எந்த ஒரு பிரச்சினையையும் அதன் தொடக்கத்தில் தீர்க்காமல், அது புண்ணாகி, புரையோடி, பாதிக்கப்பட்ட உறுப்பையே எடுத்தால்தான் உயிரையே காப்பாற்ற முடியும் என்கிற அளவுக்குக் கொண்டு போய்விட்டு, அதன் பின் களிம்பு பூசுவதில் வல்லவர்கள் இந்திய அரசியலாளர்கள். அதன் பிறகு, அந்தக் களிம்பு தடவியதையே பெரிய சாதனையாகப் பேசி வாக்குக் கேட்டு வருவார்கள். உறுப்பையே எடுக்க வேண்டிய நேரத்தில் மருந்து பூசுவது உதவியில்லை, உயிர்க்கொலை என்பதைப் புரிந்து கொள்ளாத நம் மக்களும் இளித்துக் கொண்டே வாக்கை அள்ளித் தருவார்கள். எல்லாத் தேர்தல்களிலும் காலங்காலமாக நடக்கும் இந்த அரசியல் விரச நாடகத்தை இந்த முறை பன்னாட்டு அளவில் பிரம்மாண்டமாக அரங்கேற்ற இந்திய அரசு எடுத்து வைத்துள்ள முதல் படிதான் நேற்றைய ‘இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த நாடாளுமன்ற கவன ஈர்ப்புத் தீர்மானம்’!

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அங்கே கண்ணெதிரே மக்கள் இலட்ச இலட்சமாகக் கொன்று குவிக்கப்பட்டபொழுது வராத இந்த அக்கறை இன்று பாலச்சந்திரன் என்ற ஒரே ஒரு சிறுவன் கொல்லப்பட்டவுடன் எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? “அட! சிறுவனில்லையா? பால்மணம் மாறாப் பாலகனில்லையா? அதனால்தான் அதைப் பார்த்தவுடன் இந்திய அரசுக்கு உள்ளம் தாளவில்லை. என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே” என்று சொல்லாதீர்கள்! ஏன், இதே தொலைக்காட்சிச் செய்திகளில் போர் விமானத்தின் (அதுவும் இந்தியப் போர்விமானம்தான் பெரும்பாலும்) பேயொலி கேட்டுச் சின்னஞ் சிறுவர்களெல்லாம் அலறிக் கொண்டு ஓடிய காட்சிகள் காட்டப்படவில்லையா? தாக்குதலின் கொடூரத்தைக் கண்டு அஞ்சி மறைவிடங்களில் ஒளிந்துகொண்டு சிறுவர் சிறுமியர் கதறி அழுது கொண்டிருந்த காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லையா? பிஞ்சுக் குழந்தைகளெல்லாம் கையிழந்தும், காலிழந்தும் குருதி வழியத் தெருக்களில் பிணமாகக் கிடந்தது காண்பிக்கப்படவில்லையா? அப்பொழுதெல்லாம் தோன்றாத இந்தக் கரிசனம், நாடாளுமன்றத்தில் இதற்காகக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரும் எண்ணம், இப்பொழுது எழக் காரணம்?... ‘நாடாளுமன்றத் தேர்தல்’!

தமிழ் இனத்தையே அழித்துவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வருவது என மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றன காங்கிரசும், தி.மு.க-வும். தானே குழி தோண்டிப் புதைத்த ‘டெசோ’வுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது, அது, இது என்று கருணாநிதியும் என்னென்னவோ மாய்மாலங்களெல்லாம்... சீ! மாய வித்தைகளெல்லாம் செய்து பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை.

இதே போல், ‘உலக மன்னிப்புக் கழகம்’ முதலான பன்னாட்டு அமைப்புகளின் அழுத்தம் தாங்காமல், ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்ததாகக் காட்டியாவது ஆக வேண்டிய நிலைமையில் இருக்கிறது அமெரிக்காவும்.

இந்த இரு தரப்பும் சேர்ந்து ஜெனிவாவில் அரங்கேற்ற இருக்கும் பன்னாட்டு அரசியல் நாடகத்தின் முன்பாதிதான் நேற்று நாம் தொலைக்காட்சிகளில் பார்த்த, இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ‘ஈழப் பிரச்சினைக்கான நாடாளுமன்ற கவன ஈர்ப்புத் தீர்மானம்’.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் இந்தத் தீர்மானத்தில் உண்மையில் எந்தத் தீர்வும் இல்லையென்றும், வெறுமனே பேருக்கு இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குப் பதில் ‘தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு’ முதலான உண்மையான தீர்வுகள் அடங்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர வேண்டுமென்றும், இந்தப் போலித் தீர்மானத்தைக் கைவிட வேண்டுமென்றும் ஏற்கெனவே உலகளவில் தமிழ் உணர்வாளர்களும், தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்தப் போலித் தீர்மானத்தை எதிர்த்துப் போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால் வழக்கம்போல், அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அப்பொழுதே இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகத் தெரிவித்தது!

மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்காமல் போலித் தீர்வுகளை முன்வைத்து, எப்பொழுதும் எந்தப் பிரச்சினையும் முடிவுபெறாமலே பார்த்துக் கொள்வதில் அசகாய சூரர்களான இந்திய ஆட்சியாளர்கள், அதையே இன்னொரு நாடு செய்யும்பொழுது, அதுவும் அது தனக்குச் சாதகமான ஒன்றாகவும் இருக்கும்பொழுது அதை ஆதரிக்காவிட்டால்தான் வியப்பே!

ஆனால் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை ஏற்கெனவே தமிழர்கள் எதிர்க்கும் நிலையில், அதை இந்தியா ஆதரிக்கும் என மீண்டும் மீண்டும் சொல்வதால் தமிழ்நாட்டில் மறுபடியும் மறுபடியும் போராட்டங்கள் வெடிப்பதுதான் மிச்சம் என்பது இந்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். அதைவிட, அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழர்கள் மீது இந்தியாவுக்கு அக்கறை இருக்கிறது எனத் தமிழர்களே சொல்லும்படி ஒரு நிலையை உருவாக்குவதற்காகத்தான் இந்திய அரசு இந்த இலங்கைப் பிரச்சினைக்கான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து காங்கிரசு, தி.மு.க உட்பட எல்லாக் கட்சிகளையும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேச வைத்தது. இப்பொழுது அடுத்தது என்ன?... இத்தனை கட்சிகளும் கேட்டுக் கொண்டதன் பேரில், தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கையிலெடுப்பதாகக் கூறி தான் முன்பே திட்டமிட்டபடி அமெரிக்காவின் வஞ்சகத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறது இந்தியா. இதற்காகத்தான் இந்தத் திடீர்க் கரிசனம்!

இந்த ஒரே ஒரு நகர்த்தல் மூலம் இந்திய அரசு சாய்க்கத் திட்டமிட்டிருக்கும் காய்கள் பல!

ஆக மாநில அரசியல், தேசிய அரசியல், பன்னாட்டு அரசியல் என மூன்று மட்டங்களிலும் பெரும் லாபம் ஈட்ட முறையே தி.மு.க, காங்கிரசு, அமெரிக்கா ஆகிய மூன்றும் சேர்ந்து நடத்தும் அபாயகரமான அரசியல் சூதாட்டம் இது! இதில் மீண்டும் பலியாகப் போவது ஈழத் தமிழர்கள்தான்! நடந்து முடிந்த இனப்படுகொலையில் தொடுக்கப்பட்ட இராணுவத் தாக்குதலை விடப் பயங்கரமான அரசியல் தாக்குதல் இது! இனப்படுகொலையின் பொழுதாவது அது மக்கள் மீதான வன்முறை என்பது வெளியில் தெரிந்து, உலகம் அதற்கெதிராகக் குரல் கொடுக்க முடிந்தது. படுகொலை ஒரு முடிவுக்கு வந்த பிறகான காலகட்டத்தில் கூட, தொடர்ந்து அங்கு நடக்கும் அட்டூழியங்கள் காரணமாக உலகம் தன் கண்டனத்தைத் தெரிவிக்க முடிந்தது. ஆனால், இப்படியொரு தீர்வில்லாத தீர்மானத்தை அமல்படுத்தினால் அது நிறைவேற்றப்படும் வரை யாரும் எதுவும் பெரிதாகக் கேட்க முடியாது. கேட்டால், “பொறுங்கள்! இப்பொழுதுதானே தீர்வு முன்வைக்கப்பட்டிருக்கிறது? அது நிறைவேற்றப்படுவதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்” என்றுதான் உலக நாடுகளிடமிருந்து பதில் வரும். சில ஆண்டுகளுக்கு, இலங்கையை யாரும் எதுவும் கேட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

எனவே உண்மையான தமிழ் உணர்வாளர்களும், போராட்டக்காரர்களும், தலைவர்களும் எழுச்சி கொள்ள வேண்டிய நேரம் இது! உண்மைத் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் நின்று அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக... இல்லை இல்லை, ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுகப்படவிருக்கும் இந்த அடுத்த பெரும் தாக்குதலுக்கு எதிராகப் போராட வேண்டும்! ஜெனீவா மனித உரிமைக் கூட்டம் நடைபெறவிருக்கும் கட்டடத்துக்கு முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்! கூட்டத்தில் பங்கேற்று அந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் பேசி, இந்தத் தீர்மானம் தமிழர்களுக்குத் திருப்தியளிக்கவில்லை, தமிழர்கள் எதிர்பார்க்கும் தீர்வு இது இல்லை என்பதைப் பன்னாட்டு அரசியல் அரங்கில் பதிவு செய்ய முயல வேண்டும்!

இல்லாவிட்டால், நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதி மீது விழவிருக்கும் வரலாற்றுப் பழி இவர்கள் மீதும் சேர்த்துச் சுமத்தப்படுவதிலிருந்து இவர்கள் தப்ப முடியாது!

