முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் நேற்று முன்தினம் (27-07-2015) அன்று மரணமடைந்துவிட்டார். அதையொட்டி மத்திய அரசு 7 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. நாடே கண்ணீரில் மிதப்பதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. பாஜக, காங்கிரசு உட்பட அனைத்துக் கட்சிகளும் அவருக்காக கண்ணீர் வடிக்கின்றன. நமக்கு ஆச்சரியமாக உள்ளது, ஒருவர் எப்படி அனைவருக்கும் நல்லவராக இருக்க முடியும்! முற்போக்குவாதிகளும் அவரைக் கொண்டாடுகின்றார்கள், பிற்போக்குவாதிகளும் அவரைக் கொண்டாடுகின்றார்கள். இது எப்படி சாத்தியமானது?

 Abdul Kalamஅப்துல் கலாம் என்ற நபர் கோடானகோடி இந்திய மக்களுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டார்? ஏவுகணைகளை உருவாக்கினார், அணுஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். கனவு காணுங்கள் என்று சொன்னார், குழந்தைகளுடன் கலந்துரையாடினார், 2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று சொன்னார். அப்புறம் ஏழையாக இருந்து சிரமப்பட்டு, படித்து, மிக உயர்ந்த நிலையை அடைந்தார். ஒரு மனிதரைக் கொண்டாட இது மட்டும் போதுமா?. அவர் கண்டுபிடித்த ஏவுகணைகளும் இன்னும்பல அறிவியல் கண்டுபிடிப்புகளும் யாருக்கானவை? நிச்சயமாக அவை ஒருபோதும் சாமானிய மக்களுக்கானது அல்ல. அவை ஆளும் வர்க்கங்களுக்கானவை. சாமானிய மக்களுக்கு அவர் எதையாவது செய்திருக்கின்றாரா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. பின்பு ஏன் சாமானிய மக்கள் அப்துல் கலாமின் மறைவிற்காக அழவேண்டும்? உங்கள் விலைமதிப்பில்லா கண்ணீரை சமர்ப்பனமாக பெரும் தார்மீக தகுதி கலாமுக்கு இருக்கின்றதா?

 அவர் ஒரு அறிவியல் அறிஞராக இருந்திருக்கலாம்; அதைப் பற்றி மட்டுமே பேசுபவராக இருந்திருக்கலாம். அப்படி இருந்திருப்பாரேயெனில் அவரைப் பற்றி பேசுவதற்கு நம்மிடம் எதுவும் இல்லை. ஆனால் அவர் தன்னை ஒரு பன்முக ஆளுமைமிக்க நபராகவே எப்போதும் அடையாளப்படுத்தி வந்தார். பொது அரங்கங்களில் பங்கேற்று பல சமூகம் சார்ந்த செய்திகளை பேசியிருக்கின்றார். எனவே நாம் அவரைப் பற்றி பேசுவதற்கு உரிமை உள்ளது.

 ஆளும் வர்க்கங்கள் ஒரு மனிதரைக் கொண்டாட பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. அவர் ஆளும்வர்க்கத்தின் கைக்கூலியாக, அவர்களுக்கு பயன்படுபவராக இருந்தாலே போதும். ஆனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்காகப் போராடுபவர்களும் அவ்வாறே ஒருவரைக் கொண்டாட முடியுமா? அப்படி கொண்டாடும் பட்சத்தில் அவர்களை எப்படி சாமானிய மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் என்று சொல்லமுடியும்? அப்துல் கலாம் எப்போதாவது சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காக ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகப் பேசியிருக்கின்றாரா? அவருடைய சமகாலத்தில் பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்து இருக்கின்றது. இந்திரா காந்தியால் நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது, அவரது மறைவையொட்டி சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரும் மனிதப் படுகொலை, போபால் விஷவாயு கசிவால் 25000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது, ஈழமக்கள் படுகொலை, குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு, பசுமை வேட்டை, விவசாயிகள் தற்கொலை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதைப் பற்றியெல்லாம் கலாமின் கருத்து என்ன? தனது உதவியாளர்களிடமும், நெருக்கமானவர்களிடமும் தனிமையில் அவர் ஆதங்கப்பட்டிருக்கலாம், சில கருத்துக்களைச் சொல்லியிருக்கலாம். பொதுவெளியில் என்ன செய்தார்? ஆளும்வர்க்கங்களுக்கு எதிராக சுண்டு விரலைக்கூட நீட்டாத வீரர்தான் கலாம் அவர்கள்.

அவர் பள்ளி மாணவர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களிடம் ஒரு பத்து உறுதிமொழிகளை எடுக்ச் சொல்லுவார். அந்த உறுதி மொழிகளை நீங்களே படியுங்கள்.

நான் எனது வாழ்க்கையில் நல்ல லட்சியத்தை மேற்கொள்வேன்.

நன்றாக உழைத்துப் படித்து என் வாழ்க்கை லட்சியத்தை அடைய முற்படுவேன்.

நான் எனது விடுமுறை நாட்களில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்துபேருக்காவது எழுதப் படிக்க சொல்லித் தருவேன்.

நான் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்த பட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதைப் பாதுகாத்து மரமாக்குவேன்.

மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி துயருரும் ஐந்து பேரையாவது மீட்டு அதில் இருந்து நல்வழிப்படுத்த முயற்சி செய்வேன்.

துயர்படும் ஐந்துபேரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரை துடைப்பேன்.

நான் சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எவ்வித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.

நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.

என் தாய் மற்றும் தாய் நாட்டை நேசித்து பெண்குலத்துக்கு உரிய மரியாதையும் கண்ணியத்தையும் அளிப்பேன்.

நான் நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக சுடர்விடச் செய்வேன்.

 ஒருவன் நன்றாகப் படித்து உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதெல்லாம் அப்பட்டமான முதலாளித்துவ சிந்தனையே அன்றி வேறல்ல. நாட்டில் கோடானகோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு நன்றாக படிக்காமல் போனதோ, உழைக்க முடியாததோ காரணம் அல்ல. உண்மைப் பொருளாதாரத்தை கட்டியமைக்காமல் பங்குசந்தை சார்ந்த ஊகப் பொருளாதாரத்தை கட்டியமைத்து அதைக் காப்பாற்றி வரும் இந்த அரசே காரணமாகும். இது கலாமுக்குத் தெரியாதா அல்லது தெரிந்தும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டாரா?. சாதியைப் பற்றி, மதத்தைப் பற்றி எல்லாம் பேசும் கலாம் அவர்கள் இந்தியாவில் சாதிக் கலவரங்களும், மதக் கலவரங்களும் நடந்த போது அதை குறைந்தளவு கண்டித்தாவது பேசி இருக்கின்றாரா? பெண்களுக்கு மரியாதையும், கண்ணியத்தையும் அளிக்கவேண்டும் என்று சொன்ன கலாம் எப்போதாவது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் பேசியிருக்கின்றாரா?

