இது ஒருவரின் பெயர். இவர் புரட்சிகாரர் இல்லை. கம்யுனிஸம் பேசவில்லை. எந்த நாட்டின் விடுதலைக்காகவும் குரல் கொடுக்கவில்லை. ஆனால் அனேகமாய் ஒரு தனி மனிதனை அமெரிக்கா கொலைவெறி கொண்டு தேடும் முதல் நபர் இவர்தான். இந்த தனிமனிதனுக்கு எதிராக சீனா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளை மிரட்டும் அளவுக்கு அமெரிக்கா சென்றுள்ளது.

வேறொன்றுமில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக விக்கிலீக்ஸ் இணையதளம் எப்படி அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்டதோ அதே போல இவரும் ஒரு தகவலை வெளியிட்டார். அவ்வளவு தான். ஆனால் அந்த ஒற்றைத் தகவலுக்குள் ஒளிந்திருக்கிறது உலகின் சர்வாதிகாரி யார் என்பதற்கான பதில்.

உலகில் பெருகி வரும் சமூக வலைதளங்களில் செயல்படும் ஒவ்வொரு தனிமனிதனையும் அமெரிக்க உளவுத்துறை கண்காணித்து வருகிறது என்பதே அந்த தகவல். சும்மா இருக்குமா சர்வதேச சண்டியர் அமெரிக்கா…??

சல்லடை போட்டு சலிக்கிறது உலகை. ஸ்னோடென்னுக்காக. ஒளித்து வைத்திருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனாவையும் ரஷ்யாவையும் எச்சரிக்கிறது. ஆதரவளிக்க முன்வரும் ஒவ்வொரு நாட்டையும் மிரட்டுகிறது. அமெரிக்கா இவ்வளவு துடிக்கிறது என்றால் அதனுடைய வெளித்தெரியும் கோரப்பற்களில் வழியவிருக்கும் ரத்தத்தின் அளவு அவ்வளவு அதிகாய் இருக்கும் என்றே தெரிகிறது.

இந்தியாவையும் சேர்த்தே அமெரிக்கா உளவு பார்க்கிறது என்று அமெரிக்க அமைச்சர் இந்தியாவில் இருந்து சொல்லும் போது இந்திய அமைச்சர் பல்லைக் காட்டுவதை போல இல்லை உலகம். ஸ்னோடென்னுக்கு ஆதரவான போராட்டங்கள் உலகெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. 

சீனா, ரஷ்யா என தொடரும் ஸ்னோடென்னின் பயணம் கியுபா, வெனிசுலா நோக்கி நகர்வதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஏகாதிபத்தியங்களை எதிர்த்திடும் வல்லமை இட்து சாரிகளுக்கே உண்டு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.