'எங்கே போகிறது நாம் தமிழர் கட்சி? (நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தின் மீதான விமர்சனங்கள்)' - புத்தகத்தின் முன்னுரை:

எந்தப் பற்றும் அற்றவனாக தன்னை அறிவித்துவிட்டு, மானிட சமத்துவம் ஒன்றையே லட்சியமாகக் கொண்டு, அந்த இலட்சியத்துக்கு எதிராக எவை வரினும் அவற்றையெல்லாம் அழிப்பதையே தனது செயல்திட்டமாக வரித்து, இந்த மண்ணில் வாழ்ந்தவர் தந்தை பெரியார். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு இவையெல்லாம் இச்சமுதாயம் மானமும் அறிவும் பெற்று வாழ்வதற்காக அவர் மேற்கொண்ட செயல்திட்டங்களே. இச்செயல் திட்டங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. சாதியை ஒழிக்க விரும்பினால், மதம் குறுக்கே வரும்; மதத்தைத் தொட்டால் மூடநம்பிக்கையும், கடவுளும் குறுக்கே வரும்; இவை எல்லாவற்றையும் அழிக்க முற்பட்டால் பார்ப்பன இந்தியத் தேசியம் குறுக்கே வந்து நிற்கும்.

seeman_book_450படிநிலை ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புவர்கள், இவற்றில் ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் கைக் கொள்ள முடியாது. அதனால்தான் பெரியார் தன் இறுதி மூச்சுவரை இச்செயல் திட்டங்களை விடாது செயல்படுத்தி வந்தார். பார்ப்பன பனியாக்களின் சுரண்டலிலிருந்து தமிழ் மக்களைக் காப்பதற்காகவே 1937 ஆம் ஆண்டு அவர் தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கு வர வேண்டியதாயிற்றே அன்றி, மொழி அல்லது இனத்தின் மீது கொண்டு பற்றினாலோ அல்லது பிற இனத்தினரின் மீது கொண்டு வெறுப்பினாலோ அல்ல. அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு கோரிக்கை மிகவும் முற்போக்கானது. அதில் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், சமணர்கள் எல்லோருக்கும் சமத்துவமான இடம் இருந்தது. மேலும், ‘தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த பார்ப்பனர்களும் இங்கேயே வாழலாம். ஆனால், அவர்கள் இங்கு மனிதர்களாக வாழ முடியுமே தவிர, தேவர்களாக வாழமுடியாது’ என்பதையும் கூறினார். வர்ணாசிரம அடிப்படையில் நம்மைச் சுரண்டும் பார்ப்பனர்களிடமிருந்தும், பொருளாதார ரீதியாக நம்மைச் சுரண்டும் பனியாக்களிடமிருந்தும் தமிழ்ச் சமுதாயம் விடுபட ஒரே வழி, இந்தியா என்ற கட்டமைப்பில் இருந்து விடுதலை பெற்று தமிழ்நாடு தனி நாடாவதே என்பதை தனது வாழ்நாளின் இறுதிவரை முழங்கி வந்தவர் பெரியார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த பின்பு, பெரியார் பேசிய திராவிடம் உள்ளடக்கத்தில் தமிழ்நாட்டு மக்களை மையப்படுத்தியே இருந்தது. பார்ப்பன அடிமைகளாக இருக்கும் பிற திராவிட இன மக்கள் நம்மை விட்டுப் பிரிந்தது ஒரு வகையில் நல்லதே என்றும் கூறினார். தமிழ்த் தேசியக் கருத்தியலின் அஸ்திவாரமாக பெரியாரின் திராவிடம் இருந்தது. திராவிடத்தின் பரிணாம வளர்ச்சியாகத்தான் தமிழ்த் தேசியம் பரிமளித்திருக்கிறது.

ஆனால், முதல் மொழி, மூத்த இனம் என்ற வெற்றுப் பெருமிதங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தை சீமான் போன்ற சிலர் இன்று கட்டமைக்கிறார்கள். 'நான் பிறப்பால் உயர்ந்தவன்; எனது அக்ரகாரத்தில் மற்றவர்களுக்கு இடமில்லை' என்று பார்ப்பனர்கள் சொல்வதற்கும், 'நான் உலகின் மூத்த குடியைச் சர்ந்தவன்; எனது நாட்டில் மற்றவர்களுக்கு இடமில்லை' என்று இவர்கள் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே, பிறப்பின் அடிப்படையில், தங்களைத் தவிர்த்த மற்றவர்கள் மீது வெறுப்பைக் கக்குகிறார்கள்.

சாதி ஒழிப்பு, இந்துமதம் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பை முன்னிறுத்தி 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழங்கிய பெரியாரிடம் இருந்து, 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை மட்டுமே உருவி எடுத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் தமிழ்த் தேசியம் பேசுகிறார்கள். இந்தியா என்ற சிறைக்கூடத்தில் இருந்து விடுதலை பெறுவதே தமிழ்த் தேசியம். ஆனால், அந்த சிறைக்கூடத்தின் கான்விக்ட் வார்டன் பதவியை அடைந்தால் போதும் என்று செயல்படுபவர்கள் நாம் தமிழர் கட்சியினர். கைதிகளுக்கான கங்காணி வேலைதான் கான்விக்ட் வார்டன் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த கங்காணி வேலையைத்தான், பெயரில் மட்டுமே 'திராவிட' என்ற சொல்லை வைத்திருக்கும் அரசியல் கட்சிகள் இதுநாள் வரை செய்து கொண்டிருந்தன. அவைகளின் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி இன்று உருவெடுத்துள்ளது.

பிறகு ஏன் நாம் தமிழர் கட்சியை மட்டும் இவ்வளவு கடுமையாக எதிர்க்க வேண்டியிருக்கிறது என்றால், தமிழகத்தில் முதன் முறையாக இனத்தூய்மைவாத அரசியல் பேசி, தமிழ்ச் சமூகத்தின் அங்கமாக இருக்கும் ஒரு பிரிவினரை சாதி அடிப்படையில் ‘தமிழரல்லதார்’ என்று வேறுபடுத்தி, மிக மோசமான வெறுப்பு அரசியலை வளர்க்கும் வெகுஜன அரசியல் கட்சியாக தனது ஆவணத்தின் மூலம் அது வெளிப்பட்டிருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட தமிழ்ச் சமுதாயத்தில் பாசிசக் கருத்துக்களை அக்கட்சி விதைத்திருக்கிறது; மதச் சிறுபான்மையினர் மீது நஞ்சைக் கக்குகிறது. இது முளையிலே கிள்ளப்பட வேண்டியது.

நேற்று வரை பெரியாரின் பேரன் என்று மேடைகளில் திராவிட இயக்கக் கருத்துக்களை பேசிக் கொண்டிருந்த சீமான், இன்று 'திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்' என்று தடாலடியாக பல்டி அடிக்கக் காரணம் என்ன?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்பாக தமிழக மக்கள் இடையே ஒரு கொந்தளிப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே காவிரி நதிநீர்ப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் படுகொலை, முல்லைப் பெரியாறு சிக்கல் ஆகியவற்றில் இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில், ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழக இளைஞர்களிடையே தமிழ்த் தேசிய உணர்ச்சியை மிக வேகமாக பற்ற வைத்திருக்கிறது. இந்த தமிழ்த் தேசிய உணர்வலையை ஓட்டுகளாக அறுவடை செய்யும் வேலையில்தான் சீமானின் நாம் தமிழர் கட்சி இறங்கியுள்ளது. அதற்குத் தடையாக இருப்பவர்கள் யார் யார்? ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், வைகோ, விஜயகாந்த். இவர்களை முதல்வர் பதவிப் போட்டியிலிருந்து விலக்குவது எப்படி? நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த குறுக்கு வழிதான் 'வந்தேறிகள்' என்பது.

முதலமைச்சர் நாற்காலியை நோக்கிய பயணத்தில் நாம் தமிழர் கட்சியினர் கொடுக்க விரும்பும் பலிகள்தான் திராவிடம், இடஒதுக்கீடு, மொழி மற்றும் மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு. இந்தப் பாசிச வேலைகளை மூடி மறைக்க அவர்கள் பயன்படுத்தும் போர்வைதான் தமிழ்த் தேசியம் மற்றும் பிரபாகரனின் படங்கள். நாற்காலி ஆசைதான் சீமானை பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை போடவும் வைக்கிறது; இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்தவும் செய்கிறது.

ஆனால் நாம் தமிழர் கட்சியினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் முதலமைச்சர் பதவி தருவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாக்குறுதி தரப்பட்டது. அதை மறுத்து, விடுதலைக்காகப் போராடியதால்தான் பிரபாகரன் தேசியத் தலைவர் ஆனார். இன்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, ஒடுக்குமுறை அரசை நக்கிப் பிழைத்து, பதவியை அடைந்த தமிழர்களும் உண்டு. பிள்ளையான், கருணா, வரதராஜப் பெருமாள், டக்ளஸ் தேவானந்தா என நீளும் அந்த வரிசையில் நிற்பதற்கு சீமானும் தயாராகி விட்டார். ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கு டக்ளஸ் தேவானந்தாக்களால் எப்படி ஒரு சிறுதுரும்பையும் அசைக்க முடியாதோ, அதேபோல்தான், இந்திய அரசின் கங்காணி பதவியான முதலமைச்சர் பதவியை அடையத் துடிக்கும் சீமானால் ஒரு தூசியைக் கூட தமிழக மக்களின் உரிமைகளுக்காக அசைக்க முடியாது. பதவி அரசியல் எந்த விடுதலையையும் பெற்றுத் தந்ததாக வரலாறு இல்லை.

நாம் தமிழர் கட்சியின் ஆவணம் முன்வைக்கும் வரலாற்றுப் புரட்டுகளுக்கும், பாசிச அரசியலுக்கும் எதிராக இத்தொகுப்பில் காத்திரமாக பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவற்றோடு, நாம் தமிழர் ஆவணம் வெளிப்படுத்தும் எதிர்மறை செய்திகளாக இரண்டை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

யார் தமிழர்கள், யார் வந்தேறிகள் என்பது பிறப்பின் அடிப்படையில் – இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் சாதியின் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சியினர் தீர்மானிக்கின்றனர். தெலுங்கு அல்லது கன்னடம் பேசும் ரெட்டியார்கள், அருந்ததியர்கள், நாயுடுகள், செட்டியார்கள் உள்ளிட்ட சாதியினர்தான் வந்தேறிகளாக இங்கு நாம் தமிழர் கட்சியினரால் அடையாளம் காணப்படுகிறார்கள். இவற்றில் அருந்ததியர்களைத் தவிர, மற்ற சாதியினர், தலித் மக்களை ஒடுக்குவதில் தேவர்களுக்கோ, வன்னியர்களுக்கோ அல்லது கவுண்டர்களுக்கோ சற்றும் சளைத்தவர்கள் அல்லர். ஆறுதலான விஷயம் என்னவென்றால், இதர ஆதிக்க சாதியினரைப் போல ரெட்டியார்கள், நாயுடுகள் மற்றும் செட்டியார்கள் சாதிரீதியாக பெரிய அளவில் திரட்சி அடையவில்லை. வந்தேறிகள் என்று சாதிரீதியாக இவர்களை ஒதுக்கினால், தங்களது பாதுகாப்புக்காக இவர்கள் அதே சாதி ரீதியாக அணிதிரளவே செய்வார்கள். அது தலித் மக்களின் நலனுக்கு எதிரானதாகவே இருக்கும்.

நாம் தமிழர் போன்ற ஒரு பாசிசக் கட்சி தன்னை தமிழ்த் தேசியக் கட்சி என்று கூறிக் கொள்வது, வளர்ந்து வரும் தமிழ்த் தேசியக் கருத்தியலின் மீது பாசிசக் கறை படிவதற்கு வாய்ப்பாகும். தமிழ்த் தேசிய கருத்தியலை சாய்க்க விரும்பும் பார்ப்பன இந்திய ஆளும் வர்க்கம், நாளை நாம் தமிழர் கட்சியைக் காட்டி, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இயக்கங்கள் மீதும் பாசிச முத்திரை குத்த முனையும். இது தமிழ்த் தேசியத்திற்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இந்த ஆபத்தை தமிழ்த் தேசிய இயக்கங்கள் உணர வேண்டியது அவசியம்.

***

இந்த விவாதங்கள் முழுவதிலும் ஒன்றை கவனிக்க முடிந்தது. தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளின் செயல்பாடுகள், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சித்தாந்தத்தினை விமர்சிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாயாவதியின் செயல்பாடுகளை முன்வைத்து தலித் அரசியல் தோற்றுவிட்டது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதேபோன்ற அபத்தம்தான் திமுக, அதிமுகவை முன்வைத்து திராவிடம் தோற்றுவிட்டது என்று சொல்வதும், நாம் தமிழர் கட்சியினரை முன்வைத்து தமிழ்த் தேசியக் கருத்தியல் மிகவும் பிற்போக்கானது என்று சொல்வதும். ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் பதவி அரசியலுக்காக எந்தக் கொள்கையையும் இழப்பதற்குத் தயாராக இருப்பார்கள்; எந்த கீழ்த்தரமான செயலைச் செய்வதற்கும் யோசிக்க மாட்டார்கள். அண்ணா காலத்திலிருந்து நாம் இதைக் கண்டு வருகிறோம். அவர்களது நோக்கம் எல்லாம் பதவி சுகம், அதிகார போதை மட்டுமே. இவர்களிடம் கொள்கையைத் தேடுவதும், அவர்களை முன்வைத்து ஒரு சித்தாந்தத்தை அளக்க முற்படுவதும் போன்ற மடமை வேறு எதுவும் இல்லை.

தத்துவங்களின் வெற்றி எந்த ஒரு தனிமனிதரின் அல்லது ஒரு இயக்கத்தின் வெற்றி, தோல்வியைப் பொருத்ததல்ல. இந்தியாவில் இருக்கும் இடதுசாரி இயக்கங்களின் தோல்வி என்பது அந்த இயக்கங்களின் செயல்பாடுகள், புரிதலில் இருக்கும் போதாமைதானே தவிர அது கம்யூனிசத்தின் தோல்வியல்ல. எல்லா இயக்கங்களையும் தாண்டி தத்துவம் பரந்த அளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை உள்வாங்கும் மக்களில் இருந்து ஒரு லெனின், ஒரு சே குவேரா உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். அதேபோல் திமுக, அதிமுக, மதிமுகவைத் தாண்டி திராவிட அரசியல் இருக்கிறது. பெரியாரின் கொள்கைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் கொளத்தூர் மணிகளை, கோவை இராமகிருட்டிணன்களை, விடுதலை இராசேந்திரன்களை, ஓவியாக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். இது தமிழ்த் தேசியத்திற்கும் பொருந்தும். தமிழ்த் தேசியத்திற்கான ஆக்கப்பூர்வமான விளக்கத்தை சுப.உதயகுமார் தந்திருக்கிறார்.

சீமான் ஒன்றும் தமிழ்த் தேசியத்திற்கான ஒட்டுமொத்த குத்தகைதாரர் அல்ல. அவர் முதல்வர் பதவிக்காக எதையும் தூக்கி எறியத் தயாராக இருக்கும் ஒரு தேர்தல் அரசியல்வாதி. இன்னொரு கருணாநிதி. அவ்வளவுதான். கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த், இராமதாஸ், சீமான் ஆகியோருக்கிடையேயான முதல்வர் நாற்காலி சண்டையில் திராவிடமும், தமிழ்த் தேசியமும் பந்தாடப்படுகின்றன. திராவிடம், தலித்தியம், தமிழ்த் தேசியம், கம்யூனிசம் போன்ற கருத்தியல்களை இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளை முன்வைத்து காயப்படுத்துவது சரியல்ல. கருத்தியல்களின் வெற்றிகளை, தவறுகளை, போதாமைகளை விவாதிக்க வேண்டுமானால், தனியே விவாதிக்கலாம்.

***

காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் வழிப்பட்ட கருத்துக்களை தமிழ் மக்களிடம் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது கீற்று இணையதளம். கொள்கைகளின் அடிப்படையில்தான் தனிமனிதர்களையும், இயக்கங்களையும் கீற்று ஆதரிக்கிறது அல்லது எதிர்க்கிறது. கீற்றினை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது புரியும். பெரியாரின் கருத்துக்களைப் பேசி வருபவர், ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்ற நோக்கில்தான் சீமானை கீற்று பேட்டி கண்டது; அவரது காணொளிகளை வெளியிட்டு வந்தது. ஆனால், அரசியல் கட்சி ஆரம்பித்து, பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு சீமான் மாலை போட்டபோது, அதைக் கண்டித்து கீற்றில் கட்டுரை வெளியானது. இத்தகைய செயல்பாடுகள் சரிதானா என்று கேட்பதற்காகவே இரண்டாவது முறையாக அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அந்தப் பேட்டியில் தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தி ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல் சீமான் பேசினார். இருப்பினும், ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என்ற அடிப்படையில் நாம் தமிழர் கட்சித் தோழர்கள் எழுதிய கட்டுரைகள் கீற்றில் அவ்வப்போது வெளிவந்தன.

நாம் தமிழர் கட்சியின் ஆவணம் வெளியான பின்பு, அதில் வெளிப்பட்டிருந்த பாசிசக் கருத்துக்கள் பலரைப் போலவே என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நச்சுக் கருத்துக்களை இதற்கு முன்னர் எப்படி கீற்று எதிர்த்ததோ, அதேபோன்றுதான் நாம் தமிழர் ஆவணத்தையும் கீற்று எதிர்த்தது. நாம் தமிழர் கட்சியினர் எதிர்வினை ஆற்றவும் வாய்ப்பளிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் எழுதிய சில தரந்தாழ்ந்த விமர்சனங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்பட்டது.

நாம் தமிழர் ஆவணத்தை விமர்சித்து பெரியாரியவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் எழுதிய கட்டுரைகளுக்கு நாம் தமிழர் தரப்பிலிருந்து எந்தவொரு பொறுப்பான பதிலும் வரவில்லை. மாறாக,  சீமான் தனது கட்சி ஆவணத்திற்கு எதிராக பேட்டி கொடுத்தார். விமர்சிப்பவர்களை எல்லாம் கொச்சைப்படுத்தி சீமானின் தம்பிகள் இணைய தள‌ங்களில் எழுதினார்கள். கடைசியில், தமிழ்த் தேசியம் மலர்வதற்கும், சீமான் முதல்வராவதற்கும் ஒரே வழி கீற்று நந்தனை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றிவிடுவதுதான் என்று எழுதுமளவிற்கு அவர்களின் அசட்டுத்தனங்கள் அரங்கேறின.

நாம் தமிழர் கட்சி மட்டுமல்ல, இப்போது தோழமையுடன் இருக்கும் வேறெந்த இயக்கமோ இத்தகைய ஆவணத்தை வெளியிட்டிருந்தாலும், அவர்களையும் கீற்று முழுமூச்சுடன் விமர்சிக்கவே செய்யும். அதற்கான கருத்தியல் பலத்தையும், செயல்நெறிகளையும் பெரியார் எமக்கு அளித்திருக்கிறார். தீர்க்கமான கொள்கைகளின் அடிப்படையில் எந்த சமரசத்திற்கும் இடம்கொடுக்காமல், யார் என்றும் பாராமல், தவறு என்று பட்டதை விமர்சித்து, தனது எதிரிகளின் பட்டியலை வாழ்நாள் முழுக்க நீட்டித்துக் கொண்டிருந்த அந்த ஈரோட்டுக் கிழவனின் வாழ்க்கை வழிகாட்டியாக கீற்றிற்கு இருக்கிறது. இன்னும் நூறு பேர், இன்னும் நூறு இயக்கங்களின் பகைமையைச் சந்திக்கும் துணிவு இருக்கிறது.

கீற்று மீது அவரவர்க்குப் பிடித்தமான வண்ணத்தை அவரவர் பூசிக் கொண்டிருந்தனர். தொடக்கத்தில் சிபிஎம் தளம் என்றார்கள். பின்னர் புலி ஆதரவு தளம் என்றார்கள். குறுந்தமிழ்த் தேசியவாதிகளின் கூடாரம் என்றார்கள். இப்போது நாம் தமிழர் கட்சியினர் 'இது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது' என்கிறார்கள். அந்த வகையில் கீற்று மீது படிந்திருந்த குறுகிய தமிழ்த் தேசியவாதப் போர்வை விலகியிருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். 

மற்றபடி, அச்சுறுத்தல்கள் ஒன்றும் கீற்றிற்குப் புதிதல்ல. திராவிடம் குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு வந்தவுடன், ‘பெரியார்தான் எனக்கு வழிகாட்டி’ என்று பல்டி அடித்து சீமான் பின்வாங்கியதுபோல் நான் பின்வாங்க எந்த அவசியமும் இல்லை. யாருக்கும் பயந்து கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. பதவி, அதிகாரத்திற்காக யாருக்கும் கூழைக்கும்பிடு போட வேண்டிய இழிநிலையும் இல்லை. மானத்துடனும் அறிவுடனும் வாழ பெரியார் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதே துணிச்சலில், தமிழ் மக்களின் விடியலுக்காகப் பாடுபடும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து கீற்று தொடர்ந்து பணியாற்றும்.

***

நாம் தமிழர் ஆவணத்தின் பாசிசத் தன்மையை உணர்ந்து உடனடியாக எதிர்வினையாற்றிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் ஆவணம் குறித்த விமர்சனமாக இல்லாதிருப்பனும், திராவிடம் குறித்து பண்ணையூரான் எழுதிய கட்டுரையும், தமிழ்த் தேசியம் குறித்து சுப.உதயகுமார் எழுதிய கட்டுரையும், அவற்றின் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களுக்கும் எனது நன்றிகள். இக்கட்டுரைகளை ஒரு தொகுப்பாக கொண்டுவருவது அவசியம் என்று கூறி, உடனடியாக அதை செயல்படுத்தியும் காட்டியிருக்கும் தோழர் செந்தில்நாதனுக்கும், ஆழி பதிப்பகத் தோழர்களுக்கும் மிகுந்த நன்றிகள்!!

இணையதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் என் மீது வைத்த தரந்தாழ்ந்த தனிநபர் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றிய தோழர்களுக்கும், கீற்று வாசகர்களுக்கும் – தொடர்ச்சியாக கீற்றினை நடத்துவதன் மூலமே எனது நன்றியைத் தெரிவிக்க முடியும்.

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

***

எங்கே போகிறது நாம் தமிழர் கட்சி?
நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தின் மீதான விமர்சனங்கள்
தொகுப்பு: கீற்று நந்தன்

நூலினைப் பெற:

ஆழி பப்ளிஷர்ஸ்,
1A, திலகர் தெரு,
பாலாஜி நகர், துண்டலம்,
அய்யப்பன்தாங்கல்,
சென்னை - 600077
தொலைபேசி - 044-26791474
விலை ரூ.120

Comments

61 comments

61
ஷாலி
//சீமான் ஒன்றும் தமிழ் தேசியத்திற்கான ஒட்டுமொத்த குத்தகைதாரர் அல்ல.அவர் முதல்வர் பதவிக்காக எதையும் தூக்கி ஏறியத தயாராக இருக்கும் ஒரு தேர்தல் அரசியல்வாதி. இன்னொரு கருணாநிதி அவ்வளவுதான்.//.....கருணாநிதி அளவிற்கு சீமானை மதிப்பிடத் தேவையில்லை.வேண்டுமானால் பாதியாக குறைத்து இந்தியக் கருணா என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.கருனாக்களின் நோக்கமே பதவிதான். அதை அடைவதற்கு நாய் வேஷம் போட்டு பெரியாரை கடித்து நன்றாக குறைக்கவேண்டும். இந்த விசுவாசத்திற்கு காவித்தமிழர்களின் ஆசியும் சாதித் தம்பிகளின் அரவணைப்பும் பரிபூரணமாக கிட்டும்.பிறகென்ன கோட்டைக்குள் புகுந்து வேட்டையாடவேண்டியதுதான்
Naren
மாறாக, சீமான் தனது கட்சி ஆவணத்திற்கு எதிராக பேட்டி கொடுத்தார்// ?
kulothungan
와ஷாலியின் கருத்துதான் எனது கருத்தும்.. பெரியாரைப் பற்றிப் பேசாமல் (அது அவரது கருத்துக்களை போற்றியோ அல்லது வாய்க்கு வந்தபடி வசைபாடியோ) அரசியலில் பிழைப்பு நடத்த முடியாது என்பதை சீமானும் நன்கு உணர்ந்ததால்தான் அவரது பிரபாகரன் பிஸினஸ் நன்றாக வியாபாரம் ஓடிகொண்டிருந்த வேளையில் பார்ட் டைம் பிஸினஸாக பெரியாரை விமர்சித்து அவாள் ஆசியும் பெறலாம், அரிவாள் படைபலமும் பெறலாம் என்று ஆரம்பித்தார். இப்போது தமிழ் மக்களிடையே இரண்டு வியாபாரமும் படுத்து விட்டது. அதனால் அமைதிப்படை பார்ட் 2 படம் எடுக்கப் போய்விட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் இவரை ஈழத்திற்கு அழைத்துச் சென்று தமிழீழத் தலைவரை அறிமுகம் செய்து வைத்ததே அண்ணன் கொளத்தூர் மணி என்ற பெரியாரியல்வாதிதான். பாவம், உணர்வாளன் என்று நம்பி அழைத்துச் சென்ற அவருக்கு தெரியாது சீமான் நல்ல வியாபாரி என்பது....
ravanan karunthinai
தோழர்/ சிறப்பான கட்டுரை/ வாழ்த்துக்கள்
krish chrom
இந்த ஆட்சியின் ஆ[ச்]சி இருக்கும்வரை இந்த சீமானின் ஆட்டம் அடக்க சிரமமாகதான் இருக்கும். அவரை பற்றி அதிக அக்கறையுடன், அதிகமாக பக்கங்கள் எழுதி விட்டீர்கள், அதானல் ஒரு மிதப்பில் அலைந்துக்கொண்டு இருக்கிறார். ஒரு தலைவரைப்போல் ஒப்பிட்டு பிரகடனப்படுத்தி வருவதால், அவருக்கும் ஒரு மிதப்பு இருக்கதானே செய்யும். இலவசத்தில் வரும் விளம்பரம், ஒருபோதும் அதனுடைய மதிப்பு தெரியாது நமது தமிழக மக்களைப்போல?
shanmuganathan
மிக சிறந்த கட்டுரை
சம்பூகன்
///நான் பிறப்பால் உயர்ந்தவன்; எனது அக்ரகாரத்தில் மற்றவர்களுக்கு இடமில்லை' என்று பார்ப்பனர்கள் சொல்வதற்கும், 'நான் உலகின் மூத்த குடியைச் சர்ந்தவன்; எனது நாட்டில் மற்றவர்களுக்கு இடமில்லை' என்று இவர்கள் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே, பிறப்பின் அடிப்படையில், தங்களைத் தவிர்த்த மற்றவர்கள் மீது வெறுப்பைக் கக்குகிறார்கள்.///மிகச் சரியான கருத்து.
தமிழனை மனிதனாக்கியவர் பெரியார். மனிதத்துக்கு எதிரான ஆரியத்தை நேருக்கு நேராகச் சந்திக்க அவர் துக்கிப் பிடித்தது திராவிடம். திராவிடன் என்பவன் தமிழனே. நில எல்லைகளாலும்,தமிழில் ஆரியமொழிக் கலப்பினாலும் திரிந்தவையே தெலுகு,கன்னடம் மற்றும் மலையாளம். எனவே,அவர்களும் நம்மினத்தவரே. இவ்வுண்மையை மறைத்து பாசிச, இந்துத்துவ, இனவெறுப்பை முன்வைப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை அம்பலப்படுத்துவதே பெரியாரிய, அம்பேதகரிய, மார்க்சியர்களின் பணி. அதனைச் சரியாகச் செய்த கீற்று நந்தனுக்கு பாராட்டுகள்.
ஜெகன் கோவை
கீற்றுக்கு! நன்றி. மிக மிக அழகான உண்மையாண செய்திகள் தாங்கிய நல்ல கட்டுரை, கீற்றுக்கு உண்மையாண பெரியாரியம் கொண்டதோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் எப்பொழுதும் துணையாக இருப்போம்......
Periasamy
கடந்த ஐம்பது ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியில் தான் தமிழகத்தில் தமிழின உணர்வு குறைந்து சாதி உணர்வு மேலோங்கியிருக்கிறது. சுற்றியுள்ள கேரளா, கர்னாடகா ஆகிய மாநிலங்களில் திராவிட இயக்க அரசியலும் ஆட்சியும் இல்லாததால் அங்கெல்லாம் சாதியுணர்வை விட இன உணர்வும் மாநில உணர்வும் மேலோங்கியிருக்கிறது. இது தான் யதார்த்தம். திராவிட இயக்கத்தால் தமிழ் மக்களுக்கு வீழ்ச்சி தான் ஏற்பட்டிருக்கிறது!

