ஸ்ரீரங்கத்தில் 'பிராமணாள் ஹோட்டல்' என்று பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகத் தோழர்கள் களம் இறங்கி போராடி வருகின்றனர். இந்தப் பிரச்சனையை பெரியாரிய‌வாதிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் இடையே நடக்கும் விவாதமாக சராசரி வெகுசனம் வேடிக்கைப் பார்க்கிறது. 'முதல்' போட்டு கடை நடத்துபவனுக்கு பெயர் வைக்கும் உரிமை கூட கிடையாதா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமான கேள்விதான். ஆனால், அந்தப் பெயர் ஒட்டுமொத்த சமூ­கத்தையே இழிவுபடுத்தும் விதமாக இருக்கும் பட்சத்தில் கண்டனத்துக்குரியது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

தன்னை 'பிராமணாள்' என்று பொது அரங்கில் அறிவித்துக் கொள்ளும் போதே 'தான் உயர்ந்தவன்' என்று கூறிக் கொள்கிறான். 'தன்னை உயர்ந்தவன்' என்று சொல்லும் போதே மற்றவர்களை 'தாழ்ந்தவன்' என்று சொல்லாமல் சொல்கிறான். 'பிராமணாள்' என்று அடையாளப்படுத்துவன் மூ­லம் ஏனையோரை 'சூத்திரர்' என்றும், தனக்கு சேவகம் செய்யும் அடிமை சாதிகள் என்றும் அறிவித்துக் கொள்கிறான் என்பதே உண்மை. இதற்கு ஏன் இவ்வளவு உள் அர்த்தம் கற்பிக்க வேண்டும்? ஹோட்டல் அதிபர் தன்னை பிராமணன் என்றுதானே சொன்னார்? பிறரை சூத்திரர் என்று சொல்லவில்லையே? என்று திருவாளர் வெகுசனம் கேள்வி எழுப்பலாம். 'இந்துத்துவ' பொதுப்புத்தியில் தோய்ந்து போன வெகுசனத்திற்கு ஆரியமாயை இன்றளவும் தெளியவில்லை. இன்றைய கார்ப்பரேட் உலகத்திலும் சூத்திரனாகிய 'தமிழன்' பாடும் 'திருமறைகள்' கோவிலுக்குள் ஒலிக்கப்படுவதில்லை. Only for Bramins என்று எழுதி ஒட்டப்பட்ட வாடகை வீடுகள் இன்றளவும் சென்னையில் இருக்கின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தை இன்றளவும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

இது போன்ற சம்பவங்கள் எல்லாம் இன்றளவும் சமூ­கத்தில் பார்ப்பானுக்கு இருக்கக்கூடிய பிறவி மரியாதையை காட்டுகின்றன. இத்தகைய சூழலில்தான் இறுமாப்புடனும், பிறவித்திமிரை பறைசாற்றும் விதமாகவும் 'பிராமணாள் கபே' என்று ஒரு பார்ப்பனர் பெயர் வைத்திருக்கிறார். எழுபது வருடங்களுக்கு முன்னரே இது போன்ற சாதி ஆதிக்க நடவடிக்கைகளை எதிர்த்தது அதனை ஒழித்துக் கட்டியவர் பெரியார். ஆனால், தற்போது விஞ்ஞான உலகத்தில் மீண்டும் தனது இருத்தலை ஆணித்தரமாக பதிவு செய்யத் துடிக்கிறது பார்ப்பனீயம்.

தேவர் ஹோட்டலும், வன்னியர் ஹோட்டலும் சரியா?

