சென்னையில் பா.ம.க நடத்திய அனைத்து சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவும்  பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் நேச சக்திகளாக இருக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியிலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. அந்தக் கூட்டத்தில் மருத்துவர் ராமதாசுடன் பெரியவர் குணங்குடி ஹனீபா சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்தவுடன் பலருக்கும் கடும்கோபமும், ஆத்திரமும் வந்துள்ளது. சந்தடி சாக்கில் இந்துத்துவ சக்திகளும், தலித் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே இருக்கும் நல்லுறவை சீர்குலைக்க விரும்புபவர்களும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களை காய்ச்சி எடுக்கின்றனர். எனவே இந்தப் பிரச்சினையின் உண்மை நிலையை எடுத்துரைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ramadoss_haneefa_640

தருமபுரியில் தலித் மக்கள் மீது வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.வினர் முன்னின்று நடத்திய தாக்குதல்களைக்  கண்டித்து வெறுமனே அறிக்கையோடும் ஆறுதலோடும் நின்றுவிடாமல் உடனடியாக களத்திற்குச் சென்று தமது ஜனநாயகக் கடமையை ஆற்றிய முதல் தலித் அல்லாத சமூகத்தினர் இஸ்லாமியர்கள்தான் என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், ஜமாத்தே இஸ்லாமி போன்ற இஸ்லாமிய சமூக அமைப்புகளும் தருமபுரிக்கு நேரில் சென்றன. தலித்துகளுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து தலைநகர் சென்னையில் நடைபெற்ற முதல் போராட்டமே எஸ்.டி.பி.ஐ நடத்தியதுதான் என்பது கவனிக்கத்தக்கது. சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க. பொதுச் செயலாளர் அன்சாரியும், எஸ்.டி.பி.ஐ தலைவர் தெஹ்லான் பாக்கவியும் பங்கேற்று கண்டன உரையாற்றியுள்ளனர். இரு கட்சிகளின் பத்திரிகைகளிலும் தருமபுரி குறித்த செய்திகள் முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட்டு வருகின்றன.

தருமபுரிக்கு நேரில் சென்று வந்ததோடு, அந்த வன்முறைக்கு எதிராக படைப்பாளிகளின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்' எனும் அமைப்பில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த நானும் ஒரு ஒருங்கிணைப்பாளராக இருந்து பல்வேறு களப்பணிகளை செய்து  வருகிறேன். 'சமநிலைச் சமுதாயம்' இதழில் தருமபுரி குறித்து தோழர் யாழன் ஆதி எழுதிய கட்டுரை அட்டைப்பட முகப்போவியமாக வெளிவந்துள்ளது. கூடங்குளம் பிரச்சனைக்கு அடுத்து  ஒரு பொதுப் பிரச்சனையில் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் தீவிரம் காட்டி வருவது தலித்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகத்தான் என்பதை சொல்லியாக வேண்டும். ஆக இந்த அளவுக்கு களத்தில் தலித்களோடு கரம்கோர்த்து நிற்கும் முஸ்லிம் அமைப்புகள், ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்ற கேள்வி இயல்பாகவே அனைவரிடமும் இப்போது எழுந்துள்ளது. இந்தக் கேள்வி நியாயம்தான் என்றாலும், இதில் முஸ்லிம் அமைப்புகளின் கருத்தை கேட்டறிவதற்கு முன்னரே அள்ளித்தெளித்த அவசர கோலத்தில் விமர்சனக் கணைகளோடு பலர் கிளம்பியிருப்பதுதான் வேதனையளிக்கிறது.