 இப்படி எதுவுமே பேசாத, செய்யாத கலாமுக்காக சாமானிய மக்கள் எதற்காக அழவேண்டும்? அவர் இதுவரை எத்தனை தனியார் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசியிருக்கின்றார், எத்தனை அரசு பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசியிருக்கின்றார் என்று கணக்கிட்டுப் பார்த்தால் அவர் எந்த வர்க்கத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு ஆதரவானவர் என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். கலாம் தமிழ்நாட்டில் பிறந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவது என்பது மிக அபத்தமானதாகும். காவிரிப் பிரச்சினையாகட்டும், மீத்தேன் வாயு திட்டமாகட்டும், தமிழ்நாட்டையே அழித்துக் கொண்டிருக்கும் டாஸ்மாக் பிரச்சினையாகட்டும் அல்லது வேறு எந்த பிரச்சினையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர் எப்போதாவது தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்து இருக்கின்றாரா? மீனவ சமூகத்திலே பிறந்து அந்த மீனவ சமூகத்திற்கே துரோகம் செய்த கலாமின் கதையை கூடங்குளத்தில் உள்ள குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள்!.

 கார்ப்ரேட் சாமியார்களின் காலில் விழுந்து ஆசிவாங்கும் ஒரு அறிவியல் மேதையே அப்துல் கலாம் அவர்கள். சமஸ்கிருதத்தைப் பற்றியும், வேதங்களைப் பற்றியும் பெருமையாகப் பேசியும் எழுதியும் வந்தவர் தான் கலாம் அவர்கள். அதர்வண வேதத்தில் விமான அறிவியல் உள்ளதாக கண்டுபிடித்து காவிக்கூட்டத்திற்கு கருத்தியல் ஆயுதமாக பயன்பட்டவர்தான் கலாம் அவர்கள்.

 அப்துல் கலாம் ஏழையாகப் பிறந்தார். இந்திய ஆளும்வர்க்கத்தின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தார். அதற்காக குடியரசுத் தலைவர் பதவியை பரிசாகப் பெற்றார். அப்பட்டமான முதலாளித்துவ நச்சுக் கருத்துக்களை இளைஞர்கள் மத்தியிலே விதைக்க முயற்சித்தார். கலாமிடம் இருந்து இன்றைய இந்திய இளைஞர்கள் கற்றுக்கொள்ள ஒன்று இருக்கின்றது. அது என்னவென்றால் அவரைப்போல இல்லாமல் இருப்பதே!