'பிராமணாள் கபே'வை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் வன்னியர் ஹோட்டலுக்கு எதிராக, தேவர் ஹோட்டலுக்கு எதிராக போராட்டம் நடத்துவார்களா? இது திருவாளர் வெகுசனம் மட்டும் கேட்கும் கேள்வி அல்ல, சில அறிவுஜீவிகளும் இது போன்ற கேள்விகளை கேட்கின்றனர். அவர்களுக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்க வேண்டியது நமது கடமை. வர்ணம் என்பது வேறு; சாதி என்பது வேறு. 'பிராமணாள்' என்பது வர்ணம்; தேவர் என்பதோ வன்னியர் என்பதோ வெறும் சாதிதான். 'பிராமணாள்' என்கிற வர்ணத்திற்குள்தான் அய்யர், அய்யங்கார்கள், சவுட்டி பார்ப்பனர் போன்ற சாதிகள் அடங்கும். 'பிராமணாள்' என்பது பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர்ந்த வர்ணம் என்று பொருளாகிறது. ஆகவே , நால்வர்ணத்தையும் ஏற்றுக் கொண்டு, 'சூத்திரர்கள்' பிரம்மனின் கால்பாதத்தில் பிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது.

'சூத்திரன்' என்றால் வேசிமகன் என்று மனுதர்மம் பொருள் கூறுகிறது. தன்னை 'பிரமாணாள்' வர்ணம் என்று சொல்லுவதன் மூ­லம் தமிழர்களுக்கு நாலாவது வர்ணமாகிய 'சூத்திரர்கள்' என்கிற பட்டத்தை வழங்குகிறார் 'பிராமணாள் கபே' உரிமையாளர். நால் வர்ணத்தைப் பாதுகாக்கும் 'பிராமணாள்' என்கிற பெயரை பொது அரங்கில் வைத்துக்கொண்டதால் ஒட்டு மொத்த தமிழ் சமூ­கத்தையும் 'வேசி மகன்கள்' என்று சொல்லி இழிவுபடுத்தியிருக்கிறார், 'பிராமணாள் கபே' உரிமையாளர். அது சரி, அப்படியென்றால் வன்னியர் ஹோட்டலும், நாடார் ஹோட்டலும் வைத்திருப்பவர்களை நாம் கண்டிக்க வேண்டுமா? என்றால் நிச்சயமாக‌ கண்டிக்க வேண்டும். 'பிராமணாள் கபே' உரிமையாளர் நமது பொது எதிரி என்றால் வன்னியர் ஹோட்டல் உரிமையாளரும், தேவர் ஹோட்டல் உரிமையாளரும் நமது சமூ­கத்திலுள்ள அறிவிலிகள். அயோக்கியர்களை எதிர்த்து போராட்ட‌ம் நடத்தலாம். அறிவிலிகளுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும்.

ஒருவர் வன்னியர், செட்டியார், முதலியார், தேவர் என்று தன்னை அறிவித்துக் கொண்டால் என்ன அர்த்தம்? தன்னை 'சூத்திரன்' என்று அவனே சொல்லிக் கொள்கிறான் என்றுதானே பொருள். நாலாம் வர்ணத்தில் பிறந்தவன் என்று பார்ப்பான் என்ன சொல்வது? நானே என்னை சூத்திரன் என்று பெயர் பலகை வைத்து கொள்கிறேன் என்கிறான் பிற்படுத்தப்பட்ட தமிழன். நால்வர்ணப் பெருமை பேசும் 'பிராமணாள் கபே' ஹோட்டல் அதிபர்கள் உருவாக்கி வைத்திருக்கும் 'இந்துத்துவ பொதுப்புத்தி'யில் அறிவிழந்து தவிக்கும் தேவரும், வன்னியரும், 'தமிழன்' என்கிற உணர்வினை இழந்து சாதிப் பெருமை பேசுகின்றான்.

        இடைநிலை சாதிகள் தங்கள் சாதிப் பெருமையை பேசுவதன் மூ­லம் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்கின்றனர். தங்களின் இழிவு நிலையை இவர்கள் உணராதவரை 'பார்ப்பனீயம்' தன்னை உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருக்கும்.

