முஸ்லிம்களின் வாக்குளைப் கவர பாஜக வியூகம்!

அடுத்த மாதம் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை குவிக்க நினைத்துப் பார்க்க முடியாத வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக.

குஜராத்தில் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் முஸ் லிம்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கும் பாஜக, மதிப்பு மிக்க இந்த வாக்குகளை கவர முயற்சிக்கிறது. முஸ்லிம்கள் கடந்த கால வன்முறைச் சம்பவங் களை மறந்து விட்டிருப்பார்கள். அதனால் ஓரளவிற்கு முஸ்லிம்க ளின் நம்பிக்கையை பெற முடியும் என அது நம்புகிறது.

மூன்றாவது முறையும் குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று முயற்சிக்கும் நிலையில், தேசிய அளவிலும், மாநில அளவிலும் முஸ்லிம்களின் வாக்கு வங்கி மிக முக்கியமானது என்பதை பாஜக நன்றாக உணர்ந்தே வைத்துள்ளது. ஆனால் முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர அது முயற்சிப்பது குறித்து கேட்டால் அக்கட்சியின் தலைவர்கள் மழுப்பலான பதில்களை அளித்து வருகின்றனர்.

எங்கள் கட்சியின் தேர்தல் வியூகம் என்பது சமூகம் சார்ந்ததல்ல. மாறாக நாங்கள் (குஜராத்தின்) வளர்ச்சி மற்றும் சிறப்பான நிர்வாகம் தரவே தேர்தல் களமாடுகிறோம் என்பதாகவே பாஜக தலைவர்களின் பதில் உள்ளது.

குஜராத்தின் 6 கோடி மக்கள் தொகையில் முஸ்லிம்கள் மட்டும் 9.89 சதவீதம் உள்ளனர். ஆனால் இந்த முஸ்லிம் சமூகம் 2002 இனப் படுகொலை உள்பட தொடர் இடை வெளிவிட்டு வகுப்புக் கலவரத்தை அனுபவித்த வரலாறு கொண்ட வர்கள். இந்த நிலையில்தான் முஸ் லிம்களின் வாக்குகளைக் கவர வியூகம் வகுத்து வருகிறது பாஜக.

இதனால்தான், “குஜராத் பாஜக வின் தேர்தல் வியூகம் என்பது முஸ்லிம்கள் உள்ளிட்ட 6 கோடி குஜராத்திகளுக்கானது...” என்று குஜராத்திலிருந்து ராஜ்ஜிய சபா எம்.பி.யான புருஷோத்தமன் ரூப லாவால் களிப்புடன் சொல்ல முடி கிறது.

குஜராத் மந்திரியான ஜெய் நாராயண் விகாசும், ரூபலாவின் வார்த்தைகளையே பிரதிபலிக்கும் வகையில், “எங்களது தாரக மந்தி ரமே "சப் கா சாத், சப் கா விகாஸ் (எல்லோருடனும், எல்லோரு டைய வளர்ச்சியும்) என்பதுதான் பாஜக சாதி, மத பேதம் கருதாமல் அனைத்து குஜராத்திகளின் முன் னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்கா வும் பாடுபட்டு வந்திருக்கிறது. எங்களது தேர்தல் வியூகமே இது தான்...” என்று வேஷம் கட்டுகிறார்.

முஸ்லிம் பெயர் தாங்கியான பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக் வியோ, “சிறந்த அரசு நிர்வாகமே எங்களது வாக்கு அரசியல்...” என் கிறார்.

முஸ்லிம்களை கவரும் இந்த காட்சிகளுக்குப் பின்னால் மக்கள் தொகை ஆய்வு, தொகுதி மறு சீரமைப்பு மூலம் முஸ்லிம்களின் பலத்தை குறைக்கவும் இவர்கள் கற்று வைத்துள்ளனர்.

குஜராத்தின் 182 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பலத்தோடு முஸ்லிம் கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

குறிப்பிட்ட 10 தொகுதிகளில் மட்டும் முஸ்லிம்களின் வாக்கு வங்கி 25 சதவீதமாக உள்ளது. இந்த பத்து தொகுதிகளில் 5 தொகு திகள் அஹமதாபாத் ஜமால்பூர் காடியா, தானி லிம்டா, தரியாபூர், வெஜல்பூர், பாபு நகர் என்கிற பெரு நகரங்களுக்குள் வருகிறது.

இத்தொகுதிகளில் முறையே 61, 48, 46, 35, 28 சதவீத முஸ்லிம்க ளின் வாக்குகள் உள்ளன. அதே சமயம், இந்த 10 தொகுதிகளைத் தவிர்த்த ஏனைய 25 தொகுதிகளில் 15 சதவீதத்திற்கும் மேலாக முஸ் லிம்களின் வாக்கு வங்கியுள்ளது.

இவற்றில் கோத்ரா, வங்கானர், அப்டாசா, மான்ட்வி (கட்ச்), சித்பூர், சோமநாதபுரம் மற்றும் சூரத் ஆகிய ஏழு தொகுதிகளில் 20 சதவீதத்திற்கும் அதி கமாக முஸ்லிம்கள் வாக்குகள் உள்ளன.