- செ.கார்கி

Comments

60 comments

60
ஷாகுல்ஹமீது
அனைவரும் பேச தயங்குகின்ற விடயங்களை துணிச்சலுடன் கூறியிருக்கிறீர்கள்........................நான் உங்கள் கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்.........................இந்த தருணத்தில் கண்டிப்பாக பேச வேண்டிய விடயங்கள் இவை............
Ramasundararajan
You have rights on posting your views. But please don't try kill the postive energy that seeded in the youth .First try to understand "Nothing can be done or changed on a single day" Everything can be changed and can be overcomed in a period of time. Mr.APJ vision India 2020 is to make as a developed nation by following his ten points atleast we can try to make our nation as a developed nation. Dont relate APJ with silly politicians.Please example a good politician who fighting for your above riots. Don't expect everything from a single man. No one can satisfy everyone.
yuvaraja
இறந்தவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகி விடுகிறார்கள் என்ற மூடநம்பிக்கையை ஆதரிப்பவன் நானல்ல.. இருப்பினும் கலாம் உயிருடன் இருக்கும் போது அவர் மேல் செலுத்தப்பட்ட விமர்சனங்களை விட அவர் இறந்து..அவரின் பூத உடல் கூட அடக்கம் செய்யப்படாத நிலையில் அவரின் சடலத்தின் மேல் செலுத்தப்படும் விமர்சனங்களின் எண்ணிக்கையும் அதன் கூர்மையும் அதிகரித்திருப்பதை கண்டு வெந்து போகிறது மனது... இது கொள்கை சம்மந்தப்பட்டது அல்ல..அடிப்படை இங்கிதம் பாற்பட்டது.. ஒரு மனிதரிடம் நூறு சதவீத புனிதத் தன்மையைத் தேடி நாம் ஏன் இப்படி வெறிகொண்டு அலைகின்றோம் என்று தான் புரியவில்லை... ! இங்கு யாரும் மனிதப் புனிதரும் அல்ல.. நாம் ஆராதிக்கும் தலைவர்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.. காரல்மார்க்ஸ்..லெனின்..ஸ்டாலின் எல்லோருக்கும் இது பொருந்தும்..நாம் முன்வைக்கும் விமர்சனத்தில் நியாயம் இருக்கும் அதே அளவு கண்ணியமும் இருக்க வேண்டும்.. மன்னியுங்கள் இது விமர்சனத்திற்கான நேரம் அல்ல..!
Ramasundararajan
பாலுமகேந்திரா செத்தாரு ஆணாதிக்கவாதி’ன்னிங்க. பாலச்சந்தர் செத்தாரு பார்ப்பனீயத்த தூக்கிபுடிச்சாருன்னீங்க.எம்.எஸ்.வி செத்தாரு எகிப்து மீசிக்க சுட்டாருன்னீங்க. நாகூர் ஹனீபா ஏன் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தலன்னீங்க.எம்.ஜி.ஆர், பெரியார், அண்ணா, ஏன் காமராஜர் இப்டி எல்லா சாதனையாளர்களுக்கும் இருவேறு தரப்பு விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டாம். அஞ்சலி செலுத்துபவரின் காதருகில் வந்து பட்டாசு வெடிக்காதீர்.குறைந்த பட்சம் அஞ்சலி செலுத்தி முடிக்கும் வரையில்.
Subramaniam
Sea is the same for All, some find Pearls, some find Fishes, some just find their feet wet !!!!
Malarvannan M
http://www.youthconnect.in/2014/11/13/12-rare-stories-about-dr-apj-abdul-kalam-will-make-your-day-today/
Tamilarasan
ஒரு வா்கதினரின் உயர்வை பேசும் மானம் கெட்ட கீற்று இணையதளத்திற்கு கலாமை பற்றி பேச தகுதி இல்லை
Sathyan
நானும் திரு யுவராஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். 1. எவர் புரட்சிகரமான மனித நேயர் என்பதன் வரையறை நம்க்கு எப்போதுமே உள்ளது. அந்தப் பொது வரையறையை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறோம் என்பது, அந்த தகுதியில்லாடவருக்கு நாம் அஞ்சலி ஏதும் செலுத்தாமல இருப்பதிலேயே வெளிப்படும். மக்கள் ஏன் என்பதை அறிந்து கொள்வார்கள்! 2. அதை விடுத்து, ஒவ்வொருவர் இறக்கும்போதும், அவரை அந்த வரையறைக்குப் பொருத்திப் பார்த்து, அவர் தகுதியற்றவர் என்ற கருத்தை வெளியிடுவது, தேவையற்றது. அது உணர்வு மயமாகவே நடு நிலையில் உள்ளோரை நம்மிடமிருந்து அன்னியப் படுத்துமே தவிர, நமது பிரச்சாரத்துக்கு வலிமை சேர்க்காது.எதிர் விளைவையே ஏற்படுத்தும். 3 இன்றைய நமது தேவை மக்களை நம் பக்கம் ஈர்ப்பதில் முனைப்பு. 4.இத்தகைய் விமர்சனங்கள் புரட்சி வெற்றிபெற்றபிறகு வெளியிடப்பட வேண்டியவை. எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தகுந்த நேரம் உண்டு என்பது துரதிருஷ்ட வசமாக நமக்கும் பொருந்தும்.
bala
This is not the right time to talk about this. Your very cuunning....
Sathyan
இதை விட, கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில், அவர் தான்ன் எழுதிய ( நான்காந்தர) நூலைப் படித்து கண்ணீர் மல்கியதைத் தெரிவித்து தன்னைப் பாராட்டியடதாக புருடா விட்டு, விளம்பபரம் தேடிகொள்ள முனையும் கருணா நிதியின் அற்பமான சாக்கடைத் தனத்தை விமர்சித்து, அம்பலப் படுத்தியிருக்கலாம்!
batmanabane
ஐயா, கல்வி கற்றால்தான் உண்மைபுரியும் நீர் இன்று இத்தனை விமர்சனம் செய்ய உமக்கு உதவுவது கல்வி அந்த அடிப்படையில் அவர் கல்வி கற்க சொன்னார். அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் எத்தனை ஏழை மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தந்துள்ளார் தெரியுமா,நீர் யாரைத்தான் விமர்சிக்கவில்லை விட்டால் திருவள்ளுவர் தமிழுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று கூட சொல்வீர்
Kumar
