'ஓ' - பக்கங்கள் வாசகர் வட்டம்: பகிர்தல்
இடம்: Little Flower English School. (4th Floor auditorium), # 47, 2nd Cross, Sai baba Nagar, Near Sunrise circle, Sriramapuram, Bengaluru 560 021.
நேரம்:  10 பிப்ரவரி 2011 17:30

திரு. ஞாநி அவர்கள் தமிழீழப் போர் உச்சத்தில் இருந்தபோதும் அதற்குப் பிறகும் நேரடியாக மற்றும் மறைமுகமாக ராஜபக்ச அரசையும் அதன் செயல்களையும் நியாயப்படுத்தியது அனைவரும் அறிந்தது. பாலிவூட் திரைப்பட விழா எதிர்ப்புகள் வலுத்து திரு. கமல்காசன் முற்றுகை இடப்பட்டு அதன் காரணமாக அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்றபோது, அவர் அவ்வாறு புறக்கணிக்ககூடாது, கலையில் அரசியலை சேர்க்க கூடாது என்று எந்தவித தர்க்க நியாயமும் அற்ற கட்டுரையை குமுதம் இதழில் எழுதினார். இதைக் கண்டித்து, நேரடியான விவாதத்திற்கு அழைத்தபோது அவர் அதற்கு பதில் அளிக்காதது மட்டுமல்ல அதைப் புறக்கணித்து சனநாயக விரோதமாக நடந்து கொண்டார். இவ்வாறு  சனநாயக விரோதமாக , மானுட விரோதமாக நடந்து கொண்டவர் தமது நிலையை விளக்காமலும், மன்னிப்பு கோராமலும் இருப்பது எவ்வகையில் சனநாயக செயலாக முடியும்.

தமிழ் இனப்படுகொலையை மறைமுகமாக தொடர்ந்து நியாயப்படுத்தி வருபவர் ஒரு அறிவுஜீவியாக தமிழர்களிடத்தில் வலம் வருவது மானுடத்தை நேசிப்பவர்களுக்கு அவமானமான ஒன்றாகும். இவர் எதிர்கொள்ளப்பட வேண்டியவர். தமிழர் விரோதி மட்டுமல்ல, இவர் மானுடத்திற்கும் எதிரானவர். தனது சுயலாப நோக்கங்களுக்காக மக்களின் உன்னதப் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர். இவர் தொடர்ந்து மக்கள் மன்றங்களில் பேசுவது, மக்களிடத்தில் மானுட விரோத நஞ்சை விதைப்பதற்கே உதவும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவர் தன் கருத்தை நேர்மையானது என்று நம்புகிறவராக இருந்திருந்தால்,பொதுத்தளத்தில் இதை விவாதிக்க ஒத்துழைத்து இருப்பார். பொதுத்தளத்தில் மக்களிடத்தில் விவாதிக்கும் நடைமுறையே தொன்று தொட்டு - ஆயிரம் வருடங்களுக்கு மேலாக - அறிஞர்களிடத்தில் இருக்கும் வழிமுறை. இவ்வாறே தமது கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பர். இதைப் போன்ற விவாதங்களை தன் கருத்து மீது நடத்த மக்கள் விரோதிகளும், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் மட்டுமே மறுப்பர்.

திரு.ஞாநி இவ்வாறான கருத்து சுதந்திர விரோத வழிமுறையைக் கொண்டு இருப்பவர். இவர் அறிஞர்கள் மன்றத்தில் நின்று பேச அருகதை அற்றவர். எனவே இவர்  இந்த அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் சார்பாகக் கோருகிறோம். சனநாயக ரீதியில் எதிர்க் கருத்துக்களை எதிர்கொள்ளாதவர் இந்த அரங்கில் மட்டுமல்ல எந்த அமைப்பிலும் பங்கேற்கத் தகுதியற்றவர் என்று உறுதிபட இங்கு உரைக்கின்றோம். அவருக்கு நாங்கள் சென்ற ஜூன் மாதம் அனுப்பிய கடிதத்தின் நகலை இங்கு இணைத்துள்ளோம். இது குமுதம்  இதழுக்கும், திரு.ஞாநிக்கும் பதிவுத் தபாலிலும், இணையம் வழியாகவும் விடுத்த கோரிக்கையின் நகல்.

மரியாதைக்குரிய திரு.ஞாநி அவர்களே!
by Thirumurugan Gandhi on Tuesday, June 8, 2010 at 7:40pm
 
வணக்கம்
 
தங்களுடைய குமுதம் (9-6-2010) கட்டுரையில் ஐஃபா விருது விழா புறக்கணிப்பு பற்றிய தங்களது கருத்துக்கள் உண்மைக்கு எதிராகவும், தவறாக வாசகர்களை வழி நடத்தக் கூடிய தன்மையும் இருப்பதைக் கண்டோம்.
 
”ஐஃபா விருது விழாவை ஏன் புறக்கணிக்க வேண்டும்” என்று மே பதினேழு இயக்கம் வெளியிட்ட கட்டுரையை தாங்கள் படிக்க முடியாமல் போனதால் கூட தங்களின் இந்த கருத்துக் குறைபாடு வந்து இருக்கலாமோ என்று எண்ணுகிறோம். அல்லது தங்களின் ஆணித்தரமான கருத்தைத்தான் வெளியிட்டு இருந்தீர்கள் என்று தாங்கள் கூறும் பட்சத்தில், தங்களின் அறிவுக் குறைபாட்டையோ அல்லது புரிதல் குறைபாட்டையோ போக்கும் விதத்தில் தங்களுடன் கருத்து விவாதம் செய்ய மே பதினேழு இயக்கம் ஆர்வத்துடன் உள்ளது. ஏனெனில் தங்களின் தவறான புரிதல் வாசகர்களுக்கு மட்டும் அல்லாமல் தங்களின் அறிவிற்கும் தீங்கானது என்று உணர்ந்ததாலேயே இதை உங்களுக்கும், தமிழக மக்களுக்கும் அறிவிக்கிறோம்.
 
நீங்கள் விரும்பும் இடத்தில், உங்களுக்கு வசதியான தேதியில், வசதியான நேரத்தில் பத்திரிக்கையாளர் மற்றும் பொது மக்களின் முன்னால் தங்களுடன் விவாதிக்க விருப்பமாக இருக்கிறோம்.
 
இப்படிக்கு, மே பதினேழு இயக்கம்  | 9444146806 | www.mayseventeen.com 

Comments

42 comments

42
Thiru
வணக்கம்,
நான் திரு... ஞாநி சந்திப்பை ஏற்பாடு செய்தவன்.... உங்கள் கோரிக்கை நியாயமானதே.... நடக்கவிருப்பது விவாத கூட்டம் தான்.... இந்த கலந்துரையாடலில் நீங்களோ அல்லது உங்கள் பிரதிநிதிகளோ கலந்து கொண்டு உங்கள் தார்மீக கேள்விகளை எழுப்புங்கள்.... அறிவு தளத்தில் நடக்கும் இந்த கொள்கை மோதல்கள் ஆரோக்கியமானதாகவும்... மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த விவாதம் பயன்படட்டும்... அதைவிட்டுவிட்டு வெளியேறுங்கள் என்ற வேற்று கோஷங்கள் அவசியமற்றது.... நானும் ஈழ ஆதரவாளன் தான்.... இன்னும் சொல்ல போனால் ஈழ பிரச்சனையில் அவரிடம் மாற்று கருத்து வேண்டி அவருக்கு நான் கொடுக்க இருக்கும் நினைவு பரிசு இயக்குனர் ஜானின் 'ஆணிவேர்' திரைப்படத்தை தான்..... நேரடியாகவே தமிழ் மக்களுக்கு துரோகங்கள் செய்துகொண்டிருப்போரிடம் காட்ட வேண்டிய எதிர்ப்புகளுக்கும்... கொள்கை அளவில் மாற்று கருத்து கொண்டிருப்போரிடம் காட்ட வேண்டிய தார்மிக எதிர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது... புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.... வாருங்கள் உட்கார்ந்து பேசுவோம்....

இப்படிக்கு...
திரு
+919980122730
gnani
என் கருத்துகளை நான் என் கட்டுரைகளில் பொது தளமான பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படுத்துகிறேன். அவற்றுடன் உடன்படவும்முரண்படவும் அனைவருக்கும் உள்ள உரிமைகளை நான் மதிக்கிறேன். என் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகளைக்கொண்டிருப்பவர்கள் அவற்றை அவர்களுக்கு உகந்த பொது தளங்களில் வைக்கலாம்.வைப்பது அவர்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும். எல்லா கருத்துகளையும் பரிசீலித்து முடிவுக்கு வருவது பொது மக்களின் உரிமை. நான் என்னுடன் முரண்படுகிறோம் என்று அறிவிப்பவர்களுடன் நேரடி விவாதங்களில் ஈடுபடுவதில்லை. அவர்கள் அவர்களுடைய நிலையிலும் நான் என்னுடைய நிலையிலும் உறுதியாக இருக்கும்போது இந்த விவாதத்தில் அர்த்தமில்லை. என் கூட்டங்களை வேறொருவருக்கான மேடையாகவோ, இன்னொருவர் மேடையை என்னுடைய மேடையாகவோ நான் ஆக்கிக் கொள்ள விரும்புவதில்லை. இரு தரப்பு கருத்துகளும் அவரவர் முயற்சியில் மக்களிடையே செல்கின்றன. மக்கள் தமக்கு உகந்தவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
கடந்த 35 வருடங்களாக இதே அடிப்படையுடன்தான் நான் இயங்கி வருகிறேன். தமிழ்ச் சமூகத்தில் வாழ்வியலிலும், சமூக நீதியிலும், மானுட சமத்துவத்திலும் நேயத்திலும் என் பார்வைகள் என்னவென்பதை 35 ஆண்டுகளாக திறந்த புத்தகமாக இருந்து வரும் என் வாழ்க்கையும் எழுத்தும் அறிந்தவர்களுக்குத் தெரியும். ஈழத் தமிழர்களுக்கான அரசியல் சமத்துவத்தையும் சம உரிமையையும் நான் எப்போதும் ஆதரித்தே வந்திருக்கிறேன். எனவே அவதூறுகள், முத்திரை குத்துதல்களை நான் பொருட்படுத்துவதில்லை. தகவல் பிழைகள் இருக்கும்போது மட்டுமே சில தருணங்களில் அவற்றை திருத்த கருத்து தெரிவித்திருக்கிறேன். மற்றபடி என்னை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம். இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை. ஞாநி
arun
தோழர் திருவிற்கு...

