இன்றைய உலகமயமாக்கம், தனியார் மயமாக்கம், தாராள மயமாக்கம், தேர்தல் அரசியல் வாக்குப் பொறுக்கிகளின் அரசியல் சூதாட்டம், இலஞ்சம், ஊழல், அரசுக் கேந்திரங்களின் தேசிய இன ஒடுக்குமுறை ஆகிய இவற்றுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்ட நிலையில் இருத்தலுக்குள்ளாக்கியுள்ளது. ஒவ்வொருவரும் தம் அன்றாடத் தேவைகளை, வாழ்வாதாரங்களை அடைய மிகப் பெரும் போராட்டங்களைச் சந்திக்கின்ற சூழலில், சாதிகளை மையப்படுத்தி அரசியல் பேசுவதும், அதன்வழித் தங்களுக்கான சேவக ஆதாயத்தை ஆளும் கும்பலிடம் பெற்றுக் கொள்ளும் அரசியல் சூதாட்டக்காரர்களின் சதி உருவாக்கத்தில் நடத்தப்பட்ட சாதிய வன்முறையின் அடையாளமாய் நாம் காண்பதுதான் பரளிப்புதூர் இந்திரா காலனியில் தாழ்த்தப்பட்ட பறையர் சாதியினர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும்.

கிராமப்பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் சாதியப் பாகுபாடு மற்றும் சாதியாதிக்க நடவடிக்கைகளின் மேல் வெறுப்புற்றிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள், இளைஞர்கள், சாதி இந்துக்களிடம் அடிமை வேலைகள் செய்ய மறுப்பதும், விவசாயக் கூலி வேலைகளுக்குக் கூடச் செல்ல மறுத்து நகர்ப்புறங் களை நோக்கி வேலைகளுக்குச் செல்லுவதும் தொடர்கிறது. நாகரீகமான உடை களை அணிவதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாததாக சாதியாதிக்கக் கும்பல் இருக் கின்றது. மேலும் பன்னெடுங் காலமாகத் தங்களின் மீது ஆதிக்கஞ் செலுத்தி வந்த சாதி வெறியர் களுக்கு எதிராக அமைப்பாக ஒருங்கிணைவதும், தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் கோவில் நிலம், பொதுப்பாதை ஆகிய பொதுத் தளங்களில் உரிமைகள் கேட்பது போன்ற சராசரியான நடவடிக்கைகள் கூடச் சாதி வெறிக் கும்பலை எரிச்சல டையச் செய்கிறது. அதன்வழித் தம் சாதி வெறித் தனத்தை நிலைநாட்ட இளைஞர்களை உசுப்பேற்றி ஒருங்கிணைத்துத் தம் சாதி வெறிக் காட்டு மிராண்டித்தனத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள் ஆதிக்கச் சாதி வெறியர்கள்.

மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லும் சாலையில் மதுரை மாவட்ட எல்லை யோரமாய் அமைந்திருக்கிறது பரளிப்புதூர் கிராமம். ஊரின் வெளிப்புறத்தில் இந்திரா காலனியில் 84 தாழ்த்தப்பட்ட பறையர் சாதியினரின் வீடுகளும் பரளிப்புதூரில் சுமார் 400க்கும் மேற்பட்ட பிற்படுத்தப் பட்ட முத்தரையர் சாதியினரின் வீடுகளும் உள்ளன. மேலும் சுற்று வட்டாரப் பகுதிகளில் முத்தரையர்களே பெரும்பான்மையினராகவும் ஆதிக்கச் சாதியின ராகவும் உள்ளனர். இந்தப் பகுதியின் ஊராட்சித் தலைவராகவும், தி.மு.க.வின் மதுரை மாவட்டச் செயலாளர் மூர்த்தியின் பினாமியாகவும், நெருக்கத் திற்குரியவனாகவும், சாதி வெறியனாகவும் வலம் வருகிற சரந்தாங்கி முத்தையன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி உறுப்பினர் கருப்பணன், பூவன் தி.மு.க.வைச் சேர்ந்த வெள்ளையன், காங்கிரசுக் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் இராமன், தே.மு.தி.க.வின் இராமலிங்கம், முத்தரையர் சங்கத் தலைவர் இராமன், நிழக்கிழார் அம்மாசி பிச்சை கண்ணன், பாலமுருகன், பூபாலன், கேபிள் ஆப்பரேட்டர் சின்னழகு, வத்திபட்டியில் திருட்டுப் பெட்ரோல் விற்கும் அசோகன் (எ) குட்டையன் ஆகியோரின் ஏற்பாட்டில் பரளிப்புதூர், பாறைபட்டி, செல்லூர் வலசை, சரந்தாங்கி, வடமதுரை, நெடுமதுரை, எலியார்பத்தி, விளாம்பட்டி, அழகாபுரி, தேத்தாம்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் சேர்ந்து 13.2.2011 அன்று இரவு 9.30 மணியளவில் அரிவாள், இரும்புக் கம்பி, தீப்பந்தம், உருட்டுக் கட்டைகள் உள்ளிட்ட கொடும் ஆயுதங்களோடு சேரிப் பகுதிக்குள் புகுந்து தாக்கவும், தீ வைக்கவும் செய்துள்ளனர்.

சிறுபான்மையினரான தாழ்த்தப்பட்டவர்கள் அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர். ஓடமுடியாத முதியவர் களையும் பெண்களையும் சாதி வெறிக் கும்பல் தாக்கியதோடு, பெண்களின் முன்னால் அம்மண மாகவும் ஆட்டம் போட்டு இருக்கிறது.

தலித் பெண் ஒருவரின் கையிலிருந்த குழந்தை யைப் பிடுங்கிய சாதி வெறியன் ஒருவன் ஆணா! பெண்ணா என்று ஆடையை விலக்கிப் பார்த்து விட்டு பெண் குழந்தை என்றவுடன், இது நமக்கு என்றும் ஆண் என்றால் சுடுகாட்டுக்கு என்றும் சொல்லி எக்காள மிட்டுள்ளான்.

மேலும் அங்குள்ள அனைத்து வீடுகளையும் தென்னை வாழை உள்ளிட்ட மரங்களையும், வீடுகளின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களையும், வீடுகளுக்குள்ளிருந்த பீரோ, கட்டில், தொலைக்காட்சிப் பெட்டி, கிரைண்டர், நகைகள், துணிமணிகள், தானியங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கியும் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்தும் விட்டு, அங்கிருந்து ஆடு, மாடுகள் கோழிகளையும் களவாடிச் சென்றுள்ளனர்.

தீவைப்பில் சிக்கிய ஆடு, மாடு கோழிகள் உயிருடன் கருகிச் செத்துப் போயுள்ளன. ஒரு சில வீடுகளில் திருமணம் உள்ளிட்டவற்றுக்கான சீர் வரிசைப் பொருட்கள் மற்றும் தங்க நகைகள், ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்டும் சென்றுள் ளனர். எஞ்சியவை தீயில் எரிந்து போயுள்ளன. கண் பார்வையற்ற போசு என்பவரின் மளிகைக் கடை உள்ளிட்ட மூன்று கடைகளும் முற்றிலும் சூறையாடப் பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சுமார் ஐந்து கோடி மதிப்புள்ள தாழ்த்தப்பட்டவர்களின் உடைமைகைள் கொள்ளையடிக்கப்பட்டும், தீ வைத்துச் சூறையாடப்பட்டும் உள்ளது. மேலும் உயிருக்குப் பயந்து காடுகளுக்குள் சென்று மறைந்திருந்தவர்களைத் தேடிக் கொலைவெறியுடன் ஒரு கும்பலும் சென்றிருக்கிறது. இதையறிந்த தாழ்த்தப்பட்டவர்கள் இரவோடிரவாக மலங்காட்டுப் பாதைகளின் வழியே ஓடி முகுவார் பட்டி, ஊர்சேரி ஆகிய ஊர்களில் தஞ்சமடைந் திருக்கிறார்கள்.