ansari_dharmapuri_640

தருமபுரியில் பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி

விடுதலைக் குயில்கள் அமைப்பின் சார்பில் கடந்த 1-12-2012 அன்று எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற்ற தருமபுரி வன்முறைக்கு எதிரான கருத்தரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. தலைவர் தெஹ்லான் பாக்கவி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் இருந்த எனக்கு ம.ம.க. பொதுச் செயலாளர் அன்சாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மறுநாள் பா.ம.க. நடத்தும் அனைத்து சமூக கூட்டத்திற்கு த.மு.மு.க.வுக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், அதுபற்றி தோழர் திருமாவிடம் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார். உடனே நான் அருகிலிருந்த தோழர் திருமாவிடம் அலைபேசியைக் கொடுத்தேன். இருவரும் பேசிக் கொண்டார்கள். முதலில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்றே முடிவெடுத்ததாகவும், பின்னர் பல விசயங்களையும் யோசித்தபோது அந்தக் கூட்டத்தை புறக்கணிக்காமல் கலந்து கொண்டு, தருமபுரியில் தாம் கண்டவற்றை தெளிவாக பதிவு செய்யப் போவதாகவும் அன்சாரி கூறினார். இதை அருகிலிருந்து கவனித்த எஸ்.டி.பி.ஐ. தலைவர், தங்கள் அமைப்புக்கும் அழைப்பு வந்திருப்பதாகவும், கலந்து கொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், ஆனால் கலந்து கொண்டு நம் கருத்தைச் சொல்வதே சிறந்தது என்றும் கருத்துரைத்தார். அதன் பின்னரே இரு அமைப்புகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.

மறுநாள் நடைபெற்ற கூட்டத்தில் ராமதாஸ் தலைமையில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். அதில் பங்கேற்ற மற்ற சமுதாயத்தவர்களே முகம் சுளிக்கும் வகையில் தலித்துகளைப் பற்றியும், தோழர் திருமாவைப் பற்றியும் ஒருமையில் கேவலமாகப் பேசியுள்ளார் ராமதாஸ். அத்தோடு தலித்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் உச்சகட்ட சாதிவெறியில் அங்கிருந்தவர்கள் உளறிக்கொட்டியபோது, உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளன இரு முஸ்லிம் அமைப்புகளும். அதன்பிறகே அதுபோன்ற கிறுக்குத்தனமான முடிவுகள் தீர்மானமாக நிறைவேற்றப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் இதை எதையுமே கருத்தில் கொள்ளாமல், ஒரு புகைப்படத்தை மட்டும் பார்த்து விட்டு வானத்துக்கும் பூமிக்கும் பலர் குதிப்பது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஒரு குழுவோடு சென்று சந்தித்து வந்ததை கேவலப்படுத்தியும் இழிவுபடுத்தியும் விமர்சித்து வருகிற கும்பலே இந்த அருவருப்பான செயலிலும் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

'தலித்களுக்கும் வன்னியர்களுக்குமான பிரச்சனையில் இஸ்லாமியர்களுக்கு என்ன வேலை? நீங்கள் பொதுவானவர்களாயிற்றே; இரண்டு சமூகமும் உங்களுக்கு வேண்டும் எனும்போது நீங்கள் ஒரு சார்பாக தருமபுரியில் போய் நிற்கிறீர்களே' என்றெல்லாம் தொடர்ச்சியாக இஸ்லாமிய அமைப்புகளை நோக்கி பலரும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று 'தலித் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களையும் கூடத்தான் ஊருக்கு ஊர் காதலித்து கூட்டிச் செல்கின்றனர்; அப்படியிருக்கும்போது நீங்கள் எங்களோடு சேராமல் தலித்களோடு போய் நிற்கிறீர்களே?' என்றும் சொல்லி உசுப்பேற்றி விடுகின்றனர். இத்தனை நுட்பமான  'லாபி'களையெல்லாம் தாண்டித்தான் முஸ்லிம் அமைப்புகள் தலித்களோடு களத்தில் இணைந்து நிற்கின்றனர். இன்னும் உறுதியோடு நிற்போம் என்பதையும் உரத்துச் சொல்லி வருகின்றனர்.

nallakannu_thiruma_ansari_mani

தருமபுரி தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இரவிகுமார், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், நல்லகண்ணு, திருமாவளவன், தமிமுன் அன்சாரி, கொளத்தூர் மணி, தெஹ்லான் பார்கவி

பெரும்பான்மைச் சாதிகளை ஒருங்கிணைத்து தலித்துகளை தனிமைப்படுத்தி அதன்மூலம் ஒரு அரசியல் அறுவடையைச் செய்யவே ராமதாஸ் முயன்று வருகிறார் என்பதையும், மற்றபடி அவருக்கு வன்னியப் பெண்கள் மீதோ, பிற தலித் அல்லாத சாதிகள் மீதோ எவ்வித பற்றும் கிடையாது என்பதையும், இது முழுக்க முழுக்க அரசியல் முழக்கம் என்பதையும் அனைவரும் உணர்ந்தேயுள்ளனர். எல்லோருக்கும் தெரிந்த இந்த விசயம் முஸ்லிம்களுக்கு தெரியாமல் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லோரையும்விட தெளிவாக இதில் முஸ்லிம்கள் செயல்பட்டு வருகின்றனர்.

