எழுத்தாளரும் அரசியல் - சமூக விமர்சகருமான மனுஷ்யபுத்திரன் மீது மிரட்டல் தாக்குதல் தொடுக்கப்படுவதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவருடனும் கருத்துச் சுதந்திரத்திற்காக நிற்போருடனும் தமுஎகச தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ரிசானா நஃபீக் தன் குடும்ப வறுமை காரணமாக சவுதி அரேபியா நாட்டில் வீட்டு வேலை செய்து வந்தவர். ஒரு குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்தச் சிறுமி அரசின் மரண தண்டனைக்கு உள்ளானார். நீதிமன்றம், மதவாதம் சார்ந்த சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொடுமையான முறையில், பொது இடத்தில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பல இஸ்லாமிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில், ஒரு சிறுமியை இவ்வாறு கொன்றது ஏற்கத்தக்கது அல்ல என்ற கருத்தை, நக்கீரன் வார இதழில் மனுஷ்யபுத்திரன் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். மரண தண்டனை குறித்து பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்ற போதிலும், மனுஷ்ய புத்திரனுக்குத் தனது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமும் உரிமையும் இருக்கிறது. அந்த உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டியதாகும்.

ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தன்னைத் தானே நியமித்துக்கொண்டு, அவர்களது மார்க்கத்திற்கு எதிரான கருத்தை மனுஷ்யபுத்திரன் கூறிவிட்டார் என்று கூறி அவரையும், அதை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் கோபால் அவர்களையும் கண்டித்து கூட்டம் நடத்தியுள்ளது.

எழுத்தாளரின் வாதத்தை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மனுஷ்யபுத்திரனைத் தாக்குகிற கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒருவர் கொலைமிரட்டலே கூட விடுத்துள்ளார்.

மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட சகிப்பின்மைகள் வளர்வது மக்கள் ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். மேலும் இது, முஸ்லிம் மக்கள் அனைவரையுமே தவறான முறையில் சித்தரிக்க முயலும் சக்திகளுக்கே சாதகமானதுமாகும்.

பொதுவான முஸ்லிம் மக்கள் இயக்கங்கள் இப்படிப்பட்ட செயலில் இறங்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். அந்த இயக்கங்கள் இத்தகைய பொறுமையற்ற மிரட்டல்களை வெளிப்படையாகக் கண்டிக்க முன் வர வேண்டும் என்று தமுஎகச கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தில் உள்ள கலை இலக்கிய அமைப்புகளும், எழுத்தாளர்கள் - கலைஞர்களும், ஜனநாயக - மதச்சார்பற்ற சக்திகளும் இப்பிரச்சனையில் மனுஷ்புத்திரனோடு தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

- தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், செயலாளர் சு.வெங்கடேசன்

Comments

9 comments

9
thiyagarajan
மதம் என்பது இரைவனை நினைக மட்டும். வாழ்க்கைமுரை என்பது நம் வாழும் நிலதை பொருதது. இந்தியர், பாலைவனதில் தனது வாழ்கைமுரைஇல் வாழ முடியாது, அதுபொல் பாலைவன வாழ்கை நீர் நிரைந்த பூமீயில் வாழ முடியாது. மதம் வேரு வாழ்க்கைமுரை வேரு.
karuamathi
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். போன்ற மத பயன்கரவாத பார்பனிய அமைப்புகளது வளர்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ர மதப்பிர்போக்கு வாதிகளது சொல்லும், செயலும் ஒரு காரணம்.
முஹம்மத் யூஸுஃப்
நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஒரு குறிப்பிட்ட இயக்கத் தலைமையின் கருத்துக்களை தமிழக முஸ்லிம்களே ஆதரிக்காமல் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து பல்வேறு கண்டனப் பதிவுகளையும், கடிதங்களையும் எழுதி அனுப்பிக் கொண்டுள்ளனர்.

இஸ்லாத்தில் இத்தகைய மிரட்டல் உருட்டலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இடமில்லை. மனுஷ்ய புத்திரன் கூறியதை ஏற்புடையதாக சிலருக்கு இருப்பது போன்றே சிலருக்கு எதிர் கருத்துகளும் உள்ளன. ஆனால், அதனை இத்தகைய முறையில் ஒரு முஸ்லிம் இயக்கம் தெரிவித்திருப்பதற்கு ஒரு முஸ்லிம் என்ற முறையில் வருந்துகிறேன்.
viyasan
ம‌னுஸ்ய‌புத்திர‌ன் ம‌ட்டுமல்ல‌ உல‌கிலுள்ள‌ மனித‌வுரிமை இய‌க்க‌ங்க‌ள் அனைத்துமே கொலைக்குற்றம் சாட்ட‌ப்ப‌ட்ட‌ போது றிசானாவுக்கு 17 வ‌யது என்ப‌துடன் அந்த‌ ப‌கிர‌ங்க‌ சிர‌ச்சேத‌ம் ம‌னித‌நேய‌ம‌ற்ற‌து ம‌ட்டும‌ல்ல‌ உல‌கநாடுக‌ளால‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ட்ட‌ங்க‌ளுக்கெதிரான‌து என‌வும் கூறுகின்ற‌ன‌.

