தொடர்புடைய படைப்புகள்

தம் எல்லைகளையும் தம் மக்களையும்
காத்தல் முதல் கடமை! என்ற வரி
கடலோரக் காவல் படையின்
பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை
அல்லது
அது வகுப்பில் சொல்லப்பட்டபோது
க.கா.வீரர்கள் கேண்ட்டீனில்
வடை தின்று கொண்டிருந்திருக்க வேண்டும்..
மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து
வாங்கிய பிரமாண்டக் கப்பல்களில்
உல்லாசப் பயணம் போகிறார்கள்
தேன்நிலவு கொண்டாடுகிறார்கள்
ஒழிந்த நேரங்களில்
தரையோரக் காவல் படைகளுக்கு
விருந்து கொடுக்கிறார்கள்...
வடையே முதன்மைப் பண்டம்!
சிங்களப் படை வந்து தமிழ்மீனவனைக்
கொத்தாக அள்ளித் தூக்கும்போது
க.கா.வீரர்கள் தங்கள் கப்பல்படையில்
வடைக்கு மாவு தட்டிக் கொண்டிருக்கும்படி
பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்...
முகமெல்லாம் மாவு...
பாவம் தும்மலுக்கு நடுவே
நல்ல வடைக்கு சாத்தியம் நலிவு!
எண்ணெய் குடிக்காத வடையைத் தட்ட
அவர்கள் போராடும்போது
வகையாக வந்து சிக்குகிறான் தமிழ்மீனவன் !
படகு நிறைய அவன் மீன் அள்ளிப்போவதை
எப்படிப் பொறுப்பது ?
வலைகளை அறுத்துத் தள்ளுகிறார்கள்
(ஒருவளை  அதில்தான் எண்ணெயை வடிக்கிறார்களோ என்னவோ..!)
மீனவர்களை நிர்வாணப்படுத்துகிறார்கள்
(ஒருவேளை அவர்களின் லுங்கிகள்
மாவு உலர்த்தத் தேவையோ ..? )
கண்மூடித் தனமாகத் தாக்குகிறார்கள்
(வடையை சரியாகத் தட்ட முடியாத
வயிற்றெரிச்சல் ? )
உச்சக்கட்டமும் ஒன்றிருக்கிறது. . .
பொறுக்கிகள் சுடும் வடையும்
பொறுப்பற்றதாகத்தான் இருக்கிறது. . .
அப்பாவியின் மீது விழுந்து வெடிக்கிறது . . .
எண்ணெய் குடிக்காத வடை
ரத்தம் குடிக்கிறது !
வகைவகையான வடைகளைக் கப்பலில்
பார்வைக்கு வைக்கின்றனர் . . .
அட்மிரல்களும் தளபதிகளும்
உளவுத்துறைகளும் பார்வையிடுகின்றன . . .
சிறந்த வடை சுட்டவனைத் தேர்ந்தெடுத்து,
(கடாய்) பரிசளிக்கின்றனர் . . .
சிறந்த இந்திய வடை சுட்டவனை அதிசயித்து
சிங்கள மீனவர்கள் படை எடுத்து வந்து
பயணக் கைதியாகக் கொண்டு போகிறார்கள் . . .
வடை சுடுவதன் தொழில்நுட்ப ரகசியத்தை
அவன் சொல்லும் வரை
‘தட்டி’ எடுக்கிறார்கள் . . .
என்னமோ போங்கள் . . .  .
வடை சுடவும் வக்கற்ற எனக்கு
வயிற்றெரிச்சலாக இருக்கிறது . . .
யாரப்பா அங்கே . .  .
கடலோரக் காவல் கடை ..?
எனக்கு ரெண்டு வடை .. .. பார்சல். . .!
-தாமரை
ம் எல்லைகளையும் தம் மக்களையும்
காத்தல் முதல் கடமை! என்ற வரி
கடலோரக் காவல் படையின்
tamarai_indian_navyபாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை
அல்லது
அது வகுப்பில் சொல்லப்பட்டபோது
க.கா.வீரர்கள் கேண்ட்டீனில்
வடை தின்று கொண்டிருந்திருக்க வேண்டும்..

மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து
வாங்கிய பிரமாண்டக் கப்பல்களில்
உல்லாசப் பயணம் போகிறார்கள்
தேன்நிலவு கொண்டாடுகிறார்கள்
ஒழிந்த நேரங்களில்
தரையோரக் காவல் படைகளுக்கு
விருந்து கொடுக்கிறார்கள்...
வடையே முதன்மைப் பண்டம்!

சிங்களப் படை வந்து தமிழ்மீனவனைக்
கொத்தாக அள்ளித் தூக்கும்போது
க.கா.வீரர்கள் தங்கள் கப்பல்படையில்
வடைக்கு மாவு தட்டிக் கொண்டிருக்கும்படி
பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்...
முகமெல்லாம் மாவு...
பாவம் தும்மலுக்கு நடுவே
நல்ல வடைக்கு சாத்தியம் நலிவு!

எண்ணெய் குடிக்காத வடையைத் தட்ட
அவர்கள் போராடும்போது
வகையாக வந்து சிக்குகிறான் தமிழ்மீனவன் !
படகு நிறைய அவன் மீன் அள்ளிப்போவதை
எப்படிப் பொறுப்பது ?

வலைகளை அறுத்துத் தள்ளுகிறார்கள்
(ஒருவளை அதில்தான் எண்ணெயை வடிக்கிறார்களோ என்னவோ..!)
மீனவர்களை நிர்வாணப்படுத்துகிறார்கள்
(ஒருவேளை அவர்களின் லுங்கிகள்
மாவு உலர்த்தத் தேவையோ ..? )
கண்மூடித் தனமாகத் தாக்குகிறார்கள்
(வடையை சரியாகத் தட்ட முடியாத
வயிற்றெரிச்சல் ? )
உச்சக்கட்டமும் ஒன்றிருக்கிறது. . .
பொறுக்கிகள் சுடும் வடையும்
பொறுப்பற்றதாகத்தான் இருக்கிறது. . .
அப்பாவியின் மீது விழுந்து வெடிக்கிறது . . .
எண்ணெய் குடிக்காத வடை
ரத்தம் குடிக்கிறது !

வகைவகையான வடைகளைக் கப்பலில்
பார்வைக்கு வைக்கின்றனர் . . .
அட்மிரல்களும் தளபதிகளும்
உளவுத்துறைகளும் பார்வையிடுகின்றன . . .
சிறந்த வடை சுட்டவனைத் தேர்ந்தெடுத்து,
(கடாய்) பரிசளிக்கின்றனர் . . .

சிறந்த இந்திய வடை சுட்டவனை அதிசயித்து
சிங்கள மீனவர்கள் படை எடுத்து வந்து
பயணக் கைதியாகக் கொண்டு போகிறார்கள் . . .
வடை சுடுவதன் தொழில்நுட்ப ரகசியத்தை
அவன் சொல்லும் வரை
‘தட்டி’ எடுக்கிறார்கள் . . .

என்னமோ போங்கள் . . .  .
வடை சுடவும் வக்கற்ற எனக்கு
வயிற்றெரிச்சலாக இருக்கிறது . . .
யாரப்பா அங்கே . .  .
கடலோரக் காவல் கடை ..?
எனக்கு ரெண்டு வடை .. .. பார்சல். . .!

- தாமரை

Comments

1 comment

1
K.Easwaran
I can understand you. India is a dot com, including Indian, army, Navy including Kadal Orak Kaval Padai and airforce.
Easwaran

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.