எப்படி ராமர்கோயில் பிரச்சனையைக் கையிலெடுத்து இந்தியா முழுவதும் வெகுமக்களின் மத உணர்வுகளைத் தூண்டி அதன்மூலம் பா.ஜ.க  ஒரு அரசியல் அறுவடையை எடுத்ததோ, அதைப்போலவே இப்போது பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரிடமும் தலித்களை எதிரியாகக் காட்டி ஒரு கேவலமான அறுவடையை எடுக்கத் துணிந்துள்ளது பா.ம.க. ஆக பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் பெரிய வேறுபாடில்லை. அவர்களுக்கு மத உணர்வு; இவர்களுக்கு சாதி உணர்வு.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய ம.ம.க. பொதுச் செயலாளர் அன்சாரி ஒரு நுட்பமான விசயத்தைக் குறிப்பிட்டார். அதாவது 'தருமபுரியில் முன்திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன் என்று கேட்டால், அவர்கள் மரத்தை வெட்டி சாலையில் போட்டு விட்டார்கள்; அதனால் எங்களால் உள்ளே நுழைய முடியவில்லை என்று சொல்கிறது காவல்துறை. இது பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது, டயரைக் கொளுத்திப் போட்டுவிட்டார்கள்; அதனால் எங்களால் தடுக்க முடியவில்லை என்று ராணுவம் சொன்னதுபோல் இருக்கிறது' என்று பேசினார். 

ஆக, காவல்துறை என்றாலும், ராணுவம் என்றாலும், நீதித்துறை என்றாலும், ஊடகம் என்றாலும் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகவே ஒன்றுபட்டு இயங்குகின்றன. ஆதிக்க சக்திகள் ஒன்றுபட்டு நிற்கும்போது, அவர்களை எதிர்கொள்ள தலித்துகளும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு நின்றேயாக வேண்டும். இதை இரு சமூகத் தலைமைகளும் உணர்ந்து செயல்படுவதாகவே எண்ணுகிறேன்.

- ஆளூர் ஷாநவாஸ்

Comments

29 comments

29
ansari
தோழர் ஷாநவாஸ் அவர்களின் கட்டுரை நல்ல தகவல்களை தந்துள்ளது... வாழ்த்துக்கள்
Guest
தகவலுக்கு நன்றி தோழர் !!!
arafath
சகோதர சாநவாஸ் அவர்களை நீங்கள் விளக்கம் கொடுக்க தேவை இல்லை சம்பத்ந்தமாக அவர்கள் இருவரும் விளக்கம் கொடுக்க வில்லை ச்ரி நீங்கள் சொல்வது போல் அங்கு சென்று இவர்கள் கண்டனதை பதிவு செய்தார்களா இல்லை அப்படி இருக்கும் போது் இந்த பிரச்சினை எங்கள் தவறால் நடந்தது என்று அந்த இயக்க தலைவர் களை ஒப்பு கோண்ட போது நீங்கள் வில்லகம் கொடுப்பது சரியானது அல்ல இதை திருப்பூர் இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாஹா எங்கள் வரத்தை தெர்வ்விது்கொள்கிறோம்
mohanraj
அப்படி எனில் நீங்கல் அரிக்கை விடுன்கல்
பார்வையாளன்
அனைத்து சமூக தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தின் இம்முடிவுகளில் எங்களுக்கு ஒப்புதலில்லை என்று அவர்கள் அறிக்கை விட்டார்களா இல்லை இக்கூட்டம் எதற்கு என்று தெரியாமலே போனார்களா. யாரை ஏமாற்ற இக்கட்டுரையை இவர் எழுதியுள்ளார். இகட்டுரையை அவ்வமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கூட்டத்தில் பங்கேற்றவர்களும் இவருடன் சேர்ந்து எழுதியிருந்தால் அதை நம்ப முடியும். எதற்கு இப்படி் அவசர அவசரமாக ஒரு கட்டுரையை எழுதி வெளியிட வேண்டும். இந்த நபர் யார், இவருடைய அரசியல் என்ன என்பதை அறிந்தவர்களுக்கு இதில் உள்ள நுண் அரசியல் புரியும். இப்பிரச்சினையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் செயல்களை செய்வது யார் என்று இப்போது புரிகிறது.
noor
தகவலுக்கு நன்றி தோழர் !!!
செங்கை நில‌வ‌ன்
நான்கூட‌ முத‌லில் இந்த‌ போட்ட‌வை பார்த்த‌போது நிறைய‌ கோப‌ம் தான் வ‌ந்தது, ந‌ல்ல‌ த‌க‌வ‌ல் த‌ந்து உள்ளீர்க‌ள் ந‌ன்றி...