அவர்ணர்கள் அணி திரளட்டும்:–

        வர்ண பேதத்தை ஆதரிக்கும் 'பிராமணாள் கபே'வை எதிர்த்து, அவர்ணர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அணி திரள வேண்டும். நால் வர்ண அமைப்பை ஏற்க மறுத்து புரட்சி செய்த போராளிகளை 'பஞ்சமர்' என்றும் 'சண்டாளர்' என்றும் சாடி மனுதர்ம அமைப்பு ஒதுக்கியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பார்ப்பன அமைப்பை எதிர்த்து சமர் புரிந்த தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றை அம்மக்கள் நினைவு கொள்ள வேண்டும். வர்க்க பேதத்தை நிரந்தமான அமைப்பாக்கி பிறவி முதலாளித்துவத்தை இம்மண்ணில் நிலைநாட்டிய 'வர்ணாசிரமத்' திமிரை எதிர்த்து இடதுசாரிகள் போராட முன் வர வேண்டும். சுயமரியாதை உணர்வுடனும், வரலாற்ற‌றிவுடனும் சிந்தித்துப் பார்த்தால் 'மனிதனாகத்' தன்னை உணரும் அனைவரும் இந்த 'பிராமணாள் கபே'வைத் தகர்க்கும் 'ஆயுதங்களாய்' மாற வேண்டும்.

- ஜீவசகாப்தன்

Comments

29 comments

29
Chandar
Ok, we can rename it to 'Paarpaan cafe'. Is that fine ?
R Chandrasekaran
// பார்ப்பனர்களுக்கும் இடையே நடக்கும் விவாதமாக சராசரி வெகுசனம் வேடிக்கைப் பார்க்கிறது///
நீங்கள் குறிப்பிட்டுள்ள சராசரி வெகுசனம் தான் தற்போதைய பெரும்பாலர் கருத்தாக நினைக்கிறேன்.. பெரியார் காலத்தில் தேவை பட்டது மட்டும் பெரியார் செய்தார்.. அது அந்தக் காலத் தேவை.. இன்றய காலகட்டத்தில் அதை நீங்களும் பிடித்துத் தொங்க வேண்டியதில்லை என்பது எனது எண்ணம்.. இல்லையென்றால் மக்களில் பெரும் பகுதியினர் நீங்களே குறிப்பிட்டுள்ள ”சராசரி வெகுசனம்” ஆக மாறிப் போய் நீங்கள் மைனாரிட்டி ஆகிவிடுவீர்கள் என்று நான் த
pugazhendhi
Mr Chandrasekaran,for your kind information.There are people who write in web magazines that Brahmins only have the character and right to become Archagars in TN temples.Are you agreeable to that view?Struggles will continue till Brahmanism based on Manudharmam is banished from India.
ganesh
Somebody strongly argued "BRAMNAL KABEY" is against caste system whereas "DEVAR HOTEL, NAIDU HALL, KONGU FINANCE, GOUNDER COLLEGE, NADAR STORES ETC., are not against the caste system. It's unfortunate..

There is no difference between the caste and varna for the dalit people., once upon a time, Bramnal hotel/coffee didn't permit other people except Brahmin. But days are changed anybody can enter to the coffe like Naidu hall, Nadar @ sons. But if any hotel opened in the name and style of Adidravidar/ devendra r/arunthathiyar hotels or stores how many non-dalit entered those places?.

So we should fair manner. Most of the people giving reply in that way.
solan
'தன்னை உயர்ந்தவன்' என்று சொல்லும் போதே மற்றவர்களை 'தாழ்ந்தவன்' என்று சொல்லாமல் சொல்கிறான்.

ஹிஹிஹி...

ராமசாமியை என்ற கன்னடகாரனை பெரியார் என்று சொல்லி தமிழர்களை சிரியவர்கள் தாழ்ந்தவர்கள் என்று இழிவுபடுத்தும் தமிழின கூட்டத்திற்கு இது ஒரு பெரிய மேட்டரே இல்ல... என்ன கீற்று... சாரி... கிறுக்கு நான் சொல்றது சரி தானே :-)
mathivanan
மனிதம் என்பதைத் தாண்டி வர்ணம் என்று நீங்கள் சொல்வதாகவோ சாதி என்று சொல்பவர்கள் கருதுவதாகவோ எது இருந்தாலும், மனிதத்தைச் சாதிக்க அது உதவாது. இவையெல்லாம், இன்றைய வர்க்கம் என்ற யதார்த்தத்தை, மறுப்பவவை. எனவே, பிறப்பு சார் வர்ணத்தை/சாதியத்தை ஆதரிப்பவை. பண்டைய குப்பையில் எது நல்ல குப்பை..? மிகப் பழைய வர்ணமா? சற்றே பழைய சாதியா?
Srinivasan
This is one more comedy article about 'Brahmins' and 'varnasramam'. All those are vanished long time ago. Just to know - if this cafe name changed, all people are going to become 'archagar' - will the dalits social status will improve drastically !!! - don't repeat the same non-sense even now. If some one says 'only for brahmin' - its because usually brahmins will not fight, will not threaten the house owners.

