கலப்படம் என்பது குறைந்த விலையுள்ள ஒரு பெருளை, அதிக விலையுள்ள பெருளுடன் கலந்து, அதிக விலைக்கு விற்பதற்குச் செய்யும் செயலாகும். இது இன்று நேற்றல்ல; வர்க்க சமூகம் தேன்றிய போதே மனிதனின் மூளையில் கலப்பட எண்ணமும் தேன்றி விட்டது.

ஒரு அரசன் தனக்காகச் செய்யப்பட்ட மணிமுடியில், பொற்கெல்லன் தங்கத்துடன் பிற உலோகத்தையும் கலந்து செய்து விட்டானே என்று சந்தேகப்பட்டு அதை அறிய விரும்பினான். அது மணிமுடி ஆதலால் அதைச் சிதைக்காமல் கலப்படத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். இப்பணியை ஆர்க்கிமிடிசிடம் கெடுக்கப்பட்ட போது தான் அவர் (ஆர்க்கிமிடிஸ் தத்துவம் எனப்படும்) அமிழ்தலில் எடைக் குறைவுத் தத்துவத்தைக் கண்டு பிடித்தார். அத்தத்துவத்தின் கணக்கீடுபடி பொற்கொல்லன் செய்த கலப்படத்தைத் துல்லியமாகக் கண்டு பிடிக்க முடிந்தது. ஆகவே கலப்படம் என்பது மனித குலத்திற்கு ஒன்றும் புதிய செய்தி அல்ல.     

ஆனால் அண்மைக் காலமாக நெகிழ்ம முட்டை, நெகிழ்ம அரிசிக் கலப்படங்கள் என்று ஒரு செய்தி மக்களிடையே பரபரப்பாகப் பரப்பப்பட்டது. அத்திருப்பணியில் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு முன் நின்றன. சமூக வலைத் தளங்களும் அதில் பின் வாங்கவில்லை. சீனாவில் இருந்து நெகிழ்ம முட்டைகள் இறக்குமதி ஆகின்றன என்று ஒரு வதந்தி பரப்பப்பட்டது. அது போலவே நெகிழ்ம அரிசியைப் பற்றியும் பெரும் வதந்தி பரப்பப்பட்டது.

நெகிழ்மத்தில் முட்டையைச் செய்ய முடியாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் சீனாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுகிறதா? இல்லையே! மேலும் நெகிழ்மத்திலே அல்லது நெகிழ்மக் கலப்பிலே முட்டையைச் செய்தால், அதன் விலை கோழி / வாத்து முட்டையை விடப் பல மடங்கு அதிகமாக அல்லவா இருக்கும்? அதை யாராவது செய்ய முற்படுவார்களா? இதைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல், சுய தணிக்கை அல்லது அரசுத் தணிக்கை என எவ்விதத் தணிக்கையும் இன்றி  இந்த வதந்திகள் சீரும் சிறப்புமாக உலா வந்தன.

நெகிழ்ம அரிசியைப் பற்றிய வதந்தியைப் பற்றி, 17.6.2017 அன்று அரிசி வணிகர்கள் சங்கத் தலைவர் கூறுகையில், எந்த வணிகரும் அரிசியில் நெகிழ் மத்தைக் கலந்து இழப்பை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார் என்றும், ஆகவே மக்கள் நெகிழ்ம அரிசி பற்றிய வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கெண்டார். இதே போல் நெகிழ்ம முட்டை என ஒன்று கிடையாது என்று இப்புகார்களை விசாரித்த அரசு அதிகாரிகளும் கூறி உள்ளனர்.

அப்படி என்றால் இது பேன்ற வதந்திகளை ஊடகங்கள் ஏன் போட்டி போட்டுக் கெண்டு பரப்பின? சமூக வலைத் தளங்களிலும் சிலர் ஏன் மூச்சைப் பிடித்துக் கெபண்டு எழுதி நேரத்தை வீணடிக்கின்றனர்?

முதலாளித்துவப் பெருளாதாரம் 2008ஆம் ஆண்டில் சிக்கிய நெருக்கடியில் இருந்து இன்னும் மீள முடிய வில்லை. இது போன்ற ஒவ்வொரு நெருக்கடியின் பேதும் உலகில் ஆங்காங்கே போர்களையும், கலகங்களையும் விளைவிப்பது முதலாளிகளின் வழக்கம். அப்படி நடக்கும் போர்களினாலும் கலகங்களினாலும் அழிவுக்கு உள் ளாகும் பண்டங்களை உற்பத்தி செய்யக் கிடைக்கும் வாய்ப்பில், நெருக்கடியில் இருந்து மீள்வதும் அவர் களுடைய உத்தி. ஆனால் இம்முறை அந்த உத்திகள் எதிர்பார்த்த பயனை அளிக்கவில்லை. மக்களால் நெருக்கடியினால் ஏற்பட்டு உள்ள வலியை மறக்க முடி யாமல் தவிக்கின்றனர். வேலை இல்லாத் திண்டாட்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் மக்கள் சரியான திசையில் சிந்தித்து விடக் கூடாது என்ற அவசர உணர்வு முதலாளித்துவ அறிஞர்களைக் கவ்விக் கொண்டு உள்ளது. ஆகவே மக்களிடையே இது பேன்ற வதந்திகளைப் பரப்பி, மக்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கெண்டு இருக்கின்றனர்.

மக்களே! நீங்கள் முதலாளித்துவ அறிஞர்களின் சதிவலையில் சிக்கி, நம் நலன்களுக்கு எதிரான திசையிலேயே சிந்தித்துக் கொண்டு இருக்கப் போகிறீர் களா? அல்லது இவர்களுடைய சூழ்ச்சிகளை எல்லாம் முறியடிக்கும் விதத்தில் உழைக்கும் மக்களின் அனைத் துப்  பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக சோஷலிச அரசை அமைப்பதற்கு அணியமாகப் போகிறீர்களா?

Pin It