prabakaran with ltte

உதிர்ந்தாலும் வாடாத செங்காந்தள் மலர்களே!               

புதைந்தாலும் விதையாகி                             

விடுதலைப் பயிர் விளைத்த மாவீரர்களே!                              

உங்களை எங்கள் உளத்தே நிறுத்தி                               

செங்கொடி தாழ்த்தி வணங்குகிறோம்!

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்து ஐந்தாண்டுக்கு மேலாயிற்று. இனக் கொலைக் குற்றத்துக்காக இது வரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமன்று. உலகில் எந்த அரசும்... நடந்தது இனக்கொலை என்பதை அறிந்தேற்கக் கூட இல்லை. தமிழர்த் தாயகத்தில் சிங்களமயப்படுத்தலைக் கொண்டு நடைபெறும் கட்டமைப்பியல் இனக்கொலைக்கு எதிராக எவ்விதப் பாதுகாப்புப் பொறியமைவும் இல்லை. தமிழர் இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பொது வாக்கெடுப்பும் எட்டாக் கனவாகவே இருந்து வருகிறது.

மறுபுறம், தமிழீழத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களாகிய நாமும் மனித உரிமை ஆற்றல்களும் தொடர்ந்து நடத்திய போராட்டங்களின் பயனாக ஐநா மனித உரிமை மன்றத்தின் தீர்மானப்படி ஒரு பன்னாட்டுப் புலனாய்வு நடைபெற்று வருகிறது. இந்தப் புலனாய்வைச் சீர்குலைக்கக் கொழும்புடன் கூடி தில்லி வல்லாதிக்கமும் சூழ்ச்சி செய்து வருகிறது. விழிப்புடன் இருந்து ஒற்றுமை காத்து உறுதியுடன் போராடி வெற்றி இலக்கு நோக்கி முன்னேறிச் செல்ல மாவீரர்களின் பெயரால் உறுதியேற்போம். இந்த ஆண்டு மாவீரர் நாளுக்கு முன் தமிழீழத் தேசியத் தலைவரின் மணிவிழாவும் வருகிறது. பெருமைக்குரிய அந்தப் பெருமாவீரனை வாழ்த்தி வணங்கும் போதே, அவரைப் பற்றிய புதிருக்கு விடை காணாமலே இன்னும் எவ்வளவு காலம் இருக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

தலைவர் உயிரோடுதான் இருக்கிறார், உரிய தருணத்தில் மீண்டும் களம் காணப் போகிறார் என்று நம்மில் சிலர் கூறி வந்தாலும், இதனை நம்பவே ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் விழைந்தாலும், இல்லை இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் வீரச் சாவடைந்து விட்டார் என்று வேறு சிலர் நம்புவதை நாமறிவோம். நம்மினத்தைச் சேராதவர்கள் என்றாலும் நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் பலரும் அவ்வாறே சொல்கின்றனர். வேறு சிலரோ இரண்டுமில்லாமல் புதிர் போடுவதும் பூடகமாய்ப் பேசுவதுமாக உள்ளனர்.

தலைவர் மறைவாக இருக்கின்றாரே தவிர மறையவில்லை என்பதோ, வீரச் சாவடைந்து விட்டார் என்பதோ புறவய உண்மை சார்ந்ததே தவிர, அகவய நம்பிக்கை சார்ந்தது அன்று. எது உண்மை என்பதைத் தெரிந்து கொள்ளத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே உரிமை உண்டு. நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு நேரிட்டது போல் தலைவர் பிரபாகரனுக்கும் நேரிட்டு விடக் கூடாது.

நம் பகைவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம், உண்மையைக் கண்டறியும் திறனும் வலிமையையும் நமக்கே உண்டு. தமிழகத்திலும் ஈழத்திலும் உலக அளவிலும் தமிழினத் தலைவர்கள் அனைவரும் கூடிப்பேசி நம்பகமான உண்மையறியும் குழு ஒன்றை அமைக்கலாம். அக்குழுவினர் கிடைத்துள்ள தரவுகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவைச் சொல்லட்டும். தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றால் நம் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர் வீரச்சாவடைந்து விட்டார் என்றால் அந்த உண்மையை ஏற்று அவருக்குச் செய்ய வேண்டிய மரியாதையை முறைப்படி செய்து, அவரது விடுதலைக் கனவை நனவாக்கச் சூளுரைப்போம். இப்படிச் செய்வதே தமிழர்களின் போராட்டத்துக்கும் நல்லது. அந்தப் பெருமாவீரனின் புகழுக்கும் ஏற்றது.

தலைவர் உயிரோடுதான் இருக்கிறார், உரிய தருணத்தில் மீண்டும் களம் காணப் போகிறார் என்று நம்மில் சிலர் கூறி வந்தாலும், இதனை நம்பவே ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் விழைந்தாலும், இல்லை இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் வீரச் சாவடைந்து விட்டார் என்று வேறு சிலர் நம்புவதை நாமறிவோம்.

நம்மினத்தைச் சேராதவர்கள் என்றாலும் நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் பலரும் அவ்வாறே சொல்கின்றனர். வேறு சிலரோ இரண்டுமில்லாமல் புதிர் போடுவதும் பூடகமாய்ப் பேசுவதுமாக உள்ளனர்.

தலைவர் மறைவாக இருக்கின்றாரே தவிர மறையவில்லை என்பதோ, வீரச் சாவடைந்து விட்டார் என்பதோ புறவய உண்மை சார்ந்ததே ஒழிய, அகவய நம்பிக்கை சார்ந்தது அன்று. எது உண்மை என்பதைத் தெரிந்து கொள்ளத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே உரிமை உண்டு. நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு நேரிட்டது போல் தலைவர் பிரபாகரனுக்கும் நேரிட்டு விடக் கூடாது.

நம் பகைவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம், உண்மையைக் கண்டறியும் திறனும் வலிமையும் நமக்கே உண்டு. தமிழகத்திலும் ஈழத்திலும் உலகளவிலும் தமிழினத் தலைவர்கள் அனைவரும் கூடிப்பேசி நம்பகமான உண்மையறியும் குழு ஒன்றை அமைக்கலாம். கிடைத்துள்ள தரவுகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து அக்குழுவினர் ஒரு முடிவைச் சொல்லட்டும்.

தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றால் நம் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர் வீரச்சாவடைந்து விட்டார் என்றால் அந்த உண்மையை ஏற்று அவருக்குச் செய்ய வேண்டிய சிறப்பை முறைப்படிச் செய்து, அவரது விடுதலைக் கனவை நனவாக்கச் சூளுரைப்போம். இப்படிச் செய்வதே தமிழர்களின் போராட்டத்துக்கும் நல்லது. அந்தப் பெருமாவீரனின் புகழுக்கும் ஏற்றது.

Pin It