Did you even hear that a brahmin calling other caste person as 'Vesi magan' or 'sudra' in front of them?? They don't have that guts, even thought still some % of that community has such inner thoughts. But it will no longer affect any one else in reality and day-to-day life. If you say its affecting, then i would blame the 'dalit' who accepted it when they have called so, they should have thrown back !!
சம்பூகன்
ஜீவசகாப்தன் கருத்தினை அப்படியே வழிமொழிகிறேன். பெரியாரியர்கள் மட்டுமல்ல,அம்பேத்கரியர்களும் பொதுவுடைமைக் கொள்கையாளர்களும் இணைந்து போராடவேண்டிய காலம் வந்துவிட்டது.
kulothungan
レᅪசோலன் என்ற புத்தி சுவாதீனம் தெளிவாக உள்ள? தரமான மனிதருக்கு.. பெரியார் என்ற கன்னடன் தமிழர்களுக்கு செய்த சமூகப்பணியை போல் வேறு எந்த புர்ர்ட்சி தமிழனும் தமிழனுக்காக களப்பணி ஆற்றியதில்லை. இந்த விமர்சனம் செய்வதைக்கூட தமிழன் அவரிடம் இருந்தே கற்றுக் கொண்டான். அவர் காகிதத்தில் கப்பல் விட்டவர் அல்ல. தள்ளாத வயதிலும் களமாடிய கிழட்டுச் சிங்கம். நீங்கள் அவரைப் பற்றி வாயார வசைபாடி கைவலிக்க வலிக்க காகிதத்தில் எழுதி வையுங்கள் அய்யா. தங்கள் பிள்ளை மலம் கழித்தால் துடைக்க உதவும்.
kulothungan
レᅪசிரிப்பின் ஒலியை குறிக்கவே வடமொழியை பயன்படுத்தும் மூடன் சமூகவாதிகளை ரத்தப் பரிசோதனை செய்து தமிழனா கன்னடனா என்று கண்டுபிடிக்கிறான். என்ன கொடுமை சரவணா... முடிந்தால் பெரியாரின் எழுத்துக்களையும் வாழ்க்கை வரலாற்றையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள். பிறகு எப்படித் தமிழனாக வாழலாம் என்று தானே தெரியவரும் அய்யா. பெரியாரை பேசும் தாங்கள் இதுநாள்வரை தமிழனுக்காக ஏதாவது களமாடியதுண்டா நண்பரே....
JEEVA SAGAPTHAN
சாதி உணர்வு ஒழிய வேண்டும் .சாதியையும் வர்ணமும் பார்பனியத்தின் குழந்தைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற உணர்வோடு இக்கட்டுரை எழுதப்பட்டது .இக்கட்டுரையில் கூறிய கருத்துகளில் அல்லது தரவுகளில் மாற்று கருத்து இருந்தால் நீங்கள் விமர்சியுங்கள் .ஆனால் ,தொடர்பே இல்லாமல் பெரியாரை ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் ?ஏன் .நம் மக்களே பார்ப்பான இந்து மதத்திற்கு ஆதரவாக இருக்கிறீர்கள் ?.வர்ணமும் சாதியையும் தமிழ் சமூகத்தை இழிவு படுத்திய வரலாறை நீங்கள் உணரவில்லையா ?
Chandar
@Srinivasan, 'They don't have that guts'. Every brahmin has the gut, but there is something called as civilised society. Most brahmins observe that.... Unlike other castes, Brahmins are not instigated by these type of silly comments. Brahmins of today very well know that, if they have to survive or be in race, better concentrate on their strengths, rather than looking at others. People may term this self-fish. But this is today's world. Even Periyar's progeny, Karuna or Veeramani or Keetru nandan won't burn themselves or their kins. But will warm their hands in the fire or innocent people who are instigated by them.
அமீர் அப்பாஸ்
ஜீவசகாப்தனின் கட்டுரை இன்றைய கால கட்டத்தில் பெரியாரின் தேவையை தெளிவு படுத்தியது. எளிய முறையில் சொல்லப் பட்ட மிக வலிமையான கருத்து.வாழ்த்துக்கள்
k.boopathi
இன்னும் இது மாதிரியே யோசித்து, நீங்கலும் முன்னெராம மற்றவரையும் முனனேறாம விடாம யெததனை காலத்துககு காலத்தை ஓட்ட போகிறீர்கலோ.