ம‌ருத்துவ‌ம் ப‌டித்துவிட்டு இந்த‌ கீழான‌ அர‌சிய‌ல் செய்வ‌த‌ற்கு ப‌தில் வேறு எதாவ‌து செய்ய‌லாம்...
Shanavas Singapore
கூட்டத்தில் கல ந்து கொண்டிரூக்ககூடாது
இனி வரும் நிகழ்வுகளில் தவிர்ப்பார்களா
செ.நாகேந்திரகுமார்
மனிதர் மனிதராய் ஒன்று சேர்வோம்!!
பிரிவினை சக்திகளை புறக்கணிப்போம்...

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2882%3A2012-12-03-16-09-06&catid=58%3A2009-10-11-12-42-41
முத்துப்பேட்டை முகைதீன்
சகோ.ஷாநவாஸின் இந்த விரிவான கட்டுரை முஸ்லிம் அமைப்பினர் மீது வைக்கும் புரிந்துணர்வு இல்லாத குற்றச்சாட்டாளர்களுக்கு தக்க விளக்கத்தை அளித்துள்ளது. முஸ்லிம்களையும் சேர்த்தே தலித்களுக்கு எதிராக திசை திருப்ப முயலும் பிற்போக்குவாதிகளின் சதியை முறியடிக்கிறது இந்த விரிவான கட்டுரை. நன்றி ஷா நவாஸ்.
sadiq
muslim iyakkathavarkal muthalil unarvupurvemaaka seyalbattaalum pinpu ottu keatke veantum endre nappaasaiyil angu sendru ullanar ithuthaan unmai . unmaiyil tharmepuriyil natanthe sampavaththai kantippavarkalaage irunthaal avarkal natathum koottathirkku povatharkku eppati manam varum? avarkal enthe chaakku pokkku sonnalum sariye unmaiyaanavarkal poiyirukke mutiyaathu
SHAJIBAI
தகவலுக்கு நன்றி தோழர் !!!
என்றும் அணிதியை எதிர்போம் !!
தோழமைக்கு தோல் கொடுப்போம் !
முஹம்மது
எந்த ஒரு யோக்கியனும் இன்றைய அரசியலில் இருக்கமாட்டான் இப்படி ஓட்டு பொறுக்கி அரசிய்லில் ஈடுபட்டால் இதுமட்டுமல்ல இதை விட மட்டமாகவும் சப்பை கட்டு கட்டித்தான் ஆக வேண்டும்.
கொள்ளுமேடு ரிஃபாயி
சாதிய வாதம் எந்த சாதியின் வடிவில் வெளிப்பட்டாலும் அது வன்மையாக கண்டிக்கப் பட வெண்டிய ஒன்றாகும்.
che
நிறைவேற்றபடாத இடஒதுக்கீடு எதிர்ப்பு போன்ற தீர்மானங்களுக்கு முஸ்லீம் அமைப்புகள் தான் காரணம் என்றால் நிறைவேற்றபட்ட தீர்மானம் குறித்து முஸ்லீம் அமைப்புகளீன் கருத்து என்ன?
1)நீங்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உங்கள் ஒப்புதலுடன் தானே தீர்மானம் நிறைவேற்றபட்டிருக்கும்?
2)தீர்மானத்திற்க்கு ஒப்புதல் இல்லை என்றால் வெளியேறி இருக்க வேண்டியது தானே.
saleem.
ஷாநவாஸ் அவர்களின் கட்டுரை நல்ல தகவல்களை தந்துள்ளது... வாழ்த்துக்கல்
Basheer Ahamed
