எழுத்தாளர் பெருமாள் முருகன் இனி தான் எழுதப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றார். இதன் மூலம் அவர் சமூகத்திற்கு சொல்ல விழைவது என்ன? எழுத்தாளன் என்பவன் இந்த சமூகத்திற்கு அஞ்சித்தான் வாழவேண்டும் என்பதா? இல்லை சனாதான பிற்போக்கு சக்திகளின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதா?

 perumal muruganசனாதானவாதிகளை எதிர்கொள்ளத் திராணியில்லாத நீங்கள் எல்லாம் எதற்காக எழுத வருகிறீர்கள்? உண்மையில் நீங்கள் சமூக மாற்றத்திற்காக எழுத வந்திருப்பீர்களானால் இந்நேரம் அவர்களுக்கு எதிராக வீரச்சமர் தொடுத்திருப்பீர்கள். ஆனால் உங்களது செயல்பாடுகளை பார்க்கும் போது வெறும் பேருக்காகவும், புகழுக்காகவும், பணத்திற்காகவும் எழுதவந்தவர் போன்றே தோன்றுகின்றது. அதனால்தான் ஒரு கோழையைப் போன்று முடிவெடுத்திருக்கிறீர்கள். உங்களுக்காக துணிந்து குரல்கொடுத்த பல முற்போக்குவதிகளின் முகத்தில் கரியைப் பூசிவிட்டீர்கள்.

 திருச்செங்கோட்டை சேர்ந்த பெண்களை நீங்கள் இழிவுபடுத்தி விட்டதாக இந்துமதக் காலிகள் கூச்சல் போடுகிறார்களே, ஏன் அவர்களிடம் நீங்கள் சொல்லவில்லை, உலகத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களையும் இந்துமத காலிகளாகிய நீங்கள்தான் கேவலப்படுத்தி இருக்கிறீர்கள் என்று.

 பகவத்கீதையும், மனுதர்ம சாஸ்திரமும், வால்மீகி இராமாயணமும் பெண்களை கேவலப்படுத்திய அளவிற்கு உலகில் வேறு எந்த புராண இதிகாசங்களும் கேவலப்படுத்தியது இல்லை என்று அந்த மானங்கெட்ட உளுத்துப்போன இழிபிறவிகளிடம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கலாம்.

 “மாம் ஹி பார்த்த வ்யாபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு: பாப- யோனய: ஸத்ரியோ வைச்யாஸ் – தாதா சூத்ராஸ் - தேs பி யாந்தி பராங்கதிம்”(கீதை அத்.9 சுலோகம்32)

 இதற்கு என்ன அர்த்தம் என்றால் பெண்களும், வைஸ்யர்களும் , சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (திருச்செங்கோட்டில் வாழும் மானமுள்ள மனிதர்களுக்கும் இது பொருந்தும்). தமிழ் தெரியாத தமிழர்களுக்காக இதோ ஆங்கிலத்திலும் Born out of the womb of sin. இதுமட்டும் அல்ல திருச்செங்கோடு வாழும் மானமுள்ள தமிழ் மக்களே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும் முதலில் தான்தான் புணருவேன் என்றும் அதன் பிறகுதான் அவர்களது கணவர்களே புணருவார்கள் என்றும் கோபியர் 900000 பேருடன் கலவி செய்த காம வெறியன் கிருஷ்ணன் கூறுகிறான்.

 சொல்லுங்கள், மானமுள்ள திருச்செங்கோட்டு மக்களே! உங்களை உண்மையில் கேவல‌ப்படுத்தியது யார்?

 “மாதர்களின் சுபாவமே மனிதர்கட்குச் சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்”(மனு:2:213)

 “தாய், தங்கை, பெண் இவர்களுடனும் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது”(மனு:2:215)

 “மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்”(மனு:9:15)

 “மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன”(மனு9:19)

“மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண்தன்மையை மட்டும் முக்கியமாக எண்ணிப் புணருகிறார்கள்:(மனு:9:14)

 “ஒருவனின் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம்”(மனு9:52)

 “பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாயிருந்தால் அப்போது அந்த ஸ்திரீ தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது”(மனு9:59)

 “கணவன் புத்திரனில்லாமல் இறந்து போனால் மனையாள் கணவனின் தோத்திரமுள்ள ஒரு புருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக் கொண்டு, அப்புத்திரனுக்குக் கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிட வேண்டும்”(மனு:9:190)

 இவையெல்லாம் மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட செய்திகள். ஆனால் எந்த ஆர் எஸ் எஸ் காலிகளும் இதைப்பற்றி வாய் திறப்பதே கிடையாது. இப்போது செல்லுங்கள் மானமுள்ள திருச்செங்கோட்டு மக்களே உங்களை உண்மையில் கேவலப்படுத்தியது யார்?

