இந்தியா:

rajabakshe modiஇந்தியா தமிழீழத்தை எப்போதும் தனது துருப்பு சீட்டாகவே பயன்படுத்தி வந்தது. அந்தவகையில் தான் ஆரம்பத்தில் அதாவது இந்திரா காந்தி காலத்தில் தனது நலன் சார்ந்து ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் செய்தது. ஆனால் இந்தியாவிலுள்ள உயர்சாதிகளின் திட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் இணைங்க மாட்டார்களென்று தெரிந்த பின் நிலைமைகள் வெகுவாக மாறியது. ஈழத்தமிழர்களை கொல்ல இந்திய அமைதிப்படையை (IPKF) அனுப்பியதிலிருந்து நிறைய சொல்லலாம்.

அதேநேரத்தில் தனது நோக்கம் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியதை அடுத்து இராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி தமிழீழ மக்களை ஒடுக்கவும் தனது வன்மத்தை மறைக்கவும் அதனை பயன்படுத்தியது. இலங்கை எவ்வளவு தூரம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்ததுவோ, அதே அளவு இந்திய அரசாங்கமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஒரே வித்தியாசம், இலங்கை அரசாங்கத்தை விட, இந்தியா உலக அளவில் தன் ஆளுமையை செலுத்தக் கூடிய நாடாக இருந்தது. ஒரு வேளை இந்தியா விடுதலைப் புலிகளை ஆதரித்திருந்தால், தனித் தமிழீழத் தேசம் மலர்ந்திருக்கும்.

இந்தியா இரண்டு விடையங்களுக்காக அஞ்சியது:

  1. தமிழீழம் விடுதலை அடைந்தால், தமிழ்நாடும் விடுதலைக் கோரும். இது இந்தியாவின் புவிசார் அரசியல் நிலையையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
  2. தமிழீழம் அங்கீகரிக்கப் படாத நாடாக இருந்த காலத்தில், பிற அங்கீகரிக்கப் படாத நாடுகளைக் காட்டிலும், இராணுவம் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேறி இருந்தது. அமைதி காலகட்டத்தில் (2001-2006) தமிழீழம் அடைந்திருந்த வளர்ச்சி இந்திய உயர்சாதியினர்களுக்கு எரிச்சலை கொடுத்தது.

1991 க்கு பிறகு, இலங்கைக்கு பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா தொடர்ச்சியாக அளிக்கத் தொடங்கியது. மூன்றாம் ஈழப் போரின் போது, விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான பல யுத்தங்களை வென்ற போது, இலங்கை அரசுடன் இராணுவ வர்த்தகத்திலும், நிதியுதவி அளிப்பதிலும் இந்திய அரசாங்கமே முன்னிலையில் இருந்தது.

2018 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க இந்தியா வந்த முன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே “நான் இலங்கையின் பிரதமராக இருந்த போது, விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் பலமாக இருந்தது. எங்களின் பொருளாதாரமும் நலிந்திருந்தது. திரு.வாஜ்பாயி அவர்கள் தான் எங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவினார். எங்களுக்கு தேவையான இராணுவ பயிற்சிகளையும் அளித்தார். இந்த உதவிகளாலேயே கடல் புலிகளை எங்களால் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது” என்று கூறினார்.

இலங்கையின் இன்றைய அதிபரான கோத்தபய இராஜபக்சே, “காங்கிரஸ் அரசாங்கத்துடனும், அதன் அதிகாரிகளுடனும் எங்களுக்கு நல்ல உறவு இருந்தது. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பத்தில் எங்களுக்கு அவர்களின் முழு ஆதரவு இருந்தது” என்று கூறியுள்ளார்.

இலங்கையில் கடைசி கட்ட போரின் போது, இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. சோனியா காந்தியின் கட்டுப்பாட்டில் தான் காங்கிரஸின் ஆட்சி இருந்தது.

1. இந்தியாவின் நலன்களை இலங்கையில் பாதுக்காக்கவும், பாக்கிஸ்தான் மற்றும் சீனா இலங்கையில் நிலை பெறுவதை தடுக்கவும், விடுதலைப் புலிகளை அழிப்பதும், பிரபாகரனைக் கொல்வதும் மட்டும் தான் ஒரே வழி என்ற நிலைப்பாட்டை எடுத்த சோனியா காந்தியின் அதை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொள்ளவும் செய்தார். அமைதி காலத்தின் போது ஈழச் சிக்கலுக்கு இராணுவத் தலையீட்டின் மூலமே முடிவு காண வேண்டும் என்று சோனியா காந்தி விடாப் பிடியாக இருந்தார். இராணுவ உத்திகள், பொதுமக்களை கட்டுப்படுத்துதல், ஊடகங்களை ஒடுக்குதல் அகியவற்றுடன் முற்று முழுதான போரிற்கான அறிவுரைகளை அமைதி காலத்திலும் கூட சோனியா காந்தி இலங்கை அரசாங்கத்திற்கு அளித்து வந்தார். கருணா மற்றும் கே.பி ஆகியோர் உட்பட விடுதலைப் புலிகள் தலைமையில் பிளவு ஏற்பட சோனியா காந்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.

2. "The Statesman" இதழின் பத்திரிக்கையாளர், சாம் ராஜப்பாவின் கூற்றுப் படி: இலங்கையில் நடைபெறும் இன விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ நடவடிக்கை மூலம் முடிவு கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு பச்சைக் கொடி காட்டியது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையும் கொல்வதற்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் அளிக்கத் தயார் என்று சோனியா காந்தி கூறியதாக கொழும்புவில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்தன.

இந்திய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உட்பட பிரதமர் அலுவலகத்தில் இருந்த பல்வேறு அதிகாரிகள் தேசிய நலனை விட சோனியா காந்தியின் நலனிற்கு முக்கியத்துவம் கொடுத்து, இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு உதவி செய்தனர். உலகமே இலங்கையில் நடந்தவற்றை கண்டு கொந்தளித்துக் கொண்டு இருந்த போது, இந்திய அரசாங்கம் மட்டும் அமைதியாக இருந்தது. இராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படும் பட்சத்தில், இந்திய அராங்கம் மட்டும் தப்பித்து விட முடியாது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு துணை நின்றார். அவரின் அமைதியும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவும் கேடு விளைவித்தது. பிரபாகரன் கோரிய உதவிகளை புறம் தள்ளிவிட்டு, தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து, காங்கிரஸ் கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள மறுத்தார்.

3. Tamil Nadu Coastal Security Group உதவியுடன், இந்திய உளவுத் துறை அமைப்பான RAW 2007 இல், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும், விடுதலைப் புலிகள் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பி வருவதை தடுக்கவும், ஆயுதங்கள் பெறுவதற்கு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த தொடர்புகளையும் முடக்கியது.

4. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், இனப்படுகொலை மற்றும் போர் குற்றத்திற்கு காரணமானவர்களை விசாரிக்க ஐ.நா’வில் தீர்மானம் கொண்டு வரவும் வற்புறுத்தி, தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு செயல்படுத்த போதிய அழுத்தங்களை கருணாநிதி மத்திய அரசிற்கு அளிக்கவில்லை. ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதில் இந்திய அரசாங்கம் முக்கியப் பங்காற்றியது. அதையும் கருணாநிதி கண்டிக்கவில்லை. தங்கள் வற்புறுத்தலின் பெயரிலேயே தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது என்று மன்மோகன் சிங் கடிதம் வாயிலாக கூறிய பிறகும் கூட கருணாநிதி அமைதி காத்தார்.

5. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்புப் பட்டியலில் வைப்பது, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பது, கனடாவின் வலதுசாரி கட்சிகளில் உள்ள இந்தியர்களை கொண்டு விடுதலைப் புலித் தலைவர்களை தடை செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வருவது போன்ற அரசியல் ரீதியான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் செய்தது.

6. இராணுவ ரீதியில், இலங்கை அரசாங்கத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகவும், போர் விமானங்கள், தாக்குதலுக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை இந்தியா அளித்தது. அமைதி காலத்தில் மட்டும் இந்திய அரசாங்கம்: JY11 3D ரேடார் கருவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு 5 மில்லியன் டாலருக்கு விற்றது; இரண்டு Indra IN-PC-2D ராடார் கருவிகள், இலவசமாக அளித்தது; 13 MG போர் விமானங்கள், நூற்றுக்கணகான போர்வீரர்கள் அணியும் உடுப்புகள், மற்றும் தாக்குதலுக்கு தேவையான ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வழங்கியது.