காவிரி பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஒகேனெக்கல் எல்லை தகராறு, பாலாறு பிரச்சினை, இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேல் தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டது ஆகியவற்றை பற்றி தமிழ் நாட்டு மக்களுக்கு பொதுவாக அக்கறை இல்லை. இவற்றுக்கெல்லாம் போராடும் உணர்வும் இல்லை. ஏதாவது சாதி கலவரம் என்றால் மட்டும் தமிழர்கள் சக தமிழனை அடிக்க கத்தி கம்புகளுடன் திரணடு வருகிறார்கள். திராவிட இயக்க ஆட்சியின் லட்சணம் இது தான். தமிழ் அமைப்புக்களும் கட்சிகளும் வெறும் ஐம்பது அறுபது பேர்களை வைத்து பொதுக்கூட்டம் நடத்திக்கொண்டிருகின்றன.
கர்னாடகத்தில் பா.ஜ.க ஆளும் கட்சி, காங்கிரஸ் எதிர்க்கட்சி. மத்தியிலோ காங்கிரஸ் ஆளும் கட்சி, பா.ஜ.க எதிர்க்கட்சி. இரண்டுமே தேசியக்கட்சிகள் தான். ஆனால் காவிரி பிரச்சினையில் கர்னாடகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுகிறார்கள். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் ஒன்றாக தீர்மானம் போடுகிறார்கள். மாநிலத்தில் இருக்கும் அனைத்து கட்சி எம்.பிக்களும் ஒன்றாக போய் பிரதமரை பார்க்கிறார்கள். ஒரு சொட்டு நீர் கூட விட முடியாது என்று திட்டவட்டமாக மறுக்கிறார்கள். இது அல்லவோ இன உணர்வும் மாநில உணர்வும். சில டி.எம்.சி நீரை திறந்து விடுவதால் அவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் அதைக்கூட விட முடியாது என்று ஒற்றுமையாக கூறுகிறார்கள். இங்கே தண்ணீர் வந்தால் தான் பிழைப்பு நடக்கும். ஆனால் எந்த ஒற்றுமையும் இல்லை. ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை உருப்படியாக தமிழகத்தில் கூட்ட முடிகிறதா? திராவிட இயக்கத்தால் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே சாதி வெறி தான் வளர்ந்து உள்ளது. தமிழ் உணர்வு அல்ல. இவர்களால் திட்டப்பட்ட தமிழக பார்ப்பனர்கள் இன்று மிகவும் வளர்ந்து தான் உள்ளார்கள். அதுவும் உலகளவில்!. கேவலம்.
தமிழரசன்
////முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்பாக தமிழக மக்கள் இடையே ஒரு கொந்தளிப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே காவிரி நதிநீர்ப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் படுகொலை, முல்லைப் பெரியாறு சிக்கல் ஆகியவற்றில் இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில், ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழக இளைஞர்களிடையே தமிழ்த் தேசிய உணர்ச்சியை மிக வேகமாக பற்ற வைத்திருக்கிறது.////
மேற்கண்ட இடர்களை சாதரணமாக இந்திய அரசுமீது மட்டும் பழி போட்டுவிட்டு உங்களுடைய திராவிட சொந்தங்களான (மலையாளிகள்,கன்னடர்கள் ,தெலுகர்கள் ,இங்குள்ள திராவிட சொந்தங்களையும், அவர்களது செயல்பாடுகளையும் எளிதில் கடந்து சென்றீர்களேயானால் உங்களுக்கும் சாதியப் முரண்பாடுகளை எளிதில் கடந்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
//இந்த விவாதங்கள் முழுவதிலும் ஒன்றை கவனிக்க முடிந்தது. தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளின் செயல்பாடுகள், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சித்தாந்தத்தினை விமர்சிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாயாவதியின் செயல்பாடுகளை முன்வைத்து தலித் அரசியல் தோற்றுவிட்டது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதேபோன்ற அபத்தம்தான் திமுக, அதிமுகவை முன்வைத்து திராவிடம் தோற்றுவிட்டது என்று சொல்வதும், நாம் தமிழர் கட்சியினரை முன்வைத்து தமிழ்த் தேசியக் கருத்தியல் மிகவும் பிற்போக்கானது என்று சொல்வதும். ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் பதவி அரசியலுக்காக எந்தக் கொள்கையையும் இழப்பதற்குத் தயாராக இருப்பார்கள்; எந்த கீழ்த்தரமான செயலைச் செய்வதற்கும் யோசிக்க மாட்டார்கள்///
மேலே நீங்கள் கூரியுருப்பதன் கருத்து போலி திராவிட கட்சிகளை அடிப்படையாக கொண்டு திராவிடத்தை விமர்சனம் செய்ய வேண்டாம்.நல்ல திராவிடர்களைப் பாருங்கள் என்கிறீர்கள்.என்ன செய்வது உங்களால் தமிழர்கள் பயன்பெறுவதை விட பல நூறு மடங்கு பாதிக்கப் படுகிறோமே!!!! இம்மண்ணில் ஆட்சி செய்ய திராவிட இனவாதத்தை அடிப்படையாக வேற்று இனத்தவர்கள் கொள்வதால் திராவிடத்தை எதிர்பதைத் தவிர வேறு வழி இல்லை..
இதைப்போலவே நீங்கள் பொதுவாக வன்னிய சாதி வெறி ,தேவர் சாதி வெறி என அச்சாதிகளில் உள்ள கெட்டவர்களை பார்க்காமல் உண்மையான நல்ல வன்னியர் ,நல்ல தேவர்களையும் பார்த்து அச்சாதிகளை தரம் தாழ்ந்த முறைகளில் விமர்சனம் செய்வதைத் தவிர்க்கவும்.இச் சாதிகளில் உள்ள நல்லவர்களை மட்டும் பார்க்கவும்!!!!!!
எல்லாம் சரி தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு எதற்காக திராவிடர் என்ற பெயர்?கண்டிப்பாக இக்கேள்விக்கான பதிலை சொல்லவும்.இதைக் கூறுவதால் நான் நாம் தமிழர் கட்சிக்காரன் என நினைக்க வேண்டாம்!!!!!
இன்னமும் பெரியார் பற்றி பிதற்ற வேண்டாம்....போதுமான அளவிற்கு கேள்விகள் கேட்டும் பதில் இல்லை......
Raja
very mice...........
kulothungan
ᆵஅய்யா பெரியசாமி அவர்கள் பல கருத்துரைகளிலும் தமிழன் வீழ்த்தப்பட்டதைப் பற்றிப் பேசுவதைவிட பார்ப்பனர்கள் வாழ்வதை பெருமையோடு பறைசாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார். ஏற்கனவே ஒருமுறை பார்ப்பனர்கள் விமானத்தில் பறப்பதையும் அமெரிக்காவில் வசிப்பதையும் சுட்டிக்காட்டியே கருத்துரைத்திருந்தார். கடல் கடந்து போவது பிராமண தர்மத்துக்கு எதிரானது என்ற போதிலும் ஏன் அவர்கள் நாடு கடந்து தன்னை நிலைநாட்ட போனார்கள்? இங்கு அவர்களின் செல்வாக்கு சரிந்ததால்தானே.. இன்னமும் தமிழ்நாட்டை தாண்டி பாருங்கள், அவர்களின் ஆதிக்கம் புரியும்.(உம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி).. நீங்கள் திராவிடம் என்ற பெயரைத் தாங்கி நிற்கவும் வேண்டாம். பெரியாரை தாங்கவும் வேண்டாம். அவர்தான் உங்களை ஏமாற்றிவிட்டாரே.. அவர் இறந்து 39 வருடங்கள் ஆகின்றன. அவருக்குப்பின் பல தமிழ்த்தேசியத் தலைவர் வந்திருக்கலாமே.. அவ்வளவு ஏன்? அவர் இறந்த வருடத்தில் பிறந்தவர் கூட இப்போது தமிழினத்திற்கு மிகப் பெரியத் தலைவராய் உருவெடுத்து இருக்கலாமே. தமிழ் இனம் வீழ்ந்து போனதற்கு அல்லது வீழ்த்தப்பட்டதற்கு அவர்தான் காரணம், இவர்தான் காரணம் என்று மற்றவரை குற்றம்சாட்டி தப்பித்துக்கொள்ளப் பார்காதீர்கள். நாம் ஒவ்வொருவரும் தான் காரணம். ஈழப்படுகொலையின் போது என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் குளியலறையில் உள்ள கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்து நானே காறித் துப்புகிறேன்.. குறை கூறிக்கொண்டேயிருப்பவனால் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது..உங்களால் முடிந்த களப்பணியை செய்யுங்கள். இல்லையென்றால் மூடிக்கொண்டு மூலையில் உட்காருங்கள். பெரியார் ஏமாற்றிவிட்டார் என்ற பிதற்றலை நீங்கள் முதலில் கைவிடுங்கள். அது சொத்தை வாதம். பைசா பிரயோசனம் கிடையாது..
Periyasamy
குலோதுங்கா!

நான் பார்ப்பனீயத்தின் கொடுமைகளை தனிப்பட்ட முறையில் போதுமான அளவுக்கு அனுபவித்தவன். என்னிடம் பெரியாரையும் உன் தீராவிடத்தையும் பற்றி பேசாதே! உன் தீராவிட இயக்கம் தமிழ்நாட்டில் புழுத்து நாறிக்கொண்டிருக்கிறது! தனக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கு கூட ஒரு அறிவுஜீவி வர்க்கத்தை அது உருவாக்கவில்லை. தமிழக பார்ப்பனர்களை அறிவுஜீவி தளத்திலிருந்து உன் திராவிட இயக்கத்தால் அகற்றவே முடியவில்லை. முன்பு இருந்ததை விடவும் தமிழக பார்ப்பனர்கள் நன்றாக வளர்ந்து இருக்கிறார்கள். அதுவும் உலகளவில். உன் தீராவிட இயக்கத்தால் தமிழகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே தமிழுணர்வு வளரவில்லை. சாதி வெறி தான் வளர்ந்துள்ளது. இப்படி இருக்கும் போது எப்படி தமிழ் தேசிய தலைமை தமிழகத்தில் வரும்?. இப்போது பார்ப்பனர்கள் எப்படி அதிகாரத்தை தமிழகத்தில் மீண்டும் பிடிக்கலாம் என்று நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு காத்திருக்கிறார்கள். உங்கள் தீராவிடத்தின் பின்னால் வந்த தமிழ் மக்கள் தான் அழிந்து போனார்கள். அழிந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழரசன்
//kulothungan :-உங்களால் முடிந்த களப்பணியை செய்யுங்கள். இல்லையென்றால் மூடிக்கொண்டு மூலையில் உட்காருங்கள். பெரியார் ஏமாற்றிவிட்டார் என்ற பிதற்றலை நீங்கள் முதலில் கைவிடுங்கள். அது சொத்தை வாதம். பைசா பிரயோசனம் கிடையாது..// நாகரிகமாக பேச முயலவும் .எனக்கும் தமிழில் உள்ள அனைத்து நாகரிக வார்த்தைகளும் தெரியும்.சரி.பெரியார் பற்றிய விமர்சனங்களை பைசா பயனில்லை என்றுள்ளீர்கள்.ஏன்?கட்டுரையே திராவிடக் கருத்தை மறுக்கும் தமிழர் தேசியத்தைப் பற்றியது.திராவிட தேசியம் பெரியார் அவர்களது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது.திராவிடத்தை மறுக்கும் நான் திராவிடக் கருத்தின் மூலமான பெரியார் பற்றி விமர்சனம் செய்து கேள்விகள் கேட்டால்,அதற்கு பைசா பிரயோசனம் இல்லை என்பதுதான் உங்கள் பதிலா????
//உங்களால் முடிந்த களப்பணியை செய்யுங்கள். இல்லையென்றால் மூடிக்கொண்டு மூலையில் உட்காருங்கள். பெரியார் ஏமாற்றிவிட்டார் என்ற பிதற்றலை நீங்கள் முதலில் கைவிடுங்கள். அது சொத்தை வாதம். பைசா பிரயோசனம் கிடையாது..// மேற்கண்ட உங்கள் பதிலை "நாம் தமிழர்" கட்சியின் மீது விமர்சனம் செய்யாமல் மூலையில் மூடிக்கொண்டிருந்தால் நான் ஏன் பைசா பிரயோசனம் இல்லாத பெரியாரைப் பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லையே. மற்றுமொரு கேள்வி எதையும் படிக்க வேண்டாம்.விமர்சனம் செய்ய வேண்டாம் நேரே சென்று களப்பணியாற்றுங்கள் என்கிறீர்கள்.பின்னர் நீங்கள் ஏன் களப் பணியாற்றச் செல்லாமல் இங்கு வந்து நேரத்தை வீண் செய்ய வேண்டும்?
//கடல் கடந்து போவது பிராமண தர்மத்துக்கு எதிரானது என்ற போதிலும் ஏன் அவர்கள் நாடு கடந்து தன்னை நிலைநாட்ட போனார்கள்? இங்கு அவர்களின் செல்வாக்கு சரிந்ததால்தானே.. இன்னமும் தமிழ்நாட்டை தாண்டி பாருங்கள், அவர்களின் ஆதிக்கம் புரியும்.(உம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி)..// தமிழ் நாட்டில் பிராமணியம் வீழ்ந்து போனதா!!!!பிராமணீயக் கருத்துக் கொண்டவர்கள் வீழ்ந்துள்ளர்களா ?இன்றைய சாதிக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட தருமபுரி ஊர் மக்கள் இதைக் கேட்டு நகைப்பதை விட!!பிராமணீய கருத்து கொண்ட சாதியத் தலைவர்கள் கண்டிப்பாக பெரிதாகச் சிரிப்பார்கள் இல்லையா ????
/// நாம் ஒவ்வொருவரும் தான் காரணம். ஈழப்படுகொலையின் போது என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் குளியலறையில் உள்ள கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்து நானே காறித் துப்புகிறேன்.. குறை கூறிக்கொண்டேயிருப்பவனால் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.///தனி மனித குற்ற உணர்வால் சமூகத்தை மாற்ற முடியாது.கருத்தியாலேயே அது முடியும்.அக்கருத்தியல் நீங்கள் திராவிடம் என்கிறீர்கள்!!!!.நாங்கள் தமிழியம் என்கிறோம்......முற்றும்.
நான் திராவிடன் அல்ல, தமிழன்
அன்று தமிழன் என்றால் பார்ப்பான் வந்து விடுவான். திராவிடன் என்றால் பார்ப்பான் வரமாட்டான்.

இன்று அந்நிய முதலீடு வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஐ எதிர்த்தால் மதவாத பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விடும்.
kulothungan
놔தமிழரசன் அய்யா அவர்களுக்கு.. என்னுடைய வார்த்தைகள் அநாகரீகம் என்று நினைத்தால் அதற்கு ஒரு தமிழனாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.. யாரையும் வெற்று வார்த்தைகளால் சாடுவதும், வெட்டி விமர்சனம் செய்வது எனது பழக்கம் கிடையாது. மேலும் களப்பணி ஆற்றுங்கள் என்று சொன்னதால் விமர்சனம் செய்யக்கூடாது, கருத்தியலை உருவாக்கக் கூடாது என்று நினைக்கிற காங்கிரஸ் மனப்பான்மை எனக்கு கிடையாது. பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துக்கொண்டு கருணாநிதி வகையறாக்கள் செய்த இனத்துரோகத்தை மறக்க முடியாது. அதற்கு எந்தவகையிலும் நியாயம் கற்பிக்கவும் முடியாது. ஆனால் பெரியார் முகமூடிகளை அணிந்து பிழைப்புவாதம் செய்தவர்களை சாடுவதும் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதையும் விட்டுவிட்டு தன் தள்ளாத வயதிலும் தன் சுக துக்கங்களை விட்டு மூத்திரச்சட்டி சுமந்து களமாடிய பெரியாரை விமர்சனம் செய்வது அதுவும் அவர் இறந்து 39 ஆண்டுகள் கழித்து விமர்சனம் என்ற பெயரில் வாய்க்கு வந்தபடி பேசுவதுதான் கருத்தியலா? நாகரீகமா? உயிரோடு நாம் சாதிக்க முடியாமல் செத்த பிணத்தை தோண்டி எடுத்து திட்டுவதுதான் ஆரோக்கியமான தமிழ்த் தேசீய பாதையா? அய்யா மணியரசன் ஆகட்டும்.. அல்லது அண்ணன் சீமான் ஆகட்டும். பெரியாரின் கருத்தியல் தவறாக இருந்தால் ஆரம்பத்திலேயே எதிர்க்க வேண்டியதுதானே..மணியரசன் அவர்களுக்கு பெரியார் உயிரோடு இருக்கும்போதே அந்த வாய்ப்பு இருந்ததே.. அண்ணன் சீமான் களப்பணிக்கு வந்தபோதே அதை எதிர்க்க வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு நான் பெரியார் பேரன், மார்க்ஸின் மகன் என்றெல்லாம் பெரியாரியல்வாதிகள் போட்ட மேடையிலே முழங்கிவிட்டு இப்போது பெரியார் ஏமாற்றிவிட்டார் என்று சொல்லும்போதுதான் இவரும் இன்னொரு கருணாநிதி என்ற பயம் வருகிறது.. தமிழியத்திற்கு பெரியாரியல் தொண்டர்கள் யாரும் எதிரிகள் அல்ல. அதை வேண்டுமென்றே பெரியாரின் மீதான தாக்குதலுக்கு உள்ளாக்கும்போதுதான் அதைப்பற்றி பேசுவோரின் தன்மையை ஆராய வேண்டியிருக்கிறது.
kulothungan
ナஅய்யா பெரியசாமி அவர்களுக்கு.. சாதீயம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பதுதான் பெரியாரியல்வாதிகளின் நோக்கம்.. தர்மபுரி கலவரத்திற்கு காரணம் திராவிடம் பேசுபவர்களா அல்லது சமீபகாலமாக தமிழியம் பேசும் மருத்துவர் அய்யாவும், திருமாவளவனுமா என்று தங்களுக்கே தெரியும்.. திராவிடத்தால் வீழ்ந்துபோனதாக வரலாறு நன்கு அறிந்த வயதில் பெரியவரான (என்னை ஒருமையில் விளித்ததால் எனக்கு மூத்தவர் என்று கருதி) தங்களுக்குத் தெரிந்த அளவு எனக்கு தெரியாது என்றாலும் என் ச்மகால நிகழ்வில் நடந்த ஓரிரண்டு திராவிட இயக்கப் போராளிகளின் போராட்டங்களையும் அதில் பெற்ற சிறு வெற்றிகளையும் ஓரளவு அறிவேன்.அண்ணன் கொளத்தூர் மணி சாதீயத்துக்கு எதிராகவும் தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும் பல போராட்ட்ங்களை முன்னெடுத்திருந்தாலும் ராசீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ப்ல சித்திரவதைகளை அனுபவித்தார். இன்னமும் ஈழவிடுதலைக்காக பல வழிகளில் போராடிக்கொண்டும் இருக்கிறார் (பாவம் அவருக்கு மேதகு பிரபாகரன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துப் பிழைக்க்த் தெரியவில்லை) சேலம் ரயில்வே கோட்ட்த்தை மீட்டதிலும் கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கக் கோரிய போராட்ட்ங்களிலும் ஈழ விடுதலைப் போரின் போது ராணுவ தளவாடங்கள் ஏற்றிச்சென்ற லாரியை மடக்கி கவிழ்த்துமாக தமிழர்களுக்கான சிறு உரிமை போராட்டமாகட்டும். அல்லது நீர் ஆதாரத்திற்காக அண்டை மாநிலங்களுக்கெதிரான போராட்டங்கள் மற்றும் சாதிய எதிர்ப்பு போராட்டமாகட்டும்.. பல போராட்டக்களங்களை கண்டு அரசு போட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளை சந்தித்து கிட்டத்தட்ட தன் வாழ்நாளில் 17 ஆண்டுகள் சிறைச்சாலையில் கழித்த அய்யா கோவை ராமகிருஷ்ணன் போன்ற பெரியாரியல் போராளிகளின் வரலாற்றை மறைத்து ஒட்டுமொத்தமாக பெரியாரியல்வாதிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதைத்தான் எதிர்க்கிறேன். பார்ப்பனீயத்தால் பாதிக்கப்பட்டதாக கூறும் தாங்கள் திராவிடம் என்ற கருத்தியலுக்கு எதிரானவராக இருந்தாலும் தமிழனுக்கு நல்லது நடக்கும் என்றால் தங்களைக்கூட ஆதரிக்கத் தயங்கமாட்டோம். அதை விட்டுவிட்டு பெரியாரையே குறை சொல்லி காலத்தை வீணடிக்கவேண்டாம். தமிழனுக்கு ஓர் நாடு என்ற பொதுக்கருத்தியலுக்கு எல்லோரும் ஒன்றுபட்டால்தான் தமிழின விடுதலையே தவிர பல குழுக்களாக பிரிந்து கிடப்பதால் பயன் ஒன்றும் இல்லை. திராவிட இயக்கத்தின் பயனால் சுயமரியாதை பெற்ற தஞ்சை ஜில்லாவில் இருப்பவன் நான் என்பதால் நன்றியோடு பேசுகிறேன்.
JEEVASAGAPTHAN
வாழ்த்துக்கள் .கீற்று தோழரின் முயற்சி வளர்த்தெடுக்க வேண்டிய ஒன்று .ஜீவா சகாப்தன் .
தமிழரசன்
//குலோத்துங்கன்// அய்யா! என்றழைக்கும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை.உங்கள் எழுத்து புண்படுத்தியதால்,நானும் அதே எழுத்து தொடரைப் பயன்படுத்தி எழுதி இருப்பதற்கு மன்னிக்கவும்.பொதுவாக நம்முடைய சிறந்த பழக்கவழக்கங்களில் சிறந்ததான ஒன்று "இறந்தவர்களைப் பற்றி தவறாகப் பேசாமல் இருப்பதென்ற மரபு".இதில் நான் உடன்படுகிறேன்.இங்கு நங்கள் எவ்விடத்திலும் பெரியாரைப் பற்றி விமர்சனம் செய்யவில்லையே!.அவர் கொண்டிருந்த கருத்தியலான திராவிடத்தை மட்டுமே மறுத்து விமர்சனம் செய்கிறோம்.மற்றபடி தனி மனித வசைபாடுவதில் உடன்படாத தமிழன் நான்.
எங்களது கேள்விகள் மிக எளிது.அதற்குண்டான பதிலைத்தான் திராவிடக் கருத்தியலாளர்களால் கொடுக்க முடியவில்லை.அக்கேள்விகள்
1.பல்லாயிரம் வருடம் வரலாறு அடையாளம் கொண்ட எம் தமிழர்களுக்கு திராவிடம் என்ற பெயர் எதற்காக?(பெயரில் என்ன இருக்கிறது எனச் சொல்ல வேண்டாம்.பெயரில் அடையாளம்,வரலாறு அனைத்தும் இருக்கிறது.உதாரணம் உங்கள் பெயரிலும் உள்ள வரலாறு!!!)
2.தமிழ் நாட்டினைத் தவிர ஏனைய மாநிலங்களில் உள்ள உங்களால் திராவிடர் என்று கூறப்படும் தெலுகர்,கன்னடர்,மலையாளிகள்.... திராவிடத்தை ஏன் ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள்.மறுப்பதற்கு உண்டான காரணம் என்ன?அதுசமயம் தமிழகத்திற்குள் வாழ்வதற்காக மேற்கண்ட மாநிலங்களில் 1950 ப் பின் வந்தவர்கள்,அறுநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்களைத் தோற்கடித்து ஆள்வதற்காக வந்த மேற்கண்ட பிற மொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு திராவிடத்தை ஏற்றுக்கொள்வதும்,தமிழர் என்ற இன அடையாளத்தை மறுப்பதும் ஏன்?
3.உண்மையாகச் சொல்லுங்கள் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது பெரியாரால்தான் கொண்டுவரப்பட்டதா?இராமலிங்க அடிகளார்,அயோத்திதாசப் பண்டிதர்,ரெட்டமலை சீனிவாசன் என்பவர்கள் எல்லாம் யார்?(குறிப்பு:-பெரியார்தான் பார்ப்பனிய எதிர்ப்பைப் பரப்பினார் என்றாலும்,அயோத்திதாசப் பண்டிதர் ,ரெட்டமலை சீனிவாசன் போன்றவர்களது பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகள் மக்களிடம் சென்று சேரத் தடையாக இருந்தது எது?பெரியாரை ஏற்றுக்கொண்ட சமூகம் அயோத்திதாசப் பண்டிதர் ,ரெட்டமலை சீனிவாசனையும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது பார்ப்பனிய(சாதிய) மனப்பான்மையும் ,மேலே கண்ட இருவரும் தமிழர்,தமிழினம் என்ற கருத்தை எடுத்துச் சென்றதால் புறக்கணித்த திராவிடர்களையும்,திராவிடக் கருத்துக் கொண்டோரையும் தமிழர்கள் நாங்கள் ஏற்றுக்கொள்ளச் சொல்வதும்,அதைப் பற்றிய உண்மைகளை தமிழ் மக்களிடம் கொண்டு செல்வதென்பது இனவாதம் ,பிற்போக்குத்தனம் என்பதும் சரியா ?
4.பெரியார் ஒடுக்கப் பட்ட மக்களுக்காக பாடுபட்டார் என்கிறீர்கள்?அவரது காலத்தில்தான் சாதிக் கலவரங்களும்,உங்களது மண்ணில் கூட கீழவெண்மணிப் படுகொலைகள் நடந்தது.அந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து பெரியார் என்ன செய்தார்?(குறிப்பு:-மற்ற தலைவர்களைப் பார்த்துக் கேட்காமல் பெரியாரைப் பற்றிக் கேட்பதற்கு என்ன காரணம் என்றால் நீங்கள் தான் அவர் சாதி ஆதிக்கத்திற்கெதிராக வைக்கம் சென்று போராடிய வைக்கம் வீரர் என்று சொல்கிறீர்கள்.தொலைவில் நடந்த கோவில் நுழைவுப் போராட்டதிற்கு சென்ற பெரியார் கண்ணுக்கெட்டிய தொலைவில் கீழவெண்மணிப் படுகொலை,அப்படுகொலைக்கு காரணமான அவ்வூர் ஒடுக்கப்பட்டமக்களின் தொடர்ச்சியான போராட்டத்தை காணாமல் விட்டது எப்படி?ஏன்?இதற்கு பதில் இல்லையெனின் இனி நீங்கள் பெரியாரை "வைக்கம் வீரர்" என்பதற்குப் பதில் "வைக்கத்தில் மட்டுமே வீரர்" என்றழைக்கவும்.இதை நீங்கள் இறந்தவரைப் பற்றிய விமர்சனம் என்றால்,அதற்கு நான் பொறுப்பாக முடியாது)
5.தமிழ் மொழியைப் பற்றியும் ,தமிழர்களைப் பற்றியும்,அவரது மொழிக்கொள்கையைப் பற்றியும் உள்ள கருத்துகள் தமிழராகிய நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
6.பார்ப்பனர்களின் அரசியல்,பொருளாதார,அரசுப்பணிகளில் பெரும்பான்மையை சுட்டிக் காட்டிய பெரியாரால்,அதே அரசியல்,பொருளாதராம்,சமுக மதிப்பை,தங்களுடைய நிலங்களை பிற்பட்ட வகுப்பினரால் அபகரிக்கப் பட்ட வரலாற்றினை ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஏன் மறைத்தார்?????
7.ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கு முறையிலிருந்து வெளிவர வேண்டுமானால் ஊரை விட்டும்(இதற்கு பேசாமல் அவர்களை நாண்டுகிட்டு சாகச் சொல்லியிருக்கலாம் ),நாட்டை விட்டும் ஓடிப்போகச் சொன்ன "இராமசாமி நாயக்கருக்கும்",கீழவெண்மணிப் மூலவரான கோபால கிருஷ்ண நாயக்கருக்கும் என்ன வேறுபாடு?இவரைப் பெரியாராகப் பார்க்க என்னால் அணுவிலும் முடியாது.(குறிப்பு:-மேற்கண்ட இராமசாமி நாயக்கரின் கருத்தை, சீமான் இன்றைக்கு கூறியிருந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா!!!!!!!!!திராவிடர்களாலும்,திராவிடக் கட்சியில் இருப்பவர்களாலும் "தமிழன்"என்ற சுய அடையாளத்தை இழந்து, சாதிச் சண்டையால் நாறிக்கொண்டிருக்கும் "மதுரை மாவட்டத்தைச்" சேர்ந்தவன் என்ற வலியில் பேசுகிறேன் .
8.தமிழ் நாட்டு உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் என்பதற்காக,அவர்களிடம் தமிழையும்,தமிழர் அடையாளத்தையும்,தமிழ் நாட்டினையும் விற்று விட வேண்டும் என்கிறீர்களா?

