தமிழ்நாட்டு முதல மைச்சராக முதன் முதலில் 24.6.1991 இல் செல்வி செ.செய லலிதா பொறுப்பேற் றார். 5.12.2016இல் அவர் மறையும் வரை, இடையே இடையே தற்காலிகமாகப் பதவியிலிருந்து விலகி, 5 தடவைகள் முதலமைச்சராக இருந்தார்.
யார் அவர்?
செயலலிதா கருநாடகத்தில் மாண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டை என்னும் ஊரில் ஜெயராம்-வேதவல்லி இணை யரின் மகளாகப் பிறந்தார். தந்தை ஜெயராம் 1950இல் மறைந்தார். அவரோடு பிறந்த அண்ணன் ஜெயராமன் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் வேதவல்லி அம்மையார் தம் பெற்றோர் வீட்டுக்கு பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரிலும், 1958க்குப் பிறகு சென்னையிலும் பள்ளிப் படிப்புக்குப் போகும் தறுவாயில் வறுமைக்கு ஆட்பட்டது குடும்பம். எனவே செய லலிதா திரைப்பட நடிகையாக 1965இல் ஆனார். திரைப்படத் துறையில் 1980 வரை முன்னணி நடிகையாக விளங்கினார். “ஆயிரத்தில் ஒருவன்” என்ற படத்தில் எம்.ஜி.ஆர். உடன் கதாநாயகியாக நடித்தார்; அவருக்கு மிக மிக நெருக்கமானார்.
5-6-1982இல் அ.இ.அ.தி.மு.க.வில் சேர்ந்தார். “பெண்ணின் பெருமை” பற்றி முதன்முதலாக மேடைப் பேச்சை நிகழ்த்தி னார். முதலில் சத்துணவுத் திட்டத்தை மேற்பார்வையிடும் உயர்மட்டக்குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டார்; 1983இல் அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார்.
12-3-1984இல் தில்லி மாநிலங்கள் அவை உறுப்பினராக, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பதவி ஏற்பு அன்றே தொடங்கியது அவருடைய அரசியல் பதவி வாழ்வு, 5-12-2016இல் அவர் மறையும் வரை 32 ஆண்டுகள் ஏதோ ஒரு பதவியில் நீடித்தார்.
24-12-1987இல் எம்.ஜி.ஆர். மறைந்த நிலையில், அ.தி.மு.க, சானகி அணி-செயலலிதா அணி எனப் பிரிந்தது. 1-1-1988 இல் செயா அணிக்குப் பொதுச் செயலாளரானார்.
24-1-1989இல் நடைபெற்ற தேர்தலில் மாநிலங்கள் அவையிலிருந்து, விலகிய செயலலிதா போடி நாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, தமிழகச் சட்டமன்ற உறுப்பினரானார். செயலலிதா அணி 27 உறுப்பினர்களைப் பெற்றது; அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
இராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து 1991இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, தமிழகம்-புதுச்சேரி இரண்டுக்கும் உரிய 40 மக்கள் அவை இடங்களில் 39 இடங்களை அ.தி.மு.க-காங்கிரசு கூட்டணி கைப்பற்றியது. இந்திய அளவில் அரசியலில் நுழைந்தார், செயா. அப்போதே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி 234 சட்டமன்றத் தொகுதிகளில் 224 இடங்களைக் கைப்பற்றியது.
24-6-1991இல் செயலலிதா முதன்முதலில் தமிழக முதலமைச்சாரானர். 12-5-1996 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்தார்.
1992இல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், 1946-48இல் நான் படித்தபோது, இராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி யில் படித்த சோமசுந்தரத்துடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
இடஒதுக்கீடு பற்றி நான் தில்லியில் முயற்சித்துக் கொண்டிருந்த என்னைக் கண்ட அவர்-1992இல் தமிழக அரசு வரவு-செலவுக் கூட்டத்தின் போது, முதலமைச்சர் செயலலிதா இடஒதுக்கீடு பற்றிப் பேசிட விவரமான ஆவணம் ஆயத்தப்படுத்தக்கோரி, வற்புறுத்தி என்னைத் தம் வீட்டுக்கு அழைத்தார். ஒரு நாள் முழுதும் இருவரும் கலந்து பேசினோம். நான் சொல்லச் சொல்லத் தட்டச்சு செய்து, மீண்டும் திருத்தி, இறுதி செய்து தந்தேன். 1992 மார்ச்சில் அதை அப்படியே சட்ட மன்றத்தில் படித்தார், செயலலிதா. பின்னாளிலும் செயலலிதா வுக்கு அது பயன்பட்டது. எப்படி?
