கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இணையத்தில் என்மீது சோபா சக்தி தொடுத்த பாலியல் தாக்குதல் குறித்து பேசியிருக்கிறேன். பேச்சு என்பதை விட சற்று ஆவேசமாகவே நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருந்தேன்.

ஆணாதிக்கத் திமிரோடு சோபா சக்தி எம் மீது நிகழ்த்த முயன்ற அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகள் எழுதினேன். அதற்கு மறுவினையாக சோபாவிடம் சிறு விளக்கமும் இல்லை.

shobasakthi_350சில நாட்களுக்கு முன் ப்ரியா தம்பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய விவாதம் கீற்று தளத்தில் 'ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?' என்ற தலைப்பில் பிரசுரமானது. கடந்த 3 வருடங்களாக ஒரு பெண், பாலியல் தாக்குதல் குறித்து எழுதியபோது பாராமுகமாய் இருந்த இந்த சோபா சக்தி, பிரச்சினை கீற்று மூலமாக அதிகமான பேரைச் சென்றடைந்தபோது மிரண்டு போய் விளக்கம் கொடுக்கிறார். "தமிழச்சியின் விருப்பத்தின் பேரிலேயே உடல் சார்ந்த உறவாய் இருந்தது. இதைச் சொல்லுவதால் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அவதூறாளர்களே என்னை பேச வைத்தார்கள்" என்கிறார்.

இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்? இதையும் தாண்டி இக்கட்டுரை வெளியிடப்பட்ட உடன் சோபாவின் நண்பர்கள் ‘இது எனக்கு முன்பே தெரியும்’ என்று பின்னூட்டமிடுகிறார்கள். ஓர் அயோக்கியனுக்கு உதவியாய் குழுவாய் இணைந்து ஒரு கட்டுக்கதையின் உருவாக்கத்திற்கு இவ்வளவு ஆர்வமாய் மின்னல் வேகத்தில் விழும் கருத்துக்களுக்கு பின் எந்த அரசியலும் இல்லையா? அல்லது இவர்கள் என் படுக்கை அறைக்குள் நுழைந்து பார்த்தவர்களா?

'இதுவரை யாரிடமும் இதுகுறித்துப் பேசியதில்லை' என்று சோபா சக்தி சொல்வது உண்மையென்றால், அவரது நண்பர்கள் முன்னமே எங்களுக்குத் தெரியும் என்று சொல்வது எப்படி? பெண்களை எப்போதும் படுக்கையறைப் பொருளாக பார்க்கும் புத்தி இருப்பதால் மட்டுமே, சோபாவால் அவரது நண்பர்களிடம் இப்படி பேச முடிந்திருக்கிறது.

இந்த மாதிரி அசிங்கம் பிடித்த வேலைகளை 3 வருடங்களுக்கு முன்பு சோபா செய்தார் என்றுதான் உதை கொடுத்து அனுப்பினேன்.

சோபாவுடன் எனக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது?

இலக்கியம், பெரியாரியம், கம்யூனிசம் என்று பொது நலன் சார்ந்து இயங்கும் நபராக ஆனந்த விகடன் இதழில் சோபா சக்தியின் பேட்டி வந்தது. 'பிரான்ஸில் பெரியாரியம் பேசும் ஆளா' என்ற மகிழ்ச்சியில் அவரைத் தொடர்பு கொண்டேன். அவரது தங்கைதான் எடுத்தார். சோபா அப்போது வீட்டில் இல்லை. மாலையில் சோபாவிடம் இருந்து போன் வந்தது. பெரியாரின் கருத்துக்களை பேசுவதற்கே ஆளில்லாமல் இருந்த எனக்கு, பெரியார் குறித்தும், பெண்விடுதலை குறித்தும் சோபா பேசியது உற்சாகமளித்தது. ஏற்கனவே பழகியவரிடம் பேசுவது போல் அவரது பேச்சு பகடி கலந்து இருந்தது. அரைமணி நேரம் பேசியிருப்போம்.

ஒரு வாரம் கழித்து சோபாவே மறுபடியும் பேசினார். 'அன்றைக்கு அவ்வளவு நேரம் பேசினீர்கள். அதோடு மறந்து விட்டுட்டீங்களா?' என்றார். என்னை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். ஒரு பெரியாரிஸ்ட் மற்றும் ஈழப் போராளியாக இருந்தவரைச் சந்திக்கும் ஆவல் எனக்கும் இருந்ததால் வீட்டிற்கு வரச் சொன்னேன்.

சோபா சக்தி பிரியாவிற்கு அளித்த பதிலில், அவரது பொய்க்கு வலு சேர்க்க உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதியிருக்கிறார். எனக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். சிறுவயது முதல் என்னை நன்கு அறிந்த ஒரு குடும்ப நண்பர்தான் எனக்கு கணவராக வாய்த்திருக்கிறார். சோபா எனது ஊருக்கு வந்தபோது, ரயில்வே ஸ்டேஷன் சென்று அழைத்து வந்ததும் என் கணவர்தான்.

இதையெல்லாம் சோபா ஏன் சொல்லவில்லை? வீட்டிற்கு அழைத்தவளை, படுக்கையறைக்கு அழைத்ததுபோல் ஏன் பேச வேண்டும்? அப்போதுதானே அவர் சொல்லும் 'மூன்றாவது சந்திப்பு உறவுக்கு' வலு சேர்க்க முடியும்!!

நான் பிரான்சில் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும் பொதுவெளியில் தமிழ் மக்களுடன் எனக்குத் தொடர்பே இருக்கவில்லை. உறவினர்கள், நண்பர்களைத் தவிர பொதுவாழ்க்கையில் நான் சந்தித்த முதல் நபர் சோபா சக்திதான்.

என் கணவருடன் வரும்போதே சோபா முழுபோதையில் இருந்தார்; கைகளில் நடுக்கம் இருந்தது. பெரியாரின் கட்டுரைகளை நான் வலையேற்றுவதைப் பாராட்டினார். 'சாதிதான் தமிழ்ச்சமூகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது. என்னைப்போல் ஒரு தலித்தாக இருந்தால்தான் அதன் வலி உங்களுக்கு இன்னும் அதிகமாகப் புரியும்' என்று பேசினார். தமிழகத்தில் சில தலித் எழுத்தாளர்கள் பெரியாரை விமர்சிக்கும்போது, பெரியாரைப் பின்பற்றும் ஒரு தலித் எழுத்தாளர் என்று தெரிந்தபோது அவர் மீதான மரியாதை அதிகமானது. அரை மணி நேரம்தான் அந்த சந்திப்பு நீடித்தது. பின்னர் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். பெரும்பாலும் பெரியார், பெண்விடுதலை, சாதியொழிப்பு பற்றியே பேச்சு இருக்கும்.

இரண்டாவது முறை எனது ஊருக்கு வந்தபோது, ஒரு ரெஸ்டாரெண்டில் சந்தித்தோம். நான் குழந்தைகளுடன் சென்றிருந்தேன். 'ஏன் குழந்தைகளை அழைத்து வந்தீர்கள்' என்று கேட்டார் சோபா. அதன் அர்த்தம் அப்போது எனக்குப் புரியவில்லை. 'அவர்களையும் வெளியே கூட்டி வந்த மாதிரி இருக்குமல்லவா?' என்றேன். 'எப்போதும் குடும்பத்தை சுமந்து கொண்டு இருக்காதீர்கள்' என்று பகடி செய்தார்.

சோபா சொன்ன பொய்களில் ஒன்று எனது வலைப்பக்கத்தை அவர்தான் ஆரம்பித்துக் கொடுத்தார் என்பது. உண்மை என்னவென்றால், நான் ஏற்கனவே வலைப்பக்கம் வைத்திருந்தேன். பெரியாரது கட்டுரைகளை தட்டச்சு செய்து இணையத்தில் ஏற்றும் வேலையைச் செய்துவந்தேன். தட்டச்சு செய்வது, வலையேற்றுவது தவிர இணையம் தொடர்பான தொழில்நுட்பங்கள் எனக்குத் தெரியாது. இரண்டாவது சந்திப்பின்போது சோபா, எனது வலைப்பக்கத்தின் வடிவமைப்பு நன்றாக இல்லை, அதை மாற்றித் தருவதாக சொன்னார். நானும் சரியென்றேன். அதன் விபரீதமும் அப்போது எனக்குப் புரியவில்லை. 'நான் தனியாளாக டைப் செய்து பெரியார் கட்டுரைகளைப் போட்டு வருகிறேன், பெரிய அளவில் வாசிக்கப்படுவதில்லை' என்று சொன்னபோது, சோபா சக்தி 'தமிழ்மணம் என்ற ஒரு திரட்டி இருக்கிறது. அதில் உங்கள் வலைப்பக்கத்தை இணைக்கலாம்' என்று சொன்னார். அதுபோல் இணைத்தும் கொடுத்தார்.

‘பெரியாரின் பார்வையில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் அப்போது ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தேன். அதை தொலைபேசியில் சோபாவிடம் சொன்னபோது, அந்த எழுத்துப்பிரதியைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாகச் சொன்னார். ‘வேறொரு வேலையாக அந்தப் பக்கம் வர வேண்டியிருக்கிறது. அப்படி வந்தால், அந்தப் பிரதியைத் தர முடியுமா’ என்று கேட்டார். அப்படித்தான் மூன்றாவது சந்திப்பு நடைபெற்றது. அவர் என் ஊருக்கு வந்தபோது, இரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்த பார்க்கிங் பகுதியில் எனது காரை நிறுத்தி, பேசிக்கொண்டிருந்தோம். எழுத்துப் பிரதியைப் படித்து விட்டு, ‘பெரியாரைத் திரிக்கிறீர்கள்’ என்று சொன்னார். நான் மறுத்து, விவாதித்தேன்.

ஆனால் இப்போது 'இந்த சந்திப்பில்தான் எங்களிடையே உடல்ரீதியான உறவு ஏற்பட்டது' என்கிறார். தெரியாமல்தான் கேட்கிறேன், பகற்பொழுதில் தெருவில் காமம் கொள்ள அவர் என்ன நாய் ஜென்மமா? இல்லை என்னைப் போன்ற பெண்கள்தான் அப்படித் திரிகிறோமோ?

2007 காலகட்டங்களில் சோபா சக்தி அடிக்கடி வெளிநாடு போய்வந்து கொண்டிருப்பார். கியூபா, மலேஷியா, கொரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளுக்குப் போய் வந்ததை சொல்வார்.

‘அரசு உதவிப் பணத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு வெளிநாடுகளுக்கு எப்படிப் போய்வர முடிகிறது?’ என்று கேட்டபோது, சிரித்துச் சமாளித்தார். ‘நண்பர்கள் கொடுத்து உதவுவார்கள்’என்று வேறொரு முறை சொன்னார்.

ஒரு முறை கடும்போதையில், பேச்சுவாக்கில் தோழர் சுகுணா திவாகருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகச் சொன்னார். 'நீங்களே இங்கு காசில்லாமல் நண்பர்களிடம் வாங்குவதாகச் சொல்லும்போது, சுகுணாவுக்கு எப்படி ஒரு லட்சம் கொடுக்க முடிகிறது? உங்களிடம் ஏது இவ்வளவு பணம்? எந்நேரமும் குடிப்பதற்கு எப்படி பணம் கிடைக்கிறது' என்று கேட்டேன். வழக்கம்போல் பகடியாக, 'பணம்காய்ச்சி மரம் வைத்திருக்கிறேன்' என்று சொல்லி எனது கேள்வியைக் கடந்துபோய்விட்டார்.

எங்களுக்கு இடையே பல்வேறு முரண்கள் இருந்ததாக சோபா சொல்கிறார். ஆனால் அது என்னவென்று சொல்லதாதில்தான் அவரது கள்ளத்தனம் இருக்கிறது. ஈழப்போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து என்னிடம் பேசிவந்தார். 'புலிகளுக்கு ஆதரவான எனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார். நான் கடுமையாக மறுத்தேன். 'மக்கள் அங்கு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் மனிதாபிமானமற்றவை. சமரசமில்லாமல் போராடி வருவது புலிகள் தான்' என்று சொன்னேன். ஈழப்போராட்டத்திற்கு எதிராக சோபா சொல்வது எல்லாம் மிகத் தவறானவை என்று கொள்கை ரீதியாக தொடர்ந்து மறுத்து வந்தேன்.

புலி எதிர்ப்பு அரசியலை என்மீது திணிப்பதில் அவர் தீவிரமாக இருந்தார். என்னுடன் பேசிய பொழுதுகளில் பெரும்பாலான நேரத்தை அதற்குச் செலவிட்டார். ஆனால் தொடர்ந்து கடுமையான வாதங்களால் மறுப்பு தெரிவித்து வந்தேன். ஈழப் பிரச்சினையில் என்னிடம் எதிர்க்கருத்தை உருவாக்க முடியாது என்று தெரிந்த பின்பு அது குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு, பாலியல் சுதந்திரம் தொடர்பாக தனது கருத்தைத் திணிக்கத் தொடங்கினர். ஆண், பெண் மட்டுமல்லாது மூன்றாம் பாலினத்தவரோடும் தான் உறவு வைத்திருப்பது குறித்து பேசினார். நான் அறிந்தவரை மேலை நாடுகளில் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் எதிர்பாலினருடன் உறவு வைத்துக் கொள்ளமாட்டார்கள். அதை ஒரு ஒழுக்கமாகவே அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதற்கு எதிரான செயலுக்கு பாலியல் சுதந்திரத்தை காரணமாக சோபா சொன்னார்.

'ஒரே கணவருடன் எப்படி இத்தனை ஆண்டுகள் உங்களால் வாழ முடிகிறது. பெண்ணிற்கு பாலியல் சுதந்திரம் வேண்டும்' என்றார். 'ஆண் இரண்டு பொண்டாட்டிகள் வைத்துக்கொண்டால், பெண்ணும் இரண்டு புருஷன்கள் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று பெரியார் பேசியதை சோபா குறிப்பிட்டபோது, அதை மறுத்து, பெரியார் அதற்கு முன்னும் பின்னும் சொன்னதைச் சொல்லி, ‘பெரியார் எதிர்ப்பது கற்பைத் தான், பாலியல் ஒழுக்கத்தை அல்ல’ என்று பதில் கூறினேன். பல பெண்களை மணந்த கடவுளர்களையும், மன்னர்களையும் பெரியார் கடுமையாக சாடியிருப்பதை எடுத்துக்காட்டிப் பேசினேன்.