உன்மையான ஆரியாகள், இன்றைய ஈரான், ஈராக் பகுதியிலிருந்து வந்து மொகலாயத்தை இந்தியாவில் வேர் விட செய்தவர்கள்.
திவ்யன்
நூறிர்க்கு அறுபது சதவிகிதம் இருக்கும் நடுத்தர வர்க்கம் எதிர் கொள்ளும் அன்றாட வாழ்வியல் போராட்டங்களில், வர்ணம் சாதி மதம் போன்ற பிரிவினைகள், அடையாளங்கள் தாமாகவே காணமல் போய்கொண்டு வருகிறது.......காசிருந்த,அந்த கடைல போய் சாப்டனும்னு தோனுச்சுன , போய் சாப்டுங்க இல்லேன்னா சாப்டாதீங்க..... அத விட்டுட்டு கட்டுரை எழுத தலைப்பு கெடைக்கிளன என்ன வேணுமாலும் எழுதிகிட்டு....... போங்க சகா .... ஈ ணேஏட் மோறே ஏமோடீஓண்........................
sandhiyagu
அருமை அய்யா ..... இதே வேகத்தில் இதே பொங்கும் திராவிட முறுக்கில் இதே திருச்சியில் உள்ள தேவர் ஹால் மற்றும் நாயுடு ஸ்வீட்ஸ் மாற்றத்திற்கு வீரத்தைக்காட்டி புல்லைத்தின்னும் பாப்பானிடம் மட்டும் வீரத்தைக்காட்டும் பொட்டைகள் அல்ல நாங்கள் என்று நிரூபிக்கணுமா? . அப்பிடியே சேலம் கவுண்டர் ஓட்டல், மதுரை சிறீ தேவர் ஹோட்டலையும் என்னான்னு கேளுங்க ......அப்புடியே பிராமனாளுங்கர பேரு வருணப்பேருதான் பிரச்சனைனா... வன்னியகுல சத்திரியர் ??... சத்திரியன்னு ஒரு திரைப்படம் வந்தப்பையே நாம வருணம் பாக்கலியே??? வைசியனும் வருணம்தானே?? கரூர் வைசியா வங்கி, வைசியா வங்கி, அய் என் ஜீ வைசியா இன்சூரன்சு இதெல்லாம் ?? சமூக நீதி காப்பாத்த வேணாமா??
ஸ்ரீரசா
ஜீவசகாப்தன், வர்ணத்திற்கும் சாதிக்குமான புது விளக்கம் கொடுத்து, புதிய தொரு விவாதக் களத்தைத் திறந்து விடுகிறார். அதன் மூலம் அவரது அம்புகள் திசை தப்புகின்றன. இந்தச் சமூகத்தில் வர்க்கத் திரட்சி ஏற்படாமல் தடுக்கின்ற பழம் விசைகளில் வர்ணம் சாதி மதம் மொழி இனம் என்று ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன. உலகில் இன்று நடப்பதெல்லாம் இரண்டே வகைப்பட்ட அரசியல் தான். ஒன்று மானுடப் பகுப்பு அரசியல், இன்னொன்று மானுட இணைப்பு அரசியல். மானுடப் பகுப்பின் அரசிய்லை நீங்கள் எதன் பேரில் நிகழ்த்தினாலும் அது மனிதகுலக் கேடாகவே முடியும். அனைத்து மனிதரையும் மனிதர் என்ற ஒற்றை அடையாளத்தோடு அடிப்படை அடையாளத்தோடு முன்னிறுத்தவும், வளர்த்தெடுக்கவும் வேண்டிய காலம் இது. அதற்கு எதிராக உள்ள அனைத்துமே பிற்போக்கின் வகைப்பட்டவையே.
நீரோடை
நல்ல ஆழமான , தேவையான கட்டுரை. கட்டுரை ஆசிரியர் ஜீவசகாப்தனுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.
லோகு
இப்போதெல்லாம் சாதி பற்றி பேச பலர் தயாராக இல்லை,, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நம் மனதுக்குள் புழுங்கத் தேவையில்லை.. நான் பார்ப்பனன் என்று ஒரு சாதியினர் சொன்னால் மற்றவர்களும் நான் நாடார் தேவர் , பறையர் ,பள்ளர்,வன்னியர் என்று பெருமையாக சொல்ல வேண்டியது தானே.. இட ஒதுக்கீட்டுக்கும் சலுகைகளுக்கும் சாதியை முன்னிறுத்தும் நாம் மற்ற விஷயங்களுக்கு ஏன் சாதியை சொல்ல தயங்குகிறோம்.. உலகம் மாறிக் கொண்டே வருகிறது.. நாம் மாற மறுக்கிறோம் அல்லது மாற்றத்தை உணர மறுத்து பகுத்தறிவு சிந்தனை இன்றி இருக்கிறோம் என்றே நான கருதுகிறேன்.. இதை ஏட்டிக்கு போட்டியாக நான் எழுதவில்லை..
raghunath
ethani kalam than ematurver intha natile, urkku illaithvan pillayar kovil aandi innanam ethu ungalukku romba porunthum jeeva sahapthan , nalikku mudal velaiyy intha katturai print out eduthu mukkiamana kariyathukku payan patha pooren.