- இ.பு.ஞானப்பிரகாசன்

Comments

13 comments

13
suresh
அப்படியே ஈழத்தாயுக்கும் எதாவது ஐடியா சொல்லி ஈழம் கிடைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்.தேவையில்லாமல் கலைஞரோ மற்றவர்களோ ஏதாவது செய்யும் முன்னே .
நீங்க என்னையப் பாராட்டறீங்களா, இல்ல ஓட்டறீங்களா?
தமிழின் தலையாய இணைய ஏடான 'கீற்று' என் படைப்பை ஏற்றுக் கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்! மிக்க நன்றி நந்தன் அவர்களே!
suresh
ஈழச் சிக்கலில் கலைஞரை குறை கூறி யார் எழுதினாலும் கீற்று வெளியிடும்
ஈழச் சிக்கலில் கலைஞரைத் தவிர, அவ்வளவு பெரிய கொடிய துரோகத்தைச் செய்தது வேறு யார் எனச் சொல்லுங்கள் அவர்களைக் குறை கூறுகிறோம்! அப்பொழுது ஆட்சியிலும், அவர்களைக் காப்பாற்றக்கூடிய முழு வல்லமையுடனும் இருந்த கருணாநிதியைக் குறை கூறாமல் ஈழ இனப்படுகொலைக்காக வேறு யாரைக் குறை கூறுவது? ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இன்று ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு கருணாநிதியைத் திட்டுபவர்களில் பெரும்பாலானோர் அதற்கு முன்பு வரை அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள்தாம்! நான் உட்பட.
கடலூர் சித்தன்.ஆர்
அதர்மத்தை அனைவரும் எதிர்க்கும் வேளையில்
ஞாயத்தை நிலைநாட்ட விரும்புவோர் அனைவரும் ஒன்று பட்டால் நல்லது!!!
“பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவை தனது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள கருணாநிதி எண்ணுகிறார்; அதனால் மார்ச் 12ல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.”
அதர்மத்தை அனைவரும் எதிர்க்கும் வேளையில் அதற்கு உதவி யார் செய்தால் என்ன??? எந்நிலையில் செய்தால் என்ன??? ஞாயத்தை நிலைநாட்ட விரும்புவோர் அனைவரும் ஒன்று பட்டால் நல்லது.வாய்மையே வெல்லும்!!! வாழ்க வளமுடன்!!!
dhinakaran-orathanadu
ஈழப்படுகொலை நடந்த காலத்தில் தமிழக முதல்வராய் இருந்த நிறைய கடிதங்கள் எழுதினார்....தனது குடும்பத்தினர் நலனுக்காக மந்திரி பதவி வாங்க டெல்லியில் முகாமிட்டதை நாடறியும்.ப்ரப்ஹகரனின் தாயார் சிகிச்சைக்காக வந்த போது திருப்பி அனுப்பியவர்!மெரினாவில் உண்ணாவிரதமிருந்து போரை நிறுத்தியதாக விளம்பரம் தேடிகொண்டவர் .இந்தி தெரிந்த தனது பேரன் மந்திரியானால் நிறைய நலத்திட்டங்கள் கொணருவார் என்று கூறி தான் முன்னர் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தானேகேவலப்படுத்தியவர்.அண்டை மாநிலங்களில் தான் நடத்தும் தொலைக்கட்சித்தொழிலுக்கு இடையூறு இல்லாதவகையில் தமிழக நதி உரிமைகளை மென்மையாக விட்டுக்கொடுப்பவர்.இன்றைய பகுத்தறிவின் மகிமை மஞ்சள் துண்டில் இருப்பதை வெட்கமின்றி வெளிப்படுத்துபவர்.தன்னை புலிகளை வைத்து கொல்லப்பார்க்கிறார் என்று வைகோவை வெளியேற்றிவிட்டு,வைகோவுடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கத்தினரால் தயாநிதி மாறன் உயிருக்கு ஆபத்து என்று டி.ஆர்.பாலு மூலம் பிரதமரிடம் மனு அளிக்கச்செய்துவிட்டு பிரபாகரனை தனது நண்பர் என்று வெட்கமின்றி தொலைக்காட்சிப்பேட்டியில் சொல்லிவிட்டு பின்னர் பல்டி அடித்தவர்.ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவமுடியாது என்று யுத்தகாலத்தில் வியாக்கியானம் செய்த சோனியாவின் அடிமை இன்று 'டெசோ' வை வைத்து ஈழத்தமிழர்களுக்கு உதவ போகிறார்களாம்.....நம்புங்கள் தமிழர்களே...கேழ்வரகில் நெய் வடிவதை!
salanan
சாதாரண தமிழக மக்கள் மிகப்பலருக்கு ராஜபக்ச யார் என்று கூட தெரியாது. தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. இப்போது போராட்டத்தில் குதித்திருக்கும் கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். (ஏதோ ஆர்வக்கோளாறில் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்) இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்கி பிரச்சாரம் செய்யவேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மற்ற மாணவர்களுக்கும் தெரியப்படுத்தலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடும் மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. சட்டக்கல்லூரி மாணவர்களை பற்றி பொது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. எப்போதும் கல்லூரிக்குள் ரகளை செய்பவர்கள், சாதி மோதலில் ஈடுபடுபவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது. இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. ஆனால் அது இறையாண்மை கொண்ட தனி நாடு. அதனால் தான் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டை உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே உலகம் கவனிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனிப்பார்களா என தெரியவில்லை.
M.Durga Devi
ஈழம் தொடர்பான உன்மைகள் படைப்பாளர்களீன் எழுத்துக்கள் வாயிலாக சென்றூ ஸேர்ப்பதில் keetru முக்கிய பங்காட்றீகிறது.
suresh
To ALL

