புத்த கத்தைப் படித்துப் படித்துப்

       புதைந்து போகாதே

பொழுதெல்லாம் படித்து வெறும்

       பூச்சி யாகாதே

பள்ளிக் கூடப் படிப்பு மட்டும்

       உனக்குப் போதாது

பாட நூலில் உள்ள யாவும்

       ஒத்து வராது

மடை உடைத்த வெள்ளந் தானே

       வயலைத் தொட்டது

மனப்பாடக் கரையானில்

       மதியும் கெட்டது.

சிட்டுக் குருவி போல பட்டுச்

       சிறகடித்து வா

செக்கர் வானம் சிந்தும் அழகின்

       குடை பிடிக்க வா.