தமிழரசனிண் கருத்தில் எனக்கு 100/ உடன்பாடுண்டு,நீங்கள் கீற்றை அல்ல கீழ்மையை முன்னெடுத்து செல்கிறிர்கல்,மணசாட்சி வேண்டும்,ஆனால் அதை மாணங்கெட்டவர்களிடம் எதிர்பார்பது மடமை என்பது எங்களுக்கும் தெரிந்து தான் இருக்கிரது,அதனால்...........
வழிப்போக்கன்
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர் பாடம் சொல்லிக் கொடுத்தது இருக்கட்டும். எத்தனை அரசுப்பள்ளி மாணவர்களோடு அவர் உரையாடினார்? (பேசாதது மிகவும் நல்லது!) எந்த இடத்திலாவது சமூக, அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசினாரா? சமுதாய சிந்தனையற்ற ஒரு தலைமுறையை உருவாக்க ஆளும் கட்சிகளுக்கு உதவினார். அதனால் பதவியை அனுபவித்தார்.
பொ.கருணாகரமூர்த்தி
** சகமானிடனாய் விடைதருவேன் சென்றுவா ** * அப்துல் கலாமே அவனி போற்றும் தலைவனே............ பொறுத்தாற்று. * நின் அறிவியல் சாதனைகளுக்காய் உனக்கு நான் சிரந்தாழ்த்துகின்றேன்.........சலாம் * உன் மாநிலத்துக்கோ, மாவட்டத்துக்கோ கிராமத்துக்கோ இனத்துக்கோகூட பெரிதாக நீ எதையும் செய்ததில்லை என்கிறார்கள், சரி, அது உன்னதும் அவர்களதும் விவகாரம் * இலங்கையில் ஆயிரமாய் தமிழர்கள் அறுபட்டபோதும் உடல் சிதறுண்டபோதும் நின் ஊர் மீனவர்கள் கொலையுண்டபோதும் தத்துவச்சித்தன் நீ வாளாதிருந்தாய்.................. * கூடங்குளம் அணுவுலையால் மானிடத்துக்கு ஆபத்தில்லை என்றதில் நீ விஞ்ஞானியை விஞ்சிய அரசியல்வாதியானாய் * பதவிகள் களைந்து நின் மேலாண்மை அரிதாரத்தோடு இலங்கைவந்தபோதும் உறவுகளை இழந்து உதிரம்கசிந்து நொந்திருந்தவரிடம் மானிடத்தின் மகிமைபற்றிப் பேசிச்சென்றாய் , நமக்குத்தென்பளிக்கும் சிறுவார்த்தை சொன்னாயில்லை * நடந்த அட்டூழியம்பற்றி அழிக்கப்பட்ட உயிர்களைப்பற்றி ஒருவார்த்தை உன்னாமல் மௌனித்திருக்கப் பணித்ததும் ‘அல்லா’ தானென்றால் * எமக்கு இன்னும் வலிக்குதையா சகோதரனே * என்னால் கவிதைகளில் கண்ணீர் சிந்தவோ ஒப்பாரி வார்த்தைகளில் சல்லாரிபோடவோ முடியவில்லை * என் நினைப்பில் தவறிருந்தால் பொறுத்தாற்று * சகமானிடனாய் விடைதருகிறேன் சென்றுவா.
Arinesaratnam gowrikanthan
அப்துல் கலாம் சாதித்தவை என்ன? அவரின் சாதனைகள் எந்த வர்க்கத்துக்கு பயன்பட்டுள்ளன என்பதை அராயாமல் அவரைப் போற்றவோ அல்லது தூற்றவோ கூடாது என்பது வர்க்க உணர்வுள்ளவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் அவ்விதத் தவறை என்றுமே செய்யமாட்டார்கள் என்பதை நம்புவோம். அப்துல் கலாம் சாதித்தவை என்று சொன்னால் அது இந்தியா அணுஆயுத வல்லரசாவதற்க்கு தனது தனது அபாரமான மூளை உழைப்பைக் கொடுத்தது மாத்திரமே. அதற்குரிய கருவிகளை உருவாக்கியது மாத்திரமல்ல, அதற்க்கு அவசியமான அறியியற் கட்டுமானத்தை செதுக்கியவரும் இவரேயாகும். இங்கு அவரின் அறிவு மட்டும் மிளிரவில்லை, அவரின் அர்ப்பணிப்பும் அவரின் அமைப்புருவாக்கப் பண்பும், திறமையும் அபாராமாக வெளிப்பட்டுள்ளது. தேசப்பற்றாளர்கள் அனைவரும் இதற்காக அவருக்கு நன்றி சொல்லக்கடைப்பட்டவர்களாகும். இந்திய தேசம் வல்லரசாவதை விரும்பாத எந்தத்தேசப்பற்றாளரும் இருக்க முடியாது. ஆனால் இங்குள்ள கேள்வி அவ்வல்லரசுத்தனம், நல்லரசின் வல்லரசுத்தனமாக இருக்கவேண்டுமா அல்லது ஒடுக்குமுறையரசின் வல்லரசுத்தனமாக இருக்கவேண்டுமா என்பதுதான். இவ்விடத்தில் தான் தேசப்பற்றாளர்கள் இரு முகாங்களாகப் பிரிந்துள்ளனர். இதில் அப்துல் கலாம் எந்த முகாம் என்பதே இங்குள்ள கேள்வியாகும். நல்லரசு என்பது சாதிய, இன, மத, வர்க்க, தேசிய ஒடுக்கு முறைகள் அற்ற அரசேயாகும். அப்துல் கலாம் நல்லரசின் உருவாக்கத்திற்கு என்னசெய்துள்ளார்? இது விடயமாக அவரின் சாதனைகள் என்ன? குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஏதாவது இருந்தால் அவர் வல்லரச-நல்லரசாளர் எனப் போற்றாப்படக் கூடியவர்தான் இதில் சந்தேகம் இல்லை. அவ்விடம் அவ்விதம் ஏதாவது இல்லையானால் அவர் ஒடுக்குமுறை வல்லரசுவாதியென வகைப்படுத்தப் படவேண்டியர்தான். இந்தக் கோணத்தில் இப்பிரச்சனையை ஆராய்வோம். ஆகவே அணு ஆராய்ச்சி துறைக்கு அப்பால் சமூக அரங்கில் அவர் ஆற்றிய பங்களிப்புகளில் நல்லரசுக்கான கூறுகள் எவ்வளவு தூரத்துக்கு இருந்தன் என்பது ஆராயப்படவேண்டும். அவர் செய்யாததை பட்டியலிட்டு குறைகூறுவதை விடுத்து அவர் செய்தவற்றின் சமூக விளைவுகள் என்ன என்பதை திறனாய்வு செய்வோம்.
ragu
ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களையும் தீவிர வாதிகளாக சந்தேகிக்கும் இதே சமூகம், தனி ஒரு இஸ்லாமியரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிரது.. இது தான் மிகச்சிறந்த டிசைன்... ஈமு கோழி வளர்த்தா கோடி கோடியா சம்பாதிக்க முடியுன்னு சொன்னதை அப்படியே நம்பின சமூகம் இது... ஒரு பொருளை பத்தியோ அல்லது ஒரு நபரை பத்தியோ கொஞ்சம் நல்லபடி விளம்பரபடுத்தினா போதும்... நம்ம மக்கள் எல்லோரும் மந்தை ஆகிடுவாங்க...
ஜெயக்குமார்
*** ******. நல்ல மனிதர்களை காண்பது மிக அரிதானது. ஒப்பீட்டு அளவில் பார்க்கும் போது, கலாம் யாரும் எட்டாத இடத்தை எட்டியுள்ளார் என்பதுவே நிதர்சனம்...
Peace
Suriyanai parthi naai kuraitha kathai thaan ithu
K.SARAVANAN
நல்ல மனிதர்களை காண்பது மிக அரிதானது. ஒப்பீட்டு அளவில் பார்க்கும் போது, கலாம் யாரும் எட்டாத இடத்தை எட்டியுள்ளார் என்பதுவே நிதர்சனம்..
மா.செந்தில் குமார்
முட்டாளிடம் வாதம் செய்யாதே மூன்றாம் நபருக்கு யார் முட்டாள் என்று தெறியாது..(சொல்லனும்னு தோனுச்சு)
Jaffer maricar