அதன்பின்பு பெரியாரை விட்டுவிட்டு, பின்நவீனத்துவம் பேசத் தொடங்கினார். கட்டற்ற பாலியல் சுதந்திரம், கூட்டுக் கலவி பற்றியெல்லாம் பேசினார்.

தமிழகத்துப் பெண்கள் சிலரை உதாரணம் காட்டினார். 'பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் முற்போக்கானவர்கள்; நாங்கள் எல்லாம் கூட்டுக்கலவி செய்வோம்; அவர்கள் போல மற்ற பெண்கள் இருக்க வேண்டும், அப்போதுதான் ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் விடுபட முடியும்' என்றார். ஒழுக்கம் பற்றிய எனது கருத்துக்களை மாற்ற முயற்சித்தார். நான் கடுமையாக மறுத்தேன்.

'பிற்போக்கான தமிழ்ச் சமூகத்திலிருந்து மக்களை முன்னேற்ற விரும்புவர்கள், பொதுவாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அவர்கள் பின்னே அணி திரளுவார்கள். சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்வது மக்களுக்குத் தெரியவந்தால், அவர்கள் நம்மை மட்டுமல்ல, நமது சித்தாந்தங்களையும் சேர்த்தே நிராகரிப்பார்கள்' என்று பதில் கூறினேன். இந்தப் பேச்சுக்கள் எல்லாம் ஒரு தொலைபேசி பேச்சில் நடந்ததல்ல. வெவ்வேறு நாட்களில் எந்தத் தொடர்ச்சியும் இல்லாமல் பேசியவை. ஆனால் பேசியதன் சாராம்சம் இதுதான்.

இவ்வளவு முரண்பாடுகளுக்கு இடையிலும் சோபாவுடன் நட்பைத் தொடர்வதற்கான காரணங்களும் இருந்தன. பெரியார் எழுத்துக்களை இணையத்தில் பரப்புவதை ஊக்கப்படுத்தினார். இணையத்தோடு மட்டும் நின்றுவிடாமல், செயல்பாடுகளில் இறங்கி, பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியபோது சோபா என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினார். பாரீஸில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்கு துண்டறிக்கை அச்சிட உதவினார். இவை அனைத்திற்கும் மேலாக சோபா ஒரு ஈழப்போராளி, பெரியாரியவாதி என்பதும், தலித் என்று சொல்லியதும் அவருடனான நட்பைத் தொடரச் செய்தது.

எனது வலைப்பக்கம் தமிழ்மணம் வாயிலாக அதிகமான பேர் வாசிக்கும் தளமாக மாறியது. வலைப்பதிவர்களிடையே தமிழச்சி பெயர் பரிச்சயமாகி இருந்தது.

ஒரு நாள் சுவிஸிலிருந்து சோபா போன் செய்தார். வழக்கம்போல் போதை. 'தமிழச்சி எனக்கு நெருங்கிய தோழி என்று சொன்னால் எனது நண்பர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் பேச முடியுமா?' என்று கேட்டார்.

ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. அதன்பின்பு இந்த மாதிரி போன் செய்வது அடிக்கடி நடந்தது. எதிர்முனையில் பலரின் சிரிப்புச் சத்தம் கேட்கும்போது இதில் ஏதோ உள்விளையாட்டு இருக்கிறது என்று தெரிந்து, போனைத் துண்டிக்கத் தொடங்கினேன்.

பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைப் பாராட்டி கி.வீரமணி எழுதிய மின்னஞ்சல் நான் படிப்பதற்கு முன்பாகவே வேறு யாரோலோ படிக்கப்பட்டிருப்பதை அறிந்து, சோபாவுக்கு போன் செய்தேன். ஏனென்றால் எனது வலைப்பக்கத்தின் பாஸ்வேர்டும், மின்னஞ்சலின் பாஸ்வேர்டும் ஒன்றாகத்தான் இருந்தது. வலைப்பக்கத்தின் வடிவமைப்பை மாற்றுவதற்காக சோபா என்னிடம் பாஸ்வேர்ட் வாங்கியிருந்தார். 'வீரமணியின் மெயிலைப் படித்தீர்களா' என்று கோபமாகக் கேட்டபோது, 'ஏன் படிக்கக்கூடாதா? நான் உனக்கு நெருங்கிய நண்பனல்லவா! நமக்குள் என்ன ரகசியம்?' என்று கேட்டார். கடுமையாகத் திட்டி போனை வைத்தேன்.

'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று இன்னொரு நாள் சோபா பேசியபோது, கோபத்தை அடக்கிக் கொண்டு எனது ஊருக்கு வரச் சொன்னேன். இரயில்வே ஸ்டேஷனிலேயே வைத்து சராமாரியாக அடித்தேன். போதையில் இருந்த சோபா, அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு, ஐ லவ் யூ என்றார். மேலும் கோபமடைந்து உடனே அங்கிருந்து கிளம்பி, சோபாவின் நடத்தையையும், அவரை அடித்ததையும் எனது வலைப்பக்கத்தில் பதிவாகப் போட்டேன். வலைப்பதிவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில நாட்களில் திடீரென எனது வலைப்பதிவுகள் முழுக்க அழிந்துபோனது. இணையத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வைத்துப் பார்த்தபோது, பெரிய ராணுவக் கேந்திர இணையதளங்களையே முடக்கும் வைரஸ் ஒன்று எனது வலைதளத்தில் செலுத்தப்பட்டிருப்பதாக சொன்னார்கள். எனது நேரத்தையெல்லாம் உருப்படியாக செலவழித்து இணையத்தில் ஏற்றி வைத்திருந்த சுமார் 1600 பெரியார் கட்டுரைகளும் அதோடு அழிந்துபோனது. எனது கணிப்பொறியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வைரஸ் தாக்கி, புது கணிப்பொறி வாங்க வேண்டி வந்தது.

இரண்டாவது முறையாக சோபா என்னிடம் அடிவாங்கியதும் நடந்தது. ஒரு நாள் இரவு 8 மணிக்கு சோபா எனக்குப் போன் செய்து, ‘தமிழச்சிக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது என்று சொன்னால், எனது நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவர்களிடம் பேச முடியுமா?’ என்று கேட்டார். ‘முன்பின் தெரியாதவர்களை எல்லாம் என்னுடன் பேச வைக்க முயற்சிக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு தொலைப்பேசியைத் துண்டித்தேன்.

அன்று இரவு 11.45 மணிக்கு மீண்டும் சோபாவிடம் இருந்து போன். நான் இருக்கும் ஊரில் இருப்பதாகவும், ஒரு நண்பனைப் பார்ப்பதற்கு காரில் அழைத்துப் போக முடியுமா என்றும் கேட்டார். நான் முடியாது என்று சொல்லிவிட்டு, காலையில் போன் செய்து விசாரித்தேன். நான் இருக்கும் ஊரில் உள்ள ஹோட்டலில் இருப்பதாகவும், உடல்நலம் சரியில்லை என்றும் சொன்னார். மனம் பொறுக்காமல் பார்க்கச் சென்றேன். அந்த காலை நேரத்திலும் போதையில் இடுப்பில் ஒரு துண்டுடன் இருந்தார். குகன் என்பவர் சோபாவைத் தொலைபேசியில் அழைக்க, சோபா அவரிடம் 'நான் தமிழச்சியுடன் ஹோட்டலில் இருக்கிறேன்' என்றார். அடுத்து வந்த 3, 4 அழைப்புகளிலும் இதேதான் சொன்னார். எனக்கு ஆத்திரமாகி ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்துவிட்டு, என் கைபிடித்து இழுத்தார். நான் கோபத்தில் அவரை பலமாகத் தாக்கினேன். அடித்தும், உதைத்தும் அவரைக் கீழே விழச் செய்தேன். சோபா அழத் தொடங்கிவிட்டார். அன்றோடு துண்டாகிப் போனது சோபாவுடனான எனது நட்பு. அதுதான் நான் அவரைக் கடைசியாக சந்தித்தது.

என்னை புலியெதிர்ப்பு அரசியல் பேச வைக்கவும், பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தவும் முயற்சித்து தோல்வி கண்ட சோபா, என்னை அவரது படுக்கையறைப் பெண்களுள் ஒருவராக நண்பர்களிடம் சித்தரித்து அற்ப சுகம் கண்டார். சோபாவின் நண்பர்கள் சிலர் அண்ணி என்று அழைக்க ஆரம்பித்தது, தமிழ்மணத்தில் என்னைப் பற்றி பலவாறு செய்திகள் வந்தது, இதிலெல்லாம் சோபாவின் கள்ளத்தனம் இருந்ததை பின்னர்தான் நான் உணர முடிந்தது.

சோபாவை மொத்தம் 12 முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். புதுவை எழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்ஸ் வந்தபோது சந்தித்தது, பெண்கள் சந்திப்பின்போது சந்தித்தது, பகுத்தறிவு பிரசுரங்களை அச்சடிக்க உதவியபோது சந்தித்தது, பிரசுர விநியோகத்தின்போது ஒரு முறை, தலித் மாநாட்டில் இரண்டு முறை, மாசிலாமணி வீட்டிற்கு கணவருடன் சென்றபோது ஒரு முறை, கடைசியாக இரண்டு முறை அடி கொடுத்தது என மொத்தம் 12 முறைதான் சோபாவை சந்தித்திருக்கிறேன். அதில் கடைசி இரண்டு சந்திப்புகளிலும் அவர் அடி வாங்கினார். பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். அப்படி பேசியது எல்லாம் கருத்தியல் விவாதங்கள்தான். அவ்வளவுதான் எங்களுக்குள் இருந்தது. அவரிடம் காதல் கொள்வதற்கான எந்த காரணமும், அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. வரைமுறையற்ற பாலியல் உறவு, முழுநேரமும் போதை என இருக்கும் ஒருவர், ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு பெண்ணிடம் எந்த வகையிலேனும் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியுமா?

அவரது நட்பால் நான் இழந்ததுதான் அதிகம். நான் தட்டச்சு செய்திருந்த பெரியார் கட்டுரைகள் முழுக்க அழிந்து போனது. ஆபாசப்படங்களில் எனது முகத்தை ஒட்டி, நான் நிர்வாணமாக இருப்பதாகக் காட்டியது நடந்தது. எனது கேரக்டரைப் பற்றி தவறான செய்தி பரப்பப்பட்டது. இவற்றையெல்லாம் கடந்த மூன்றரை ஆண்டுகளாக எனது இணையதளத்தில் கடுமையாக திட்டி எழுதி வந்திருக்கிறேன் (இணைப்புகளைப் பார்க்கவும்). அப்போதெல்லாம் கள்ள மௌனம் சாதித்து வந்தார் சோபா சக்தி.

என்னைப் பற்றி தவறாக செய்தி பரப்பியதுபோல்தான், மற்றவர்களைப் பற்றியும் என்னிடம் தவறான செய்தி சொல்லியிருந்தார். வளர்மதி, மாலதி மைத்ரி ஆகியோர்களைப் பற்றி வேறுவிதமாக திரித்துப் பேசினார். இவர்களை எல்லாம் நான் தவறாகப் விமர்சித்ததற்குக் காரணம் சோபாதான். ஆனால் எந்தக் கூச்சமும் இல்லாமல் சோபா சக்தி தொடர்ந்து இப்போதும் பொய்களேயே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நட்பை காமமாகப் பார்ப்பதும் பெண்ணை ஆபாசமாய்ப் பேசுவதும், உண்மை தெரியவரும்போது பாலியல் ரீதியாக தாக்குதல் தொடுக்கவும் தயாராய் இருப்பவருக்கு சமூகப் பிரச்சனை குறித்துப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

பெரியாரைப் படித்த நான் எப்போதும் மனவுளைச்சலுக்கு ஆளாக மாட்டேன். எதையும் துணிவுடன் சந்திக்கும் குணம் எனக்கு உண்டு. கீற்றுவில் எழுதியதாலேயே நான் இவ்வளவு நாகரிகமாக எழுதியிருக்கிறேன். சோபா மேலும் பொய்களையே பேசுவார் என்றால், தொடர்ந்து என்னிடம் நாசூக்கை எதிர்பார்க்காதீர்கள். வழக்கமான பாணியில் என்னுடைய இணையதளத்தில் பதில் சொல்ல வேண்டி வரும்.

இவ‌ரை பின்ந‌வீன‌த்துவவாதி, முற்போக்காளர், நாகரிகமானவர் என்று சொல்லும் பெண்க‌ளைப் பார்த்தால் சிரிப்பாகவும், ப‌ய‌மாக‌வும் இருக்கிறது. உங்க‌ளுக்குள் எந்தப் பிரச்சினையும் வ‌ராத‌ வ‌ரைக்கும்தான் சோபா உங்க‌ளுக்கு தேவகுமாரனாகவே காட்சியளிப்பார். முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கினால், நான் ச‌ந்தித்த யூதாஸையே நீங்க‌ளும் ச‌ந்திக்க நேரிடும்.