7. இந்தியாவின் செயற்கைக் கோள்களை பயன்படுத்திக் கொள்ள இலங்கை இராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் மூலமும், தானியங்கி விமானங்கள் (Drone) மூலமும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் கண்காணித்தது. கடல் புலிகளின் கலன்கள் மீது, ஆயுதம் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது இந்திய விமானப் படை தொடர் தாக்குதல்களை நடத்தியது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதை, விடுதலைப் புலிகள் தலைவர்கள் தப்பிச் செல்வதையும் தடுக்க இந்திய கப்பற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்திய கப்பல் படை, விடுதலைப் புலிகளின் கிடங்குகளாக பயன்படுத்திய பத்து கலன்களை (floating warehouses) அழித்தது. இதனால் கடற் புலிகள் அமைப்பு மிகவும் பலவீனம் அடைந்தது. கடற்பகுதிகளை கண்காணித்து, சேகரித்த தகவல்களை இலங்கையின் கடற்படைக்கு அளித்தது, கடற் புலிகளின் கலன்கள் மீது விமானப் படைத் தாக்குதல்களையும் நடத்தியது. இந்தியாவில் இராணுவ பயிற்சி பெறும் முதன்மை நாடாக இலங்கை இருந்தது. 2008 இல், இலங்கை இராணுவத்திற்கு வருடாந்திர பயிற்சிகளை அளிக்கவும் இந்தியா ஏற்பாடுகள் செய்தது. இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர், வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் இராஜபக்சேவின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்கள் அதிகாரப்பூர்வமாக அல்லாமால், தனிப்பட்ட முறையில் தகவல்களை பறிமாறிக்கொள்வதற்கான முறைமைகள் ஏற்படுத்தப்பட்டன. 2007-2009 கால கட்டத்தில் இவர்கள் பல முறை சந்தித்துக் கொண்டனர்.

8. இலங்கையின் கடற்படை தளபதியான வசந்தா கரணகோடா “விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல்கள் இந்திய கப்பற்படை அளித்த தகவல்களை கொண்டு ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு எல்லா வகையான பொருட்களும் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டது. இதனால் எங்களால் வேகமாக முன்னேற முடிந்தது. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் கட்டியமைத்திருந்த தேசத்தை எங்களால் அழிக்க முடிந்தது.” என்று கூறியுள்ளார்.

இலங்கை அரசு மீதான சர்வதேச போர் குற்றங்களை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் ஆணையம் எடுக்கும் முயற்சிகளை இந்திய அரசாங்கம் இன்றளவும் விடாப்பிடியாக தடுத்து வருகிறது.

சீனா:

rajabakshe chinaஇலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் கடைசி கட்டத்தில் தான் இலங்கையின் மிக முக்கியமான நட்பு நாடாக சீனா உருவெடுத்தது. சீனா தன்னுடைய ”பட்டுச் சாலை” திட்டத்தை தொடங்கியிருந்தது. அண்டை நாடுகளுக்கு கடன் கொடுத்து அவர்களின் துறைமுகங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை(Debt Traps) மேற்கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் வசம் இருந்த திரிகோணமலை துறைமுகமும், இலங்கை அரசாங்கத்தின் வசம் இருந்த ஹம்பந்தோட்டா துறைமுகத்தின் மீதும் சீனா ஆர்வம் காட்டியது. இதைக் காட்டியே, விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவுமாறு சீனாவை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

7 பில்லியன் டாலர் நிதி உதவியை இலங்கை இராணுவத்திற்கு சீனா வழங்கியது. ஆறு F-7 போர் விமானங்களை இலவசமாக இலங்கைக்கு அளித்த சீனா, 37.6 மில்லியன் டாலர் மதிப்பிலான, வெடி குண்டுகள், பீரங்கிகள், குறிபார்த்து அழிக்கும் ஏவுகணைகள்(Guided missiles), ராக்கெட் லான்சர்கள், தரையில் இருந்து வானத்திற்கு சென்று விமானங்களை அழிக்கும் ஏவுகனைகள் (surface-to-air missiles), ஊடுறுவி அழிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள், இரவு நேரங்களில் பார்வைக்காக பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், பாதுகாப்பு இயந்திரங்கள், பீரங்கிகள், போர் விமானங்கள், கப்பல்கள், ராடார் மற்றும் தொலை தொடர்பு கருவிகள் ஆகியவற்றையும், இலங்கை வான் படை வீரர்களுக்கான பயிற்சியையும் அளித்தது.

"The Independent UK" பத்திரிக்கை சீனாவின் பங்களிப்பை விவரிக்கிறது: 1 பில்லியன் டாலர் பணத்தை இலங்கை அரசிற்கு சீனா கொடுத்ததுடன் பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நவீன ஆயுதங்கள், இலவசமாக ஆறு F7 போர் விமானங்கள் ஆகியவற்றையும் இலங்கைக்கு அளித்தது. இலங்கைக்கு ஆயுதங்களையும், போர் விமான பயிற்சியும் அளிக்க தனது நட்பு நாடான பாக்கிஸ்தானிடம் சீனா கூறியது. மிக முக்கியமாக, ஐநா பாதுகாப்பு அவையில் இலங்கை பற்றிய விவாதம் எழாமல் பார்த்துக் கொண்டது. Norinco என்ற சீன உற்பத்தி நிறுவனம் மட்டும் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை இலங்கை அரசிற்கு அளித்துள்ளது. Poly Technologies என்ற சீன ஆயுத உற்பத்தி நிறுவனம், 120 mm மோர்டார் குண்டுகளை இலங்கை அரசிற்கு விற்றது. 70,000 முறை சுடுவதற்கான குண்டுகள் மட்டும் 10.4 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், 20 மில்லியன் டாலர் மதிப்பிலான 152mm பீரங்கி வெடிகுண்டுகள், 3.7 மில்லியன் டாலர் பெருமானமுள்ள வெடி குண்டுகள் ஆகியவற்றை சீனாவில் இருந்து இறக்குமதி செய்தது இலங்கை அரசு. இலங்கை கடற்படைக்கு மட்டும் 2.7 மில்லியன் டாலர் பெருமானமுள்ள ஆயுதங்கள், 14.5mm தோட்டாக்கள், இரண்டாயிரம் RPG-7 ராக்கெட்டுகள், ஐநூறு 81mm மோர்டார் குண்டுகள் ஆகியவற்றை சீனா அளித்தது. இது மட்டுமல்லாமல் போர் கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஐம்பது14.5mm வகை இரட்டைக் குழல் துப்பாக்கிகள், இருநூறு 12.7mm கனரக இயந்திரத் துப்பாக்கிகள், இருநூறு 7.62mm இயந்திரத் துப்பாக்கிகள், ஆயிரம் 7.62 2mm துணை இயந்திரத் துப்பாக்கிகள், உட்பட ஷியாங்காய் தரத்திலான போர்ப் படகுகள் ஆகியவற்றையும் சீனா வழங்கியது. 2008க்கு பிறகு இலங்கை கப்பல் படையில் நாலில் ஒரு பங்கு சீனா அளித்த படகுகளே இருந்தன.

போர் முடிந்த பிறகு, இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை விசாரிக்கக் கூடாது என்றும், இலங்கை அரசு எந்த தப்பும் செய்யவில்லை என்றும் சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஐநா மனித உரிமை ஆணையத்தை வற்புறுத்தினர்.

பாக்கிஸ்தான்:

rajabakshe pakistan200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான இராணுவ உதவிகளையும், ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும், ராக்கெட் குண்டுகளையும், கண்ணி வெடிகளையும், தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களையும், உளவுத் தகவல்களையும், போர் விமானங்களையும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களையும் வழங்கியது.

ஜூன் 1999 - டிசெம்பர் 2007 கால கட்டத்தில் பாக்கிஸ்தானிடம் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான போர் கருவிகளை இலங்கை வாங்கியுள்ளது. 2009 இல் இது 150 மில்லியன் டாலராக உயர்ந்தது.

பாக்கிஸ்தானின் ISIயிடம் பயிற்சி பெற்ற இல்ஸாமிய பாதுகாப்பு படையினர் (home-guards) விடுதலைப் புலிகளின் கிழக்கிலும், மேற்கில் சில பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பற்றி உளவுத் தகவல்களை சேகரித்து இலங்கை அரசுக்கு கொடுப்பதில் முக்கியப் பங்காற்றினர். இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் (இந்து மற்றும் கிருஸ்தவர்கள்) இடையே பிளவுகள் ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றினர்.