காட்டுமிராண்டித் தனமான ஆதிக்கச் சாதிக் கும்பலின் கொலைவெறித் தாக்குதல் மற்றும் கொள்ளைத் திட்டம் தெரிந்திருந்தும் வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் கண்டும் காணாமல் மெத்தனமாகவே இருந்துள்ளனர். இது தொடர்பாக முன்கூட்டியே அதிகாரிகளிடம் தாழ்த்தப் பட்டவர்கள் முறையிட்டும் கூட அவர்களை அலட்சியம் செய்ததோடு, தாழ்த்தப்பட்டவர்களின் மீதே வழக்குப் போடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

மேலும் சாதி வெறிக் கும்பல் தம் காட்டு மிராண்டித் தனத்தை முழுமையாக நடத்தி முடிக்கும் வரை எந்த அதிகாரிகளும் அங்குச் செல்லவில்லை. அதன் பிறகு கூட பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்காமல், சட்டப்படியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், ஆதிக்கச் சாதியினரைப் பாதுகாக்கிற ஒரு சார்பு நிலையிலேயே அதிகாரிகளின் ஒவ்வொரு நகர்வும் இருந்துள்ளது.

குறைந்தபட்சம் தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் செய்து தரவேண்டிய இழப்பீடுகளைக் கூடச் செய்ய மறுத்து அரசு அதிகாரிகளும் தம் சாதி வெறித்தனத்தை நிலைநாட்டி யுள்ளனர். காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை கூட தராமல் அலைச்சலுக்குள்ளாக்கி உள்ளனர். மேலும் தாழ்த்தப் பட்டவர்களின் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்றும் சேவையாளர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கூட, அந்த மக்களுக்காக எவ்வித சிரத்தையும் மேற்கொள் ளாமல் மேம்போக்காகக் கண்டும் காணாமல் வாக்குப் பொறுக்கும் அரசியல் நடவடிக்கைகளின் மீதே கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாத தேர்தல் அரசியல் கட்சியினர் அம்மக்களுக்குச் சிறு ஆறுதல் கூடச் சொல்ல முற்படாதது அவர்களின் சாதி வெறி அரசியல் ஆதிக்கத்தைக் காட்டுவதாகவே உள்ளது. ஒருசில தன்னார்வக் தொண்டு நிறுவனங்களும், அமைப் பினரும் சில உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.

ஆண்டாண்டுக் காலமாகச் சாதிவெறித்தனத்தின் கொடுமைகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் தாழ்த்தப் பட்டவர்கள் தமக்கான விடுதலைக்குப் போராட அமைப்பாவதும், தீர்மானகரமான தத்துவவழி செயற்பாட்டளவிலும் சமூக மாற்றத்திற்குப் போராட முன்வர வேண்டும். வாய்ச் சவடால் அரசியலாளர் களிடமும், கவர்ச்சிகர அரசியல் தரகர்களிடமும் நம்பிக்கை கொள்ளுவதும், அவர்கள் தம்மைச் சார்ந்தவர்களையே முன்வைத்து அரசியல் சூதாடு வதையும் எத்தனை காலத்திற்குத்தான் ஏற்றுக் கொள்ளப் போகிறோம். ஏமாளிகளாவே வாழப் போகிறோமோ! என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனித உரிமை இயக்கங்களின் சார்பாகப் பல்வேறு உண்மை அறியும் குழுவினர் சென்றனர். அவர்கள் மக்களிடம் திரட்டிய செய்திகள்

“உங்கள் (விடுதலைச் சிறுத்தைகள்) கொடியைக் கழற்றி விடுங்கள். எங்கள் சமூகத்தினரிடம் சொல்லி எங்கள் கொடியை அவிழ்க்கக் கூறுகிறேன்'' என்று சொல்கிறார். இதுதான் முதல் சிக்கல்.

