பூக்கள் பூத்த
எம் தோட்டத்தில் இன்று
ஈக்கள் மொய்க்கின்றன.

பட்டாம் பூச்சிகளாய்ப் பறந்து திரிந்த
எம் பிள்ளைகள் இன்று
விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்து விட்டன.

நற்கல்வி பயின்ற கூடங்கள் இன்று
வண்கலவி மாடங்களாகி விட்டன.

கறைபடியா எம் தமிழ்க்கற்பு இன்று
கறையான்களால் அரிக்கப்பட்டுவிட்டது.

புலிக்கொடியேந்தி
போராடிய கூட்டம் இன்று
முள்வேலிக்குள் முடமாக்கப்பட்டு விட்டது.

வந்தாரை வாழவைத்த
எம் இனம் இன்று
கண்டவனிடம் கையேந்துகிறது.

ஆற்றல்மிகு எல்லாளனின்
ஈழமாலை இன்று
மகாவம்ச "குரங்குகளின்' கையில்
சிக்கி சீரழிந்து விட்டது.

இனி,
யாருக்கு எதற்காக வேண்டும்
நாடும், நாடு கடந்ததும்...

- நா.செந்திசை, புழல் நடுவண் சிறை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.