தொடர்புடைய படைப்புகள்

நான் பயந்ததுபோலவே நடந்து விட்டது. நாடே பயப்படும்படியாக நடந்து விட்டது. இனி பொது மக்கள் பொது இடங்களில் பயந்து பயந்து நடக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. யாரோ சிலர் இந்த பயங்கர காரியத்தை பயமே இல்லாமல் செய்து விட்டனர். காரணம் பயம் வர வேண்டும் என்பதற்காக!

காரணம் பயம் வர வேண்டும் என்பதற்காக! இந்த வார்த்தையை இரண்டாம் முறை பயன் படுத்துவதற்கு காரணம் இருக்கி றது.

யார் மேல்... யாருக்கு பயம் வர வேண்டும் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்! அதாவது... முஸ்லிம்கள் என் றாலே பயங்கரவாதிகள் என்ற வீண் பழியை மீண்டும் ஆணித்த ரமாக இந்திய தொப்புள் கொடி உறவுகளிடம் விதைக்க காவி பயங்கரவாதிகள் செய்த படுபாதக செயலாகக் கூட இருக்கலாம். அது என்ன இருக்கலாம்? இருக் கத்தான் செய்யும்!

மாலேகானில் இதைத்தானே ஒரு பொம்பளை காவி பயங்கரவாதி செய்தாள்! அவளுக்கு ஆம் பளை காவி பயங்கரவாதிகள் உதவத்தானே செய்தார்கள்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களில் வெளியே தெரிந்து விடவில்லையா? கருணாநிதி பாணியில் சொன்னால் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டதல்லவா?

இப்போது ஹைதராபாத்தில் தியேட்டர் வளாகத்தில் குண்டுகள் வெடித்திருக்கிறது. எப்போதும் காவி பயங்கரவாதிகள் எதையும் லாஜிக்காகவே யோசிப்பார்கள். அப்படி கேட்ச் பிடித்த லாஜிக்தான் தியேட்டர் வாசலில் குண்டு வெடிப்பு!

புரிகிறதா...? கணக்கு தெரிகிறதா? உலக நாயகன் விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளி யிட்டாராம். அந்த ஆத்திரத்தில் முஸ்லிம்கள் தியேட்டரில் குண்டு வைத்து விட்டனராம். பார்த் துப்பா... டி.டி.ஹெச்.சிலும் வெளி யானால் ஒவ்வொரு வீட்டு டி.வி. யிலும் முஸ்லிம்கள் குண்டு வைத்து விடப் போகிறார்கள்!

இந்த காவிப் பயங்கரவாதிகளுக்கு இந்த மாதிரி லாஜிக் விஷயங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறது? அது கைபர் போலன் வழியாக வந்தேறியது. சாணக்கியர்கள் அர்த்த சாஸ்திரத்திற்கு சொந்தக்காரர்கள். எனவே அர்த்தத்தோடு யோசித்துதான் அனர்த்தங்கள் புரிவார்கள்.

சரி குண்டு வெடிப்பு நிகழ்ந்து விட்டது. ரியாஸ் பட்கல், மக்பூல், இம்ரான்கான் என மூன்று அப்பாவிகளின் புகைப்படங்களை வெளியிட்டு விட்டது இண்டலி ஜெண்டு ஏஜென்சி!

இண்டலிஜெண்ட் ஏஜென்சியில் இந்த மூன்று அப்பாவிகள் புகைப்படம் போல இன்னும் எத்தனை பேரின் புகைப்படங்கள் இருக்கிறதோ? அந்த ஏஜென்சிக் குத்தான் வெளிச்சம்!

அதிலும் ரியாஸ் பட்கல், இம்ரான் கான் என்கிற இருவரின் புகைப்படங்களைப் பாருங்கள். ரியாஸ்பட், இம்ரான் கான் இருவ ருமே... பால் வடியும் முகத்துடன் பள்ளி மாணவர்கள் போல இருக் கிறார்கள்! மக்பூல் வெகு அப்பா வியாக தெரிகிறார். ஆனாலும் இந்திய போலீஸ் இவர்களை இந்தியன் முஜாகிதீன் அமைப்பி னர் என்று கூறி விட்டனர்.