அப்படியே ஈழத்தாயுக்கும் எதாவது ஐடியா சொல்லி ஈழம் கிடைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்.தேவையில்லாமல் கலைஞரோ மற்றவர்களோ ஏதாவது செய்யும் முன்னே
RRaj
ஈழம் கிடைபதற்கு என்ன யோசனை சொல்லுங்கள், சர்வதேச விசாரணை வந்தால் தான் இதற்கு ஒரு சரியான நியாயம் கிடக்கும்..... கண்டிப்பாக, இந்திய, அமெரிக்க, இலங்கை, சமாதிக்க மாட்டன், அமெரிக்க எதுக்கு இதல தலை போடுவன் சொல்லுங்கள் அவனுக்கு லாபம் பார்பதற்கு தான், செத்த மக்களுக்கு நேயம் பேச இல்லை... இன்ன படுகொலை செய்ததில் இந்திய பங்குகள் உண்டு (காஷ்மீர், குஜராத், ஈழம்), இன படுகொலை செய்ததில் அமெரிக்க பங்குகள் உண்டு ( ஈராக், ஆப்கானித்தான், ஜப்பான்), ஸ்ரீலங்கா பங்கு உண்டு.... அதனால் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானம் எப்படி தமிழர்களுக்கு உதவும், அமெரிக்க திட்டமே தனி ஈழம் கிடைக்க கூடாது என்று தான்.... கொலை கரனே நியாயம் சொல்லும் நிலைமை........
RRaj
என்னும் ஒரு கேள்வி???? 2009 இல் நடந்த இன்ன படுகொலை, என்பது ஒரு விஞ்ஞான துறை இல் எல்லா நாடுகளுமே முனேறி இருந்த கால கட்டம் அது, ஒருத்தன் எங்க எங்க செலுகிரன் என்று நாம் துணைக்கோள் (சடெல்லிடெ) கொண்டு கண்டு பிடிக்கிறோம் ஆனால் 40,000 மேல் மக்கள் தொடர்ந்து சேது விழுந்த போது, ஒரு துணைக்கோள் (சடெல்லிடெ) கு கண்ணு தெரியாமல் போய் விட்டதா.. இது எல்லாம் எப்படி பட்ட கூட்டு நாடகம் என்று நமக்கு தெரிகிறது.... எல்லா பண்ணிகளும் சேர்த்துதான் நாம் இன மக்களை கொன்றது.....
netrikkan
இந்தியாவின் கடுமையான இராசதந்திர எதிர்பின் காரணமாக மீண்டும் இரண்டாவது ஆண்டாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அனைத்துலக சமூகம் கோரியுள்ளது மிக மிக குறைவானதும் விதிலக்கானதும்மே ஆகும்!!! அதாவது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை தீவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும், பொறுப்புக் கூறலையும் கொண்டு வரும் முக்கிய செயல் முறைகளில் ஒன்றாகிய போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மையுடைய விசாரணையை இலங்கை செய்ய விரும்பா விட்டாலோ அல்லது அதற்கு செய்ய முடியாமல் போனாலோ சர்வதேச சமூகம் ஒரு சர்வதேச பொறிமுறையை அங்கு செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும். குறைந்த பட்சம் ஈழப்போரின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் திருப்தி கொள்ளும் வரை அனைத்துலக சமூகம், நீதி, நியாயமான நம்பகமான விசாரணைகளைக் கோரும்.
மேலும்,போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு நம்பகமான உள்ளக விசாரணைகள் நடத்தப்பட்டாலும், இலங்கை இந்நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்நாள் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச உட்ப்பட பல ஆயிரம் இந்நாள் இராணுவ அதிகாரிகளும் உயிருடன் இருக்கும் இலங்கை முந்நாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, முந்நாள் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கே, முந்நாள் பாதுகாப்புச்செயலர்கள் உட்ப்பட பல முந்நாள் இராணுவ அதிகாரிகளும் மீதும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற பாதிகப் பட்ட இலட்சோப இலச்சம் ஈழத் தமிழர்களின் கோரிக்கையை இலங்கை தொடர்ந்தும் புறக்கணிக்கும்!!!
ஏனென்றால், இந்த விசாரணைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச உயர் இராணுவ அதிகாரிகள் வகித்த முக்கியமான பங்கை வெளிப்படுத்தி விடும்.
கடந்த காலங்களில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகளைக் குழப்பியது இலங்கை அரச தரப்புக்கள்தான். இதனால் அவை மீது தமிழ் மக்கள்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப்பெறவே உண்மை நிலைவரத்தை பல தடவைகள் இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் தெரிவித்து, தமிழருக்கு அதிகாரங்களை அரசு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சகல கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரையில் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நவநீதம்பிள்ளையிடம் இந்தியா கோரியுள்ளது. எனினும், விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் இலங்கைக்கு விஜயம் செய்யப் போவதில்லை என நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை சர்வதேச சமூகத்தின் சொல்லுக்குச் செவிமடுக்க வேண்டும். இதுவரை தன்னால் நிறைவேற்றப்படாத திட்டத்தையும் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்க வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்ப்பொழுது இனப்படுகொலை செய்தவர்களிடம் அது தொடர்பில் விசாரணை செய்யும் படி கோருவது எந்தவிதத்தில் நியாயமாகும்???