இணைப்புகள்:

ஆண்குறி அரசியல் வெறிக்குள் பெண்குறி! (http://tamizachi.com/index.php?page=date&date=2010-01-14)

28-வது பெண்கள் சந்திப்பு: ´புலியெதிர்ப்பு பெண் தாதாக்களின் முகத்திரை கிழிந்தது.´ (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1562)

"ரா" கூலிக் கூட்டத்தினரை அம்பலப்படுத்துவோம்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1009)

இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்! - தொடர்ச்சி:2 (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=482)

இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்..! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=468)

பெண்கள் சந்திப்பு : உள்ளாடை புரட்சி பெண்களுக்கும், நளினி ஜமீலாவுக்கும் உள்ள வித்தியாசங்கள்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=426)

சோபா சகதியின் அரசியல் விபச்சாரம் - தொடர்ச்சி : 3 (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=399)

பின்ஈனத்துவத்துக்கு வக்காலத்து வாங்கும் பொட்டை பொறுக்கி நாய்களை செருப்பால் அடிக்க வேண்டும்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=364)

பிழையான புரிதலில் பெண்ணீயம்..! (http://tamizachi.com/index.php?page=date&date=2008-09-20&article=2013)

பாரீசில் தாதாக்கள் நடத்திய 1983-2008 நெடுங்குருதி..! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=258)

27- ஆம் வருட பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! - மீள் ஆய்வு (http://tamizachi.com/index.php?page=date&date=2008-08-16)

"ங்கொய்யாலா" (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=297)

27 -ஆம் வருட பெண்கள் சந்திப்பும் - "Sho" காட்டுதலும்…! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=290)

"sho" பா சக்தியின் டாவு? (http://tamizachi.com/index.php?page=date&date=2008-07-18)

விவகாரமான "மாமா" பதிவர்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=945)

(சிறுகுறிப்பு: சோபா சக்தி என்னிடம் திரித்துப் பேசிய தகவல்களின் அடிப்படையிலேயே தோழர் மாலதி மைத்ரியைத் தவறாகப் புரிந்து கொண்டு சில கட்டுரைகளில் விமர்சிக்க நேர்ந்தது. அந்தப் பகுதிகளை விரைவில் நீக்குவேன். தோழர் மாலதி மைத்ரியிடம் இப்போது வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்)

- தமிழச்சி

Comments

61 comments

61
முகுந்தன்
சோபா சக்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் ஈழப் போராளி. ஜனநாயகவாதி அவரை திட்டமிட்டு சிறுமைப்படுத்தி இருக்கிறார் தமிழச்சி
முகுந்தன்
பெரியார் தொண்டர்கள் மத்தியிலேயே தமிழச்சி பேசும் பெண்ணும் குறித்து விமர்சனம் இருக்கிறது. இந்துத்துவ மனோபாவத்துடன் பெண்ணியம் பேசுகிறார். பெ.தி.க தோழர் ஒருவர் கூட சமீபத்தில் தமிழச்சியை கண்டித்து கட்டுரை எழுதி இருக்கிறார். அதற்கான திரி
http://thozharperiyar.blogspot.com/2010/03/blog-post.html
K.Kuppan
பெரியாரிசம் பேசி ஏதோ பெரிய அறிவிஜீவிகள், போராளிகள்போல் நடித்து சமூகத்தில் வலம் வரும் இம்மாதிரி எழுத்தாளர்களின் உண்மை சொரூபம் இப்போது வெளியே தெரிகிறது. ச்சீ.... ச்சீ....வெட்கம் கெட்ட ஜென்மங்கள். உங்களுக்கு இலக்கியம் ஒரு கேடா ???? இவர்தான் சோபா(னம்) சக்தியா ??? ச்சே ச்சே!
உடல், உயிர், மூச்சு அனைத்தும் கொடுத்து நடத்திய முப்பதுவருட ஈழப்போரட்டம் வெற்றிகாணாமல் போனது இதுபோன்ற தமிழர்கள் இருப்பதால்தான் என்பது இப்போது தெரிகிறது.
davan
i am very confused.dear shoba whtat are doing?
Krishnaraja
@முகுந்தன்:
கயிறு திரிப்பதே உங்க ஒட்டுமொத்தக் கூட்டத்துக்கும் கைவந்த கலையாயிற்றே. நீங்கள் காட்டிய சுட்டியில் தமிழச்சியை பெ.தி.க. தோழர் கண்டிக்கும் வரிகளைக் கூற முடியுமா?

இருவருக்கும் மனம் ஒப்பி, காமம் கொள்வது குறித்து பெரியார் எப்போதும் குறை கூறவில்லை.

இங்கு நடக்கும் விவாதமே பெண்ணின் விருப்பமில்லாமல் அத்துமீறி நடந்த சோபா சக்தியின் பொறுக்கித்தனம் குறித்தது.. பெண்களைப் போகப் பொருளாகக் கருதும் அயோக்கியத்தனத்தை பெரியார் பெயர் சொல்லி செய்ய முயன்றிருக்கிறார்.

அப்படியான செய்கையை பெரியார் எங்கேயாவது ஆதரித்தார் என்றால் நீங்களோ, பெண்ணிய வேடதாரி சோபாவோ அதற்கு ஆதாரம் காட்டுங்கள்...

ஒழுக்கக்கேடுக்கு விரோதமான, வரைமுறையற்ற பாலியல் சுதந்திரத்தை பெரியார் இவ்வாறு கண்டிக்கிறார்...

"...மனித சமுதாயத்தில் யாருக்கு உரிமை கொடுத்தான் என்றால் பொட்டுக் கட்டிய தேவடியாளுக்குத்தான் உரிமை கொடுத்தான். சுதந்திரம் கொடுத்தான். அவள் தான் தன் இஷ்டப்படி சுதந்திரத்தோடு நடந்து கொள்ள முடியும். மற்றவள் வீட்டிற்குள் தான் கிடக்க வேண்டும். வெளியே வரக் கூடாது. ஜன்னல் பக்கம், கதவுப் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு செய்து பெண்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக்கி விட்டார்கள். இந்த ஆண்கள் நாங்கள் தோன்றுகிறவரை அவன் இஷ்டப்படி எத்தனைப் பெண்கள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என்று தானே இருந்தது. நாங்கள் தோன்றிய பின் தானே ஒருவன் ஒருத்தியைத் தான் கட்டிக் கொள்ள வேண்டும். அவள் உயிரோடு இருக்கும் போது வேறு ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது. அப்படிச் செய்வது சட்டப்படிக் குற்றமாக்கப்பட்ட பின் தானே ஆண் ஒருத்தியோடு இருக்கிறான். இல்லாவிட்டால் கிருஷ்ண பரமாத்மா மாதிரி அவனிஷ்டத்திற்கு எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்வானே?..." (08.07.1968 அன்று நடைபெற்ற தொல்காப்பியன் - இராசாமணி, நெடுஞ்செழியன் - கல்கி ஆகியோர் திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றியவுரை. விடுதலை 10.08.1968)
Engels
சோபாசக்தியை பிழைகூறுவதில் எந்த பலனும் இல்லை. சோபாசக்தியின் நடத்தைகள், குணநலன்கள் , அரசியல் தெரிந்தவர்கள் சோபாசக்தியிடமிருந்து தள்ளியே இருந்தனர். பொது வெளியில் அரசியல் சமூக செயல்பாடுகள் கொண்ட தமிழச்சி போன்றவர்கள் இவ்வாறான நபரோடு நட்புக்களை பேணமுதல் தனிநபர் நடத்தைகளை ஆராய்தல் அவசியம். இன்னைறய காலத்தில் காம இச்சைகளோடு படுக்கை அறைக்கு பெண்களை இழுக்கும் ஒரு தந்திரோபாயமாக பெண்ணியம் பேசும் சோபாசக்தி போன்று பலர் உலாவுகின்றனர். இவர்களின் எழுத்தில் பேச்சில் சிக்குண்டு போகாமல் இருக்க இவர்களின் தனிப்பட்ட வாழ்வு நடத்தைகளை ஆராய்தல் அவசியம் ஆகும். இதில் வேதனையும் அதிர்ச்சியும் என்னவென்றால் சோபாசக்தி போன்றவர்களின் அயோக்கியத் தனமான பாலியல் நடவடிக்கைகளுக்கு இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் துணையாக இருப்பதுவும், இவர்கள் அவர்களை சாட்சியாக அழைப்பதுவும்தான். சோபாசக்தியின் அயோக்கியத் தனமான பிரச்சாரங்களில் சோபாசக்திக்கு துணை நிற்கும் சில பெண்களை காணும்போது அதிர்ச்சியும் கவலையுமே ஏற்படுகின்றது. சோபாசக்தி என்ற பாலியல் வக்கிர நடத்தை கொண்ட மனிதனின் நச்சு வதந்திகளை, பிரச்சாரங்களை மனத் துணிவுகொண்டு எதிர் கொள்ளும் தமிழச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
அன்புமணி
தோழர் தமிழச்சி உங்கள் எழுத்துக்களில் உண்மை தெரிக்கிறது.பொய் வேடம் போடுகின்ற நபர்களை நீங்களும் பிரியாதம்பியும் அடையாளம் காட்டி உள்ளீர்கள்.சீரழிந்து போனவர்கள் ,கைகூலிகளாக மாறி இரண்டகம் செய்பவர்கள் , உயர்ந்த கொள்கைகளையும் சிறந்த தலைவர்களையும் தங்கள் முகமூடிகளுக்காக பயன்படுத்திக்கொள்வது வெட்கக்கேடு. இவர்களைப் போன்றோரை ஆதரிக்க, விளம்பரப்படுத்த இங்கே தமிழகத்தில் ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை சந்தேகப்பட வேண்டியுள்ளது.
நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்.
walter williams
ஒரு ஆண், பெண் என்று இங்கே நாம் பிரித்து பார்க்க வேண்டியதில்லை. மனித நேய அடிப்படையில் நாம் பார்த்தால் சோபா சக்தி என்கிற மிருகம், சாதாரண ஆண்களிடம் இருக்கும் பலகீனங்களை வைத்துக்கொண்டே தமிழச்சி அவர்களிடம் நட்பு பேனியிருக்கிறார். உண்மையாகவே பெரியார் கருத்துக்கள் மீது மரியாதை கொண்ட ஒரு பெண், தன் தாய்மண்ணை விட்டு வெகுதூரம் வந்துவிட்டபின்பும், அந்த நாட்டு கலாசாரத்துக்கு மாறாமல், பெரியார் மற்றும் தமிழ் இலக்கிய உணர்வுகளுக்கு வடிகால் தேட முயற்சி செய்துள்ளார். இதை தவறுதலாக அல்லது தனக்கு சாதகமாக்கி கொள்ள அந்த மிருகம் முயற்சித்துள்ளது. ஆனால் இன்றும் குறி கேட்டல், சோதிடம் ஆகியவற்றின் மீது அலாதி பிரியம் கொண்ட அபலை ஈழ தமிழச்சி போல் இந்த தமிழ்நாட்டு தமிழச்சியையும் நினைத்து கொண்டார் போலும் [ ஈழத்து பெண்களை தவறாக சொல்லவில்லை, அவர்களுடைய இயல்புகளை சொல்ல வந்தேன். பாரதியும், பாவேந்தரும், அய்யாவும் காண விரும்பிய பெண் விடுதலையை நடத்திக்காட்டியவர் எமது தலைவர், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ] அறிவு ஆசான் பிறந்த கொங்குசீமையை சேர்ந்தவர் தமிழச்சி என்பதை அந்த மிருகம் புரிந்துகொள்ள வில்லை.
உலகம் போற்றும் உத்தமர்களாக இருந்தாலும், அவர்கள் சில பலகீனங்களுக்கு அடிமைப்பட்டு போகும் போது, அவர்கள் பெற்ற சிறப்புகள் எல்லாம் அடிப்பட்டு போகும் என்பதை நாம் கற்றுகொண்டிருக்கிறோம். போதை பலகீனத்துக்கு அடிமையான அந்த மிருகம், தனது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க, நண்பர்களோடு உல்லாசமாக இருக்கும் போது தமிழச்சி அவர்களை தொலைபேசியில் அழைத்து தன் ஆணாதிக்க திமிரை காட்டி உள்ளார். இங்கு தமிழச்சி அவர்கள் அவசரபடாமல் தன் மீது படர இருந்த சிலந்தி வலைகளை அனாசியமாக தட்டி கழித்து மிடுக்குடன் மீண்டு வந்து விட்டார். நாம் கடந்த ஆண்டுகளில் facebook இணையதளத்தில் தமிழச்சி அவர்களோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறோம். ஈழ விவகாரத்தில் சில கருத்துக்களை தமிழச்சி அவர்கள் தெரிவித்ததுர்க்கு, இந்த மிருகம் போன்றோர் தான் காரணம் என்று எண்ணுகிற போது கொலைவெறி வருகிறது.

பெண்விடுதலை குறித்து பேசும் ஆண்கள், தங்கள் இல்லங்களில் அவ்வாறு நடந்து கொள்கிறார்களா என்று எண்ணுகிற போது, நாம் இல்லை என்றே நம்புகிறோம். நாம் இங்கே குறிப்பிட விரும்புவது தமிழச்சி அவர்களின் கணவரைபற்றிதான். தனது மனைவி முன் பின் அறியாத ஒரு நபரை அழைத்து வாருங்கள் என்றவுடன், மறுப்பேதும் சொல்லாமல் தம்முடைய இல்லத்திற்கு, அதுவும் குடிபோதையில் இருந்த ஒரு மிருகத்தை கண்ணியமாக அழைத்து வந்திருக்கிறார். இதை கவனிக்கும் எத்தனைபேரின் இல்லங்களில் இப்படி நடந்துள்ளது. ஆக இந்த பிரச்சனையின் ஆரம்ப நிகழ்விலிருந்து இன்று வரை, இதோ இந்த எழுத்துக்கள் வரை தெரிய வாய்ப்பு இருந்துள்ளது. அய்யாவின் கொள்கை மேல் பற்று கொண்ட ஒரு போராளிக்கும், போலி மார்க்சியம் பேசிய ஒரு சாதி வெறி பிடித்த மிருகத்துக்கும் இடையில் நடந்த போராட்டத்தை சற்று தள்ளி நின்று கவனித்தே வந்துள்ளார். தமிழச்சி அவர்களின் கணவரை பாராட்டுகிறோம்.

முன்பு ஒருமுறை தமிழச்சி அவர்களை அலி என்பவர் மிகவும் மோசமாக விமர்சித்தபோது நான் பயன்படுத்திய சொற்களையே இப்போதும் பயன்படுத்த விரும்புகிறேன். சோபா சக்தி என்கிற மிருகம் தமிழச்சி அவர்களை இணையத்தில் தவறாக எழுதி வருகிறது. இதை எல்லாம் கண்டு தமிழச்சி துவண்டு போய் விட மாட்டார், இதை தாங்கி கொள்வார். சோபா சக்தி என்கிற மிருகம் தமிழச்சி அவர்களை இணையத்தில் தவறாக எழுதி வருவதை கவனிக்கும் போது அய்யாவின் தொண்டர்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது. நன்றி.

