு உ.வே.சா.வின் தொண்டும் நிகரானது என்ற கூற்றில் ஆறுமுக நாவலரும், சி,வை,தாமோதரம் பிள்ளையும் தான் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பதில் முனனோடிகள் என்ற கருத்து காணக் கிடக்கிறது. அப்படி இருக்க, பாடப் புத்தகங்களிலும், பெரும் ஊடகங்களிலும் இருவருடைய பெயர்களை இத்துறையின் முன்னோடிகள் என்று ஏன் காட்டப்படுவது இல்லை? இந்த உண்மையை எடுத்துக் காட்டினால் அதற்குப் பெயர் காழ்ப்புணர்ச்சியா?

உ.வே.சா.வின் சுய சரிதையைப் படித்துப் பாருங்கள். அவர் பதிப்பு வேலை செய்வதற்கு உரிய கைம்மாறு பெற்றாரா அல்லது ஈக உணர்வுடன் தான் செய்தாரா என்பது புரியும். என்னுடைய கட்டுரையைச் சிறு பிள்ளைத்தனம் என்று கூறுவதன் மூலம் நீங்கள் சிறு பிள்ளை என்று காட்டிக் கொள்கிறீர்கள்.

இதற்கெல்லாம் பொருளாதாரத் தரவுகளைக் கேட்கும் நண்பரே! தகுதியும் திறமையும் அனைத்து வகுப்பு மக்களிடமும் இருக்கையில் அதிகார மையங்களில் மிகப் பெரும்பாலும் பார்ப்பனர்களே தேர்ந்து எடுக்கப்படுவதன் காரணத்தை என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? அதைத் தடுத்து, அனைத்து வகுப்பு மக்களிடமும் தகுதியும் திறமையும் இருக்கையில், அனைத்து வகுப்பு மக்களும் மக்கள் தொகையில் அவரவர் விகித்திற்கு ஏற்ப அதிகார மையங்களில் இடம் பெறுவதற்கான வழி வகைகளைப் பற்றி யோசித்து இருக்கிறீர்களா?

நான் உண்மையில் தொண்டு செய்தவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறேன். வணிகம் செய்தவரை ஈகம் செய்தவர் எனத் தவறாகப் புனைந்து காட்டுவதையும் சுட்டிக் காட்டி இருக்கிறேன். இதில் நான் யாரையும் உயர்த்திக் காட்டவும் இல்லை; தாழ்த்திக் காட்டவும் இல்லை. ஆகவே இது நிச்சயமாகப் பார்ப்பனக் கருத்தியல் அல்ல.
ஸ்ரீரசா
பாடப்புத்தகப் பிரச்சனை அல்லது அதிகார மையப் பிரச்சனைகள் வேறு.. உங்கள் கட்டுரை உ.வே.சா.வின் உழைப்பை நிராகரிக்கிறது. ஈக உணர்வுடன் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் செயல்படவில்லை.. அவர்களுக்கும் ஒரு நோக்கம் உள்ளது.. அவரவர்களுக்கான பொருளாதாரப் பின்னணி வேறு... ஆறுமுக நாவலரின் சைவப் பின்னணியும் சைவ மடங்களின் பின்னணியும் வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். அவரது வரலாறு இப்படிக் கூறுகிறது, "சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.

தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்" அவருக்குச் சைவ சமயம் சார்ந்த நூல்களைப் பதிப்பித்து சைவ சமயத்தைத் தழைத்தோங்கச் செய்வதே வாழ்நாள் பணி.. அதற்கேற்ற வகையில் அந்த நோக்கங்களுக்கான பதிப்புப் பணியைச் செய்தார்.. தமிழ் மற்றும் தமிழருக்கான பொது நோக்கம் கருதியல்ல.. என்றாலும் பதிப்பின் வரலாற்றில் முன்னோடியாக என்ன நோக்கத்திற்காகவேனும் அவர் நின்று நிலைக்கிறார்.. அதுபோலவே சி.வை.தாமோதரம் பிள்ளையின் பொருளாதார பலமும் வலுவானதே... ஆனால் பொருளாதார நிலை வலுவாக இருந்தோரெல்லாம் தமிழ்ப்பணியாற்றவில்லை என்பதையும் சேர்த்தே நோக்க வேண்டும்.. ஆனால் அதற்காக உ.வே.சா.வை வெறும் வணிகத்துக்காகப் பதிப்பித்தான் என்று தாங்கள் கூறுவது நிச்சயம் சிறுபிள்ளைத்தனமன்றி வேறென்ன? சீவக சிந்தாமணி போன்ற சமண இலக்கியங்களையும் தேடிப் பதிப்பித்த ஒருவரை இத்தகைய அற்ப அளவீடுகளைக் கொண்டு மதிப்பிடுவது எந்த வகையான நியாயம்? தலைப்பிலேயே ஒரு தாழ்த்துதலைச் செய்துவிட்டு.. தாழ்த்திக் காட்டவில்லை என்று வெட்டி நியாயம் பேசுவது முறையா?
Ramea
ஸ்ரீரசா அவர்களே! பாடப் புத்தகப் பிரச்சினையும் அதிகார மையப் பிரச்சினையும் எப்படி வேறாக முடியும்? தங்கள் சொற்படியே எடுதுத்துக் கொண்டாலும் ஆறுமுக நாவலரும் சி.வை.தாமோதரம் பிள்ளையும் தான் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பதில் முன்னோடிகள். உ.வே.சா. அவர்களைப் பின் பற்றினார். ஆனால் பாடப் புத்தகங்களில் ஏன் அப்படி இல்லை? யார் அப்படி இல்லாமல் செய்தார்கள்? ஏன் அப்படிச் செய்தார்கள்?

ஆறுமுக நாவலரும் சி.வை. தாமோதரம் பிள்ளையும் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பதன் மூலம் என்ன பொருளாயதப் பயனை அடைந்தார்கள்? உ.வே.சா. தன் பொருட்களை ஈகம் செய்தா தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார்? பதிப்புத் துறையில் இவர்களுடைய பணியில் வேறுபாடு இல்லையா?

தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தது பற்றிய வரலாற்றில் உ.வே.சா. மட்டும் தான் முழுக்க முழுக்க இடம் பெற்று இருக்கிறாரே? இது தவறு இல்லையா? இது தவறு என்பதை மக்களுக்கு எப்படிப் புரிய வைப்பீர்கள்?

ஆறுமுக நாவலரின் வருண அதர்ம சார்பை ஆதரித்து இங்கு எதுவும் எழுதப்படவில்லை. அப்படி வருண அதர்மத்தை ஆதரித்தாலும், அவர் பார்ப்பனர் அல்ல என்ற ஒரு காரணத்தாலேயே அவரை இருட்டடிப்பு செய்யும் பார்ப்பன மன நிலை தான் இங்கு எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது.

உ.வே.சா. பதிப்புப் பணியைச் செய்யவே இல்லை என்று சொல்லப்படவே இல்லை. அவர் தான் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து அழிவில் இருந்து காப்பாற்றினார் என்ற பொய்யுரை தான் மறுக்கப்பட்டு உள்ளது. இப்பணியை உ.வே.சா. செய்திரா விட்டால் வேறு யாராவது செய்து இருப்பார்கள். ஏனெனில் அத்தகைய தேவையையும் (need) கேட்பையும் (demand) ஆறுமுக நாவலரின், சி.வை.தாமோதரம் பிள்ளையின் பணிகள் உருவாக்கி இருந்தன.
vimalnath
dont treat arumuga navalar as agaist u ve sa . both are sons of tamil. we may high lite the novalar ,what is need to down light to u ve sa which is cheep politics. both are eyes of tamil litracy.
Ramea
Thiru.Vimalnath, Kindly read the article and the feed backs patiently. There is no statement available to the effect that Arumuga Navalar and U.Ve.Sa are against each other. This article highlights Brahmins attitude against all others.. Please search for answer to the question of Thiru.Paranjothi. You can find all points given in this article and my feed backs are correct.
குமாரசாமி
வெளியில் இருந்து வந்து தமிழாய்வில் ஈடுபடும் மாணவர்கள் வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்புக்கு அளிக்கிம் முன்னுரிமையை உ,வே,சா வுக்கு அளிப்பதில்லை. இவை பாடபேதங்கள் அடிப்படையில் அவர்கள் தேர்வு அமைகிறது. அடுத்ததாக அவர் பதிப்பித்த நூல்களுக்கு பெரிய அளவில் பணவுதவி கிடைத்து அனுப்பியவர்கள் செட்டிநாட்டவர்கள். சில வருடங்களுக்கு முன் நடந்தது, திணமணியில் அவரது பதிப்பில் வெளியான சிப்பதிகாரம் கிடைக்கவில்லை பணப்பிரச்சனையால் என்ற செய்தி யை தினமணி வெளியிட சுமார்1,60,000 ருபாயை தினமணி திரட்டிக் கொடுத்து. பண உதவிகள் வெளியில் இருந்து கிடைக்கும் விற்பனைப்பணம் அவரது பைக்கு போகும் என்றால் கட்டுரையாளர் கூற்று சரிதானே. பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அவர்களுடன் இணைந்து ஓலைச்சுவடிகளை டிஜிடல் மையில் ஆவணப்படுத்த முயன்றபோது ஐ.நா.வரை சிபாரிசுக்குப் போய்தான் அப்பணியைச் செய்ய முடிந்தது. அவர்களுக்கு பணமும் அவர்கள் தயாரிக்குஅவணத்திற்கு ஒருபடியும் அந்நூலகத்திற்கு அளித்துள்ளனர்.ஆனாலும் இவ்வாவணத்தயாரிப்பில் சரிபார்க்கும் போது ஏற்பட்ட சில ஐயப்படுகளை சரிசெய்ய அந்த ஆவணங்களை மீண்டும் பார்வை இட அந்நூலகத்தின் பொறுப்பாளரான அவரது பெயரன் அனுமதி அளிக்கவில்லை, மீண்டும் ஐ.நா. படையெடுப்பை பல்கலைகழகத்தால் செய்யமுடியவில்லை.அவரது பதிப்புகளில் அவரது சொந்த கருத்துக்களும் பாடபேதப் போர்வையில் ஊடுருவி இருப்பது தக்க சான்றுகளுடன் சொல்லப்பட்டபோதும் உயிருடன் இருந்த காலத்திலும், இப்பொதும் யாரும் வாய் திறப்பதில்லை.இன்றும் எந்த ஆய்வு மணவர்க்கும் அவரது நூலகத்தில் உள்ள சுவடிகளைப் பார்க்கஃம் அனுமதி இல்லைஸ்ரீஇராசா போன்றவர்கள் இதை அறிந்திர,உதாலும் அவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். கோடாலிகாம்புகளு தொடர்ந்து மரங்களை வெட்டிக்கொண்டுதான் இருக்கும் அதுதான் அதன் பண்பு ஒன்றும் செய்யமுடியாது.
ஸ்ரீரசா
ஐயா, குமாரசாமி அவர்களே, நானும் தமிழ் மாணவன்தான், தமிழ் ஆய்வாளன் தான்.. நீங்கள் குறிப்பிடும் சிக்கல்களை எதிர்த்த சிந்தனைகள், பேராட்டங்கள் என்பவை வேறு, உ.வே.சா.வைப் பதிப்பு வணிகர் என்று முத்திரை குத்துவது வேறு.. அவரை வைத்துப் பணம் பண்ணும் தலைமுறையினரின் நடவடிக்கைகள் வேறு... நீங்கள் ஏன் விவாதத்தை வேறு தளத்துக்கு இழுத்துச் செல்ல முயல்கிறீர்கள்.. அவரது பதிப்பில் உள்ள பாடபேதங்களை ஆய்வதும், மறுதலிப்பதும், உண்மைகளைக் கண்டறிவுதும் ஆய்வாளர்களின் வேலையும், உரிமையும் கூட.. அதைப்பற்றியெல்லாம் இங்கு என்ன? வையாபுரிப் பிள்ளையும் ஆய்வுக்கு அப்பாற்பட்டவரா? இல்லை முழு முற்றான உண்மைகளின் பாற்பட்ட ஆய்வை முன்வைத்தவரா? அவர்கள் சிறந்த ஆய்வாளர்கள் என்ற தகுதி எப்போதும் அவர்களுக்கு உண்டு. மாறாக அவர் பிறந்த சாதியை மனதிற்கொண்டு பிள்ளைமார் உளவியலையும், பண்பாட்டையும், தேவையையும், அவர் ஒரு ஆய்வு வணிகர் என்றும் அவரைச் சொல்வது எப்படி அபத்தமோ அப்படி ஓர் அபத்தமே கட்டுரையாளரின் முன்வைப்பும் அதற்குச் சப்பைக்கட்டுக் கட்டும் உம்மைப் போன்றவர்களின் ஆலாபணை
யும்...
Ramea
ஸ்ரீரசா அவர்களே!
ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தது ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்று தான் பாடம் சொல்லிக் கொடுக்கப்படுகிறதே ஒழிய அதன் பின்னால் அதை மேம்படுத்தியவர்களைக் குறிப்பிடுவது இல்லை. ஆனால் தமிழ் இலக்கியத்தை அச்சில் பதிப்பித்து அழிவில் இருந்து காத்தவர் உ.வே.சாமிநாதையர் என்று தான் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களே ஒழிய ஆறுமுக நாவலரைப் பற்றியும் சி.வை.தாமோதரம் பிள்ளையைப் பற்றியும் குறிப்பிடுவதே இல்லை. இது தவறு என்று தோன்றவில்லையா?