முதன்முதலாக 1980 களில் உள்ளக இடப் பெயர்வுக்கு உள்ளான வட மாகாணம் சிங்கள எல்லைக் கிராமங்கள் எதுவும் இல்லாத யாழ்ப்பாணம் மாவட்டம் - உடுவில், காங்கேசந்துறை, கோப்பை, பருத்தித்துறை, தொகுதிகளின் கிராமங்கள் ஆகிய மாவிடபுரம், தையிட்டி, மயிலிட்டி, பலாலி, வயாவிளான், குரும்பசிட்டி, கட்டுவன், குப்பிளான், அச்சுவேலி போன்ற பல நூறு கிராம மக்களே இதுவரையும் மீளவும் குடியேறாத நிலை எனில்ச் சிங்கள எல்லைக் கிராமங்களை அடுத்துள்ள ஏனைய தமிழீழ மாவட்டங்கள் ஆகிய வவனியா, முலைத்தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்றவற்றின் தமிழீழத் தமிழ் மக்கள் எவ்வாறு மீளவும் குடியேறி இருக்கமுடியும்??? இவ்வாறு தமிழீழத் தமிழ் மக்கள் 50 ஆண்டுகளுக்கு கிட்ட தமது வாழ்விடங்களைப் பறிகொடுத்தும் உயிர்களைப பலிகொடுத்தும் பரிதவிக்கையில், மீள்குடியேற்றம் "அது தமிழீழத்தில் வலிந்த சிங்களர் குடியேற்றமே" குறித்து அமெரிக்காவின் பிரேரணையில் பாராட்டுதல் வெளியிடப்பட்டுள்ளமை வேதனைக்கு மேல் வேதனையாக வெந்த புண்ணில் வேல் பாச்சுவதுதான்!!!!!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில், இலங்கை மீது சர்வதேச ரீதியிலான நடவடிக்கை எடுக்க நேரிடும் என கடந்தவாரம் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையிலும், அதாவது இலங்கை அரசு வாக்குறுதிகள் ஆகிய "குறைந்த பட்சம் 1987 இலங்கை-இந்திய ஒப்பந்தப் பிரகாரம் இலங்கையின் வட -கிழக்கு இணைந்த தமிழீழத் தாயகப் பகுதிகளாகிய தனி மாநிலத்திற்கு இலங்கையின் அரசியல் சாசனத்தில் செயல்லற்று இருக்கும் 13ம் திருத்தத்தை மேலும் திருத்தி வலுப்படுத்தி பூரண தன்னாட்சி அதிகாரங்களைத் தமிழீழத் தாயகப் பகுதிகளாகிய தனி மாநிலத்திற்கு திட்டவட்டமாக வழங்கி அமைதியை நிறைவேற்றுதல்" தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையிலும்;
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில் விதிக்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் எஞ்சிய பரிந்துரைகளும் நிறைவேற்றப்படும் என இலங்கை அரசு தெரிவித்து ஏமாற்றிக் காலம் கடத்துகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டன. எஞ்சிய பரிந்துரைகள் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்பட்டுவிடும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிர்ப்பந்தங்களுக்கும் அழுத்தங்களுக்கும் அரசு அடிபணிந்து விடாது என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசுக்குக் கால அவகாசம் தேவை. எனினும் 2014இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறுவதற்கு முன்னர் இந்நிறைவேற்றம் சாத்தியப்பட்டுவிடும் என தான் நம்புகிறார் என்றும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார். "அப்படியாயின் சீனா அல்லது வேறு ஏதாவது நாடுகளில் இலங்கை இந்நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்நாள் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச உட்ப்பட பல இந்நாள் இராணுவ அதிகாரிகளும் தலைமறைவாகக் கூடும்???"
சர்வதேசத்தின் குறிப்பாக பல்வேறு நாடுகளின் மத்தியஸ்தத்துடன் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் ஒரு நாடு மத்தியஸ்தம் அல்லது ஒரு அமைப்பு மத்தியஸ்தம் மட்டும் போதாது.
தமிழீழத் தமிழ்மக்களுக்கான ஒரே தீர்வு தனி அரசத் தனிநாட்டுத் தமிழீழம் என்பதே தமிழீழத் தமிழ்மக்களின் நிலைப்பாடாகும். இதுவே உலகத் தமிழ் மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.
