அங்கீகரிக்கப்பட்ட
அமெரிக்க
வாக்குகளால்
மட்டுமல்ல
உலகமெங்கும்
கொள்ளையடித்த
உள்ளங்களின்
கள்ள வாக்குகளாலும்
தேர்ந்தெடுக்கப்பட்டவனே-
ஒபாமா
வெளிறிப்போன
வெள்ளை மாளிகைக்கு
வெள்ளையடிப்பது
மட்டுமல்ல
அது
உலகமெங்கும்
பின்னியிருக்கும்
சிலந்தி வலைகளை
ஒட்டடை அடிப்பதும்
உனது வேலைதான்
எத்தனை
அப்பாவி கொசுக்கள்
தினம் தினம்
அதில்
அகப்பட்டுச்
சாகின்றன
ஒபாமா
ஓ
“பாமா”?
வேண்டாம்
உலகப்
பொலிஸ்காரன்
பதவிக்கு
ஓய்வு கொடு
பூமி
கொஞ்சம்
உருப்படட்டும்
எங்கு வெடித்தாலும்
திரி
உங்கள் கையிலாமே
மறந்துவிடாதே
நீ மாற்றம்
கொண்டு வர
வந்தவன்
ஏமாற்றம்
அல்ல
பராக் ஒபாமா
முபாரக்
ஓபாமாவாய்
முஸ்லிம்கள்
உன்னைப் பார்க்க
சச்சரவுகளைத்
தீர்க்கும்
“பிரேக்”; ஒபாமாவாய்
உலகம்
பார்த்திருக்கிறது.
உலகத்தின்
கால்கள்
இப்போது
உன்
கையில்
தூக்கிவிடப்
போகிறாயா
வாரி விடப்
போகிறாயா
அடுத்த
லீப் வருடம்
தீர்மானித்திருக்கும்.
- என். நஜ்முல் ஹுசைன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )