“பாஷிமணியோஒய்
பேன் ஷீப்போஒய்
ஒடுக் கூஷியோஒய்
இடுப்புக் கெய்றோஒய்”

கூவிக்கூவி விற்றுவந்த
குறத்திமகள்
கோனாரு டீக்கடையில்
சற்றே இளைப்பாற

அத்தனை
ஆம்பளக்கண்ணும் மொய்த்தன
அவளை

மேனியிலூர்ந்த
வக்கிர முசுடுகளை உதறி
பிழைப்பைத் தொடர
புறப்பட்டவள்

போகிற போக்கில்
சுழற்றினாள் நாவைச்
சாட்டையாய்

“இன்னா ஷாமியோஒய்
அப்படி பாக்றீங்கோ
எல்லாத்துக்கும் இருக்குறதுதான்னே
என்கும் இருக்கு”

அழியாக்கறை

எத்தனை விடுதலை பெற்றும்
எவ்வளவு உயரம் அடைந்தும்
இத்தனை கால
இழிவின் மிச்சமாய்
உம் வசவிற்கான பின்னிணைப்பு
எம் பிறப்புறுப்பு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.