தமிழ் ஈழத்தை தனி அரசாக்கும் கோரிக்கையை இன்றோ, நாளையோ, 24 மணியில் வென்றெடுக்க முடியாது! அதனால், அதற்காக போராடாமல் இருந்து விடுவோமேயானால், தாயை பலர் சேர்ந்து கற்பழிக்கையில், " இத்தனை பேரை நான் என்ன செய்வது" என சாக்கு சொல்லி அதை வேடிக்கை பார்த்ததுக்கு சமம். அப்படி எனிலிந் நிலையில் போராட்டத்தை தீவிரமடையச்செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், போராட்டம் எப்படி அமைய வேண்டும்? எவ்வழியில்? எது வரையில்? யார் எல்லாம் இணைய வேண்டும்? தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மட்டும் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தங்கள், பொருட்கள் ஆகியவற்றிற்கு பாடை கட்டினால் மட்டும் போதாது, இந்தியத் தமிழ் மாணவர்களைப் பின்பற்றி உலகத் தமிழ் மாணவர்கள் இந்தியத் தமிழ் மாணவர்களின் வழிகாட்டலில், உலகத் தமிழர்கள் எல்லோருடைய வாழ்விலிருந்து அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய நிறுவனங்களைத் துடைத்து எறிய வேண்டும்.
இன்று ஐக்கிய நாடுகள் இன் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஆல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறை ஏற்றப்பட்டு உள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 26 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன, 8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.
இது சுனாமியால் அடித்தளிச் செல்ப்படும் ஒரு இன மக்கள் கூடத்திற்கு இப்படி ஒருசில துரும்புகளை ஒருசில முறை தூர இருந்து வீசி எறிந்து விட்டு தமிழீழத்தில் தமிழ் இன அழிப்பை நிறுத்தி விட்டது ஆகப் பல முறை பல நாடுகளும் ஏமாற்றியது வரலாறு. மேலும் இறுதி நேரத்தில் இந்தியா வேண்டும் என்றே இலக்கை விலத்தி அதாவது இந்தியத் தமிழ் மாணவர்களின் பாரிய நேரடியான ஆகப்பலத்தை வெளியே வீசி எறிந்து உடைத்து இருக்கிறார்கள். இந்தியத் தமிழ் மாணவர்களைப் பின்பற்றி உலகத் தமிழ் மாணவர்கள் இந்தியத் தமிழ் மாணவர்களின் வழிகாட்டலில் தமது அமைதிப் போராட்டத்தை உலகம் எங்கும் வியாபிக்கச் செய்தேயாக வேண்டிய வரலாற்றுக் கடமையில் உள்ளார்கள். மேலும் இந்தியமத்திய அரசு இந்தியத் தமிழ் மாணவர்களின் பாரிய நேரடியான ஆகப்பலத்தை வெளியே வீசி எறிந்து உடைத்திருப்பத்தை தமிழ்நாட்டு அரசு ஒரு மிகப்பலமான தன் தனியதிகாரமப் பயன்படுத்தித் தமிழீழத்தில்ப் பொதுமக்கள் நலன் கருதி நேரடித் தலையீடு செய்தேயாக வேண்டிய வரலாற்றுக் கடமையில் உள்ளது!!!--- வேறு நாடுகள் சில இந்தியாவெளியே வீசி எறிந்து உடைத்தவற்றை பொறுக்கிப் பயன்படுத்தக் கூடுமா??
இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காது என்று அக் கட்சியின் மூத்த தலைவரான முரளிமனோகர் ஜோஷி கூறுகையில், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்க முடியாது. வெளியுறவுக் கொள்கை என்பது ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும் என்றார்; அதே போல அக் கட்சியின் மூத்த எம்பியான ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வருவது எங்கள் அரசு இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதைக் காட்டி ஆட்சியைக் காப்ப்றிக் கொள்வதற்காகவே அன்றி இலங்கைப் பிரச்சனைக்காக அல்ல என்றார். மேலும் இலங்கை விவகாரத்தில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அந் நாட்டுக்கு எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதும், இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி தருவதையும், ஆயுதங்கள் தருவதையும் தடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலங்களிலேயே இலங்கைச் சிங்கள அரசுகளுக்கு அனைத்து விதத் தமிழ் இன அழிப்பு உதவிகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி ஆயின், இந் நிலையில் இப்போது வாஜ்பாய் கால கொள்கையை பாஜக குழி தோண்டிப் புதைத்து விட்டது என்பது திண்ணம்!!! அதாவது தற்போதைய நிலைமையில் மத்திய அரசின் ஒரே ஒரு வெளியுறவுக் கொள்கை இந்தியா முழுமைக்கும் இருக்க வேண்டும் என்பதும் அதேநேரத்தில் இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காதும் என்பதன் மூலமும் தெளிவாகிறது.