தமிழச்சி அவர்களால் தடை செய்யப்பட்ட கரிகாலனின் தம்பிகளில் ஒருவன்

சா. வால்டேர் வில்லியம்ஸ்
கத்தார்
ramona
//சில நாட்களில் திடீரென எனது வலைப்பதிவுகள் முழுக்க அழிந்துபோனது. இணையத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வைத்துப் பார்த்தபோது, பெரிய ராணுவக் கேந்திர இணையதளங்களையே முடக்கும் வைரஸ் ஒன்று எனது வலைதளத்தில் செலுத்தப்பட்டிருப்பதாக சொன்னார்கள். எனது நேரத்தையெல்லாம் உருப்படியாக செலவழித்து இணையத்தில் ஏற்றி வைத்திருந்த சுமார் 1600 பெரியார் கட்டுரைகளும் அதோடு அழிந்துபோனது. எனது கணிப்பொறியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வைரஸ் தாக்கி, புது கணிப்பொறி வாங்க வேண்டி வந்தது.//
துரதிஸ்டவசமாக என் கணனிக்கும் இச்சம்பவம் சோபாவின் கொரில்லாவை விமர்சித்துக் கதை எழுதியதால் வந்தது.
இறைகற்பனைஇலான்
பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு ஆண்கள் இவ்வளவு தொல்லைக் கொடுப்பதைப் பார்த்தால் வெட்கப்பட வேண்டியுள்ளது. இவர்கள் எழுத்தாளர்கள் என்பது தவறு.பெரியார் சொன்னார், பெண்களின் ஒவொரு பிரச்சினையையும் அவனவன் தன் பெண்டாட்டியை வைத்துத்தான் பார்க்கிறான், தன் தாயின் பிரச்சினையாகப் பார்ப்பதில்லை என்பதாகக் கூறியுள்ளார். எனவே பெண்கள் மீதான வண்முறைகளை பெரியார் ஆதரிக்கவில்லை.
செந்தமிழ்மாறன்
சோபா சக்தியை பிழை கூறும் தமிழச்சி சற்று திரும்பி பார்க்கவேண்டும். இந்துத்துவமே பெண் - கற்பு - ஒழுக்கம் என்றெல்லாம் பேசுகிறது. இவ்வாறு பேசுவதன் மூலம், பெண்களை அவர்களாகவே அவர்களே அடக்கி ஒடுக்கவும் வழி வகை செய்கிறது. அதன் நீட்சியாகவே தமிழச்சி என்று பெயர் வைத்துகொண்டுள்ள இந்த இந்துத்துவ வாரிசு, ஒழுக்கம், கற்பு பெண் என்று இந்துத்துவ பெண்ணியம் பேசுகிறது. பெரியார் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருந்தால் என்ன தப்பு என்று கேட்டிருக்கிறார். பெண்கள் கற்பு என்னும் மாயையிலிருந்து விடுபட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பெரியாரும் கூட மகளாக வந்த பணிப்பெண்ணை தன் உடல் துணையாக ஆக்கிக்கொண்டார். பெரியாரின் வழி வந்த சோபா சக்தியும் அவ்வாறே விரும்பியிருக்கிறார். இதில் என்ன தவறு? கற்பு புண்ணாக்கு என்று இந்துத்துவம் பேசும் தமிழச்சிதான் வெட்கப்பட வேண்டும். சோபாசக்தி வெட்கப்பட என்ன இருக்கிறது?
இலக்கியன்
சோபாசக்தி தமிழிச்சி இருவரின் அரசியலும் தெரியாது, இந்த பிரச்சனையின் ஆழ அகலங்கள் எதுவும் தெரியாத, இந்தக் கட்டுரையை ஒரு பொது வாசகனாக வாசித்த ஒருவனின் இயல்பாக மனதில் தோன்றி முதலாவது கேள்வி:

|| 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று இன்னொரு நாள் சோபா பேசியபோது, கோபத்தை அடக்கிக் கொண்டு எனது ஊருக்கு வரச் சொன்னேன். இரயில்வே ஸ்டேஷனிலேயே வைத்து சராமாரியாக அடித்தேன். ||

"நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று சொன்னதற்காக சோபாசக்தியை தமிழச்சி ஏன் அடிக்கவேண்டும்?
நடுநிலையாளன்
சில நாட்களாக கவனித்து வருவதில் ஷோபா சக்தி பக்கம் நியாயம் இருப்பதாய் தெரியவில்லை. அவர் குடிப்பது பலருக்கு தெரிந்த விடயம் தான், முதல் தடவை ஷோபா அப்படி நடந்தவுடன் தமிழச்சி அவனை விட்டு விலகி இருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? தமிழச்சியிடம் இன்னொரு கேள்வி இதே இணையத்தளம் தானே புலிகள் அழித்து விட்டார்கள் என்று இரண்டு மாதங்களுக்கு முன் நீங்கள் சொன்னது? மூன்று நாட்களுக்கு முன் தான் உங்களுக்கு அதை செய்தது ஷோபா சக்தி என்று தெரிகிறதா?

ஷோபா விளக்கம் அளித்திருப்பதை பார்த்தால் எங்கள் ஊர் அரசியல் வாதி தோற்று விடுவார் போல் இருக்கிறது. தன்னை நியாய இவ்வளவு கீழ்தரமாய் எழுதுவார் என்று நினைக்கவில்லை.

//தமிழகத்துப் பெண்கள் சிலரை உதாரணம் காட்டினார். 'நாங்கள் எல்லாம் கூட்டுக்கலவி செய்வோம்// நீங்கள் பொத்தம் பொதுவாய் சொல்வது ஷோபா சக்தியுடன் நட்பு ரீதியாய் தொடர்பு வைதிருந்தவர்களையும் சந்தேகிக்க வைக்கும். அவர்கள் பெயரை வெளியிட வேண்டும் இல்லை என்றால் அதை திரும்ப பெறவேண்டும். அந்தோனி குறி கவிதை லீனாவின் கவிதை அளவுக்கு இல்லை எண்டாலும் நன்று
Thamizhan
Looks like 50 % Story - 50 % Truth...

Only You and Shoba Sakthi can tell that !!!!

Even after all the incidents, you have once gone to a hotel to meet him. You lost ur credit there.

If this case goes to police, they will say within 24 hours that what you have said is bull shit and will only accept ur voice if you have concrete proofs.

So better stop fighting over the net.

//சில நாட்களில் திடீரென எனது வலைப்பதிவுகள் முழுக்க அழிந்துபோனது. இணையத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வைத்துப் பார்த்தபோது, பெரிய ராணுவக் கேந்திர இணையதளங்களையே முடக்கும் வைரஸ் ஒன்று எனது வலைதளத்தில் செலுத்தப்பட்டிருப்பதாக சொன்னார்கள். எனது நேரத்தையெல்லாம் உருப்படியாக செலவழித்து இணையத்தில் ஏற்றி வைத்திருந்த சுமார் 1600 பெரியார் கட்டுரைகளும் அதோடு அழிந்துபோனது. எனது கணிப்பொறியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வைரஸ் தாக்கி, புது கணிப்பொறி வாங்க வேண்டி வந்தது.//

Idhu verum kattu kadhai pola thaaan thaerigiradhu

/////
சோபாவை மொத்தம் 12 முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். புதுவை எழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்ஸ் வந்தபோது சந்தித்தது, பெண்கள் சந்திப்பின்போது சந்தித்தது, பகுத்தறிவு பிரசுரங்களை அச்சடிக்க உதவியபோது சந்தித்தது, பிரசுர விநியோகத்தின்போது ஒரு முறை, தலித் மாநாட்டில் இரண்டு முறை, மாசிலாமணி வீட்டிற்கு கணவருடன் சென்றபோது ஒரு முறை, கடைசியாக இரண்டு முறை அடி கொடுத்தது என மொத்தம் 12 முறைதான் சோபாவை சந்தித்திருக்கிறேன். ////////

Unga veetukku vandhaare, antha kanakku idhala irukka ?

ellarum poi edhaachum vela vetti irundhaa paarunga
முகுந்தன்
இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு கருத்தை மாற்றும் வகையராக்களுக்குள் தமிழச்சியும் ஒருவர். இருவருக்கும் இடையே ஆன உறவை ஓர் இடத்தில ஒத்துக் கொண்டு இருந்திருக்கிறார்.
கீழே படியுங்கள்:

********************
Kavin Malar கவின் மலர்
‎"பேச வேண்டும், பேச வைக்க வேண்டும்" என்ற 4 வருட முயற்சி இன்று வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. சக பெண் ப்ரியா தம்பிக்கு மிக்க நன்றி

இது தமிழச்சியின் செய்தி...! ஷோபாவின் கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார் அவருடைய பக்கத்தில். தமிழச்சியும் ஷோபாவின் இக்கட்டுரையில் உள்ளவற்றை ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆக, இத்தனை நாள் செய்த அவதூறுகளுக்கு என்ன பதில்? அதனால் ஷோபாவுக்குண்டான மன உளைச்சல்களுக்கு என்ன நஷ்ட ஈடு?
இதன் காரணமாகவே ஷோபாவுடன் பழகும் நண்பர்கள் அத்தனைபேரையும் வசை பாடியதற்கெல்லாம் என்ன பதில்? எதுவும் தெரியவில்லை.
வசை பாடிய தூயவர்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா என்று பார்த்தால் உடனே இப்படி நீ வெளிப்படையாக பேசியது தவறு என்று தொடங்குகிறார்கள். என்ன மனிதர்களோ? என்ன புரிதலோ?
********************
Kavin Malar கவின் மலர்

உங்கள் கட்டுரை ஒரு கண்ணியமான எல்லைக்குள் நின்று பேசியது. பழகிய அன்பிற்கு நீங்கள் அளிக்கும் மதிப்பு புரிகிறது ஷோபா.

********************

http://www.facebook.com/note.php?note_id=10150089361337911&comments
vijayakumar
தாங்கள் வசமாக மாட்டிக் கொண்ட சமயங்களில் எல்லாம், விளக்கம் கொடுக்க முன்வராமல் தொண்டரடிப் பொடியாழ்வார்களை ஏவிவிடுவது அ.மார்க்ஸ் & கோ-வின் வாடிக்கை. இப்போதும் அதுதான் நடக்கிறது. பரமார்த்த குருவின் சீடர்களின் மகா மக்குகள் என்பதை அவர்கள் வைக்கும் வாதங்களே தெரிய வைத்தன. யாரும் மெண்டல் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போய் உறுதி செய்யவில்லை.. அப்படியான வாதங்களில் ஒன்றுதான் கவின்மலரின் "பேச வேண்டும், பேச வைக்க வேண்டும் என்ற 4 வருட முயற்சி இன்று வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. சக பெண் ப்ரியா தம்பிக்கு மிக்க நன்றி இது தமிழச்சியின் செய்தி...! ஷோபாவின் கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார் அவருடைய பக்கத்தில். தமிழச்சியும் ஷோபாவின் இக்கட்டுரையில் உள்ளவற்றை ஒத்துக்கொண்டிருக்கிறார்." என்ற வாதமும். கடந்த சில ஆண்டுகளாக இந்தக் குற்றச்சாட்டை தமிழச்சி வைத்தபோதெல்லாம் கள்ள மௌனம் சாதித்த சோபா, இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறார் என்பதைத்தான் தமிழச்சி சொல்கிறார். இதில் எங்கே சோபாவின் குற்றச்சாடை ஒத்துக் கொண்டதாக வருகிறது..? சோபா வெள்ளாளன் என்பது தெரிந்திருந்தும் தலித்தாக எழுத்யவர்தான் கவின் என்பதை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும். சுயநலத்திற்காக உண்மையைத் திரிப்பதில் வல்லவர்கள் இவர்கள்.
வெங்கட்
//'சாதிதான் தமிழ்ச்சமூகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது. என்னைப்போல் ஒரு தலித்தாக இருந்தால்தான் அதன் வலி உங்களுக்கு இன்னும் அதிகமாகப் புரியும்' என்று பேசினார். // என்னமாய் பித்தலாட்டம் ஆடியிருக்கிறார் வெள்ளாள சாதி ஷோபா சக்தி?
லட்சுமி
நண்பர்களுக்கு… இங்கு நடக்கும் விவாதம் தமிழச்சியின் பெண்ணியப் புரிதல் தொடர்பானதல்ல என்பதை கவனப்படுத்த விரும்புகிறேன்.. 95 சதவீத தமிழ்ப் பெண்கள், பெண்ணியம் தெரியாதவர்கள். அதற்காக, சோபா சக்தி போன்ற ஆணாதிக்க வக்கிரம் பிடித்தவர்கள் அந்தப் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு சப்பைக்கட்டு கட்டுவதையோ, உங்களுக்குப் பெண்ணியம் தெரியாதபோது ஏன் இப்படி குற்றச்சாட்டு வைக்கிறீர்கள் என்று கேட்பதையோ ஆதரிக்க முடியாது. சமீபமாக நடக்கும் விவாதங்களில் கவனப்படுத்த வேண்டியது ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒரு ஆண், தலித்தியத்தையும், பெண்ணியத்தையும் தவறாகப் பயன்படுத்தி ஒரு பெண் மீது பாலியல் அத்துமீறல் செய்தான் என்பதுதான். இதைப் பேசுவதற்கு யாரும் பெண்ணியத்தையோ, தலித்தியத்தையோ கரைத்துக் குடித்திருக்க வேண்டிய அவசியமில்லை.
TamilEzhil
பெரியார் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருந்தால் என்ன தப்பு என்று கேட்டிருக்கிறார். பெண்கள் கற்பு என்னும் மாயையிலிருந்து விடுபட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பெரியாரும் கூட மகளாக வந்த பணிப்பெண்ணை தன் உடல் துணையாக ஆக்கிக்கொண்டார்.//
ayya semmuttaal maaran did you see periyar's movie ? where periyar told that i am not marrying her for sexual desires and i am marrying her for rest of the life needs a partner for her and my self.
How can a physically match aged person with younger woman ? how can it be a successfull sexual life if the age difference is too high?
Also periyar told women can have multiple husbands only if men can have multiple wives.

where is that if gone? first understand periyar clearly and come to arguements
Mathiyazhagan.Nama.
Shoba sahakthi is a silly creature.He belongs to modern Krishna Paramaathma , A.Marx &co. We believe you, Thamizhachi. Forget and neglect these fellows.Go forward.
இரவிசங்கர்
ஆண்-பெண் உறவில் உள்ள ஒழுக்கத்தை இந்துத்துவா என்று குறிப்பிடுவது அறிவிலித்தனம். கற்பு, உடன்கட்டை ஏறுவது, விதவைகளை ஒதுக்கி வைப்பது, விதவைகள் மறுமணம் செய்வதை மறுப்பது போன்றவைகளை இந்துத்துவா எனக் கூறுங்கள். அதை விடுத்து, ஆண்-பெண் உறவில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் உலக நியதி. எல்லா நாட்டுச் சட்டங்களும் இதைத்தான் கூறுகின்றன. எல்லா நாகரீகங்களும் ஏற்றுக்கொண்ட அறம் இது.

