முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் முயற்சி!

சுதந்திர தின அணிவகுப்பு உள்ளிட்ட பாப்புலர் பிரண்ட்டின் நிலைப்பாடுகள் பலவற்றில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு கருத்து வேறுபாடு உண்டு. மார்க்க ரீதியாகவும் முரண்படுதல் உண்டு. அதே சமயம், ஒரு இந்துத்துவ அமைப்புக்கு இந்த நாட்டில் இருக்கும் உரிமை இஸ்லாமிய அமைப்புக்கும் உண்டு. அதை அரசு நிர்வாகம் மறுத்தால் அதை கண்டிக்கும் உரிமையும் நமக்கு உண்டு என்பதை வெளிப்படுத்தும் நோக்கமே இக்கட்டுரை.

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் சுதந்திரதின அணி வகுப்பை நடத்தி வருகிறது பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்கிற இஸ்லாமிய அமைப்பு.

இந்த வருடம் அது கடந்த 15ம் தேதி நெல்லையில் நடத்த இருந்த அணி வகுப்பு நிகழ்ச்சிக்கும், அதற்கு முந்தைய நாள் நடத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்கும் கூட அனுமதி மறுத்துள்ளது காவல்துறை.

கடந்த காலங்களில் நடை பெற்ற இதுபோன்ற அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ - சமூகங் களுக்கிடையே கலவரமோ, வகுப்புப் பதட்டமோ ஏற்படாத நிலையில், தகுந்த காரணமின்றி அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கண்டிக் கத்தக்கது.

ஒரு ஜனநாயக நாட்டில் ஜன நாயக நடவடிக்கைகளுக்குட் பட்டு ஒரு சமுதாயம் தனது உணர்வுகளை வெளிப்படுத்த இந் திய அரசியல் சாசனம் அனுமதிக் கும்போது; சட்டத்திற்குட்பட்ட அதுவும் சுதந்திர தினத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வண்ணம் அமையும் ஒரு நிகழ்ச் சிக்கு தடையென்பதை ஏற்க முடி யாது.

இந்தியாவில் இஸ்லாமியர் களை அந்நியப்படுத்தும் முயற்சி என்பதாகத்தான் இதைக் கருத வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் தடை செய்யப் பட்டதைப் போலவே கேரள அரசும் பி.எஃப்.ஐ.யின் அணி வகுப்பு நிகழ்ச்சிக்கு தடை விதித் திருக்கிறது. கேரள அரசு விதித்த தடைக்கு அது ஒரு காரணத்தைச் சொல்லியிருக்கிறது. தனிப்பட்ட ஒரு இயக்கம் சிறப்புச் சீருடை யில் நடத்தும் அணி வகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் சமூகத்தில் பிரச்சினைகளை உண்டு பண்ணக் கூடும் என்கிறது கேரள அரசு.

இப்படி யோக்கிய சிகாமணி யாக பேசும் கேரள அரசு, இந்துத் துவா அமைப்புகளுக்கும் இதே "சமூகத்தில் பிரச்சினை ஏற்படும்' என்ற காரணத்தைக் காட்டி அவர்கள் நடத்தும் பேரணி, அணி வகுப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டுமா இல்லையா? ஆனால் அப்படி செய்யாமல் இஸ்லாமிய அமைப்புகளுக்கு மட்டும் சுதந்திர தின அணி வகுப்புக்கு தடை; ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அதே நாளில் அனு மதி என்று இரட்டை நிலையை மேற்கொண்டிருக் கிறது கேரள அரசு.

கேரளாவின் பத்தனம் திட்டா, கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆயுதம் தாங்கிய கொடி அணிவ குப்பை நடத்த கேரள அரசு அனுமதி அளித்து - ஆர். எஸ்.எஸ். திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடந்து முடிந்திருக் கின்றன.

எர்ணாகுளம் அலுவா என்கிற இடத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு நிகழ்ச்சிக்கு காவல் துறை காக்கி டவுசர்களோடு காக் கியாக கலந்து முழு பாதுகாப் புடன் அணி வகுப்பை நடத்திச் சென்றுள்ளனர். இது தவிர மற்ற பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பயங் கரவாத அமைப்பு நடத்திய அணி வகுப்பு நிகழ்ச்சிகளில் அதன் தொண்டர்கள் லத்திகளை எடுத் துச் சென்றனர். ஆனால் அலுவா வில் நடந்த அணிவகுப்பின் போது கைகளில் வாட்களை சுழற் றியபடியே அவர்கள் செல்ல கேரள போலீஸ் பாதுகாப்பளித் திருக்கிறது.

இத்தனைக்கும் பி.எஃப்.ஐ. சட் டத்தை மதித்து அணி வகுப்பு நிகழ்ச்சிக்கு முன் அனுமதி கேட் டிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரோ காவல்துறை யிடம் முன் அனுமதி பெறாம லேயே இந்த நிகழ்ச்சிகளை நடத் தியுள்ளனர் என்று கேரள பத்தி ரிகைகளே எழுதுகின்றன.

ஆக, தேசப்பற்றை வெளிப்ப டுத்தினால் அதற்கு தடை, வாட் களை சுழற்றிக் கொண்டு மக் களை பீதிக்குள்ளாக்கினால் அதற்கு காவல்துறையின் பாது காப்பு என்ற நிலை இந்தியா வின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இந்த வேலையை காவல்துறையே செய்வது கடும் கண்டனத் துக்குரிய தாகும்.

தேசத் தந்தை என்று போற்றப்பட்ட மஹாத்மா வைக் கொன்ற, இந்தியா வின் பிரிவினைக்கு வித் திட்ட, தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ளாமல் காவிக் கொடியைத் தூக்கிக் கொண்டு மனிதப் படுகொலை களை அரங்கேற்றி வரும் ஒரு பயங்கரவாத கூட்டத்திற்கு சுதந்திர தின அணி வகுப்புக்கு அனுமதி - இந்த நாட்டின் விடுத லைக்காக தங்கள் சதவிகிதத்திற் கும் கூடுதலாக உயிர்களைத் தியா கம் செய்த முஸ்லிம்களுக்கு தேசப்பற்றை வெளிப்படுத்த அனுமதி மறுப்பு என்பது தெளி வான பாரபட்சம் மாத்திரமல்ல, நாம் முன்னர் சொன்னதைப் போன்று இந்திய முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் முயற்சி, முஸ் லிம்களின் தேசப்பற்றை சந்தேகிக் கும் முயற்சி அல்லது அவர்களை இந்தியாவிற்கு எதிரானவர்களாக பெரும்பான்மை மக்கள் மத்தி யில் நிறுவும் முயற்சி.

மதச் சார்பற்ற நாட்டில் மதச் சார்போடு நடந்து கொள்ளும் காவல்துறை தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். சட்டத்தை அனைவருக்கும் பொதுவாக வைக்க வேண்டும் என்பதை சொல்லி வைக்கிறோம்.

- ஃபைஸ்

Pin It