உலக வரலாற்றில் சர்வதேச சமூகம் இதுவரை கண்டிராத நீண்டகால இனப் படுகொலை என்னும் பெரும் வரலாற்று கபளிகரத்தைச் தக்க தக்க அளவுப் பரிமானங்களுடன் அதாவது தன்னிடம் அவ்வப்போது கேள்வி கேட்கும் இந்தியா உட்ப்பட பிற நாடுகளை அடக்கும் தந்திரமாக சிறிது சிறிதாக அல்லதுவெவ்வேறு திட்டப் பெயர்களைப் பயன்படுத்தி அதாவது உதரணத்துக்கு இப்பொழுது எஞ்சியிருக்கும் தமிழீழத்தின் வடபகுதியில் மீள் குடியேற்றம் என்னும் பெயரில் சிங்களக் குடியேற்றம், என்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தவறாமல் ஒவ்வொரு சிங்களப் பேரினவாத அரசுகளும் திட்டமிட்டு எம் தாய் நிலமான தமிழீழ மண்ணில் திட்டமிட்ட தமிழ் இனவழிப்பு தொடர்ந்து நடத்துகிறன!!! எல்லாப் புளி விபரங்களையும் எடுத்து சிறிலங்கா, இந்தியச் சனத்தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிட்டால் இன்று தமிழ்ழீ சனத்தொகை ஏறத்தாள 90 லட்சம் (0.9 மில்லியன்) ஆக இருக்க வேண்டும் அனால் இன்று அது வெறும் 15 லட்சம் மட்டுமே!!! அதிலும் தேர்தல்க் காலங்களில் எம் தாய் நிலமான தமிழீழ மண்ணில் வாக்குச் சாவடிக்கு செல்லக் கூடிய தகுதிகள் எல்லாவற்றையும் உடையோர் 40% தொடக்கம் 50% மட்டுமே. எனவே இவ்வினவழிப்பு இன்னும் சில ஆண்டுகளில் முற்றுபெற்று இலங்கைத் தீவில் அமிழ்தமான தமிழ்மொழியும், தமிழ் இனமும், எம் தாய் நிலமான தமிழீழமும் இல்லாமல்ப் பறிபோகும் அறிகுறி வெள்ளிடமலையாகத் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது!!! இதனால் தமிழ் நாட்டில் தம் தொப்பிழ்க்கொடி உறவுகளாகிய தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி சத்தியத் தீயிலும் சங்கமம்மாகி எங்கும் எல்லோர் மனங்களிலும் வியாபித்தனர்!!!--- ஆனால் மிகப்பெரும் தூர்ரதிட்டவசமாக, உலகப்பெரும் இனம்களில் ஒன்றாகிய தமிழ்நாடினர்க்கு கடிவாளம் பூட்டிப் பிடிப்பவனாக இருக்கும் இந்திய மத்திய அரசுகள் எதுவும் கிஞ்சிட்டும் அஞ்சவில்லை. மேலும், தெட்டத்தெளிவாகத் தெரிவது என்னவெனில் இத்திட்டமிட்ட தமிழினப் படுகொலையை அண்மைக்காலமாக இந்திய மத்திய அரசில் அதிகாரத்தில் இருக்கும் காங்கிரசுத் தலைமையே முன்னின்று செயல்ப்படுதுகிறது என்பது!!! இது நம்பிகைத் துரோமாக வெந்த புண்ணில் வேல் பாச்சுவது!!!!! இப்பெரும்கொடுமை கண்ணுற்று மாணவர்கள் கொதித்து எழுந்து கிளர்ச்சியை மீண்டும் தம் கைகளில் எடுத்துக்கொண்டு முன்னணியில் நின்றேயாக வேண்டிய வரலாற்றுக் கடமையில் உள்ளார்கள்!!!
உண்ணாவிரதமிருக்கும் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் :
1. இலங்கையில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்னும் தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து, அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும். (கண்டிப்பாக அது வெறும்போர்குற்றம், மனித உரிமைமீறல் மட்டுமல்ல). தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
2. ஈழத் தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு தனிநாட்டுத் தமிழீழமும், சர்வதேச இனப்படுகொலை விசாரணையுமே, (தேவையானால் மட்டும் பொதுவாக்கெடுப்புமே), என்னும் தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிந்து கொண்டுவரவேண்டும்.
3. அமெரிக்கா கொண்டுவரும் வெற்றுத்தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க வெற்றுத்தீர்மானத்தை மட்டும் கண்டிப்பாக நிறைவேற்றாதே.
4. தனிநாட்டுத் தமிழீழத்துடன் அனைத்து அரசாங்க உறவுகளையும் உருவாக்க வேண்டும். சிங்களைனவெறிஅரசிந்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.
5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.
7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.
8. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை. 12 வயது சிறுவனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது போர்க்குற்றம் எனக் கண்டித்திருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு தனிநாட்டுத் தமிழீழம் என்பதிலும் உறுதியாகவே இருக்கிறார். நம்புங்கள் நடத்துவார். நம் நரம்பு நாளம் எல்லாம் மானத்தமிழனின் வீரக்குருதி செலுத்துவார். வெல்க தமிழ்!!! மனிதநேயமும் உயர் விழுமியங்களும் நிறைந்த தமிழ் வாழும்வரை, வாழ்க புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையார், வாழ்க உயர்திரு பழ நெடுமாறன், வாழ்க உயர்திரு வை கோபாலசாமி வாழ்க, வாழ்க, வாழ்க!!!---
சிங்களப் பேரினவாத அரசுகளுடன் சேர்ந்து கூட்டுக்குற்றம் புரிந்திருக்கும் மத்திய காங்கிரஸ் அரசுகள் ஒருபோதும் தம் எக்குற்றத்தையும் ஏற்று மனிதகுலத்திடம் மண்றாடி மன்னிப்புக் கேட்கா!!! இது வரலாறு!!! எனவே கூட்டணியில் இருக்கும் திமுக கூட்டணியில் இருந்து வெளி ஏறி காங்கிரஸ் அரசின் கோரமுகத்தை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். திமுகவை காங்கிரஸ் ஆசை காட்டிக் கழுத்தறுத்து மோசம் செய்ததை ஆதாரத்துடன் திமுக நிரூபித்து, மனிதகுலத்திடம் மண்றாடி மன்னிப்புக் கேட்கவேண்டும்.
தமிழீழ இனவழிப்புப் போரின் பெரும் பகுதியும், பெரும் முக்கியமும் ஆன காலப்பகுதிகளின் போது தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி என்ன செய்தார்???
சிதம்பரம், சோனியா காந்தி, முக்கியமாக கேள்விகேட்கும் சில செய்தியாளர்கள் கூட தமிழ் இனவழிப்பு என்றோ, தமிழினைனபடுகொலை என்றோ, தமிழீழம் என்றோ, ஈழத்தமிழர் என்றோ--- ஒரு வார்த்தையேனும் தவறியேனும் கூறவே மாட்டார்கள்!!!
சற்று முன், சோனியா காந்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடந்த "கொடூரங்கள்" ("ஐயயகோ சோனியா கொலை அதுவும் நீண்ட சித்திரவதைக்கொலை, வார்த்தையில் வராது!!!!!!----" ) பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். ("யாரால் சோனியா? எப்பொழுது சோனியா?") இலங்கை மக்களின்" மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் அளிக்கப்படாமல் "கொடுமை" ("ஐயயகோ சோனியா கொலை அதுவும் நீண்ட சித்திரவதைக்கொலை, வார்த்தையில் வராது!!!!!!----" ) அனுபவித்து வருகிறார்கள் என்று தகவல்கள் தொடர்ந்து வருவது வேதனை அளிக்கிறது என்றார்.
மேலும், இந்திய மீனவர்கள் ("அப்ப சோனியா தமிழகத்தமிழ்மீனவர்கள் மட்டும் விசர்நாய்களா?") சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், இத்தாலி வீரர்களை திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு கூறிவிட்டது. இதனால் இரு நாட்டு உறவில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா காந்தி கூறியதாவது: இந்தியாவை எந்த நாடும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள விட மாட்டோம் என்றார்??
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.யொஉடுபெ.சொம்/நட்ச்?வ்=ஹ்ச்9க்0ஸ்4ப்ப்க்&ஃபெஅடுரெ=ப்லயெர்_எம்பெட்டெட் உலக அசிங்கத்தின் ஊத்தைப் பயல் மகிந்த ராஜபக்ஷ: யாரோ ஒரு மனிதநேயக் கவிஞரின் கனமான வரிகள் !!! உண்மையில் இது மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடிக் கூட்டுச் சேர்ந்த இவர்களுக்கும் உலக அசிங்கத்தின் ஊத்தைப் பயல்கள் என்பது சாலப்பொருந்தும் பொருந்தும்!!!
மகிந்த ராஜபக்ஷ நடத்திய கொடுமைகள் பலவற்றை சித்தரிக்கிறது இந்த வீடியோ. இதில் வரும் காட்சிகளையும் கூறப்படும் விடையங்களையும் நன்கு கேளுங்கள். கவிஞரின் வரிகள் கொண்டுள்ள கனத்த கருத்துக்களை கேளுங்கள். நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் கேட்க்கவேண்டிய வரிகள் இவை!!! இதைப் பலர் தங்களின் ஆன்மா அமைதி கொள்ள ---- அதில் ஒருவாசகர்: ஏ௯செல்லென்ட்;தெ விடெஒ ஹச் வொஇசெட் தெ எமொடிஒன்ச் அன்ட் ஃபேலிங்ச் ஒஃப் தெ என்டிரெ டமில் சொம்முனிட்ய். தெ ப்ரொச்லமடிஒன் மடெ இச் நொட் ப்ய் தெ பொஎட் புட் ப்ய் எஅச் அன்ட் எவெர்ய் டமில் ப்ரொதெர்ன்ச் அன்ட் ஸிச்டெர்ச்!!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.