பாலியல் சுதந்திரம் உள்ள மேற்கு நாடுகளில் கூட, கூட்டுக்கலவி, திருமண பந்தத்திற்கு வெளியில் உறவு (adultary) போன்றவைகளை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவ்வாறான தவறுகளை செய்யத அரசியல் தலைவர்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தியபோது, அவர்கள் பதவி விலகிய சம்பவங்கள் பல நிகழந்துள்ளன.

சோபா சகதிக்கு வக்காலத்து வாங்குபவர்களிடம் ஓரு கேள்வி, உங்கள் வீட்டுப் பெண்களுக்கு எவனோடும் படுக்கலாம் என்ற சுதந்திரத்தை வழங்குவீர்களா? நீங்கள்தானே இந்துத்துவா க்கு எதிரகளாச்சே .. உங்களுடைய விளக்கத்தில் இவ்வாறான சுதந்திரத்தை மறுப்து இந்துத்துவா. ஆகையால் செய்தாலும் செய்வீர்கள். அப்படி ஏற்கனவே செய்திருந்தால், விபரம் அறிய ஆவலாக இருக்கிறேன.
பொறுக்கி
//சோபாசக்தி தமிழிச்சி இருவரின் அரசியலும் தெரியாது, இந்த பிரச்சனையின் ஆழ அகலங்கள் எதுவும் தெரியாத, இந்தக் கட்டுரையை ஒரு பொது வாசகனாக வாசித்த ஒருவனின் இயல்பாக மனதில் தோன்றி முதலாவது கேள்வி: || 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று இன்னொரு நாள் சோபா பேசியபோது, கோபத்தை அடக்கிக் கொண்டு எனது ஊருக்கு வரச் சொன்னேன். இரயில்வே ஸ்டேஷனிலேயே வைத்து சராமாரியாக அடித்தேன். || "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று சொன்னதற்காக சோபாசக்தியை தமிழச்சி ஏன் அடிக்கவேண்டும்?//

இதை என்னன்னு சொல்றது. மணமான, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒருவரிடம் “ஐ லவ் யூ” சொல்வாரம், அவரைத் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டுமாம்.
செந்தமிழ்மாறன்
இரண்டு குழந்தைக்கு தாயான ஒரு பெண்ணுக்கு இன்னொருவரிடம் காதல் வராது என்று கருதுவது இந்து ஒழுக்கம். ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்யலாம் , காதலிக்கலாம் உறவு கோள்ளல்லாம் என்று இருந்தால், ஒரு பெண்ணுக்கும் அதே நிலைதானே? இதனைத்தான் பெரியார் சொன்னார். இரண்டு பெண்களை திருமணம் செய்யும் ஆண்களை கல்யாணம் செய்துகொண்ட பெண்களுக்கு மட்டும் இதை சொல்லவில்லை. அவர் நிர்வாண சங்கத்தில் சேர்ந்து கடற்கரையில் மற்றவர்களுடன் சேர்ந்து நிர்வாணமாக அலைந்தார். ஏன்? பெரியார் திரைப்படம் இந்துத்த்வர்களால் எடுக்கப்பட்டதோ என்று சந்தேகப்படும் வண்ணம், அவரை இந்துக்களின் ஒழுக்கத்தை பின்பற்றி நடப்பவராக காட்டியது. ஒரே ஆணை பின்பற்றி வாழும் பெண்ணின் ஒழுக்கம் இந்துத்துவாதான். அதன் பெயர்தான் கற்பு. அந்த கற்பின் நீட்சியே அந்த ஆண் மறைந்ததும் வாழ பிடிக்காமல் ஏறும் உடன் கட்டை. இந்த ஒழுக்கத்தைத்தான் பெரியார் சாடுகீறார். அந்த ஒழுக்கத்தின் பிறவிதான் தமிழச்சி. அவர் இவ்வாறு வாழ்ந்துகொண்டு பெரியார் பெயரை கெடுப்பதை விட, நாங்கள் இருவரும் ராமர் சீதை போல வாழ்கிறோம் என்றே வாக்குமூலம் கொடுக்கலாம். ராமர் சீதை போல வாழும் எங்களை ராவணன் போல கவர வந்தான் சோபாசக்தி என்பதுதான் தமிழச்சி இங்கே கொடுத்திருக்கும் வாக்குமூலம். ராவணனை பெருமைப்படுத்துவது பெரியாரியக்கம். தவறு எங்கே என்று தெரிகிறதா தமிழச்சி? பெரியாரை பேசிக்கொண்டு ராமர் சீதை வழி வாழ்வது என்ன பெரியார் வழி என்று தமிழச்சிதான் விளக்க வேண்டும்.
இலக்கியன்
பெண்விடுதலை, கட்டுடைத்தல், சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, சனநாயகம், சகிப்புத்தன்மை என்றெல்லாம் சொல்கிறார்கள். "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று சொன்னதை ஏன் வன்முறையால் அணுகவேண்டும்? திருமணம் ஆன ஒருவர் மீது காதல் வரக்கூடாதா? வராதா? குழந்தைகள் இருந்தால் அவர் மீது காதல் வரக்கூடாதென்கிற விதி ஏதும் உள்ளதா? ஏற்பட்ட காதலை மற்றையவரிடத்தில் வெளிப்படுத்தக் கூடாது என்று ஏதும் உள்ளதா? தனக்கு ஏற்பட்ட காதலை ஒருவர் வெளிப்படுத்தும் போது - மற்றையவர் "எனக்கு உன்மீது காதல் இல்லை" என்றோ - "நான் உன்னோடு அவ்வாறான எண்ணத்தோடு பழகவில்லை" என்றோ சொல்லிவிட்டு விலகியிருக்கலாமே? அவரின் அணுகுமுறை பிடிக்கவில்லையென்றால் நட்பைத் துண்டிப்பதோடு முடித்திருக்கலாமே? "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று சொன்னதற்காக ஒருவரை கூப்பிட்டு வைத்து உதைப்பது என்னவகைப் பண்பு? பெரியாரியம்? பெண்ணியம்? சனநாயகம்?
ஏகலைவன்
களத்தில் போராடுபவனுக்கு இச்சிந்தனை வராது.
இந்த போராளி (கொரில்லா ஏழுதியதால் போராளியாக ஆக்கப்பட்டார்) இசங்களில் மூச்சுவிட்டுக்கொண்டு இருக்கும் பிழைப்புவாதிகளின் முகவரி இந்த சோபாசக்தி.
கொஞ்ச நாளுக்கு முன்பு பெண்கள் என்றால் தலைத்தூக்கி கூட பார்க்கமாட்டார் என்று பெண்ணிய புகழ் லீனாமணிமேகலை சான்றளித்து இருந்தார்..

சுய ஒப்புதலை இந்த போராளி(!) சொல்லி இருக்கிறாரே?

பொம்பளையை சுற்றுபவன் போராளியாவானா?
அவர் படித்த புரட்சி தத்துவம் இதைதான் போதிக்கிறதா?
டிராஸ்கி இப்படி பொம்பளை தீசசை எந்தபக்கத்தில் சொல்லீறுக்கிறார் சோபா?

ஈழப்போராட்டம் தற்போது தேவை இலாததாகிவிட்டது என்று அ.மார்க்சின் கண்டுபிடிப்பை முன்மொழியும் அல்லது உங்கள் கண்டுபிடிப்பை அவர் முன்மொழிய .... செங்கடலில் மனிதத்தை பேசுவீர்கள்..

பார்க்கிற பெண்களை எல்லாம் புணர்ந்து புரட்சி இலக்கியம் படைக்க சோபா அண்டு கோ தயாராக இருக்கலாம்...

ஆனால் வரலாறு உங்களையும் பதிவு செய்யும்....

வரலாறு கழிவுகளை உரமாக கொள்ளும்....
P.V.Sri Rangan
மணமான பெண்களுக்கு "ஐ லவ் யூ" சொல்லிச் செல்வது "வாய்த்தால் ஓசியில் உருவலாம்." என்ற தத்துவத்தின் புள்ளியது.

திருமணப் பந்தத்துக்குள் வந்துவிட்டால், உடல்வருத்தி உழைக்கவேண்டும். பிள்ளைகளைக் காக்கவேணும். பொறுப்பு வந்துவிடும். ஊரூராய்ச் சுற்றிச் சுழட்ட(பெண்களை வளைத்துப்பிடிக்கும் ஊருலா) முடியாது-ஒருத்தியோடு மட்டுமே "உடல்சார் உருவல்" தொடரவேணும். விதம்விதமாகப் பாலியற் சுதந்திரத் தேவையில் "ஆண்-பெண்"பரிசீலிப்புத் தொடரமுடியாது. கட்டினவள் புரட்டியெடுப்பாள். அல்லது, அவளது சகோதரர்கள் கழுத்தில துண்டைப்போட்டுத் துவைப்பாங்கள். அப்படியும் சொல்ல முடியாது, சில சகோதரர்கள் பார்வையாளருமாக இருந்திருக்கிறார்கள். ஏனெனில், தாமும் இப்படித் தொட்ட-தொடர்ந்த சூழ்ச்சி அவர்களையும் வருத்தியிருக்கும்.
இதையெல்லாம் பார்த்தால், திருமணஞ் செய்யாமால் "தோழர்களாத் துழாவி " பின் வருடமொன்றுள் தூக்கியெறிந்து, அடுத்த பட்ஜெட்டில் புதிய "தோழமையை-தோழரை, தோழியை பரிசீலிக்கலாம் அல்லவா?

இப்படி மாட்டிய பெண்கள், இப்போது "பேயடித்த பிரமைபோன்று" உலாவருவதை புலம்பெயர் தமிழ்க் குழுமத்துக்குள் காணமுடியும்.

இவர்கள்தாம் பெரும் பெண்ணிய புடுங்கிகளாம்.

சிலர் வாழ்வை வெறுத்துத் தனிமைப்பட்டுப் போதைக்கு அடிமையாகிச் சிதைந்தே போயினர்.

இத்தகைய வாழ்வுக்குள் திணிக்கப்பட்ட நடாத்தையானது "தமிழ்-ஆண்மனதினது அகவிருப்பின் செயலூக்கப் பக்க வினை" வென்பது எனது தாழ்மையான-முட்டாள்தனத்தோடான புரிதல்.

இதற்கும், மேற்குலகத்தின் பெண்ணிலைக் கூறுகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை-பங்குமில்லை!

மேற்குள் சொல்லப் பட்ட பெண்களது பிரச்சளைகளது ஒரு பகுதியைப் புரட்டியெடுத்துத் தமது பாலியற்றேவைகளை நிறைவு செய்த தமிழ் ஆண்மனதானது மிகக் கெடுதியானது. இதன் புள்ளி முழுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தையே இப்போது நடுத்தெருவில் விட்டிருக்கிறது.
பாலகுமார்
பல புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்ட சோபா சக்தி, இறுதியில் கூறுகிறார் - "உள்ளபடியே நான் பகிரங்கமாக இங்கே வைத்திருப்பதால் நிச்சயம் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்பது எனக்குத் தெரியும்." எவ்ளோ நல்லவருப்பா!!

உண்மையில் இவர் இப்படி செய்யாமல் இருந்திருந்தாலே தமிழச்சி மிகவும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருப்பர்... "அடடா! ஒரு நல்லவனை அடித்து விட்டோமே" என்று. இப்போது அவர் நிம்மதியாகத் தான் இருப்பார்.
Varathan
Speaking Periyarism, feminism and so on are the attractive things to group together. Time to time lot of NGOs are starting projects under the different slogans. It doesn't mean they are commited their life and soul to that slogans. ... Just for their existence. All need identity for their existence. ... Based on their ability they find the suitable ways. In most cases, talks, speeches and writings not totally reflect the personal character of the writer, just show their skills and ability. In here, Both தமிழச்சி and Shoba try to justify their stands. So we can't expect the whole truth from both side. தமிழச்சி's writings shows that she had enough opportunities to picture and read the "Shoba's character". If the relationship is only based on common views ..... Here, both have no common views. Both are in different walks of life......but this is the reality of life
smmuthuselvan
வணக்கம், சோபா சக்தி பற்றிய தங்களின் கட்டுரையை படித்தேன் அதை நம்பவும் செய்கிறேன். ஆனால் கட்டுரையை படிக்கும் பொது சில சந்தேகம் என்பதைவிட நியாயமான கேள்விகள் என் மனதில் எழத்தான் செய்கின்றன. சாதாரணமான ஒரு பெண்ணாலையே தன்னுடன் பழகும் அல்லது பேசும் ஒரு ஆணோ அல்லது ஒரு நண்பனோ எந்த நோக்குடன் பேசுகிறான் அல்லது நெருங்குகிறான் என்று கண்டுபிடித்து விடுவார்கள். அப்படி இருக்க எல்லாம் தெரிந்த நன்கு படித்த ஒரு சமூகம் சார்ந்த பார்வைகள் நிறைந்த தங்களால் மட்டும் ஏன் அறிய முடியவில்லை? சரி அது போகட்டும் அவர் உங்களிடம் ஒரு சில தங்கள் குடும்ப சூழ்நிலையை பற்றி பேசும் போடும் கூடவா தெரியவில்லை? மேலும் அவர் உங்களிடம் தொலைபேசியில் பேசும் பொது அவரது நண்பர்களிடமும் பேச சொல்லும் பொது உங்களுக்கு ஏன் தெளிவு கிடைக்கவில்லை? அதுவும் பலமுறை அப்படி பட்ட அழைப்புகள் வந்ததாகவும் சொல்லி இருகிறீர்கள். சரி அதெல்லாம் போகட்டும் அவர் எப்போதும் மது அருந்தி இருப்பதாக வேறு கூறும் நீங்கள் ஏன் அவர் அழைத்ததும் செல்ல வேண்டும். சரி அதையும் விடுங்கள், இவை எதுவுமே தங்களை எச்சரிக்கை படுத்தும் படியோ அல்லது சந்தேகம் படும் படியாகவோ இல்லை என்றாலும் அவர் தங்களிடம் முதன் முதலில் உங்களை காதலிப்பதாக கூறியதும் அடித்ததாக சொன்னீர்கள். அப்படி இருக்க அவர் திரும்ப தன நம்பரை பார்க்க வந்தேன் ஆப்டியே உன்னை பார்க்க வேண்டும் என்று சொல்லும் பொது உங்களு ஏன் அவர் மேல் இறக்கம் வர வேண்டும்? நீங்கள் ஏன் அவரை சந்திக்க வேண்டும்? அப்புறம் தங்களின் 1600 பெரியார் கட்டுரைகளும் அழிந்து விட்டதாக சொல்லும் நீங்கள் ஏன் நான்கு வருடங்களாக கஷ்ட பட்டு சேகரித்த கட்டுரைகள், படைப்புகளை ஏன் தனியாக குறுந்தகடுகளில் சேமித்து வைக்கவேண்டும் என்ற அடிப்படையான சிந்தனை கூடவா இல்லை? சரி எது நடந்ததோ போகட்டும் மீண்டும் அக்கட்டுரைகளை வலைதங்களில் கொண்டு வர முயற்சி எடுக்கவும். இதெல்லாம் கேக்க நீ யார் என்று நீங்கள் நினைக்கலாம் அல்லது கேக்கலாம்? தங்களின் கட்டுரையை படிக்கும் அனைவர்க்கும் ஏற்படும் சில கேள்விகள் தான் இது? இது பற்றி ஏதேனும் பதில் கூற விரும்பினால் இதிலோ அல்லது எனது facebook:- Chennai Friend முகவரிக்கோ தெரிய படுத்தவும். மற்றபடி தங்களின் படைப்புகள் மிக அருமை. மேலும் பல ஆக்கங்களை விளியிட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
வித்தியா
ஆரம்ப நாட்களில் தமிழச்சியும் புலி எதிர்ப்பாளர் தான் இவரின் முன்னைய கட்டுரைகளை வாசித்தால் இவரின் புலி எதிர்ப்பு தெரியவரும். இப்போ சோபாவுடன் சண்டை என்பதால் தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள முனைகின்றார்.