 இன்று பெருமாள் முருகனின் புத்தகத்தை எரித்து புள‌ங்காகிதம் அடைந்த காக்கி அரை டவுசர்கள் மற்றும் அவர்களது அடிவருடிகள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும். இதை எழுதிய பொறுக்கி, புறம்போக்கு யார் என்று நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

 “இப்போது அந்த மூன்று நாட்களும் ஸ்திரீகள் ஆஃபீஸுக்குப் போவதில் ஊர் பூராவும் தீட்டுப் பரவுகிறது. அட்மாஸ்ஃபைரிக் பொல்யூஷன் என்று இன்றைக்கு அநேக விஷயங்களை எடுத்துக்காட்டி எதிர் நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கிறார்கள். அந்தப் ‘பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்திரீகளின் தீட்டே. அது செய்கிற கெடுதல் வெளியிலே தெரியாததால் அதைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள் . கவனிக்கிறவர்களையும் ஆசாரப் பைத்தியங்கள் என்று ஒதுக்குகிறார்கள். வாஸ்தவத்திலோ இந்தத் தீட்டு அமங்கள சக்திகளையெல்லம் இழுத்துக் கொண்டுவரும். அதை இப்படி எல்லா இடத்திலும் கலக்கவிட்டால், ஜனங்களுக்கு எத்தனைதான் வரும்படி வந்தாலும், கவர்ன்மென்ட் எத்தனைதான் five year plan போட்டாலும் தேசத்தில் துர்பிசமும், அசாந்தியும், வியாதியுமாகத்தான் இருக்கும்” (தெய்வத்தின் குரல்)

 இதை எழுதிய அந்த புறம்போக்கு சாட்சாத் காஞ்சி பரமாச்சார்யா என்று அவாள்களால் அன்போடு அழைக்கப்படும் சந்திரசேகந்திர சரஸ்வதி தான். இந்த நாயின் புத்தகம் இன்னும் கடைகளில் விற்றுக்கொண்டுதான் உள்ளது. மானமுள்ள தமிழ் மக்கள் இதை என்ன செய்யப்போகிறார்கள்?

 ஒரு வரலாற்று நாவலை எழுதும்போது சில வரலாற்று உண்மைகளை கூறவேண்டியது ஒரு எழுத்தாளனின் கடமையாகும். அவ்வாறான சில வரலாற்று உண்மைகளையே பெருமாள் முருகன் தன்னுடைய ‘மாதொருபாகன்’ நூலிலே கூறியிருக்கிறார். தான் சொல்லிய வரலாற்று தகவல்கள் உண்மை என்பதை நிருபிக்கவேண்டிய பொறுப்பு அவரையே சார்ந்தது. அதை விட்டுவிட்டு தான் இனி எழுதவே போவதில்லை என்று சொல்வது ஒரு கோழையின் செயலாகும்.

 பாஜகா- வை எப்படியாவது தமிழ்நட்டில் காலுன்ற வைக்க பார்ப்பன பாசிஸ்ட்டுகள் செய்யும் அரசியல் சதி இது. இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் சொல்கிறோம்,  அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லாத இந்த மானங்கெட்ட மடப்பயல்களுக்காக நீங்கள் ஏன் எழுதுவதை நிறுத்த வேண்டும்? உயிர்வாழ்வது ஒருமுறை மோதிப் பார்த்துவிடுங்கள். மோதுவதற்கு திராணியில்லையா நீங்கள் எழுதாமல் இருந்து விடுவதே நல்லது.

Comments

4 comments

4
t.yalthevan
why you did not see the ramayana and mahabaratham lik perumal murugan writings. but you are going to burn it. which is right? which is wright to expresition?
Ramea
பெ.முருகனைத் திராணி இல்லாதவர் என்று கூறும் கார்கி அவர்களே! தற்கொலை செய்து கொள்வதும் சமூக அமைப்புக்கு எதிராகச் செய்யும் கலகம் தான் என்று ஃபிடல் காஸ்ட்ரோ கூறிய படி பெருமான் முருகன் இனி எழுதப் போவதில்லை என்று கூறி இருப்பதும் ஒரு வகைப் போராட்டம் தான். நீங்கள் எடுத்துக் காட்டி உள்ள தர்க்க நியாயங்கள் சனாதனவாதிகளுக்குத் தெரியாதா? நன்றாகத் தெரியும். அவர்கள் அறிவின் அடிப்படையில் வாதம் செய்ய வரவில்லை. ஆகவே உங்கள் யோசனையின்படி பெருமாள் முருகன் செயல் பட்டு இருந்தாலும் அது செல்லுபடி ஆகாது. (ஒரு வேளை அவர் அது போல் செயல்பட்டும் இருக்கலாம்.) இப்புத்தகம் வெளி வந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவும் ஆங்கல்தில் மொழி பெயர்க்கப்பட்டு 12 பதிப்புகள் வரை ஓடிய பிறகு, எதிர்ப்பு கிளம்புகிறது என்றால் அதன் பின்னணியில் உள்ள பலாபலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப நம் போராட்டத்தை வடிவமைக்க வேண்டும்.
ப. சுகுமார்
இந்து புராணங்களில் பெண்களை இழிவுபடுத்தியிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். பெருமாள் முருகன் அவரது 'மாதொருபாகன்' நாவலிலே பெண்களை எந்த வகையில் குறிப்பிட்டு இருக்கிறார்? ஏனெனில் பலர் அந்த நாவலை படித்திருக்க மாட்டார்கள்.
m.somasundaram
Perumal murugan presentation is very casual. No vulgar sensation and feelings. his use of words are careful and doesnot make any offending or ill feelings. It is just showing of a practice in the past.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.