innakku irrukara nilamaila sathi yaru kail irrukunnu unakku nall therium nenga unmaiyana aan pillaya irruntha solli parunga, setha pambai adithu unga veertha katathinga.

Thothuuuuuuuuuuuuuuuuuuuuu
Naanchil Nanban
யரதவது தன்னை தானெ 'நல்லவன்' என்று பொது அரங்கில் அறிவித்துக் கொள்ளும் போது மற்றவர்களை 'கள்வன்' என்று சொல்லாமல் சொல்கிறான?
agilan
@Ameer abbas, with your obvious admiration for Periyar, have you also stopped beleiving this entity called 'ALLAH'.
Have you informed this to TNTJ and TMMK annachis?? leave that, have you even advised this to your own family? Have you started fighting the castes in Islam? I don't think you have. If your answer to any of my qn is 'yes', by now, like Allah you would have also become formless..!! LoL! Every1 in TN understands that Muslim admiration for Periyar is because of his fascist views against Hinduism. Nothing more. So why don't you wipe your 'crocodile tears'. Thanks you!
Selva
It is good to see Brahmins coming here and venting their anger on us (Anti-Hindutva). Now we can be sure that we are hurting their caste structure. It won't be long before we break the caste structure they created. Come on Brahmins keep venting your anger on us so that we realise we are on the right path.
இளம்பிறை
யாதும் ஊரே! யாவரும் கேளிர் எனப் படித்தும் நான் உயர்ந்தவன்;நீ தாழ்ந்தவன் எனச் சொல்லும் கேடுகெட்ட நிலை இருக்கும் வரை மேலே சொன்ன தொடர், தொடராகவே இருக்கும். தொடவும் செய்யாது; தொடரவும் செய்யாது. பிறன் மனை நோக்காப் பேராண்மை கொண்டவர்கள் தமிழர்கள். இவர்களுக்குக் குலப் பாகுபாடு கிடையாது. நிலப்பாகுபாடு மட்டுமே உண்டு. ஆகவே தொழிலின் அடிப்படையில் மட்டுமே வெறுபடுவார்கள். அதனால் தான் இன்றைக்கும் சிந்திக்கும் திறமையும் செய்யும் ஆற்றலும் கொண்டவர்களாகத் தமிழர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை முற்றிலும் அழித்து ஒழிக்கத் திட்டமிடும் "பிராமணர்கள்" கூட்டம் சதிராட்டம் ஆடுகிறது. இனியாவது சிந்தியுங்கள். நம்மிடையே வேற்றானோ,மாற்றானோ புகுந்துக் கலகம் செய்யாதபடி.
ravanan
பார்பபன் பணடர பரஏசிகக்ளுகுக். ஆஆடி வ யிறு ககலாங்குமஓதெலலாம் பெரியாரை இழிவு படுத்த்டினால்த ஆன டங்கும். க.டுடரியாளருகுக்வவா ழ்துகக்ள்