பாக்கிஸ்தானின் விமானப்படைத் துணைத் தளபதி( Vice-Marshal) ஷெஹ்சாத் அஸ்லாம் செளதிரி இலங்கைக்கான ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரின் நியமனத்திற்குப் பிறகு 15 - 17 அனுபவமுள்ள இராணுவ விமானப்படை வீரர்கள் பாக்கிஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டு, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநோச்சி மற்றும் முல்லைத் தீவு ஆகிய பகுதிகள் மீதான தாக்குதலிலும் இவர்கள் ஈடுபட்டனர்.

மே 2008 இல், இலங்கை தளபதியாக இருந்த சரத் ஃபொன்சேகா, பாக்கிஸ்தான் இராணுவத்துடன் இராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தையின் ஈடுபட்டார். 22 Al-Khalid MBT பீரங்கிகளை 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக கொடுத்து இலங்கை அரசு வாங்கியது. 20 மில்லியன் டாலர் மதிப்பிலான 1,50,000 60mm பீரங்கி குண்டுகள், 1,50,000 கை எறி குண்டுகள் ஆகியவற்றையும் பாக்கிஸ்தான் அரசு வழங்கியது.

25 மில்லியன் டாலர் பெருமானமுள்ள 81 mm, 120 mm மற்றும் 130 mm மோர்டர் குண்டுகளை ஒரே மாதத்திற்கு தருமாறு இலங்கை அரசு பாக்கிஸ்தான் அரசிடம் ஏப்ரல் 2009 இல் கேட்டுக் கொண்டது.

அமெரிக்கா:

rajabakshe USஅமைதி ஒப்பந்தத்தை முறிப்பதிலும், இலங்கைக்கு இராணுவ உதவிகளை அளிப்பதிலும் அமெரிக்க அரசு முதன்மை பங்காற்றியது.

500 மில்லியன் டாலர் பெருமானமுள்ள இராணுவ உதவிகளை அளித்தது அமெரிக்கா. இராணுவ தளவாடங்கள் வாங்குவதைத் தாண்டி, இராணுவ பயிற்சிகளும் அமெரிக்காவால் அளிக்கப்பட்டது. 2002 இல் இரணில் விக்கிரமசிங்கே ஆட்சி காலத்தில் இராணுவப் பயிற்சிகள், இராணுவத் தொழில்நுட்பங்கள், உளவுத் தகவல்கள், மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்பு இராணுவப் பயிற்சி ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்தானது. அமைதி காலத்தின் போது, அமெரிக்காவின் பசிஃபிக் பெருங்கடல் படை தளத்திலிருந்து 2002 செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 24 வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இலங்கையின் கப்பல் படை, விமானப் படை, இராணுவம் ஆகியவற்றிற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவங்களின் பல வீனங்களை கண்டறிந்த அமெரிக்கா, கொத்து வெடிகுண்டுகளை பயன்படுத்தப் பரிந்துரைத்தது. 2010 ஆம் ஆண்டு வரை கொத்து வெடிகுண்டுகள் பயன்பாடு உலக அளவில் தடை செய்யப்படவில்லை. அது மட்டுமில்லாமல் கிஃபிர் மற்றும் MI-24 போர் விமானங்களில், வழிகாட்டுதலின் படி இலக்கை தேடி அழிக்கும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தவும் பரிந்துரைத்தது.

அமெரிக்கா தானமாக கொடுத்த “சமுத்ரா” என்ற போர் கப்பலைக் கொண்டே, கடல் புலிகளின் நடவடிக்கைகளை கண்காணித்தது இலங்கை அரசு. மேலும் தரையிலும் வேவு பார்ப்பதற்கான விமானங்களை இலங்கை அரசிற்கு அளித்தது. வன்னிக் காடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை இதை வைத்து இலங்கை அரசு அறிந்தது. இது வரையிலான காலத்தில், இலங்கை அரசிடம் இத்தகைய கருவிகள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

2006 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரை மீண்டும் தொடங்க ஊக்குவித்த அமெரிக்க அரசு, ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவிகள் புரிந்தது. அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் அளித்த உதவிகள் காரணமாகவே இலங்கை இராணுவம் பலம் பொருந்திய ஒரு இராணுவமாக உருவெடுத்தது என்று கூட சொல்லலாம்.

கிளர்சியாளர்களுக்கு எதிரான போர் முறைகளில் பயிற்சி மற்றும் உளவுத் தகவல்களை இலங்கைக்கு அளித்ததை அமெரிக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது. கடற்பகுதிகளை கண்காணிக்க பயன்படும் ராடர் கருவிகளை அமெரிக்கா கொடுத்தது. இதைக் கொண்டே இந்தியாவில் இருந்து ஈழத்திற்கு சரக்குகள் ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப் பட்ட பாதை முடக்கப்பட்டது. அமெரிக்காவிற்கு நெருக்கமாக இருக்கும் இஸ்ரேல் மற்றும் பாக்கிஸ்தான் அரசுகள், இலங்கையின் இராணுவ தளவாட கட்டமைப்பிற்கு வலு சேர்த்தது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே கனடாவும், ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தது. ஆயிரக்கணக்கான புலம் பெயர் ஈழத்தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு அளித்து வந்த நிதி உதவி இதன் மூலம் தடை பட்டுப் போனது.

மகிந்த இராஜபக்சே தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு வாரங்கள் கழித்து, அமெரிக்க தூதுவர் ஜெஃப்ரி லுன்ஸ்டெட் விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால், பலம் வாய்ந்த இலங்கை இராணுவத்தை எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார். மேலும் “எங்களின் இராணுவப் பயிற்சிகள் மூலமும், தீவிரவாதத்திற்கு எதிரான ஆதரவு நடவடிக்கைகள் மூலமும், இலங்கை அரசாங்கம் தன் மக்களை காப்பதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க உதவியிருக்கிறோம். இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கவில்லை” என்றும் கூறினார்.

அமெரிக்காவின் கப்பற் படை இலங்கை அரசாங்கத்திற்குத் தேவையான உளவுத் தகவல்களை கொடுத்தது. இதை வைத்து கடற் புலிகளை வேட்டையாடியது இலங்கை கப்பற் படை. விடுதலைப் புலிகளின் நான்கு கலன்களும் இந்த தகவல் கொண்டு அழிக்கப்பட்டன.

இராஜபக்சே இதை பின்நாட்களில் உறுதி செய்தார். கடற்புலிகளின் கப்பல்களை அமெரிக்கா தன்னுடைய தானியங்கி போர் விமானங்கள் கொண்டு அழித்தது. மேலும் தன்னுடைய செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தும் உரிமையையும் இலங்கை இராணுவத்திற்கு அளித்தது. இதைப் பயன்படுத்தி, இலங்கை அரசு வன்னிக் காட்டில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கண்காணித்ததுடன், இந்தியப் பெருங்கடலில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்முதலையும் தடுத்தது.

போரில் வெற்றி பெற்ற உடன் இராஜபக்சே ஆற்றிய உரையில்: “ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடைவிதிப்பதிலும், புலிகளின் ஆயுதக் கொள்முதலை தடுப்பதிலும் அமெரிக்க அரசாங்கமே உதவியதாக” தெரிவித்தார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு, ஒபாமா ஜனவரி 2009 இல் அதிபர் ஆன பிறகு மாறியது. சிங்கள அறிவுஜீவி ஜூட் லால் ஃபெர்னாண்டோ அமெரிக்க-ப்ரித்தானிய கூட்டணி நாடுகளே 2009 தமிழீழ இனப்படுகொலைக்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார். ”அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றிருக்குமேயானால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அரசியல் ரீதியான 2009 அழிவிற்கு அமெரிக்காவும் ஒரு காரணம். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் வழங்கும் பொருட்டு தமிழர்களுக்கும், சிங்களவர்களும் சேர்த்து ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது (Post-Tsunami Operational Management Structure).