மே 17 இயக்கம் ஞாநியை விவாதிக்க அழைத்தது சென்னையில்... ஞாநி சொல்கிற இடத்தில் சென்னையில் விவாதம் நடத்த அவர்கள் தயார் என்கிறார்கள். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் நழுவுகிறார். நீங்கள் என்னாடாவென்றால் ஞாநியின் வாசகர் வட்டக்கூட்டத்தில் பெங்களூர் வந்து கேள்வி கேட்கச் சொல்கிறீர்கள். அங்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளித்துவிட்டு, ஞாநி வேறு கேள்வி கேட்கச் சொல்ல மாட்டார் என்று என்ன நிச்சயம்? வேண்டுமானால் சென்னையில் ஒரு கூட்டம் நடத்தச் சொல்லுங்கள். அதில் ஈழம் தொடர்பான அவரது நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கச் சொல்லுங்கள்.. அவர் தயார் என்றால், கூட்டத்திற்கான செலவை ஏற்றுக் கொள்ள நான் தயார். இல்லையென்றால், என்ன ***க்கு பெங்களூர் போய் மறைவாக கூட்டம் நடத்துகிறார்? கேட்பதற்கு அங்கு ஆள் இருக்க மாட்டார்கள் என்ற தைரியம்தானே??
R Nagaraj
அது தான் ஞாநியை குமுத்தைவிட்டு அனுப்பி விட்டார்களே அப்பறம் ஏன் அவர் குமுதத்தில் எழுதியதை சொல்லிக் கொணடிருக்க வேண்டும்... நீர் எதிர்க்க வேண்டிய நபர் யாரென்னு உமக்குத் தெரியும்... தெரிந்தும் எங்கே உம் அதிகாரம் செல்லுமோ அங்கே உம் வீரத்தைக் காட்ட வேண்டிய அவசியம் என்ன.. ஞாநியை அடித்தால்கூட எவனும் வரமாட்டான் என்ன தைரியம் தானே.. அடடடா என்னே உம் வீரம்....
புரவி
லட்சகணக்கான ஈழ தமிழர்களை கொன்று குவித்த போது அதை கண்டிக்காத அனைவரும் மரத்தை விட கேவலமானவர்களே.

அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்
krubakaran
ஏம்பா... இவர் ஊர்லே இருக்கிறவங்களையெல்லாம் கேள்வி கேட்பாரு... தனக்குப் பதில் சொல்லனா சலிச்சுக்குவாரு... மத்தவங்க விவாதிக்கக் கூப்பிட்டா மட்டும் மாட்டேன்பாரு.. நல்லாருக்குபா ஞானி நியாயம்... இதே ஞானி கருணாநிதியை விவாதத்துக்கு அழைத்ததையெல்லாம் படிச்சிருக்கேன். அவர் நியாயம் எல்லாம் ஊருக்குத்தான் போல....
ம பொன்ராஜ்
1 ) ஈழ ஆதரவு நபர்கள் குறித்து 'ஞானி' அவர்கள் தெரிவித்த (உத்தேச) கருத்து. "இங்கிருக்கும் பிரச்னைக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? இங்கயே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. இதை விட்டுவிட்டு ஈழ தமிழனுக்காக எதற்கு இவர்கள் கூப்பாடு போடுகிறார்கள்?"... இதற்க்கு கவிஞர் தாமரை அவர்கள் அவர் பாணியில் அருமையான எதிர்வாதம் ஆற்றியிருந்தார். 2 ) கவிஞர் அறிவுமதி 'ஞானி' குறித்து கூறியவை: "பெரியார் முகாமுக்குள் நுழைந்து, தன்னை பெரியாரிஸ்டாக அறிவித்து கொண்டு, அதில் இருப்போரை காட்டிக் கொடுக்கும் ஒரு உளவாளி. உஷார்...!!!" 3 ) 'காங்கிரஸ்' தான் தமிழினத்தின் முதல் எதிரி என்று தமிழ்நாட்டில் பிரகடனம் செய்யப் பட்ட நிலையில் 'ராகுல் காந்தி' சமீபத்தில் கூட்டிய கூட்டத்திற்கு கால் கடுக்க வெகு நேரம் காத்துக் கிடந்த நபர் 'ஞானி'.... சரி இதெல்லாம் எதுக்காக சொல்கிறேன்? 'ஞானி'யின் ஈழம் பற்றிய பார்வையை அவர் சொல்லியிருக்கிறார். அதனுடன் இதை பொருத்திபார்க்கவே....!!! இப்படி முன்னுக்குப் பின் முரணாக உள்ளவரை 'மே 17 ' இயக்கத்தினர் அறவழியில் எதிர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை....!!!
MARAN
MR.GNANI,

YOUR FEEDBACK RESEMBLES AS THAT OF LATE MR G K (MOOPANAR).

PLEASE TRY TO RESPOND HONESTLY.
R Nagaraj
சில விசயங்களை சற்று விளக்கவும்
1) பெரியார் நக்சலிசத்தை காலித்தனம் என்றதாக ஒரு தகவல்உண்டு அப்படியென்றால் அவருக்கு அதைச் சொல்ல உரிமை உண்டென்றால் அதைப் போல ஒரு கருத்தைச் சொல்ல உரிமை ஞாநிக்கு உள்ளதே அதை ஞாநிக்கு மறுப்பது நியாயமா?பெரியார் தானே அனைத்தையும் பகுத்தறியச் சொன்னார்
2) முற்போக்கு என்பதை கிட்டத்தட்ட பார்ப்பன மந்திரம் சொல்வதைப் போல புனிதத்தை நீங்களே கற்பித்துக் கொண்டு இதையிதையெல்லாம் ஆதரித்தால்தான் நீ முற்போக்கு என்ற சர்டிபிகேடை தருவதற்கு நீங்கள்
யார்?
3) தாமரை சீமான் திரைப்படத்துறையில் இருப்பதாலேயே மாவோ லெனின் ரேஞ்சுக்கு கொடுக்கப்படும் பில்டப் தேவையா
4) முற்போக்கு பட்டம் வாங்க அறிவுமதிதான் உலக அண்ணாவியா
மேற்கண்டவற்றுக்கு பதில் தேவை
உண்மையில் எனக்கு சந்தேகம் உள்ளது. வெறும் பகடிக்காக
க் கேட்கவில்லை (சந்தேகம் தொடரும்)
ம பொன்ராஜ்
நாகராஜ் அவர்களே,
டென்ஷன் ஆக வேண்டாம்... கொஞ்சம் கீழே உள்ள லிங்கை சொடுக்குங்கள்.
1)
லிங்க் 1 :
http://amizhtha.wordpress.com/2010/01/30/
தலைப்பு:
'இலக்கிய உலக சகுனி அல்லது ஞானி'
2)
லிங்க் 2:
http://kaattchi.blogspot.com/2010/06/blog-post_11.html
தலைப்பு:
ஞானி என்கிற மகா நடிகருக்கு - சாம்ராஜ்

இவையெல்லாம் ஞானி'யை அறிந்த நபர்களால் எழுதப் பட்ட கருத்துகளில் சில உதாரணங்கள் தான். உங்களின் பெருமான்மையான கேள்விகளுக்கு பதிலும் அதிலேயே உள்ளன.
K.R.அதியமான்
////தமிழ் இனப்படுகொலையை மறைமுகமாக தொடர்ந்து நியாயப்படுத்தி வருபவர் ஒரு அறிவுஜீவியாக தமிழர்களிடத்தில் வலம் வருவது மானுடத்தை நேசிப்பவர்களுக்கு அவமானமான ஒன்றாகும். இவர் எதிர்கொள்ளப்பட வேண்டியவர். தமிழர் விரோதி மட்டுமல்ல, இவர் மானுடத்திற்கும் எதிரானவர். தனது சுயலாப நோக்கங்களுக்காக மக்களின் உன்னதப் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்./////

மறைமுகமாக நியாயப்ப்டுத்துகிறார், மானுடத்திற்க்கு எதிர்னவர் என்று நீங்களே மிக தவறாக, மேலோட்டமான, மதவாதம் போல் சொன்னால் எப்படி ? மிக சிறந்த மனித நேயர் என்பதுதான் அவரின் 35 ஆண்டுகால செயல்பாடுகளை, எழுத்துக்களை, போராட்டங்களை முழுவதும் அறிந்தவர்களின் கருத்து. சுயநலம் குறைவாக இருப்பதுதான் அவரின் பலவீனம்.

ஒரு கருத்தை சொன்னாலே அவர் சுயனலவாதி என்று முத்திரை குத்துவது பகுத்தறிவு அல்ல. மாறாக மதவாதம் போன்ற முடநம்பிக்கை.