ஐயா..... அப்துல் கலாமின் பெருமையைத் தெரியாத அமெரிக்கா தனது நாட்டின் கொடியை அரைக் கம்பத்தில் தெரியாத்தனமாக பறக்கவிட்டிருக்கிறது. எல்லாம் தெரிந்த நீங்கள் இன்னும் என்னவெல்லாம் எப்படியெல்லாம் புகழவேண்டுமோ அவரை புகழ்ந்துக்கொண்டிருங்கள். அப்போதாவது மனது சாந்தி அடையட்டும்.
michael micky
தாங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்து எழுதியுள்ளீர்கள் ,ஒரு தனி மனிதனை உயிருடன் இருக்கும்போது எதாவது விமர்சிக்கலாம் அது ஒரு வகையில் சரி .இறந்தபின் விமர்சிப்பது அறியாமையும் , புரியாமையும் என்று எடுக்கவேண்டியிருக்கும் அதை புரிந்துகொள்ளுங்கள்.
George Hentry
அப்படியா...அடித்தட்டு மக்களுக்கு அப்துல் கலாம் எதுவும் செய்ய வில்லை, அதனால் சாமானிய மக்கள் கண்ணீருக்கு, அவருக்கு அருகதை இல்லை என்று யாராவது சொல்லி விட்டால் கோபம் வருகிறதா நண்பர்களே...? ஏழு நாட்களென்ன ஒரு மாதம் விடுமுறை விடட்டும், தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த லாபமோ நட்டமோ இல்லாத விஷயம் பற்றி எனக்கென்ன...? பாவம், அரசியல் வாதிகள் முன்பு மக்கள் செம்மறி ஆடுகளாவது நமக்குத்தான் பழகி விட்டதே...! எல்லா மத கோயில்களிலும் கலாமுக்கு ஒரு சிலையும் நிறுவட்டும், அடுத்த தலைமுறை அறிவுபெறும். கலாம் கடவுள் என்று சொல்வதால் எனக்கென்ன ஆகிவிடும்...நான்சென்ஸ் ..
chandran
Mr Sathyan,Have you read Kalaignar"s Thogaappiya Poonga?Tell me honestly how many pages you have read in this book?On what parameters,you call this book as a fourth rated book?Just because you do not like one individual,you should not pass uncharitable remarks.Before passing such remarks,you should acquire capacity to write such book.Answer me,if you can.Are you one of the persons who crave for cheap publicity by writing bad things about Kalaignar?
guru
இளம்பிள்ளைவாதம் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலகுவாக நடக்க காலனியை கண்டு பிடித்தவர். மாணவர்களுக்கு நல அறிவுரை வழங்கிய ஆசிரியர்...முயற்சி செய்தால் இலக்கு அடையாளம் என்பதை வாழ்ந்து காட்டியவர். இது போதாதா பாராட்டுவதற்கு
Vijay
Keetru nu per vechadhuku, kiruku payanu peru vechurukalam., nenga vilambaram panni kaasu sambadrikiradhuku ena venumnalum panuvinga da., idhula nenga engal youth role model a pathi thapa pesuringa.,, thirundhunga da
TAMIZHSELVAN.S.S
Dear Editor, I have been experienced many editorial from Keetru, But I have not replied because the way of thinking and persuasion will differ from person to person, based on their quality through experience, education and culture, Being a editor of this report Kalam - The Great Soul shows the other way of thinking. Kindly consult a psychiatrist on emergency basis. With Love, Tamizhselvan.S.S
B.SIVAKUMAR
இவ்வளவு கேவலமான கட்டுரைய எழுதுன கார்கிய காரித்தான் துப்பனும்... தான் பிரபலமாக மற்றவர்களை கேவலமா பேசுர நீ ஒரு கேவலமான பிறவி... மனிதன் வாழ்வில் முன்னேற கல்வி தேவையில்லை சொல்லுர நீ அதே கல்வி இல்லைனா இந்த கட்டுரைய எழுதியிருக்கவே முடியாது.. கல்விதான் நீ உபயோகிக்கின்ற இனையத்தை உருவாக்கியது.. ஒரு கருத்த ஒருவர் கூறும் போது அதை அவர்கள் முதலில் கடைபிடிக்க வேண்டும்.. எனவே இந்த இனைய பக்கத்தை மூடிவிட்டு தெரு பிரச்சாரத்தின் மூலம் உங்கள் கருத்துக்களை பரப்பலாம்.....
SARATHI VP
WILL ANY ONE SPEAK ABOUT HIM NOW IF HE WAS NOT A PRESIDENT OF INDIA? CAN ANYONE SAY WHAT FACTORS MADE HIM THE PRESIDENT EXCEPT AS A POLITICAL STRATEGY (ASK MULAYAM!) ?
iniyan
நல்ல மனிதர் அறிவியல் துறையில் ஒரு ஞானி போல் வாழ்ந்த்தவர் அவருடைய அணுகுண்டு சோதனைதான் சற்று மனதை நெருடுகிறது மற்றபடி அவருடைய வாசிப்பு குழந்தைகளை நேசிப்பு நல்ல மனிதர் தான்
Lenin
ஒரு தனி மனிதனை கட்டமைக்காமல் சமுதாயத்தை கட்டமைப்பது என்பது இயலாத காரியம். இந்த தொடக்க வேலையை செய்யவே தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். பொத்தாம் பொதுவாக கைகூலி என்ற முறையில் பதிவிடுவது உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி.
Michael
You will pay for this, we have taken this article ahead to view of renowned youth community. They are forwarding to file case against this action of publishing wrong thoughts and seeding negative acts into youths mind.
Krishna
Evlo dhooram... Abdul kalam sir ....pathi solra ni .... edhu varaikkum... ethana pearukku unnaala aana udhavi senjurukka... oru poor familykkadhu... help... pannirukiya???....... ellaina... oru poor child-a vadhu padikka vachiya????.... ellaina.... ni endha alavukku sollriye APJ sir pannadha pathi... adhula yeadhavadhu onnu senjurukiyaa???..... oru mannum seiyala... aana... oruthara mattam thattradhukku... mattum udane vandhuduradhu..... unakke veakkamaa ella????......
sugumaran
ஐயா அவர்கள் மற்ற நாட்டினரையும் நடுங்க செய்த அந்த ஒரு அணுகுண்டு சோதனை ஒன்றே போதும் இந்தியர்களின் மனதில் பதிய. உங்கள் விமர்சனம் உள்நோக்கம் கொண்டதே.
senthil
I think u r a saddist
tomy