இலங்கைத் தீவில் இருந்த அனைவருமே சுனாமியால் சமமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். அமைதிப் பேச்சுவார்த்தையில் அங்கமாக இருந்த அமெரிக்க அரசு, தீவி வலதுசாரிகளுடன் கூட்டு சேர்ந்துக் கொண்டு இதற்கு எதிரிப்புத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்தே ஜாதிக ஹேல உருமையா, மற்றும் ஜனதா விமுக்தி பெருமானா ஆகிய கட்சிகள் இந்த கட்டமைப்புக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வி அடைவதிற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா இருந்தது. 2005இல் அமெரிக்க இராணுவ அதிகாரிகள், இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலாளருக்கு ஒரு கடித்தத்தை அளித்தனர்.

அதில் திரிகோணமலை தளத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த ஒரு அரசாங்கம், சிங்கள தமிழ் தலைமைகள் இருவருமே போருக்கு தயாராக இல்லாத நிலையில், சிவில் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த பாடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் தான் இப்படி ஒரு செயலை அமெரிக்க அரசு செய்தது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன் மே 4, 2009 அன்று அனுப்பிய ஒரு மின் அஞ்சலில் இவ்வாறு எழுதியுள்ளார்: ” IMF (சர்வதேச நிதியம்) நடத்திய கூட்டம் ஒன்றில் நான் கிரித்னருடன் இருந்தேன். அதில் நீங்கள் IMF இலங்கை அரசிற்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று உங்கள் வரம்புகளை மீறி கூறியதாக தெரிவிக்கப்பட்டது. உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தில் உள்ளவர்கள் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறார்கள். அந்த போரில் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டால் கூட அது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான் என்பது என் கருத்து”

இஸ்ரேல்:

rajabakshe isrealஇலங்கை அரசாங்கத்திற்கு எல்லா காலங்களிலும் இஸ்ரேல் இராணுவ உதவிகளை செய்து வந்துள்ளது. 1980களில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்குப் பகுதிகளில் சிங்கள இராணுவக் குடியிருப்புகளை உருவாக்குவதற்கு உதவி செய்தது. -இராணுவ உதவிகளுடன் சேர்த்து இராணுவ உத்திகளில் ஆலோசனையையும் வழங்கியது. அமெரிக்காவின் அனுமதியுடன் கிஃபிர் போர் விமானங்கள், மற்றும் ஆளில்லா விமானங்களையும் இலங்கைக்கு அளித்தது.

போர் காலம் முழுவதிலும், இஸ்ரேலின் "ஷாயிடெட் 13" கமாண்டோ பிரிவினர் இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சிகளை அளித்து வந்தது.

பல மில்லியன் டாலர் பெருமானமுள்ள இராணுவ உதவிகளை இலங்கை அரசுக்கு அளித்ததுடன், இலங்கை விமானப்படைக்கு ஏழு IAI Kfir விமானங்களை கொடுத்தது. Super Dvora MK II ரக கண்காணிப்பு படகுகளையும், தாக்குதலுக்கு பயன் படும் Dvora மற்றும் Shaldag ரக படகுகளையும் கொடுத்தது இஸ்ரேலிய அரசு. இலங்கை கப்பற் படையின் ஒரு முக்கிய அங்கமாக இன்றளவும் இவை திகழ்கின்றன.

இஸ்ரேலின் கிஃபிர் போர் விமானங்களையும் ஃப்ரான்ஸின் Mirage போர் விமானங்களையும் கொண்டு மட்டும் 1996இல் இலங்கை போர்படையின் Squadron 10 பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த பிரிவில் உள்ளவர்கள் இஸ்ரேலுக்கு சென்று பயிற்சிகள் எடுத்து வந்தனர். தரைப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படும் MIG-29 விமானங்கள் பலவற்றை இலங்கை அரசாங்கம் வாங்கியது.

2006 ஆம் ஆண்டு, இஸ்ரேல் அரசாங்கம் Blue Horizon UAV எனும் கண்காணிக்கும் இயந்திரத்தை இலங்கைக்கு அளித்தது. இதைக் கொண்டு கடல் புலிகளின் நடவடிக்கைகளை இலங்கை அரசால் துல்லியமாக கண்காணிக்க முடிந்தது. 2006-09 கால கட்டத்தில் மட்டும் 1300 நடவடிக்கைகளை கடற்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் இந்த இயந்திரத்தைக் கொண்டு நடத்தியது. Blue Horizon UAV இயந்திரத்தைக் கொண்டு, 24 மணி நேரமும், எந்த ஒரு வானிலையிலும், இரவும் பகலும் கடற் புலிகளின் நடவடிக்கைகளை இலங்கை அரசால் கண்காணிக்க முடிந்தது.

கடற்புலிகள் Swarm Tactic என்ற போர் யுக்தியை பயன்படுத்தி வந்தனர். ஒரு இலக்கை பலர் எல்லா திசைகளில் இருந்து தாக்குவது தான் அந்த யுக்தி. இஸ்ரேல் கொடுத்த Dvora மற்றும் Shaldag ரக போர்ப் படகுகளையும், Blue Horizon UAV கண்காணிப்பு வசதியையும் கொண்டே இந்த யுக்தியை இலங்கை அரசால் வெல்ல முடிந்தது.

இஸ்ரேல் தனது ஏவுகணை பரிசோதனைகளை இலங்கை கடற் பரப்பில் இருந்தே செய்து வருகிறது.

ஈரான்:

rajabakshe iranவிடுதலைப் புலிகளின் கரும்புலிப் படை இலங்கையின் அனுராதபுர இராணுவ விமான தளத்தை தாக்கி 20 போர் விமானங்களை அழித்தது. சுமார் 40 மில்லியன் டாலர் அளவிலான இழப்பு இலங்கை அரசிற்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளில்லா விமானங்களையும், கண்காணிப்பு கருவிகளையும் வாங்குவதற்கு ஈரான் அரசாங்கத்திடம் குறைந்த வட்டியில் கடன் கேட்டது சிங்கள அரசு.

இலங்கையின் கோரிக்கையை ஏற்ற ஈரான் அரசு, ரகசியமாக தேவையான நிதியை வழங்கியதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிகாரிகள் சிலரை பயிற்சிக்காக அழைத்தது.

ஈரான் அரசின் "கிழக்கை நோக்கி" (Look East) என்ற திட்டத்தின் ஒரு அங்கமாகவே இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை மும்முரமாக ஈரான் அரசு வழங்கியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1.05 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணையை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியது.

2007 இல் மட்டும், 140.9 மில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.

ஆயுதங்களையும், வெடி குண்டுகளையும் கொடுத்ததுடன், தன்னுடைய இராணுவ தளவாடங்களை மாதக் கணக்கில் இலவசமாக பயன்படுத்தும் உரிமையை இலங்கை அரசுக்கு அளித்தது.

ஈரானின் உதவிகளைப் பற்றி இலங்கையின் அமைச்சர் விமர் வீரவம்சா கூறும் போது “பிற நாடுகள் எங்களை கைவிட்ட போதிலும் கூட, ஈரான் அரசு எங்களை என்றுமே கைவிட்டதில்லை. இலங்கை நாடே ஈரானுக்கு நன்றிக் கடமைப்பட்டுள்ளது”

"The Island" பத்திரிக்கை ஈரானுக்கும் இலங்கைக்குமான உறவை பற்றி எழுதும் போது: “யாழ்பாணத்தில் நடைபெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தோற்கடிக்கும் தருவாயில் இலங்கை இராணுவத்திற்கு ஈரான் உதவிகள் செய்தது. இலங்கை அரசு உதவி கோரிய உடனேயே ஈரானின் இராணுவ தளவாடங்கள் பல விமானங்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரபட்டது”என்றும் “ஈரானும் இலங்கையும் சேர்ந்து சிறு படகுகள் மூலம் தாக்குதலை நடத்துவதற்கான பல வியூகங்களை வகுத்தன” என்று கூறுகிறது.

பிரித்தானிய அரசாங்கம்:

rajabakshe UN1980 களில் இருந்தே இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானிய அரசு இராணுவ பயிற்சிகளை அளித்து வந்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் சிறப்பு படைப் பிரிவுகளான STF மற்றும் LRRP ஆகியவை பிரித்தானிய சிறப்பு விமானப் படை அதிகாரிகளே தொடங்கினர்.

அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட இராணுவ தளவாடங்களை 2009 வரை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது.