ஆகாய விமானத்தைப் பொறுத்த மட்டில் அதை மேம்படுத்தியவர்களைப் பற்றியும் கண்டு பிடித்தவர்கள் (inventors) பட்டியலில் குறிப்பிடுவது இல்லை. ஆனால் தமிழ் இலக்கியங்களைக் காத்தவர் என்ற பொய்யான பெருமை உ.வே.சா.விற்கு அளிக்கப்படுகிறது. அதிலும் அவர் தமிழ் இலக்கியங்களை அச்சில் கொண்டு வருவதில் எந்த மேம்பாடும் செய்யவில்லை. மேலும் அவருடைய பணியில் ஈகம் எதுவும் இல்லை. அவர் தம் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தார். அதை மறுக்கவில்லை. ஆனால் அவர் தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காப்பாற்றினார் எனும் பரப்புரை பொய் என்று தான் தெளிவாக்கப்படுகிறது.

உ.வே.சா. அச்சுப் பதிப்புத் தொழிலில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டார் என்று கூறுங்கள். ஆனால், அவர் தான் தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காத்தார் என்று கூற வேண்டாம்.
Ramea
குமாரசாமி அவர்களே! உ.வே.சாமிநாதையர் பழந்தமிழ் இலக்கியங்களை அச்சில் கொண்டு வரும் பொழுது உள்ளது உள்ளபடியே கொண்டு வராமல், அவருடைய இன வசதிக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களைச் செய்தார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அதன் விவரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவை தெரிந்தால் அவற்றையும் வெளிக் கொணரலாமே?