gopinath
அனைத்து மனிதரையும் மனிதர் என்ற ஒற்றை அடையாளத்தோடு அடிப்படை அடையாளத்தோடு முன்னிறுத்தவும், வளர்த்தெடுக்கவும் வேண்டிய காலம் இது. அதற்கு எதிராக உள்ள அனைத்துமே பிற்போக்கின் வகைப்பட்டவையே.
Subramaniam Logan
ஜீவசகாப்தன், வர்ணத்திற்கும் சாதிக்குமான புது விளக்கம் கொடுத்து, புதிய தொரு விவாதக் களத்தைத் திறந்து விடுகிறார். அதன் மூலம் அவரது அம்புகள் திசை தப்புகின்றன. இந்தச் சமூகத்தில் வர்க்கத் திரட்சி ஏற்படாமல் தடுக்கின்ற பழம் விசைகளில் வர்ணம் சாதி மதம் மொழி இனம் என்று ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன. உலகில் இன்று நடப்பதெல்லாம் இரண்டே வகைப்பட்ட அரசியல் தான். ஒன்று மானுடப் பகுப்பு அரசியல், இன்னொன்று மானுட இணைப்பு அரசியல். மானுடப் பகுப்பின் அரசிய்லை நீங்கள் எதன் பேரில் நிகழ்த்தினாலும் அது மனிதகுலக் கேடாகவே முடியும். அனைத்து மனிதரையும் மனிதர் என்ற ஒற்றை அடையாளத்தோடு அடிப்படை அடையாளத்தோடு முன்னிறுத்தவும், வளர்த்தெடுக்கவும் வேண்டிய காலம் இது. அதற்கு எதிராக உள்ள அனைத்துமே பிற்போக்கின் வகைப்பட்டவையே.இப்போதெல்லாம் சாதி பற்றி பேச பலர் தயாராக இல்லை,, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நம் மனதுக்குள் புழுங்கத் தேவையில்லை.. நான் பார்ப்பனன் என்று ஒரு சாதியினர் சொன்னால் மற்றவர்களும் நான் நாடார் தேவர் , பறையர் ,பள்ளர்,வன்னியர் என்று பெருமையாக சொல்ல வேண்டியது தானே.. இட ஒதுக்கீட்டுக்கும் சலுகைகளுக்கும் சாதியை முன்னிறுத்தும் நாம் மற்ற விஷயங்களுக்கு ஏன் சாதியை சொல்ல தயங்குகிறோம்.. உலகம் மாறிக் கொண்டே வருகிறது.. நாம் மாற மறுக்கிறோம் அல்லது மாற்றத்தை உணர மறுத்து பகுத்தறிவு சிந்தனை இன்றி இருக்கிறோம் என்றே நான கருதுகிறேன்.
Daniel
பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் என்றால், தமிழன் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். அரபு அடிமையாக இல்லாமல் இருக்க இசுலமியத்தையும் ஒழிக்க வேண்டும்..! கிறிஸ்தவத்தில் தான் அன்பும், அறமும் சமூக நீதியும் உள்ளது.. நன்றி டேனியல்.
Chandar
@ravana, Too many cooks(heads) spoils the broth.

@Selva, Brahmins dont vent their anger, but you people feel inferior and vent your anger and venom against brahmin. Nalla mallakka alladhu kuppura paduththu yosinga :-)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.