இனி... அதுதான் சட்டம். இனி இந்த சதியின் காரணம், சாட்சியங்களை ரெடி செய்வார்கள்! பின்னர் இம்ரான்கான் அடிக்கடி தில் சுக் நகருக்கு வந்து தினுசு தினு சாக ஐஸ் கிரீம் சாப்பிட்டு தியேட்டரையே வெறித்துப் பார்த்தார். இதை இரண்டு குல்பி ஐஸ்காரர்கள் குனிந்தபடியே கவனித்திருக்கிறார்கள்.

ரியாஸ் பட்கல்! காதுக்கு பட்ஸ் வாங்கும் சாக்கில் தியேட்டர் எதிரே உள்ள கடையில் நிற்பதை 98 வயது மூதாட்டி கவனித் திருக்கிறார்!

இப்படி ரூம் போட்டு யோசி த்து... அதன் பின் எங்கெங்கோ தேடி ஜெயிலில் வருடக்கணக்கில் அடைப்பார்கள். கேப் கிடை த்தால் ஏதாவது ஒரு தேர்தலுக்கு முன் தூக்கில் போட ஸ்டாம்ப் குத்தி விடுவார் திருவாளர் பிரணாப்.

ஒருவேளை... இது இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பின் வேலையாக இருந்தாலும் அதற்கு காரணம் இதே இந்திய அரசு செய்த இரு கொலைகள் தான். அப்பாவி அஜ்மல் கசாப்... படு அப்பாவியான அப்சல் குரு.

இங்கு பட்டாசு வெடித்து கொண்டாடிய நேரத்தில் அவர்கள் குண்டுகளோடு ஹைதராபாத் வந்து விட்டார்கள். இப்போது இந்திய அரசும், திருவா ளர் பிரணாப்பும் செய்த தவறுகளுக்கு அப்பாவி பொது மக்கள் தான் பலியாகியுள்ளனர். இதன் பெயர் ஜிகாத் அல்ல என்பதையும் முஜாஹித்தீன் அமைப்பினர் புரிந்து கொள்வதில்லை.

ஆக.. தனிப்பட்ட ஒரு அரசு எடுக்கும் அரசியல் லாபக் கணக்கு முடிவுகளுக்கு எப்போதுமே அப்பாவிகள் தான் பலியாகி வருகின்றனர். இதை ஒரு அரசு முதலில் உணர வேண்டும்! எந்த மதமாக இருந்தாலும் அதை அரசியலாக்காதீர்கள். மதத்தின் பெயரால் அரசியல் செய்யாதீர்கள். பொது மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்.

காவி பயங்கரவாதிகளும் திருந்த வேண்டும். இந்தியா என்பது உங்கள் அப்பன் வீட்டு சொத்தல்ல... உங்கள் அப்பன் வீட்டு சொத்து கைபர், போலன் கணவாய்களுக்கு வெளியே எங்கோ இருக்கிறது. அல்லது இருந்தது. அங்கு என்னவோ ஆட்டம் காட்டப் போக... மொத்தமாக உங்களை அடித்து விரட்டியிருக்கிறார் கள். இந்தியா மாட்டிக் கொண்டது.

காவிக்காரர்களே... எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.

கும்பமேளாவில்தான் நித்யானந்தா ‘இன்ப' சுற்றுலா வந்திருக்கிறாராம். பெரிய முகாம் எல்லாம் அமைத்திருக்கிறாராம்.

ம்... கொஞ்ச நாளைக்கு அவரிடம் சென்று இளைப்பாருங்கள். ஆட்டம், பாட்டம் என்று அமர்க்களப்படுத்தி விடுவார்கள். கல்யாணம் செய்து கொள்ளக் கூட ஆசை தீசை வேள்வி தீயோடு சேர்த்து மூட்டுவிடுவார்கள். முங்கி முத்தெடுங்கள். எங்களை விட்டு விடுங்கள் ப்ளீஸ்.

Comments

1 comment

1
S.KULOTHUNGAN CORRESPONDENT AL
DEAR EDITOR, HAPPY TO MEET YOU IN YOUR WEB MAGAZINE, IT HAS BEEN BROUGHT TO MY NOTICE THAT SOME NEWS ITEM RELATED TO ME IS PUBLISHED WHICH IS NOT TRUE AND HERE BY I INFORM AND REQUEST YOU TO REMOVE THE ITEM AS EARLY AS POSSIBLE AND KINDLY I MAY BE LET KNOWN THE AUTHOR WHO HAD SUBMITTED THE SAME SO THAT I CAN pROCED FURTHER IN LEGAL WAY TO STOP THIS TYPE OF WRONG INFORMATION PUBLISHED

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.