ஜாதி அரசியல் நடக்கும் சூழலில் "காதல்'எனும் அழகான விஷயம் நசுக்கப்படுகிறது. விருப்பமற்ற திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு இஸ்லாம் சட்டமாக வைத்துள்ளது. மனம் ஒப்பாத மணத்தை இஸ்லாம் தடை செய்கிறது. அதே சமயம் ஆணும் பெண்ணும் தனித்திருப்பதை தடை செய்கிறது. பாலியல் ரீதியான புறக் கவர்ச்சியை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. அதாவது தமிழ் திரைப்படங்களில் விரட்டி விரட்டி பெண்ணை தேடி ஓடும் ஆணின் உணர்வை காதல் என்று சொல்லி சொல்லி நம் எல்லோருடைய உள்ளங்களையும் வீணாக்கி வைத்திருக்கின்றார்கள். இப்படிப்பட்ட கலாசார சூழலில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு இஸ்லாம் கூறும் "காதல் பாடம்" என்ன வென்று தெரியாது. அதாவது ஒவ்வொரு ஆணும் பேணும் எப்படி எப்படி தத்தமது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அழகான வாழ்வியலை சொல்லி தருகிறது. திருமணம், மறுமணம், விவாகரத்து, இப்படி எல்லா மனிதனின் தேவைகளையும், அழகாக சொல்லித் தரும் வாழ்வியல் தான் இஸ்லாம். இங்கே ஜாதி மதம் எல்லாம் கிடையாது. கடவுளை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது என்ற இரு பிரிவை மட்டுமே இஸ்லாம் சொல்லி தருகிறது. இஸ்லாத்தை ஏற்றுள்ள நாங்கள் சிறுபான்மை சமுதாயமும் அல்ல, பெரும்பான்மை சமுதாயமும் அல்ல. எல்லா மக்களுக்கும் வழி காட்ட வேண்டிய நடுநிலை சமுதாயம். பல முஸ்லிம் அன்பர்கள் கூட பிழையாக விளங்கியுள்ளதால் மேற்சொன்ன இந்த கருத்துக்கள் உங்களை வந்தடையாமல் இருக்கலாம். வாழ்க்கையை அழகாக்கி, மகிழ்வாக்கி வாழ்வது தான் மிக முக்கியம். இதற்காக காதலை எப்படி கையாள்வது என்பதை உன் மனம் போக்கில் செய் - என்று சொல்லாமல் அதைக் கூட பாடம் சொல்லி தரும் வாழ்வியலை முஸ்லிம்கள் முதலில் புரிந்து, பின்பற்றி வாழ வேண்டும் என்றும் முதலில் கேட்டுக் கொள்கிறேன். நன்றி
செய்யது இப்ராஹீம் கனி,மாநில ச
பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 02.12.2012 நடத்திய அனைத்துசமுதாய தலைவர்கள் கூட்டம் என்பது தருமபுரி பிரச்சனை சம்பந்தப்பட்ட கூட்டம் என்று நம்மிடம் சொல்லப்படவில்லை.ஏற்கனவே முன்பு நடைபெற்ற இட ஒதுக்கீடு சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தின் தொடர்ச்சி என்று சொல்லப்பட்டதால், எஸ்.டி.பி.ஐ கட்சி கலந்து கொண்டது.