இதன் அடிப்படையில், முஸ்லிம் மக் களை கவர பாஜக எடுத்திருக்கும் சில நடவ டிக்கைகள் இத்தொகுதிகளில் வெற்றியைத் தரும் என அது நம்புகிறது.

முஸ்லிம்கள் கடந்த கால சம்பவங்களை மறந்து தனக்கு வாக்களிப்பார்கள் என்று மோடியும், பாஜகவும் நினைப்பதற்கு இன் னொரு காரணம், தீண்டத்தகாத கட்சியாக முஸ்லிம்கள் பார்க்கும் பாஜகவில் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் அக்கட்சியின் சிறு பான்மை பிரிவுக்குத் தலைமையேற்றிருக் கும் மஹ்பூப் அலி சிஷ்தி, ஆகா மெஹ்பூப் அலி பாவா சாஹேப் போன்றவர்கள் இருப்பது!

இவர்கள் பரலேவி கொள்கை சார்ந்தவர் கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வார்கள். பரலேவிக் கொள்கையை பின்பற்றுபவர்கள் குஜராத்தில் கணிசமாக இருக்கிறார்கள்.

அடுத்த மாதம் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாவா சாஹேப் மோடிக்கு வாக் களிக்குமாறு முஸ்லிம்களை வற்புறுத்தி வரு கிறார். குறிப்பாக, பரலேவிகளையும் போரா முஸ்லிம்களையும் குறி வைத்து, பாஜகவுக்கு வாக்களித்து குஜராத்தின் வளர்ச்சியில் பங் கெடுங்கள் என்ற பிரச்சாரம் செய்து வருகி றார். ஏற்கெனவே போரா முஸ்லிம் தலை வர்கள் மோடியிடம் சரணாகதி அடைந் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, சமீப காலங்களில் செல்வா க்கு மிக்க இரண்டு முஸ்லிம் முகங்களைப் பெற்றுள்ளது பாஜக. ஒருவர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த ஆசிஃப் கான், இன்னொருவர் ஓய்வு பெற்ற ஐ.பி. எஸ். அதிகாரி ஏ.ஐ. சையது.

மோடியின் வெற்றிக்கு இந்த முயற்சிகள் போதுமானதா என்ற கேள்விக்கு முக்தார் அப்பாஸ் நக்வி,

“முஸ்லிம்களின் மனநிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் காங்கிரஸ் தமக்கு சாதகமானது என்று அதனை வரவேற்றனர். ஆனால் அவர்களோ, பாஜகதான் இந்த மாநிலத் திற்கு வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்ப தற்கு சாட்சிகளாக உள்ளனர். அதனால் இந்த முறை தேர்தல் இயந்திரத்தில் பட் டனை மாற்றித் தட்டுவார்கள்...” என்று பதிலளிக்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் மாத சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களையும் வேட்பாளர்க ளாக களமிறக்க மோடி முடிவு செய்திருப் பது பாஜகவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள் ளது.

குஜராத் காந்தி நகர் பாஜக வட்டாரத் தில் முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத் துவதன் மூலம் மோடி அவச் செயலுக்கு ஆளாக தீர்மானித்திருக்கிறார் என்று பேச்சு நிலவுகிறது.

ஆனால், கடந்த 2002, 2007 தேர்தல்களில் பாஜக இந்த முடிவை எடுக்கவில்லை. எதிர் வரும் தேர்தலில் இதே நிலை தொடருமா என்பதை தெளிவாக பாஜக அறிவிக்க முடி யாமல் இருக்கிறது. காரணம், முஸ்லிம் வாக் குகளைக் கவர முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று மோடி அபிப்பிராயம் கொண்டி ருப்பதுதான்.

“முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முக்கி யத்துவம் கருதி முஸ்லிம் வேட்பாளர்களை எந்தக் கட்சியும் நிறுத்துவதில்லை. முஸ்லிம் களின் வாக்குகளைக் கவரவே முஸ்லிம் வேட்பாளர்களை முக்கிய கட்சிகள் நிறுத்து கின்றன. இப்படி தேர்வு செய்யப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள் பொம்மைகளாகத்தான் இருக்க முடியும். அவர்களால் சமுதாயப் பிரச்சினைகளுக்கு குரல் எழுப்ப முடியாது...” என்கிறார் முக்தார் அப்பாஸ் நக்வி.

பாஜகவின் இந்த மூவை எப்படியிருந்தாலும் குஜராத் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வது மிகக் கடினம். “பாஜகவின் இந்த திட்டங்கள், வியூகங்கள் எதுவாக இருந்தாலும் 2002 முஸ் லிம் படுகொலைகளுக்காக மோடியும், பாஜக வும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காதவரை ஒர்க்அவுட் ஆகாது. அதுவரை முஸ்லிம்கள் பாஜகவை அங்கீகரிக்க மாட்டார்கள்...” என் கிறார் குஜராத் பல்கலைக் கழகத்தின் பொலிட்டிகல் சயின்ஸ் துறை பேராசிரியர் தினேஷ் சுக்லா.

பேரா. சுக்லா சொல்வது உண்மைதான். 2002 இனப்படுகொலை என்பது முஸ்லிம்களின் ஆறாத ரணம். பாஜகவின் நடவடிக்கைகள் அந்த ரணத்தை எக்காலத்திலும் ஆற்றிவிட முடியாது.

- ஃபைஸ்

Pin It