சரி, இறுதியாக ஒன்று சொல்கிறேன் :

புலிகள் அழிந்தது தான் மிகவும் நல்லது. இனி போர் மற்றும் சாவுகள் இருக்காது. சில வருடங்களில் ஜனனாயகம் ஈழத்தில் உருவாகி, மக்கள் அமைதியாக வாழ முடியும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, போரில் புலிகள் வென்று, ஈழத்தை அமைத்திருந்தால், அங்கு உண்மையான ஜனனாயகம் உருவாகியிருக்காது. ராணுவ சர்வாதிகாரம் தான் இருந்திருக்கும். ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் உள்ளது போல் ஒரு war lord அடக்கி ஆளும் நாடாக ஈழம் இருந்திருக்கும். தமிழன், தமிழனுக்கே அடிமையாக இருந்திருப்பான். எதிர் கட்சிகள், மாற்று கருத்துக்கள், சுதந்திரம் நசுக்கப்பட்டிருக்கும்.

கருணா 2004 வரை புலிகளின் முக்கிய தளபது. அதன் பிறகு தான் துரோகியாக மாற சந்தர்பம். அதற்க்கு முன்பு ஈழம் உருவாகியிருந்தால் ? பிரபாகரனை ஒரு சந்தர்பத்தில் போட்டு தள்ளிவிட்டு கருணா ‘தேசிய தலைவராக’ வந்திருக்க வாய்புகள் இருந்திருக்கும். இதே தான் அனைத்து வகை சர்வாதிகார நாடுகளின் வரலாறு சொல்கிறது. இன்னும் எத்தனை கருணாக்களோ புலிகளின் அமைப்புக்குள் ? அவர்கள் எல்லோரும் அதிகாரத்தில் இருந்தால் ?

நிதி திரட்ட போதை மருந்து, மற்றும் ஆயுதங்களை பெரும் அளவில் அவர்கள் பல ஆண்டுகளாக கடத்தினர். பெரும் வணிக நிறுவனங்கள் (பிணாமி பெயர்களில்), கப்பல்கள் வைத்திருந்தனர். ஈழம் உருவாகியிருந்தால், அதை legalஆக தொடர்ந்து செய்திருப்பர். இன்றைய வட கொரிய அரசு செய்வதை போல. சீரழிந்து போயிருக்கும்.

ஒரு காலத்தில் நானும் பிராபகரனின் படத்தை அறையில் மாட்டியிருந்தவன் தான். Disillusionment என்பது அனுபவத்தில் தான் உருவாகும்.

கலைஞர் கருணானிதி உங்களுக்கு துரோகியாக படவில்லை. ஆனால் ஞாநி துரோகி. நல்ல பகுத்தறிவு உங்களுக்கு.

சரி, இப்படி பேசுவதால், எம்மையும் ஒரு துரோகி, கைக்கூலி என்று சொல்வீர்கள் என்று தெரியும். பரவாயில்லை.
K.R.அதியமான்
///திரு.ஞாநி அவர்களே! அரங்கை விட்டு வெளியேறுங்கள்!///

இந்த தலைப்பே, அராஜகமான, ஃபாசிசமாக இருக்கிறதே !
ஒரு கருத்தை சொல்வதாலேயே, ஒருவரை வெளியே செல் என்று சொல்வதுதான் ஃபாசிசம். புலிகளின் பாணியும் இதேதான். இப்பவே இப்படி ஆணையிட துணிகிறவர்கள், அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் என்னவெல்லாம் செய்ய துணிவார்கள் ? ஈழத்திலும் தான் சொல்கிறேன்.

நல்ல வேளையாக இனி அது சாத்தியம் இல்லை.
புரவி
போர் நடக்கும்போதை விட இப்போது அதிக அளவில் தமிழர்கள் துன்புற்று வருகின்றனர்.
ஈழம் உண்மையிலேயே பற்றி எரிந்து கொண்டிருகிறது. அப்படி பற்றி எரிஉம்போது கூட ஐ பா விழ அங்கு நடக்கலாம். அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறார் ஞானி அவர்கள்.ஆனால் அதே ஞானி ஆங்கில நாளேடு ஒன்றில் திருப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் நீரோ வை போல் இருகின்றனர் என்று எழுதுகிறார். ஏன் இந்த முரண்பாடு?
அருண்
ஜெகத் கஸ்பர் பாதரியாரும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ஒரே மேடையில் தோன்றிய போது தனது கட்டுரையில் இப்படி எழுதினார். ஜெகத் கஸ்பர் புலி ஆதரவாளர். காங்கிரஸ்காரரான கார்த்தி சிதம்பரம் எப்படி அவருடன் ஒரே மேடையில் இருக்கலாம்? அப்படியானால் கார்த்தி சிதம்பரம் ஜெகத் கஸ்பரின் புலி ஆதரவு கொள்கையை ஆதரிக்கிறாரா?

சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அத்வானியின் பாபர் மசூதி இடிப்பு கொள்கை காங்கிரஸுக்கு உடன்பாடானதா என்று கேள்வி எழுப்பாமல், அவர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசரித்ததை கொண்டாடிய ஞாநி, ஜெகத்கஸ்பர் விஷயத்தில் மட்டும் ‘நீ யார் பக்கம்?’ என்று வம்படியாக கேள்வி கேட்பது ஏன்?
நன்றி : தாமரை அக்கா
ம பொன்ராஜ்
//புலிகள் அழிந்தது தான் மிகவும் நல்லது. இனி போர் மற்றும் சாவுகள் இருக்காது// வரலாற்றை புரட்டி பார்த்து அதை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள் திரு.அதியமான் அவர்களே...!!! உங்களின் நேற்றிய, இன்றைய, நாளைய, நாளைய மறுநாள் பற்றிய தொலைநோக்கிய பார்வையும், பக்க சார்பற்ற உங்களது கருத்துகளும் அருமை. வாழ்த்துக்கள். உங்களைப் போல ஆட்கள் இருப்பதால் தான் நாட்டில் மூன்று முறையாவது மழை பெய்கிறது. வானம் பொழிவதும், பூமி விளைவதும் நீங்கள் இந்த மண்ணில் பிறந்ததால் தான். தொடர்ந்து எழுதுங்கள். (பள்ளியில் தமிழ் இரண்டாம் தாள் எழுதும் போது 'வஞ்சப் புகழ்ச்சி அணி -- வரையறு.' என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் இன்று பதில் அளித்துவிட்டேன். ஹா...ஹா..ஹா)
ம பொன்ராஜ்
தலைப்பை மட்டுமே பார்த்து (அது ஏன் சொல்லப் பட்டது, எதற்காக சொல்லப் பட்டது, அதன் நோக்கம் என்ன என்று எதையுமே ஆராயாமல்) எடுத்த எடுப்பிலேயே 'பாசிசம்' என்றால் என்ன அர்த்தம் அதியமான் அண்ணே? 'வெளியேறு' என்று சொன்ன மே 17 இயக்க நபர்கள் பாசிஸ்ட்டு என்றால், 'வெள்ளையனே வெளியேறு' என்று சொன்ன காந்தியும் உங்க பார்வையில் பாசிஸ்டா?..... அப்புறம் அங்கிருந்து ஒரே ஜம்ப் அடிச்சு 'புலிப் பாசிசம்' என்று சொல்கிறீர்கள்... புலிகள் இறந்ததால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்ற மகா கண்டுபிடிப்பை வேறு சொல்லியிருக்கிறீர்கள் (நீங்க என்ன இந்து ராமின் சொந்த காரரா?)...!!! முதலில் ஈழத்தமிழரின் போராட்டத்தை புலிகளில் இருந்து ஆரம்பித்ததே தவறு. ஈழ வரலாறு தெரிந்திருந்தால் நான் சொல்வது உண்மை என்று தெரிந்திருக்கும். நிலைமை இப்படி இருக்க, அரைகுறை வரலாற்று அறிவுடன் வாந்தி எடுப்பது மட்டும் அல்லாமல், அதை தெளிவுபடுத்த அழைக்கும் நபர்களை பாசிஸ்டுகள் என்று சொல்வது தான் 'பாசிசம்'...!!! என்ன நான் சொல்வது சரியா அதியமான் அண்ணே?
R Nagaraj
நீங்கள் குறிப்பிடும் ஒரு கட்டுரையை ஏற்கனவே படித்திருக்கிறேன்... இன்னொரு கட்டுரை தற்போதுதான்... ஆனால் தவறு செய்து விட்டீர்கள்..
இரண்டு கட்டுரைகளைப் படித்த பின்னர் என் சந்தேசகங்கள் சரியே என்று தோன்றச் செய்து விட்டீர்... சரி அது கிடக்கட்டும்,..... நீங்கள் என்னை
இதைப் படி அதைப் படி என்று சர்வாதிகாரம் செய்யும் முன்னர் திரு அதியமானின் இந்தக் கருத்துக்கு ஒரு கட்டுரையை விவாதாமாக உருவாக்கலாமே... நிச்சயமான அதியமானின் கருத்து ஒரு lateral thinkingதான் திரு அதியமானின் முக்கிய கருத்துக்கள்
1, ஒரு கருத்தை சொன்னாலே அவர் சுயனலவாதி என்று
முத்திரை குத்துவது பகுத்தறிவு அல்ல. மாறாக
மதவாதம் போன்ற முடநம்பிக்கை.
2,ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் உள்ளது போல் ஒரு
war lord அடக்கி ஆளும் நாடாக ஈழம் இருந்திருக்கும்.
தமிழன், தமிழனுக்கே அடிமையாக இருந்திருப்பான்.
3,கருணா 2004 வரை புலிகளின் முக்கிய தளபது.
அதன் பிறகு தான் துரோகியாக மாற சந்தர்பம்.
அதற்க்கு முன்பு ஈழம் உருவாகியிருந்தால் ?
பிரபாகரனை ஒரு சந்தர்பத்தில் போட்டு தள்ளிவிட்டு
கருணா ‘தேசிய தலைவராக’ வந்திருக்க வாய்புகள்
இருந்திருக்கும். இதே தான் அனைத்து வகை
சர்வாதிகார நாடுகளின் வரலாறு சொல்கிறது.
4,இன்னும் எத்தனை கருணாக்களோ புலிகளின் அமைப்புக்குள் ?
5 இன்றைய வட கொரிய அரசு செய்வதை
போல. சீரழிந்து போயிருக்கும்
6 ஒரு கருத்தை சொல்வதாலேயே, ஒருவரை
வெளியே செல் என்று சொல்வதுதான் ஃபாசிசம்.
புலிகளின் பாணியும் இதேதான். இப்பவே
இப்படி ஆணையிட துணிகிறவர்கள், அதிகாரத்தை
கைப்பற்றியிருந்தால் என்னவெல்லாம் செய்ய துணிவார்கள் ?
7. ஞாநியை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. கேட்க ஆளில்லை... ஆனால் கலைஞர் கருணாநிதி எல்லாவற்றையும் முன்னின்று நடத்தினார்.. அவரை எதிர்க்க முடியுமா?
ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு காங்கிரஸ் ஓட்டு கேட்கும் போது, பிணத்தைக் காட்டி ஒட்டு கேட்கிறார் என்று இதே முற்போக்காளர்கள் கேலி பேசினார்கள்.. இப்போது ஈழப் போர் இழப்பை வைத்துக்
கொண்டு உங்களை நீங்கள் விமர்சிக்காமல் இருக்க ஒரு
கேடயமான பயன் படுத்துகிறீர்கள் என்பது சரிதானே...
நல்ல நியாயம்தான்...
புரவி
கருத்து சொல்வதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில் அந்த கருத்தை அவரது தளத்தில் மாட்டும் வைத்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டர். அதே நேரத்தில் அவரது கருத்தை பொது தளத்தில் வைத்தால் பல பேர் அந்த கருத்துடன் மாறுபடலாம். அதுவும் மனித உயிர் சார்ந்த விடயத்தில் மேனா மெனக்காக கருத்து தெரிவிப்பது என்பது ஒரு வித அலட்சிய போக்குதான். பொது தளத்தில் வைகப்படும்பொழுது விவாதத்திற்கு அழைத்தால் அங்கு சென்று ஆரோக்கியமான விவாதம் செய்யலாம். அதை விட்டு விட்டு நான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன். விவாதத்திற்கு வரமாட்டேன் என்று சொன்னால் அதை விட பாசிசம் ஒன்று இருக்க முடியாது. அப்படி அவர் தொடர்ந்து அவர் கருத்தில் உறுதியாக இருக்கிறார் என்றால் அதை அவர் தளத்தில் வைத்து கொள்ளலாம். அதை யாரும் கேள்வி கேட்க போவதில்லை.
ஆதிக்க வெறியர்கள் இரத்தத்தில் கலந்த ஒன்று தான் யார் தனி நாடு கேட்டாலும் அதை எதிர்ப்பது. அதற்காக உலகத்தில் மோசமான உதாரன்னகளை எடுத்து சொல்வர். அதே நேரத்தில் உலகத்தில் நடை பெற்று கொண்டிருக்கும், நடை பெற்ற நல்ல உதாரணம் கலை எல்லாம் வசதியாக மறந்து விடுவர். இது வந்து தமிழ் சமூகத்திற்கு ஒன்றும் புதிது அல்ல.
காலம் காலமாக நடை பெறுவது தான். //கருணா 2004 வரை புலிகளின் முக்கிய தளபது. அதன் பிறகு தான் துரோகியாக மாற சந்தர்பம். அதற்க்கு முன்பு ஈழம் உருவாகியிருந்தால்// இந்த கருத்தை ஈழத்திற்கு மட்டும் பொருத்தி பார்ப்பது என்பது ஆதிக்க வெறியர்களின் மனதை அப்படியே பிரதி பலிகிறது. அப்படியே கொஞ்சம் இந்த கருத்தை நாம் அனைத்து நாடுகளிலும் பொருத்தி பார்த்தால் இன்று உலகம் என்பது ஒன்று இல்லாமல் போயிருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடந்து விடவில்லை. இது போன்ற வியக்கியனங்களுக்கு சற்றென்று பதிலும் கொடுக்கலாம். இவுலகத்தில் அனைவரும் சாகத்தான் போகிறோம் எதற்காக நாம் சாப்பிட வேண்டும் என்று இந்த ஆத்திகர்கள் பேசுவதில்லை அதை செயல் படுத்துவதில்லை. ஆனால் இம்மாத்ரியான கருத்துகளை எல்லாம் ஈழத்திற்கு மட்டும் செம்மையாக செயல்படுத்துவார். பிரபாகரன் கருணாவால் கொல்லபடுவதை விரும்பாத நலம் விரும்பிகள் மூன்று லட்சம் ஈழ தமிழர்கள் இறந்தது நல்லது தான் நாடு கிடைக்காமல் போனதும் நல்லது தான் என்ற அளவிற்கு இவர்களின் கருத்து தெரிவிப்பதில் இருந்து நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொளல்லாம் இவர்களுக்கு தமிழர்களின் மீது உள்ள அக்கறையை. சிங்கள பேரினவாதத்தால் அந்த இனம் அளியலாமே தவிர தமிழர்களுக்கு நாடு கிடைக்க கூடாது என்பது தான் இவர்களின் மன ஓட்டம். //ஞாநியை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. கேட்க ஆளில்லை... ஆனால் கலைஞர் கருணாநிதி எல்லாவற்றையும் முன்னின்று நடத்தினார்.. அவரை எதிர்க்க முடியுமா?//. இதை சொல்லி சொல்லி திருவாளர் ஞானி அவர்களை தப்பிக்க விபத்துதான் இவர்களின் எண்ணம் போல. விமர்சனம் வைத்தால் அதற்கு எதிர் வினை புரிய வேண்டும். அதை விட்டு அவரை பார்த்து கேட்டாய இல்லை இவரை பார்த்து கேட்டாய என்று கேட்பதுதான் பகுத்தறிவு போலிருகிறது. கருணாநிதி ஒரு **** என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவரை விமர்சிக்காத தளங்களே கிடையாது. நான் கேட்டவன் என்று சொன்னால் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் நல்லவன் என்று சொல்லி கொண்டு செயல் பாடுகளில் எல்லாம் எதிரிடையாக செய்தால் அதை விமர்சனத்திற்கு உட்படுதிதான் ஆக வேண்டும். அப்படி தான் அன்று காந்தியாரை ஒரு சின்ன விமர்சனத்திற்கு கூட அனுமதிக்காத கூட்டம் இன்று அவர் தாழ்த்த பட்டவர்களுக்கு எதிராக நின்றதை ஆதாரத்துடன் வைகப்டும்பொழுது அக்கூட்டம் மெளனமாக நின்று கொண்டு கையை பிசைந்து கொண்டிருகிறது. ஆனால் இன்னும் வரலலற்றில் அவர் ஒரு தேச பிதா என்று தான் பாட திட்டத்தில் இருக்கிறது. இம்மாதிரியான பிழை ஞானி விடயத்திலும் வர கூடாது என்பது தான் என்னுடைய தாழ்மையான எண்ணம்.
R Nagaraj
/////சிங்கள பேரினவாதத்தால் அந்த இனம் அளியலாமே தவிர தமிழர்களுக்கு நாடு கிடைக்க கூடாது....///////////////
புரவியண்ணே...இதைவிட ஒரு sweeping statement எதுவுமே இந்த உலகில் கிடையாது.. எவனாவது தமிழ் இனம் அழியணும்னு சொல்லுவானா... தமிழ் இனம் என்னய்யா எந்த மனசனும் அழியக்கூடாது அதுதான் நம்ம நிலைபாடு.. ஆனா இந்த மாதிரி அவதுறு பண்ணியது யாரு தெரியுமா... கிட்டத்தட்ட முசுலிம மக்களுக்கு எதிராக குஜராத்தில் இந்து வெறியர் சொன்னதற்கு ஒப்பானது... காரிய சாத்தியம் பாருங்கய்யான்னா... டேய் தனி நாடு வேணும் ...எதிர்கிறியா...கொன்னுபுடுவேன்.. என்று மிரட்டுவது சிரிப்பாக இருக்கிறது... தனிநாடு வேணுமா 3லட்சம் உயிர் வேணுமான்னா நான் தெளிவாக இருக்கேன் 3 லட்சம் உயிர்தான் என்று..பொதுத் தளம்ங்கறது எது...-அவரு ப்ளாக் நடத்தறதே பொதுத் தளம் தான்...அப்பறம் என்ன- இதுல மேனா மினுக்கின்னா என்ன அர்த்தம்... நாம்தான் (நானும் அதியமானும்) தெளிவாச் சொல்றோமே.. அப்பறம் என்ன..... அப்பப்பா ஞாநியை காந்தியோட ஒப்பிட்டு அவர் தேசப்பிதா அதுமாதிரி இவரு விடயத்தில ஆக விடக்கூடாது என்ற உளறல்... ஆமாம் காந்தி தேசப் பிதா எங்களைப் பொருத்தவரை.. நீர் காந்தியப் பத்தி என்ன சொன்னாலும் அந்த கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன்.. ஆனால் உம் கருத்தை ஏற்க மாட்டேன் என்று மட்டும்தான் சொல்கிறேன்.. ஞாநிய தப்பிக்க விடப்போறீரா ,இல்லையோ அது பிரச்சனை யில்லை... அவர் கருத்து சரியா என்பது போகப் போகத் தெரியட்டுமே... புலிகள் போரையே காலம்தான தீர்மானிக்கிறது.. அப்பறம் என்ன...?
வெ.தனஞ்செயன்
தாங்கள் பாசிசமாக கருதும் இந்த போரட்டத்திர்க்குதான் ஞானி அவர்கள் பதில் அளித்துள்ளார், தாமரை மற்றும் உதவி இயக்குனர் சம்ராஜ் ,நான் ஆகியோர் எழுதிய கட்டுரைகளுக்கு மறுப்போ , பதிலோ அளிக்கவில்லை, இப்போதுகூட விவாதம் வேண்டாம் அவரவர் கருத்தில் உறுதியாக இருக்கும்போது விவாதத்தில் பயன் இல்லை என்கிறார், இது தனது தரப்பில் உள்ள பலவீனத்தினாலா அல்லது பாசிசமா ? அப்படியானால் என்ன நம்பிக்கையில், எந்த மாற்றத்திற்காக எழுதுகிறார் ?