1979ல் தமிழ்நாட்டில், மா.பெ.பொ.க.வின் தனி முயற்சி யால் 1980இல், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டை 31ரூ லிருந்து 60ரூ ஆக உயர்த் திடக்கோரி, 1-2-1980 ஆணையின்படி, 50ரூ பெற்றோம். அதன் விளைவாக-பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர்க்கு ஆனமொத்த இட ஒதுக்கீடு 50+18+1=69 ஆக ஆகிவிட்டது.
அதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 16-11-1992இல் அளிக்கப்பட்டது.
அத்தீர்ப்பின்படி மொத்த இடஒதுக்கீட்டு அளவு 49.5ரூ தான் இருக்கவேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 69ரூ இட ஒதுக்கீடு தருவது செல்லாதது என, கே.எம்.விஜயன் என்பவர் வழக்குத் தொடுத்தார். அதை எதிர்கொள்ள, ஒரு சட்டத்திருத்த வரைவை (னுசயக) தி.க.தலைவர் கி.வீரமணி தமிழக முதல்வரிடம் அளித்தார். அது சட்டமன்றத்தில் ஒரு சட்டமாக நிறை வேற்றப்பட்டது. (1994ஆம் ஆண்டைய 45 வது சட்டம்).
அச்சட்டப் பிரிவை அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க எல்லாம் செய்தார் முதல்வர் செயலலிதா.
இது அவருடைய முதலாவது சாதனை; 90ரூ தமிழக மக்களின் நலன் காக்கும் சாதனை.
2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல மைச்சராக ஆனவுடன் ஏற்கெனவே காவிரி நீர் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டுமென 2007இல் அளித்த இறுதித் தீர்ப்பை, இந்திய அரசின் அரசிதழில் (ழுடீஐ - ழுயணநவவந) வெளியிட வற்புறுத்தி 2013இல் சாதித்தார்.
இது செயலலிதாவின் இரண்டாவது சாதனை.
அதேபோல், திருவாங்கூர் அரசருடன்-பழைய சென்னை மாகாண அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கேரளாவுக்குச் சொந்தமான நிலத்தைக் குத்தகைக்குப் பெற்று-வெள்ளையர் காலத்தில் ஒரு வெள்ளைஇன அதிகாரியான பென்னிகுக் என்பவரால் கட்டப்பட்டது, முல்லைப் பெரியாறு அணை. அதன் நீர்ப்பிடிப்பு அளவு 152 அடி. ஆனால் இப்போதைய கேரள அரசின் அடாவடியால், 136 அடி நீர் அளவே தேக்கப் பட்டது. இந்த அளவை 152 அடியாக உயர்த்த வேண்டுமெனக் கோரி வழக்குத் தொடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 142 அடியாக உயர்த்திப் பெற்றுத் தந்தவர் செயலலிதா.
இது அவருடைய மூன்றாவது சாதனை.
மேல்நிலைப் பள்ளி வரையில் படிக்கும் எல்லா மாணவி-மாணவர்களுக்கு, இலவச மிதிவண்டி அளித்து ஊக்குவித்தார். இது ஒரு சாதனை.
இத்துணைச் சாதனைகளுக்கும் சொந்தக்காரரான செயலலிதா, தம் பதவிக்காலத்தில் செய்தவை வேதனை களையே விளைவிக்கும்.
1. எம்.ஜி.ஆர் 1 கிலோ அரிசி 2 உருவாவுக்கு விற்றார். அவரை மிஞ்சிட நினைத்த கலைஞர் மு.கருணாநிதி, 1 கிலோ அரிசி 1 உருவாவுக்கு விற்றார்.
