எனக்கும்
உனக்குமான
சந்திப்புக்கள்
உனக்குத் தெரியாமல்
ஒவ்வொரு
பகலும்
இரவும்
 
என்
மெல்லிய
கனவுகளை
நொறுக்கி விடாமல்
மிகவும் பத்திரப்படுத்தி
பலமான இதயம் கொண்டு
தாங்கிச் சென்றேன்
உன்னைச்
சுற்றியே

அரங்கேறத் துடித்த
ஆசைகளை
அவிழ்த்தெறியாமல்
சேகரிக்கத் துவங்கினேன்
உன்
காதலின்
கரங்களால்

என்
காதலின்
வேட்கையதில்
ஒரு
மௌனப் போராட்டம்
உடைப்பெடுத்த நதியாய்
என்
மனப்பிரவாகம்

நாட்களின்
அவகாசத்தை
அதிகாரபூர்வ
அறிவிப்பை
சொல்லிச் சொல்லி
மாய்ந்தன
நம்
காதலின்
கலப்பில்லாச் சொற்கள்

உன்
மனம்
உறிஞ்சிய
வேர்ப்பரப்பில்
சாய்ந்து
கொண்டது
என்
இதயம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.