katturai mikka payanullathaga irundhathu,kanavu nayagan image sarindu villunthadu.kanavu ulagil vallum ilaygerkalai vilipadaya ithu pola savvukuadi kattayam thevai
tamil
Hello Mr ungaloda parvaila ethu social work nu sola varinga... Avara path I ipadi pesura ninga kandipa oru nala worker a iruka mudiyathu ethulaum... Oru manitharai pathi ipadi thapa eluthuratha first stop panunga apo ninga kandipa ethavathu valkaila muneralam... Hello admin don't published this type of essay
SANKAR P
மக்கள் அப்துல் கலாமை போற்றுவது அவர் பெரிய அணு விஞ்ஞானி என்பதாலோ அல்லது முன்னாள் குடியரசு தலைவர் என்பதாலோ அல்ல.!!! இதையெல்லாம் தாண்டி அவர் மகத்தான நல்ல குணங்களைக் கொண்ட மனிதர், எல்லோரையும் சம்மாக பாவித்த நேசித்த அற்புதமான மனிதர், அன்புள்ளம் கொண்டவர் என்பதால் தான்.. இந்த மரமண்டை முற்போக்கு வியாதிகளுக்கு இதெல்லாம் புரியுமா????
ஜி
கம்யூனிசம் பேசிட்டு கொடி ஏந்தி கத்திட்டு இருந்தா அணுகுண்டு போட்டு புல்,பூண்டு முளைக்காத நாடாக மாற்றிவிடுவார்கள்.கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கிய நாடுகள் ஆயுதங்கள் உருவாக்குவதில்லையா?
kavimani
நீங்க தான் உலகில் யோக்கியமானவர்கள் என்று நினைப்பு . பேடிகள் போல பேசும் உங்களின் போலி தலித்தியமும் , போலி மதசார்ப்பு இன்மையும் எப்பொழுதே சாமானியர்கள் மத்தியில் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிவிட்டது . உங்களுக்கு எல்லாம் எப்பிடி இருந்தாலும் குற்றம் சொல்லி கொண்டே தான் இருப்பிர்கள் . ** **** **** ***** * ******
Tamizhan
Nee solrathellam pannirundha ...Avarum oru arasiyalvadhi nu sollirupinga..paesuravanga paesitae than irupinga
Neelamegam
*** ***** சரி ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவா இருந்து எத்தனை கோடி சம்பாதித்திருக்கிறார்?????
Bala
*** ***** Thani manidha seerthurytham, matrum avar saarndha ariviyal thozilukkum naatirkkum nermayaana manidhanaaga vazndhadhe podhum. He is not a politician to do those stupid things which u have pointed out. ** **** **** **** ******
ிராசேந்திரன்
உங்க கருத்து வெட்ககேடானது
யமுனாகோகி
ரோட்டுல அடிபட்டு சாகிடந்தாவே பல பேர் கை கட்டி நின்னு வேடிக்கை பார்க்குறாங்க..மனிதாபிமானமே.. பெத்தவங்கள முதியோர் இல்லத்துல சேர்த்துறாங்க..ஜனாதிபதி ஆன பின்பும் காச சம்பாரிச்சுட்டு மனைவி,குழந்தைங்க இன்னு இவர் இருந்திருந்த பரவாயில்லை அப்ப தான் இவர் நல்லவர், ஆனீா அப்படுி இல்லாம அடுத்த தலைமுறை நல்ல ஒழுக்கத்தோட வரனுமெ்னு ஆசை பட்டது ஓவர்.அது பாவச்செயல்..ஒவ்வொருவரும் தொழுல்முனைவோராக வரவேண்டும் நினைத்தது மாபெரும் குற்றம்..தீவிரவாதில்கள் பாதுகாப்பு தொழுல் நுட்பத்தை கண்டு பயப்படும் அளவுக்கு இந்தியாவை உயர்த்தியது தவறு தான கீற்றல்.. அரசியல் புழுக்கள் கூட கை கோர்க்காமல் தன் வயதான காலத்திலும் இன்றைய சமுதாயத்திற்கு அறிவுறை கூறி உரையாற்றுவதும் தவறு.. உங்களைஒவ்வொரு மாணவனின் பேச்சு போட்டி .கட்டுகளில் அவரது சிந்தனை துளிகள் சிதறியிருக்க கூடாது இன்றளவும் என்னைமாதிரி சில பேர் அக்த்தனை.. ஒவ்நீஅவர்உங்கள மாதிரி சுயநல புழுக்கள் நெளியும் வாழ்ந்ததே மாபெரும் பெர்ுமைுமை பெருமை... விவேக் என்னும் நகைச்சுவை நடிகர் 2100000 மரகன்றுகள் நட்டுறுகிறார்..காலாம் அவரை 1கோடி மரங்களை நடவேண்டும் என கூறியிறுகிறார்...இன்னுமும் அவரை உண்மையாக நேசுகிறவர்கள் அவர் பாதை ஐயமின்றி செல்லலாம்.. அவரை பிடிக்காதவர் ஒதுங்கி நின்றுவிடாலாம்... மனதை எளியதாக்கி அறிவை பெரியதாக்கியவர்.,எனக்கு தெரிந்து இவர் மட்டுமே இந்தியா வல்லரசாக வேண்டும் என ஆத்மார்தமாக ஆசைபட்டவர்.. ஒவ்வொருவரும் முதளாலி ஆகவேண்டும்,புது புது தொழில்களை கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு மனம் ஒருநிலையில் இருந்தால் தினமும் அதை நினைத்து கனவு கண்டால் நிச்சயம் நிறைவேறும் என்று எல்லொருக்கும் ஒரு தந்தையாக சொன்னவர்.. தயவு செய்து ஏளனமாக பேசீவிடாதீர்கள்.. நீ நீயா இரு ஆனால் உன் எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும் என்று இவர் தான் கூறியுள்ளார்.. வேறு எந்த அரசியல் ஆசாமிகளும் எங்களுக்கு கூறவில்லை கீற்ற்றல்
Basith
Ennada poludhu vidinjuruche innum edhum nadakaliyennu pathen, nadandhuruchu, nadanthitainga... Oru vishyatha pesradhuku munnadi adhuku first thagudhi venum, chumma internet um computer um irundha enna venumnalum eludhirradhu. Ipdi eludhirukiye ne venumna yaaroda kaikooliyaga irukalam.
செல்வா
நீ எல்லாம் இந்த உலகத்தில் இல்லாமல் இருப்பது நக்ல்து ( உன்னுடய செல் நம்பர் கொடு விலக்கம் தரென்
Shadik basha
He is a role model of so many things. his asset is books and people's only.
Vimal
Just think about it, why so much of people paying tribute to APJ sir? If your essay is right means, definitely u will not see this much real crowd and impact in public's life. All did those shop closing and stopping service voluntarily not conditionally. That proves, he is a great man. No one is perfect in the world and no one can do everything for all.They can make others to think and make the things happen. Thats what happened here. Am not feeling anger on you, it is your right to express. But the thought is wrong here.