/// அண்ணன் சீமான் ஆகட்டும். பெரியாரின் கருத்தியல் தவறாக இருந்தால் ஆரம்பத்திலேயே எதிர்க்க வேண்டியதுதானே..மணியரசன் அவர்களுக்கு பெரியார் உயிரோடு இருக்கும்போதே அந்த வாய்ப்பு இருந்ததே.. அண்ணன் சீமான் களப்பணிக்கு வந்தபோதே அதை எதிர்க்க வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு நான் பெரியார் பேரன், மார்க்ஸின் மகன் என்றெல்லாம் பெரியாரியல்வாதிகள் போட்ட மேடையிலே முழங்கிவிட்டு இப்போது பெரியார் ஏமாற்றிவிட்டார் என்று சொல்லும்போதுதான்////
இளமையிலே!பேரூக்கத்திலே!பெரியாரைப் பற்றி ஒரு கொள்கையைப் பற்றி,முன்னரே யாரும் மதிப்பீடு செய்யாததால் மதிப்பீடு இல்லாததால் தவறாகத் திராவிடத்தை ஏற்று இருக்கலாம்!அக்கொள்கை தவறு என்றும்,அக்கொள்கை தமிழர்களுக்கு தீமை செய்வதால் ,தற்போது அக்கருத்திலிருந்து மாறுபடுவது தவறு என்று சொல்வதுதான் தவறு....
அன்பு
தமிழரசன் பெரியசாமி போன்றவர்கள் அரைத்த மாவையே அரைக்கிறார்கள் இவர்களின் அவதூறுகளுக்கு எத்தனையோ முறையோ பதில் சொல்லியாகி விட்டது. சைமன் கமிஷனின் இந்திய வருகையின்போது காங்கிரசின் நிலையை கடுமையாக எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது பலன் ஏற்படுமா என்று அதில் பங்கேற்க சென்ற ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, அம்பேத்கர் போன்றவர்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார். முதுகுளத்தூர் கலவரத்தின் போது தேவர் சாதியினரின் கடுமையான் எதிர்ப்புக்கு எதிராக பல ஒடுக்கப்ப்ட்ட தலைவர்கள் ஊமையாக இருந்தபோது முத்துராமலிங்கத்தை எதித்தார் பெரியார். 1957ல் சாதிக்கு ஆதரவாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 371ஐ எரித்து மூன்றாயிரம் பேருக்கு மேல் சிறையிலடைக்கப்பட்டனர். கீழ் வெண்மணியில் நடந்த படுகொலையில் அவர் எதிர்வினையாற்றவில்லை என்பதற்காக அவர் சாதி ஆதரவாளராக காட்டப்படுகிறார். அதே வெண்மணிப் படுகொலையை நிகழ்த்திய ஆதிக்க சாதி கொலைக்கும்பலை அழித்தொழித்தது யார் என்பதை கும்பகோணம் ஸ்டாலின் அவர்களை கேட்டு அறிந்து கொள்ளலாம். அம்பேத்கர் ஆராய்ந்து சொன்ன கருத்துக்களை பார்ப்பனீய இந்து மதத்தின், மனுவின் கோட்பாட்டை அதன் விளைவாக சாதி இந்துவாக மட்டுமல்ல தலித் இந்துவாக சாதிக் கட்டமைப்பை உடைக்க முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களை அதிலிருந்து மீட்க அக்கட்டமைப்பை எதிர்க்காமல் பெயரில் பெரியாரை வைத்து அரசியல் செய்யும் பிழைப்புவாதிகளை காரணமாகக் கொண்டு, பெரியார்தான் எல்லாவற்றிர்க்கும் காரணம் என்று எளிதில் கூறி சாதித் தமிழர்களை வாழ வைக்கும் போக்குதான் தெரிகிறது இவர்களிடம்.
kulothungan
சிறுபிள்ளைகளைக்கூட அய்யா என்று அழைப்பது தந்தை பெரியாரின் வழக்கம். அது வயது குறித்தது அல்ல. மரியாதை குறித்தது. இப்போது அதற்கான விவாதத்திற்கு போகாமல் நேரத்தை சுருக்குவோம். பெரியாரைப் பற்றி தனிப்பட்ட விமர்சனம் பேசுவதற்கு எதுவுமேயில்லை. பட்டம் பதவிகளுக்கு ஆசைப்பட்டதுமில்லை, பிள்ளைக்குட்டிகளுக்காக சேர்த்ததும் இல்லை. உள்நாட்டில் தான் செய்த குறும்பில் இருந்து வெளிநாட்டில் நிர்வாண சங்கத்தில் தானும் கலந்துகொண்டது பற்றியும் வேசிகள் வீட்டைச் சுற்றி வந்ததைப்பற்றியும் அவரே எழுதி அவரே பேசி அவர் முன்பாகவே விமர்சிக்கப்பட்ட விஷயம்தான். அதில் அவரால் மறைக்கப்பட்ட எதுவுமேயில்லை. ஆகையால் இறந்தபிறகும் அவரைப்பற்றிப் பேசலாம். உங்களது முதலாவது விஷயம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திராவிடம் என்பது இல்லை என்கிறீர்களா அல்லது திராவிடர் என்பதே தவறு என்கிறீர்களா? மனுதர்மம் முதல் சங்ககாலப் பாடல் தொடங்கி வரலாற்று ஆசிரியர் உள்பட திராவிடம் என்பது குறிக்கப்பட்டதா அல்லது அதைப் பெரியார் வலி்ந்து திரித்தாரா? லல்லுபிரசாத் யாதவ் திராவிடர், தமிழர் அல்ல, மாயாவதி திராவிடர் தமிழர் அல்ல, எடியுரப்பா திராவிடர் தமிழர் அல்ல. சர்.பி.ட்டி.தியாகராயர் திராவிடர், தமிழர் அல்ல. டி.எம்.நாயர் திராவிடர், தமிழர் அல்ல. பெரியார் திராவிடர் தமிழர் அல்ல. இங்கே திராவிடம் என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த புர்வக்குடிகள் வாழ்ந்த இடம். இங்கு இருந்தவர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இது பெரியாருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாகவே சொல்லப்பட்ட செய்திகள். மனுதர்மம் அத்தியாயம் பத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பில் வருகின்ற விஷயங்களில் யாகம் செய்யாதவர்கள் திராவிடர்கள் என்று வருகிறது. பெரியார் சென்னை மாகாணம் இருந்த காலத்தில் அதன் நிலப்பரப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு இவை உள்ளிட்ட பகுதிகள் இதையேதான் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய பாடப்புத்தகங்களில் எல்லாம் பதிவு செய்யப்பட்ட ஜனகனமண என்ற பாடலில் எல்லா பகுதிகளும் வங்காள குஜராத்தி மராட்டி என்றெல்லாம் சொல்லப்பட்டு தென்பகுதி மட்டும் திராவிட உத்கல வங்கா என்று பாடப்படுகிறது. அது பெரியார் எழுதியது அல்ல. இந்த திராவிடம் என்பதை நமக்கான வடநாட்டுத் தொல்லைகள் இருந்த காலகட்டத்தில் தென்னாடான இப்போதைய நான்கு மொழி பேசும் நாட்டு மக்களுக்கும் தனித்தனியாக அரசு அமைந்து அதை ஒருங்கே கவனிக்கின்ற ஒரு ஐக்கிய குடியரசு வேண்டும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 1956ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு பின்னால் அவரவர்களும் அவரவர் வேலையை பார்த்து போய்விட்ட காரணத்தினால் ”இனிமேலும் அவர்களை நம்பி பிரயோசனம் இல்லை, அவர்களை தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்கள் சொந்த நலனைப் பார்க்க ஆரம்பித்துவி்ட்ட காரணத்தினால் தமிழர்களாகிய நாம் நமக்கென்று ஒருநாட்டை அடையவேண்டிய அவசியமும் அதற்கான வேலைத்திட்டமும் செய்யவேண்டியதாய் இருக்கிறது. இனிமேல் தமிழர்களுக்கான நாடு தமிழ்நாடு, அதை அடைய பாடுபடுவோம்” என்று பெரியார் சொன்னார். திராவிடம் என்பதை பண்பாட்டுக் குறியீடாகவும் தமிழர்களுக்கான நாடு என்பதை அரசியல் குறியீடாகவும் பெரியார் வகுத்தது. திராவிடம் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு அறிஞர்கள் பெரிய அளவிலான விளக்கங்கள் தந்திருந்த போதிலும் அதைப் புறக்கணித்துவிட்டு பெரியார் தவறு செய்தார் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் செய்வது உள்நோக்கம் கொண்டதேயன்றி தீர்வுக்காக பாடுபடுவதாக இல்லை. திராவிடம் சம்பந்தமாக விளக்கம் சொல்வதும், அதைக் கேட்டுவிட்டு அடுத்த ஆளிடம் அதே விவாதத்தை வைப்பதும் உண்மையில் தூங்குகிறவனுக்கும் தூங்குகிறவனைப் போல் நடிப்பவனுக்கும் என்ற வாசகங்களே பொருந்தும்.
Periyasamy
திராவிட இயக்க அரசியல் இல்லாத கர்நாடகத்தில் ஊருக்கு ஊர் கன்னட சங்கங்கள் உள்ளன. கன்னட கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக திராவிட இயக்க அரசியல் கோலோச்சும் தமிழகத்தில் ஊருக்கு ஊர் சாதி சங்கங்களும் சாதி கட்சிகளும் தான் உள்ளன. இந்த தீராவிட இயக்கத்தினர் என்ன சாதி ஒழிப்பை மேற்கொண்டு கிழித்தார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்டவர்களும் தங்களை ஆண்ட பரம்பரை என்று நினைத்து புளகாங்கிதத்தோடு திரிகிறார்கள். சாதி வெறியும் வன்முறையும் கொடி கட்டிப்பறக்கின்றன. இது தான் தீராவிட இயக்கத்தினர் சாதியை ஒழித்த லட்சணம்! இவர்களால் ஒதுக்கப்பட்ட பார்ப்பனர்களோ இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாய் வளர்ந்துள்ளார்கள். தமிழகத்தில் இருக்கும் அறிவுஜீவிகள் இரு வகை. ஒன்று பார்ப்பன அறிவுஜீவிகள். இன்னொன்று கம்யூனிச அறிவுஜீவிகள். தீராவிட இயக்கம் அறிவுஜீவிகளை உருவாக்கவே இல்லை. இங்கு இருக்கும் பல்கலைக்கழகங்களில் வெறும் எடுபிடிகளும் கைத்தடிகளும் தான் உட்கார்ந்து இருக்கிறார்கள். இந்திய மற்றும் உலகளவிலான அதிகார மற்றும் அறிவுஜீவி மட்டங்களில் பார்ப்பனர்கள், உயர் சாதி வட இந்தியர்கள் மற்றும் மலையாளிகள் தான் வளைய வருகிறார்கள். அதனால் அவர்கள் மிக எளிமையாக காரியம் சாதித்துக்கொள்கிறார்கள். தமிழகத்தில் ஐந்து காசுக்கும் பயனில்லாத போராட்டங்களும் தீக்குளிப்புகளும் தான் நடைப்பெறுகின்றன. நாசமாய் போன மாநிலம். இன்னும் இருபது ஆண்டுகள் இதே மாதிரி போனால் தமிழகத்தில் தமிழர்கள் சுத்தமாய் முடிந்து காலியாகி விடுவார்கள். கர்நாடகத்தில் கன்னடர்கள் என்றால் மக்கள் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைகிறார்கள். ஆனால் இங்கு தமிழகத்திலோ தமிழர்கள் என்னும் வார்த்தையை வேடிக்கையான ஒன்றாக தமிழர்களே நினைக்கிறார்கள். இது தான் திராவிட இயக்கம் இன மானத்தை வளர்த்த யோக்கியதை.
kulothungan
பெரியார் அவர்கள்தான் பகுத்தறிவையும் பார்ப்பனிய எதிர்ப்பையும் முதன்முதலாக சொன்னதாக எவனாவது பெரியார் தொண்டனே சொன்னால்கூட வாருங்கள் நாம் இருவரும் சேர்ந்தே போய் சட்டையைப் பிடிப்போம். கபிலன் பார்ப்பன எதிர்ப்பாளன், இளங்கோ பார்ப்பன எதிர்ப்பாளன், புத்தன் பார்ப்பன எதிர்ப்பாளன். ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தை சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு மகாராஷ்டிரத்தில் டாக்டர் ஜோதி பாபுலே பெரியாருக்கு முன்பாகவே பகுத்தறிவைப் பேசியவர். இராமலிங்க அடிகளார் பார்ப்பன எதிர்ப்பாளர். புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரோடு முதலாவது வட்ட மேஜை மாநாட்டில் இரண்டாவது பிரதிநிதியாக இலண்டன் சென்று முக்கியமான காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகளுக்காக பாடுபட்டவர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன். எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள். அயோத்திதாசர் பண்டிதரும் அவ்வழியே வந்தவரே. அவர்கள் காலத்தில் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதில் முன்னிலை வகித்து அதனால் துன்பங்களை ஏற்றவர்கள். அவர்களுடைய தியாக வரலாறு எவராலும் மறுக்கப்பட முடியாது. ஆனால் நான் உங்கள் தகப்பனாரை வணங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதும் என்னுடைய தகப்பனாரை நீங்கள் வணங்கவேண்டும் என்று நான் விரும்புவதும் பக்கத்து பக்கத்து வீடாக இருந்தால் மட்டுமே முடியும். பொதுவாழ்வில் கருத்து சொல்லப்பட்ட சூழ்நிலை, சொல்லிய விதம் சொல்லப்பட்ட இடம், சொல்லப்பட்ட காலம் அப்போது இருந்த அரசியல் சூழ்நிலை, அப்போது இருந்த மக்களின் வாழ்நிலை புற, அக முரண்பாடுகளின் கூர்மைத்தன்மை இத்தனையும் வைத்துத்தான் ஒருவருடைய கருத்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நீங்கள் அறிந்ததுதான். ஒன்றுமே அறியாத அப்பாவி மக்களைத்தான் இடியையும் மின்னலையும் பார்த்து இயற்கை சீற்றங்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய மக்களை தவறான போதனைகளுக்கு உட்படுத்தி மூடநம்பிக்கைகள் திணி்க்கப்பட்டன என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்தானே.. அப்போது அந்த மக்கள் வாழ்ந்த நிலை அவ்வாறு. இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து சென்னையின் மையத்தில் எல்.ஐ.சி. கட்டிடத்தின் மேல்மாடியில் பேய் ஆடுகிறது என்று சொன்னால் நம்புவார்களா? சொல்பவனை பைத்தியக்காரன் என்பார்கள். இப்படிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் வரும் என்றுகூட பெரியார் முன்பே சொல்லியிருக்கிறார். ”உங்கள் பேரப்பிள்ளைகள் என்னை கேலி செய்யக்கூடும். இந்தக் கருத்துக்களுக்காகவா ஒரு பைத்தியக்காரன் இப்படி அலைந்தான் என்று சொல்லக்கூடும்” என்று அவரே சொல்லியிருக்கிறார். ஆகவே அயோத்திதாச பண்டிதரையோ ரெட்டைமலை சீனிவாசனையோ புத்தக வடிவிலோ அறிக்கைகள் வடிவிலோ பரந்த அளவில் வெளிக்கொண்டு வராதது யாருடைய குற்றம்? ஒரு விவரம் சொல்கிறேன். ரெட்டைமலை சீனிவாசன் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டியதற்காகவே புத்தகங்கள் விற்பார்களோ என்று பலமுறை............ கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். தலைவருடைய டாலரும் படம் போட்ட காலண்டரும் இருந்தனவே தவிர பழைய தலைவர் ராஜா அவர்களைப் பற்றிக்கூட ஒரு சிறு புத்தகம் கூட விற்கப்படவி்ல்லை. அது உங்கள் பாடு. சொல்ல வேண்டியது என் கடமை.
kulothungan
ஜோசப் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு செல்ல நேரமாகிவிட்டதே என்று வீதியில் குறுக்கில் நடந்துபோனதுதான் தெரு தீட்டு பட்டது என்று ஆதிக்கசாதியினர் கலவரம் மேற்கொள்ள பிரச்சனை பெரிதாகி அப்போது இருந்த கேரள காங்கிரஸ் மாவட்டத்தலைவர் உடனே புறப்பட்டு வரச்சொல்லி பெரியாருக்கு தகவல் தர காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்த பெரியாரும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு திருவாங்கூர் சென்றார். அவர் அழைத்ததன் பேரில் சென்றாரே தவிர பெயர் வாங்குவதற்காக போகவில்லை. ஏன் இவரை அழைக்கிறார்கள்? இவர்தான் தமிழ்நாட்டில் கோவில் நுழைவு போராட்டம் நடத்திக் கொண்டு இருப்பவர். தாழ்த்தப்பட்ட வகுப்பினரை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று போராடுகிறவர் 1920 திருநெல்வேலியிலும் 1921 திருப்புரிலும் 1922 தஞ்சை என்று ஒவ்வொரு காங்கிரஸ் மகாநாட்டிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீ்ர்மானம் நிறைவேற்றச் சொல்லி போராடுகின்றவர் என்ற காரணத்தினால் இவரை அழைத்தார்கள். இறுதியாக 1925ல் காஞ்சிபுரம் திரு.வி.க. தலைமையிலான காங்கிரஸ் மகாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்து அது ஏற்கப்படாத நிலையி்ல் இனி காங்கிரஸ் ஒழிப்பதுதான் என் வேலை என்று வெளியேறினார். ஆகவே இவர் வைக்கத்தில் போராட்டம் வெற்றிபெற்றவுடன் ஊருக்கு வந்துவிடவில்லை. அங்கேயே சுற்றிச்சுற்றி கோவிலுக்குள்ளும் நுழைவதற்கு போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர். டாக்டர் அம்பேத்கார் அவர்கள் ”என்னுடைய பொதுக்குளத்தில் நீர் எடுப்பதற்கு தாழ்த்தப்பட்டோருக்கு உரிமை வேண்டும் என்ற மாகாத்து போராட்டத்திற்கு தோழர் ஈ.வே.ராமசாமி அவர்களின் வைக்கம் போராட்டமே உந்துசக்தியாக இருந்தது” என்று சொல்லியிருப்பதால் மகாராஷ்டிரத்திற்கும் பெரியார் வீரரே.
kulothungan
என்னுடைய மாவட்டம் என்பதால் தெரிந்தவரை தகவல் சொல்லுகிறேன். நீங்கள் சொல்லியிருக்கும் அந்த மக்களின் ”தொடர் போராட்டம்” என்ற வாசகம் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யார் போராடினார்கள்? போராடினார்கள் என்று உங்களுக்கு யாராவது சொன்னார்களா? சம்பவம் நடந்த 25.12.1968 அன்று வெண்மணி சுற்றுவட்டார மக்கள், பொறுப்பாளர்கள் கேரளாவில் எர்ணாகுளத்தி்ல் நடந்த கம்யுனிஸ்ட் கட்சி மகாநாட்டிற்கு லாரி லாரியாக புறப்பட்டு சென்றுவிட்டார்கள். அந்த நாளை கொடியவன் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ணன் திட்டமிட்டு தேர்ந்தெடுத்து, கீழ்வேளுர் காவல்நிலையத்தில் தான் இருந்துகொண்டு அடியாட்களை விட்டு கலவரம் தூண்டிவிட்டு குழந்தைகள், பெண்களை தாக்கி ஓடஓட விரட்டி வீடுகளுக்கு தீ வைத்த போது, தானும் போலீசுடன் வந்து கலவரத்தில் இறந்துபோன பக்கிரி என்ற அடியாளை போலீஸ் தூக்கிச்செல்ல தான் நின்று கொண்டு அனைத்துக் குடிசைகளையும் கொளுத்தச் சொல்லி உத்தரவிட்டான். ஓடி ஒளிந்துகொண்ட 44 பேர் இருந்த குடிசையை வெளிப்புறம் தாளிட்டு கொளுத்தினான். இதில் இருவர் துப்பாக்கிகளும் வைத்திருந்தார்கள். தப்பியோடியவர்களைச் சுட்டார்கள். மறுநாள் கரிக்கட்டையாகிப் போனவர்களை வெளிப்பாளையம் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இருந்த பார்ப்பனச் சுடுகாட்டில் குவியலாக வைத்து போலீஸ் எரித்தது. எர்ணாகுளத்தில் இருந்து செய்தியறிந்து பி.ராமமூர்த்தி புறப்பட்டு வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஒரு கண்டனக் கூட்டமும் நடந்தது. அதன்பிறகு மிக நீண்ட நாட்கள் கழித்து மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு எரிந்துபோன 44 பேரின் நினைவாக ஸ்தூபி ஒன்று கட்ட அடிக்கல் நாட்டிவிட்டுப் போனார். இந்தக் கலவரத்தின்போது இறந்துபோன பக்கிரி என்பவனை கோபால் என்ற தோழர் வெட்டி விட்டார் என்று சொல்லி அவர்மீது வழக்கு தொடுத்து ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால் கொளுத்தியவர்கள் பாதுகாப்பாக நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன விமர்சனம் இவ்வளவு பெரிய பணக்காரர்களா நடந்தே போய் தீ வைத்திருப்பார்கள்? என்றதுதான். இதில் யார் போராட்டம் நடத்த வேண்டும் என்கிறீர்கள்? அப்பகுதியில் பெரும்பான்மையாக இருந்த தாழ்த்தப்பட்ட தோழர்கள் அங்கம் வகித்த சி.பி.எம். கட்சிதானே செய்திருக்க வேண்டும்? அவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வளவு நிவாரணம் தருவது என்பதைப் பற்றி தீர்மானிக்க கணபதியாபிள்ளை கமிஷன் போடப்பட்டவுடன் அவ்வளவு பேரும் அமைதியாக இருந்தார்களே தவிர தொடர் போராட்டம் நடந்ததாக நீ்ங்கள் சொல்வதும், அதில் பெரியார் பங்கேற்கவி்ல்லை என்பதும் புதிய செய்தி. 25.12.1968 அன்று செய்தி வெளியாகவில்லை. 26.12.1968 அன்றுதான் காலை வெளியில் செய்தி தெரியும். 24.12.1968 உடல்நிலை சரியில்லாமல் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தந்தை பெரியார் 26.12.1968 அன்று செய்தி தெரிந்தவுடன் மருத்துவமனையில் இருந்து வந்துவிட்டார். உடனடியாக இந்த சம்பவத்தைக் கண்டித்து விடுதலையில் இரண்டு தலையங்க செய்திகளையும் எழுதினார். அரசு இதுசம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எச்சரித்தார். பின்விளைவு ஏதுமில்லாமல் 12 ஆண்டுகள் கடந்ததற்குப் பின்னால் 14.12.1980ல் கொடுங்கோலன் கோபாலகிருஷ்ணன் வெட்டிக் கொலைசெய்யப்பட்டான். இதை செய்தவர்கள் என்று காவல்துறை கைது செய்த நபர்களில் 7 பேர் திராவிடர் கழகத்துக்காரர்கள், ஒருவர் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர், ஒருவர் சி.பி.எம்., ஒருவர் தி.மு.க., இவர்கள் அனைவரையும் பிடித்தது பிப்ரவரி 1980ல், வழக்குப் பதிந்தது மார்ச் 1980ல். கிட்டத்தட்ட ஒருமாதம் வரையில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஒவ்வொரு காவல்நிலையமாக அழைத்துச் சென்று அங்கங்கு வைத்து சித்திரவதை செய்து ஒரு மாதம் கழித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்கள். அவர்களை அப்போது திராவிடர் கழக இளைஞரணி மாநில பொறுப்பாளராக இருந்த கோவை.கு. இராமகிருஷ்ணன் அவர்கள் சிறையில் சென்று பார்த்து அவர்களை வெளியில் எடுத்து வழக்கு நடத்த பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள் என்பதும், அப்போது மாவட்ட பொறுப்பிலிருந்த தோழர் குடந்தை ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர்கள் அமர்த்துவதும் பொருளாதார உதவி செய்வதுமாக பல்வேறு வகையில் உதவினார்கள் என்று இப்போதும் அந்த தோழர்களால் சொல்லப்படுகிறது. (இதில் தற்போது வெளியிட முடியாத வேறு சில செய்திகளும் உண்டு) திராவிடர் கழகம் ஏதாவது செய்திருக்கும் என்று நம்புகிறீர்களா?
kulothungan
திசை திருப்புவதற்காக ஆரியர்களும், ஆரிய அடிவருடிகளும் பெரியாரின் மொழியில் பொறுக்கித்தின்னும் புலவர்களும் சொல்லிய அதே விவாதக் கருத்துத்தான் இது. இதை உங்களிடம் இருந்து வந்திருக்கக்கூடாது. முதலில் தந்தை பெரியார் அவர்கள் மொழிக்கான கொள்கை என்று எதையும் உருவாக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு சில விமர்சனங்களை செய்திருப்பார். தமிழிலிருந்து சைவத்தையும் வைணவத்தையும் எடுத்துவிட்டால் வேறு என்ன இருக்கிறது என்று கேட்பார். வேறு ஒரு நேரத்தில் இது ஒரு காட்டுமிராண்டி மொழியாக மாற்றப்பட்டுவிட்டது. வானவியல், மருத்துவம், தர்க்கவியல் எல்லாம் இருந்தது போய் இன்று பி்த்தா பிறை சூடி பெருமானே என்று கடவுள் வியாக்கியானம் பேசுவதாக இருக்கிறது. இதனால் யாருக்கு என்ன பயன்? இவைகளையெல்லாம் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், தமிழில் ஒன்றுமேயில்லை என்றாகிவிடாதா?, நம் வீட்டில் இருந்த பழம் ஓலைச்சுவடிகளையும் மருத்துவ நூல்களையும் ஆதாரப்புர்வமான பழைய சங்கதிகளையும் கொண்டுபொய் ஆடிப்பெருக்கென்று ஆற்றில் விடு, கார்த்திகை அன்று எரியும் சொக்கப்பனையில் போடு என்றெல்லாம் பார்ப்பனர்கள் சொன்னதைக் கேட்டு நாமும் அவ்வாறே செய்ய நம்முடைய ஆதாரங்களை நம் கையாலேயே அழி்த்த பெரும் தவறை செய்தோம். அதையே ஆரியர்கள் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு வடமொழியில் எல்லாம் இருப்பதாக சொல்லவும், தமிழ்மொழியில் பக்தி இலக்கியம் மட்டுமே இருக்கிறதே தவிர வேறு ஆராய்ச்சிக்கான விஷயம் இல்லை என்பது போலாகிவிட்டதே என்று கவலைப்பட்டிருக்கிறார். அவர் கொண்டுவந்த எழுத்து சீர்திருத்தம் தமிழ்மொழிக்குத் தானே.. தமிழ் இசையை வளர்க்க வேண்டுமென்று அதற்காக பெரியார் இயக்கம் நடத்தவில்லையா? தமிழிலிலேயே அனைத்தும் கற்பிக்கப்பட வேண்டும், தாய்மொழியில் கற்கும் பிள்ளைகளே புரிந்து படிக்க வசதியாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு ஆராய்ச்சி பாடங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லையா? நீங்கள் குறிப்பிட்டு (மணியரசன் போல் இல்லாமல்) இன்ன இடத்தில் இவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.. ஏன் அப்படிச் சொன்னார் என்று அறியவேண்டுமானால் அவர் சொல்லிய காலம், எந்த இடம் இரண்டையும் அறிந்து அப்பகுதி முழுவதையும் வாசித்து பிறகு கருத்து சொல்லுங்கள். பொதுவாகவே பெரியாரின் கருத்துக்கள் முழுமையாக வாசிக்கப்படுவதில்லை. விவாதத்திற்கு வருகின்ற பெரும்பாலோர் தங்கள் தலைவர்கள் மேடையில் எதைச் சொன்னார்களோ அதையே விவாதத்தில் வைக்கிறார்கள். சாருமஜம்தார் மாவோவின் கோட்பாடுகளில் வரிகளை உருவி ”நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரியே தீர்மானிக்கிறான்” என்று வீரம் புரட்டும் வரிகளை கூறி நிறைய அழித்தொழிப்பு வீரர்களை உருவாக்கினார். அப்படி செய்யாமல் மாவோவின் வரலாற்றை முழுமையாக படித்தவர்களிடம் நானும் அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. பெரியாரும் அப்படிப்பட்டவரே..எங்களுடைய உறவினர் சொல்லுவார், பெரியாரை வாசிப்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடைய முகமூடிகளைப் போட்டுக் கொண்டு வாசிக்கக்கூடாது. அது பெரியாருடைய முகமாகவே இருந்தாலும் சரி..... அதையே இப்போதும் தெரிவித்து விடைபெறுகிறேன்.. நாம் தமிழர் என்று சொல்லிக் கொள்வதில் நமக்கொன்றும் மறுப்பில்லை. சொல்லப்போனால் அதுவே நம்முடைய அடையாளம். திராவிடம் என்பது எமது மரபு. தமிழ் என்பது எமது இனம். நன்றி...
குலோத்துங்கன்
”என் உடலை ஒரு ஆயுதமாக ஏந்தி தொடர்ந்து போராட்டத்தை விரிவுபடுத்துங்கள். காவல்துறை புதைக்க முயலும், விடாதீர்கள்” என்று எழுத்து வடிவில் வாக்குமூலம் தந்துவிட்டு தன் உயிரை தியாகம் செய்த தியாகி முத்துக்குமாருக்கு மதிப்பளிக்காமல் காவல்துறையுடன் சேர்ந்து அடக்கம் செய்வதற்கு போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு துணைபோன ”தமிழர்களை” விட ”என் மக்களைக் கொல்ல ஆயுதங்கள் அனுப்பாதே” என்று ராணுவ வாகனத்தையே அடித்து நொறுக்கிய ”திராவிடர்கள்” சற்று எனக்கு மேலானவர்களாகத் தெரிகிறார்கள். நீங்கள் தமிழையும், தமிழ்நாட்டையும் பத்திரமாக வைத்திருங்கள். திராவிடன் போராடுவான். வடநாட்டான் கூடங்குளம் அமைப்பான்.
குலோத்துங்கன்
சமூக இழிவை நீக்கவே பெரியார் போராடினார் என்பதும், பொருளாதாரத்தினால் உயர்வதால் மட்டும் பிறப்பின் காரணத்தால் இழிந்தவர்கள் என்ற் தங்களின்மீது திணிக்கப்பட்ட இழிதன்மையிலிருந்து மாறமுடியாத நிலைதான் இருக்கும் என்பதில் தெளிவாக இருந்தார். அதன் காரணமாகவே கம்யூனிஸ்டு அமைப்புகளோடு ஒத்துப்போக முடியாதிருந்தார். எவ்வகையிலேனும்,சாத்திரப் புராணங்களின்படி ஆரியர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பிறப்பின் காரணமாக சூட்டப்பட்டுள்ள சூத்திரப்பட்டத்தை நீக்கவே போராடினார். 'நில அபகரிப்பு'''பொருளாதார பிடுங்கள் மறைப்பு''இதெல்லாம் அவர் வேலைத் திட்டத்தில் இல்லாதவ்கள். இதையெல்லாம் அவர் செய்யவில்லை என்று குற்றம் சுமத்தும் பெரியவர்கள்,ஏன் எவருமே அதைச்செய்யவில்லை. ஒரே ஒரு நபர் கூட இல்லை. எதையும் மறைத்ததாலோ எதையாவது செய்த தாலோ அவர் இந்த வகையில் ''லாபமடைந்தார்; அந்த சொத்துக்களையெல்லாம் இன்னார் பெயரில் எழுதிவைத்தார் என்று ஏதாவது ஒன்றைச்சொல்லாமல் விடுகிறார்கள். அல்லது அந்தப்படியான காரியம் செய்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வரவேண்டிய பதவியை பெரியார் அபகரித்துக்கொண்டார் என்றாவது சொல்லலாமே? அவர் தனக்குத்தோன்றிதை சொல்லிவிட்டு ''எதோ எனக்கு என் அறிவிற்கு எட்டியதைச் சொன்னேன்;நீ உனறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து எது சரியெனத் தோன்றுகிறதோ அதன்படி நட என்றுதான் சொன்னாரே தவிர,நான் சொல்லுகிறேன் நீ ஏற்றுக்கொலள்ளத்தான் வேண்டும் என்று எங்காவது எப்பொழுதாவது சொல்லியதுண்டா?---நகரசுத்தி தொழிலாளர்களிடம் பேசும்போது, சொன்ன செய்தியில் ''நடுவில் வரிகளை உற்விப்பேசும்''அதே தந்திரத்தை நீங்களுமா கையாளுவது;அது அரசியல் அயோக்கியர்கள் கையாளும் சூழ்ச்சிமுறை.''நீங்கள் செய்யும் வேலையை வேறு எவனாவது செய்வானா?அப்படிப்பட்ட நிலையில் உங்களை நாலாம் ஜாதி,அய்ந்தாம் ஜாதி,சூத்திரன்,தேவடியாள் மகன் என்றெல்லாம் இழிவுபடுத்துகிறான் என்றால் அவனுக்காக நீங்கள் ஏன் கஷ்டப்படவேண்டும்.ஊரு நாரிப்போகுமே என்று நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்;எவன் பேண்டானோ அவனே அள்லட்டும்;அது அவன் கவலை;நீங்கள் ஏன் கவலைபடவேண்டும்?உங்களை எவன் மனிதனாக மதிக்கிறானோ,எந்தநாடு உங்களை மற்றவர்களோடு சமமாக நடத்துகிறதோ அங்கே போய்விடுங்கள்.....''என்று திருப்பூரில் [என்ற நினைவு]பேசினார்;இது அம் மக்கள்மீதான கவலையினாலும்,இப்படி கொடுமைப்படுத்தப்படுகிரறார்கலே?என்ற ஆத்திரத்திலும் விளைந்த பேச்சு.அதைக்கேட்டுக்கொண்டிருந்தவர்கள் தங்கள் அறிவைக்கொண்டு அராய்ந்து பார்த்தார்கள்.சரியெனப்பட்டதோ என்னவோ வாழ்த்தினார்கள்.'பெரியார் பத்து ஊர்களை விலைக்கு வாங்கிப்போட்டு,அங்கிருந்த மக்களைக்குழப்பி தன் ஊரில் குடியேறச்சஒன்னதுபோல ''உடனேயே''தூக்கு கயிற்றை சிபாரிசு செய்கிறீர்கள். இதே பெரியார்,காந்தி சொன்னார் என்று,அமைதியாக தீர்வு காண்பதாகசொல்லி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனியாக ஒரு கிணற்றை திறந்து வைக்கச்சொல்லி பெரியாரை அழைத்துப் போனார்கள்; பெரியார் ''எக்காரணம் கொண்டும் இக்கிணற்றை நான் திறக்கமாட்டேன்;எல்லோருக்கும பொதுக்கிணற்றில்தான் நீர் எடுக்க உரிமை வேண்டும். அது இல்லையென்றால் தண்ணீர் இல்லாமல் செத்தாலும் சாகல்ம தவிர,தனிக்கிணறு கூடாது'' என்றா அந்தப்பக்கத்தைப் பார்க்கவில்லையா? அல்ல..பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டத்தை ஒழிக்கவே முடியாது என்று அழுத்தமாகச் சொன்னவரை,தனியாகப் பிரித்து அவர் ''பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டர்ர்'',என்று தங்கள் பிழைப்பைப்பார்க்க பெரியார் தடையாக இருக்கிறார் என்பவர்கள்வேண்டுமானால் கூரித்தியலாம்;நீங்கள் பொதுத்தளத்தில் மக்களுக்காகப்போராடும் குணமுடையவர்;ஆராய்ச்சி செய்யலாமே;தவறு இருந்தால் மாற்றிவிடவேண்டியதுதான்.நம்முடைய அறிவிற்கு அது சரியெனப்படவேண்டும்.பெர்யார் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பேசியிருந்தால்,ஏன் முதுராமலிங்கதேவர் பெரியார் போட்ட மாநாட்டுப் பந்தல்களைக் கொளுத்திவிடப் போகிறார். முதுகுளத்தூர் கலவரத்தின்போது 'முத்துராமலிமங்கத் தேவரைப் பிடித்து சிறையில்போடு''என்று சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. இதுவும் பொய் என்பீர்களா?கீழ்வெண்மனி பற்றிப் பேசினீர்களே?மேலவளலவைவைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.தனித்தனியாக அடிவாங்கி அழுதுகொண்டு வீட்டுக்குப்போகும் உங்கள் ஊர்காரர்களில்,வலியோடு இருக்கும் படித்தவர்கள் இருந்தால்''யுத்தம் எப்படி வருகிறது;வந்தால் போர்முறைகள் என்ன?அதிகல் கொரில்லா போர்முறை எப்படி வந்தது என்று பலநாடுகளின் வரலாற்றைப் படிக்கச்சொல்லுங்கள். கீழத்தஞ்சையில் இரட்டைகுவலை முறையென்றால் என்ன என்று கேட்பார்கள்.
தமிழரசன்
//குலோத்துங்கன்// வழக்கம் போல் எமது பெரியாரைப் பற்றிய எம்முடைய கேள்விகளுக்கு பெரியாரியவாதிகள் சொல்லும் பதிலைத்தான் கூறியுள்ளீர்கள்.
என்னுடைய கேள்விகளுக்கான பதிலைக் கூறாமல்,நான் பெரியார் பற்றிய அரைகுறை வாசிப்புடன் கேள்வி கேட்பதாக நினைக்க வேண்டாம்.என்னுடைய கேள்விகளில் உள்ளவைகள் நான் அவரைப் பற்றிப் படிக்கும் போது என்னுள் எழுந்தவைகளே.பிறரைப் போல் பெரியார் சமுக மாற்றத்திற்காகப் போராடவில்லை என்று யார் சொன்னது.அவர் பார்ப்பனியத்தை ஒடுக்குவதில் அவர் செய்த உழைப்பினை நான் என்றைக்கும் மறுக்கவில்லை.நீங்கள் சொல்வதைப் போல் எந்த ஒரு சாதி ஆதிக்கம் கொண்டோரைக் காப்பாற்ற வேண்டிய எண்ணத்தில் நான் பெரியாரைப் பற்றி விமர்சிக்கவில்லை.....
நான் கூறவருவது தமிழர் தேசியத்தில் சீமானுடைய தவறான கருத்துக்களைத் தவறு என்று மறுக்கும் நீங்கள் பெரியாருடைய தவறுகளை தவறு என்று மறுக்க மறுப்பது ஏன்? எது தவறென்று கேட்க வேண்டாம்?இதுவரை எமக்கு பெரியாரின் கருத்துகள் மிகத் தவறென்று கருதும் கொள்கைகள் நிறைய உண்டு.மறுபடியும் கூறுகிறேன்..., 1.பெரியாரது மொழிக் கொள்கையைப் முன்னே ,பின்னே எப்படிப் படித்தாலும் (தாய்மொழி வழிக் கல்வி மறுத்தல்), பற்றி நீங்கள் சரியான பதிலைக் கூறாமல்,அவர் தமிழ் மொழிக்கு,தமிழ் இசைக்கு பாடுபட்டவர்.அதனால் ,அவரது மொழிக் கொள்கை பற்றி கருத்தை சரியென்று சொல்வதை என்னால்(தமிழனால்)ஏற்றுக்கொள்ள முடியாது.உங்களுடை கொள்கை இதில் எப்படி இருக்கிறதென்றால்,ஆட்டினை(தமிழ்) வளர்ப்பவன் ஆட்டிற்கு கருணையுடன் தீனி(பெரியார் தமிழ் மொழிக்காக செய்தவைகளாக உங்களால் கூறப்பட்டவைகள்)கொடுத்து இறுதியில் பலியிடும் செயலானது ,உங்களுடய பார்வையில்(திராவிடக் கொள்கை கொண்டவர்)மனிதாபிமானமாக இருக்கலாம்.ஆனால்,ஆட்டின்(தமிழ் மொழிப் பற்றுகொண்டவர்கள்)பார்வையில் அச்செயலானது எவ்வளவு மனிதாபிமானமற்றது!!!!
2.அன்பு அவர்களே!அரைத்த மாவையே அரைப்பதாகக் கூறியுள்ளீர்கள்.அரைத்த மாவு சரியாக அரைக்கப் படவில்லை என்று நான் கூறுகிறேன்.எப்படி என்கிறீர்களா? அன்றைக்கு முதுகுளத்தூர் கலவரத்தில் முத்து முத்துராமலிங்கத்தை எதிர்த்து பெரியார் ஒருவர்தான் எதிர்கருத்து கூறினார் என்கிறீர்கள்.உண்மையாதெனில்,அன்றைக்கு அதை எதிர்த்து பெரியாரை விட மிகப் பலரும் கருத்து தெரிவித்தவர்கள் ஏராளம்.(சான்று:-தோழர் தமிழவேள் எழுதிய "இம்மானுவேல் தேவேந்திரர்" வரலாற்றுப் புத்தகத்தைப் படிக்கவும்)கீழவெண்மணி படுகொலையில் பெரியாரின் கொள்கை பிடிக்காமல் இயக்கத்தை விட்டு வெளியேறினார்களே அது பொய் என்கிறீர்களா?பெரியாரது எதிர்வினை என்ன?அறிக்கை விட்டதுதானே?இல்லை என்கிறீர்களா?
3.கீழத் தஞ்சைப் பகுதியில் பொதூடைமை இயக்கத்தவரின் போராட்டங்களை கேள்விப்பட்டதே இல்லை எனக்கூறியுள்ளது சரியா?அது தவெறென்று உங்களுடைய பதிலிலே உள்ளதே///என்னுடைய மாவட்டம் என்பதால் தெரிந்தவரை தகவல் சொல்லுகிறேன். நீங்கள் சொல்லியிருக்கும் அந்த மக்களின் ”தொடர் போராட்டம்” என்ற வாசகம் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யார் போராடினார்கள்? போராடினார்கள் என்று உங்களுக்கு யாராவது சொன்னார்களா? சம்பவம் நடந்த 25.12.1968 அன்று வெண்மணி சுற்றுவட்டார மக்கள், பொறுப்பாளர்கள் கேரளாவில் எர்ணாகுளத்தி்ல் நடந்த கம்யுனிஸ்ட் கட்சி மகாநாட்டிற்கு லாரி லாரியாக புறப்பட்டு சென்றுவிட்டார்கள்////அந்த மக்கள் கேரளாவில் எர்ணாகுளத்தி்ல் நடந்த கம்யுனிஸ்ட் கட்சி மகாநாட்டிற்கு ஏன் செல்ல வேண்டும் ? இன்றைய நிலமைபோல் கோழி பிரியாணி வாங்கித் தருவார்கள் என்ற காரணத்தினாலா?வைக்கம் சென்று போராடியவர் முதுகுளத்தூர்,வெண்மணிக்கு போக பேருந்து இல்லையா ????
4.திராவிடம் என்ற வார்த்தையைப் பற்றிய உங்கள் வரலாற்றுக் குறிப்பு என்னை வியக்க வைக்கிறது.இரண்டு மாதங்களுக்கு முன்னே "கருணாநிதி" கூறியுருந்த சிறுபிள்ளைத் தனமான கூற்றை(அடிப்படை ஆதாரமாகக் கொண்டது :-தாகூர்,மனுதர்மம்,கடைச் சங்ககாலதின் இறுதிப் பகுதியில்(தி.பி 430)"வசிரனந்தி" எழுதிய திராவிட வேதம் என்ற நூல்) ஒத்திருக்கிறது.மனு தர்மத்திலே,கடைச் சங்க காலத்திலே எதிலும் திராவிடம் என்பது தமிழர் இனத்தைச் சேராத தெலுங்கு ,கன்னடம்,மலையாளம்,துளு,சிங்களம்,மராட்டிய இன்னும் பல.....போன்றவர்களைக் குறிக்கப் பயன்படுத்தியது என்பதே உண்மை.ஆதாரம்,அய்யா "தேவநேயப் பாவாணர்" எழுதிய ஆராய்ச்சி நூட்களைப் படிக்கவும்.எத்தனையோ இடங்களில் தமிழ் இனத்தைப் பற்றிக் கூறப்பட்டிருந்தாலும்,தமிழர் மரபினை திராவிட மரபு என்று கூறுவது அய்யா "பாவாணர்" கூறியது போல் திராவிடம் தமிழுக்குத் தீதென்று கூறியது எவ்வளவு பெரிய உண்மை!!!!
நீங்கள் விடை சொல்லாத என்னுடைய கேள்வி.
5.தமிழ் நாட்டினைத் தவிர ஏனைய மாநிலங்களில் உள்ள உங்களால் திராவிடர் என்று கூறப்படும் தெலுகர்,கன்னடர்,மலையாளிகள்.... திராவிடத்தை ஏன் ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள்.மறுப்பதற்கு உண்டான காரணம் என்ன?அதுசமயம் தமிழகத்திற்குள் வாழ்வதற்காக மேற்கண்ட மாநிலங்களில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்களைத் தோற்கடித்து ஆள்வதற்காக வந்த மேற்கண்ட பிற மொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு திராவிடத்தை ஏற்றுக்கொள்வதும்,தமிழர் என்ற இன அடையாளத்தை மறுப்பதும் ஏன்?அவர்கள் கொண்ட திராவிடம் என்ற கொள்கை எதற்காக இருக்கும் ???????????
இறுதியாக இற்றைக்கு தமிழர் நாட்டிலே தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருராதவர்கள் தமிழ் நாட்டின் அரசதிகாரத்தில் தொடர்ச்சியாகப் பெரும்பான்மை பெறுவதும்,அவர்களே!தலைமைப் பொறுப்பை வகிப்பதும் தற்செயலானது என்பது,"கேட்பவன் கேணையன் என்றால்,கேள்வரகிலும் நெய் வடியும்" என்ற பழமொழிக்கு,வரும் காலங்களில்,கேணையன் என்ற இடத்தில் "தமிழன்" என்ற சொல்லை பயன்படுத்தும் பழமொழியாக வளர்ச்சி அடைய வலி வகுக்கும்.(இற்றைக்கும் அதே நிலைமைதான்)
இறுதியாக என்னுடைய கருத்துயாதெனில்,தமிழ் மொழியை மதிக்காதவர்!தமிழ் இனத்தை எவ்வாறு முன்னேற்றும் கொள்கையைக் கொண்டிருப்பார் என்ற அடிப்படை உண்மையை ஆதாரமாகக் கொண்டு, திராவிடம் என்ற சொல்லையும், அதை தம்முடய மரபாகக் கொண்டிருப்போரின் செயலானது "கருணாநிதியின்"கூடிக் கெடுத்த செயலைப் போலவே வரும் காலங்களில் அமையும் என்பதால்,எம்மால் அவ்வாறான ஒரு பெரும் வரலாற்றுத் தவறுக்கு சோதனை அடிப்படையில் கூட ஆதரவாக இருக்க முடியாது(பட்டது போதும்)........என்னுடைய விளக்கத்தைக் கொடுத்து விட்டேன்.இனி மற்றவர்கள்தான் எது சரி என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுமாறு கூறி இதுவே என்னுடய இறுதிப் பதிவு என்றும் கூறி விடை பெறுகிறேன்....................(((குறிப்பு:-பெரியாருடைய எழுத்து திருத்தத்தை நாம் சீர்திருத்தம் என்று ஏற்றுகொண்டது மாபெரும் தவறு என்பதயும் ஆய்ந்து தெளிந்து கொள்ளவும்))))
குலோத்துங்கன்
தமிழ் என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப்
பொறுத்து நாட்டுக்கும் மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா? என்ற கேள்விகள் தமிழைப் பொறுத்தவரை வித்து முந்தியா? மரம் முந்தியா? என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகிறது.
எப்படியிருந்தாலும் தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றைக் காணாதவர்-களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும்படியாகத் திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும் நாடுகளும்கூட தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும்; ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன.
நாட்டிலும் இதை வெகு காலமாகவே ஒப்புக்கொண்டு வழக்கத்திலும் கொண்டு வந்திருக்கிறோம். வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம்
ஆகியவற்றிலும், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும் மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக்
காண்கிறோம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு
வந்திருக்கிறதையும் நாம் காண்கிறோம். ஆனால், தெலுங்கு நாட்டாராகிய ஆந்திரர்களும் கன்னட நாட்டாராகிய கன்னடியர்களும், மலையாள நாட்டாராகிய
மலையாளிகளும் இதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் என்பதுபோல், தமிழும் ஒரு மொழி என்றுதான் சொல்கிறார்களே ஒழிய,
இவையாவும் தமிழ்தான் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். சிலர் மறுக்கவும் செய்கிறார்கள். காரணம் அவர்களது மொழியில் ஆரியச் சொற்கள்
பெரும்பான்மையாகக் கலந்துவிட்டன. ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு குடிவாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்தியப் போக்குவரத்து
வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும், மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமற் போனதால் நாளடைவில் அந்தந்த இடத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகத்துவங்களை எடுத்துக்கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும்படிச் செய்து, அதன் மூலம் தமது கலை ஆச்சார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்திவிட்டனர். அந்த வடமொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு
மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு பொருளுக்குப் பல சொல்