2001 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்த பிரித்தானிய அரசு, அதற்கான எந்த நியாயமான  காரணங்களையும் கூறவில்லை. பிரித்தானியாவில் வாழும் 3,00,000 ஈழத்தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு நிதிப் பங்களிப்பதையும் தடுத்தது. நான்காம் ஈழப் போரில் விடுதலைப் புலிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதிற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமாக இலங்கை அரசாங்கமே கூட அறிவிக்காத காலகட்டத்தில், இலங்கை அரசை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்த நிலையில், 11/9 தாக்குதல் அமெரிக்காவில் நடைபெறுவதற்கு முன்பே இப்படி ஒரு தடையை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

பண்டாரநாயகே சர்வதேச விமான தளத்தின் மீது விடுதலைப் புலிகள் அமைப்பு தாக்குதல் நடத்தியதால் இலங்கை அரசு 358 மில்லியன் டாலர்களை இழந்தது. இதனால் இலங்கைக்கான சுற்றுலா வரத்தும் குறைந்தது.

இந்த தாக்குதலுக்கு பிறகு, இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி செய்ததில் முக்கிய பங்காற்றியது பிரித்தானிய அரசு. பிரித்தானிய, அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகளின் அழுத்தத்தின் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தது.

அமைதி காலத்தில் அமைக்கப்பட்ட ”Sri Lanka Monitoring Mission” அமைப்பின் தலைவராக இருந்த ஸ்வீடனின் இராணுவ தளபதி மேஜர். உல்ஃப் ஹென்ரிக்சன், பிரித்தானிய மற்றும் அமெரிக்க அரசுகள் அமைதிப் பேச்சுவார்த்தையை குலைப்பதாகவும், பிற நாடுகளை விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்ய வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

2008 இல் மட்டும், இலங்கைக்கும் 4 மில்லிய யூரோ பெருமானமுள்ள இராணுவ தளவாடங்களையும் 3 மில்லியன் யூரோ அளவிலான ஆயுதங்களையும் பிரித்தானிய அரசு இலங்கைக்கு விற்றது.

பல ரகத் துப்பாக்கிகள் உட்பட இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள் 3,30,000 யூரோக்களுக்கும், பாதுகாப்பு கவசங்கள் 6,55,000 யூரோக்களுக்கும் இலங்கைக்கு விற்கப்பட்டது. 2006-2009 கால கட்டத்தில் மட்டும் 12 மில்லியன் யூரோக்கள் பெருமானமுள்ள ஆயுதங்களை பிரித்தானிய அரசு இலங்கைக்கு ஏற்றுமதி செய்தது.

ரஷ்யா:

இலங்கை இராணுவத்திற்கு இராணுவ பயிற்சியை அளித்ததுடன், 300 மில்லியன் டாலர் அளவிலான ஆயுதங்களை இலங்கைக்கு ரஷ்யா கொடுத்தது.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் அனைத்து தீர்மானங்களிலும், இலங்கைக்கு ஆதரவாகவே இரஷ்யா நின்றது. 2009 இறுதி போரின் போதும், கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போர் நிறுத்ததிற்கான தீர்மானத்தை ஐ.நாவில் கொண்டு வர முயற்சித்த போது அதை இரஷ்யாவும், சீனாவுமே எதிர்த்து வாக்களித்தன.

அதே போல் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை சீனா மற்றும் பல நாடுகளுடன் சேர்ந்து இரஷ்யாவும் எதிர்த்தது.

இலங்கை அரசிற்கு பல ஆயுதங்களையும், போர் விமானங்கள் மற்றும் இராணுவ வாகனங்களை கடைசி கட்டப் போரில் இரஷ்யா வழங்கியது.

Mikoyan-Gurevich MiG-27, Antonov An-32, Mil Mi-17 வகை போர் விமானங்கள், T-54/55 பீரங்கிகள், BTR-80 APC இராணுவ வாகனங்கள் மற்றும் 158.5 மில்லியன் டாலர் மதிப்பிலான Gepard ரக விரைவுப் போர்க் கப்பல்கள் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.

ஐக்கிய நாடுகள்:

ஈழத் தமிழர்களை பாதுகாக்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காத ஐநா, இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் இராணுவத் தாக்குதலுக்கு ஆதரவாக நின்றது.

போர் பகுதியில் இருந்த தமிழர்கள் மீது எந்த அக்கறையும் ஐ.நா காட்டவில்லை. இஸ்ரேல்-காசா போரின் போதும் சரி, குர்திஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையே நடந்த போரின் போதும் சரி, ஐ.நா வின் கடும் கண்டனத்தின் காரணமாகவும், சர்வதேச சமூகத்தின் தலையீடு காரணமாகவும் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஐநா தன் கண்களை மூடிக் கொண்டது. 2008இல் போர் முற்றிய சூழலில், தன்னுடைய பணியாளர்களையும், மனித நேய சேவை செய்ய சென்றவர்களையும் வன்னிப் போர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு ஐ.நா கூறியது. காயம்பட்ட பொதுமக்களை காப்பாற்ற அங்கு மருத்துவர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களும் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

இறுதிப் போரின் போது, பிரபாகரன் ஐநா அதிகாரிகளையும், எரிக் சோல்ஹைம் உட்பட நார்வே அமைதி பேச்சுவார்த்தையில் ஈட்டுபட்டவர்களையும் தொடர்பு கொண்டார். அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கும் காசாவிற்கு நடந்த போரில் ஐநா தலையிட்டு தீர்மானம் நிறைவேற்றியதைப் போல, சர்வதேச சமூகமும் ஐநா மனித உரிமைகள் ஆணையமும் தலையிட்டு விடுதலைப் புலிகளையும் பொதுமக்களையும் பாதுகாத்து, ஒரு தீர்வை எட்டும் என்று பிராபாகரனிடம் கூறினர்.

ஏப்ரல் மாதத்தில், பிராபகரன் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்த போதும் கூட, சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகளும், அதிகாரிகளும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது குண்டுகள் போடப்பட்டது. பிரபாகரனிடம் உறுதி அளித்ததற்கு மாறாக ஐ.நா எதுவும் செய்யாமல் அமைதி காத்தது.

போர் முடிந்த பிறகு இலங்கைக்கு சென்ற ஐநா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் போர் பகுதிகளை முப்பது நிமிடங்களே பார்வையிட்டார். தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம்கள் எவற்றிற்கும் அவர் செல்லவில்லை. போரில் வெறும் 7000 தமிழர்கள் தான் கொல்லப்பட்டனர் என்று குறைவான எண்ணிக்கையை கூறினார்.

மனித உரிமைகளுக்கான ஆணையர் நவிபிள்ளையும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீது அக்கறை காட்டவில்லை. தீவிர விடுதலைப் புலி எதிர்பை வெளிப்படுத்திய நவிபிள்ளை, இலங்கை இராணுவத்தின் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட 1,50,000 தமிழ் குடும்பங்களை சந்திக்கவும் இல்லை. 2013இல் இலங்கையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நவிபிள்ளை “நான் ஒரு தென் ஆஃப்ரிக்கர் என்பதில் பெருமை கொள்கிறேன். விடுலைப் புலிகள் பல குற்றங்களைப் புரிந்த, பல உயிர்களை பறித்த ஒரு கொலைகார அமைப்பு. விடுதலைப் புலிகளால் 1999இல் கொல்லப்பட்ட பிரபல அரசியல்வாதியும், அறிஞருமான நீலம் திருச்செல்வத்தின் நினைவு நாள் விழாவில் பங்கேற்க நான் இலங்கை சென்றிருக்கிறேன். விடுதலைப் புலிகள் போன்ற ஒரு மனிதாபிமானற்ற இயக்கத்தை நினைவில் வைத்திருக்கக் கூடாது என்று நான் புலம் பெயர் ஈழத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஒரு தலைபட்சமாக கூறினார்.

மே 2, 2009 அன்று கூடிய ஐநா மனித உரிமைகள் ஆணையம் விடுதலைப் புலிகள் அமைப்பும், இலங்கை அரசும் மேற்கொண்ட போர் குற்றங்களை விசாரிக்க சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது. அதில் இரண்டு தீர்மானங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது; ஒன்று, சர்வதேச விசாரணை. மற்றொரு சர்வதேசம் இலங்கையில் நடைபெறும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது. இரண்டாவது தீர்மானத்தை முன்மொழிந்தது இலங்கை அரசு.

ஈழத் தமிழர்களை விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து காப்பாற்றியதற்காக பாராட்டிய இந்த இரண்டாவது தீர்மானம், ஈழத்தமிழர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டது தொடர்பாகவோ, தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்ல சர்வதேச அமைப்புகளுக்கான அனுமதி தொடர்பாகவோ எதுவும் பேசவில்லை. 70,000 ஈழத்தமிழர் கொல்லப்பட்டதற்கு காரணம் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் தான் என்று ஒத்துக் கொண்ட ஐ.நா அவை, இந்த இரண்டாவது தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி முதல் தீர்மானத்தை கைவிட்டது.