நன்றி.
குமாரசாமி
எனக்குமட்டுமல்ல இன்னும் நிறைய பேர்களுக்கு அவரது தேடல்கள் உழைப்பு முதலியவைகள் மீது மரியாதை உள்ள அளவிற்கு அவரது பதிப்புப் பணி மூலமாக அவரது குடும்பம் சங்கடப்படவில்லை. நன்றாகவே வாழ்தது என்பதும் தெரியும்.. அவருக்கு 60களில் கொடுக்கப்பட மரியாதைகள் இந்தஅடிப்பதையில்தான். ஆனால் சி.வை.தாமோதரன் பிள்ளை அவரகள் தனது சொந்த பணத்தைப்போட்டுத்தான் உ,வே.சா ஆற்றிய பணியை உ.வே.சா. முன்பே ஆற்றி யுள்ளார். இராமியா போன்றவர்கள் இதை எழுதக் காரணம் இன்றைய உ.வே.சா. நூலகம் தமிழ்நாட்டின், சொத்து. அந்த சொத்தை திரட்டியவர்- இலவசமாக- அவர். அதை இன்று ஆய்வு மாணவர்கள் கூட நுளைய முடியாத இடமாக உள்ளது. ஒரு பல்கலைக்கழகமே சிபாரிசுக்கு அலைந்த அவலமும் நடந்தது அதனால் அவர் தமிழ் தாத்தாவாக இருந்தாலும் ஊராரின் பணத்தில் அச்சடித்து உன் குடும்ப உலையில் போட்ட பிறகு தியாகம் பற்றி எப்படிப் பேசுகிறாய்? என கேட்கத் தோன்றுகிறது.இன்னும் இதுபோல பலர் எழுதக்கூடும். அதுவேறு விசயம் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள். அந்த சொத்தில் இன்னும் என்னென்ன நூல்கள் பதிப்பிக்காமல் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அவரின் வாரிசு இன்று செய்யும் அழிச்சாடியம் முழு அளவில் வெளியே தெரியவரும்போது இன்னும் நிறைய பேர்கள் இதுபோலவே பேசுவார்கள். இதன் முழுப்பரிமாணமும் தெரியவரும்போது நீங்களும் அணி மாறுவீர்கள்.
vimal raj
pleas find in page no 669 0f senthamizh agarathi, and read the" velli" and the tell who was cheng the tamil litrature? for his community benifit?
vimal raj
velliththambiran published tamil litratur as vellip padalkal. there is no evidence u ve sa did vellippathippu. pleas read tamil litrature without partiality of racial motive.
ஸ்ரீதர்
தாங்களே குறிப்பிட்டபடி உவேசாவுக்கு முன்பே பிறந்தவர்கள் செய்த தமிழ்த் தொண்டும், உவேசா செய்த தமிழ் தொண்டும் பாராட்டுக்கு உரியவனவேயன்றி, தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கல்ல. பார்ப்பனர்கள் கடந்த 100 வருடங்களாக இங்கு சந்தித்து வரும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றில் ஒன்றுதான் இம்மாதிரி தரம் தாழ்ந்த விமர்சனங்கள். ஏழ்மையிலிருந்தாலும் கல்வி சாதியைக்காட்டி மறுக்கப் படுதல், வேலை மறுக்கப் படுதல், ஊடகங்களின் கேலியும், கிண்டலும், சமூகப் பாதுகாப்பின்மை, பார்ப்பனப் பெண்களை தரம் தாழ்ந்து கேலி செய்தல் என பற்பல இன்னல்களை சந்தித்து வருகிறது பார்ப்பனர் சமூகம். சாதி வேற்றுமைகளைக் களைய முன் நின்றது பார்ப்பனர்களே. தற்போது ஹரிஜனங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்குக் காரணம் யார் என தங்களால் வாய் திறந்து கூற முடியுமா? சம்பந்தமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களைத் திட்டுவது, கையாலாகாதவர்களின் தாழ்வு மனப்பான்மையாகும். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுற்றியுள்ள மாயவலை அறுந்து தமிழர்கள் விசாலமான உலகப் பார்வையடைய வாழ்த்துக்கள்.
இராமியா
தாங்களே குறிப்பிட்டபடி உவேசாவுக்கு முன்பே பிறந்தவர்கள் செய்த தமிழ்த் தொண்டும், உவேசா செய்த தமிழ் தொண்டும் பாராட்டுக்கு உரியவனவேயன்றி, தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கல ்ல.
இக்கட்டுரையில் உ.வே.சாமிநாதய்யர் பதிப்புத் தொழிலைப் பற்றி நினைப்பதற்கு முன்னாலேயே தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிற்குக் கொண்டு வரும் பணி தொடங்கி விட்டது என்பது எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது. ஆகவே உ.வே.சாமிநாதய்யர் தான் தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காப்பாற்றினார் என்று நிலவும் கருத்து, பொய் என்று கூறப்பட்டு உள்ளது. இதில் தரம் தாழ்ந்த விமர்சனம் எங்கே இருக்கிறது?

சரி! இது வரையில் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த முன்னோடிகள் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் தான் என்பது தெரியாமல் இருந்தவர்கள், இனி மேலாவது இப்போதைக்கு நிலவும் பொய்க் கருத்தை மாற்றி (தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்துகாப்பாற்றியவர்கள் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் தான் என்ற) உண்மையை உலகிற்கு உணர்த்த முன் வருவார்களா?