ஆனால், என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ
தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நாலு இடங்களில் நாலுவிதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். உதாரணமாக, இங்கு தோட்டத்திற்குப் போகிறேன் என்றால் வயலுக்கு, விளை நிலத்திற்குப் போகிறேன் என்று அர்த்தம். கொல்லைக்குப் போகிறேன் என்றால் கக்கூசுக்குப் போகிறேன் என்று அர்த்தம். சோழ நாட்டில் தோட்டத்திற்குப் போவதென்றால்
கக்கூசுக்குப் போவதாகவும், கொல்லைக்குப் போவதென்றால் வயலுக்குப் போவதாகவும் அர்த்தம் செய்து கொள்வார்கள். ஒரே தமிழ்ச் சொல் இரண்டு
இடங்களில் வெவ்வேறு பொருளில் வழங்குகிறது. இதேபோல் தமிழில் வீடு என்பதைத் தெலுங்கில் இல் என்றும், கன்னடத்தில் மனை என்றும் மலையாளத்தில் பொறை என்றும் கூறுவார்கள். இந்த நான்கையும் தமிழ் அகராதியில் வீட்டிற்குரிய பல பெயர்களாகக் காணலாம். இதே போல் நீர் என்ற, தண்ணீர் என்று பொருள்படும்
தமிழ் வார்த்தைக்கு, கன்னடத்தில் நீரு என்றும், தெலுங்கில் நீள்ளு என்றும், மலையாளத்தில் வெள்ளம் என்றும் கூறுவார்கள். மலையாளத்தில் மழை
அதிகம். ஆதலால், தண்ணீரை அவர்கள் எப்போதும் பெருத்த அளவில்தான் பார்ப்பார்கள். ஆதலால், தமிழில் பெருந்தண்ணீர்ப் போக்குள்ள பெயரை அங்கு
நீருக்கு வழங்குகிறார்கள். இந்த மாதிரித் தமிழ் வார்த்தைகள் அந்தந்த இடத்திலுள்ள சீதோஷ்ண நிலைக்கேற்ப, பேச்சுப் பழக்கத்துக்கு ஏற்ப உச்சரிப்பில் சிறிது மாற்றமடைந்திருக்கிறதே தவிர வேறில்லை. இதனால் வெவ்வேறு மொழியாகிவிடமுடியுமா? ஒரு பொருளுக்குப் பல சொல் இருந்தால் ஒவ்வொரு சொல்லும் ஒரு மொழியாகிவிடுமா?