2010 ஏப்ரலில், ஐநாவின் குழு கடைசி கட்ட போரை ஆய்வு செய்து, இலங்கை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. பொது மக்கள் சாவிற்கு முழு காரணம் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் தான் என்றும், தடுப்பு முகாம்களில் நடைபெற்ற பாலியல் சித்திரவதைகள் குறித்தும், மனிதர்கள் வாழத் தகுதியற்ற சுகாதரமற்ற வாழ்விடங்கள் முகாம்களில் நிலவியதைப் பற்றியும் இந்த அறிக்கை குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மத்திய கிழக்கு நாடுகள், மத்திய அமெரிக்க நாடுகள், இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் எதிர்த்தன.

ஐ.நா வின் உள்ளக ஆய்வறிக்கை (பெட்ரி அறிக்கை) ஐ.நாவின் தோல்விகளை பட்டியலிடுகிறது:

அறிக்கை பகுதி 13:

"ஐ.நா வின் அச்சுறுத்தல்களை இலங்கை அரசு தந்திரமாக கையாள நினைத்ததால் ஐ.நா விற்கும் இலங்கை அரசுக்குமான உறவுகளில் பல சிக்கல்கள் இருந்தன. பல வருடங்களாக இலங்கை அரசை கண்டிக்கும் அதிகாரிகளுக்கு, நுழைவுச்சீட்டு வழங்குவதை தன்னுடைய அதிகாரங்களை கொண்டு தடுத்து வைத்திருந்தது இலங்கை அரசு. பல உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்களை வெளியேற்றியும், அவர்களின் விசா இரத்தாகும் என்று அச்சுறுத்தியும், நெருக்கடி நிலைகளை கையாளும் அனுபவம் உள்ள மாற்று அதிகாரிகள் நியமனத்தை நிராகரித்தும் வந்திருக்கின்றது இலங்கை அரசு"

இலங்கை அரசின் இந்த அச்சுறுத்தலைப் பற்றி எல்லாம் பான்-கி-மூன் க்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லை.

தன்னுடைய அதிகாரிகளே இலங்கை அரசால் அச்சுறுத்தப்படும் சூழல் ஏற்பட்ட போதும் கூட அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.. குறைந்த பட்சம் இராஜபக்சேவை தொடர்பு கொண்டு இப்படிப்பட்ட செயல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல என்றாவது கூறியிருக்கலாம். அதைக் கூட அவர் செய்யவில்லை என்றால் அவர் இராஜபக்சேவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஐ.நா.வால் பாதுகாக்கப் பட வேண்டிய ஈழதமிழர்களை கைவிட்டார் என்பதே அர்த்தமாகும்.

ஐ.நா ஊழியர்கள் ஈழத்தமிழர் நிலங்களில் இருந்து இலங்கை அரசால் வெளியேற்றப்பட்டனர். இப்படிப்பட்ட ஆபத்தான நகர்வுகளுக்கு பான்-கி-மூன் என்ன வினையாற்றினார்? ஒன்றுமில்லை

அறிக்கை பகுதி 15:

ஐ.நா வெளியேறுவதற்கு ஆயத்தமானவுடன் ஐ.நா அதிகாரிகளை மக்கள் அணுகி “சர்வதேச அமைப்புகள் இருப்பதால் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சில குடும்பங்கள் கிளிநொச்சி நகருக்கு வந்துள்ளன”; "மனிதாபிமான நிறுவனங்கள் வெளியேறும் பட்சத்தில் இலங்கை அரசு கிளிநொச்சியை குண்டுவீசித் அழிக்கும் வேலையை தொடங்கும், அதனால் மக்களின் பாதுகாப்பும் ஆபத்துக்குள்ளாகும்"; "ஐ.நா இல்லாத பட்சத்தில் நடப்பவைக்கு சாட்சியங்கள் இல்லாத சூழல் உருவாகும்" என்று மன்றாடினர். வரப்போகும் ஆபத்து முன் கூட்டியே தெரிந்திருந்தும் பான்-கி-மூன் என்ன செய்தார்? ஒன்றுமில்லை.

தனது நண்பர் பான்-கி-மூன் எந்த எடுக்க மாட்டார் என்று இராஜபக்சேவிற்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

மார்ச் 19, 2009 இல், மனித உரிமைகளுக்கான ஆணையர் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் செயல்கள் “மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக கருத்தப்பட வாய்ப்புள்ளது என்றும், சர்வதேச சட்ட விதி மீறல்களைப் பற்றி பேசும் போதெல்லாம் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா குறிப்பிடுவதைத் தவிர்த்தது” என்று கூறினார்.

ஐநா அதிகாரிகளோ, இலங்கை அரசைக் குறை கூறினால், களத்தில் அங்கு வேலை பார்க்க முடியாது என்று கூறினர். ஒரு மனித உரிமைகள் ஆணையம் இப்படியான சப்பைகட்டு கட்டுவது ஏற்றுக் கொள்ளமுடியாததாகும். வன்னியில் நிலைமை மோசமடைய துவங்கிய சூழலில், வன்னியில் நிலவும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதநேய சட்டங்களின் நிலை பற்றி எந்த தகவல்களும் வெளி வருவதில்லை என்று ஐ.நா பாதுகாப்பு அவையின் உறுப்பு நாடுகளும், ஐ.நா பொதுச் செயலாளர் அலுவலக அதிகாரிகளும் குறை கூறினார்கள். ஐ.நா பொதுச் செயலாளராக இருந்த பான்-கி-மூன் தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

அறிக்கைப் பகுதி 31:

மே 18 2009 வாக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. சக விடுதலைப் புலி போராளிகளுடன் நடந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கோரியது. (அதாவது விடுதலைப் புலிகளுக்குள்ளேயே நடந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டார்களாம்!)

மே 18, 2009 அன்று அரசு கட்டுப்பாடுப் பகுதிக்கு வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணியாக வந்தவர்களை அரசாங்கமே சுட்டுக் கொன்றது என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்தன. சரணடைய வந்தவர்களை கொல்வது என்பது போர்குற்றமாகும். அதைத் தான் இலங்கை இராணுவம் செய்தது.

அறிக்கைப் பகுதி 33:

"போர் காலம் முழுவதிலும், பாதுகாப்பு சபையிலோ, மனித உரிமை சபையிலோ, பொதுச் சபையிலோ உறுப்பு நாடுகள் இலங்கைப் பற்றிய விவாதிக்க ஒரு முறைக்கூட சந்திக்கவில்லை"

ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் நினைத்திருந்தால் இவற்றில் கூட்டம் நடத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. குறிப்பாக பாதுகாப்பு அவையை இலங்கை பற்றி விவாதிக்க கூடாமல் இருந்தார் என்பது அவர் கொலைகார இராஜபக்சே அரசிற்கு எவ்வளவு தூரம் துணை நின்றார் என்பதையே காட்டுகிறது.

இராஜபக்சேவை போல் இவரையும் குற்றவாளியாக கருத இடம் உள்ளது.

அறிக்கைப் பகுதி 35:

"போர் முடிந்த உடன், 22 மற்றும் 23 மே 2009 இல், சில உயர் ஆலோசர்கள் எச்சரித்ததையும் மீறி ஐ.நா பொதுச் செயலாளர் இலங்கைக்கு பயணித்தார்".

போர் முடியும் வரை ஏன் பான்-கி-மூன் காத்துக் கொண்டிருந்தார் என்பதை அவர் தான் விளக்க வேண்டும். முன்பே குறிப்பிட்டது போல, போரால் பேரழிவுகளை சந்தித்த முல்லைத் தீவு பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்ட பான்-கி-மூன் , தான் இது போல் வேறு எங்கும் கண்டதில்லை என்று கூறினார். தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம் ஒன்றிற்கு மட்டும் சென்று விட்டு, மாலை மரியாதை வாங்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவ்வளவு தான் ஐ.நா பொதுச் செயலாளரின் நடவடிக்கைகள். இதன் பிறகு தான் இலங்கை தன்னைத் தானே பாராட்டி ஐ.நா மனித உரிமை அவையில் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது.