3 லட்சம் உயிர்கள் பற்றி அக்கறை படும் நீங்களும், ஞானியும் அந்த மக்கள் மீது போரும் சொல்லோன அடக்குமுறைகளும் ஏவப்படுவதற்கு எதிராக என்ன எழுதினீர்கள்?
சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைக்கு கீழ் உள்ள மக்கள் இன்னும் 10 வருடத்தில் சனநாயகமான அரசாக மாறிவிடுவார்கள் , ஆனால் தாங்கள் ஏந்திய ஆயுதம் மக்களை காக்க முடிவில்லை என்றவுடன் ஆயுதத்தை மவுனிக்க செய்து அதை இன்று வரை கடைபிடிப்பவர்களின் அரசு 10 ஆண்டுகளில் சனநாயகமான அரசு மலராது? , என்ன ஒரு சிந்தனை? .

1)ஞாநி அவர்களே! உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா? http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=9461&Itemid=139

2)ஞானி என்கிற மகாநடிகருக்கு - சாம்ராஜ் http://kaattchi.blogspot.com/2010/06/blog-post_11.html

3)http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=35
புரவி
குப்பைகளை குப்பையோடு தான் ஒப்பிட முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.
காந்தி என்பவர் பிதா தான். பூணுல் அணிந்தவர்களுக்கும் ஜாதி வெறியர்களுக்கும் வர்ணாசிரமத்தை ஆதரித்த காந்தி என்பவர் ஒரு பிதா தான். ஆனால் அனைவருக்கும் கிடையாது.
R Nagaraj
அது என்ன பாசிசமோ பாயசமோ... உம்மை போல் அனைத்தும் தெரிந்தவன் அல்லன் நான்... குண்டு போட்டால் மடிந்து போகும் சாதாரணன்.. இங்கே மட்டுமா காசுமீரத்திலும்தான் அடக்கு முறை என்கிறார்கள்.. புலிகள் பிற ஆயுதம் தாங்கியக் குழுக்கள் ஆயுதம் தாங்க குழுக்கள் என்று அனைத்தையும் ஓடுக்கியதாகச் சொல்கிறார்கள் அதையும் பாசிசம் என்கிறார்கள்.. எனக்குப் புரியவில்லை அய்யா... எதற்காக 3லட்சம் உயிர்கள் போகவேண்டும் அப்படி என்ன தனிநாடுத் தேவை வந்துவிட்டது.. அப்படியே தனிநாடானால் என்ன பயன்.... ஒரு பக்கம் இன்னொரு முற்போக்கு அண்ணலுக்கள் உலகமயம் என்று அலறிக் கொண்டிருக்கும் சூழலில்.......... தனிநாடுகேட்டு 3லட்சம் பேர காவு கொடுத்து.. சே... நீர் அந்தக் கால அரச (ராஜராஜ சோழ) பரம்பரை ஆட்கள் போலும் இந்தக் காலத்தில் முற்போக்கு வேடம் தரிக்கிறீர்கள்......தனிநாடு கேட்டு அரசாண்டு எல்லாரையும் குண்டு போட்டு கொன்று....அடங்போங்கப்பா.... வெங்காயம்.
R Nagaraj
/////காந்தி என்பவர் ஒரு பிதா தான். ஆனால் அனைவருக்கும் /////////சரி இருந்துவிட்டு போகட்டும்.. உம்மை பொருத்த வரை அது சரி.. என்னை பொருத்தவரை காந்தி பிதா.. பூணுலோ இல்லையோ... நீர் சொன்னால் அதுதான் சரி என்பது கிடையாது repeat நீர் சொன்னால் அதுதான் சரி என்பது கிடையாது... இனி ரிபீட் வேண்டாம்தானே....
புரவி
அய்யா ஞானி அவர்களே,
இப்போது புரிகிறதா உங்களை எதற்கு விவாதத்திற்கு அழைத்தார்கள் என்று. பாருங்கள் உங்களது ****கள்
ஈழ பிரச்சனையை பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று. //எதற்காக 3லட்சம் உயிர்கள் போகவேண்டும் அப்படி என்ன தனிநாடுத் தேவை வந்துவிட்டது//
நாடு கேட்பதால் தான் அங்கு பிரச்சனேயே என்பது போல் நீங்கள் பயிற்சி கொடுத்து இருக்குறீர்கள் போலிருக்கிறது. அப்படியே நாடு கேட்டாலும் 3லட்சம் உயிர்களை கொலை செய்யலாம் என்கிற புது விதமான மனு தர்மத்தையும் போதித்து இருக்குறீர்கள் போலிருக்கிறது.
புரவி
நண்பர் R Nagaraj,
எனது பின்னூட்டத்தில் இரண்டு வார்த்தைகள் நீக்கபட்டிருகிறது. அவ்வார்த்தை கெட்ட வார்த்தைகள் அல்ல.
இருந்தாலும் நீக்க பட்டிருகிறது. தயவு செய்து என்னை தவறாக கருத வேண்டாம். சிரமத்திற்கு வருந்துகிறேன்.
R Nagaraj
புரவியண்ணே.. நீங்கள் **** **** என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.. ஒரு வேளை முற்போக்கு எல்லாரும் இப்படி இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.. ஞாநிக்கும் எனக்கும் எந்தத் தொடர்போ எதுவும் இல்லை.. அவர் எழுத்தை அதிகம் படித்தது இல்லை..இதற்குமேல் எப்படிச் சொல்வது தெரியவில்லை.. நான் அவரின் சிஸயன் இலலை... INFACT நான் யாருடைய சிஸ்யனாகவும் இருக்க விரும்பவில்லை.. சர்ச்சில் வெள்ளைக்கார அயோக்கியன்தான் ஆதிக்கவாதிதான்.. ஆனால் அவன் சொன்னதில் ஒரு உண்மை யிருக்கிறது... நம் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எந்த தேசிய இனத் தலைவர்கள் மீது சுத்தமாக நம்பிக்கை இழந்து வருகிறேன்... நம் சரக்கு அவ்வளவுதான் போலும்... எப்போதாவது ஒரு பெரியார்.. நீர் ஏற்றுக் கொள்ளாத காந்தி நேரு அவ்வளவுதான் நமது தலைவர் உற்பத்தி லட்சணம்.. என்ன செய்வது.. ஒரு புரிதல் கிடையாது.. எந்த வித lateral thinking கிடையாது (எனககும் உமக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்).. ஏதாவது சொன்னால் பார்ப்பன மந்திரம் போல மனதர்மம் இத்தியாதி என்று ஒரு பட்டியில் ஆட்டை அடைப்பது போல் அடைத்துவிடுவது.. என்று அப்பா மூச்சு வாங்குகிறது... சரி அய்யா.. உம் கருத்து உம்முடையது என் கருத்து என்னுடையது.. தீர்ப்பு வரலாறு எழுதட்டும்.. போதுமா.. அதுவரை அவதுறு வேண்டாம்..
R Nagaraj
அதே போல என்னுடைய பின்னுட்த்திலும் சென்சார் நடந்திருக்கிறது.. நான் பாவித்ததும் கெட்ட வார்த்தை இல்லை... ஆனால் ஏன் அப்படி...

பிகு:::
கீற்று அய்யா... என்ன நீங்கள் முட்டைகூட சேர்க்க மாட்டீர்களா... அத்தனை சைவமா.....?
மே பதினேழு இயக்கத்தின் போராட்ட அழைப்பு கடிதத்திற்கு கீற்று.காம் பின்னூட்டம் வழியாக தனது விளக்கத்தை வெளிப்படுத்திய திரு.ஞாநிக்கு 'அவரை நாம் எதற்கு எதிர்க்க வேண்டும் என்பதான விளக்கம் இது'.

வணக்கம் திரு ஞாநி அவர்களே.