நாலு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால்,
எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அநேகமாகத் தமிழ்ச்சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். அகராதிகொண்டு
மெய்ப்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும்கூட அவற்றுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை, தமிழ்ச்
சப்தத்தில்தான் நாலாயிரப் பிரபந்தங்களையும், திருப்பாவையையும் தெலுங்கு எழுத்தில் படித்துப் பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில் தமிழ்ச் சப்தத்தில்தான் அச்சிடப்பட்டிருக்கின்றன.
கன்னடியர்களுக்கும், மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது. வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளி-களும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுநர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை
ஒப்புக்கொண்டு உள்ளார்கள் என்பது நமக்கு, மேலும் நம் கருத்துக்கு வலிமையை ஊட்டுகிறது. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு
பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில் ஹிந்தியைப் புகுத்தக்கூடாது என்று கிளர்ச்சி செய்தேன்.

இந்தியை ஏன் எதிர்த்தேன்?

அது என் தாய் மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனியால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திரச் சக்தி நிறைந்தது, எலும்புக்கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல, பின்
எதற்காக? தமிழ், இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது.
இந்நாட்டு நல்வாழ்வுக்கு, பண்புக்கு ஏற்ப மைந்துள்ளது. மூடநம்பிக்கையை உண்டாக்கும் கருத்துகளுக்குத் தமிழ் மொழியில் இடம் இல்லை. இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும்விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது.
தூயதமிழ் பேசுவதால், மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் பல நன்மையடை-வோம் என்பதோடு; நம் பழக்க வழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக்கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடுபயக்கும்
கருத்துகள் நம்மிடைப் புகுந்து, நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்-தான். வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை
அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழைவிட, மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்-பதற்காக அல்ல.

-------------------
தந்தை பெரியார் “ எழுத்துச் சீர்திருத்தம்” நூலிலிருந்து
குலோத்துங்கன்
மதமும் இலக்கணமும்

உதாரணமாக மக்கள், தேவர், நரகர், உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்?
தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப்
புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம்,
திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு
தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும்
ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து
காணப்படுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம்தானே
அதிகமாகயிருக்கின்றது?

மேல் நாட்டு இலக்கியம்

மேல்நாட்டுப் புலவர்கள், மேல் நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு
இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது
என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா?
என்றால் இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக்
கேட்பது? இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா என்றால் உண்மைத் தமிழ்
மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்.

மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ் நாட்டில் அறிவாளிகள்
இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை. மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த
இலக்கியங்களை மத சம்பந்தமின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால்
நூற்றுக் கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும்
போற்றப்படுகிறார்கள்.

கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால்
மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்?
தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள்
சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய
இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம்
ஆகியவைகள் மூலம் தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய
முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும்
ஞானமுடையவர்களாவார்கள்.

மலத்தில் அரிசி பொறுக்கலாமா? கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய்
இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான்
பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே
கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ் வளவு
இழிவாகக்குறிப்பிடப்பட்டிருக் கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை
எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப்பட் டிருக்கிறது. சுயமரியாதையை விரும்பு
கிறவன் எப்படி கம்பராமாயண இலக்கி யத்தைப் படிப்பான்? இன்று கம்பராமா
யணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா என்று நடுநிலையில் இருந்து
யோசித்துப் பாருங்கள்.

கடவுளால் மொழி உயராது தமிழ் மொழியின் பெருமை பரமசிவனுடைய
டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ,
சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை
உண்டபாலனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கினதாலும், தமிழ்
வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்குகந்த மொழி தமிழ் என்றால் வைணவனும் முஸ்லிமும் தமிழைப்
படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ்
மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக்காதில் கேட்பதே பாவம் என்றும்
சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.

இந்திப் புரட்டு

இன்று தமிழ் நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய
பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்தியப்பாஷை ஆகவேண்டுமென்று முயற்சித்து
வெற்றி பெற்றுவருகிறார்கள். கோர்ட்பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம்
இந்தியமயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில்
துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பாலோர்க்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை
இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப் பண்டிதர்கள் இந்த
அரசியல்வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து
கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

செத்த பாம்பு

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு
எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால்
எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன்
ஒரு பைசாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக்
கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டிதர்கள்
தான் சத்தம் போடுகிறார்கள், ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும்
கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜுகள் முதல் எல்லா பார்ப்பன
அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய
செல்வாக்கும் செல்வமும், உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றிக் கவலையும் இல்லை.
தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழாபிமானம் தேசத்துரோகம்!

தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத்துரோகி,
வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றொல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால்
கூட்டத்துக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள். தமிழின் பரிதாப
நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ் மொழியில், ஒரு சிறு மாற்றமோ,
முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது
முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும்,
சவுகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்? மாறுதல் அவசியம்

மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன; எழுத்துகளில்
எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துகளை
எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துகள் சேர்த்தார்கள். அமெரிக்காவில்
எழுத்துக் கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் முறையை மாற்றி விட்டார்கள்.
துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துகளையே அடியோடு
எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள்
தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்?
காலத்துக்கு ஏற்றமாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது;
மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே
மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.

தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு
நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவராவது
அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்லர். இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய
நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆனால், தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்செய்வது?
என்னைக் குறைகூறவோ, திருத்தவோ, முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு
வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம்
செய்யவில்லை. ஆனாலும் நான் அம்முறையிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன்.
அம்முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும்
எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.

இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள்
தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள்
அவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.

எங்கும் திருநாள்

எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது,
அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.

தீபாவளி போன்ற மூட நம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான
பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படித் தமிழ்த்திருநாள் என்று தமிழ் மக்கள்
கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத்
திருநாள்களைப் பரப்பவேண்டும். நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும்,
சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால்
தீபாவளியும், மாரிப் பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால்
தக்கது செய்யவேண்டுகிறேன்.

தந்தை பெரியார் - " விடுதலை" 1-5-1949
குலோத்துங்கன்
"தமிழ் – காஷ்மீர் முதல் குமரி வரை பேசப்பட்ட மொழி; அது இந்தியாவின்
தொல்குடிகளான திராவிடர்கள் பேசிய மொழி' என்று எடுத்தியம்பிய டாக்டர்
அம்பேத்கரும்; தமிழ் மொழியை ஒருபுறம் விமர்சித்துக் கொண்டே, மறுபுறம்
அதைச் செம்மைப்படுத்த ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை மேற்கொண்ட
பெரியாரும் – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மறக்கப்பட்ட நிலையில்,
மொழி குறித்த பெரியாரின் பார்வையை, அதன் முக்கியத்துவம் கருதி இவ்விதழில்
வெளியிடுகிறோம்.

தலைவர் அவர்களே! தோழர்களே!

"மொழி' என்பது பற்றிப் பேச சிறிதும் அதற்கான அறிவோ, ஆராய்ச்சியோ, ஆற்றலோ
அற்ற நான் – "மொழி' என்பது குறித்துப் பேசத் துணிந்தது, மொழித்
தத்துவத்திலுள்ள என்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டேயாகும். நான்
கூறப்போகும் தத்துவங்களை இலக்கண, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்குவது
என்பது, எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம். அதற்கு வேண்டிய இலக்கிய,
இலக்கணங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை. ஆராய்ச்சியாளர்
மேற்கோள்களையும் என்னால் காட்ட இயலாது. எனக்குத் தோன்றிய, என்
அனுபவத்துக்கு எட்டிய விஷயங்களைத்தான் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லப்
போகிறேன். அவற்றில் பெரும்பாலும், உங்களுக்குக் குற்றமாகப்படலாம். ஆகவே,
நான் கூறுவதை நீங்களும், உங்கள் அறிவையும், அனுபவத்தையும் மற்றும் இது
விஷயத்தில் அனுபவமும் ஆராய்ச்சியும் உள்ள பெரியோர்கள் கருத்தையும் கொண்டு
சிந்தித்துப் பார்த்து, ஏற்கக்கூடியதை ஏற்றும், ஏற்கக் கூடாததைத்
தள்ளியும் தெளிவு பெற வேண்டுகிறேன்.

"மொழி' என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? என்று முதலில் கவனிக்க
வேண்டும். ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய
சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருக்கிறது.
மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது.
மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக்குறிப்புகளாலும்,சிலவித
சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால்,
அவற்றை "மொழி' என்று கூறாவிட்டாலும், "ஒலிக் குறிப்பு' என்று கூறலாம்...

ஒருவரைப் பார்த்து, "உங்கள் மொழி என்ன?' என்று கேட்பதற்கு, "நீங்கள்
எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்?' என்றுதான்
பொருள். ஆக, மேலே தெரிவித்ததிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம்
கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு
விளங்குகிறது. மக்களிடையே கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் சாதனம் மொழி
என்றால், அம்மக்களிடையே பல மொழிகள் வழங்கப்படக் காரணம் என்னவென்று
நீங்கள் கேட்கலாம். பல மொழிகள் வழங்க வேண்டுமென்று யாரும்
விரும்பியதில்லை என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் எம்மொழியும் கற்பனை
செய்யப்பட்டதல்லவென்றும் உங்களுக்கு விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

தர்மபுரியானும், கொங்குநாட்டுக் கிராமத்தானும், யாழ்ப்பாணத்தானும் –
இவர்கள் யாவரும் பேசுவது தமிழ்தான். ஆனால் தர்மபுரி தமிழன்,
யாழ்ப்பாணத்தான் கூறுவதை இரண்டு முறை திருப்பிக் கூறினால்தான் தெரிந்து
கொள்ளுவான். அதேபோல், கொங்குநாட்டுக் கிராமத் தமிழன் தான் கூறுவதை
மூன்றுமுறை திருப்பிச் சொன்னால்தான், தர்மபுரியான் அறிந்து கொள்ள
முடிகிறது. உதாரணமாக, யாழ்ப்பாணத்தான், "அவர்கள் அப்பொழுதே வந்து
விட்டார்கள்' என்று கூறுவதை திருநெல்வேலியான், "அவா அப்பமே வந்தா'
என்பான்; கிராமத்தான், "அவியொ அப்பளையே வந்தாங்கோ' என்பான். இப்படி ஒரே
மொழி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறுவிதமாகப் பேசப்படக் காரணம் என்ன?
அவர்கள் ஒருவருக்கொருவர் சுலபத்தில் கலந்து கொள்ள வசதியான போக்குவரத்துச்
சாதனங்கள் இல்லாமையும், அவர்களைப் பிரித்து வைக்கும் மலைகள், ஆறுகள்,
சமுத்திரங்கள் உள்ளமையும் ஆகிய இவைதான் காரணம்.

நம் நாட்டில் சில மலைவாசிகள் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதும் தமிழ்
என்கிறார்கள். ஆனால், அவர்கள் கூறுவதை குறிப்புகளின் மூலம் புரிந்து
கொள்ள முடிகிறதே தவிர, விளக்கமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள்
ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில்தான் இருந்து வந்திருக்கிறார்கள். பின் ஏன்
அவர்கள் நம்மைப் போல் பேச முடியவில்லை? அவர்களை நம்மோடு தொடர்பு கொள்ள
முடியாமல் செய்த – அம்மலை வாசம்தானே காரணம்? அவர்களுக்கு வேண்டிய அளவு
ஏதோ குறிப்புகள் வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
நமக்கு வேண்டிய அளவு நாம் ஏதோ குறிப்புகள் வைத்துக் கொண்டு, நாம்
வாழ்க்கை நடத்துகிறோம். இதுதானே நமக்குள் உள்ள வித்தியாசம்? நம்முடன்
தொடர்புவைத்துக் கொண்டு அம்மலைவாசிகள் கொஞ்ச காலம் வாழ்ந்தால்,
நம்மைப்போல் அவர்களும் பேசுவார்கள் அல்லவா?

மற்றும், மொழியானது அந்தந்த நாட்டு சீதோஷ்ணத்திற்கேற்பவும்,
அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை பழக்க, வழக்க, பண்பு,
குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி செலவிடாமல்
சுலபமாய்ப் பேசக்கூடிய ரீதியிலும்,சில அதிக சக்தியை செலவிட்டு சிரமத்தோடு
பேசக்கூடிய ரீதியிலும் அமைந்திருக்கக் காண்கிறோம். உதாரணமாக,
வடமொழியிலுள்ள "ஹ' போன்ற சப்தங்கள் அடிவயிற்றிலிருந்து ஆள் துளைத்துக்
கொண்டு வருவதுபோல் ஒலிக்கிறது. அவர்கள் கொஞ்சிப் பேசிக்கொள்வதுபோல்
நமக்கு ஒலிக்கிறது. சீதோஷ்ண நிலையானது மக்களின் மொழியை அவ்விதம்
மாற்றியமைத்து வருகிறது. ஒரே மொழியை குளிர்ப் பிரதேசத்திலுள்ளவன் ஒரு
விதமாயும், உஷ்ணமான பாலைவனத்திலுள்ளவன் ஒரு விதமாயும் பேசுவதைக் காணலாம்.

உதாரணமாக, ஆங்கிலேயனை எடுத்துக் கொள்வோம். அவன் சாதாரணமாகக் குளிர்
தேசத்தில் வாழ்பவன். குளிரானது அவனுக்கு "ஹா', "ஹு' என்கின்ற – பெரும்
காற்றைத் தள்ளிக்கொண்டு உச்சரிக்க வேண்டிய சப்தத்தை இயற்கையாக உண்டாக்கச்
சுலபமாக அம்மொழியும், ஏன் – அதுபோன்றே வடமொழியும் பேசமுடிகிறது. ஆனால்,
என்னதான் அவன் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில்
இலக்கணக் குற்றமில்லாமல் பேசினாலும் ழ, ள இந்த சப்தங்களைச் சரியாக
உச்சரிக்க முடிவதில்லை...

அந்தந்த நாட்டு மக்கள் அந்தந்த நாட்டு மொழிகளை சரிவர உச்சரிக்க
முடிகிறதென்பதும், வேற்று நாட்டு மொழிகளைச் சரிவர உச்சரிப்பது அநேகருக்கு
கஷ்டமாயிருக்கிறதென்பதும், தம் நாட்டிற்கு ஒப்பான சீதோஷ்ணமுள்ள வேறு ஒரு
நாட்டு மொழியைத் தம்மால் சரிவர உச்சரிக்க முடிகிறதென்பதும் எதைக்
காட்டுகிறது? அந்தந்த நாட்டின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அந்தந்த நாட்டு
மக்களின் மொழி ஒலி அமைந்திருக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது? அந்தந்த
இடத்திற்கேற்பவும், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்பவும் மொழிகள்
பிரிந்திருக்கின்றன என்பது மேலே கூறியதிலிருந்து பெறப்படுகிறது.

இனியும் கவனிக்கும் பட்சத்தில் ஒரு மொழியில் சுலபமாக விளக்கக் கூடும் ஒரு
கருத்தை, மற்றொரு மொழியில் விளக்குவது வெகு கஷ்டமாயிருக்கும். அதாவது,
அந்தக் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய வார்த்தைகள் அம்மொழியில்
இருக்காது. காரணம் என்ன? அந்த மொழி பேசும் மக்களிடத்து, அந்தக் கருத்து
இருந்ததில்லை என்பதுதான். அந்தக் கருத்து அவர்களிடத்து ஏற்படவேண்டிய
அவசியமோ, தேவையோ இருந்ததில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக்
கிடக்கும் கருத்துகளைப் பொருத்துதான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள
கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்த மொழிபேசும் மக்களின்
நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.
உதாரணமாக, ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள சில பிரபலமான புத்தகங்களை
வாங்கிப்படித்தால், அவற்றில் காணப்படும் கருத்துகளைக் கொண்டே அம்மக்களின்
நாகரிகத்தின் முன்னேற்றத்தை, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் அறிந்து
கொள்ள முடிகிறது. ஒரு மொழியை ஏற்பதும், தள்ளுவதும் கூட பெரும்பாலும்
அந்தந்த மொழியின்பாற்பட்ட முன்னேற்றக் கருத்துகளைப் பொருத்துதான்
இருக்கிறது.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணமும் உண்டு. ஒரு
மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ,
அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக்
கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக்கூடியனவாகவும்,
எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இதுவுமன்னியில், மொழியின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும்
மிக முக்கியமாயிருக்கிறது. அரசாங்கத்தின் ஆதரவின்றேல் ஒரு மொழி எவ்வளவு
சிறப்புடையதாயினும், அதன் வளர்ச்சி மிகவும் தடைப்பட்டே நிற்கும் என்பது
கண்கூடு. ஆங்கில மொழிக்கு நம் நாட்டில் செல்வாக்கு ஏற்படக் காரணமே, அது
அரசாங்க மொழியாய் இருந்து வருவதுதான்.

இதுவரை, பொதுவாக "மொழி' என்பது பற்றியும் அதன் அமைப்பு, சிறப்பு,
வளர்ச்சி என்ற பலவான தன்மைகளைப் பற்றியும் ஒரு சிறிது ஆராய்ந்து
பார்த்தோம் . இனி, நமது தகைமைசால் தமிழைப்பற்றிச் சற்று விரிவாக
ஆராய்ந்து பார்ப்போம்.

"தமிழ்' என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொருத்து,
மக்களைப் பொருத்து – மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது
மொழியைப் பொருத்து நாட்டுக்கும், மக்களுக்கும், தமிழகம், தமிழ்நாடு,
தமிழர் என்கின்ற பேர் வந்ததா?' என்ற கேள்விகள் – தமிழைப் பொருத்தவரை
வித்து முந்தியதா? மரம் முந்தியதா? என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே
எனக்குத் தோன்றுகின்றன. எப்படி இருந்தாலும், தமிழ்நாடு, தமிழ்மக்கள்,
தமிழ்மொழி என்று மூன்று பண்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்றையும் முதல்
பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் தமிழ், தமிழ்நாடு, தமிழ்மொழி
என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றைக்
காணாதவர்களிடமிருந்து குறிக்கும்படியாக திராவிடம், திராவிடர்,
திராவிடமொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும்
பார்க்கிறோம்.

தமிழ்மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும்கூட தமிழைச் சேர்ந்ததே
என்றும்; அந்தக் கருத்தைக்கொண்டே "திராவிடம்' என்று பொதுவாகச்
சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும், ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன.
நாட்டிலும் இதை வெகுகாலமாகவே ஒப்புக்கொண்டு வழக்கத்திலும் கொண்டு
வந்திருக்கிறோம்.

வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும்
திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும்,
மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக்
காண்கிறோம். தேசம் சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள்
தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப் படுத்தப்பட்டு
வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆனால், தெலுங்கு நாட்டாராகிய
ஆந்திரர்களும், கன்னட நாட்டாராகிய கன்னடியர்களும், மலையாள நாட்டாராகிய
மலையாளிகளும் இதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் என்பதுபோல் – தமிழும் ஒரு மொழி என்றுதான் சொல்லுகிறார்களே ஒழிய,
இவையாவும் தமிழ்தான் என்பதை ஒப்புக் கொள்ள வெட்கப்படுகிறார்கள்; சிலர்
மறுக்கவும் செய்கிறார்கள்.

காரணம், அவர்களது மொழிகளில் ஆரியச் சொற்கள் பெரும்பான்மையாகக்
கலந்துவிட்டன. ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள்,
இடநெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு கூடி
வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில
நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து
வசதிக்குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும்
தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வடநாட்டிலிருந்து
வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள், தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல
மதத் தத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம்
கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும்படிச் செய்து, அதன்மூலம் தமது
கலை, ஆச்சார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்திவிட்டனர். அந்த வடமொழிக்
கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல்
காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி, தமிழ் அல்லாத வேறு
மொழியாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது
தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ
தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்கு
விதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்.
உதாரணமாக, இங்கு (சென்னையில்) "தோட்டத்திற்குப் போகிறேன் என்றால்,
வயலுக்கு, விளைநிலத்துக்குப் போகிறேன் என்று அர்த்தம், "கொல்லைக்குப்
போகிறேன்' என்றால், "கக்கூசுக்குப் போகிறேன்' என்று அர்த்தம்.
சோழநாட்டில் தோட்டத்துக்குப் போவதென்றால், கச்கூசுக்குப் போவதாகவும்,
கொல்லைக்குப் போவதென்றால் வயலுக்குப் போவதாகவும் அர்த்தம் செய்து
கொள்ளுவார்கள். ஒரே தமிழ்ச் சொல் இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருளில்
வழங்குகிறது. ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருந்தால், ஒவ்வொரு சொல்லும்
ஒரு மொழியாகிவிடுமா?

முன்பு – சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் மலையாளத்துக்கு வியாபார
விஷயமாய் சென்றபோதெல்லாம் நான் சிறிது அழுத்தியும், குறுக்கியும்,
மடித்தும் பேசிய தமிழை அங்குள்ளவர்கள் புரிந்து கொண்டுதான் இருந்தார்கள்.
நான்கு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த
மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையும் நீக்கிவிட்டுப் பார்த்தால்,
எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அநேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே
இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும்; அகராதி கொண்டு
மெய்ப்பிக்கவும் முடியும். சமீபகாலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ,
இலக்கியமோ இருந்ததில்லை.

தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ் சப்தத்தில்தான் நாலாயிரப்
பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்துப் பாடி
வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச்
சப்தத்தில்தான் அச்சிடப் பட்டிருக்கின்றன. கன்னடியர்களுக்கும்,
மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது. வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி
மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம்
தாய்மொழி "தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள்
என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுநர்கள்,
பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள்
என்பது, நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத்தமிழ்
மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான்
நடத்தினேன். அதாவது "தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப்
புகுத்தக்கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி
என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய
முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது;
எலும்புக்கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின்
எதற்காக? தமிழ் இந்நாட்டு சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய
நாட்டுப் பிற எம்மொழியையும்விட தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய
தமிழ் பேசுதல் – மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால்
நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம்
என்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.
வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு,
அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடு பயக்கும்
கருத்துகள் நம்மிடைப் புகுந்து, நம்மை இழிவடையச் செய்கின்றன
என்பதால்தான்.

வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை
அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது
தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி – தமிழைவிட மேலான ஒரு மொழி
இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத
அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல. இம்மொழியில் பாடி
அதிசயங்கள் விளைவித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், அந்தக் கருத்து
நமக்குத் தேவையில்லை. ஏன்? ஆயிரம் முதலையை வைத்துக்கொண்டுதான் பாடிப்
பாருங்களேன்; அவைகளில் எதுவாவது, தான் தின்ற ஒரு மீனையாவது கக்குகிறதா
என்று! அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது
அறியாமைதான்; அது தமிழ்ப்பண்புகூட அல்ல. தமிழில், மந்திரம், சக்தி முதலிய
சொற்களே இல்லை.

இதேபோல், தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய்
நம்மைப் பெற்றெடுத்ததும் நம்மைத் தெலுங்கன் வீட்டிலோ, துருக்கியன்
வீட்டிலோ விட்டிருந்தால் – நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியே பேசுவோமா?
அல்லது, நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம்
நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா? இன்னும் கவனிப்போம். நம் தாய்
குழந்தையாக இருந்தபோது பேசியதென்ன? "பாய்ச்சி குடிக்கி', "சோச்சி
தின்னு', "மூத்தா போய்', "ஆய்க்கு போ' என்றுதானே பேசியிருப்பாள்!
இப்போது நாம் பாச்சி, சோச்சி, மூத்தா, ஆயி – என்றா பேசுகிறோம்? இந்தக்
காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால்,
தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமை என்று தோன்றவில்லையா?