அறிக்கைப் பகுதி 36:

போர் முடிந்த நாளான மே 19 அன்றே ஐ.நா மனித உரிமை அவையில் இலங்கைப் பற்றிய சிறப்பு விவாதம் நடத்த 17 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன. விவாதம் நடக்க மே 26, 27 ஆகிய தினங்கள் குறிக்கப்பட்டன. இலங்கை அரசு இத்தகைய சிறப்பு விவாதத்தை விரும்பாத போதிலும், விவாதம் நடப்பது உறுதி ஆனதும் அவசரமாக ஒரு வரைவுத் தீர்மானத்தை சமர்பித்தது. சிறப்பு விவாதம் நடத்த முயற்சித்த உறுப்பு நாடுகளை முந்திக் கொண்டதன் மூலம், நடைமுறைச் விதிகளின் படி இலங்கை அரசின் தீர்மானமே அவையின் நடவடிக்கைகளுக்கு அடிப்படையானது. உள்நாட்டு அகதிகளுக்கு ஆதரவு அளித்ததைப் பாராட்டியும், மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசு எடுக்கும் முயற்சிகளை வரவேற்றும், சர்வதேச சமூகத்தை இலங்கைக்கு ஒத்துழைக்கக் கூறியும் இலங்கை அரசு கொடுத்த வரைவுத் தீர்மானத்தை அவை நிறைவேற்றியது. கூட்டு அறிக்கையை அங்கீகரித்த போதிலும், பொறுப்பாண்மை(Accountability) பற்றி அந்த தீர்மானம் குறிப்பிடவில்லை.

அறிக்கைப் பகுதி 38:

செப்டம்பர் 14,2009 அன்று ஐ.நா பொதுச் செயலாளர் இலங்கை அதிபருக்கு எழுதிய கடிதத்தில் பொருப்பாண்மைக் குறித்து "எனக்கு அறிவுரைக் கூறவும் உங்களுக்கு உதவவும் வல்லுனர் ஆணையம் ஒன்றை நியமிக்க இருக்கிறேன்" என்று கூறினார். இராஜபக்சே இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. சர்வதேச நெக்கடிக் குழுமம் உட்பட பல அரசு சாரா தொண்டு நிருவனங்களிடம் இருந்து, பொருப்பாண்மை குறித்த சர்வதேச நடவடிக்கைகளை கோரும் விதிமீறல்கள் குறித்த ஆவண அறிக்கைகள் மே 2010 வாக்கில் வெளிவந்தன. மே 6 2010 இல் இலங்கை அரசாங்கம் போரில் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (Lessons Learnt and Reconciliation commission, LLRC) என்ற உள் நாட்டு விசாரணை அமைப்பை உருவாக்கியது.

அறிக்கைப் பகுதி 41:

"யுத்ததின் போதும் அதற்கு பின்பும், ஐ.நா ஊழியர்களுக்கான சிறப்பு உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள், சர்வதேச மனித உரிமை மற்றும் மனித நேய விதிகள் இவை அனைத்தும் இருந்த போதிலும் ஐ.நா அலுவலர்கள் தகாத முறையில் நடத்தப்பட்டனர்"

பான்-கி-மூன் என்ன நடவடிக்கை எடுத்தார்? ஒன்றுமில்லை

அறிக்கைப் பகுதி 44:

"ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படும் சூழல் குறித்து உறுப்பு நாடுகளிடமோ பொது வெளியிலோ ஐ.நா விளக்கவில்லை. இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு உத்திரவாதம் அளிப்பதில் இருந்து பின்வாங்கியதற்கு ஐ.நா அமைப்பு ரீதியாக ஆற்றிய எதிர்வினை ஒரு பெரும் தோல்வியைக் குறிக்கிறது"

அறிக்கைப் பகுதி 46:

வன்னியில் மட்டும் இறுதி கட்ட யுத்ததின் போது 3,60,000 உள்நாட்டு அகதிகள் இருந்ததாக வன்னி அதிகாரிகள் LLRC க்கு வாக்குமூலம் அளித்தார்கள். உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் அக்டோபர் 2008இல் தமிழீழ பகுதியில் இருந்த மக்கள் தொகை 4,29,000. ஆனால் இலங்கை அரசாங்கம் 70,000 பேருக்கு மேல் போர் பகுதியில் இல்லை என்று வற்புறுத்தி வந்தனர். 3,00,000 மக்கள் போர் பகுதியில் சிக்கியுள்ளனர் என்று ஐ.நா நம்பியது.

உண்மையான புள்ளி விவரங்களை அரசாங்கம் மறுத்து வந்ததன் மூலம் மனிதாபிமான உதவிகளை வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதை தேவைக்கு அதிகமானது என்று வாதிட்டது. மேலும் அதிகமான உயிரிழப்புகள் நேருவதாக வந்த அறிக்கைகளை மறுக்கவும் அது உதவியது. செப்டம்பர் 2008 இல் இருந்து மே 2009 வரையிலான கால கட்டத்தில் ஐ.நா வின் உதவிகளின் மூலம் அளிக்கப்படும் உணவு விநியோகம் மொத்தத் தேவையில் 20% இருந்து 0% க்கு குறைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும், மருந்துகள் இல்லாத்தாலும் மடிவதாக வன்னியில் இருந்த மருத்துவர்கள் கூறினர்.

அறிக்கைப் பகுதி 47:

“உதவிகளைத் தடுப்பது சர்வதேச விதிகளின் கீழ் தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளுக்கு எதிரானது என்ற ரீதியில் அரசாங்கத்தை ஐ.நா எதிர்கொள்ளவில்லை”

ஐரோப்பிய ஒன்றியம்:

இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசுகளின் வற்புறுத்தலின் காரணமாக மே 2006 இல் விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.

அமைதி காலத்தில் அமைக்கப்பட்ட "Sri Lanka Monitoring Mission" அமைப்பின் தலைவராக இருந்த ஸ்வீடனின் இராணுவ தளபதி மேஜர். உல்ஃப் ஹென்ரிக்சன், விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது மிகப்பெரிய தவறு என்றும், “பேச்சுவார்த்தைக்கு அவர்களை வரவழைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் உங்களிடம் கூறினோம். ஆனால் விடுதலைப் புலிகளை தடை செய்வது இப்போது தேவையில்லாதது” என்றும், எல்லாம் மிக வேகமாக நடைபெற்றது. இலங்கை அரசாங்கத்திடம் இருந்தும், அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து அழுத்தங்கள் வந்து கொண்டே இருந்தன.

முல்லைத் தீவிற்கு அருகே நடந்த ஒரு சம்பவத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தின் பேச்சை மட்டும் கேட்டது. எங்களுக்குத் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று அவர்கள் கேட்கவில்லை. ஏன் என்றால் எங்களிடம் அந்த நிகழ்வைப் பற்றிய மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. இலங்கை அரசாங்கம் சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது தடை பாய்ந்தது. தடை விதித்து விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று அறிவித்தன் மூலம் இலங்கை அரசாங்கம் என்ன வேண்டுமானலும் செய்து கொள்ளலாம் என்று பச்சைக் கொடி தீவிரவாதத்திற்கு எதிரான போராக அது மாறியது.

சர்வதேச சக்திகள் அனைவரும் அதை விரும்பினர். என்னைப் பொருத்த வரையில் அது ஒரு பெரிய தவறு. விடுதலைப் புலிகளை அமைப்பை தீவிரவாதிகள் பட்டியலில் வைப்பீர்கள் என்றால் இலங்கை அரசையும் வையுங்கள் என்று நான் வாதிட்டேன். ஏன் என்றால் இலங்கை அரசாங்கமும் அத்தகைய நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆக இந்த தடை மிகப்பெரிய தவறு என்று நான் கூறுவேன். இந்த தடையின் காரணமாகவே பேச்சு வார்த்தையின் மூலம் சுமூகமான தீர்வு காணுவது இயலாமல் போனது. இலங்கை அரசாங்கமும் அத்தகைய தீர்வை விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிகழாமல், பிரசல்ஸ் நகரின் தேநீர் கடைகளில் அமெரிக்க-பிரித்தானிய அழுத்தத்தால் ஏற்பட்டது” என்றும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தான் விடுதலைப் புலிகளின் வரலாற்றிலேயே மிகப் பெரிய அரசியல் பின்னடைவாகும். ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் நிதியை தான் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரிதளவு நம்பி இருந்தது. ஐரோப்பா எங்கிலும் விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன. ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு நிதி அளிப்பது தடை செய்யப்பட்டது. மீறி நிதி அளித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளித்து வந்தனர். இந்த தடை காரணமாக இது பெரிதளவும் குறைந்தது.