தன் கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் அரசுகள், அதிபர்கள் கூட தமக்கு நேர் எதிரான கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் குழுக்களிடமும், தனி நபர்களிடமும் விவாதமும், பேச்சு வார்த்தைகளும் நடத்தக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதே நாங்கள் அறிவிக்க வேண்டியது இல்லை. ஹிட்லரும் , முசோலினியும் சமீபத்திய ராஜபக்செக்களும் தவிர கிட்டத்தட்ட அனைவரும் பேச முற்பட்டு இருக்கின்றனர். பாசிஸ்டுகள் மற்றும் தமது கருத்து மட்டுமே உலகில் சரியானது என்று நம்புபவர்கள், அல்லது அவ்வாறு நம்பிக்கை கொண்டு இருப்பவர்கள் மட்டுமே இவ்வாறு பொது தள விவாதத்தை மறுப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை தங்கள் உயரிய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.தவறு என நிருபிக்கும் பட்சத்தில் எங்கள் கருத்தை திருத்தி கொள்ள என்றும் தயாராய் இருந்து இருக்கிறோம் அவ்வாறு செய்தும் இருக்கிறோம். இது எங்களை பலப்படுத்தி இருக்கிறது, மக்களிடத்தில் எங்களை நெருக்கமாக கொண்டு சேர்த்தும் இருக்கிறது. பொது தளத்தில் சனநாயக அரசியல் வேலை செய்பவர்கள் இதை செய்து வருகிறார்கள் என்பது புது செய்தியுமல்ல. இஸ்ரேல் பலஸ்டினம் எப்பொழுதும் சண்டையிட்டு கொண்டு மட்டும் இருந்தது இல்லை. சனநாயக விரோதிகள் என்று நீங்கள் சித்தரிக்கின்ற புலிகள் கூட பேச்சுவார்த்தைகளை நடத்தியே வந்து இருக்கிறார்கள், நீங்கள் மறைமுகமாக தூக்கிப்பிடிக்கும் ராஜபக்சே-க்கள் தவிர.
அடுத்தவர் நீதியை தமது சுயநலத்திற்க்காக திரிக்கும் நீங்கள் சொன்ன "என் கூட்டங்களை வேறொருவருக்கான மேடையாகவோ, இன்னொருவர் மேடையை என்னுடைய மேடையாகவோ நான் ஆக்கிக் கொள்ள விரும்புவதில்லை" வார்த்தைகள் எங்களுக்கு நகைப்பை மட்டுமே வரவழைக்கின்றன. சரி நீங்கள் யார் என்று சற்று பார்ப்போம். ஞாநி சொல்லக்கூடிய பொது தளம் எனப்படக்கூடிய பத்திரிக்கை தளம் யாருக்கு வாய்த்திருக்கிறது, எப்படி பட்டவர்களுக்கு வைத்து இருக்கிறது?... இந்தியாவில் மட்டுமல்லாமல் எங்கெல்லாம் போலி சனநாயகம் கடைபிடிக்கபடுகிறதோ அங்கெல்லாம் பத்திரிக்கை மக்கள் சனநாயகத்தின் ஊதுகுரலாய் காட்டப்படுவதுண்டு. இந்த அடிப்படையில்தான் அது சனநாயகத்தின் தூண் என்று வர்ணிக்கப்படுகின்றது. லாபநோக்கில் செயல்படும் எந்த முதலாளித்துவ பத்திரிக்கையும், அரசிடம் முரண்பட்டு நிற்க முடிவதில்லை. அரசியலில் சிறிது முரண்படக்கூடிய பத்திரிக்கை கூட அரசு எந்திரத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்கமுடியும் அல்லது இயங்குகிறது. இதுவே இங்கு நிதர்சனம். அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வது என்பது வேறு, அரசின் அடிப்படை நியாய தர்மங்களை கேள்வி கேட்பது என்பது வேறு. அரசின் செயல்பாட்டிற்கு எவ்வகையிலும் தடை செய்யாத, கேள்வி கேட்க்காத பத்திரிக்கை, அவ்வகையிலான ஒரு பத்திரிக்கையாளரைதான் தன்னிடத்தில் வைத்து இருக்கிறது. அந்த பத்திரிக்கை தளத்தில் உயர்சாதிகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்பது பத்திரிக்கையில் செயல்படுபவர்களின் சாதி கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த சாதி தளம் மைய அரசு வர்க்கத்தின் திட்டத்திற்கு ,செயல்பாட்டிற்கு என்றுமே எதிராக செயல்பட்டதில்லை என்பது இந்தியாவின் சனநாயக வரலாறு. இந்த தளத்தில் என்றுமே மக்கள் போராட்டங்களுக்கு இடம் ஒதுக்கபட்டது இல்லை. இதை தான் திரு.ஞாநி விவாத களம் என்கிறார்.
எதையும் காது கொடுத்து கேட்க்காத அரசு கூட இப்படியாய் தான் பொறுப்பற்று பேசுகிறது. தான் போடும் வழக்கை நீதிமன்றத்தில் நியாயவாதி என நிரூபித்து விடுதலை பெற்றுகொள் என்கிற அரசிடம், பலியிடப்படுவது ஒரு மனிதனின் வாழ்க்கையும், போராட்டமும். இவ்வாராய் வாழ்க்கையை தொலைத்தவர்களில் ஒருவராய் நமது போராட்டத்தின் நியாயத்தை பலிகொடுக்க சொல்கிறது இவரின் பொதுதள விவாதங்கள்.பிரதமரும், ஒரு தினக்கூலி மனிதரும் சட்டத்தின் முன் ஒன்றே என்று சொல்லி நியாயம் பெற்றுகொள் என்பதான வாதம் இது. தமது போராட்டத்தின் மீதான அவதூறை எதிர்த்துப்போராடுவதே ஒரு போராட்டமாகியபின் எவ்வாறு மைய கோரிக்கைக்கு போராட்டத்தை நகர்த்துவதர்க்கான காலமும், ஆற்றலும் இருக்கும். இவ்வாறன போராட்டதிர்க்கான எதிர் கருத்துக்களை மாற்று கருத்துக்கள் எனசொல்லி அரசிற்கு சாதகமான ஒரு 'தற்செயலான' கருத்தாய் உங்கள் கட்டுரைகளும், பேச்சுகளும் இருப்பதே நாங்கள் உங்களை எதிர்த்து போராடுவதன் அடிப்படை. உங்களையும், உங்களை போன்றோர்களையும், நாங்கள் எதிர் கொள்ளக்கூடிய பாசிச அரசின் ஒரு பகுதியாய்த்தான் பார்க்கிறோம். நீங்கள் வேறு, அரசு வேறு அல்ல. அரசு வேறு, லாபநோக்கிலான பத்திரிக்கை ஊடகம் வேறு அல்ல. உங்களின் மாற்று கருத்தும், சிங்கள அரசின் இனவாதமும் வேறு அல்ல.
ஒரு பத்திரிகையாளர் அரசின் ஊது குரல் என்பதில் இருந்து எங்கே வேறுபடுகிறார், அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால் உங்களுக்கும் நேர்மையான கட்டுரையாளர்களுக்கும், அறிவுசீவிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அறிவதானால் ஹிந்து ராம் , அருந்ததி ராயுடன் எங்கு வேறுபட்டு நிற்கிறார், எட்வர்ட் ஸைடும், நோம் சொம்ஸ்கியும், பினாயக் சென்னும், கேன்சரோ விவாவும், எவ்வாறு தாமஸ் பிரீட்மான், ஜெப்ப்ரே சாச்ஸ், அருண்ஷோரி, பிர்டிஷ்ணந்தி, பிரணாய் ராய், அர்னாப் கோஸ்வாமி உடன் வேறுபடுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம். இவ்வாறே நீங்களும் , நாங்களும். உங்களை எதிர்ப்பது என்பது ஒரு இன்றியமையாத சனநாயக கடமை. உங்களை போன்றவர்களால்தான் மக்கள் போராட்டம் வரலாறு எங்கும் பின்னோக்கி நகர்த்தப்பட்டு இருக்கிறது. நீங்கள் மக்கள் சார்ந்த முற்போக்குவாதியா? அல்லது முற்போக்கு முகமூடியில் இயங்கும் அரசின் குரலா என்பது புரியாமல் மக்கள் குழம்புவது உலகம் எங்கும் போராடும் மக்கள் எதிர்கொள்ளும் சவால். இதை வீதியிலும், போராட்டத்திலும் மட்டுமே எதிர் கொள்ள முடியும்.
முற்போக்கு முகமூடிகள் எப்போதுமே மக்களிடத்தில் எதிர் கருத்துக்களை விதைப்பதற்கு பயன்பட்டு இருக்கிறது.எதிர்க்கருத்துக்கள் மாற்று கருத்துக்கள் அல்ல. உங்களின் 35 ஆண்டுகால திறந்த வாழ்க்கை புத்தகத்தில் இவை சேர்ந்தே பயணப்பட்டு இருக்கின்றன. உங்களது அரைகுறை முற்போக்குகளும், அறிவிசீவித்தனமும் பல மேடைகளில் கிழிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன.இதை ஆதரங்களுடன் நாங்கள் வெளிப்படுத்த என்றும் தயாராகவே இருக்கிறோம். தங்களது தமிழீழ தமிழர்களுக்கான அரசியல் உரிமை என்பதும், சம உரிமை என்பதும் அவர்களின் வட்டுகோட்டை முதல் மேற்கொண்டுவரும் விடுதலை போராட்டத்தை தவறாக சித்தரிப்பதற்கும், அதை மறைத்து அரசியல் உரிமை என்ற திரிக்கப்பட்ட இந்திய அரசதிகாரத்தின் வாதத்தை மட்டுமே முன்னெடுப்பதாக அமைவதே உங்களை மக்கள்போராட்டங்களின் எதிரியாக, அரசின் கைக்கூலியாக மாற்றி இருக்கிறது.
விகிலீக்ஸ் பற்றிய உங்களின் சிலாகிப்புகளிடத்தில் அந்த லீக்குகள் வெளிப்படுத்திய தமிழ் ஈழப்படுகொலை சார்பான ஆதாரங்களை பற்றி பேசாது மௌனித்த 'தகவல் பிழைகளை' நாங்களும் எப்படி கவனிக்காமல் இருக்க முடியும்.
இந்திய அரசின் செல்லப்பிள்ளை ராகுல்காந்தி தமிழகத்தின் முக்கிய நபர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதற்காய் முழுமுனைப்போடு செயல்பட்ட 'ஒரு திறந்த முற்போக்கு புத்தகமாகிய' உங்களை எப்படி எதிர்கொள்வது என்பது நாங்கள் அறியாதது அல்ல. காங்கிரஸ் கட்சியின் பாசிசத்தைதான் உங்களிடமும் எதிர்பார்க்க முடியும். ஒரே ஒரு வித்தியாசம் , அந்த பாசிசம் உங்களின் 'திறந்த முற்போக்கு' முத்திரையுடன் வெளிப்படும்.
லசந்த விக்ரமதுங்கவிர்க்கும் உங்களுக்குமான வித்தியாசம் எங்களுக்கு தெரிந்து தான் இருக்கிறது. புலிகளை கடுமையாக விமர்சனம் செய்தவர் லசந்த விக்ரமதுங்க, ஆயினும் அவருக்கு தமிழ் அமைப்புகள் மரியாதை அளிப்பதன் காரணம், அவர் இனவாதி ராஜபக்சேவை , ஒரு சமயத்தில் தமது நெருங்கிய நண்பர் என்கிற போதும், தன் உயிருக்கு ஆபத்து என்கிற போதும் அதை பொருட்படுத்தாமல் ராஜபக்சேவை விமர்சித்து பத்திரிக்கையாளன் என்கிற முறையில் தனது ஊடக கடமையை நேர்மையாய் செய்தார். அத்தகைய நேர்மையை உங்களுடைய 35 ஆண்டு கால திறந்த முற்போக்கு வாழ்வில் நாங்கள் கண்டது இல்லை. நீங்கள் யாருக்கும் முன்மாதிரியாய் அமைந்ததும் இல்லை. இந்து ராமிற்கும், கமலஹாசனிர்க்கும், உங்களுக்கும் உள்ள நேர்மையற்ற முதுகெலும்பை முறித்து போடும் பொழுது தான், இந்த தமிழ்ச்சமூகத்தின் கருத்துகளத்தில் காளானாய் முளைத்து நிற்கும் உங்களை போன்றவர்கள் நீக்கபட்டு, தமிழ்சமூகத்தின் பரப்பில் கடைகோடியில் நின்று எந்த விளம்பரத்திற்கும் ஆட்படாமல், சுயமோகதிர்க்கு இடம் தராமல், லாப நட்டக்கணக்கு பார்க்காமல், காங்கிரஸ்க்கு குடைபிடிக்காமல் வாழும் நேர்மையான முற்போக்கு ஆசான்கள் இங்கு ஆலமரமாய் விரிந்து நிறைக்க முடியும். இது எங்கள் வருங்கால சந்ததியினருக்கு நாங்கள் செய்யும் பேருதவி என்பதாகவே பார்க்கிறோம்.
நீங்கள் மக்களின் போராட்டங்கள் மீது வைக்கும் அவதூறுகளையும், முத்திரை குத்தல்களையும் களைவது எங்களை போன்ற அமைப்புகளின் தலையாய வேலை என்பதை தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை எங்களை போன்றவர்களுக்கு தெளிவாக உணர்த்திய பிறகு நாங்கள் எங்கள் கடைமைகளை செய்யவே முற்பட்டு இருக்கிறோம்.
உங்களை போன்ற போலி முற்போக்குவாதிகளின் முகத்தை கிழிப்பது எமது வேலை என்பதை மிகத்தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களை உங்கள் தளத்தில் எதிர்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறோம். ஆகவே நாங்கள் உங்கள் மீதான எங்கள் சனநாயக போராட்டத்தை கைவிடுகிறோம் என்று நீங்கள் தவறாய் புரிந்து கொள்ளகூடாது. அடிக்கடி கூட்டம் நடத்துங்கள், மக்கள் எதிரிகளை அவர்களிடத்தில் அடையாளம் காட்ட அது எங்களுக்கு உதவும்.
உங்கள் இணையத்தில் "உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்" என்று உள்ளது.