பார்ப்பனர்கள் கடந்த 100 வருடங்களாக இங்கு சந்தித்து வரும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றில் ஒன்றுதான் இம்மாதிரி தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.
பார்ப்பனர்கள் 100 வருடங்களாக இங்கு துன்பத்தைச் சந்தித்து வருகிறார்களா? உங்களுடைய கொடூரமான நகைச்சுவைக்கு அளவே இல்லையா? இக்கட்டுரையில் தரம் தாழ்ந்த விமர்சனம் உள்ளது என்பது எப்படி முழுக்க முழுக்கப் பொய்யோ அதே போல் பார்ப்பனர்கள் துன்பத்தைச் சந்திக்கிறார்கள் என்பதும் கலப்படம் அற்ற பச்சைப் பொய்.

ஏழ்மையிலிருந்தா லும்
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் ஏழ்மையைப் பற்றி எப்படி உணரவே முடியாமல் இருக்க முடிகிறது? அவர்களின் ஏழ்மையை மிகத் தொலைவில் இருந்து பார்த்தாலேயே பார்ப்பனர்களில் உள்ள கடை நிலை ஏழைகள் என்பவர்கள் கூட மிக மிக வசதி வாய்ந்தவர்கள் என்று கூற முடியுமே. மேலும் அவர்களுக்குச் சமூகத்தில் கிடைக்கும் வசதி வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு (எவ்வளவு தகுதி படைத்து இருந்தாலும்) எட்டவே எட்டாது என்பதை நீங்கள் அறியவே மாட்டீர்களா?
கல்வி சாதியைக்காட்டி மறுக்கப் படுதல்
சாதியைக் காட்டி கல்வி மறுக்கப்படுவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தான். பார்ப்பனர்களுக்கு அல்ல. கல்வி கற்றவர்களின் விகிதாச்சாரம், கல்வி கற்பவர்களின் விகிதாச்சாரம் ஆகியவற்றைப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியுமே.

, வேலை மறுக்கப் படுதல்,
சாதியைக் காட்டி வேலை வாய்ப்பு மறுக்கப்படுவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தான். பார்ப்பனர்களுக்கு அல்ல. அதிகாரம், பணம், உடல் உழைப்பு தேவைப்படாத தொழில்களில்
பார்ப்பனர்களின், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் விகிதாச்சாரத்தைப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியுமே.

ஊடகங்களின் கேலியும், கிண்டலும்,
உங்களுடைய கொடூரமான நகைச்சுவைக்கு அளவே இல்லையா? ஊடகங்களில் பார்ப்பன ஆதிக்கக் கருத்துகள் தான் பரப்பப்படுகின்றன என்பதை எப்படி மறைக்கலாம் என்ற தோன்றுகிறது? முழுப் பூசணிக்காயை ஒரே பருக்கைச் சோற்றில் மறைப்பது போன்ற பொய் என்று உங்களுக்குத் தோன்றவே இல்லையா?

சமூகப் பாதுகாப்பின்மை,
பார்ப்பனர்களுக்கு, சமூகப் பாதுகாப்பின்மையா? மிக மிக ......... மிகக் கொடூரமான நகைச்சுவை.


பார்ப்பனப் பெண்களை தரம் தாழ்ந்து கேலி செய்தல் என பற்பல இன்னல்களை சந்தித்து வருகிறது பார்ப்பனர் சமூகம்.
பார்ப்பனப் பெண்கள் மட்டும் தான தரம் தாழ்ந்த கேலிக்கு உள்ளாகிறார்களா? பெண்கள் மீதான அடக்குமுறை என்பது வேறு விஷயம். சாதி அடிப்படையில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெணகள் தான். அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எண்ணிப் பாருங்கள். கொடூரமான நகைச்சுவையைத் தயவு செய்து நிறுத்துங்கள்.

சாதி வேற்றுமைகளைக் களைய முன் நின்றது பார்ப்பனர்களே.
இந்த உலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரைக்கும், பார்ப்பனர்களில் சாதிக் கொடுமைகளை / வருணாசிரமக்
கொடுமைகளை உண்மையாக ஒழிப்பதற்கான தீர்வைப் பற்றிச் சிந்தித்த ஒரு பார்ப்பனரைக் கூறுங்களேன்.