shahul hameed
There is a beautiful rose.... In our view There is some thorn in the rose... In your view
யமுனாகோகி
எத்தனை பேர் ரோட்டில் அடிபட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றை*று அவர்களின் உயிரை காப்பாற்றி இருப்பீர்கள் எத்தனை 100மரங்களை நட்டுறுப்பீர்கள் எத்தனை ஏழை குழந்தைகளை படிக்க வைத்து இருப்பீர்கள் 1. அவருடைய வேலை வு*விஞ்ஞானம் அதுல சிறந்து விளங்கினார் 2. ஜனாதிபதியாக இருந்த போதும் அவர் வேலையிர்*ல் சிறப்பாக செய்தார் 3.ஏழை குடும்பத்தில் பிறந்த அவர் அறிவை மட்டும் நம்பி வானில் பறந்தவர் அரசியல் சாக்கடையை அவர் ஒருவரால் மட்டும் சுத்தப்படுத்த முடியுமா அவர் எத்தனை கோடியை ஒழித்து வைத்துள்ளார். ஒரு மென்மையான பூவினால் ஒரு மரத்தை சாய்க்க முடியுமா! அவரால் எது முடியுமோ அதை சிறப்பாக செய்தவர் கருநாநிதி போல் செல்வாகெகு அடியாட்கள் இருந்திருந்தா்*ல் கண்டிப்பாக இன்னும் உழைத்திருப்பார். கடவுள் ஆயுள்ளயும் அதிகப்படுத்திருப்பார் அடுத்த தலைமுறையினறை நேரில் சென்று வழிநடத்தியவர் இளைஞர்கள் மூலம் மறைமுக போராட்டம் செய்தவர், தனக்காக எதையும் சம்பீ*பாரிக்கவில்லை ஏழையாக பிறந்தார் எளிமையாக வாழ்ந்தார் அறிவால் வானுற பறந்தார் அமெரிக்கா போன்று நம்நாடும் வல்லராசாக வேண்டுமென நம் நல்லதுக்காக கனவுகண்டார் அவரை பாராட்ட மனமில்லை எனில் நல்ல மனிதரை குற்றம்கூற வேண்டாம். இதுனால் வரை நீங்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்துள்ளீர்கள்!!!!!!!!! முடிந்தால் அவரின் ஆசைப்படி ஒரு மரக்கன்றாவது நடுங்கள்!!!!!!
மணிதன்
சைக்கோ மார்க்சிசம் என்ற புதிய மனநோய் பரவி வருகிறது. அதன் அறிகுறிகள் 1. எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டுவது. 2. கருத்தியல் ரீதியாகவும் தர்க்க ரீத்யாகவும் பேசுவதாக நினைத்து கொண்டு பொது மக்களின் இயல்பான மனநிலையை புரிந்துகொல்லாமல் நடப்பது 3.பொதுமக்களிடம் இருந்து அந்நிய பட்டு விடுதல் 4. தங்களை மிகப்பொறிய புரட்சி யாளர்களாக கற்பனை செய்து கொள்ளல் 5.மற்றவரிடம் உள்ள நல்லதை விட்டுவிட்டு கெட்டதையேஎப்பொழுதும் பார்ப்பது 6.அறிவாளித்தனமும் இவர்களிடம் காணப்படும்
varadha
keetru poolu pathirikkai niruvanam
லாஹிர்
அருமையான பதிவு....ஒரு மனிதனை எல்லா கட்சிகளும் சுகமும் ஏற்பது சாத்தியம் இல்லாதது...யோசிக்க வேண்டிய விசயம்...ஆனால் இந்திய குறிப்பா தமிழக மக்கள் யோசிக்க வே மாட்டார்கள்...அப்படி யோசித்தால் தமிழகம் கூத்தாடிகளின் பிடியில் சிக்கி கேவலப்படாது...அப்படி யோசித்தால் தமிழன் மட்டும் தான் தமிழகத்தை ஆட்சி செய்வான்....
vedha
Ayya va pathi pesum thaguthi irupavargal. Ivulagil yarukkum ilatha pothu unaku matum epadi vandhadhu... Muthalil manithanaga vazha muyarchi seivom... Apuram avara pathi pesuvom... Muluvathuvumagau manithanaga nazhndha oruvarai nagariga millatha oru jeevan kathuvathai ellam indha ulagam kekava poguthu... Avar marainthu vitae endru year sonathu... Engalukul inum irukirar... Unai be matrikol... Avar sonathil edhavadhu onrai pinpatra muyarchi semi... Manithanaga vazhum vaippu kidaikkum... Unaku...
ப. சுகுமார்
கலாம் மட்டுமல்ல அன்னை தெரசா மீதும் குற்றச்சாட்டு வைத்திருகிறார்கள். தெரசாவின் பணி வீதியில் வீசப்பட்ட ஏழ்மையிலும் ஏழ்மையான மக்களுக்கு உணவளித்து உடை அணிவித்து ஆதரவு காட்டுவது மட்டுமே! மாறாக அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய இந்த சமூகத்தின் மீதும், ஆளும் அரசுகளின் மீது அல்ல. கலாம் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் மட்டுமல்ல. வாழ்நாள் முழுதும் எளிய வாழ்க்கை முறையை கடைபிடித்தவர். இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஓர் வல்லரச்சகக்க விரும்பியவர். தமது வாழ்நாளை அதற்காக தனது செலவழித்தவர். மகாத்மா காந்தி அஹிம்சை கொள்கையை வலியுறுத்தினார் என்ற போதிலும், இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்று சொல்லவில்லையே! குடியரசுத் தலைவர் பதவி கலாம் அவராக கேட்டுப் பெற்றதல்ல. அவரை நாடி வந்தது. கலாமுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டம் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டதல்ல. யாரும் காசு வாங்கிக் கொண்டு அழவில்லை. அவசரநிலை பிரகனடனம், ஈழமக்கள் விடுதலை, பாபர் மசூதி இடிப்பு, விவசாயிகள் தற்கொலை... என அனைத்துக்கும் அவர் பதில் சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவையற்றது. இதற்கு பதில் சொல்ல அவர் ஒன்றும் ஓர் அரசியல்வாதி அல்ல. ஓர் செயலை செய்ய நல்ல நேரம் பார்ப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது... போன்ற ஜோதிடஸ்தாத்திரங்களை எல்லாம் கலாம் ஒத்துக்கொண்டதே இல்லை. இதனை அறிய அவரது அக்கினி சிறகுகளை வாசித்துப் பாருங்கள். கல்லூரிகளில் எத்தனையோ தலைப்புகளின்கீழ் பாடங்கள் இருக்கின்றன. ஒருவர் குறிப்பிட்ட படிப்பை எடுத்து படிப்பதினால் அவர் மற்ற படிப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டுமா என்ன? இவ்வளவு பேசுகிறீர்களே, இத்தனை காலம் மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த கம்யுனிஸ்டுகள் அந்த மாநிலத்தின் சுபீட்சத்துக்கு எதை செய்து விட்டீர்கள்? வங்கத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சி, வாழ்வாதாரம் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றுவிட்டது - போராடுவதை தவிர? இன்னமும் மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஸாவை கூட உங்களால் அங்கு ஒழிக்க முடியவில்லையே? சோவியத் மக்களாலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் தூக்கி எறியப்பட்ட உங்களது உழுத்துப்போன கொள்கையை இன்னமும் கட்டி மாரடித்துக் கொண்டிருக்கிறீர்கள். கலாம் சொன்ன அறிவுரையில் ஒன்றை மட்டுமாவது நீங்கள் பின்பற்றுங்கள் அல்லது பின்பற்ற உதவுங்கள். ஆம், மரம் நடுங்கள். வருகிற தலைமுறைக்கு நீங்கள் செய்யும் புண்ணியமாக இருக்கும். மாறாக, வறட்டு வேதாந்தங்கள் அல்ல.
