திட்டமிட்டே
கட்டப்பட்ட அணையில்
தேங்கி ததும்பும்
எனக்கான பாசன நீர் நீ

குறுவைக்கான விதை நெல்லோடு
காத்திருக்கும்
குறுங்காணிக்காரன் நான்

பாறையாய் பிளவுண்டு கிடக்கும்
என் மருதத்தின் பசுமை
பெருக்கெடுத்து
தடுப்புடைத்து
நுரைபொங்க வரும்
உன் வரவால் மட்டுமே

சுரண்டிய மணலற்று
வறண்ட காவிரியாகி விடுகிறதுன் வீதி
நீ வெளியூருக்குப் போகும்
நாட்களில்

நீர் வேட்கையால்
கடைசி வேர்நாக்கும்
இற்றுப்போகும் வரை தவமிருக்கும்
என் நதிக்கரை
மரங்களைபோல்
நான் காத்திருப்பதை
அறியாதவளில்லை நீ

Comments

1 comment

1
varadarajan
வடமேற்கு திசை தோன்றி வருகின்ற வழியெல்லாம்
வளம்சேர்த்துப்புகழ் பெற்ற வண்ணமகள் காவேரி
இன்று குடம் சேர்க்கும் நீர் கூடக் கொடுப்பதற்கு
வழியில்லை!
தடமெல்லாம் மணற்பரப்பு,தகிக்கும் ஆதவன் கொதிப்பு,
கட்டடம் கட்ட இடம் தேடியலைவோர்க்கு காவிரியின்
மணற்பரப்பு சரியான இடமாச்சு! நதி நீர்களை இணைப்போம் என நாள்தோறும் பேச்சு!
விதியெண்ணி மக்கள் தினம் விடுவர் பெருமூச்சு!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.