தற்போது ஹரிஜனங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்குக ் காரணம் யார் என தங்களால் வாய் திறந்து கூற முடியுமா?
நிச்சயமாகப் பார்ப்பன ஆதிக்கக் கருத்தியல் தான் இதற்குக் காரணம். பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களும் தங்களுக்கு உரிய பங்கைப் பெற முடியாத நிலையில் தான் இது போன்ற மோதல்கள் ஏற்படுகின்றன. திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கச் சிறிதும் தகுதி இல்லாத பொதுப் போட்டி முறையை முற்றாக ஒழித்து விட்டு, கல்வி, வேலை வாய்ப்பு, சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அகியவற்றில் அனைத்து நிலைகளிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள், முற்பட்ட வகுப்பு மக்கள், மதசிறுபான்மையினர் ஆகியோருக்கு அவரவர்கள் மக்கள் தொகை விகிதத்தில் வாய்ப்புகளைப் பங்கீடு செய்து அளித்தால் இம்மோதல்கள் முற்றாக ஒழிந்து விடும் தயவு செய்து கீழ் கண்ட இணைப்பில் தரப்பட்டு உள்ள கட்டுரையைப் படித்துப் பார்க்கவும்.

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26631-2014-06-03-06-34-45

சம்பந்தமே இல்லாமல் எதற்கெடுத்தாலும ் பார்ப்பனர்களைத் திட்டுவது, கையாலாகாதவர்களி ன் தாழ்வு மனப்பான்மையாகும ்.
நாங்கள் எதையுமே தொடர்பு இல்லாமல் பேசவில்லை; திட்டுவதும் இல்லை. உண்மையயைக் கூறுவது என்பது திட்டுவது ஆகாது. மேற்கண்ட இணைப்பில் தரப்பட்ட கட்டுரையைப் படித்துப் பாருங்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கையாலாகாதவர்கள் அல்ல; அவர்களிடம் திறமை பொதிந்து இருக்கிறது என்று தெரியும். திறமை பொதிந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடக் கூடாது என்று துடியாய்த் துடிக்கும் உயர்சாதிக் கும்பலினருக்குத் தான் தாழ்வு மனப்பான்மையே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்ளுக்கு அல்ல என்பதும் புரியும்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுற்றியுள்ள மாயவலை அறுந்து தமிழர்கள் விசாலமான உலகப் பார்வையடைய வாழ்த்துக்கள்
கடந்த 50 ஆண்டுகளாக அல்ல, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தை அல்ல இந்தியா முழுமையையும், சுற்றியுள்ள மட்டும் அல்ல, இறுகப் பிணைத்தும் உள்ள மாய வலை அறுத்து எறியப்பட வேண்டும். அதற்குச் சரியான வழி இப்பொழுது திறமை இல்லாத பார்ப்பனர்களை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதும், திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைக்குச் செல்வதற்கு முட்டுக் கட்டை போடுவதுமான பொதுப் போட்டி முறையை ஒழித்துக்கட்டி விட்டு, விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை அமல்படுத்துவதே ஆகும். விசாலமான பார்வை என்ற பெயரில் வருணாசிரமக் கொடுமைகள் தொடருவதற்கு வாழ்த்துவதை விட்டு விட்டு, திறமை உடையவர்கள் உயர்நிலையை அடைவதற்கும், திறமைக் குறைவானவர்கள் அடுத்து நிலை வேலைகளைப் பார்ப்பதற்கும் வழி செய்யும் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை அமல்படுத்த முன் வாருங்கள்.
Arango
As per heading, (1) All Teachers Are Teaching Business people, our Parents are Parenting bussness people, etc. (2) if Jesus/Moham'd didn't come, someone would have done it, because we forget Bhuddha/Mahavir, etc. (Preaching business!) and (3) if someone is not popularised, through mud on the other/recent one because his community and generations are not good. So the student of Astavadhani is a merchant due to the above reasons. Great logic!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.