Madhan
இப்பதிவில் நான் பகிரவிருக்கும் தகவல்களும், அத்தகவல்கள் சார்ந்த நபர்கள் பற்றிய குறிப்புகளும் கற்பனை அல்ல. அனைத்தும் உண்மையே. சூலை 30, தனி மனித இறப்பில் கூட நாட்டில் எழுச்சியை தூண்ட முடியும், தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்கிற வலிய கருத்துக்களை முன்வைத்து தனது இறப்பிலும் கூட சாதனைக் கருத்துகளை கூறிய மாமனிதர் அய்யா அப்துல் கலாம் அவர்கள், எதுவும் சாதிக்கவில்லை என்கிற தொனியிலும், அவரை ஒரு அரசியல் கைக்கூலியாகவும் சித்தரித்துள்ளன எனக்கு கிடைத்த சில Whats App தகவல்களும், ஒரு blogல் எழுதியிருந்த கட்டுரையும். Whats App இல் நான் கிடைக்கப்பெற்ற தகவலானது ஒரு தமிழனத்துக்கு குரல் கொடுக்கும் ஒரு நல்ல போராளியின் பெயரில் பதிவானது. அத்தகவலுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு அவ்வியக்கம் சார்ந்த Whats App குரூப் லிருந்தும் வெளியேறிவிட்டேன். மற்றொரு தகவல் குறித்து தெரிந்து கொள்ள: http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/28876-2015-07-29-02-31-26 தன்னை மாற்றுச் சிந்தனையாளனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் இவ்விரு நபர்களுக்கும் இதோ சில கேள்விகள். 1. அப்துல் கலாம் விதைத்த தன்னம்பிக்கையை உங்களால் விதைக்க முடியுமா இளைஞர்களின் இதயத்தில்? ஏனெனில், ஒரு நம்பிக்கையை உடைக்க முற்படுவோர் அதைவிட பெரிய நம்பிக்கையை உங்கள்பால் உருவாக்க வேண்டும். 2. "அவர் ஏவுகணை தானே விட்டார், மக்களுக்கு என்ன செய்தார்?" என்கிற உங்கள் கருத்துக்கு, நீங்கள் என்ன செய்தீர்கள்? ஏவுகணை விட்டது ஆளும் வர்க்கத்திற்காக அல்ல. நம்மை அழிக்க நினைக்கும் அந்நிய வர்க்கத்திற்காக. 3. இவ்வளவு குறைகூறும் நீங்கள் இவ்வளவு நாட்களாக எங்கு சென்றீர்கள்? 4. உங்களின் இந்த மாற்றுச்சிந்தனையின் நோக்கம் பகட்டு விளம்பரத்திற்காக அல்ல என்று உங்கள் மனசாட்சி பதில் சொல்லுமா? ஆம் எனில், Whats App இல் பதிவு செய்திருந்த ஒரு பேரியக்க தலைவரே, நீங்கள் பகிர்ந்த செய்தியை தொலைக்காட்சி ஊடகங்களுக்கும், பத்திரிக்கை ஊடங்ககளுக்கும் பகிர முடியுமா? அந்த அளவுக்கு உங்களுக்கு திராணி இருக்கிறதா? பகிர்ந்து பாருங்கள்.. இளைஞர்களின் எழுச்சியை இந்தியா காணும். 5. மதுவுக்காகவும் ஒரு வேலை பிரியாணிக்காகவும் கூடிய கூட்டம் என்றா நினைத்தீர்கள்? உங்கள் கருத்துகளை படிக்கும் ஒவ்வொரு இளைஞனும் கொந்தளிப்பான். தங்களால் சாதிக்க முடியவில்லை என்றால் முயற்சி செய்யுங்கள். முயற்சிக்கக்கூட முடியாதவர்கள் மட்டும் தான் குறைகூறும் வேலைகளை செவ்வனே செய்வர். கேள்விகள் முடியவில்லை... இனி ஒவ்வொரு இளைஞனும், ஒவ்வொரு மாணவனும் உங்கள் பதிவுகளை காணும் போது பெரிய மனிதர்கள் என்றும் பாராமல் கேள்வி கேட்பார்கள். கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் விளம்பர வியாபாரம் செய்வதை கூடுமான வரையில் தடுக்கும் முயற்சியே தவிர விளம்பரத்திற்காக எழுதப்பட்டது அல்ல. -மதன்
Vannai abu
I always kept great respect on " Keeru" previously... but Now, after reading this article I changed my mind............CURSE OF GOD ON YOU Mr.KARKI,
avivilianm
Yeah it is true... there are a lot of fools in our . India... now it has been proved... stupid and selfish fellows only will hate this article..,,,
இரா சந்தோஷ் குமார்
உங்கள் பார்வை.. மிகவும் குரூரப்பார்வையாக இருக்கிறது தோழர் கார்க்கி. கைக்கூலி அது இது என்று ஏக விமர்சனம் வீசிய உங்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில்...அய்யா அப்துல் கலாம் மீது அன்புக்கொண்டவர்கள் தானாக அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டார்கள். யாரும் பிரியாணிக்கு ஆசைப்பட்டு செல்லவில்லை. அவரின் மேல் இந்தளவு பாசம் அன்பு வைத்தன் காரணம்..அவர் மாண்வர்களை நேரில் சந்தித்து.. இலட்சிய சக்தி ஊட்டியது.. உத்வேக சிந்தனை ஊட்டியதான் முக்கிய காரணம் அன்றி நீங்கள் சொன்ன விஞ்ஞானி எனும் காரணம் அல்ல. சரி, உங்கள் பார்வை உங்களுடையது. உங்கள் கருத்துரிமை.. உங்களுடையது. எதுவாக் இருப்பினும் பதிவு எழுதுவதற்கு முன் ஆழமாக யோசித்திருந்தால் நலமாக இருந்திருக்கும் என தோழனாக சொல்லிக்கொள்கிறேன்,. இன்னொன்று.. எந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரின் மரணத்திற்கு இதுவரை பொதுமக்கள் இவ்வளவு எண்ணிக்கையில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.. சொல்ல முடியுமா? பதில் அறியுங்கள்.. கலாமை அறிவீர்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.