மறுநாள் மாலை பஞ்சு தலித் தரப்புக் கொடியை அவிழ்க்கச் சென்றபோது முத்தரையர் சாதி சங்கக் கொடி மீது செருப்பு ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதன் விளைவை உணர்ந்த பஞ்சு தலித் தரப்புக் கொடியோடு அச் செருப்பையும் அகற்ற முயற்சித்தார்.

அப்போது அங்கு வந்த முத்தரையர் தரப்பினர் செருப்பை அகற்றக் கூடாது என்று தடுத்தனர். அதற்கு முன்பே பரளிப் புதூரைச் சுற்றியிருந்த முத்தரையர் கிராமங்களுக்குச் சாதிச் சங்கக் கொடி அவமதிக்கப் பட்டதாகத் தகவல்களை அனுப்பியிருந்தனர். சுற்றுவட்டாரத்திலிருந்த 15 கிராமங்களிலிருந்த முத்தரையர்கள் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் பரளிப்புதூரை இணைக்கும் நத்தம் நெடுஞ்சாலை களில் வந்திறங்கினர். அதனா லேயே அந்தச் செருப்பை அகற்றக் கூடாது என்று முத்தரையர்கள் கூறி, சாதி மோதலை உருவாக்கி னார்கள்.

தலித்துகள் செருப்பைக் கட்டி அவமதித்தனர் என்று குற்றம் சாட்டி முத்தரையர் மறியலில் ஈடுபட "எங்களின் (தலித்) தனித்துவ அடையாளத்தை முடக்கு வதற்கான தருணத்தை உருவாக்க முத்தரையர்களே செய்து கொண்ட ஏற்பாடு அது.''

நத்தம் நெடுஞ்சாலையில் இரவு 7 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்ட முத்தரையர்கள் சுமார் 300 பேரோடு 15 வாகனங்களில் பரளிப்புதூர் தலித் குடியிருப்பை நோக்கி 11 மணியளவில் வந்தனர். அப்போது அங்குப் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளே பாதுகாப்புக்கு இருந்தனர். அது தாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று என்று தலித் மக்கள் கூறுகின்றனர். பெட்ரோல், கம்பு, கடப்பாரை ஆகிய ஆயுதங்களோடு குடியிருப்புக்குள் 300 பேர் பெரும் ஆரவாரத்தோடு நுழைந்து வீடுகளைத் தாக்கினர். வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டன.

ஓட்டு வீடுகளின் முன்புறமாகவும், பின்புறமாகவும் வேயப் பட்டிருந்த கீற்றுக் கொட்டகைகள் கொளுத்தப் பட்டன. வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்குகளும் சைக்கிள்களும் கொளுத்தப்பட்டன. வீடுதோறும் பாத்திரங்கள், டி.வி. பீரோ ஆகியவை உடைக்கப்பட்டன. வைக்கோல் படப்பு கொளுத்தப் பட்டது.

கான்கிரீட் வீடுகள் கடப்பாரைகளைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டன. மெத்தை வீடுகளின் கண்ணாடி சன்னல்களும் கதவுகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் இரண்டாக உடைக்கப்பட்டு சாய்க்கப் பட்டது. திருமாவளவன் படம் வரையப்பட்டிருந்த முகாம் பலகை கொளுத்தப்பட்டது. ஏறக்குறைய அரை மணி நேரம் வரை இத்தாக்குதல் நீடித்தது.

ஆண்கள் எல்லோரும் இரவு நேரமென்றும் பாராமல் ஊரை விட்டு வெளியேறும் நிலை உருவானது. பெண்கள் மட்டுமே இருந்தனர். குழந்தைகளின் ஆடைகளை விலக்கி ஆணா பெண்ணா என்று பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர். தலித் பெண்களுக்கு முன்பு அக்கும்பலில் இருந்த ஆண்கள் நிர்வாணமாக நடந்து அப்பெண்களை ஏசியுள்ளனர்.