அங்கு கொடுக்கப்பட்ட தீர்மானங்கள் தலித் சமுதாயம் சம்பந்தமானவையாக இருந்தது.எனவே இத்தீர்மானம் விசயத்தில் விவாதித்து கலந்தாலோசிக்காமல் ஆதரிக்க முடியாது என்பதனை பகிரங்கமாக அக்கூட்டத்திலேயே அறிவித்து விட்டோம் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்

மேலும் 02.12.2012 அன்று நடைபெற்ற அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கவில்லை என்பதனை அடுத்த தினமே அனைத்து பத்திரிக்கைகளுக்கும் தெரிய படுத்தி விட்டோம். கடந்த 03.12.2012 அன்று திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் பங்கேற்று தருமபுரி வன்முறையை கண்டித்தார்.மேலும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை கடந்த 14.11.2012 அன்று நேரில் சந்தித்து ,ஆறுதல் கூறி ,நிவாரணப்பொருட்களை வழங்கி,அவர்களுக்கு நீதி கேட்டு கடந்த 16.11.2012 அன்று சென்னையில் முதன் முதலாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது எஸ்.டி.பி.ஐ கட்சி என்பதனையும் ,இது சம்பந்தமாக முதல்வரின் தனி அலுவலர் மற்றும் உள்துறை செயலாளருக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக 04.12.2012 அன்று கோரிக்கையும் அளித்துள்ளோம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ்.டி.பி.ஐ கட்சியை பொறுத்தவரை பாதிக்கப்படுவது யாராக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கும்.சாதி,மதம்,இனம்,மொழி என்ற வேறுபாடு பார்க்காமல் மனித சமூகம் நலமுடன் வாழ அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்பதனையும் குறிப்பிடுகின்றேன்.

இப்படிக்கு
செய்யது இப்ராஹீம் கனி,மாநில செய்தி ஊடக பொறுப்பாளர், , எஸ்.டி.பி.ஐ கட்சி,தமிழ்நாடு.
SHAHAN NOOR
நன்றீ.....
meeran
சகோ பஷீர் அஹமது அவ்ர்கலுக்கு நன்றி அல்ஹம்துலில்லஹ்(புகழனைத்தும் இறைவனுக்கே).சரி யான பார்வை...இயக்க சிந்தனைக்கு அப்பார்பட்டு நடுனிலையான் உங்கள் வாதம்..நன்கு உரைத்துவிட்டது...அருமை சகோ....இது தான் சரியான் இஸ்லாமிய சிந்தனை....
maarimuthu
ஒருவேளை ராமதாசு கூட கூட்டணி வெக்க வேண்டி வந்தா வரும் அதுக்கு ஒரு சீட்டுல துண்டு போட போனமுன்னு வெட்டவெளிச்சமா சொல்லிட்டு போங்களேன்!

ஒருவேளை திருமா கூட கூட்டணி வெக்க வேண்டி வந்தா வரும் அதுக்கு ஒரு சீட்டுல துண்டு போட போனமுன்னு வெட்டவெளிச்சமா சொல்லிட்டு போங்களேன்!

ஒருவேளை திமுக கூட்டணி வெக்க வேண்டி வந்தா வரும் அதுக்கு ஒரு சீட்டுல துண்டு போட போனமுன்னு வெட்டவெளிச்சமா சொல்லிட்டு போங்களேன்

இதூக்கு ஒரு கட்டுரை, வெளக்கம் வேற
janarthanan
it is a good article for this society. i think it is a real marxism, periyarism and ambedkarism. if the leaders think for its society, not for its caste, there is no chance for Hindusim, capitalism and caste discrimination.
my wishes for shanavas
ஷாலி
தாழ்த்தப்பட்ட சகோதரர்களுடன் முஸ்லிம்கள் கை கோர்ப்பது இயல்பானது,இயற்கையானது.இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் அரபு நாட்டு இறக்குமதி அல்ல.எல்லாம் பூர்வீக சூத்திரர்கள்தான்.அண்ணன் தம்பி.மாமன் மச்சான் உறவுகள்தான்.சாதிச் சனியனிடமிருந்து விடுபட்டு சமத்துவம் தேடிப்போனவர்கள்தான்.ஆகவே தலித் முஸ்லிம் ஒற்றுமையின் மூலமே ஆதிக்க சாதிகளை அணை போட முடியும்.
sp.maragathaselvam
உண்மையை உலகறிய சொன்ன தோழருக்கும் ,இது போன்ற தகவல்கள் உலக அளவில் இருக்கும் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாய் இருக்கும் கீற்று இணையதளத்திற்கும் நன்றி
Atheysekar
இரன்டு கோடி தலித்துக்கலைப்பட்ரி எனக்கு தெரியாது ஆனால் மானமும், வீரமும் உல்ல 35 லட்ஷம் சிருத்தைகல் உங்கலோடு இனைந்து கலமாட காத்திருக்கிரோம்.... சந்தர்ப்பவதிகல் அல்ல சிருத்தைகல் சனனாயகவாதிகல்...
சரியான விலக்கம் அலித்த தோழர் ஷ.னாவாசுக்கு நன்றி...
kavimathy
இது அவசரா கதியில் எழுதப்பட்ட சப்பை கட்டு எனபது புரிகிறது. பல ஊரிகளில் முஸ்லீம் பெண்களை காதலித்து??? ஏமாற்றியது தலித்துகள் அல்ல இடைசாதியினரும், வன்னியர்களும் என்பது உங்களுக்கு தெரிய்வில்லையெனில் நாம் பட்டியல் தரலாம்.