சோபாவின் எதிரிகள் புலிகள் இப்போ இல்லாத நிலையில் ஏன் சோபா சக்தி போன்ற புலி எதிர்ப்பாளர்கள் இலங்கை அரசாங்கத்தின் கடத்தல்களுக்கு எதிராக குரல் கொடுப்ப்பதில்லை? சோபா ரோவின் கையாள் என்பது பலருக்குத் தெரியும். தாழ்த்தப்பட்ட ஜாதி எனக் காட்டிய வெள்ளாளன் தான் சோபா.

சோபாவின் பூனைக்குட்டி அவரின் நெருங்கிய நண்பர் தமிழச்சியினூடு வெளியே வந்துவிட்டது,
loganathan
ஷோபா சக்தி, சில கேள்விகளுக்கு விடையளித்தால் நலம் என்று தோன்றுகிறது...
1. இந்தியாவில் இருக்கும் பார்ப்பனர்களைப் போன்று ஈழத்தில் ஆதிக்க சாதியாக இருக்கும் வெள்ளாள சாதியில் பிறந்த ஷோபா சக்தி, ஏன் இதுவரை தன்னை ஒரு தலித்தாக எல்லோரிடமும் பொய் சொல்ல வேண்டும்? இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன?
2. பிரான்ஸில் வேலை இல்லாதவர்களுக்கு 6 மாத காலம்தான் அரசு உதவித் தொகை கிடைக்கும் என்று கேள்விப்படுகிறேன். ஷோபா அரசு தரும் உதவித் தொகையிலும், எச்சில் தட்டுகளை கழுவியும் வாழ்வதாக சொல்கிறார். ஷோபாவுக்கு மட்டும் ஆயுள் முழுவதும் அரசு உதவித் தொகை கிடைக்கிறது என்றால் அதன் பின்னணி என்ன? சொன்னால் மற்றவர்களும் பெறுவதற்கு உதவியாக இருக்கும்..
loganathan
3. ஒருவேளை எச்சில் தட்டு கழுவுவதால் வரும் வருமானம் ஆண்டுக்கு நான்கு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல உதவுகிறதா? அப்படி செல்வதற்கு அந்த ஹோட்டலில் அத்தனை நாள் விடுப்பும் தரப்படுகிறதா? அதிகளவு பணமும், அதிகளவும் விடுப்பும் தரும் அந்த ஹோட்டல் எங்கே இருக்கிறது? அங்கே சேர்ந்தால் மற்றவர்களுக்கும் இதே சலுகை கிடைக்குமா?
4. நண்பர்கள் தருவதாக தமிழச்சியிடம் ஷோபா சொன்னது உண்மையென்றால், அந்த பவர்புல் நண்பர்கள் யார்? எவ்வளவுதான் நட்பு இருந்தாலும் நண்பர்கள் ஒரு முறை கொடுத்து உதவலாம். ஆயுளுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு அந்த நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் யார்? அவர்களின் வருமானப் பின்னணி என்ன?
loganathan
5. ஷோபாவின் கஷ்டத்தைப் போக்க நண்பர்கள் உதவுவதாகவே வைத்துக் கொள்வோம். அந்த நண்பர்கள் சுகுணா திவாகருக்கு ஒரு லட்சம் கொடுப்பதற்கும், அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யாவை வெளிநாடுகள் கூட்டிப் போய் தங்க வைத்து குளிப்பாட்டுவதற்குமா காசு தருகிறார்கள்?
6. சுகுணா திவாகருக்கு கொடுக்கப்பட்ட லட்ச ரூபாய் அவரது கஷ்டத்தைப் போக்குவதற்கா, இல்லை அவரது ஈழ எதிர்ப்பு அரசியலுக்கு கொடுக்கப்பட்ட ஊதியமா? கஷ்டத்தைப் போக்குவதற்குத்தான் என்றால், அதேபோல் கஷ்டப்படும் தலித் முரசு இதழுக்கு நீங்கள் ஏதாவது நிதி வழங்கியிருக்கிறீர்களா? அவர்கள் பலமுறை நிதி வேண்டி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். நீங்கள் தலித் அரசியலுக்காகவே வாழ்பவராயிற்றே... உதவியிருப்பீர்கள் அல்லவா?
suriya
சோபாசத்தி தமிழச்சி லீனா மணிமேகலை எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அதனால பெண்ணியம் தலித்தியம் எலக்கியம் பெரியாரியம் இப்படியான எசங்களை எல்லாம் இந்த குட்டைக்குள்ளார தேடவேண்டிய அவசியம் தமிழ்ச்சமூகத்துக்கு இருக்கின்றது.
iniyan
நான் முடியாது என்று சொல்லிவிட்டு, காலையில் போன் செய்து விசாரித்தேன்.

??????

ஏன் போன் செய்தீர்கள் ?
ஏற்கனவே ஒருவனை பப்ளிக்-ல் வைத்து அடித்த ஒருவனை மிருகமாய் நடந்து கொண்ட ஒருவனை ..இரயில்வே ஸ்டேஷனிலேயே வைத்து சராமாரியாக அடித்த ஒருவனுக்கு ஏன் நீங்களாகவே போன் செய்தீர்கள் ?

-----------------

"எனது கணிப்பொறியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வைரஸ் தாக்கி, புது கணிப்பொறி வாங்க வேண்டி வந்தது"

இதுவும் நம்ப கூடியதாய் இல்லை. எப்படிப்பட்ட வைரஸ் தாக்கினாலும் format செய்து திரும்பவும் அதே கம்ப்யூட்டர்-ரை பயன்படுத்தலாம் . இந்த கட்டுரைக்கும் புது கம்பூட்டர் வாங்கியதும் தொடர்பற்றது .

ஒருமுறை கூகிள் search-ல் சேர்ந்துவிட்டால் ... ஒரிஜினல் வெப்சைட் இல்லாவிட்டாலும் தேடினால் கிடைக்கும் .. கிடைகும் result-ல் "cached" என்பதை கிளிக் செய்தால் .. ஒரிஜினல் வெப் சைட் தேவை இல்லை ...
-----------------------
"ஒரு முறை கடும்போதையில், பேச்சுவாக்கில் தோழர் சுகுணா திவாகருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகச் சொன்னார் "

கடும் போதையில் இருக்கும் ஒருவனிடம் தொடர்ந்து ஏன் பெசிகொண்டிர்ந்தீர்கள் ?

------------------------
"எந்நேரமும் குடிப்பதற்கு எப்படி பணம் கிடைக்கிறது' என்று கேட்டேன்."

இது எத்தனையாவது சந்திப்பு-க்கு பிறகு ? ஏன் எந்நேரமும் குடிக்கும் ஒருவனை விட்டு விலகவில்லை?

"ஆண், பெண் மட்டுமல்லாது மூன்றாம் பாலினத்தவரோடும் தான் உறவு வைத்திருப்பது குறித்து பேசினார்."

ஏன் இயற்கை-கு மாறாக உறவு வைத்து இருக்கும் ஒருவனிடம் இருந்து விலகவில்லை .

'ஒரே கணவருடன் எப்படி இத்தனை ஆண்டுகள் உங்களால் வாழ முடிகிறது" என்று கேட்டவனுடன் எப்படி நட்பு தொடர்ந்தது ?

வெறும் பெரியார் ,ஈழம் மட்டுமே நட்புக்கு போதும் என்றால் .. ஏன் 12-வது சந்திப்ப்ரிக்கு பிறகு நட்பை முறித்து கொண்டீர்கள் ?
loganathan
7.வைப்பாடி வைத்துக்கொள்ளும் ஆண்களைத் திருத்தவே, 'ஆண் இரண்டு வைப்பாடிகளை வைத்துக் கொண்டால் நீயும் இரண்டு புருஷன்களை வைத்துக் கொள்' என்று பெரியார் சொன்னார். பெரியார் பலதார மணத்தை எதிர்த்துக் கூறிய பல்வேறு கட்டுரைகளை என்னால் மேற்கோள் காட்ட முடியும். மேலே கிருஷ்ணராஜாவும் அத்தகைய கட்டுரை ஒன்றை பின்னூட்டமாக இட்டுள்ளார்.. வீட்டில் இருக்கும் பெண்ணிடம் கற்பையும், வெளியே இருக்கும் தேவதாசிகளிடம் பரத்தமையும் வற்புருத்துவதுதான் இந்து ஆணாதிக்கம். பாலியல் விடுதிகளுக்குப் போகும், மூன்றாவது சந்திப்பிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளத் தயாராகும் நீங்கள் இந்துமத ஆணாதிக்க மனநிலையிலிருந்து எப்படி வேறுபடுகிறீர்கள்?
நற்றமிழன்
///////'சாதிதான் தமிழ்ச்சமூகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது. என்னைப்போல் ஒரு தலித்தாக இருந்தால்தான் அதன் வலி உங்களுக்கு இன்னும் அதிகமாகப் புரியும்' என்று பேசினார். தமிழகத்தில் சில தலித் எழுத்தாளர்கள் பெரியாரை விமர்சிக்கும்போது, பெரியாரைப் பின்பற்றும் ஒரு தலித் எழுத்தாளர் என்று தெரிந்தபோது அவர் மீதான மரியாதை அதிகமானது//////// தோழர். தமிழச்சி உங்கள் கட்டுரையில் நீங்கள் பதிந்த இவ்வரிகளுக்கு பின்னர் நீங்கள் எங்கும் இதற்கு மறுப்பு தெரிவித்து சோபா சக்தி ஒரு தலித் இல்லை(வெள்ளாளர்) என குறிப்பிடவில்லை. இவ்வாறு நீங்கள் செய்வது சோபாவுக்கு சொம்பு தூக்கும் பலருக்கு ஆதரவாகவே முடியும் என்பதால் நீங்கள் ஒரு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
iniyan
"அந்த காலை நேரத்திலும் போதையில் இடுப்பில் ஒரு துண்டுடன் இருந்தார். குகன் என்பவர் சோபாவைத் தொலைபேசியில் அழைக்க, சோபா அவரிடம் 'நான் தமிழச்சியுடன் ஹோட்டலில் இருக்கிறேன்' என்றார். அடுத்து வந்த 3, 4 அழைப்புகளிலும் இதேதான் சொன்னார்."

ஏன் அவரை வரவேற்பரியில் சந்திக்கவில்லை ? அப்படியே ரூமுக்கு சென்றிருந்தாலும் .. ஏன் ஒரு துண்டு மட்டுமே கட்டியுருந்தவரிடம் "ஆடை மாற்றி கொள்ளுங்கள் ..வெளியில் இருக்கிறேன் " என்று சொல்லி வரவேற்பரியிலோ வெளியிலோ ஏன் காத்திருக்க வில்லை ?

அடுத்து அடுத்து வந்த நான்கு அழைப்பு வரை உள்ளேயே இருந்தது ஏன் ?