இந்தியாவில் க‌சாப்பின் தூக்குத்த‌ண்ட‌னையை எதிர்த்த‌து ம‌ட்டும‌ல்ல‌ அப்ச‌ல் குருவுக்குக் கூட‌த் தூக்குத் த‌ண்டனைய‌ளிப்ப‌து த‌வ‌றென‌ இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் வாதாடிய‌ ப‌ல‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் உண்டு. ஆனால் இன்று தன‌து தாய்மொழியாகிய‌ த‌மிழில் அவ‌ருக்கு எதிரான‌ குற்ற‌ங்க‌ளை எடுத்துக் கூறாம‌லேயே, ஏழு வ‌ருட‌ங்க‌ளாக‌ச் சிறையில் வாடிய‌பின்ன‌ரும் க‌ழுத்தை வெட்டி ஒரு அப்பாவிப் பெண்ணைப் படுகொலை செய்த‌து த‌வ‌று, இந்த‌ இருப‌த்தோராம் நூற்றாண்டில் அது வெறும் காட்டுமிராண்டித்த‌ன‌ம் என்று துணிந்து ஒரு த‌மிழ்நாட்டு எழுத்தாள‌ர் கூறிய‌தை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியிருக்கின்ற‌ன‌ த‌மிழ்நாட்டு இஸ்லாமிய‌ இய‌க்க‌ங்க‌ள். த‌மிழ்நாட்டில் அர‌பும‌யமாக்க‌ல் ம‌ட்டும‌ல்ல‌ த‌லிபானிச‌மும் வெகு வேகமாக வேரூன்றி வருகிற‌து என்ப‌த‌ற்கு இதை விட‌ வேறு ஆதார‌ம் தேவையேயில்லை.

http://www.viyaasan.blogspot.ca/
Pranesh
This is a democratic country where we have freedom of expression, one can tell his opinion on human rights which is nothing wrong until it hurts others sentiment. Islamic organizations should aware that Manushyaputhiran who is a socialist, not belonging to any political or its affiliated organizations. His expression of human rights is universal thought, nothing wrong in civiilized society. I request those Islamic organizations take right decision before criticizing others.
கோசின்ரா
மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் மதங்களின் அடிமைகளாக பார்க்கிற எந்த சமூகத்திலும் இத்தகைய கருத்துக்கள் வரத்தான் செய்யும்.தமிழ் நாட்டில் தமிழர்கள் குறைந்துக்கொண்டே வருகிறார்கள்.
இந்துக்களும் முஸ்லீகளும் வாழ்கிற நாடாக மாறிக்கொண்டிருப்பது சரியான மாற்றம் அல்ல.
siky saudi
nammai elllam miruha puthirarhalahavum avarai mattum manitha puthiraraha kaati kollum adhi methavi .. manusya puthiran mattumalla athupol unmai nilai ariyaamal poi katturaihalai eluthiya anaivaraum kandithahtu tntj... andha pennuku vayathu passport padi 30... 5 vayathu kuraithal 25 innum yeralamana unmaihalai kayil vaithu kondu vivathathirku thaan alaikirathu tntj..poihalai koori kondi thirium..sila vilambara eluthalarhalai ..asingapduvathu thavarillai..
முகமது அஸ்லம்
இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை : அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்

குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.

தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரணதண்டனை நியாயம் என்றால், அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?

சிறுமிக்கு தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், மைனர் வயதை 14ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள்தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவதுதான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.

சவூதியில் அதுதான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.

டெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப்பார்க்கிறார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா? மிருக புத்திரன்களாக இருக்கும் எழுத்தாளர்கள், ஜோசப் பாபா பையன்கள் மற்றும் விகடக்கச்சேரி நடத்தும் கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தை இவர்கள் பேசுவார்களா? பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப்பார்ப்பதுதான் சரியான பார்வையாகும்.

அனைவருக்கும் சமநீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.

அடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.

ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் நட்டமும் நீதிமன்றமும்தான் அதை முடிவு செய்ய இயலும்.