தலித்துகளின், அடக்குமுறைகளை விட்டு விலகும் புள்ளியில் தலித்முசுலீம்களும் இருக்கிறார்கள் என்பதனை புரிந்துக்கொண்டால் சரி.

கவிமதி
துபை.
sirajudeen
திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் வன் செயல் என்பதும், அதற்கு முழுக்க காரணம் என்னவென்றும், எதற்காக நடத்தப்பட்ட பட்டது என்றும், யார் காரணம் என்றும் எல்லோருக்கும் காரணம் தெரிந்து இருந்தும், இந்த சமயத்தில் அவர்கள் கூட்டம் போடுவது எதற்கு என்று தெரிந்திருந்தும், கூட்டத்திற்கு சென்று விட்டு அவர் தலித்களுக்கு எதிராக பேசினார், அதில் எங்களுக்கு உடன் பாடில்லை என்று கூறுவதற்கு முன், அவர் தலித்களுக்கு எதிரானவர் என்பது முன்பே தெரியாதா ?

நாங்கள்தான் தலித் மக்கள் பாதிக்கப்பட்டபோது முதலில் போய் நின்றோம் என்று நீங்கள் கூறுவதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், அந்த கூட்டத்தில் பங்கு கொண்ட பிறகு அதை திரும்ப திரும்ப கூறுவது சந்தேகத்தையே எழுப்புகிறது. கூட்டத்தில் பங்கு கொண்ட பிறகு அவரை பற்றி விமர்சனம் வைப்பதற்கு முன், அவருடைய எண்ணமே ஓர் ஆதிக்க சாதி சிந்தனைதான் என்பதை அறியா சகோதர்களா நீங்கள் ?!

சில ஆண்டுகளுக்கு முன் நாடளுமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தின் ஆதிக்க சாதி வெறி கட்சியுடன் மனித நேய மக்கள் கட்சி கூட்டணி வைத்தது நினைவில் இருக்கிறதா ?

ஆதிக்க சாதி கட்சிகளின் கூட்டம் என்பதை மொழுகு பூசி மறைக்க சிறுபான்மை அமைப்புகள் அவருக்கு தேவைப்பட்டது. அது அவர் அரசியல் கணக்கு. உங்களுக்கு நடந்த வன்முறைக்கு யார் காரணம் என்று தெரிந்து இருந்தும் சென்றதற்கு வேறு ஏதாவது கணக்கு உள்ளாதா ?

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு, தலித் மக்களும், சிறுபான்மை மக்களும் ஒன்றுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய உண்மையான சகோதரர்கள் தலித் மக்களே.
buhari
ஷஹனவச் அவர்கலெ,னான் புகாரி பேசுரென்,முதலில் நாம் ஒழுன்க்காக இருக்கனும்.
ஜலால்
தலித் மக்கள் பாதிக்கப்பட்டபோது முதலில் போய் நின்றது அவர்களின் தோழன் என்று சொல்ல. ஐயா ராமதாஸ் கூப்பிட்டபோது போனது அவர் சீட் அதிகம தர. இது புரியலையா என்ன. தெளிவா சொல்ரார் நான் ஜாதி வெறியந்தான் என்று பிறகு அங்கபோயி என்ன ஒங்க கருத்த பதிய வக்கிறது?. இதற்குத்தான் கொள்கை இல்லாத கூட்டம் என்று பெயர். மக்கள் இவர்களை புரிந்துகொண்டால் சரி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.