உடல் நலம் சரியில்லை .. ஓகே .. ஆனால் படுத்த படுக்கையை இல்லை.. எனும்போது வரவேற்ப்பு அறையிலோ அல்லது ரெஸ்டாரன்ட் -ல்லோ சந்தித்து பேச வேண்டும் என்று ஏன் தோணவில்லை ?
thiru
தமிழீழ போர்கால இலக்கியத்தை கண்டு சகிக்க முடியாத பார்ப்பானின் (தமிழ்நாட்டு ஊடக) கண்டுபிடிப்புதான் இந்த இழிபயல்... உங்களை எல்லாம் பாரிசுக்கு அனுப்பியா எடுக்கமுடியும்.... இப்போ வெளிவந்துள்ளவை மிகவும் சொற்பம்... இவருடன் கூட இருந்தவர் எடுத்த வீடியோக்கள் வரும்போது... சுவாமி நித்தியானந்தாவின் பத்தர்கள் சொன்னதுபோல சொல்லிக் கொண்டு இருங்கள்...
இனியன்
//"வரைமுறையற்ற பாலியல் உறவு, முழுநேரமும் போதை என இருக்கும் ஒருவர், ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு பெண்ணிடம் எந்த வகையிலேனும் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியுமா?"//

தெரியவில்லை .. ஆனால் அவளை தன் தனியிருக்கும் அறைக்கு வரவழைக்க முடியும் . தான் வெறும் துண்டு மட்டுமே கட்டியிருந்தாலும் அடுத்து அடுத்து நான்கு போன் பேசும் வரை தனியறையில் உர்காரா வைக்க முடியும்
Loganathan
8. பல ஆண்டுகள் காத்த மௌனத்தைக் கலைத்ததாக இப்போது சொல்கிறீர்கள்.. நீங்கள் சொல்லாமல் சேனன் உள்ளிட்ட உங்களது நண்பர்களுக்கு எப்படி தெரிந்தது?
9. ஒரு பேச்சுக்கு நீங்கள் சொல்வதே உண்மையென்று வைத்துக் கொள்வோம். கல்யாணமான ஒருவருக்கும், உங்களுக்கும் காதல் வரும்போது, 'உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாருங்கள். நாம் கல்யாணம் பண்ணியோ, பண்ணாமலோ சேர்ந்திருக்கலாம்' என்று சொல்வதுதானே முறை. அதுதானே தனிமனித அறம்! ஆனால், எப்போதுடா வாய்ப்பு கிடைக்கும் என்று அலையும் சராசரி ஆண் புத்திதானே உங்களுக்கும் இருந்திருக்கிறது!! இப்போது உங்களுடன் நட்பாக இருக்கும் பெண்களுடனும் இதேபோல்தான் பழகுகிறீர்களா?
vijayakumar
இரயாகரன் சொல்கிறார்: அரசியல் இலக்கியம் பேசுகின்றவர்களுக்கு, அதுவும் ஒடுக்குமுறைக்கு எதிரான பின்நவீனத்துவ அரசியல் கட்டுடைப்பு பேசுகின்றவர்களுக்கு மட்டும், இணங்கிய பாலியலின் பின்னணியிலும் வன்முறை உண்டு என்ற உண்மை தெரிய மறுக்கின்றது. இணங்கவைத்த "பரஸ்பரம்" என்பதன் மூலம், தன் நடத்தை வன்முறையல்ல என்று கூறுகின்ற பொறுக்கித்தனம். ஆணாதிக்க நீதிமன்றங்கள் பாலியல் வன்முறை வழக்குகளில், பெண்ணைக் குற்றவாளியாக்குகின்ற இதே உத்தியைத்தான் "பரஸ்பரம்" என்ற ஆயுதத்தைத்தான் கையில் எடுக்கின்றது இக்கதை. இணங்க வைத்து இணங்கிவிட்டால், அதில் ஆணாதிக்கமில்லை, பலாத்காரமுமில்லை என்று தீர்ப்பெழுதுகின்றனர். இந்தத் தீர்ப்புகள் ஆணாதிக்கத் தீர்ப்புகள்தான். இதைத்தான் இங்கு சோபாசக்தி தன் கதைக்கு கருவாக்குகின்றார். அவரின் கதைகள் போல், இதுவும் ஒரு கற்பனையும் உண்மையும் கலந்த கூட்டுக் கலவிதான் கதையின் உத்தி. கதை புனைவதில் புகழ் பெற்றவராச்சே. அவருக்கா கதைக்கான கருவில்லை.
iniyan
// சந்தேகம் வருகிறது...ஏமாந்திருக்கலாம்.. இல்லை தமிழச்சி மீது ஷோபா போட்ட 'மூன்றாவது சந்திப்பு' குண்டு தங்கள் மீது விழலாம் என்று அச்சப்பட்டிருக்கலாம்.//

**** ***** ***** ****** ******** ******** ******* ******

ஒரு நல்ல ஒழுக்கமான பெண் .. ஏன் இரண்டாம் முறை அவன் அறைக்கு சென்றாள் அதுவும் அவனை அடித்து பப்ளிக்-ல வைத்து பிறகு ?

அப்படியே ரூமுக்கு சென்றிருந்தாலும் .. ஏன் ஒரு துண்டு மட்டுமே கட்டியுருந்தவரிடம் "ஆடை மாற்றி கொள்ளுங்கள் ..வெளியில் இருக்கிறேன் " என்று சொல்லி வரவேற்பரியிலோ வெளியிலோ ஏன் காத்திருக்க வில்லை ? அடுத்து அடுத்து வந்த நான்கு அழைப்பு வரை உள்ளேயே இருந்தது ஏன் ? உடல் நலம் சரியில்லை .. ஓகே .. ஆனால் படுத்த படுக்கையை இல்லை.. எனும்போது வரவேற்ப்பு அறையிலோ அல்லது ரெஸ்டாரன்ட் -ல்லோ சந்தித்து பேச வேண்டும் என்று ஏன் தோணவில்லை
Kannan-m
முகப்பு புத்தகத்தில்(facebook) உமா என்ற பெண்மணி (ஜேர்மனி- போலினில் வசிப்பவர்) பாலியல் பொறுக்கி சோபாசக்தியை நியாயப்படுத்தி எழுதியுள்ளார். புலியை எதிர்ப்பவர் என்பதாலேயே சோபாசக்தியை இப்படி குற்றம் சாட்டுவதாக புலம்பியுள்ளார். இந்த பெண்மணி தன்னை பெண்ணிலைவாதி என்றும் சொல்லிக் கொள்கிறார் !!. அம்மணியே சோபாசக்தி போல பல சோபாசக்திகளை உங்களைப் போன்ற பெண்மணிகள்தான் உருவாக்கிறார்கள். புலியை எதிர்ப்பதால்தான் பாலியல் பொறுக்கி சோபாசக்தியையும் தங்களையும் இலங்கை அரச ஆதரவாளர்கள் என குற்றம்சாட்டுவதாகவும் புலம்புகிறார். அம்மணி புலியை மிகத் தீவிரமாக அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்க்கும் பலர் உள்ளனர். இவர்களை எல்லாம் யாரும் இலங்கை அரச ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டியது இல்லை. உதாரணமாக இந்த அம்மணிக்கு தெரிந்த ஊடறு றஞ்சி அவர்கள் புலிகளை மிகவும் எதிர்ப்பவர்.அவரை யாரும் இலங்கை அரச ஆதரவாளர் என்று குற்றம்சாடடியது இல்லை. பாலியல் பொறுக்கி சோபாசக்தியையும் இந்த அம்மணியையும் இலங்கை அரச ஆதரவாளர்கள் என்று அழைப்பதில் என்ன தவறு? இலங்கையில் நடந்த படுகொலைகளையும் ராஜேபட்ச கொலைக் கும்பலையும் அவர்கள் ஆதரவில் இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் விளம்பரம் பண்ணி ஆதரவு தெரிவிக்கும் இவர்களை எப்படி அழைப்பது? புகலிடத்தில் உழைப்பற்று சோம்பேறிகளாக இலங்கை அரசுக்கு துதிபாடி பிழைப்பு நடத்தும் இவர்கள் தங்கள் பணவருமானங்களை எங்கிருந்து பெறுகிறார்கள்?. லோகநாதன் கேட்ட கேளிவிகளுக்கு சோபாசக்தி பதில் சொல்லாவிட்டாலும் அவருக்கு துதிபாடும் இந்த அம்மணி பதில் கூறலாம். அம்மணியின் அபிமான சிங்கம் சோபாசக்தி இப்போது அடுத்தவேட்டைக்கு இரைதேடுவதில் குறியாய் இருப்பார்.அவருக்கு இதனால் நேரம் காணாது. அம்மணியே பதில் சொல்லலாம்!
seenivasan
@லோகநாதன்.. நீங்கள் கேட்ட கேள்விகள் நியாயமானவை.. சூடு, சுரணை, மானம், ரோஷம் இருப்பவர்கள் என்றால் இதற்கு பதில் சொல்வார்கள்.. பொய்கள் மேல் பொய்கள் சொல்வதையே தொழிலாக வைத்திருக்கும் சோபா இதற்கு பதில் சொல்ல மாட்டார். ஏனென்றால் தலித் என்று ஊரை ஏமாற்றியதற்கே அவர் இன்னும் பதில் சொல்லவில்லை.. பாலியல் சுகம் வேண்டி பெண்களை வளைப்பதற்கு ஷோபாசக்தி என்னென்ன வேஷம் போடுவார் என்பது அம்பலமாகியிருக்கிறது. ஆனாலும், ஷோபவை சில பெண்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் சந்தேகம் வருகிறது... ******.. இல்லை தமிழச்சி மீது ஷோபா போட்ட 'மூன்றாவது சந்திப்பு' குண்டு தங்கள் மீது விழலாம் என்று அச்சப்பட்டிருக்கலாம். பெண்களுக்கு இருக்கும் இந்த அச்சவுணர்வுதான் ஷோபாசக்தி மாதிரியானவர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது. அப்படிப் பார்க்கும்போது, தமிழச்சிக்கு இருக்கும் துணிவு பாராட்டத்தக்கது..
vijayakumar
இரயாகரன் கட்டுரை 'சோபாசக்தியின் பொறுக்கித்தனம் மீது...' லிருந்து... "இது நடந்த காலகட்டத்தில் தமிழச்சி அவருடன் தன் உறவை முறித்தது மட்டுமின்றி, அன்று நடந்த நிகழ்வையும் தான் தாக்கியதையும் கூட எனக்குக் கூறியிருந்தார். தமிழச்சியின் இன்றைய எதிர்வினையின் உள்ளடக்கம், அன்று எனக்கு தெரிவிக்கப்பட்ட ஒரு உண்மை. இந்த நிகழ்வின் பின் தமிழச்சியின் உதிரியான எதிர்வினைகளையும், அவரின் கோபமான ஒழுங்கற்ற எதிர்த்தாக்குதலையும் தான் சோபாசக்தி தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தன் பொறுக்கித்தனத்தை சோபாசக்தியால் பாதுகாக்க முடிந்தது. இன்று ”நீ என்னுடன் இணங்கிப்படுத்தாய்” என்ற ஆணாதிக்க அயோக்கியத்தனத்தை கொண்ட கதையுடன், களத்தில் இறங்கியுள்ளார்."
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7741:2011-02-21-121458&catid=343:2011
vijayakumar
இரயாகரன் சொல்கிறார்: "பரஸ்பரம்" என்ற ஆணாதிக்க வக்கிரத்தை, சமூகத்தில் அடிக்கடி நடக்கும் ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். காதலித்த பெண்ணுடன் இணங்கி உறவு கொண்ட ஆண், அவனை ஏமாற்றும் போது, அந்த பெண் தன்னை ஏமாற்றியதை ஒரு பாலியல் வன்முறையாக உணருதல் என்பது ஆணாதிக்கத்துக்கு எதிரானது. பெண் இதை தன் மீதான பலாத்காரம் என்று கூறுவதற்கு எதிராக, அவள் அப்படியும் இப்படியும் என்னுடன் படுத்தாள் என்று கூறுவது கடைந்தெடுத்த அயோக்கித்தனமாகும். சோபாசக்தியின் கதைக்குரிய அறமே இதுதான்.
இதைத்தான் சோபாசக்தி தன் இலக்கிய நடையில் தமிழச்சிக்கு எதிராக இங்கு செய்கின்றார். "தமிழச்சி இயக்கப்படுவது நமக்கிடையேயான பிரிவிற்குப் பழிவாங்கும் எண்ணத்தால்" என்கின்றார். இங்கு அந்த பிரிவு என்ன என்று சொல்ல முடியாத அளவுக்கு, அவரது சொந்த ஆணாதிக்க வக்கிரங்களாலானது. பின்நவீனத்துவ கட்டமைப்புக்குள் கூட நியாயப்படுத்த முடியாதவை. நுகர்வை மட்டுமல்ல, பெண்ணின் உடலை கூறுகூறாக ஆணாதிக்கக் கூட்டம் கூடி வம்பளந்து தின்ற கதைகள் தான் இவை. வாயில் எச்சில் ஒழுக்க, வேசம் போட்டவை
இனியன்
"சற்று ஆவேசமாகவே நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருந்தேன்."//////
--------------------------------------------------------------------------------------
ஏன் மூன்று வருடமாக எழுதியும் திட்டியும் கொண்டிருகிர்றேகள் . அவன் முகமூடியை ஒரு மணி நேரத்தில் கிழித்திருக்கலமே ? அதான் police-ல கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கலாமே ? ஏன் செய்யவில்லை ? ( பிரான்சில் போலீஸ் சோபாவுக்கு சாதகம நடந்து கொண்டதா ?)
-------------------------------------------------------------------------------------
///////"இவ்வளவு முரண்பாடுகளுக்கு இடையிலும் சோபாவுடன் நட்பைத் தொடர்வதற்கான காரணங்களும் இருந்தன".////