ஆதலால், ஒரு மொழியின் தொடர்பு நமக்கு நல்லதா கெட்டதா என்று
சிந்திக்கும்போது – நமது இடத்திற்கும், சீதோஷ்ணத்திற்கும்
பொருந்தியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பிறகு அம்மொழியிலுள்ள
கருத்துகள் நம் தன்மானத்தையும், மேன்மையையும், நலத்தையும், தகுதியையும்
காக்கக்கூடியதா? அதிகப்படுத்தக் கூடியதா? அவற்றைக் கெடுக்கக்கூடியதா?
என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, தமிழ்மொழியின் வடமொழி தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள,
ஏற்படப்போகும் கெடுதிகளைப் பார்ப்போம். நம்மிடையேயுள்ள சாதிப்
பிரச்சினையை எடுத்துக்கொள்ளுவோம். "சாதி' என்ற வடமொழிச் சொல்லைத்
தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று
கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே, வார்த்தை இல்லையே! ஆதலால், நம்
மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத்
தொடர்பால் தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே
இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.
இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்;
சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் – வடமொழியா? தமிழா?
இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும்
போனதா? சிந்தித்துப் பாருங்கள்.

தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்தபிறகுதானே நம் பெண்கள்
கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள்! அதன் பிறகுதானே, சிறிது சச்சரவு
நேர்ந்தது. தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து, "ஆமாம்மா! உன்னைக்
கன்னிகாதானம் செய்தாயிற்றே! உன்னை உன் புருஷனுக்குக் கொடுத்துவிட்டோம்;
தானம் செய்து விட்டோமே! இனி, உனக்கு இடம் அவன் இருப்பிடம் தானம்மா' என்று
கூறும் தகப்பன்மார்கள் தோன்றினார்கள்! கன்னிகாதானம் என்பதற்குத் தமிழ்
வார்த்தைஒன்று கண்டுபிடியுங்களேன். திருவள்ளுவர் "வாழ்க்கைத் துணை'
என்றுதானே கூறுகிறார். அதாவது, புருஷனும் மனைவியும் சிநேகிதர்கள்,
நண்பர்கள் என்றுதானே அதற்குப் பொருள். எவ்வளவு கருத்து வேறுபாடு
பாருங்கள். "மோட்சம்' என்பதற்குத் தமிழ் வார்த்தை ஏது? மோட்சத்தை நாடி
எத்தனைத் தமிழர் காலத்தையும் கருத்தையும், பொருளையும் வீணாக்குகிறார்கள்,
கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால்
ஏற்பட்டதுதானே மதவெறி? நெறி, கோள் என்றால் – வெறி ஏது?

"பதிவிரதாத் தன்மை' என்பதற்காவது தமிழில் வார்த்தையுண்டா? "பதிவிரதம்'
என்ற வார்த்தை இருந்தால் – "சதி விரதம்' அல்லது "மனைவி விரதம்' என்கின்ற
வார்த்தையும் இருக்க வேண்டுமே! இதுவும் வடமொழித் தொடர்பால் ஏற்றவினைதான்.
"ஆத்மா' என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூட
நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும்
புகுந்துவிட்டன? தமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண்,
பெண் இருபாலர்க்கும் சம உரிமை என்ற அடிப்படையின் மீதும், பகுத்தறிவு என்ற
அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம்.

நம் நாட்டு சீதோஷ்ண நிலையைப் பொருத்தும், கருத்துகளின் செழுமையைப்
பொருத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய
ஆசாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை.
அவற்றிற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள அவர்களது மொழியே அவர்களுக்கு
உயர்வானதாகவும், நமது மொழி அவர்களுக்குத் தாழ்வானதாகவும் தோன்றுவது
சகஜம். ஆனால், நாமும், அவர்கள் நம் மொழியை மட்டமாகக் கருதுகிறார்களே
என்பதற்காக, நம்மொழியை மட்டம் என்று கருதிவிடலாமா? அப்படிக் கருதி
வடமொழியை ஆதரிக்கப் புகுந்துதானே நாம் பல மூட நம்பிக்கைகளுக்கும், பல
இழிவுகளுக்கும் ஆட்பட்டுத் தவிக்கிறோம். வடமொழியில் நமக்குப் பெயர்
சூத்திரன். நாம் ஏன் சூத்திரர்கள் என்று இன்று கேட்க
ஆரம்பித்திருக்கிறோம். இதற்கு நம் தமிழ் மொழியிலிருந்து ஒரே ஒரு
ஆதாரமாவது காட்டட்டுமே! ஒன்று கூட இல்லையே! வடமொழியை எடுத்துக்
கொள்ளுங்கள். எவ்வளவு ஆதாரங்கள்? கடவுள் வாக்குகளே அதற்கு ஆதாரமாய்
வந்துவிடுமே! தற்போது தமிழில் வந்து புகுந்துகொண்ட வடமொழி வார்த்தைகளை
எடுத்துவிட்டால் – நம் குறைகள், தொல்லைகள் எவ்வளவு நீங்குமென்பதும்;
தொடர்பை ஏற்றுக் கொண்டால் எவ்வளவு இழிநிலைக்கு ஆளாக
வேண்டியிருக்கிறதென்பதும் புரிகிறதல்லவா?

வடமொழித் தொடர்பால் இன்னல்கள் ஒருவாறு மேலே விளக்கப்பட்டன. அதற்கு மாறாக
ஆங்கில மொழி தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள நன்மைகளையும், அம்மொழியிலுள்ள
கருத்துச் செறிவுகளையும் பாருங்கள். ஆங்கில மொழி நூல்களில் முன்னேற்றக்
கருத்துகள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவு நூல்கள்
ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. நமது வாழ்க்கை நிலையை உயர்த்திக்
கொள்வதற்கான பல அரிய மார்க்கங்களை ஆங்கில நூல்களிலிருந்தே நாம்
பெரும்பாலும் அறிந்து வருகிறோம். சுருங்கக்கூறின், "அடிமை வாழ்வே
ஆனந்தம்' என்று நினைத்திருந்த இவ் இந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை
வேட்கையை ஊட்டியதே ஆங்கில மொழி அறிவுதான் என்று கூறினால் மிகையாகாது.
ராஜா வேண்டாம், குடியரசுதான் வேண்டும் என்கின்ற அறிவு; சமதர்மம்
வேண்டும், சனாதனம் ஒழியவேண்டும் என்கின்ற அறிவு; ஆணும் பெண்ணும் சமம்
என்கின்ற அறிவு ஆகிய சகல அரசியல் – பொருளாதார முன்னேற்ற அறிவுக்
கருத்துகளையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது.

தந்தியையும், மின்சாரத்தையும், படக் காட்சியையும், ஆகாய விமானத்தையும்,
ரேடியோவையும், எக்ஸ்ரேயையும் அதுதான் அறிமுகப்படுத்தியதேயொழிய, நமது
தமிழ் மொழியோ அல்லது அதை அழிக்கவந்த வடமொழியோ அல்ல. வடமொழித் தொடர்பு
சாத்திர, புராண, இதிகாச மூடநம்பிக்கைகள் நம் பகுத்தறிவை அடிமைப்படுத்தின.
ஆங்கில மொழி நம்மை அவ்வடிமைத் தளையிலிருந்து விடுத்து, எதையும் நம்
பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார்க்கும்படிச் செய்தது. பகுத்தறிவுக்கு
ஒவ்வாத, பிரத்யட்ச அனுபவத்திற்கு ஒவ்வாத, சரித்திர காலத்திற்கு உட்படாத
எதையும் ஒதுக்கித் தள்ளும்படிச் செய்தது. ஆங்கில மொழிதான் அதைப் பேசிய
மக்களைத் தமிழைக் காட்டிலும் வெகு வேகமாக அறிவு உலகத்தை நோக்கி அழைத்துச்
செல்கிறது. ஆங்கிலேயன் சந்திரகிரகத்தினிடமிருந்து ஒலி கேட்கிறான்;
வடமொழியான் இங்கு அதில் ஈரேழு பதினாலு லோகங்களைக் காட்டித் திவச மந்திரம்
படிக்கிறான். எவ்வளவு வேற்றுமை பாருங்கள்! காரணம் என்ன? நம் மக்களுக்கு
புத்தியில்லையா? அல்லது, நம் மூளை களிமண்ணால் செய்யப்பட்டதா?
அப்படியொன்றும் இல்லையே!

அறிவு வளர்ச்சிக்குப் பெரும்பாலும் சுற்றுச் சார்புதான் காரணம். ஒரே
தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும், ஒன்றை
இங்கிலாந்திலும் வளர்த்துப் பாருங்கள்; இதனுண்மை விளங்கும்.
இங்கிலாந்தில் வளர்ந்த மகன் இந்தியாவில் வளர்ந்த மகனைவிடப் பல மடங்கு
அறிவு விசாலம் அடைந்தவனாயிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும்
விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான்; இவன் எதையும் மதக் கண்கொண்டு
பார்ப்பான். அவனவன் வளர்ந்த இடத்தில் உள்ள பழக்கவழக்கங்களை ஒட்டி
அவனவனுடைய அறிவுத் தன்மையும் மாறுபட்டிருக்கிறது...

தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது
வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந்நோய்க்கு
முக்கியக் காரணம், மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான்.
தமிழ் சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும்,
வடமொழிக் கலைகளும் அதிகமாகத் தமிழ்நாட்டில் புகத் தொடங்கின. தமிழ்
மன்னர்கள் ஆரிய மதத்தை ஏற்றுக் கொண்டதால், அம்மதக் கருத்துகளை விளக்கத்
தமிழில் சொற்கள் இல்லாதது போகவே, அதிகமாக வடமொழிச் சொற்களைக் கையாள
ஆரம்பித்தனர். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால்,
நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும். மதத்திற்கு
ஆதாரமாயிருந்து வருவனவெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய, தமிழ் மொழி
நூல்களில், தற்சமயம் நம் நாட்டில் இருந்துவரும் மதத்திற்கு எவ்வித
ஆதாரமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இம்மதம் ஒழிய, பெரும்பாலும் பழைமை விரும்பிகளான பண்டிதர்களே பெருத்த
தடையாக இதுகாறும் இருந்து வந்திருக்கிறார்கள். தமிழைக் கெடுத்தவர்கள்,
தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்
பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப்போல்
உச்சிக்குடுமி வைத்துக்கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு,
கவைக்குதவாத கட்டுக் கதைகளை நம்

குழந்தைகளுக்குப் போதித்துவிட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதைவிட்டு
– நம் குழந்தைகளுக்குத் திருவிளையாடற்புராண அறிவையும், தேவார – திருவாசக
அறிவையம், பாரத – ராமாயண அறிவையும் பரப்பிவிட்டனர்; சிந்திக்கத்
தவறினார்கள். சிலப்பதிகாரத்தைத் தலைசிறந்த நூலென்று இன்றும் போற்றி
வருகிறார்கள். அதில் கண்ணகி என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத்
திருகி எறிகிறாள், கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றிக் கொள்கிறது. இதுதான்
அவளுடைய கற்புக்கு எடுத்துக்காட்டு.

இன்று எந்த ஒரு பெண்ணாவது, அவள் எவ்வளவுதான் கற்புடைய கன்னிகையாயிருந்த
போதிலும் இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா? எங்காவது இம்மாதிரிக்
காரியம் நடந்திருக்குமா? நடக்குமா? அந்தச் சமயத்திலும் அவள் நெருப்புக்கு
ஆணையிடுகிறாள், "பார்ப்பனரை அழிக்காதே' என்று. பார்ப்பனரை அழிக்காதே
என்று ஆணையிடுபவள் ஆரியப் பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா?
நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக
வாழ்ந்த காலத்தில், கப்பலோட்டி வாணிபம் நடாத்திய தமிழர் மரபில் – இன்று,
ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு
மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பழைமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப்
புதுமொழியாக்க முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நம் மொழியில் இல்லாத ஒரு கருத்தை, நம் மொழியில் ஏற்க வேண்டிய அவசியம்
ஏற்படும்போது, அக்கருத்துக்குண்டான வார்த்தைகளைத் தோற்றுவிப்பதில், நாம்
மிக ஜாக்கிரதையாகப் பணியாற்ற வேண்டும். நாம் கண்டுபிடிக்கும் அல்லது
உண்டாக்கும் வார்த்தை, நாம் கூறவேண்டிய கருத்தைத் தெளிவாகவும், விளக்கம்
செய்வதாகவும், சுலபமாக உச்சரிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
உதாரணமாக "காப்பி' என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். இப்போது நம்மில்
பெரும்பாலோர்க்கு இந்த பானம் அவசியமாகிவிட்டது. நமது மொழியில் இதற்கு
வார்த்தை கிடையாது. இப்போது அதற்கு வேறு வார்த்தை உண்டாக்குவதைவிட,
வழக்கில் இருந்துவரும் அதே வார்த்தையை நாம் தமிழில் ஏற்றுக் கொள்ளலாம்.
நமக்குத் தேவையான விஞ்ஞானக் கருத்துகளுக்கு வேறு வார்த்தைகளைக்
கண்டுபிடிக்கும்போதும், ஆங்கில வார்த்தைகள் தமிழ் மொழி உச்சரிப்புக்குச்
சுலபமாக இருக்குமானால், அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நலமாகும்.

கலைச்சொல் நிர்மாணக் கமிட்டியார் கண்டுபிடித்துள்ள வார்த்தைகளைப்
பாருங்கள். Electrolysis, Hydrogen, Disinfectantt என்பவற்றிற்கு, முற
குலோத்துங்கன்
எதற்காக எர்ணாகுளம் சென்றார்கள் என்று நான் நீங்கள் சொல்லும் முறையில் சொல்லமுடியாது;இடையில் வார்த்தைகளை உறுவிப்பேசும் வழக்கமே தவறு.பாதிக்கப்பட்ட மக்களை அவர்களுக்கு அப்போது தேவையானதை செய்ததோடு அமைப்புகள் நின்றுவிட்டன எநதான் நான் சொல்லவந்தேன்.நீங்கள் உங்கள் கருத்தை வலியுருத்தவேண்டி,கொடுமைக்கு ஆளான அந்த மக்களின் போராடும் குணத்தையும்,அவர்களின் அமைப்பையும் கேவலமாக’’பிரியாணிக்கு என்று கீழ் நிலைக்கு கொண்டுவந்தது சரியல்ல.’சம்பவத்திற்குப் பிறகு..’,என்று நான் சொன்னதை,அவர்கள் எர்ணாகுளத்திற்கே ‘போராடப் போனார்கள்’,என்பதாக கொள்கிறீர்கள்.நீங்கள் என்னைவேண்டுமானாலும்’போடா,உங்க..’,என சாலை சண்டைக்காரர்களின் மொழியில் வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள்;வெண்மனி சம்மந்தமாகப் பேசும்போது அம்மக்களையோ,அன்று அவர்களுக்குத்துனையாக நின்ற,காங்கிரஸ் கட்சி தவிர்த்த எந்த அமைப்பையுமோ குறைசொல்லவேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.மற்ற பகுதிகளுக்கும்,கீழத்தஞ்சைக்குமான அரசியல் நிலைப்பாடு வேறு வேறு என்ற உண்மை நிலை வெளியில் தெரியாது.அதனால்தான் எம்.ஜி.ஆர்.ரசிகர்மன்றத்தோழனும் கூட கொதிப்பைந்திருந்தான்,என்பது வெளியில் மறைக்கப்பட்டது.இனி அது சம்மந்தமான விபரங்களும் வெளிவரும் காலம் தான்.எல்லாம் செய்தவர்கள்,இதைச்செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்பதுபோலத்தான் கம்யூனிஸ்டு கட்சியின்மீதான எனது விமர்சனம் இருக்கும்;அவர்கள்,ஒன்றுமே செய்யவில்லை என்றோ,அவர்களைத்தவிர்த்த வேறு எவருமே ஒன்றும் செய்யவில்லை என்றோ உண்மை சொல்லவேண்டும் என நினைப்பவர்கள் சொல்லமுடியாது.வணக்கம்.
Guest
தோழருக்கு,எனது அறிவுசக்திக்குமீறி நான் விளக்கமளிக்க முயற்சித்திருக்கிறேன் என்றே கருதுகிறேன். ஒரு சிறு விளக்கம் மட்டும் அவசியம் கருதி சொல்லவேண்டியதாக இருக்கிறது.''கீழ்வெண்மனி'',சம்பவங்களுக்கு முன்னால்---அதாவது திருத்தல் வாதத்திற்கெதிரான நிலைப்பாடெடுத்து,உட்கட்சிப் போராட்டம் முற்றியிருந்த நிலையில்,கம்யூனிஸ்டு கட்சி இருந்தது;அதே காலகட்டத்தில்,காங்கிரசு கட்சியை ஆதரிக்கச் சொல்லி பெரியார் சொல்லுகிறார்;காமராஜருக்கான ஆதரவு என்பதாக,நிலை எடுக்கிறார்.இந்த முடிவானது மற்ற இடங்களுக்குப் பொருந்துவதுபோல இருக்கலாம்;ஆனால் கீழத்தஞ்சை மாவட்டத்தில் அது இயலாது போனது.காரணம் இப்பகுதியில் பண்ணை ராஜ்ஜியங்கள்தான் நடந்தன- -அனைத்துப் பண்ணையார்களும் காங்கிரசுக்காரர்களாகவே இருந்தார்கள்.இந்த நிலைப்பாடு பிடிக்காத ஒருசிலர் கம்யூனிஸ்டு இயக்கத்திற்குப் போயினர். அப்படிப் போனவர்கள் திராவிட விவசாயத் தொழிலாளர்களே. தவறில்லையே; ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளவர்கள் ஒடுக்குபனையே ஆதரிக்க முடியாதில்லையா/வெளியேறினார்கள். பெரியார் காமராஜரை ஆதரிக்கும் முடிவு மாநிலம் தழுவிய நிலைப்பாடு. ஆனால் கீழத்தஞ்சையில் நிலைவேறு. அப்படிப் போனவர்கள் பற்றியெல்லாம் விரைவில் அறியலாம். அப்போது முதற்கொண்டு தமிழ் நாடு விவசாய சங்கம் வளர்ந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து வெண்மனிக் கொடுமை நிகழ்ந்தது. அப்போது விவசாயத் தொழிலாளர்கள்[பிற்படுத்தப்பட்டவர்களையும் சேர்த்துத்தான்} அனைவருக்கும் ஒரே ஒரு எண்ணமே மேலோங்கியிருந்தது. அப்போது யாரும் எந்தக் கட்சிக்கும் போகவில்லை; எந்தக் கட்சிக்கும் அப்படி ஒரு எண்ணமும் இல்லை. ''தோழருக்கும்'' வாசித்தவர்களுக்கும், எந்தத் தகவலையும் மேடைப்பேச்சில் வெளிப்படுத்தி கைதட்டல் வாங்குவோருக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அனைத்திற்கும் நன்றியுடன்...வணக்கம்.
Periyasamy
"தமிழ் – காஷ்மீர் முதல் குமரி வரை பேசப்பட்ட மொழி; அது இந்தியாவின் தொல்குடிகளான திராவிடர்கள் பேசிய மொழி' என்று எடுத்தியம்பிய டாக்டர் அம்பேத்கரும்; "

குலோதுங்கன் அப்பு! சூப்பர் அப்பு. அம்பேத்கார் எல்லாம் உங்ககிட்டேயே பிச்சை வாங்கணும். இல்லைனா உங்க வாழும் வள்ளுவத்துக்கிட்டேயாவது பிச்சை வாங்கணும்.

தமிழுணர்வை பற்றி பேசும் போது இந்த நாலணா தமிழறிஞர்களை பற்றியும் நாம் பேச வேண்டும். நம் ஊர் தமிழறிஞர்களில் மிகப்பலருக்கு ஒரு இழவும் தெரியாது. இவர்களுக்கு அறிவியல் பூர்வமாக மொழியை அணுகும் முறை தெரியாது. மற்ற மொழிகள் குறித்தோ கலாச்சாரங்கள் குறித்தோ கொஞ்சமும் புலமை கிடையாது. வெற்றிலையை குதப்பிக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்து அடுக்கு மொழி அலங்கார வசனம் பேசி ‘கப்ஸா’ விடும் ரகம் இவர்கள் எல்லாம். இந்த தமிழறிஞர்கள் அனைவரும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் கும்பல். ஆந்திர மாநிலத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள். “தெலுங்கு தேட்ட (தேன்), கன்னட கஸ்தூரி, அரவமு (அதாவது தமிழ்) அர்தவானமு (வெறும் ஓட்டை!)”. இந்த பழமொழிக்கு தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கும்பல் என்ன பதில் சொல்லப்போகிறதோ தெரியவில்லை. மட்டுமல்லாமல் தமிழகத்தில் பேச்சு வழக்கில் இருக்கும் தமிழை ”dabbaa language” என்று வெளியாட்கள் குறிப்பிடுவார்கள். ஈழத்தமிழ் வழக்கு கொஞ்சம் இனிமையானது என கேள்விப்பட்டிருக்கிறேன். கொஞ்ச காலத்துக்கு முன்னர் தன் குடும்ப வளர்ச்சி அரசியலுக்காக ஒரு அரசியல்வாதி ‘தமிழ் மாநாடு’ என்னும் பெயரில் பெரும் செலவு செய்து ஒரு கூத்தை கோவையில் பல நாட்கள் அரங்கேற்றினார். அந்த கூத்து தொடங்குவதற்கு முதல் நாள் அவர் தொலைக்காட்சியில் தோன்றி “தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்” என்று ஒரு அபத்தத்தை பேசினார். இந்த அபத்தம் ’டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் அப்படியே செய்தியாக வெளியாகி பின்னூட்டங்கள் வழியே சந்தி சிரித்தது. உண்மையை சொன்னால் தமிழ் திராவிட மொழிகளுக்கே (கன்னடம் மற்றும் தெலுங்கை பொறுத்த மட்டில்) தாய் கிடையாது. பண்டொரு காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு திராவிட மொழியை மக்கள் பேசினார்கள் என்று கூறுவார்கள். அந்த பழைய திராவிட மொழியானது காலப்போக்கில் வட, நடு மற்றும் தென் பிரிவுகளாக பிரிந்தது. அப்படி பிரிந்த நடு திராவிட மொழியில் இருந்து தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் உருவாயின. தென் திராவிட மொழியில் இருந்து தமிழ், கன்னடம், துளு ஆகிய மொழிகள் உருவாகி பிரிந்ததாக கூறுவார்கள். இங்கே உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக தமிழ் எங்கே வந்தது? தமிழுக்கு இருக்கும் பெருமையெல்லாம் மூன்று. ஒன்று, தமிழ் மொழியானது தான் இருந்து பிரிந்து வந்த தென் திராவிட மொழியை இயல்பில் ஒத்தது (ஒரு தாய்க்கு பல பிள்ளைகள் இருந்தாலும் ஒரே ஒரு பிள்ளை மட்டும் அசப்பிலும் இயல்பிலும் தாயைப்போல இருந்தால் எப்படி இருக்கும்?). இரண்டு, தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட முறையான மற்றும் தொடர்ச்சியான இலக்கண, இலக்கிய மரபு உண்டு. உலகத்தில் சில மொழிகளுக்கு மட்டுமே இந்த பெருமை உண்டு. மூன்று, முடிந்த வரை வட மொழி தாக்கத்தை தவிர்த்து தன் தனித்தன்மையையும் திராவிடத்தன்மையையும் முடிந்த வரை காப்பாற்றிக்கொண்ட மொழி தமிழ். கன்னடம், தெலுங்கு ஆகியவற்றுக்கு இந்த யோக்கியதை கிடையாது. அவ்வளவு தான் விஷயம். இங்கே தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் எப்படி தாய் ஆனது? ஜப்பானிய தமிழறிஞர் பேராசிரியர் கரஷிமா அவர்கள் “Tamil Nadu is suffering from intellectual vacuum” என்று சும்மாவா சொன்னார்?.


அப்புறம் இந்த லெமூரியா கண்டம் ‘கப்ஸா’. முன்னொரு காலத்தில் இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பெரும் நிலப்பரப்பு ஆஸ்திரேலியா வரை நீண்டு இருந்ததாம். அது தான் ‘லெமூரியா கண்டம்’ என மேல் நாட்டு அறிஞர்கள் சொல்லி விட்டார்களாம். அந்த லெமூரியா கண்டம் தான் சங்க இலக்கியத்தில் காணப்படும் குமரிக்கண்டம் என்று இந்த கும்பல் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பிதற்றி திரிகிறது. இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் புவியியல் துறை சார்ந்த அறிவியலில் என்ன முன்னேற்றம் நடந்தது. லெமூரியா கண்டம் கோட்பாடு புவியியல் துறை சார்ந்த அறிஞர்களால் கழித்துக்கட்டப்பட்டது என்பது இந்த கும்பலுக்கு தெரியுமா என தெரியவில்லை. அப்படியே லெமூரியா கண்டம் இருந்தது உண்மை என ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் அது இருந்ததாக சொல்லப்படும் காலம் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னர். ஆனால் மனித இனம் தோன்றியது வெறும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்குள் தான். அதிலும் நாடு, நகரம் என அமைப்புக்களை ஏற்படுத்தி மனித இனம் நாகரீகத்தோடு வாழத்தலைப்பட்டது கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாகத்தான். இதிலே லெமூரியா கண்டம் எங்கே வந்தது? வேண்டுமானால் “கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி“ என இன்னொரு கப்ஸாவை அள்ளி விடலாம், நம்புவதற்கு தமிழ் நாட்டில் ஆட்கள் இருப்பதால். உலகத் தமிழ் மாநாடு கூத்தில் லெமூரியாவை ஆராய நிதி வேறு ஒதுக்கப்பட்டிருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
தென்னரசு
மிக தெளிவான கருத்தியல்....
[email protected]
திரு குலோத்துங்கன்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், 1989இல் இருந்தே பெரியார் குறித்த தனது திறனாய்வுகளை முன் வைத்து வருகின்றார். இன்று கூறும் அளவிற்கு, அன்றையத் திறனாய்வுகள் கூர்மைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், திறனாய்வு இல்லாமல் எந்த ஒரு மனிதரையும் நாங்கள் தனிநபர் வழிபாடு செய்வதில்லை.

தமிழுக்கும், தமிழருக்காகவும் தான் திராவிட இயக்கங்கள் பாடுபட்டன என்று கூறும் பலரும், கடந்த 40 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் அதிகாரத்தில் கோலோச்சியத் தமிழகத்தில் தமிழ் ஏன் கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக, வழக்கு மொழியாக கோலோச்சவில்லை என்பதற்கு பதில் கூற மறுக்கின்றனர்.

திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடும் போது, அக்கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று சொல்லி தான் அண்ணா அக்கோரிக்கையைக் கைவிட்டார். அந்த காரணங்கள் இன்னும் அப்படியே உள்ளதே, அதற்கு திராவிட இயக்கங்கள் என்ன செய்தன?

