2016 டிசம்பர் 1 வரை பருவ மழை பெய்யாமலும் நிலத்தடி நீர் இல்லாமலும் பாதித்து கொண்டு இருக்கும் பகுதி திருவண்ணாமலை மாவட்டமாகும். தொலை காட்சி ஊடகம், செய்தித்தாள் ஊடகம் இதுபோன்ற பாதிப்புகளை வெளிப்படுத்துவதில்லை. இவர்கள் ஊடகங்களின் வளர்ச்சிக்காக பெருமுதலாளிகளின் செய்திகளையும் கூத்தாடிகளின் செய்திகளையும் வெளியிடு கின்றனர். செய்திகளை மறைத்து திரித்து வெளியிடுவதே இவர்களின் வாடிக்கை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் உயிர் நாடியான உழவர்களை உடனே காப்பாற்ற ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.30,000/-க்கு குறையாமல் அரசு வங்கிகள் மூலம் நிவாரணம் கொடுத்து உதவ வேண்டும். உழவர்களுடன் சேர்ந்து வாழும் ஆடு, மாடு, நாய், கோழி போன்றவைகளும் அழிந்துவிடும் நிலையில் உள்ளது.

இதுபோன்ற இயற்கை அழிவிற்கு காரணம் நம்மை ஆட்சி செய்த அரசும் துணைபோன அதிகாரிகளுமே காரணமாவார்கள். அனைத்து நீர்நிலைகளும் நம்மை ஆட்சிச் செய்த கட்சிகாரர்களே ஆக்கிரமித்து உள்ளனர். இதற்கு அதிகாரிகளும் துணையாக உள்ளனர்.

அதிகாரிகள் மனசாட்சியுடன் எந்த அரசியல்வாதிக்கும் அடிபணியாமல் பணி செய்தாலும் கட்சிகாரர்கள் செய்யும் அனைத்து குற்றங்களையும் அதிகாரிகள் துணிச்சலுடன் வெளிப்படுத்தினாலும் நாடு நலம் பெரும். நீர் நிலைகளை எந்த அரசியல்வாதிக்கும் துணை போகாமல் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் முன்னின்று அகற்றினால் உழவர்கள் காப்பாற்றப் படுவார்கள்.

இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் விழா புது தானியங்களை வைத்து கொண்டாட முடியாது.

கடவுளை காப்பாற்றும் கயவன் இயற்கையை அழிக்கும் அயோக்கியன், மக்களை சுரண்டும் மானம் கெட்டவன் நீர் நிலைகளை ஆக்கிரமித்த நீசன், நம்மை மீண்டும் ஏறிமிதிக்க ஓட்டு கேட்டு வரும் கேடு கெட்டவனை உங்களை கையாலேயே ஒழிக்க இப்பொழுதே நல்லவரைத் தேடுங்கள், தேர்ந்தெடுங்கள்.

Pin It