11 - வது சந்திப்பு வரை . ஓகே . 12 வது சந்திப்புக்கு என்ன காரணம் இருந்தது ?
----------------------------------------------------------------------------------------
"அழைத்துப் போக முடியுமா என்றும் கேட்டார். நான் முடியாது என்று சொல்லிவிட்டு, காலையில் போன் செய்து விசாரித்தேன். நான் இருக்கும் ஊரில் உள்ள ஹோட்டலில் இருப்பதாகவும், உடல்நலம் சரியில்லை என்றும் சொன்னார். " //// ஏன் காலையில் போன் செய்தீர்கள் ? (யாரவது விளக்கம் தர முடியுமா ?)
தேவா
இந்த இரு பகுதி வாதங்களையும் நிதானமாக ஆராயும் ஒருத்தருக்கு சோபா சக்தியின் உள்நோக்கம் கொண்ட, வில்லத்தனம் நிறைந்த, பாலியல் வன்முறை முகத்தைக் காணமுடியும். தமிழிச்சி முற்போக்காளராயும், வளர்ச்சியடைந்தவராகவும் இருப்பதால்,அவரால் இதை எதிர்கொள்ள முடிகின்றது .எது எப்படி அமைந்த போதும் இதுபோன்ற முகமூடி அணிந்த முற்போக்காளர்கள், திரைமறைவில் காமுகர்களாக இருப்பது அம்பலப்படுத்தவேண்டிய விடயமாகும் .சோபா விதண்டாவாதம் செய்வதைத் தவிர்த்து பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதே சிறந்தது.
Gayathri
Its almost like watching "Sindhu Bairavi" movie. If people have common interest they easily get moved by each other. When Sivakumar proposes Suhashini she slaps him but eventually after few days she misses him as she likes the music in him. Here Tamilachi has undergone the same disturbance, if not she should have ignored him when he called to the hotel knowing that he had bad intension on her. She had disagreements with him but still she liked him as he helped and appreciated her work....
Dear , you are so ironical to your own concepts. When it comes to "aanmeega vivathangal" you just mock at each stories and tell why do people blindly take it. Why can't they think and judge? Why weren't you able to implement the same in your life? After all havoc happened why did you go to meet him in the hotel?
Madam we do know all that is said in our religious are not possible but we just try to take the underlying good things in that as you did in case of Shoba. (You knew he was not good but still paved your attention to him as he was Periyarist, atheist , Srilankan fighter). Every coin has two sides. Aanmeega kadhaigal is not to preach bad things , it has good intentions. Just the perception varies. I am just trying to make you understand this from your own experience . I am sure you will disagree.... but I am least bothered. I read your blogs becoz I do get to know lot of information. Whether I agree or disagree doesn't count.
kumbakonam sathish
இங்க கார்க்கி என்பவர் போட்டுத் தாக்கியிருக்கிறார்:
"சென்ற வருடம் ஏப்ரல் மாதம் இக்ஸா அரங்கில் கூடிக் கும்மியடித்த பெண்ணுரிமைப் போராளிகள் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள்? Cocktail சீமாட்டிகளினதும், கூட்டுக்கலவிக்கு உடன்படும் சீமாட்டிகளினதும் கெட்டவார்த்தைக் கவிதையால் கார்ல் மார்க்சை ஏசும் அல்பைகளினதும் உரிமை மட்டும் தான் பெண்ணுரிமையா? பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கும் பெரியாரியப் பெண் தோழரின் உரிமை பெண்ணுரிமையில் சேர்த்தியில்லையா? தனது இச்சைகளுக்கு உடன்பட மறுத்து செருப்பால் அடித்துத் துரத்திய அந்தப் பெண் தோழரை இழிவு படுத்தும் விதமாக ‘நான் அவளோடு படுத்தேன்’ என்று பச்சையாக புளுகியிருக்கிறான் ஒரு பொறுக்கி நாய். அதற்கு நாலைந்து **** ஆதரவு தெரிவித்து பிண்ணூட்டமிட்டுள்ளனர். இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் பின்னவீனத்துவ அறமா?"
http://kaargipages.wordpress.com/2011/02/21/therupporukki/
vijayakumar
//ஒன்றும் வேண்டாம். ஒரே ஒரு கேவிக்கு மட்டும் ஷோபா பதில் சொல்லட்டும் பார்க்கலாம். நீங்கள் தவறே செய்யாமல் இருந்திருந்தாலும் ஒரு பெண் அடித்தால் திருப்பி அடிப்பீர்களா?// என்ற கேள்விக்கு பொம்பளைப் பொறுக்கி சோபா சகதி அளித்த பதில்:

//ha..ha..ha..

கண்டிப்பாகத் திருப்பி அடிப்பேன்.//

இது ஆணாதிக்க தடித்தனத்தின் உச்சம்... ஆனால் இவரது 'புரட்சி' எல்லாம் எழுத்தில் மட்டும்தான். நிஜத்தில் என்னடாவென்றால் தமிழச்சியிடம் இரண்டு முறை அடிவாங்கி வந்திருக்கிறது இந்த 'முன்னாள் போராளி'.. யார் கண்டது... புலிகள் இயக்கத்தில் இருந்து ஓடிவந்ததுகூட சிங்களவனுக்கு பயந்தோ என்னவோ...
vijayakumar
பேஸ்புக்கில் சோபா சக்திக்கு முட்டு கொடுக்கும் விதமாக ஆதவன் தீட்சண்யா எழுதியதும், அதற்கு எனது எதிர்வினையும்:

ஆதவன் சொல்றாரு: //"ஷோபா சக்திக்கு கதை எழுதவே தெரியாது" . "அவன் சாதி மாற்றிப் பேசும் பித்தலாட்டக்காரன்" . இப்போது "பொம்பளைப் பொறுக்கி" . இப்படியே போனால் அப்படியொருவர் பிறக்கவேயில்லை என்று எழுதி கணக்கை முடித்திருப்பார்கள். கிளைமாக்ஸ் ஆண்ட்டி கிளைமாக்ஸாகிவிட்டது. இதற்கெல்லாம் சளைப்பவர்களா, இந்நேரம் அடுத்த சாணி பக்கெட் ரெடியாகி இருக்கும். அதுசரி யார் மீது? எனக்கு அவசரமாய் வருகிறது, என் கழிப்பறைக்குள் ஒளிந்திருப்பவர்கள் வெளியே வாருங்கள்.//

உங்க நன்றி விசுவாசம் எல்லாம் இருக்கட்டும் தோழர்... ஆனால் சோபா சக்தியை மட்டும் உங்க ஊர்ப்பக்கம் விட்டுறாதீங்க... பிறகு.. 'முதல் சந்திப்புல மனசைக் கொடுத்தேன்... இரண்டாவது சந்திப்புலே உடம்பைக் கொடுத்தேன்'னு எழுதிருவாரு... பாவம் நீங்க...
nilavu
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_21.html
புனைவு - பொறுக்கிகள் முன்னெடுக்கும் பஞ்சாயத்து ஜனநாயகம்
Krishnan K
@விஜயகுமார், தமிழ்நதிக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஆணாதிக்க தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, தானும் ஓர் ஆண்தான் என்று அம்பலமானவர் ஆதவன். தன்னுடைய நன்றி விசுவாசத்தை நிரூபிக்க காலச்சுவடு கண்ணனுடன் சேர்ந்துக்கிட்டு தேவேந்திர பூபதிக்கு வாய்தா வாங்காத வக்கீலாக ஆஜரான வரலாறும் அவருக்கு உண்டு. அந்த இழைகளின் தொடர்ச்சியாகத்தான் இப்போதும் சோபாசக்திக்காகவும் ஆஜராகிறார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.. ஆனால் எதிர்கொள்ளப்பட வேண்டிய தந்திரம் ஒன்று அவரது வக்காலத்தில் ஒளிந்திருக்கிறது.. ஷோபா சக்தி சாதி மாற்றிப் பேசும் பித்தலாட்டக்காரன் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று மறுக்கிறார். கவின்மலர் எடுத்த பேட்டியில் ஷோபா சக்தி தலித் வேஷம் போட்டதும், தமிழச்சியிடம் 'தலித்' என்று கூறியதும் அண்மையில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வேளை, தான் ஆதிக்க சாதிக் குடும்பத்தில் பிறந்ததை சோபா சக்தி எங்காவது பொதுவெளியில் (அவரது இணையத்தில் அல்ல; இப்போது எங்கேயாவது சொருகியிருக்க வாய்ப்பிருக்கிறது) கூறியிருந்ததை ஆதவன் பார்த்திருக்கிறாரா? அப்படியானால் அதற்கான ஆதாரத்தைத் தரட்டும்.. பெரியார் தான் ஆதிக்க சாதியில் பிறந்தவன் என்பதை பலமுறை வெளிப்படையாகக் கூறிவிட்டுத்தான் சாதி ஒழிப்பில் ஈடுபட்டார். அதுதான் நேர்மை.. ஆதவன் பதில் சொல்வாரா? இல்லை எப்போதும் போல் கள்ள மௌனம்தானா?
ராமாமிர்தம்
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கிய ஒரு பிரச்சனையைத் தேடிப்பிடித்து விவாதித்து அதை பூதாகரமாக்கி புலி எதிர்ப்பு, ஆதரவு கடிதங்களைத் தீட்டி,
பெண்ணியம், தலித்தியம், வெள்ளாளயியம் பேசி, பல பெயர்களில் மீண்டும் மீண்டும் பின்னுட்டம் போட்டு காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஈழம் குறித்து ஷோபா சொன்னதை இன்னும் மறுதலிக்காத போது செத்த பாம்பை போட்டு இன்னும் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தயவு செய்து இத்துடன் உங்கள் கட்டப்பஞ்சாயத்துக்களை விட்டுத் தொலையுங்கள்
JARF
தமிழச்சியின் தன்னிலை விளக்கம் பெரியார் சிந்தனைகள் ஒரு பெண்ணை மாற்றாது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. இவரின் இக்கட்டுரை இவரை ஒரு மென்மையான பெண்ணாகத்தான் காட்டுகிறது. இவரின் வீரம் ஒரு சோளக்காட்டுப் பொம்மையைத்தான் நினைவுபடுத்துகிறது.

ஒருவனை கைனீட்டி அடிப்பது வீரமல்ல. ஆனால் அவனை அவன் செயலுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதும், அச்செயலை அவன் நினைத்து வருந்தி அப்படி இனி தானே செய்யமாட்டேன் என உறுதிகொள்ள வைப்பதுமே வீரமாகும். ஏனென்றால் அதற்கு ரொம்ப மனதிடம் வேண்டும். சிதம்பரம் பத்மினி அதைச்செய்தார். 'ரயில் நிலையத்தில் வைத்து அடித்தேன்'; 'ஓட்டலில் வைத்து அடித்தேன்' என்பது வீரம் என இவர் நினைக்கிறார். வீரமில்லை. அடிவாங்கியவன் மீண்டும் அதைச் செய்வான், திருந்த மாட்டான்.

பெரியாரின் சிந்தனைகள் இவருக்கு நாட்டமாம். அன்னாட்டம் உடையோர் இவருக்கு நணபராகி விடுவார்களாம். என்ன முட்டாட்தனமான எண்ணம்! ஒரு பெண்ணுக்கு எது நாட்டம் என அறிந்து அன்னாட்டம் தனக்கு இருப்பதாக நன்றாக நடிக்க முடியும். பின்னர் அதை வைத்தே அவளை வலைவீச பிடிக்க முடியும் என்று இவருக்குத் தெரியவில்லையென்றால், இவர் ஏன் பெரியாரைப் பற்றிப் பேசுகிறார்?

அறிவுள்ள பெண்கள், ஒரு சந்திப்பு அல்லது இரு சந்திப்புகளில் ஒரு ஆணின் மன ஓட்டம், அல்லது அவன் பெண்களை எப்படி நோக்குகிறான் என்பதை அறிவார்கள். உளவியலார், பெண்களுக்கு இச்சக்தி இறைவனால் பிறப்பிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது என்பார். வியப்பான ஒன்று சமீபத்தில் செய்தித்தாள்களில் வந்தது: பெண்கள் தன்னந்தனியே நடந்து செல்லும்போது தன்பின் எவரேனும் வருகிறார்களா என பார்க்காமலே உணரும் சக்தியும் அவர்களுக்கு உண்டாம்.

ஒருசமயம், தமிழ்நாடு போலிசு அதிகாரியான திருமதி ராம சுந்தரத்தை ஆனந்த விகடன் பேட்டிகண்டு, அவரின் தனிநபர் வாழ்க்கையைப் பற்றிக்கேட்டது:

தங்கள் திருமணம் எப்போது நடந்தது ?

பதில்: "மண்டைக்காடு கலவரத்தைச் சரிசெய்ய அரசு என்னைப் பணித்தது. ஆங்கு சென்றேன். என்னுடன் கன்யாகுமரி கலெகடர், பிற அதிகாரிகள் வந்து விலக்கினர். எல்லாரும் என்னிடம் தங்கள் விளக்கங்களைக் கொடுத்தனர். ஆனால் கலெகடர் என்னை வேறுவிதமாகப் பார்க்கிறார் என்று எனக்கு உள்ளுணர்வு சொன்னது. அன்னிகழ்ச்சி முடிந்து என் பணியிடத்திற்கு திரும்பி விட்டேன். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவருடன் சந்திப்பு நடந்த போது அப்பார்வை எனக்கு மேலும் புரிந்தது. வெகுநாட்களுக்குப் பிறகு அவர் தன் காதலை எனக்குத் தெரியப்படுத்த என் வீட்டாரின் சம்மதத்தில் நான் திரு ராமசுந்தரத்தை கணவராகக் கரம் பிடித்தேன். தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது. ஆனால் எங்கள் ராஜஸ்தான் முறைப்படி ஜெய்பூரில் மீண்டும் ஒரு மண நிகழ்ச்சி நடந்தது."

எனவே உளவியலார் சொல்வது சரியாகிறது. ஒரு பெண் முதல் பார்வை, அல்லது இரண்டாம் பார்வையில் ஒரு ஆணை எடை போடமுடியும். என்னோக்கில் தன்னைப் பார்க்கிறான் என்று.

தமிழச்சிக்கு ? என் முதல் வரியை மீண்டும் படியுங்கள் இங்கே.

**** ******** ******** ******* ********** ****** ************ **********

கண்க ளிரனண்டிருந்தும்
காணும் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ ..கிளியே
பேசிப் பயனென்னடீ
தியாகு
கீழ்கண்ட எனது பதிவுகளை பார்க்கவும்

http://thiagu1973.blogspot.com/2011/02/blog-post_24.html

http://thiagu1973.blogspot.com/2011/02/blog-post_26.html
komban
Yaarudaa indha shoba sathi... Mental.
shanmuganathan
amma thamizhatchi naan ungalai semozhi mahanatil neril santhithu pesiullen ungalin elimai palgum gunam migavum pidithirunthadhu sobha pondra poliyana periyariya penniyavadhigalai naan niramba arinthirukkindren evargali mathippeedu seivathil ungalaipondra penniya sinthanaiyakrgal echarikiyudan irukkavendum ungal anubavam pengalukku oru padipinaiyaga irukka ungalin thunivana katturai udhavum ena nambukiren periyar kurithu neengal thogutha katturaigali meeturuvakkam seithida ulaikkumaru anbudan kettukkolgiren amma, nandri, vanakkam shanmuganathan karaikudi 9344311101
Doss
kudiththuvittu vanthavanidam natbu paaraattiyathaaga sollum ungal pessu nambumbadiyaaga illai. nalla pen kudikaaranidam vilaki yirukkave virumbuvaal

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.