இவற்றையெல்லாம் விட, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில், தமிழீழத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட போது, இந்திய அரசோடு கூடிக் குலவிய திராவிடக் கட்சிகள் மீதான நம்பிக்கை அடியோடு அகன்றுவிட்டது தான, பெரியார் மீதான திறனாய்வுகள் கூர்மையாகத் தலைதூக்க முக்கியக் காரணமாக உள்ளன.

எனவே, பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீதுமானத் திறனாய்வுகளில் எது உண்மை எது பொய் என்று வேண்டுமானால் பேசுங்கள். அதில் தவறில்லை. ஆனால், பெரியாரும், திராவிட இயக்கமும் விமர்சிக்க் கூடாத புனிதப் பிம்பங்கள் என கட்டமைக்காதீர்கள்.

நன்றி!

தோழமையுடன்,
க.அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
Livi
The Tamil typing version is not working in this web site, so I am compelled to type my view in English.

1) There are many Tamil National periyavarakal did wonders in our living land Today's Tamil Nadu (throughout the world) than the so called Periyar.
2) Periyar did everything for his and his associates benefits, for the society he did very little.
3) The Tamil National Periyavarkal never advertise themselves and their work, but they are achievers. For example Vaikunta .... etc
4) Dravidian parties like DMK, ADMK, MDMK....etc all worked and working against Tamilians.
5) In addition to the above all Indian parties like Congress, BJP, All Communists also working against Tamilians and their development.
6) At this juncture we need to live as like our glorious days.
7) This is the time we need to awaken ourselves and do good for the society to remove all Dravidian and Indian parties from power in our land.
8) We know how to rule us, we Tamilians must rule us other crushers must be removed from the power.
9) Publicly we don't have that power as of now, we need to capitalise to bring the truth befor the people.
10) We can do wonders in the world if we are allowed to live peacefully without any preplanned agenda as executed in medias like Hindu, Dinamalar, SunTV etc. In stead of telling the truth these media bring their own news and agenda to the people. This need to be identified first and we need to comnpletely reject these media first for our development.
durai ilamurugu
அய்யாமார்களே ! தமிழ்த்தேசியம் என்பது பார்ப்ப்னர்களின் பதுங்குகுழி என்ற் சிறு நூலொன்று அண்மையில் வெளிவந்துளது அதை எழுதியவர் திருச்சி பெரியார் த்ததுவமையம் திரு சரவணண் த்ஞ்சை தமிழ்த்தேசியக்கட்சிகளின் கட்டமைப்பை நோக்குங்கள் அதன் பதவிகளில் இருப்ப்வர்களின் சாதிகளை நோக்குங்கள் அதில் எத்தனை விழுக்காடு தலித்துகள் உள்ளனர் என்பதையும் நோக்குங்கள் . கட்சிக்கு பல நாட்கள் எந்த தொடர்பும் இல்லாத த்லைவர்களின் "வாரிசுகள்" கட்சியின் பத்திரிக்கைகளில் ப்க்கம் ப்க்கம் ஆக எழுதிக் குவித்து பேர் வாங்கி, பின் அற்புத்மான திரைப்ப்படம் எடுத்து, மேல் சாதிபெண்ணை காதலித்து திருமனம் செய்து இப்படியாக தமிழதேசியத்தைவள்ர்த்துவிட்டார்கள். அது போக தில்லைஅம்பல்ப்,படிக்கட்டுக்களில் ஏறி தேவரம் பாட ஒரு சாமியாரை த்தூக்கிபிடித்து போராட அவர் பின் கருணானிதியிடம் பண்முடிப்புபெரற்றுக் கொண்டு ஒதுங்கிக் கொண்டார் ! பார்ப்பன அடிவருடி ராசராசசோழனை தங்கள் இனசின்னமாகப் போற்றுமிவர்கள் ப்ரமக்குடி. தருமபுரி என்றால் ஒரு அறிக்கையுடன் நிறுத்திக் கொள்வார்கள். தில்லை அம்ப்பலப்,படி ஏற வேண்டும் என்றால் தொடர்போராட்டம் நடத்து
வார்கள் கர்னாகக் காரன் எப்போது தண்ணீர் தரமறுப்பான் என்று காத்திருந்து பிறகு அறிக்கை விட்டுபோராட்டம் நடத்துவார்கள் அதிலும் நடுவண் அரசிமீதும் கருணானிதியின்மீதும்தான் தீவிர தாக்
குதல் இருக்கும் , பார்ப்பனிய பெண்மனி யைப்பற்றிய விமர்சனம் பட்டும் படாமல் இருக்கும் ! தமிழ்த்தேசியம் என்பது பார்ப்பனியத்தின் மற்றுமொரு முகமே அதை மேல்தட்டு.ஆதிக்க,சாதி இந்து தலைவர்கள் பூசிக்க்கொள்ளுகின்றனர். அரிதாரம் க்ளையும் நேரம் வரும்
viyasan
ஆரிய‌ப் பார்ப்பாத்தி த‌ண்ணீர் கேட்டுப் பேச்சுவார்த்தை ந‌ட‌த்திய‌தால் ஆத்திர‌ப்ப‌ட்டோ என்ன‌மோ ச‌க‌ திராவிட‌ர்க‌ளாகிய‌ க‌ன்ன‌ட‌ர்க‌ள் த‌மிழ்நாட்டுக்குத் த‌ண்ணீர் த‌ர‌ம‌றுத்து விட்டார்க‌ள் போலிருக்கிற‌து. அத‌னால் திராவிட‌ச்சகோத‌ர‌ர்க‌ளாகிய‌ க‌ன்ன‌ட‌ர்க‌ளிட‌ம் பேசுவ‌த‌ற்கு, திராவிட‌ம் தான் த‌மிழ‌ர்க‌ளின் அடையாள‌ம் என்ப‌தை ஆணித்த‌ர‌மாக‌ எடுத்துரைக்க‌த் தய‌ங்காத‌வ‌ர்க‌ளும், ஏனைய‌ "திராவிட‌ர்க‌ளாகிய‌" க‌ன்ன‌ட‌ர்க‌ள், தெலுங்க‌ர்க‌ள், ம‌லையாளிக‌ள் த‌ம்மை திராவிட‌ர்க‌ள் என‌ அடையாள‌ப்ப‌டுத்துவ‌தை விரும்பாது விட்டாலும் கூட‌, அவ‌ர்க‌ளையும் திராவிட‌ர்க‌ளாக்கி த‌மிழ‌ர்க‌ளின் த‌லையில் கட்டி அழ‌கு பார்ப்ப‌வ‌ர்களுமாகிய‌ திராவிட‌வீர‌ர்க‌ளின் ஒரு குழுவின‌ரை திரு,கீற்று ந‌ந்த‌னின் த‌லைமையில் கர்நாட‌காவுக்கு அனுப்பினால் திராவிட‌ச்ச‌கோத‌ர‌ர்க‌ளாகிய‌ க‌ன்ன‌ட‌ர்க‌ள் த‌மிழ்நாட்டுக்குத் த‌ண்ணீர் திற‌ந்து விடுவார்க‌ள் என்ப‌து நிச்ச‌ய‌ம். ம‌ற‌ந்து விடாம‌ல் இந்த‌ நூலையும் க‌ன்ன‌ட‌த்தில் மொழிபெய‌ர்த்து இல‌வ‌ச‌மாக‌க் கொடுத்தால் த‌மிழ்நாட்டில் இனிமேல் ப‌யிர்க‌ளும் வாடாது த‌ண்ணீர்ப்ப‌ஞ்ச‌மும் இருக்காது. :-))
manivannan
நான் நிரைய தமிழ் பத்திரிக்கைகலை வாசித்திருக்கிரேன் .இப்படி ஒரு விமர்சன கருத்துக்கலை நான் படித்ததில்லை.இப்போது நான் கீட்ரின் வாசகபனாகிவிட்டேன்.னன்ட்ரி
kavi
‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தின் வரலாற்றுச் சூழலை விளக்கிய தோழர் எஸ்.வி.இராசதுரை அவர்களும் தோழர் வ. கீதா அவர்களும், ‘திராவிடம்’ என்ற சொல் பற்றியும் ‘திராவிடர்’ என்ற சொல் பற்றியும் கீழ்க்கண்டவாறு அலசுகின்றனர்,

'இங்கு ‘திராவிடம்’ என்ற சொல் பற்றிய சில செய்திகளைக் கூறுவது அவசியமாகிறது. அச்சொல்லை உருவாக்கியவர்கள் பெரியாரோ, சுயமரியாதை இயக்கத்தினரோ, திராவிடக்கழகத்தினரோ, தி.மு.க.வினரோ, ஏன் நீதிக்கட்சி யினரோ கூட அல்ல. இது குறித்து அறிஞர் இராம. சுந்தரம் கூறுவதாவது':

‘கால்டுவெலுக்கு முன்பே ‘திராவிட’ என்கிற சொல் தென்னிந்தி யர்களை/தென் மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. குமரிலபட்டர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு) ‘திராவிட பாஷைகள்’ பற்றிக் குறிப்பிடுகிறார். (டட்யத ட்ரவிடடி ப்ஹசயம் எவ.... ஸொ இன் தெ ட்ரவிடிஅ அன்ட் ஒதெர் லஙுஅகெச்)மனுஸ்மிருதியில் திராவிட இனம் பற்றிய குறிப்புண்டு. கிரியர்சன் , ‘தனக்குத் தெரிந்த மட்டில் ஹாட்சன் என்பவர்தான் ‘ட்ரவிடிஅன்’ என்ற சொல்லை முதன் முதலாகத் தென்னிந்திய மொழிகளை குறிக்கப் பயன்படுத்தி யதாக’க் கூறுகிறார். 1816 இல் வெளியான ஆ.ட்.சம்ப் நெல்ல் - இன் தெலுங்கு மொழி இலக்கண நூல் முன்னுரையில் எல்லீஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ முதலிய மொழிகளைத் ‘தென்னிந்திய மொழிகள்’ என்று குறிக்கிறார். சமஸ்கிருதம் தொடர்பாக நூல் எழுதிய ஆசிரியர்களும் ‘திராவிட’ என்ற சொல்லை இனம்/மொழி தொடர்பாகக் குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது. எனவே என்று சொல்லுவதை விட, அவரே கூறுவது போல, என்பது பொருந்தும். எனினும், இந்தச் சொல்லை -‘திராவிட’ என்ற சொல்லை-வரையறுத்த பொருளில், பயன்படுத்தி உலகெங்கும் பரவச் செய்த பெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை’.

(லிஙுஇச்டிச் ஸுர்வெய் ஒஃப் ஈன்டிஅ. வொல்.1)
(ட்ர். ஹொட்க்சொன்)
(டிஅலெச்ட்ச் ஒஃப் ஸொஉத் ஈன்டிஅ)
சல்ட்நெல்ல் சொஇனெட் தெ டெர்ம்
தெ நொர்ட் ஈ ஹவெ சொசென் இச் ட்ரவிடிஅன் ஃப்ரொம் ட்ரவிட, தெ அட்ஜெச்டிவல் ஃபொர்ம் ஒஃப் ட்ரவிட’
kavi
ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் தமது திராவிடமென்றால் என்ன என்ற நூலில்,

‘மொழி தொடர்பாகவே திராவிடம் என்னும் பெயரை உலகம் அறிந் துள்ளது. திராவிடம் என்னும் இனத்தில் முன்பின் இருபது மொழிகள் அடங்கும். அவைகளுள் நான்கு மொழிகள் தமது பழைய இலக்கியங் களைக் குறித்துப் பெருமை கொள்ள முடியும். இவைகளுள் தமிழ் மொழியில் மாத்திரம் இந்தியாவின் எல்லையையும் கடந்து சென்றுள்ள குறள் போன்ற பழைய இலக்கியங்கள் உள்ளன. திராவிடம் என்னும் பெயர் எங்கு நின்று வந்தது? அதன் ஆதிப் பொருள் யாது?'

'இப்பெயர் முதல் முதல் குமாரிலபட்டர் காலத்தில் (கி.பி.7 அல்லது 8 ஆம் நூற்றாண்டு) திராவிட நூல் வழக்கில் காணப்படுகிறது. அவர் தென்னிந்தி யாவின் கிழக்குக் கரையில் வழங்கும் தெலுங்கு, தமிழ் மொழி களைக் குறிக்க ‘ஆந்திர திராவிட பாஷா ’எனக் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர, திராவிட என்னும் சொற்களின் பொருளை அறிவதற்கு இந்தியாவின் தெற்கே வழங்கும் கன்னடம், மலையாளம் என்னும் பெயர்ப் பொருள்களைப் பற்றியும் நாம் ஆராய்தல் வேண்டும். இவ்விரண்டு பெயர்களும் இட சம்பந்தமாக வழங்கப்பட்டுள்ளன. கனரா, கன்னடா அல்லது கர்நாடக என வழங்கும் பெயர் கர்நாட அல்லது கர்நாடக என்று ‘பிரிகற் சம்கிதை’யில் எழுதப்பட்டுள்ளது. இப்பெயர் பஞ்சு விளைவதும் தேக்குச் செழித்து வளர்வது மாகிய கரிய பூமியைக் குறிக்கின்றது. மலையாளம் என்பதற்கு மலைநாடு எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். மலையம் என்பது மலையைக் குறிக்கின்றது. ஆகவே கன்னடம், மலையாளம் என்னும் பெயர்கள் இடங்களைக் குறிக்க வழங்கிய பெயர்கள் என்றும் அவை வட மொழிப் பெயர்கள் அல்ல என்றும் விளங்கும். இதனால் முற்கால மக்கள் திராவிடம் என்னும் பெயரையும் அவ்வகையில் பயன்படுத்தினார்கள் என்பது தெளிவாகின்றது’.

அய்யோ !அய்யோ!! ந.சி.கந்தையா பிள்ளை நம்மை இப்படி கந்தல் கந்தலாக பிய்த்து எடுக்கிறாரே என்று அங்கலாய்க்கிறார்கள் பெ.மணியரசனும் பேராசிரியர் செயராமனும். ஆனாலும் ந.சி.கந்தையா பிள்ளை அவர்களை விடுவதாயில்லை. மீண்டும் தொடருகிறார்....

'அசோகரின் கல்வெட்டுகளுக்கு முற்பட்ட ஐதரேயப் பிராமணத்தில் ஆந்திரம் என்னும் சொல் தெலுங்கு நாட்டையும் தெலுங்கு மொழியையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. இலக்கிய கால ஆசிரியராகிய பிளினி அதனை ஆந்திரே எனக் குறிப்பிட்டுள்ளார். குமாரிலபட்டர் ஆந்திர மொழியைத் தெற்கே உள்ள தமிழோடு தொடர்புபடுத்தியுள்ளார். தமிழர் தெலுங்கர் என்பதை தெலிங்கர் என்றும், அவர்களின் மொழியைத் தெலுங்கு அல்லது தெலுங்கம் என்றும் வழங்கினர். தெலுங்கம் என்னும் பெயர் வேளாண்மை தொடர்பாக உண்டானது. தெல் அல்லது தெல்லு. நீண்ட சதுரமானதும் நாற்புறமும் வரம்புடையதுமாகிய சிறிய வயல் நிலத்தைக் குறிக்கும். தெலுங்கம் என்பது சென்னைக்கும் ஒரிசாவுக்கும் இடையே உள்ள மக்களையும் மொழியையும் குறிக்கவும் வழங்கும்'.

'அசோக பட்டையங்களில் கலிங்கம் என்னும் பெயர் நாட்டையும் மலை நாட்டையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. ‘கல்’ என்பது கல்லையும் மலை யையும் குன்றையும் குறிக்கும். கலிங்கு, கலுங்கு, கலிங்கல் முதலிய சேரி வழக்குச் சொற்கள் நீர்மடையையும் குறிக்கும். கலிங்க நாட்டின் கடற்கரை யிலுள்ள ஒரு பட்டினத்துக்குக் கலிங்கப்பட்டினமென்று பெயர். கஞ்சம் மாகாணத்திலுள்ள மலைத் தொடருக்குக் கலிங்க மலைத் தொடர் என்று பெயர். இதனால் ஆந்திரா என்னும் பெயரும் இடத் தொடர்பாக வழங்கப் பட்டதெனக் கொள்ளுதல் தவறாக மாட்டாது. கலிங்கப் பட்டினத்துக்கு மேற்கே 58 கல் தொலைவில் ஆந்திரா என்னும் தெலுங்கு இடம் ஒன்று உள்ளது. இது முற்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய ஓர் இடமாகலாம்'.

'தெலுங்கு அல்லது கலிங்க நாட்டின் மலைப்பகுதிகளாகிய ஒரிசா மலை களிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலை எட்டும் வரையில் -கோதாவரி ஆற்றிடைக்குறை முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில் ‡ தட்டையான சமபூமி காணப்படுகிறது. இவ்விடங்கள் கரைப்போக்கு என்னும் பொருளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். இடம் என்பது தெலுங்கில் எடா, எடாமு என வழங்கும். இவை இடைவெளி, பரப்பு, இருக்குமிடம் போன்றவைகளைக் குறிக்கும். திரா‡விட (ம்) என்பது மயி லென்பதிலிருந்து தோன்றிய மயிலாபுரி தீவைக் குறிக்கும். இலங்கை என்பதிலிருந்து தோன்றிய இலங்காபுரி என்னும் பெயர்களை ஞாபகப்படுத்துகிறது'.

குமாரிலபட்டர் 'திராவிட' என வழங்கியது தமிழ் வழக்கில் திராவிடம் என்று ஆயிற்று. இப்பெயர் தொடக்கத்தில் தமிழரின் நாட்டுக்கும் மொழிக்கும் பெயராய் வழங்கிப் பின் அம்மொழியோடு சம்பந்தப்பட்ட மக்களையும் உணர்த்துவதாயிற்று. தமிழ் சம்பந்தமான மொழி மகராட்டிரம், கூர்ச்சரம் முதலிய நாடுகளில் இன்றும் பேசப்படுகின்றது. அவ்விடங்களுக்குத் தமிழரின் ஒரு பிரிவினர் சென்றிருக்கலாம்.

ஒரிசா மலைகளிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலான தட்டையான சமபூமி என்ற பகுதி கரைப்போக்கு என்னும் பொருளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். திராவிட என்பது மயிலென்பதிலிருந்து தோன்றிய மயிலாபுரியைக் குறிக்கிறது என்றெல்லாம் ந.சி.கந்தையா பிள்ளை ஆய்வு நோக்கில் கூறிவிட்டார்.
kavi
1913 இல் தொடங்கி ஆந்திரர்கள் தனி மகாணம் கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையே தெலுங்கானா போராட்டமும் அப்போதும் நடந்தது. இப்போதும் தொடர்கிறது. எனவே எல்லாத் தெலுங்கர்களும் ஆந்திர மாகாணம் கேட்க வில்லை என்று இவர்கள் வாதாடுவார்களா? இன்றும் தமிழர்களில் பெரும் பான்மையோர் ஆங்கில வழிப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதும், தமிழ்ப் புத்தாண்டாக சித்திரைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதையும் கருத்தில் கொண்டு இவர்கள் (மணியரசன் கும்பல்கள்) தமிழர்கள் தமிழ் வழிக் கல்வியையும் தைப் புத்தாண்டையும் விரும்பவில்லை என்று வாதாடுவார்களா?

தமிழர் திருமணங்கள் பார்ப்பனர்கள் கொண்டும் வடமொழி மந்திரங்கள் கொண்டும் நடைபெறுவதை இவர்கள் இதுதான் தமிழர்கள் எல்லாரும் விரும்பு கிறார்கள். தமிழ்முறை திருமணங்களுக்கு தமிழர்கள் விரும்பவில்லை என்று கூறுவார்களா?

காவிரிப் பிரச்சனைப் போராட்டங்களுக்கு காவிரி டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்றும் முல்லைப் பெரியாறு போராட்டங்களுக்கு தென்மாவட்ட மக்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்றும் தமிழகத்தில் உள்ள எல்லாத் தமிழர்களும் போராட வில்லை யயன்றும் இவர்கள் வாதாடுகிறார்களா?

இப்பொழுது கூட அனு உலையை எதிர்த்து கூடங்குளம் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். கடந்த 9 மாதங்களாக தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாண்டி அப்போராட்டத்தை தமிழ் மக்கள் நடத்தவில்லையே ? அப்படியயன்றால் அனூலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு மக்களிடம் ஆதரவில்லை என்று கூறி தோழர் மணியரசன் போன்றவர்கள் அனூலையை ஆதரிப்பார்களா?

பேராசிரியர் செயராமன் எழுதுகிறார், ‘மரபினக் கலப்பு நிகழ்ந்து கொண்டே யிருக்கும் நிலையில் இனங்களைப் பண்பாடுகளின் அடிப்படையில் அடையாளப் படுத்துவது சரியானதாக இருக்கும். அத்தகைய போக்கு 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது’. ஒரு தெளிவுக்கு இந்த வரையறை பேராசிரியர் செயராமனையே கொண்டு செல்கிறது.
kavi
பார்ப்பனர்கள் யார் என்பது பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள்,

'தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மட்டில் ஒருவன் தமிழனாகான். தமிழ்ப் பற்றுள்ளவனே உண்மைத் தமிழனாவன். பிராமணர், தம் முன்னோர் மொழி வழக்கற்றுப் போனதால், தாம் குடியேறிய அவ்வந் நாட்டு மொழியையே தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். இந்தி, வங்காளம், ஒரியா, குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளெல்லாம் பிராமணர் தாய்மொழிகளாகும். தமிழர்க்கோ தமிழ் ஒன்றே தாய்மொழி'.

'பிராமணர் தமிழ் நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பது, இன்றியமையாமையும் போக்கற்ற நிலைமையும் பற்றியதேயன்றி விருப்பம் பற்றியதன்று. தமிழிற் பிறந்து தமிழில் வளர்ந்து தமிழாலேயே வாழ்த்து வரினும், பிராமணர்க்கு என்றும் அவர் முன்னோர் இலக்கிய மொழியாகிய சமற்கிருதத் திலன்றித் தமிழிற் பற்றில்லை. தமிழ் தெய்வம் என்று சிலராற் போற்றப்படும் பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாதையர்க் கும், வாய் மொழி தமிழேனும் வழுத்து மொழி சமற்கிருதமே. பரிதிமாற் கலைஞன் போன்ற ஒருசிலரே இதற்கு விலக்காவர். (மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை நூல் பக்கம்- 94)'

‘தனித்தமிழ் நாடு’ கோரிக்கை எவ்வாறு உருப்பெற்றது என்பதை தோழர் எஸ்.வி.இராசதுரையும் தோழர் வ.கீதா அவர்களும் பின்வருமாறு விளக்குகின்றனர்;

‘1938 அக்டோபரில் சேலத்தில் நடந்த இந்தி எதிர்ப்புக் கூட்டமொன்றில் பேசிய பெரியார், பார்ப்பனர்கள், வடநாட்டவர் ஆகியோரின் சுரண்டலி லிருந்து தமிழர்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிவதுதான் என்றும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற போராட்டத்தைத் தமிழர்கள் இறுதிவரை நடத்த வேண்டும் என்றும் கூறினார். (ஹி.பு.238). குடிஅரசு 23.10.38 இல் வெளி வந்த ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கட்டுரை, தமிழர்கள் தங்களை இழிவு நிலையில் வைத்திருக்கும் வருணதர்மம், இந்து மதம், இந்திய தேசீயம் ஆகிய வற்றிலிருந்து விடுதலை யடைய வேண்டும் என்று கூறியது. தமிழ்நாட்டுத் தொழிற் துறையும் வர்த்தகமும் வங்கி (வட்டித்) தொழிலும், பம்பாய், ஷோலாப்பூர், அகமதாபாத், பஞ்சாப் முதலாளிகள், மார்வாரிகள், சிந்திகள், பார்சிகள், குஜராத்திகள், மூல்தானிகள் ஆகியோரின் ஆதிக்கத்திலுள்ளன என்றும் தமிழ் முதலாளிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், ஏழைகள் ஆகிய எல்லோருமே சுரண்டப்படுகிறார்கள் என்றும் செல்வம் வட நாட்டுக்குச் செல்வதுடன் தமிழர் நலனுக்கு எதிராகவும் பயன்படுத்தப் படுகிறது என்றும் கூறியது. இதில் மேல் நாட்டானுக்கும் வட நாட்டானுக்கும் வித்தியாசமில்லை என்று கூறிய அக்கட்டுரை ‘தமிழ் நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னா பின்னமாக்குங்கள்! தமிழ்நாடு தமிழ ருக்கே’ என்ற வாசகங்களுடன் முடிவடைகிறது. (குஅ 23.10.38, ஈவெராசி 658௬60). ‘தமிழ் மாநிலப் பிரிவினை முழக்கம்’, ‘தனித்தமிழ்நாடு கோரிக்கை முழக்க ’மாக மாறியதைக் காண்கிறோம்.
kavi
'இனி, இருக்கு வேத புருட சூத்தத்தில், தொழிலான் மட்டுமின்றிப் பிறப்பி நாலும் பார்ப்பனருக்கு ஏனையயல்லாச் சாதியாரினும் பார்க்க மிக்கதோர் உயர்வு சொல்லப்பட்டிருத்தலை உற்று நோக்குங்கால், அப் பதிகத்தைப் படைத்து அதனுள் நுழைத்தவர் ஒரு திராவிட ஆரியப் பார்ப்பனரே யாவரென்பது துணியப்படுகின்றது..... மற்றுத் திராவிட ஆரியக் கலப்பிற் றோன்றிய பார்ப்பனரோ, ஏனை வகுப்பினர் அனைவரையும் அடிமைகள், வைப்பாட்டி மக்கள் எனப் பொருள் படுஞ் சூத்திரர் என்னும் இழி சொல்லால் மிக இழித்துப் பேசி, அவரைத் தொடுதலும் ஆகாது, தாம் உணவருந் துங்கால் அவர் தம்மைக் காண்டலும் ஆகாது என ஒரு பெருங் கட்டுப்பாடு வகுத்துக் கொண்டு தாமே இம்மாநிலத் தேவர்கள் எனத் தம்மைத் தாமே உயர்த்துச் சொல்லித் தமக்குப் பிறப்பினாலேயே பெரும் பெருமை தேடு பவராயிருக்கின்றனர். இத்தன்மையினரான இத்தென்னாட்டுப் பார்ப்ப நரன்றி வேறு எவர்தாந் தாம் இறைவனது முகத்தினின்றும் பிறந்தவர் என்று சிறிதும் அச்சமின்றி அத்தனை நெஞ்சழுத்தத்துடன் கூறத் துணிவர்? அதனை யயண்ணிப் பார்க்குங்கால் தென்னாட்டுப் பார்ப்பனர் எவரோ அப் புருட சூத்தப் பதிகத்தைப் படைத்து இருக்கு வேதப் பத்தாம மண்டிலத்தில் நுழைத்து விட்டாரென்பது திண்ணமாய்ப் பெறப்படுகின்றது'

என்று ‘தென்னாட்டுப் பார்ப்பனர்’ பற்றிக் கூறி சவுக்கடி கொடுத்துவிட்டார். பேராசிரியர் செயராமன் அவர்களும் தோழர் மணியரசன் அவர்களும், என்னடா இவன் பெரியாரை துணைக்கழைப்பான் என்று நினைத்தோம். ஆனால் இவன் மறைமலையடிகளை அல்லவா அழைத்துவிட்டான் என்று சுருண்டு விழுந்து விட்டனர்.