புதுசு என்ற பகுதியில் "கேள்விகள் ஓய்வதில்லை..." என்ற பகுதியும் உள்ளது.

நீங்கள் "உண்மை"களை பேசாதவரை எங்கள் "கேள்வி"களும் ஓய்வதில்லை
R Nagaraj
மேற்கண்ட வற்றுக்கு ஞாநிதான் முறையாக பதில்சொல்வார் என்று எதிர்ப்பார்ப்போம்.. அப்படி பதில்சொல்லவில்லை என்றாலும் அது அவரது தனிப்பட்ட விருப்பம்.. இங்கே தான் நான்தங்களுடன் முரண்படுகிறேன். மேபதினேழுனின் நீண்ட நெடிய கடிதத்தில் எந்த சாரமும் (ஞாநியை எதிர்ப்பதில்) இருப்பதாகத் தெரியவில்லை..
1) இலங்கைப் போரில் இந்தியா ஆயுதம் கொடுத்து உதவியது அன்னை சோனியாவா ஞாநியா கமலகாசனா....?
2) அதற்கு துணை நின்றது தமிழுக்காக வாழும் கலைஞரா ஞாநியா கமலகாசனா
3) ஞாநி கமலகாசன் என்று மே பதினேழு போராடும் போதே அதன் நோக்கம் வேறு என்பது தெரிகிறதா இல்லையா..
4) ஓரு வேளை டாக்டர் கலைஞனை தப்புவிக்க மே பதினேழு பாவிக்கும் தந்திரமா
5) குமுதத்திலிருந்து ஒரு ஆளை எழுதவே தடைவிதிக்கப் பட்டு அந்த ஆள் நொந்து போய் என்னை உருளைக் கிழங்கைப் பற்றி எழுதச் சொல்கிறார்கள் என்று புலம்பும் ஒருவர் அரசுபிரிதிநிதி என்பது எத்தனை நகைப்புக்குள்ளதா இல்லையா...
5)ஞாநி போன்ற குட்டையிடம் சண்டையிட்டு, பெரும் சமுத்திரத்தைக் கோட்டை விட்டுக்கொண்டிருப்பது குணடு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போலவா இல்லையா..
6)உண்மை சுடும் என்பார்கள் அது போல ஞாநியின் கேள்விக்ள எழுத்துக்கள் அப்படியுள்ளதால் உங்களுக்கு தர்மசங்கடம் எற்படுகிறதா-
7)இலங்கைப் பிரச்சனைக்கு ராசபக்சே மட்டும்தான் முடிவெடுத்தார் பிற உலகநாடுகள் எந்த சம்பந்தமும் இல்லை என்று மே பதினேழு நம்புகிறதா
8)நீங்கள் துப்பாக்கி எடுத்துக் கொள்ளுங்கள் என்னையும் ஞாநியையும் எடுத்தாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள் என்பது சரியா தவறா
9) மே பதினேழு நவம்பர் எழுகாட்டும் ஆனால் ஞாநியை மட்டும் குறிபார்த்தால் நடக்காது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்
மே பதினேழு இயக்கம்
நண்பர் நடராஜ் அவர்களே , ஆழமிலாத விவாதங்களை வைப்பது யாருக்கும் பயன் தராது. மே பதினேழு இயக்கம் என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறது, யாரை எதிர்த்து வேலை செய்து கொண்டு இருக்கிறது என்பது தங்களுக்கு தெரியாது எனில் நேரடியாக கேளுங்கள். ஞானியை எதிர்த்தால் ஏன் கருணாநிதியை எதிர்க்க வில்லை, என்றோ , கருணாநிதியை எதிர்த்தால் ஏன் சோனியாவை பேசவில்லை என்றோ அல்லது சோனியாவை எதிர்த்து போராட்டம் நடத்தினால் ஏன் அமெரிக்காவை எதிர்க்க வில்லை என்றோ பேசுவது கேய்போஅர்து புரட்சியாளர்களின் வாடிக்கையான வாதங்கள்... இவைகளுக்கு நாங்கள் பதில் சொல்வது இல்லை. எங்கள் பதில் எங்களது போராட்ட களத்தில் வைக்கிறோம். எங்களால் இயன்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கிறோம். ஒருவேளை நீங்கள் இந்த போராட்டத்தை வேடிக்கை பார்க்கவேணும் வந்து இருந்தாலாவது இவைகள் புரிந்து இருக்கும். ஒரு அரசு இயந்திரத்தினை எதிர்ப்பது என்பது பல வடிவங்களை உள்ளடக்கியது. இதில் அரசு அதிகாரவர்க்கம், அவை சார்ந்து இயங்கும் அரசியல்வாதிகள், கட்சிகள், தலைவர்கள், அமைப்புகள், சாதி வடிவங்கள், ஊடகங்கள், அறிவுசீவிகள், கலைங்கர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என பெரும் வட்டம் உண்டு. ஒரு மக்கள் போராட்டம் சார்ந்து அல்லது கோரிக்கை சார்ந்து வேலை செய்யும் பொழுது அதற்க்கு எதிராக இருக்கும் மேல் கூறிய அணைத்து தூண்களையும் எதிர்த்து போராடவேண்டிய கட்டத்தில் போராட்ட குழு இருக்கும். அரசின் மைய நோக்கை சார்ந்து துணை நின்று எழுத்து, பதிர்க்கையாளர் அல்லது அறிவுஜீவி அரசியல்வாதி சார்ந்து இருக்க வேண்டும் என்றோ, அரசியல் கட்சி ஆதரவாக இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை.திரு ஞாநி கருணாநிதி எதிர்ப்பாளர் தான் ஆனால் அவர் இந்திய அரசின் "சிங்கள பேரினவாத " அரசியலுக்கு எதிரானவர் அல்ல. மார்க்சிஸ்ட் கச்சு காங்கிரசுக்கு எதிரான கட்சி தான் ஆனால் அவை இந்தியாவின் தமிழர் எதிர் நிலைக்கு ஆதரவானவர்களே... கமலாகாசன் அரசியல் நேரிடையாக பேசாதவர் தான் ஆனால் தான் சார்ந்து இயங்கும் சந்தைக்கு எதிரான தன் நிலைபாட்டை மௌனமாக நுட்பமாக வெளிப்படுதுபவரே... எங்கள் பாலிவுட் திரைப்பட விழ எதிர்ப்பு போராட்டம், ஸ்ரீலங்காவிற்கு துணை நிற்கும் இந்திய வர்த்தக சபையின் " சர்வதேச வணிக மையம்" இலங்கையில் நடத்திய வணிக முதலீட்டுக்கான துரையின் தலைவராக இருக்கும் (இன்றும் இருக்கும் ) கமலகாசனை அந்த பதவியில் இருந்து வெளியேறி ஒரு குற்றவாளி அரசை தனிமை படுத்த உதவிட கோரிய போராட்டத்தை திரு. ஞாநி தனக்கே உரிய மேதாவி தனத்துடன் கொச்சை படுத்திய போது, அவரின் "தேர்ந்த" அறியாமையை போக்க விவாதத்திற்கு அழைத்ததை அவர் எந்தவித சனநாயக மரபும் இன்றி மறுத்தார். அதற்க்கான எதிர்வினை எங்களுடையது. போகிற போக்கில் ஒரு பேரினவாதத்திற்கு துணையாக ஒரு மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்துபவர் யாராக இருந்தாலும் எண்களின் தீவிரமான எதிர்ப்பை எதிர் கொள்ள நேரிடும் என்று உரைக்கிறோம். அது அப்பாவி ஞாநி யாக இருந்தாலும் அப்படியே, இந்து ராம் ஆகா இருந்தாலும் அவ்வாறே, சோனியாவாக இருந்தாலும் , கருணாவாக இருந்தாலும் இது நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அடுத்த முறை உங்களை நாங்கள் ஏதேனும் ஒரு மக்கள் ஆதரவு போராட்டத்தில் சந்திக்கும் போது இன்னும் விரிவாக பேசலாம் என்று நினைக்கிறோம், அவ்வாறு நீங்கள் பங்கேற்க கூடிய நபராக இருக்கும் பட்சத்தில். அல்லது நீங்கள் பங்கேற்க கூடிய ஒரு போராட்டத்தில் உங்களுடன் கை கோர்த்து உங்கள் கோரிக்கைக்கு ஆதரவாக நாங்கள் நிற்கவே விரும்புகிறோம், ஒருவேளை அப்போராட்டம் மக்கள் சார்ந்து இருக்கும் பட்சத்தில். மற்றபடி திரு.ஞாநிக்கு நாங்கள் சொல்வது மிக நன்றாகவே புரியும்.
