தமிழக மீனவர்கள் 600க்கும் மேலானவர்களை இலங்கையின் சிங்கள வெறிப்படை சுட்டு வீழ்த்தி யிருக்கிறது.

கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்தார்கள் என்பது தவிர அவர்கள் வேறு எந்தக் குற்றமும் செய்துவிடவில்லை

கடல் எல்லை இந்த இடத்தோடு முடிவடைகிறது என்பது தமிழக அரசின் ஒப்புதலோடு வரையறுக்கப்படவில்லை.

ஆழ்கடல் மீன் பிடிப்பைப் பன்னாட்டு நிறுவனங்கள் எல்லை மீறிச் செய்கிறபோது, தமிழக அலைகடல் பகுதியில் மீன் பிடிப்பதைக் கூடத் தமிழக மீனவர்களால் உரிமையோடு செய்ய முடியவில்லை.

சுட்டுக் கொல்லும் சிங்கள அரசை மிரட்டிக் கேட்காத இந்திய அரசை நம்பித் தமிழக மக்கள் கிடப்பது எதற்காக?

அப்படிக் கிடப்பதன் விளைவுதான் இன்றைக்குத் தமிழக மீனவர்கள் ஐவரைப் பிடித்துத் தூக்குத் தண்டனை கொடுக்கத் துணிந்திருக்கிறது சிங்கள அரசு.

இந்திய அரசை நம்பிக் கிடக்கிற வரை நம் மீனவர்களின் வாழ்க்கைக்கு நாம் உறுதி கூற முடியாது.

கடல் ஆளுமை உரிமையைக் கொண்டிருக்கிற அதிகாரம் முழுக்க முழுக்க தம்மிடமே உள்ள உரிமை பெற்ற தமிழ்நாட்டரசைப் பெற்றிருந்தால் மட்டுமே தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். சிங்கள வெறிப்படைக்குப் பதிலடி கொடுக்க முடியும்.

இன்றைக்கு முகவை மாவட்ட மீனவர்களிடையே தன்னெழுச்சியாக ஏற்பட்டிருக்கிற இந்திய அரசெதிர்ப்பு எழுச்சியைத் திட்டமிட்ட இயக்க வழி, தமிழகக் கடற்பரப்புரிமை விடுதலை நோக்க வழி எழுச்சியாக மாற்றி வளர்த்திடுவோம்.

தமிழ்நாட்டுக் கடல் உரிமையை தமிழக அரசே முழுமையாகப் பெற்றிடும் வகையில் போராடுவோம்!

Pin It