நான் விட்டாலும் மறைமலையடிகள் இவர்களை விடத் தயாராக இல்லை. இன்னும் மேலே தொடருகிறார்,

‘நடுநாட்டில் திராவிடருடன் கலந்து தோன்றிய திராவிட ஆரியரில் ஒரு சிறு கூட்டத்தாரே மெல்ல மெல்லத் தென்னாடு போந்தவராவார். எங்ஙனமெனிற் கூறுதும்,அத் திராவிட ஆரியர் தம்மைப் பார்ப்பனரென உயர்த்துப் பேசிக் கொண்டு, அவ்வுயர்வுக்கு ஒரு பெருந்துணையாகத் திராவிடப் பொது மக்களுக்குத் தெரியாத ஆரிய மொழியைத் தேவர் களாகிய தமக்குரிய தேவமொழியாகப் பயின்று , அம் மொழியில் திராவிட முனிவரால் தொகுத்து வைக்கப்பட்ட இருக்கு, எசுர், சாமம், அதர்வம் முதலான வேதங்களை ஓதியும், பழைய மிலேச்ச, ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை, கட்குடியயாடு கூடிய வெறியாட்டு வேள்விகளைத் தாம் திராவிட மன்னர் பாற் கரவாயப்பெற்ற பெரும் பொருள் கொண்டு ஆயிரக் கணக்காக வேட்டும் வடக்கேயுள்ள நடுநாடுகளில் அருளொழுக்கத்திற்கு மாறான கொடுஞ் செயல்களைப் பரவச் செய்து வந்தனர். அது கண்டு மனங்குழைந்த தனித்தமிழ் முனிவர்களான கபிலரும் பதஞ்சலியும் முறையே சாங்கியமும் யோகமும் இயற்றி அருளும் அன்புமே இறைவன் குணங்கள். அருளும் அன்பும் உடையாரே இறைவன்றிருவருளைப் பெறுவர். உயிர்க்கொலையுங் கட்குடியும் மக்களை இம்மை மறுமையிலும் நிரயத்திற் வருத்துந் தீவினை களாமென அறிவுரை கூறி எங்கும் அறிவொளியினைப் பரவச் செய்வாராயினர்’.

மறைமலையடிகள் 1916 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார். பெரியார் அவர்கள் 1925 க்கு பின் தன்மான இயக்கத்தைத் தொடங்கினார். 1892 இல் ஜான். ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்ற அமைப்பைத் தொடங்கினார். ‘திராவிட’ என்ற சொல்லை திரு.ஜான் ரத்தினம் அவர்களும் பண்டிதர் அயோத்திதாசரும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை விளிப்பதற்காகப் பயன்படுத்தினர். பின்பு 1912 இல் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் குறியீடாக டாக்டர் நடேச முதலியார் அவர்கள் திராவிட சங்கம் தொடங்குகிறார். 1916 இல் பிட்டி. தியாகராயர் அவர்களாலும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. திராவிடன் என்ற பெயரில் இதழும் தொடங்கப்பட்டது. இதன் தாக்கமாக பெரியாரும் திராவிடர் என்ற குறியீடைப் பயன்படுத்துகிறார். தன்னுடைய தொடக்கக் கால பரப்புரை களில் மறைமலை யடிகளின் பண்டைக்கால தமிழரும் ஆரியரும் என்ற நூலை கையில் வைத்துக் கொண்டுதான் பெரியார் பேசினார் என்று ‘வெல்லும் தூயத் தமிழ்’ ஆசிரியர் க.தமிழமல்லன் அவர்கள் கூறியுள்ளார்.

வரலாற்று போக்கில் பெரியார் ஆழ்ந்துணர்ந்து பயன்படுத்திய திராவிடர் என்ற சொல்லை தமிழர் மீது மட்டுமே திணித்தார் என்கிறார் மணியரசன்.
viyasan
ப‌ழ‌ங்கால‌த்தில் திராவிட‌ம் என்ப‌து த‌மிழ்நாட்டையும் த‌மிழ‌ர்க‌ளையும் குறித்த‌தாம், பெரியாரும், கால்டுவெல்லும் திராவிட‌ர் என்ற‌ சொல்லைப் பாவித்த‌ன‌ராம், அத‌னால் நாம் இன்றும், எம்மைத் தீர்க்க‌மாக‌, எந்த‌வித‌ விவாத‌த்துக்கும் இட‌மில்லாத‌வ‌கையில், த‌னித்துவ‌மாக‌க் குறிப்பிட‌க் கூடிய‌ த‌மிழ‌ர் என்ற‌ சொல் எம்மிட‌மிருந்தாலும் ஒரு சில‌ரைத் திருப்திப்ப‌டுத்துவ‌த‌ற்காவும், சுயந‌ல‌ அர‌சிய‌ல் கார‌ண‌ங்க‌ளுக்காக‌வும், வாக்கு அர‌சிய‌லுக்காக‌வும் திராவிட‌ர் என்ற‌ சொல்லைக் க‌ட்டிய‌ழ‌ வேண்டுமாம், அந்த‌ச் சொல் த‌மிழர‌ல்லாத‌வ‌ர்க‌ளையும் குறித்தாலும் கூட‌. இது எவ்வ‌ள‌வு கொடுமையான‌ விதண்டாவாத‌ம். ப‌ண‌ம்ப‌ண்ணுவ‌த‌ற்காக‌ நூல்வெளியிட்டு த‌மிழ்த்தேசிய‌த்தின் முதுகில் குத்த‌த் த‌ய‌ங்காத‌வ‌ர்க‌ள் இன்றும் எம்மிடையில் இருப்ப‌து தான் த‌மிழின‌த்தின் சாப‌க்கேடு.

பெரியார் த‌மிழ‌ர்க‌ளைத் திராவிட‌ர்க‌ள் என்றார் அத‌னால் நாம் எம்மை இன்றும் அப்ப‌டியே அடையாள‌ப்ப‌டுத்த‌ வேண்டுமென்றால், த‌மிழ‌ர்க‌ளை ப‌ல்லாண்டுக‌ளாக‌ ஆண்ட‌து ம‌ட்டும‌ன்றி அவ‌ர்க‌ளின் மொழி, ம‌த‌, இன‌ க‌லாச்சார‌ அடையாள‌ங்களை த‌மிழ‌ர்க‌ளிட‌ம் விட்டுச் சென்ற‌ போத்துக்கேய‌ர்க‌ள் த‌மிழ‌ர்களை ம‌ல‌பாரிக‌ள் என‌ அழைத்த‌ன‌ர். அத‌னால் இன்றும் நாங்க‌ள் எம்மை ம‌ல‌பாரிக‌ள் என‌ அடையாள‌ப்ப‌டுத்த‌ வேண்டுமென‌ யாராவ‌து வாதாடினால், அது எவ்வ‌ள‌வு முட்டாள்த‌ன‌மான‌தோ அது போன்ற‌து நாம் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌ர்க‌ள் என்ப‌தும். ஏனைய‌ திராவிட‌ர்கள் எல்லாம் த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தும் போது, த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும் திராவிட‌ர் என்ற‌ பெயரில் த‌மிழ‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளையும் அர‌வ‌ணைத்து த‌மிழ்நாட்டைப் ப‌ங்கு போட்டுக் கொள்ள‌ வேண்டுமாம், ஏனென்றால் திராவிட‌ என்ற‌ பெய‌ரில் த‌மிழ்நாட்டில் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் உண்டு. அதிலுள்ள‌ தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் உண்மையான‌ த‌மிழ‌ர்க‌ள‌ல்ல‌ (ஏனைய‌ திராவிட‌க் க‌ல‌ப்பின‌த்த‌வ‌ர்க‌ள்) எல்லாவ‌ற்றையும் விட‌ பெரியாரே தமிழர‌ல்ல. த‌மிழ‌ர‌ல்லாத பெரியார் என்ப‌வ‌ர், பெரும்பான‌மையான‌‌ த‌மிழ‌ர்க‌ளால் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டாத‌ ஒருவ‌ர், ஐயாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கும் மேலான‌ ப‌ழ‌மைவாய்ந்த‌ இந்த‌ த‌மிழின‌த்தின் அடையாள‌த்தை தீர்மானிக்க‌வ‌ல்ல‌வ‌ர் என‌ வாதாடும் அப‌த்த‌ம் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் ம‌ட்டும் தான் ந‌டைபெற‌முடியும். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையின‌ருக்கு பெரியார் என்றால் யாரென்றும் தெரியாது, அவ‌ரது கொள்கைக‌ளிலும் ஈடுபாடு கிடையாது. நாங்க‌ள் திராவிட‌ என்ற‌ சொல்லை எம்மை அடையாள‌ப்ப‌டுத்த‌ பாவிப்ப‌துமில்லை, அப்படியென்றால் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ எங்க‌ள் மீது திராவிட‌வாதிக‌ள் குத்தும் திராவிட‌ர் என்ற முத்திரையை நாம் வாயைமூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள‌ வேண்டுமா? கீற்று ந‌ந்த‌ன் போன்ற‌ த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌லையாளிக‌ளையும், தெலுங்க‌ர்க‌ளையும், க‌ன்ன‌ட‌ர்க‌ளையும் த‌மிழ‌ர்க‌ளாக‌ ஏற்றுக் கொள்ளும் பாச‌ப்பிணைப்பு இருக்க‌லாம அல்ல‌து அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் அவ‌ர‌து உற‌வின‌ர்க‌ளாக‌க் கூட‌ இருக்க‌லாம், ஆனால் ம‌லையாளிக‌ளுக்கும், தெலுங்க‌ர்க‌ளுக்கும், க‌ன்ன‌ட‌ர்க‌ளுக்கும் எங்க‌ளுக்கும் எந்த‌வித‌ பாச‌ப்பிணைப்பையும் என்னைப் போன்ற‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் உண‌ர‌ முடிய‌வில்லை. த‌மிழ்நாட்டு எல்லைக‌ளைக் க‌ட‌ந்த‌வுட‌னேயே எங்கேயோ அன்னிய‌நாட்டிலிருப்ப‌து போன்ற உண‌ர்வும், பய‌மும் தான் என‌க்கு ஏற்ப‌டுகிற‌து. அத‌னால் எத‌ற்காக‌ நாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள், திராவிட‌ர் என்ற‌ அடையாள‌த்தை எம‌து த‌லையில் க‌ட்டிக்கொண்டு, த‌மிழ‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து கும்ப‌லில் கோவிந்தா போட‌வேண்டும், நாம் த‌மிழ‌ர்க‌ளாக‌ ம‌ட்டும் ஒன்றிணைந்தால் என்ன‌?
durai ilamurugu
திராவிட இனம் என்ப்தால் கருனாடக்காரன் தண்ணீர்தவில்ல்யேஎன்று கூறிகீறார் ஒருவர் தாயும் பிள்ளயும் ஒன்று என்று என்றாலும் வாயும் வயீறும் தனி என்பது வழக்கு . தண்ணிர் தந்தால் திராவிடன் இல்லையேல் அன்னியன் என்பது ஏற்புடையது ஆகாது காலம் காலமக் தண்ணீர் வந்து கொண்டு இருந்த்ததுஅப்பொழுதெல்லாம் கருனாடக்காரன் யார்? திராவிடனா அல்லது அன்னியனா? தமிழ் நட்டுக்கு காவிரி வந்த பிறகும் திருச்சியில் இருந்து தென் மாவட்டங்களூக்கு குடிக்க தண்ணீர் கொண்டுபோகக் கூடாது என்று போராடியவர்கள் யார்? வீறாணத்து ஏரியிலிருந்து சென்னைக்கு குடிக்க நீர் கொண்டுபோகக் கூடாதுஎன்று போராடியவர்கள் யார் தமிழர்களா?அல்லது கருனாடக்காரனா? அன்றாடப்,பிரச்சினைகளில் அனைவரும் தனக்கு மிஞ்சிதான் மற்றவனுக்கு என்றுதான் நடந்து கொள்கிறார்கள்
Salanan
தென் மாவட்டங்களுக்கு கொண்டு போகக்கூடாது என்று சொல்லக்காரணம் " எங்களுக்கே தண்ணீர் போதாது" என்பது தான். ஆனால் கர்நாடக விவகாரம் வேறு. தமிழர்களுக்கு தண்ணீர் விடக்கூடாது என்பது தான் அது. அணையில் இருக்கும் தண்ணீரை முன்னரே வெளியேற்றி ஏரிகளிலும் குளங்களிலும் வெற்று நிலங்களிலும் நிரப்பி வற்றவிடுவது. பின்னர் எங்களுக்கே தண்ணீர் இல்லை. தமிழ்நாட்டுக்கு எப்படி தண்ணீர் விடமுடியும் என்று அடாவடித்தனம் செய்வது. கலவரம் செய்து தமிழர்களை குறிவைத்து அடித்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூறையாடல் எல்லாம் செய்து துரத்தி அடிப்பது. இது தான் கர்நாடகத்தின் திராவிட பாசம். இந்த திராவிட கழிசடைகள் இருக்கும் வரையில் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் அழிவு தான்.
மூச்சுக்கு முன்னூறு தடவை பார்ப்பான், பார்ப்பான் என்று இந்த திராவிட கூட்டம் திட்டுகிறது. இப்படி திட்டப்பட்ட தமிழக பார்ப்பனர்கள் அழிந்தா போய்விட்டார்கள்? நோபெல் பரிசு வாங்கக்கூடிய அளவு வளர்ந்து இருக்கிறார்கள். இங்கே நாம் தமிழர் கட்சியை திட்ட என்ன இருக்கிறது? பார்ப்பனர்கள் எல்லாம் நாம் தமிழர் கட்சியில் சேர வரிசையில் நிற்கிறார்களா? உண்மையை மறைப்பதற்கு இம்மாதிரியான சொல்லாடல்கள். ஈழத்தில் இத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்த எந்த முயற்சியும் இல்லை. ஒரு லட்சத்துக்கும் மேல் தமிழ் சிவிலியன்கள் செத்தது வெளியுலகத்துக்கு தெரியவராமல் மறைக்கப்பட போகிறது. என்ன அநியாயம். டெசோ மாநாடு என்ற பெயரில் பிராடு வேலை நடந்து இருக்கிறது. ஈழத்தில் அவலம் நிகழ்ந்த போது தமிழகத்தில் நடந்த இயல்பான மக்கள் போராட்டங்களை கூட கருநாநிதி அரசு ஒடுக்கியது. நாற்பதாயிரம் பேர் முள்ளிவாய்க்காலில் செத்து கிடந்த போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் குடும்பத்துக்கு பதவி கேட்டு தில்லியில் பேரம் பேசிக்கொண்டு இருந்தார் இந்த திராவிட தலைவர். தமிழகத்தில் கல்வி தரத்தை கெடுத்தது. பொருளாதாரத்தை காலியாக்கியது. மற்ற மாநிலத்தவர் எல்லாம் காறி உமிழும்படியும் எட்டி உதைக்கும்படியுமான நிலைக்கு தமிழர்களை உள்ளாக்கியது இந்த திராவிட இயக்கங்கள் தான். இந்த திராவிட அரசியலால் தமிழர்களிடத்தில் இன உணர்வு வளர்வதற்கு பதில் சாதி உணர்வும் சாதி கலவரங்களும் தான் வளர்ந்துள்ளன. அது சரி ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி செத்ததற்கு லீவு கொடுக்க தமிழகம் தான் கிடைத்ததா?
thangamari
**புத்தகத்தின் அட்டையிலே தெரிகிறது உங்கள் இழிவான அரசியல் ,
ஒரு படத்தையே நேர்மையாக போட முடியாத நீங்கள்
எங்கள் நேர்மையை விமர்சிக்க
கிளம்பி இருப்பதின் பொருள் (பொருள் )
புரிகிறது ***
durai ilamurugu
அய்யா நீங்கள் தண்ணிர் தர மறுத்தால் அது உங்களது தேவைக்கு! மற்றவன் தர மறுத்தால் அது அடாவடித்தனம்! ! குளம் குட்டைகளில் உள்ள நீரும் குடிதண்ணீருக்குத்தான் பயன் படுகிறது நான் கருனாடக அரசின் நிலை பாட்டை ஆதரித்து எழுதவில்லை நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்ப்டுத்துவதே நேர்மையானது அதைச் செய்யாதகருனாடக அரசின் நிலை கடுமையாக கண்டிக்கதக்கது அதில் எள்ளவும் அய்யமில்லை . ஆனால் அதனால் கருனாடகம் நமது இனப் பகை ஆகிவிடுமா? தந்துவிட்டால் இனப்பகை நீங்கிவிடுமா? இனப்பகைபோன்ற கடுமையான வார்த்தைகளை அதன் பொருள் புரிந்து பயன் படுத்தவேண்டும்
கர் நாடகத்தில் பெண்கள் கற்பழிக்கப்,பட்டனர் தமிழர்கள் கொல்லப்பட்ட்ட்னர் வீடுகள் தீயிடப்பட்டன என்று கதறும் நண்பரே பரமக் குடியில் கொல்லப்,பட்டவர்கள் மக்கள் இல்லையா? தமிழர்கள் இல்லையா? தருமபுரில்கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா.? அவை தமிழ் வீடுகளில்லையா?அல்லது தமிழனை தமிழன் மட்டும் கொல்லவேண்டும் என்று சட்டம் எதுவும் நண்பர் அல்லது அவருடைய கட்சி வைத்து இருக்கிற்தா? அது செல்க

ஈழத்தமிழருக்கு என்று சீமான் செய்தது என்ன? கருனானிதி ஒன்றும் செய்யவில்லை சரி சீமான் என்ன்ன செய்தார்?அவருடைய கட்சி என்ன செய்ததது? தலைவர் படத்திற்கு அருகில் நின்று போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்தது தவிர? வார்த்தை வயிற்றுப்,போக்கு போன்று கடகட வென்று பேசியதைத் தவிர? நிதி வசூலித்ததை தவிர? சொல்லுங்கள்! ஈழத்தமிழருக்கு என்று சீமான் செய்தது என்ன? அழிவின் பாதைக்கு புலிகளியழைத்து சென்றுவிட்டு இன்று வாய் மூடிக்க்கிடுக்கும் சில தமிழத்தேசியதலவர்களுக்கும் சேர்த்துதான் இந்த கேள்வி பாராளுமன்ற தேர்தல்வரை போரை நடத்துங்கள் பி ஜெ பி வெற்றி பெறும் அபோது தனி ஈழம் கிடைக்குமென்று வழி நடத்திய தலைவர்கள் எங்கே?
தமிழனை மும்பையிலிருந்து அடித்து துரத்திய பால் தக்கரேயின் பாதம் பணிந்த்து அவரை பெருமகானர் என்று சீமான் போற்றவில்லையா?
கருணானிதி ஆட்சியில் ஆடிய ஆட்டம் என்ன? அம்மையார் ஆட்சிக்கு வந்த பிறகு சீமான் எங்கே போனார்? இப்பொழுது ஈழத்தமிழர்கள் அனைவரும் தனி நாடு அடைந்து விட்டர்களா? பகல் வேடம் கலைந்து விட்டது
bala
இதை எழுதியவர்கள் 99 விழுக்காடு திராவிடர்கள் பார்பனர்கள் கூட்டம் - இவர்களுக்கு தமிழ், தமிழர் என்று எவனும் ஓன்று சேர்ந்தால் ஆகாது - தமிழன் என்றும் சாதியாலும், மதத்தாலும் , கட்சியாலும், பிரிந்து இருப்பதே இவர்களுக்கு பிடிக்கும் - இதை புறந்தள்ளுவோம் - தமிழராக மண்ணில் ஒன்றுபடுவோம் - நாம் தமிழர் வெளியிட்ட ஆவணம் 50 ரூபாய் என்றல் அதை விமர்சித்த புத்தகம் 120 ரூபாய்.இது ஒன்றே போதும் இவர்கள் பிழைப்புவாதிகள் என்பது - வெல்லட்டும் நாம் தமிழர்
durai ilamurugu
அதற்கு முன்னால் சீமானை ஒருமுறை தருமபுரிக்கும் பரமக் குடிக்கும் போய்வரச்சொல்லுங்கள்
சாதியால் பிரிப்பது யார் ? திராவிடம் பேசும்கட்சிகளா? அல்லது பெரியாரைத் தெலுங்கன் என்று திட்டும் மருத்துவரா? சிந்திக்கவும
ஊர் ஊராக சாதியக் கூட்டங்கலை அடுவும் தலித் தவிர்த்த சாதியக் கூடங்ககளை நடத்தும் மருத்துவர் அய்யா அவர்கள பற்றி ஒருவரும் எழுதவில்லை ஏண் ? அவர் தூயதமிழர் என்பதலா? திராவிடம் தவிர்த்து தமிழ் வாதம் பேசும் கட்சிகள் அனைத்தும் சாதி ஆதிக்க வெறியர்களின் புனை முகம் ஆகும்
RRaj
////////////'நான் உலகின் மூத்த குடியைச் சர்ந்தவன்; எனது நாட்டில் மற்றவர்களுக்கு இடமில்லை' என்று இவர்கள் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.///////////////இப்படி ஒரு பதிவை அதரத்துடன் எடுத்து காட்டுங்கள் பார்போம்...
RRaj
//////////நேற்று வரை பெரியாரின் பேரன் என்று மேடைகளில் திராவிட இயக்கக் கருத்துக்களை பேசிக் கொண்டிருந்த சீமான், இன்று 'திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்' என்று தடாலடியாக பல்டி அடிக்கக் காரணம் என்ன?//////////////// பெரியாரும், திராவிடமும் ஒன்ற என்ன?????? பெரியாரின் விரும்பிகள் திராவிடனாக இருக்க வேண்டுமா என்ன???
RRaj
////////////சாதி ஒழிப்பு, இந்துமதம் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பை முன்னிறுத்தி 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழங்கிய பெரியாரிடம் இருந்து, 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை மட்டுமே உருவி எடுத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் தமிழ்த் தேசியம் பேசுகிறார்கள். இந்தியா என்ற சிறைக்கூடத்தில் இருந்து விடுதலை பெறுவதே தமிழ்த் தேசியம். ஆனால், அந்த சிறைக்கூடத்தின் கான்விக்ட் வார்டன் பதவியை அடைந்தால் போதும் என்று செயல்படுபவர்கள் நாம் தமிழர் கட்சியினர். கைதிகளுக்கான கங்காணி வேலைதான் கான்விக்ட் வார்டன் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த கங்காணி வேலையைத்தான், பெயரில் மட்டுமே 'திராவிட' என்ற சொல்லை வைத்திருக்கும் அரசியல் கட்சிகள் இதுநாள் வரை செய்து கொண்டிருந்தன. அவைகளின் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி இன்று உருவெடுத்துள்ளது./////////////////முதலில் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று தெரிய வில்லை..... ஒரு கட்சி தொடங்க படுவதின் நோக்கம் என்ன?? ஆட்சி அதிகாரத்தை பிடிபதுதான், தமிழ் தேசியம் என்பது இந்தியா என்ற சிறைக்கூடத்தில் இருந்து விடுதலை பெறுவது என்றால், அதிகாரம் இல்லாமல் எதுவும் பண்ண முடியாது, தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி மொத்தமாக அணைத்து விடுவார்கள்...... முதலில் ஓன்று புரிது கொள்ளுங்கள், தமிழனுக்கு ஓன்று நடந்தால் தமிழந்தான் குரல் கொடுப்பான்... இதுவரை அப்படி தன நடந்து கொண்டு இருக்கிறது... இது உங்களுக்கு தெரியாதது இல்லை...
RRaj
//////////பிறகு ஏன் நாம் தமிழர் கட்சியை மட்டும் இவ்வளவு கடுமையாக எதிர்க்க வேண்டியிருக்கிறது என்றால், தமிழகத்தில் முதன் முறையாக இனத்தூய்மைவாத அரசியல் பேசி, தமிழ்ச் சமூகத்தின் அங்கமாக இருக்கும் ஒரு பிரிவினரை சாதி அடிப்படையில் ‘தமிழரல்லதார்’ என்று வேறுபடுத்தி, மிக மோசமான வெறுப்பு அரசியலை வளர்க்கும் வெகுஜன அரசியல் கட்சியாக தனது ஆவணத்தின் மூலம் அது வெளிப்பட்டிருக்கிறது. ///////////இப்படி ஒரு பதிவை நீங்கள் அதரத்துடன் எடுத்து சொல்லுங்கள் பார்போம்..... இது உங்கள் அறியாமையை காட்டுகிறது.... அபி என்றால் நங்கள் திராவிடர் என்று சொல்லி திரயும் அவர்களை நீங்கள் திராவிட வெறியர் என்று குறிப்படத காரணம் என்ன???
RRaj
////////////பதவியை அடையத் துடிக்கும் சீமானால் ஒரு தூசியைக் கூட தமிழக மக்களின் உரிமைகளுக்காக அசைக்க முடியாது. பதவி அரசியல் எந்த விடுதலையையும் பெற்றுத் தந்ததாக வரலாறு இல்லை.//////////// வரலாறு இல்லை என்றால் மாறுவோம், மாற்றுவோம் மாற்றி கட்டுவோம்....
RRaj
/////////////இணையதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் என் மீது வைத்த தரந்தாழ்ந்த தனிநபர் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றிய தோழர்களுக்கும், கீற்று வாசகர்களுக்கும் – தொடர்ச்சியாக கீற்றினை நடத்துவதன் மூலமே எனது நன்றியைத் தெரிவிக்க முடியும்.//////////////இது ரொம்ப நல்ல இருக்கிறது, நீங்கள் தரம் தாழ்ந்த விமர்சனம் வைக்கலாம் ஆனால் மற்றவர்கள் சொனளால் அது தவறு...
Guest
திரு + இடம் என்பதே திருவிடம்.அதுவே,பின்னர் திராவிடம் என மாறியது. அப்பகுதி மக்கள் தாம் வாழ்ந்த இடத்தில் அழகு, செல்வம் மற்றும் கல்வியறிவு உடையவர்களாக வாழ்ந்தனர். திராவிடம் தனித் தமிழ் சொல்லே ஆகும்.
Muthukumar
//சாதியின் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சியினர் தீர்மானிக்கின்றனர்.//

அப்படின்னு உங்களுக்கு யார் சொன்னா..?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.