ஆனால் செயலலிதா 1 கோடி பங்கீட்டு அட்டைக்காரர் களுக்கு இலவசமாகத் தலைக்கு 25 கிலோ அரிசி தந்தார்.
இதற்கு மானியமாக உருவா 5,000 கோடி ஆண்டு தோறும் செலவிட்டனர். இது முதலில் ஊதாரித்தனமானது. இரண்டாவது, உழைக்கச் செய்து அவர்களுக்குக் கூலி தருவதை விட்டுவிட்டு, கையேந்த வைத்திட்ட கெட்ட செயல் இது. மூன்றாவதாக, நிதிபற்றாக்குறையால் இன்றியமையாத வளர்ச்சித் திட்டங்களை முடக்குவது.
2. தி.மு.க. அரசுக்குப் போட்டியாக, வீட்டுக்கு வேண்டிய மின் விசிறி, அரவைப் பொறி (Mixy), தொலைக்காட்சிப் பெட்டி இவற்றை 1 கோடி குடும்பத்துக்குக் கொடுத்து-அவை வெளிச் சத்தையில் விற்கப்படும் அவல நிலையை ஏற்படுத்தியது.
3. ஆயிரக்கணக்கான கோவில்களில் இலவசச் சோறு போட்டு பக்தியை வளர்த்தது.
4. தமிழக அரசுப் பணியில் அமர்த்திட, 15 முதல் 20 இலட்சம் உருவா; வேண்டப்பட்ட இடத்துக்கு மாறுதல்தர 6 இலட்சம், அரசு ஒதுக்கும் இடத்துத்து மாறுதல் 3 இலட்சம் எனக் கைக்கூலி பெற்று, 2011 முதல் 2016 முடிய மக்களைச் சுரண்டியது. மகாபெரும் வேதனையானது.
5. “எவனும் கேட்கமாட்டான்” என்கிற அசட்டுத் துணிச்சலில்-ஒன்றாம் வகுப்பிலேயே, அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கி வைத்து தமிழ் வளர்ச்சிக்குத் தடையான கெட்ட செயற்பாடு.
6. எத்தனைப் பெண்கள்-கணவர்கள் குடியால் செத்து மடிந்திருந்தால்-அதனால் தாலி அறுத்தால் என்ன என்று, அடாவடியாக நின்று ஆண்டுதோறும் 25,000-30,000 கோடி உருவா சாராய விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் வந்தால் போதும் என்று திமிராகவே கருதி, ஊர்தோறும் சாராயக்கடைகளைத் திறந்தது.
7. தி.மு.க. ஆட்சியில் அமர்த்தப்பட்ட சாலைப் பணியாளர்கள்-மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அதைச் செயற்படுத்த மறுத்து-நூற்றுக்கணக்கான பேரைச் சாகவிட்டது.
இவ்வளவையும்-இவ்வளவுக்கு மேலும் வேதனைகளை விளைவித்தார், முதல்வர் செயலலிதா.
முதல்வர் செயலலிதா 22-9-2016 இரவு உணர்வு அற்ற நிலையில் சென்னை அப்போலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இலண்டன் மருத்துவர், தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், சிங்கப்பூர் செவிலியர்கள் வந்தார்கள்; 75 நாள்கள் வைத்தியம் செய்தார்கள். எந்த மருத்துவரும் செயலலிதா பிழைப்பார் என்று, உண்மையாகச் சொல்லவில்லை. உருவா 1000 கோடிக்கு மேல் செலவானது, செல்வி செ.செயலலிதா மறைவுதான் மிச்சம்.
7 கோடித் தமிழர்கள் வாழும் நாட்டின் முதலமைச்சர்-மறைந்த மாண்புமிகு செல்வி செ.செயலலிதா. அவர் மறைந்துவிட்ட செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல்-ஏறக்குறைய 200 பேர் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி செ.செயலலிதா அவர்களின் மறைவு கருதியும்-அதிர்ச்சியில் உயிரை இழந்த தமிழர் 200 பேர் மறைவு கருதியும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பிலும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவை சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேம்.