2.     இத் தாக்குதலில் 12 வீடுகள் முழுமையாக வும், 70க்கும் மேற்பட்ட வீடுகளில் பொருட்கள் முழுமையாகவும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. போசு என்ற கண் பார்வையற்றவரின் வீடு, கடை (ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்சேதம்; எரித்து நாசமாக்கப்பட்டது. தலித்பகுதியில் உள்ள மூன்று கடைகளும் முழுமையாக எரிக்கப்பட்டுள்ளன.

3.     20க்கும் மேற்பட்ட வாகனங்கள் (இரு சக்கர வாகனங்கள்) எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

4.     தாக்குதலில் ஈடுபட்ட முத்தரையர்கள் குழந்தைகளை ஆணா பெண்ணா என இனம் பிரித்துப் பார்க்க அவர்களின் ஆடைகளைக் களைந்து பார்த்துள்ளனர்.

5.     தாக்குதலில் சிக்கிய தலித் பெண்மணி ஒருவர் தனது ஆண் குழந்தையைக் காப்பாற்றச் சேலையில் மறைத்துத் தப்ப வேண்டியிருந்தது என்பது இக்குழு வினருக்கு அதிர்ச்சிகரமான செய்தியாகவும் உள்ளது.

6.     தாக்குதலுக்கு வந்தவர்கள் பெட்ரோல், கடப்பாரை, இரும்புக் கம்பியை எடுத்து வந்தனர் என்பதும், 70க்கும் மேற்பட்ட வீடுகளில் பொருள்கள் முழுமையாக எரிக்கப்பட்டன என்பதும், தாக்குதல் 8 மணி முதல் 10.30 மணி வரை இரண்டரை மணி நேரம் தொடர்ந்து நீடித்துள்ளது என்பதும், தாக்குதல் நடத்தப்பட்ட சமயம் டிரான்ஸ்பார்மர் அணைத்து வைக்கப்பட்டது என்பதும், தலித்துகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று என்பதை வெளிப்படுத்துகிறது.

7.     முத்தரையர் தரப்பில் உள்ளூரைச் சார்ந்த 5 6 நபர்கள் மட்டுமே பங்கு பெற்றதாகவும், மற்றவர்கள் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அணி திரண்டு வந்ததாகவும் முத்தரையர் தரப்பில் இக்குழுவினரிடம் முன்வைத்தனர்.

8.     உள்ளூரைச் சார்ந்த கருப்பண்ணன் தவிர வேறு எவரும் தாக்குதலுக்காகக் கைது செய்யப் படாதது, தலித்துகளிடையே பாதுகாப்பற்ற மன நிலையை ஏற்படுத்தியுள்ளது.

9.     தாக்குதலில் ஈடுபட்ட முத்தரையர்கள் தலித்து களிடையே ஒரு சலவையாளருடைய வண்டியைத் தாக்கவோ, சேதம் விளைவிக்கவோ செய்யவில்லை. இதுதவிர முடி திருத்துபவர் வீடு (மேல் நிலைத் தொட்டி அருகாமையில் உள்ள) தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதும் இது தாழ்த்தப்பட்டோர் மீதான திட்டமிட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இம்முயற்சியில் பல்வேறு மனித உரிமை அமைப்பைச் சார்ந்த சமூக ஆர்வலர்களும் மனித உரிமையாளர்களும் பங்கேற்றனர். குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் சார்பில் இந்தப் பகுதிகளைப் பார்வையிடவும், மக்களைச் சந்திக்கவும் ஒருங்கி ணைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தாக்குதல் நடந்து இரண்டு நாட்களாகியும், பாதிக் கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப் படவில்லை. சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட வில்லை. கலெக்டர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

காவல் துறையின் நடவடிக்கை திருப்தி தரக் கூடியதாக இல்லை. உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. குஇ/ குகூ (அஇகூ) 1989 ஆம் சட்டத்தின்படி வழக்கு பதியப்படவில்லை.

