மிகப்பெரிய

பரந்து விரிந்த ஒரு

வணிகச் சந்தைக் கூடத்தை

நீங்கள்

‘தேசம்’ அல்லது ‘நாடு’

என்று கருதுகிறீர்கள்

உங்களை

‘இந்தியன்’ என்றும்

உங்கள் தேசம்

‘இந்தியா’ என்றும்

கருதும் வரை

இப்போதிருக்கும்

நிலைக்கு மேலாக

எதுவும் சாத்தியமில்லை!

‘அனைத்தையும்’

ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்

தேசிய இனங்களின்

‘அடிமை சாசனத்தின்’

மறுபெயர்தான்

இந்திய ‘இறையாண்மை’!

எப்படிப்பட்ட

அரசமைப்புச் சட்டம்

உங்களை வழி நடத்துகிறது

என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்

ஜெய் ஹிந்த்!

வந்தே மாதரம்!

பாரத மாதா கி ஜே!

கோஷங்களை ஏற்றுக்கொண்ட நீ

தேசிய இனப் பண்பாடுகளுக்காக

ஏன் போராடிக் கொண்டிருக்கிறாய்?

போய்...

இந்திய அரசமைப்புச் சட்டத்தைக்

கூறுகூறாய்ப் படியுங்கள்

காளைகளே...

உங்கள் கொட்டைகள்

சட்டக் கிடுக்கியால்

காயடிக்கப்பட்டிருப்பது தெரியும்!

Pin It