குழந்தை கொல்லப்பட்டபோது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதி மன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்யவேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாதபோது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவதுதான் அறிவுடையவர்களின் செயலா?

லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதுதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.

அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?

கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப்போல் கற்பனை செய்து எழுதினால், அதை மிருகபுத்திரன்களும் விகடக் கோமாளிப் பையன்களும் ஏற்றுக் கொள்வார்களா?

இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை, உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில்மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம்தான். நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.

கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்? மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.

கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறு கெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.

மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள்.

இந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களை தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அதுபோன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வெளியீடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

புப்லிஷெட் ஒன்: ஜனுஅர்ய் 19, 2013, 5:13 ப்ம் விஎந்ச்: 693

ப்ரின்ட் டகென் ஃப்ரொம் ந்ந்ந்.ஒன்லினெப்ஜ்.சொம்
முகமது அஸ்லம்
மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா

மனுஷ்ய புத்திரனுக்கு கொலை மிரட்டல் விட்டதைக் கண்டித்து சிலர் அறிக்கை விட்டுள்ளார்களே?

மசூத் கடையநல்லூர்

மனுஷ்யபுத்திரன் எழுத்தாளராக ஆனது அவரது எழுத்தாலும் அறிவாலும் அல்ல. அவரது எந்த வாத்த்திலும் அறிவார்ந்த வாதம் இருக்காது. ஆனால் அவரது உடல் நிலை காரணாக சிலர் பச்சாதப்ப்பட்டு பிழைப்புக்கு வழி ஏற்படுத்தலாமே என்று அவரது எழுத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

தன் மீது பச்சாதாபம் ஏற்படுவதற்காக இவர் எதுவும் செய்யக் கூடியவர் என்பது தான் எனது கணிப்பு.

ஒருவர் ஒரு களத்தில் தோற்று விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் என்ன செய்வார்? அது பற்றி பேசாமல் ஒதுங்கி விடுவார். ஆனால் இவர் என்ன செய்வார் என்றால் என்னை தோற்கடித்து விட்டார்கள் என்று மீடியாவில் புலம்புவார். நாம் விவாத்த்துக்கு இவரை அழைக்கிறோம். அழைப்பை ஏற்கும் அளவுக்கு இவரிடம் உண்மை இல்லாததால் அதை அவரால் ஏற்க முடியவில்லை. ஆனால் இது அவருக்கு அவமானமானதாகும். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் என்னை விவாத்த்துக்கு அழைக்கிறார்கள். நான் போகவில்லை என்று கலைஞர் டிவியிலும் ஹிந்து பத்திரிகையிலும் ஒப்பாரி வைக்கிறார். பாவப்பட்ட இண்டஹ் மனிதனை இந்தப் பாடுபடுத்தலாமா என்று படம் காட்டுவதே இவரது நோக்கம்.

கொலை மிரட்டல் என்பதும் இது போன்றது தான்.

இவருக்கு கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல் துறைக்கு சென்று கொலைமிரட்டல் விட்டவர்களுக்கு எதிராக புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். முற்போக்குகளாவது கொலை மிரட்டலுக்கான மெயில் அல்லது கடிதம் அல்லது போன் நம்பர் ஆகியவற்றுடன் அவரை அழைத்துச் சென்று புகார் கொடுத்திருக்க வேண்டும்.

அல்லது அநாமதேயமான மிரட்டல் என்றால் அது பற்றி அலட்சியப்படுத்த வேண்டும். மொட்டை மிரட்டல் என்றால் எனக்கு இது போல் ஆயிரத்துக்கும் மேல் வந்துள்ளது. நான் அதுபற்றி புலம்பிக் கொண்டிருக்கவில்லை. அது என்னைப் பாதித்தால் காவல் துறையை நான் அணுகி அதை எதிர்கொண்டிருப்பேன்.

அப்படி ஒன்றும் செய்யாமல் இருப்பதில் இருந்து கொலை மிரட்டலை இவரே தயாரித்துக் கொண்டார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. யாராவது கொலை மிரட்டல் விட்டால் அது கண்டிக்கத்தக்கது என்பதில் நாமும் உடன்படுகிறோம். . ஆனால் இது தனக்குத்தானே இவர் அளித்துக் கொண்டது என்ற சந்தேகம் தான் நமக்கு வருகிறது.

புப்லிஷெட் ஒன்: ஜனுஅர்ய் 29, 2013, 9:12 ஆம் விஎந்ச்: 606

ப்ரின்ட் டகென் ஃப்ரொம் ந்ந்ந்.ஒன்லினெப்ஜ்.சொம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.