மனித உரிமைகள் பற்றி உபதேசித்தாலும், 2007 இல், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான பல்கேரியா, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, இத்தாலி, லித்துவேனியா, நெதர்லாந்து மற்றும் போலாண்ட் ஆகிய நாடுகள் மட்டும் 4.09 மில்லியன் யூரோக்காளுக்கு ஆயுதங்களை இலங்கை அரசுக்கு வழங்கியது.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பவர்களை தத்தமது நாடுகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கைது செய்ததுடன், கடற்புலிகள் சம்மந்தமான உளவுத் தகவல்களை அளிப்பது மற்றும் எண்ணற்ற ஆயுதங்களை கொடுப்பது என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன.

2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம், விடுதலைப் புலிகள் மீதான தடை தவறு என்று அந்த தடையை விலக்கியது, பிரித்தானிய, அமெரிக்க மற்றும் இந்திய அரசுகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்டியே விடுதலைப் புலிகளை தடை செய்ய வைத்தன என்பது இதில் இருந்து புலப்படுகிறது.

லிபியா:

இலங்கை மற்றும் லிபிய அரசுகள் இடையே எண்ணை இறக்குமதி மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது. இவையே இறுதி கட்டப் போரில் இராணுவ வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது.

தென் கொரியா:

இரு நாட்டு நல்லுறவின் பொருட்டும், விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதற்கு பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், 531 மில்லியன் டாலர்கள் இலங்கை அரசிற்கு இந்த போர் காலத்தில் தென் கொரியா கொடுத்தது.

செக் குடியரசு:

RM-70 வகை ராக்கெட் ஏவும் ஆயுதங்களும், Praga V3 வகை வாகனங்களும் 2008 ஆண்டு இலங்கை அரசிற்கு வழங்கியது செக் குடியரசு.

உக்ரைன்:

நான்கு Mig-27 வகை போர் விமானங்கள் 9.8 மில்லியன் டாலருக்கு இலங்கை இராணுவத்திற்கு விற்றது.

ஃப்ரான்ஸ்:

ஐரோப்பிய ஒண்றியத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்த ஃப்ரான்ஸ் அரசாங்கம், விடுதலைப் புலிகளின் கப்பல்கள் பற்றிய தகவல்களை இலங்கை அரசிற்கு அளித்தது.

Mirage ரக போர் விமானங்களையும், இராணுவ உதவிகளையும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் வற்புறுத்தலில் பெயரில் இலங்கை அரசிற்கு வழங்கியது ஃப்ரான்ஸ் அரசாங்கம்.

ஜப்பான்:

அமைதி பேச்சுவார்த்தை காலகட்டத்தில், இலங்கை அரசிற்கு வந்த வெளிநாட்டு உதவிகளில் 45% ஜப்பான் அளித்தது.

கடற் புலிகளின் நடவடிக்கைகளைப் பற்றி உளவுத் தகவல்களை அளித்த ஜப்பான், இரண்டு கப்பல்களை இலங்கை இராணுவத்திற்கு அளித்தது. மேலும் தங்கள் நாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களையும் கைது செய்தது.

மாலத்தீவு:

இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில், இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான உளவுத் தகவல்களை திரட்டித் தருவதில் முக்கியப் பங்காற்றியது மாலத்தீவு. கடற் புலிகளின் நடவடிக்கைகளைப் பற்றி துப்புக் கொடுத்து உதவியதுடன், விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்றையும் கைப்பற்றியது.

ஸ்லோவாக்கியா:

2006-09 காலகட்டத்தில் மட்டும் 1.1. மில்லியின் யூரோக்கள் மதிப்பிலான ராக்கெட்டுகளை இலங்கை அரசிற்கு கொடுத்தது.

ஸ்விட்சர்லாந்து:

அமெரிக்கா, பிரித்தானிய அரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வற்புறுத்தலின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்பு மீது தடை விதித்தது.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள 40,000 தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு நிதி அளிப்பதை தடை செய்ததுடன், விடுதலைப் புலிகளுக்கு நிதி அளிப்பவர்களை கைது செய்யத் தொடங்கியது.

தற்சமயம், ஸ்விட்சர்லாந்து நீதி மன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கியுள்ளது.

ஆஸ்திரேலியா:

 இலங்கை அரசிற்கு 27 மில்லியன் டாலர் இராணுவ உதவிகளை 2008-2009 கால கட்டத்தில் செய்தது.

ஆஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் ஈழத் தமிழர்கள், பெரும் நிதிப் பங்களிப்பை விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு செய்து வந்தனர்.

2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ஆஸ்திரேலிய அரசு, அங்குள்ள 30,000 ஈழத்தமிழர்கள் நிதி அளிப்பதை தடுத்தது. அதையும் மீறி நிதி அளித்தவர்களை தீவிரவாதத்திற்கு துணைபோகிறவர்கள் என்று கூறி கைது செய்தது.

கியூபா:

லத்தின் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ALBA வில் உள்ள பொலிவியா மற்றும் நிராகுவா ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்ததைத் தொடர்ந்து, 2008இல் ஃபிடல் காஸ்ட்ரோவும் கியூபாவின் ஆதரவை அறிவித்தார்.

2012 ஆம் ஆண்டு, மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறுதலை விசாரிக்க கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, இலங்கை அரசிற்கு ஆதரவாக கியூபாவும், ALBA கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் வாக்களித்தன.

“இந்த உலகத்தில் சுரண்டப் படுகிறவர்கள் அனைவருமே எங்கள் தோழர்கள்.. சுரண்டுபவர்கள் அனைவருமே எங்கள் எதிரிகள்.இந்த உலகமே எங்கள் நாடு. புரட்சியாளர்கள் அனைவருமே எங்கள் சகோதரர்கள்” என்று முன்பு அறிவித்த காஸ்ட்ரோ, அதற்கு நேர் எதிரான முடிவை எடுத்தார்.

இந்தோனேசியா:

செந்திரா சூரிய ஏகஜாயா என்ற இந்தோனேசிய நிறுவனம் தயாரித்த P2 APC இராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் வாகனங்கள் பல இலங்கை அரசிற்கு அளிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆயுதங்களை வாங்கும் முக்கிய பகுதியாக இந்தோனேசியா இருந்தது. விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல்களைப் பற்றிய உளவுத் தகவல்களை இலங்கை அரசாங்கத்திற்கு அளித்தது. அதைக் கொண்டே விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பலை 2007இல் இலங்கை அரசாங்கம் அழித்தது.

கிரேக்கம்:

மூன்று மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை, குறிப்பாக 32,400 81mm மோர்டார் துப்பாக்கிகளை இலங்கை இராணுவத்திற்கு 2007 ஆம் ஆண்டு அளித்தது.

கனடா:

இந்தியா, அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக மே 6,2006 அன்று அறிவித்தது.

புலம் பெயர் தமிழீழ மக்கள் மிகுதியாக வாழ்வது கனடாவில் தான். புலிகள் மீதான தடையின் காரணமாக 3,00,000 தமிழர்கள் நிதி அளிப்பது தடை செய்யப்பட்டது.

ஐரோப்பாவை அடுத்து, கனடாவில் தான் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் தமிழர் கட்டமைப்பு இருந்தது. விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் போராடிய பிறகும் கூட, தடை நீக்கப்படவில்லை.

உலகத் தலைவர்கள் அனைவரும் போரின் வெற்றிக்கு இலங்கை அரசுக்கு வாழ்த்து தெரிவித்த போதும் கூட, கனட பிரதமர் ஸ்டீஃபன் கார்பெர் மட்டும் தெரிவிக்க மறுத்து விட்டார். முதலாம் ஆண்டு வெற்றி விழாவிற்கும் வர மறுத்துவிட்டார்.

கனடா அரசாங்கம் மட்டுமே அப்பாவி ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டத்தைப் பற்றி தங்களுடைய அதிகாரப் பூர்வ அறிக்கையில் தெரிவித்தது. மற்ற நாடுகள் அனைத்தும் பாராட்டுகள் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டன. 39க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியுடன், லட்சக்கணக்கான டாலர்களை செலவளித்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய பிறகே ஒரு தமிழனை தோற்கடிக்க முடிந்தது இலங்கை அரசால்.