தாக்குதலில் காயம்பட்ட தலித் சமூகத்தினரைச் சேர்ந்த நைனார் என்பவரையும் அய்யாவு என்பவரை யும் முத்தரையர் கொடியை அவமதித்த வழக்கில் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இச்சம்பவம் இப்போது வரையிலும் பரளிப்புதூர் தலித் மக்களுக்குத் தெரியாது.

இச்சம்பவம் நடந்த ஒரு மாத காலத்திற்குப் பின்பும் ஆண்கள் வீட்டிற்கு வர பயந்து, சுற்றி உள்ள காட்டுப் பகுதிகளில் தங்கி உள்ளனர் என்று பெண்கள் இக்குழுவினரிடம் குறிப்பிட்டனர். இவர்களின் தேவைக்காகப் பொருள்கள் தனி உணவுப் பொருள் பங்கீட்டுக் கடைகளின் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இப்பெண்கள் இக்குழுவின ரிடம் தெரிவித்தனர். எரிக்கப்பட்ட வீடுகளின் ஓடுகள் சில இடங்களில் மாற்றப்பட்டுள்ளன.

தாக்குதலின் போது இதில் ஈடுபட்ட முத்தரையர்கள் பெண்களை மானபங்கப்படுத்திய தாகவும், குழந்தைகளை ஆணா, பெண்ணா என அறிய ஆடைகளைக் கழற்றிப் பார்த்தனர். பெண் குழந்தை யாக இருந்தால் அது நமக்கு. ஆண் குழந்தையாக இருந்தால் அது திருமாவுக்குப் போகும் என்று கூறி குழந்தைகளை விரட்டித் தேடியுள்ளனர். ஒரு தலித் பெண் தனது கைக்குழந்தை (ஆண்)யை புடவையில் மறைத்து ஓடி ஒளிந்தார்.

அம்பேத்கர் நகரில் மூன்று வீடுகளை எரித்து, ஓடுகள் முழுமையாக உடைக்கப்பட்டுள்ளன. ஒருவர் வீட்டை உடைத்து ரூ.20,000 பணமும், 7.2 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இரு சமூகத்தினருக்கும் கள்ளம்பட்டி கருப்புசாமி தெய்வ வழிபாட்டில் சாமி சிலை கண் திறந்த பின் தலித்துகள் வாழும் பகுதியில் உள்ள கோவிலுக்குக் கொண்டு சேர்த்து தலித்துகள் விழா முடிந்த பின் சாமி சிலையை மீண்டும் தமது பகுதிக்குக் கொண்டு வரும் பொறுப்பு வழமையாக முத்தரையர்களுடையதாகவே இருந்துள்ளது. தலித் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட இச் செய்தியை முத்தரையினர் தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

உள்ளூரில் இருந்து தாக்குதலில் பங்கேற்ற 5, 6 நபர்கள் கைது செய்யப்படாமல் வெளியில் உலவி வருகின்றனரே என்று தலித்துகள் முன் வைத்த கேள்வியைத் தொடுத்தபோது அவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டால் நடவடிக்கை எடுப்பதாக இக் குழுவினரிடம் அவர் உறுதி கூறினார்.

உதவி கண்காணிப்பாளர் கணேசன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடும் எனக் காரணம் காட்டி உள்ளூர் தலித் மீதான தாக்குதலை நடத்திய முத்தரையர் தரப்பினர்களைக் கைது செய்யாமல் தவிர்ப்பது முறையாகாது என்று இக்குழுவினர் காவல் துறை உதவி கண்காணிப்பாளரிடம் தம் கருத்தை முன் வைத்தனர்.

1. தலித்துகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக இக்குழு கருதுகிறது.

உண்மை அறியும் பங்கு பெற்ற அமைப்புகள்

1. புதிய போராளி

2. குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்

3. இ.பொ.க. (மா.இலெ.) விடுதலை

4. த.ஒ.வி.இ.

5. த.ம.உ.க.

தொகுப்பு: விடுதலைச் செல்வன், மதுரை

Pin It