புரவி
அய்யா ஞானி அவர்களே,
தாங்கள் ராகுல் கானை சந்தித்தது அனைவரும் அறிந்ததே,. ௩௦௦௦ சீக்கியர்களை கொன்றதில் அவரின் நிலைப்பாடு என்னவென்பதை எப்பொழுதாவது கேட்டீர்களா?
அப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்று அவரிடம் வலியுருதிநீர்களா? குறைந்த பட்சம் கட்சியில் இருந்தாவது நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தீர்களா?
R Nagaraj
நான் தங்களுடன் லாவணி பாட விரும்பவில்லை... உங்கள் நேரத்தையும் கெடுக்க விரும்பவில்லை ஆனால் நீங்கள் சொல்லியது ///// இவைகளுக்கு நாங்கள் பதில் சொல்வது இல்லை.// இதையே வேறு வார்த்தைகளில் ஞாநியும் சொல்கிறார்.. அய்யா..நீங்கள் ஒரு இயக்கம்... நான் ஒரு தனிநபர்.. ஞாநியும்கூட.... எந்த காலத்திலும் ஒரு தனிநபர் இயக்கங்கள் செய்வதைக் காட்டிலும்செய்ய முடியாது... சாதிக்கவும் முடியாது.. நீங்கள் வெற்றி பெறுங்கள் அதற்கு வாழ்த்துகிறேன்.. ஆனால் நீங்கள் ஞாநியைப் பற்றியும் கமலைப் பற்றியும் சொன்னதை இத்தனைக்குப் பிறகும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... காரணம் பல திமிங்கங்கள் சுறாக்கள் கொடிய காட்டு விலங்குகள் உள்ள இடத்தில் கரப்பான் பூச்சிக்கு ஏகே47 கொண்டு வருகிறீர்கள்.... ஒரு மருந்து அடித்தால் போதும்... கோழியடிக்க குண்டாந்தடி எதற்கு என்பார்கள் அதைப் போல...
திருமுருகன்
அய்யா நாகராசு அவர்களே..அரைகுறையாய் தானா வாசிப்பீர்கள் உங்கள் அபிமான ஞாநியை போல.... ///// இவைகளுக்கு நாங்கள் பதில் சொல்வது இல்லை.// என்று சொல்லியதற்கு அடுத்து என்ன சொன்னோம் என்று புரிய வில்லையா?... எங்கள் பதில் போராட்ட களத்தில் காண்பிக்கிறோம் என்று... இது நீங்கள் எங்களின் முன் வைத்த ( சோனியா செய்ய வில்லையா, கருணாநிதி செய்யவில்லையா, இந்திய செய்யவில்லையா ...என்று ஒரு லிஸ்ட் போட்டு இவர்களை எல்லாம் விட்டு விட்டு ஞாநியையும், கமலையும் வந்து கேட்குறீர்கலே என்று புலம்பியதர்க்கான பதில் ... நீங்கள் சொன்ன லிஸ்டையும் தாண்டி பலரை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் தொடர்ந்து செய்து தான் வருகிறோம் நண்பரே. இந்த கிபோர்டு புரட்சியாளர் வகையை சார்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே நாங்கள் நடத்தும் அத்தகைய போராட்டம் தெரியாது..அவர்கள் தான் குமுதம், கல்கி படித்து விட்டு போராட்டகளத்தில் உள்ளவர்களை பற்றி அறிந்து கொள்வார்கள். அந்த புத்தகத்தில் இந்த ஞாநி மாதிரியான ஆட்கள்தானே கட்டுரை எழுதுகிறார்கள், அதை படித்து விட்டுதானே இந்தமாதிரியான அரைவேக்காட்டு கேள்விகளை அவரை போன்றே வைக்க முடிகிறது. எனினும் எங்கள் பதில் பின்னூட்டத்தில் இறுதியில் சொன்னது போல... ஏதெனும் போராட்டகளத்தில், (நிழலுக்கு ஒதுங்குவதர்க்ககவாவது) நீங்கள் வந்தீர்கள் என்றால் அங்கு உங்களுடன் நாங்கள் நிச்சயம் பேசுகிறோம், உங்கள் கருத்துக்களை கவனத்தில் எடுத்துகொள்ள கூடிய முக்கியத்துவத்துடன் இருந்தால் அதையும் செய்கிறோம் என்று சொன்னோம்.அதே போல கமல் எங்கள் குறி கிடையாது... ஆனால் உலக நாடுகளில் பொருளாதார புறக்கணிப்பு செய்ய சொல்லி போராட்டம் நடைபெறும் காலத்தில், இதற்க்கு ஐரோப்பிய ஒன்றியம் செவி சாய்த்து ஜி எஸ் பி வரிசளுகையை ரத்து செய்து பொருளாதார நெருக்கடி கொடுத்து முள்வேலி முகாமில் இருக்கும் மக்களை சர்வதேச மனித உரிமை குழுக்களின் கண்காணிப்பில் கொண்டு வர தமிழ் உலகம் பாடுபட்டு கொண்டு இருக்கும் பொது, சத்தம் போடாமல் சென்னையில் உட்கார்ந்து கொண்டு சர்வதேச வர்த்தக கண்காட்சி மூலமாக உலகம் எங்கும் இருந்து இந்தியர்களின் முதலீட்டை இலங்கைக்கு கொண்டு வந்து கேளிக்கை வியாபாரத்தில் போடுவதற்காக கமலகாசன் தலைமையில் பிக்கி குழுமம் செய்த சதியை வெளிக்கொண்டு வந்து அதில் இருந்து இவர் பின் வாங்குவார் என்று அவரின் மீதான மரியாதை காரணமாய் காத்திருந்து விட்டு பிறகு வெகுகாலம் கள்ள மௌனம் சாதித்த கமலகாசனை "பூனை வெளியே வந்தது " என்கிற பாணியில் அம்பலப்படுத்த வேண்டி வந்தது.எங்கள் போராட்டத்தின் போதும் கூட கமல் ராஜனிமா செய்வேன் என்றோ , அந்த கண்காட்சி ரத்து செய்யப்படும் என்றோ சொல்லவில்லை. திசை திருப்பும் விதமாக " யாரும் அங்கு போக கூடாது என்று சொல்கிறேன் " என்று அயோக்கியத்தனமான அறிக்கை தான் கமலிடம் இருந்து வந்தது. இதை எல்லாம் அறியாமல் அரைவேக்காட்டு தனமாய் பேசுபவர்களுக்கு மறுபடியும் சொல்கிறேன் , ஞாநி எங்கள் குறி கிடையாது. ஆனால் போகிற போக்கில் நியாயமான மக்கள் போராட்டத்தின் மீது மாற்று கருத்து இருக்கும் பட்சத்தில் , நேர்மையான விவாதத்திற்கு வராமல், அதை பற்றி ஆழமாக விவாதிக்காமல், ஞாநியை போன்று யாரேனும் எச்சில் உமிழ்ந்து விட்டு போனால் செருப்படி தான் கிடைக்கும் என்பதை மிகத் தாழ்மையாக தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் ஞாநி போன்று, இந்து ராம் போன்ற தனி நபர்களால் தான் ஒரு மக்கள் போராட்டத்தினை பயங்கரவதாமானதாக சித்தரித்து இனப்படுகொலை நடப்பதர்க்கான காரணிகளை உருவாக்க முடிகிறது. ஒரு உண்மையான பயங்கரவாதியை விட இவர்கள் மிக ஆபத்தானவர்கள். திமிங்கலம் ஆபத்தானது தான், ஆனால் அது கண்ணுக்கு புலப்படும், அதை விட ஆபத்தானது கண்ணுக்கு தெரியாத, புலப்படாத வைரஸும் பாக்டீரியாவும். சோனியாவையும், கருணாநிதியையும் எதிர்க்க கூடிய அதே வீரியத்தில் இவர்களை செய்ய வில்லை, இதுவரை. பூச்சி மருந்து மட்டும் தான் தெளித்து கொண்டு இருக்கிறோம். பூச்சி மருந்து தொடர்ந்து அடிக்க வேண்டி வைப்பது அல்லது விடுப்பது பூச்சியின் கையில் இருக்கிறது.
திரு
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13543:2011-03-13-12-13-46&catid=1:articles&Itemid=264

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.